பிணம் தின்னும் அமரர் ஊர்திகள்!

பிணம் தின்னும் அமரர் ஊர்திகள்

தமிழ்பேசும் திராவிட நாட்டில் பிணம் தின்னும் அமரர் ஊர்திகள்

பணம் பிடுங்கும் முதலைகள் பரிதவிக்கும் உற்றார் உறவினர்கள்

பிணத்திற்காக பணம் கேட்பவரைக் கண்டு அழுமோ பிணங்கள்

கலிங்கத்து பரணி பேய்களையும் மிஞ்சும் இக்கலியுகப் பேய்கள்……..1

 

 

புதுப்புது நோய்களுடன் கொல்லும் மருந்துகளும் இறக்குமதியாம்

மேனாட்டு மருத்துவருக்கு இந்நாட்டு செவிலியர் ஏற்றுமதியாம்

உயிர்காக்கும் மருந்துகளின் விலையே துரித உயிர்கொல்லியாம்

மயிர்-நகம் ஏற்றுமதி வணிகத்திலும் அமிர்தமான கொள்ளையாம்….2

 

 

மருத்துவர்கள் பெருகினர் ஊழலுடன், கூட பட்டங்கள் பறந்தன

வாழும் தமிழ், தமிழுக்கு உயிர், உயிரின் நிலை- கண்டுபிடிப்புகள்

தவிக்கும் மனம் நெளியும் உடல் ஊசலாடும் உயிர் –நிதர்சனங்கள்

சாகும் உடல், செத்த பிரேதம் இவற்றிற்கும் “பரிசோதனைகள்”!……3

 

 

விஞ்ஞானம் பெருகி அஞ்ஞானம் மறைந்தது, பகுத்தறிவு வந்தது

பகுத்தால் பெரிதென உடலால் பெருத்து, மனத்தால் சுருங்கியது.

மெய்ஞ்ஞானம் குருகி, “மெய்”-ஞானம் பெருகி மாயை வளர்ந்தது

உள்ளே வெளியே பார்ப்பது, வெளியே உள்ளே பார்க்கிறது………….4

 

 

ஏழு மராமரங்களையும் துளைத்தது அந்த காலம் வில்லால்

எழு ஜென்மமானாலும் விரட்டுவது இக்காலத்தில் “பில்”லால்

கல்தோன்றி மண்தோன்றா காலத்தேத் தோன்றிய முத்தக்குடி

பில் போட்டு பணமில்லையெனில் சட்டக்கல்லால் அடிக்கும் அடி!…5

 

 

பிரேதம் என்றாலும் பிணம் என்றாலும் ஒன்றுதானே

அமரர் ஊர்தியும் சவ ஊர்தியும் ஒன்றுதானே

சாவும் இறப்பும் மனிதருக்கு ஒன்றுதானே

பிறகு ஏன் காசு பணம் என்று பார்க்கும் வேறுபாடு?…………………..6

 

 

மனைவி வந்தாள் மகன் பிணமெரிக்க, காசு கேட்ட அரிச்சந்திரன்

பவனி வந்தாள், மகன் அரியணையேரி அரிக்கும் நவீன எந்திரன்

வாய்க்கரிசி வாரிப்போட்டால் தவறி சிதறுவதை கவ்வும் சிலர்

பிணம் எரிந்தால் நூறு-இருநூறு கேட்காமலே கவ்வும் கவுன்சிலர்!….7

 

 

அவலத்திற்கே இழிப்பாட்டு பாடும் இரங்கல் கவிக்கோக்கள்

அறவோனை அடக்கும் அவிப்புழுக்கல் அரியும் அறிஞர்கள்

காலனை மிஞ்சும் கார்க்கோடக காலந்தர எமதாதகர்கள்

இழவிலும் இழிவு பாரா இரவாப்புகழ்தேடும் அவிவுணவோர்கள்!…8

 

 

கண்பிதுங்கும் உயிர்-பிரேதங்களைக் கண்டு கண்மூடும் பிணங்கள்

புண்ணானாலும் மண்ணானாலும் பணம்பிடுங்கும் உயிர்-பிரேதங்கள்

அண்ணா சொன்னாலும், தம்பி என்றாலும் மாறாத கல்-மனங்கள்

ரத்தத்தின் ரத்தங்கள் சொட்டினாலும் சொட்டாத கண்மணிகள்!……9

 

 

இதுதான் சாவிலும் அவலத்திலும் நடக்கும் ஜனநாயக குடியாட்சி

சிதறிய உடல்களும் பீய்ச்சியடிக்கும் ரத்தமே தீவிரவாத சாட்சி

26/11 அன்றாலும் 6/12 என்றாலும் சாவு கணக்கு மாறது அத்தாட்சி

இறுதிநாள் வருமென்று அச்சுருத்தல், கூட வருமாம் புத்தாட்சி!…10

 

 

வேதபிரகாஷ்

26-11-2009

Advertisements

ஒரு பதில் to “பிணம் தின்னும் அமரர் ஊர்திகள்!”

 1. குப்புசாமி Says:

  அருமை ஐயா,

  எங்களைப் போன்ற வயதான ஆட்களுக்கு சாதாரணமாக செய்திகள் பார்த்து, படித்து அலுத்து விட்டன.

  இவ்வுலகம் திருந்துமா என்று எண்ணி நொந்துவிட்டோம்.

  எனது நண்பர் சொல்லி, உமது எழுத்துகளைப் படிக்கிறேன். எனது, பேரனை வைத்து பதில் எழுதச்சொல்கிறேன்.

  [வயதாகிவிட்டது, காலம் மாறிவிட்டது, என்னால் இம்மாதிரியெல்லாம் தட்டெழுத்து செய்ய முடியாது]

  உண்மையை சொல்லப் பயப்படுகின்றனர், எங்கு அவரது பிழைப்புப் போய்விடுமோ என்று.

  இந்த துணுங்கரை, மாசு பிறக்கிய மேனியரை,
  மருவும் துவராடையரை, பிண்டியரை, ஊத்தை வாயரை,
  குண்டரை, புலையரை, பதர்களை, பளகர்களை, பிந்தியரை, பாஷாண்டிகளை கழுவிலேற்றினாலும், தூக்கிலேற்றினாலும் தகும்!

  ஆனால், அவர் பாதத்தை நக்கும் இந்நீசர், அவ்வாறு செய்வரோ?
  பொன், பெண், பொருள் கொண்டுக் கூட்டிக் கெடுப்பரோ?
  சட்டத்தை மிதித்து, கற்பை சூரயாடிய சோரம் போனவனுடன் கட்டித் தழுவுவரோ?
  யான் என் செய்வேன், அழுவதைத் தவிர ஈசன் பதம் பணிந்து!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: