பிணம் தின்னும் அமரர் ஊர்திகள்!

பிரேதங்களும் அழும் : தனியார் ஆம்புலன்ஸ்கள் கட்டணக் கொள்ளை
நவம்பர் 26,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5753

Front page news and headlines today

// <![CDATA[//
// <![CDATA[//

 

கோவை நகரில், பிரேதம் எடுத்துச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கொள்ளை வாடகை வசூலிக்கின்றனர். இதனால், மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் 7,000 வெளிநோயாளிகள் வருகின்றனர்; 1,500 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

நோய் தீவிரம் காரணமாக இறப்போரின் பிரேதம், மருத்துவமனை வளாகத்திலுள்ள பிணவறைக்கு அனுப்பப்படுகிறது. அதே போன்று, தற்கொலை, கொலை, விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் உயி ரிழப்போரின் பிரேதமும் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின் உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இவ்வாறு, தினமும் குறைந்தது 10 பிரேதங்கள், மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. பிரேதங்களை உறவினர் எடுத்துச் செல்ல, அரசு மருத்துவமனை சார்பில் ஒரே ஒரு “சவ ஊர்தி’ (மார்ச்சுவரி வேன்) மட்டும் இயக்கப்படுகிறது. நகர எல்லைக்குள் பிரேதம் கொண்டு செல்ல 400 ரூபாயும், புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்ல 500 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஒரே ஒரு வேன் போதுமானதாக இல்லை. காரணம், குறைந்தது நாளொன்றுக்கு 10 பிரேதங்கள் மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன.

தனியார் கட்டணக் கொள்ளை: அரசு மருத்துவமனையின் “மார்ச்சுவரி வேன்’ இல்லாத நிலையில், உறவினர் கள் வெளியில் நிறுத்தப்பட்டுள்ள தனியார் ஆம்புலன்ஸ்களை நாடுகின்றனர். இதை பயன்படுத்திக்கொள்ளும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், நகருக்குள் பிரேதம் எடுத்துச் செல்ல 1,500 ரூபாயில் இருந்து 2,000 ரூபாய் வரை அநியாய கட்டணம் கேட்டு அடம் பிடிக்கின்றனர். பிரேதத்தை போட்டுவிட்டு பேரம் நடத்த விரும்பாத பலரும், வேறுவழியின்றி, கேட்கும் தொகையை “அழுது’ பிரேதத்தை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. தனியார் ஆம்புலன்ஸ்களின் கட்டணக்கொள்ளை குறித்து, அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் பலரும் புகார் செய்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.

மக்கள் சேவையை நோக்கமாக கொண்டு செயல்படும் (!) ஆம்புலன்ஸ் வேன் உரிமையாளர்கள், அப்பாவி மக்களிடம் அநியாய வசூல் நடத்தி பணம் பறிக்கின்றனர்; அதே வேளையில் சில ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மனிதாபிமான அடிப்படையில் குறைந்த வாடகை பெற்றும் இயக்கி வருகின்றனர். தவிர, த.மு.மு.க., மற்றும் இந்து மக்கள் கட்சி, தோழர் அறக்கட்டளை சார்பிலும் ஆம்புலன்ஸ் சேவை அளிக்கப்படுகிறது; இது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. எனினும், ஆம்புலன்ஸ் தேவை அதிகமாக இருப் பதால், தனியாரின் ஆதிக்கம் மற்றும் அநியாய வசூல் அதிகரித்து வருகிறது. ஆம்புலன்ஸ்களின் இயக்கம் மற்றும் கட்டணத்தை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை, அரசு மருத்துவமனை நிர்வாகம் இணைந்து, நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும், என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனை டீன் (பொறுப்பு) டாக்டர் குமரன் கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் நிறுத்த அனுமதியில்லை. அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக எங்களுக்கு புகார் வரவில்லை; வந்தால் சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இருப்பினும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனரிடம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், கோரிக்கை வைக்கப்படும். மேலும், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் ஆம்புலன்ஸ் வழங்குவது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பதில் இல்லை. அரசுக்கு மீண்டும் நினைவூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, டாக்டர் குமரன் தெரிவித்தார்.

கட்டணம் எவ்வளவு? தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: நகர எல்லைக்குள், அதாவது 10 கி.மீ., தூரத்துக்குள் பிரேதம் எடுத்துச் செல்ல 400 முதல் 450 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளோம். புறநகர் பகுதிகளுக்கு 20 கி.மீ., தூரத்துக்குள் 750 ரூபாய் வசூலிக்கிறோம். ஆனால், சிலர் மட்டும் கூடுதலாக வசூலித்து, மொத்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீதும் மக்களிடம் அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம். இவ்வாறு, ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தெரிவித்தனர்.

Advertisements

ஒரு பதில் to “பிணம் தின்னும் அமரர் ஊர்திகள்!”

 1. குப்புசாமி Says:

  அருமை ஐயா,

  எங்களைப் போன்ற வயதான ஆட்களுக்கு சாதாரணமாக செய்திகள் பார்த்து, படித்து அளுத்து விட்டன.

  இவ்வுலகம் திருந்துமா என்று எண்ணி நொந்துவிட்டோம்.

  எனது நண்பர் சொல்லி, உமது எழுத்துகளைப் படிக்கிறேன். எனது, பேரனை வைத்து பதில் எழுதச்சொல்கிறேன்.

  [வயதாகிவிட்டது, காலம் மாறிவிட்டது, என்னால் இம்மாதிரியெல்லாம் தட்டமுடியாது]

  உண்மையை சொல்லப் பயப்படுகின்றனர், எங்கு அவரது பிழைப்புப் போய்விடுமோ என்று.

  ஐயரை நோண்டும் அதிகாரிகள், எப்படி அந்த பறங்கியனை விட்டு வைத்திருக்கின்றனர்?

  மேகவியாதிக்கு பறங்கிப் பட்டை, லேகியம், தருவானோ என்ன்வோ?

  இந்த துணுங்கரை, மாசு பிறக்கிய மேனியரை,
  மருவும் துவராடையரை, பிண்டியரை, ஊத்தை வாயரை,
  குண்டரை, புலையரை, பதர்களை, பளகர்களை, பிந்தியரை, பாஷாண்டிகளை கழுவிலேற்றினாலும், தூக்கிலேற்றினாலும் தகும்!

  ஆனால், அவர் பாதத்தை நக்கும் இந்நீசர், அவ்வாறு செய்வரோ?
  பொன், பெண், பொருள் கொண்டுக் கூட்டிக் கெடுப்பரோ?
  சட்டத்தை மிதித்து, கற்பை சூரயாடிய சோரம் போனவனுடன் கட்டித் தழுவுவரோ?
  யான் என் செய்வேன், அழுவதைத் தவிர ஈசன் பதம் பணிந்து!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: