காஞ்சிபுரம் தேவநாதன் பெண்களால் தாக்கப்படுவது!

சன்-டிவி செய்தியின்படி நீதிமன்ற வாசலிலே “தள்ளூ-முள்ளூ”: 30-11-2009 தேவநாதன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறான். ஏற்கெனவே அங்கு பெண்கள் கூட்டம் கூடியிருக்கிறது. அப்படியென்றால் அது போலிஸுக்குத் தெரியாமல் இருக்காது. தேவநாதன் வேனிலிருந்து இறக்கப்படுகிறான். பெண்கள் திடீரென்று அவன்மீது பாய்கின்றனர். போலீஸார் அவனைப் பிடித்துத் தள்ளிவிடுகின்றனர் உள்ளே. டிவிக்களின் பாஷையில் சொல்லவேண்டுமானால் “தள்ளு-முள்ளு” ஏற்பட்டது.

வில் ஹியூம்-தேவநாதன் போலீஸார் / ஊடகங்கள் நடத்தும் முறை: பாமக, விசி, ம.க.இ.க முதலிய குழுமங்கள் ஏற்கெனவே அந்த தேவநாதனை அடிக்கவேண்டும் என்று தீர்மானித்துள்ளதாக பேச்சு சில இணைதளங்களில் செய்தி வெளி வந்தது. ஆகவே போலீஸார் அந்த “தள்ளு-முள்ளு”வைத் தவிர்த்திருக்கலாம். டிவி-செனல்கள் காட்டுவதைதான் மக்கள் பார்க்கிறர்கள். வில் ஹியூம் கோர்ட்டிற்கு அழைத்துச் செல்லும்போதோ, வரும்போதோ எப்படி வருகிறான்? போலீஸார் தொடுவதுகூட கிடையாது! அப்படி என்ன மதிப்போ, மரியாதையோ தெரியவில்லை! ஆனால் தேவநாதனை ஏதோ தீவிரவாதியைப்போல தள்ளி அழைத்துச் செல்லப்படுகிறான். இங்கு அவன் செய்த குற்றங்கள் மறுக்கப்படவில்லை. ஆனால் போலீசார், ஊடகங்களின் பாரபட்சத் தன்மையினைத்தான் எடுத்துக் காட்டப் படுகிறது.

Women_attack_Devanathan

பத்திரிக்கைகளின் படி தெரிவதென்னவென்றால், பெண்கள் நீதிமன்ற வளாகத்திலேயே அவ்வாறுத் தாக்கியதாகத் தெரிகிறது!

இம்மாதிரியான மரியாதை வில் ஹியூமிற்கு செய்யாததுதான் விந்தையிலும் விந்தை!

Advertisements

3 பதில்கள் to “காஞ்சிபுரம் தேவநாதன் பெண்களால் தாக்கப்படுவது!”

 1. vedaprakash Says:

  கருவறையில் காமலீலை அர்ச்சகர் தேவநாதனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் கோவில் சீரமைப்பு சங்கம் வலியுறுத்தல்
  http://viduthalai.periyar.org.in/20091212/news19.html

  காஞ்சிபுரம், டிச. 12_- காஞ்சிபுரம் பேருந்து-நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பல பெண்-களுடன் காம லீலையில் ஈடுபட்ட அர்ச்சகர் தேவ-நாதன் மீது சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்-பதிவு செய்தனர். இதையடுத்து தேவநாதன் காஞ்சிபுரம் நீதிமன்றத்-தில் சரண் அடைந்தார்.

  காவல்துறைக் காவலில் அவரை எடுத்து விசாரித்-தனர். அப்போது அர்ச்ச-கரின் காமலீலை தொடர்-பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அர்ச்சகர் தேவநாதனின் இந்த செயல் காஞ்சிபுரம் மக்களிடையே மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்-களின் மனதை புண்-படுத்தி உள்ளது. பக்தர்-கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் பெண்க-ளுடன் காம லீலையில் ஈடுபட்ட காட்சியை தானே செல்போனில் படம் பிடித்து தனிமை-யில் ரசித்து வந்தார்.

  அது செல்போன் பழுது பார்க்க கொடுத்த போது வெளியுலகிற்கு பரவியது. அர்ச்சகர் தேவ-நாதன் காமக்களி-யாட்-டத்தில் ஈடுபட்ட அந்த காட்சி தனியார் தொலைக்-காட்சிகளில் ஒளிப்பரப்பு ஆகின. இதை கண்ட மக்கள் கொதித்து போய் உள்ள-னர். தேவநாதனை நீதி-மன்றத்திற்க்கு அழைத்து வந்த போது பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்-கள் அர்ச்சகர் தேவநா-தன் மீது செருப்பு, துடைப்-பம், சாணி ஆகி-யவற்றை வீசி தங்கள் கோபத்தை வெளிப்-படுத்-தினர்.

  இந்து முன்னணி அமைப்-பினர் அர்ச்சகர் தேவநா-தனை கண்டித்து கண்ட சுவரொட்டிகள் ஒட்டினர். இந்நிலையில் தமிழ்நாடு தனியார் திருக்கோயில்கள் சீரமைப்பு சங்கம் சார்பில் மாநில தலைவர் கவிஞர் குமார்சாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:- மடத்-திற்கு மடாதிபதியும் நிறுவ-னங்களுக்கு நிறுவ-னர்களும், கிராமத்திற்கு அதிகாரியும் எவ்வாறு முக்கியமான-வர்களோ, அவ்வாறே புனிதமான கோவில்களில் அர்ச்சகர் பணியும் முக்கிய-மானது. ஆகமங்களையும், மந்திரங்களையும், வேதங்-களையும், முறையாக பயின்று சாஸ்திரங்களை கற்று பூஜைக்குரியவர்கள் என்று கருதப்படுகிற-வர்கள் தெய்வத்திற்கு அடுத்தப்படியாக போற்-றுதலுக்கு உரியவர்களாக கருதப்படுகின்றனர். அப்பேற்பட்ட அர்ச்சகர் குலத்திற்கே இழிவு ஏற்-படுத்திவிட்டார் தேவ-நாதன். அதுவும் கோவி-லின் கருவறையில் பெண்-களுடன் காமலீலையில் ஈடுபட்-டுள்ளார் என்று கேட்ட போதே உடம்பெல்-லாம் எரிகிறது. அர்ச்சகர் இனத்துக்கே இழிவு ஏற்படுத்திய தேவநா-தனுக்கு அதிகபட்ச தண்-டனை பாரபட்சம் காட்-டாமல் வழங்க வேண்-டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 2. vedaprakash Says:

  அர்ச்சகர் தேவநாதன் நீதிமன்றக் காவல் 23ம் தேதி வரை நீட்டிப்பு
  டிசம்பர் 15,2009,00:00 IST

  http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4704

  காஞ்சிபுரம் : கோவில் உள்ளே பெண்களுடன் உல்லாசமாக இருந்த அர்ச்சகர் தேவநாதனின் நீதிமன்றக் காவல், வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்தவர் தேவநாதன். இவர், கோவில் உள்ளே பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதை, மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். இக்காட்சிகள், வெளியில் பரவியது. இது குறித்து, சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

  தலைமறைவான தேவநாதன், காஞ்சிபுரம் ஜே.எம்.முதல்வகுப்பு கோர்ட்டில் சரணடைந்தார். போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்து தேவநாதனை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக, சிவகாஞ்சி போலீசார் கடந்த 30ம் தேதி மாலை அவரை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

  அப்போது, மக்கள் மன்றத்தைச் சேர்ந்த பெண்கள் அவர் மீது செருப்பு, சாணம், துடைப்பம் ஆகியவற்றை வீசினர். போலீசார் அவர்களை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தேவநாதனை, 14ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நேற்று தேவநாதன் மீண்டும் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்த்து கோர்ட்டில் பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால், மாலை வரை தேவநாதன் அழைத்து வரப்படவில்லை. போதிய பாதுகாப்பு இல்லாததால், தேவநாதனை அழைத்து வர முடியவில்லை என, போலீசார் நீதிபதியிடம் தெரிவித்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுதா, வரும் 23ம் தேதி வரை தேவநாதனின் நீதமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

  நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது குறித்த தகவல், வாரண்ட் மூலம் வேலூர் சிறையில் உள்ள தேவநாதனுக்கு தெரிவிக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.

  • vedaprakash Says:

   போதிய பாதுகாப்பு இல்லாததால், தேவநாதனை அழைத்து வர முடியவில்லை என, போலீசார் நீதிபதியிடம் தெரிவித்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுதா, வரும் 23ம் தேதி வரை தேவநாதனின் நீதமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

   அப்படியென்றால், தேவநாதனுக்கு யாரால் ஆபத்து?

   தேவநாதன் கோர்ட்டுக்கு வருவதனால், தேவநாதனுக்கு ஆபத்தா அல்லது மற்றவர்களினால், அவருக்கு ஆபத்தா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: