வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – II

வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – II

புவனேஸ்வரியும் தமிழச்சி நடிகைகளும்: “வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்!” என்ற தலைப்பில் 20-11-2009ல் எழுதினேன். பிறகு, இவ்விஷயத்தில் பல ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டு தொடருகிறேன். இப்பிரச்சினை நீதிமன்றங்களுக்குச் சென்றுவிட்டதும் நடிக-நடிகையர் அமைதியாகிவிட்டனர். ஆனால், தாங்கள் பேசிய பேச்சுகளை மக்கள் பார்த்து விட்டனர், கேட்டுவிட்டனர், தங்களது உண்மையான முகங்களை அடையாளம் கண்டு கொண்டுவிட்டனர் என்று அறிந்தபோது பதறிவிட்டனர். உடனே பாதிப்பு குறைப்பு-தடுப்பு-மறைப்பு வேளைகளில் இறங்கி விட்டனர். கெட்ட வார்த்தை பேசி திட்டிய ஸ்ரீபிரியா குஷ்புவுடன் சேர்ந்து பெண்கள் பிரச்சினைகளை “பூவா தலையா”வில் அலச ஆரம்பித்துவிட்டனர்! குஷ்பு சின்னத்திரை சங்கத்தின் தலைவராகிறார்! சரத்குமார் ஏதோ ஒரு குழுவிற்கு உறுப்பினறாக அமர்த்தப் படுகிறார். பிஜேபியுடன் கூட்டு சேர்ந்த அவர் திமுகவை ஆதரிக்கிறார், அதற்கு விளக்கமும்[1] கொடுக்கிறார்!

புவனேஸ்வரியும் நடிகைதான், மற்ற நடிகைகளும் நடிகைகள் தாம்: முன்னணி, பின்னணி, அரசியலணி முதலிய நடிகைகள் எல்லாமே தாங்கள் இவ்வாறுதான் “நடிகைகள்” ஆகவேண்டும் என்று தீர்மானத்துடன் தொழிலில் இறங்கியவர்கள்தாம். தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், பணம் கொடுப்பவர்கள் (ஃபனான்ஸியர்கள்), மேக்கப்மேன்கள், இவர்களைக் கேட்டால் சொல்லுவார்கள் எப்படி நடிகைகள் தங்களுடன் சமரசம் செய்துகொண்டனர், பிரபலமானார்கள் அல்லது பின்னிற்குத் தள்ளப்பட்டார்கள் என்று. ஆகவே நடிகைகள் பற்றி, அதாவது அவர்களது கஷ்ட-நஷ்டங்களைப் பற்றி, நடிகைகளுக்கு நன்றாகத்தான் தெரிந்திருக்கும். அவ்வாறு சமரசம் செய்து கொண்ட நடிகைகள் முன்னணியில் வருகிறார்கள், அரசியல் தொடர்பு கொண்டு பலம் பெருகிறார்கள்!

அரசியலும் நடிகைகளும்: அப்படித்தான் அடுத்ததாக அசுரபலமான அரசியல் தொடர்பு வந்துவிடுகின்றது. இதில் சிக்காத நடிகையர்களின் கதி அதோகதிதான். ஜெயப்பிரதாவின் சமீபத்தைய பிச்சினையை இங்கு குறிப்பிடலாம். அமர்சிங்குடன் அவர் நெருக்கமாக இருப்பது, கேள்விக்குரியதுதான். ஆனால், அதைப்பற்றி அவரே கவலைபட்டதாகத் தெரியவில்லை. அஸம்கான் என்பவர் தனது நிர்வாண படங்கள் அடங்கிய சிடியை புழக்கத்தில் விடுகிறார் என்று கடந்த தேர்தல்போது புகார் செய்தார்[2]. தமிழகத்தைப் பொருத்த வரைக்கும் நடிகைகள் அரசியல் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, அரசியல் பலம் பெற்று, நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ முதலமைச்சர் ஆகியிருக்கிறார்கள் அல்லது அந்நிலையில் உள்ளவர்களோடு நெருக்கமாக இருந்துள்ளார்கள், இருக்கிறார்கள். அந்நிலை இன்று அளவிற்கு அதிகமாகத் தென்படுகிறது. தொடர்ந்து நடிகைகள் மேடைகளில் வருவது, முதலமைச்சருடன் பழகுவது, வீட்டிற்குச் செல்வது, பேசுவது, வாழ்த்து பெருவது…………………என்பதெல்லாம் என்னவென்று புரியவில்லை!

வியாபாரம்-தொழில்களும் நடிகைகளும்: பிறகு சம்பாதித்தப் பணத்தை வியாபாரம், வணிகம், தொழிற்சாலை என்று முதலீடு செய்யும்போது மற்ற தொடர்புகள் வருகின்றன, கிடைக்கின்றன. அத்தகைய அரசியல்-தொழிற்துறை கூட்டில், சினிமாக்காரர்கள் பெரும்பாலும் இப்பொழுது கலந்துள்ளதால், “நடிகைகள்” இவ்விஷயங்களில் வருகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் பலவகைகளில் உபயோகப்படுகிறார்கள். தமது வியாபாரம் பெருக அதாவது உற்பத்தி செய்யப் படும் பொருட்கள் அல்லது தரப்படும் சேவைகளை அறிமுகப் படுத்த, பிரபலப்படுத்த, விற்பனையைப் பெருக்க விளம்பரங்கள் / ஷோக்கள் / நிகழ்ச்சிகள் மூலம் உபயோகப் படுத்தப் படுகிறார்கள்[3]. வியாபாரச் சின்னங்கள் / வணிகக் குறிகள்-அடையாளங்கள்-முத்திரைகள் இவற்றை பிரபலமாக்க அவர்கள் உபயோகப் படுத்தப் படுகின்றார்கள். இதில் அவர்களுக்கு எதில் அதிக லாபம் என்று பார்த்து அதில் சேர்ந்து கலந்துவிடுகிறார்கள்[4].

அரசியல்-சினிமா-தொழில்-வியாபாரக் கலப்பு: இத்தகைய அரசியல்-சினிமா-தொழில்-வியாபாரக் கலப்பில் நடிகைகளின் பங்கு மற்றவர்களிடம் எந்த நிலையில் உள்ளது, சமரசம் எந்த அளவில் செயல்படுகிறது, வியாபார இணைப்பு எதுவரை செல்கிறது, தொழில் சம்பந்தம் எப்படி நடைமுறையில் உள்ளது, இடம், பொருள், ஏவல், காலம் முதலியவற்றுடன் எவ்வாறு அனுசரித்துச் செல்கின்றனர் என்பதைப் பார்த்தால் உண்மை விளங்கும். அரசியல் உறவு, தாம்பத்திய உறவாக மாறலாம். அப்பொழுது –

 • ஒரு நடிகன் நடிகையை மணக்கும்போது, அவர்கள் இருவரில் ஒருவரோ அல்லது இருவருமே மணமான நிலையில், ஒரு மனைவி அல்லது கணவன் ஒதுக்கப்படுகிறாள்/ன்.
 • அதேமாதிரி ஒரு அரசியவாதி ஒருநடிகையை மணந்தால், அவனது மனைவி புறக்கணிக்கப்படுகின்றாள்.
 • பலதார நடிகை, இன்னொரு நடிகனை மணந்துகொண்டால், அவனது மனைவிதான் துன்பப்படுவாளேத் தவிர, அந்த பலதார நடிகைக்கு எந்த கவலையும் இல்லை.
 • இருவருமே அரசியல்வாதிகளானால், அவர்களை ஒன்றுனம் செய்யமுடியாது.
 • ஒரு பெண் அரசியல்வாதி, பல ஆண்களை (விவாக ரத்து பெற்றோ, பெறாமலோ) மணந்தாலும் குறைசொல்லமுடியாது.
 • அவ்வாறே, ஒரு நடிகை திருமணம் செய்து கொள்ளாமலேயே, ஒரு நடிகனுடன் வாழ்ந்தாலும், யாரும் ஒன்றும் செய்யமுடியாது.
 • அவ்வாறே ஒரு நடிகை அல்லது நடிகன் திருமணம் செய்து கொள்ளாமலேயே, ஒரு நடிகனுடன் அல்லது நடிகையுடன் வாழ்ந்து குழந்தைகள் பெற்றுக்கொண்டாலும் யாரும் ஒன்றும் செய்யமுடியாது.
 • ஒருநடிகன் கவலையாக உள்ளான், மன-அழுத்தத்துடன் உள்ளான் என்றாலும், அவனது சக-நடிகை / நடிகைகள் மாறி-மாறி அவனுடன் வாழ்க்கை நடத்தலாம், பல இரவுகள் தங்கலாம், யாரும் ஒன்றும் சொல்ல / செய்யமுடியாது.

எந்த சட்டங்களும் இவர்களை ஒன்றும் செய்வதில்லை! பல நேரங்களில் இவர்கள் சட்டங்களில் அகப்படுவதேயில்லை! இதுதான் மிகவும் ஆச்சரியத்திற்கு உரிய விஷயம்! சாதாரமாக ஒரு இந்தியன் இரண்டாவதாக மணம் செய்து கொள்கிறான் என்றால் அவன் தண்டிக்கப்படுகிறான். பிறகு எப்படி இவர்களுக்கு விலக்குக் கிடைக்கிறது? இப்படி பெண்களும், ஆண்களும் மாறி-மாறி திருமணம் செய்து கொள்கின்றனர், விவாக ரத்து ஏற்படுகிறது, குழந்தைகள் பெருகின்றனர். பிறகு அக்குழந்தைகள் யாரை அப்பா, அம்மா என்று சொல்லும்?

தொழில்-பணம்தான் முக்கியம்: இவர்களுக்கு தொழில், வியாபாரம், அரசியல் பாதிக்கக் கூடாது அவ்வளவுதான். ஆகையால் இவ்வாறு விரசமில்லாமல் சமரசம் செய்துகொண்டு வாழ்கின்றனர். பிள்ளைகள் பெறுகின்றனர். சம்பந்தப் பட்ட யாரும் கவலைப் படுவதில்லை. இவர்களில் பெரும்பாலும் சமூகசேவகிகள், சங்கத்தலைவிகள், சட்டமன்ற-பாராலுமன்ற உறுப்பினர் அந்தஸ்து முதலியனவும் வந்து சேர்கின்றன. போதாக்குறைக்கு அவர்கள் கற்ப்பைப்பற்றி கேவலமாகவும் பேசலாம், உயர்வாகவும் பேசலாம், கவலை இல்லை. அப்படியே, யாராவது வழக்குப் போட்டாலும் அரசியல் பலத்தால், தாராளமாகத் தாப்பி வந்துவிடலாம். ஏனெனில் நீதிபதிகள் அரசியல்வாதிகளால் நியமிக்கப்படும் பட்சத்தில், அவர்கள் தங்களது அரசியல் எஜமானர்களின் விருப்பு-வெருப்புகளுக்கு ஏற்ப தீர்ப்புகளைத் தருகின்றனர்[5].

புவனேஸ்வரி பிரச்சினை அடங்கியதும் வில் ஹியூம் தோன்றினான்: புவனேஸ்வரி பிணையில் வெளிவந்ததும், பக்திமார்க்கத்தில் இறங்கிவிட்டாராம். அதையும் சில பத்திரிக்கைகள் விடவில்லை[6]. பிறகு அமைதியாகி விட்டன. அவரை மறந்தே விட்டன எனலாம். இந்நிலையில்தான் வில் ஹியூம் என்ற குழந்தை அல்லது சிறுமியர்-சிறுமி பாலியல், வக்கிர-காமுகனைப் பற்றி செய்திகள் வர ஆரம்பித்தன. இருப்பினும் முன்னமே சொல்லியபடி அமுக்கி வாசித்தன தமிழ் நாளிதழ்கள் / பத்திரிக்ககள்! நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்ந்தது!

வேதபிரகாஷ்

06-12-2009


[1] http://thatstamil.oneindia.in/news/2009/12/03/sarath-explains-reasons-supporting.html

 

[2] Azam circulating nude posters of mine: Jaya CNN-IBN Published on Mon, May 11, 2009 at 12:10, Updated on Mon, May 11, 2009 at 14:08 in Politics section

http://ibnlive.in.com/news/azam-is-circulating-nude-posters-of-mine-jaya/92312-37.html

[3] நடிகைகள் சிங்கப்பூர், மலேசியா, கன்னடா, தாய்லாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று வருவதை ஆராய்ந்தால் தெரியும்.

[4] ரம்பாவின் உதாரணம் இதில் வருமா, வராதா என்று இனிமேல்தான் தெரியும் போல இருக்கிறது.

[5] குஷ்பு வழக்ககுகள் தள்ளுபடியானது இந்த காரணத்தினால்தான். தமிழச்சிகளின்மீது அத்தகைய விமர்சனம் செய்தும் தப்பித்தார் என்பதுதான் கவனிக்கவேண்டிய விஷயம்.

ஹுஸைன் தப்பித்ததும் அவ்வாறே. தன்மானம் உள்ள எந்த நாட்டிலும், நீதிமன்றம் அத்தகைய தீர்ப்பளிப்பதை, எந்த நாட்டினரும் கேட்டிருக்கமாட்டார்கள், பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும்தான், “ஓவியன்” எனப்படுகின்றவன், தெய்வங்களையும், பாரதமாதாவையும் நிர்வாணமாக சித்திரம் தீட்டியதுடன், தப்பிக்கவும் செய்துள்ளான்!

[6] நக்கீரன் மற்றும் இணைத்தளங்கள்.

குறிச்சொற்கள்: , , ,

4 பதில்கள் to “வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – II”

 1. vedaprakash Says:

  கருவறையில் காமலீலை அர்ச்சகர் தேவநாதனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் கோவில் சீரமைப்பு சங்கம் வலியுறுத்தல்
  http://viduthalai.periyar.org.in/20091212/news19.html

  காஞ்சிபுரம், டிச. 12_- காஞ்சிபுரம் பேருந்து-நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பல பெண்-களுடன் காம லீலையில் ஈடுபட்ட அர்ச்சகர் தேவ-நாதன் மீது சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்-பதிவு செய்தனர். இதையடுத்து தேவநாதன் காஞ்சிபுரம் நீதிமன்றத்-தில் சரண் அடைந்தார்.

  காவல்துறைக் காவலில் அவரை எடுத்து விசாரித்-தனர். அப்போது அர்ச்ச-கரின் காமலீலை தொடர்-பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அர்ச்சகர் தேவநாதனின் இந்த செயல் காஞ்சிபுரம் மக்களிடையே மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்-களின் மனதை புண்-படுத்தி உள்ளது. பக்தர்-கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் பெண்க-ளுடன் காம லீலையில் ஈடுபட்ட காட்சியை தானே செல்போனில் படம் பிடித்து தனிமை-யில் ரசித்து வந்தார்.

  அது செல்போன் பழுது பார்க்க கொடுத்த போது வெளியுலகிற்கு பரவியது. அர்ச்சகர் தேவ-நாதன் காமக்களி-யாட்-டத்தில் ஈடுபட்ட அந்த காட்சி தனியார் தொலைக்-காட்சிகளில் ஒளிப்பரப்பு ஆகின. இதை கண்ட மக்கள் கொதித்து போய் உள்ள-னர். தேவநாதனை நீதி-மன்றத்திற்க்கு அழைத்து வந்த போது பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்-கள் அர்ச்சகர் தேவநா-தன் மீது செருப்பு, துடைப்-பம், சாணி ஆகி-யவற்றை வீசி தங்கள் கோபத்தை வெளிப்-படுத்-தினர்.

  இந்து முன்னணி அமைப்-பினர் அர்ச்சகர் தேவநா-தனை கண்டித்து கண்ட சுவரொட்டிகள் ஒட்டினர். இந்நிலையில் தமிழ்நாடு தனியார் திருக்கோயில்கள் சீரமைப்பு சங்கம் சார்பில் மாநில தலைவர் கவிஞர் குமார்சாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:- மடத்-திற்கு மடாதிபதியும் நிறுவ-னங்களுக்கு நிறுவ-னர்களும், கிராமத்திற்கு அதிகாரியும் எவ்வாறு முக்கியமான-வர்களோ, அவ்வாறே புனிதமான கோவில்களில் அர்ச்சகர் பணியும் முக்கிய-மானது. ஆகமங்களையும், மந்திரங்களையும், வேதங்-களையும், முறையாக பயின்று சாஸ்திரங்களை கற்று பூஜைக்குரியவர்கள் என்று கருதப்படுகிற-வர்கள் தெய்வத்திற்கு அடுத்தப்படியாக போற்-றுதலுக்கு உரியவர்களாக கருதப்படுகின்றனர். அப்பேற்பட்ட அர்ச்சகர் குலத்திற்கே இழிவு ஏற்-படுத்திவிட்டார் தேவ-நாதன். அதுவும் கோவி-லின் கருவறையில் பெண்-களுடன் காமலீலையில் ஈடுபட்-டுள்ளார் என்று கேட்ட போதே உடம்பெல்-லாம் எரிகிறது. அர்ச்சகர் இனத்துக்கே இழிவு ஏற்படுத்திய தேவநா-தனுக்கு அதிகபட்ச தண்-டனை பாரபட்சம் காட்-டாமல் வழங்க வேண்-டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 2. vedaprakash Says:

  அர்ச்சகர் காவல் நீட்டிப்பு: ஜாமீன் பெற குடும்பத்தினர் எதிர்ப்பு
  ஜனவரி 22,2010,00:00 IST
  http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15607

  காஞ்சிபுரம்:அர்ச்சகர் தேவநாதன் நீதிமன்றக்காவல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.காஞ்சிபுரத்தில் கோவில் உள்ளே பெண்களுடன் உல்லாசமாக இருந்த வழக்கில் அர்ச்சகர் தேவநாதன் கைது செய்யப்பட்டார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால், ஆஜர்படுத்தப்படவில்லை. வாரன்ட் மூலம் தேவநாதன் நீதிமன்றக் காவல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர். அதேபோல் தேவநாதனுக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது வக்கீல்கள் காஞ்சிபுரம் ஜே.எம்.முதல் வகுப்பு கோர்ட்டில் மனு செய்தனர். நேற்று மனு விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால், தேவநாதன் வக்கீல் தேசாய், ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.இது குறித்து அவர் கூறும்போது, “தேவநாதனை ஜாமீனில் எடுக்க அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. எனவே, ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றோம்’ என்றார்.

 3. குழந்தை கற்ப்பழிப்பாளி வில் ஹியூமிற்கு பத்ததண்டு சிறைத்தண்டனை! « பெண்களின் நிலை Says:

  […] https://socialterrorism.wordpress.com/2009/12/06/will-heum-buwaneswari-devanathan-and-media-2/ […]

 4. சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி! « சமூகத் தீவிரவாதம் Says:

  […] https://socialterrorism.wordpress.com/2009/12/06/will-heum-buwaneswari-devanathan-and-media-2/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: