ரூ.1200 கோடியில் கூவம் சீரமைப்பு: மு.க.ஸ்டாலின் தகவல்!

ரூ.1200 கோடியில் கூவம் சீரமைப்பு
துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை, டிச.9_ கூவம் நதி சீரமைப்பின் ஒரு பகுதியாக, பொதுப்பணித் துறையிடம் உள்ள கூவம் நதிக்கரையில் உள்ள காலி இடங்களை சென்னை மாநகராட்சியிடம் ஒப்ப-டைக்கும் நிகழ்ச்சி, எழும்-பூர் காந்தி இர்வின் பூங்-காவில் நேற்று நடந்தது. பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள இடங்களை துணை முதல்-வர் மு.க.ஸ்டாலின் மாந-கராட்சியிடம் ஒப்ப-டைத்தார்.

பின்னர் ஸ்டாலின் கூறியதாவது: கூவம் சீர-மைப்பு என்பது முதல்-வரின் கனவுத் திட்டம். கூவத்தை சீரமைக்க வேண்டும் என்று முதல்-வர் உத்தரவிட்டார். சிங்கப்பூர் நதி, கல்லாங் நதி ஆகியவை எவ்வாறு சீரமைக்கப்பட்டன என்பது பற்றி அறிந்து வர நானும், மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளும் சிங்கப்பூர் சென்றோம். அங்கு அந்த நதிகளை சீரமைத்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோ-சனை நடத்தினோம். இந்த விவரங்களை முதல்வ-ரிடம் தெரிவித்தோம். இதை-யடுத்து எனது தலை-மையில் கூவம் நதி சீரமைப்பு ஆணையத்தை முதல்வர் அமைத்-துள்-ளார். இந்த ஆணையத்-தின் முதல்கட்டப் பணி-யாக, சிந்தாதிரிப்பேட்டை கூவம் நதிக்கரையில் உள்ள செயின்ட் ஆண்ட்-ரூஸ் பாலத்தில் இருந்து ஹாரிஸ் ரோடு பாலம் வரை ஒரு கி.மீ. தூரம் காலியாக உள்ள கூவம் நதிக்கரையில் (லாங்க்ஸ் கார்டன் சாலை) அழகிய பூங்கா, குழந்தைகள் விளையாட திடல்கள் என பல கண்கவர் அம்சங்-களை உருவாக்கி சோலை-வனமாக மாற்றப்படும்.

10 ஆண்டுகாலம்

சிங்கப்பூர் நதி 12 கி.மீ. நீளம்தான். அதை சீரமைக்க 10 ஆண்டுகள் ஆனது. கூவம் நதி சென்னையில் 18 கி.மீ. நீளத்துக்கு ஓடு-கிறது. இந்த நதி தொடங்-கும் திருவள்ளூர் மாவட்-டத்தில் இருந்து சென்னை எல்லை வரை 54 கி.மீ. நீளம் என மொத்த 72 கி.மீ. நீளம் உள்ளது. இதை 10 ஆண்டுக-ளுக்குள் சீரமைக்க திட்டமிடப்-பட்டுள்ளது அதற்கு முன்னதாகவே முடிக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்-படும். சீரமைக்கும் பணி-யில் மாநகராட்சி, பொதுப்-பணித் துறை, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்-றும் வாரியம் என பல துறைகள் இடம்பெறு-கின்றன.

இந்த துறைகள் ஒருங்-கி-ணைந்து செயல்பட தலைமை செயலர் தலை-மையில் நிருவாகக் குழு அமைக்கப்படவுள்ளது. முதல் கட்டமாக ரூ.1,200 கோடியில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஏற்கெனவே ரூ.400 கோடியில், சென்னை குடிநீர் வாரியம் மூலம் பணிகள் நிறைவேற்றப்-பட்டுள்ளன. சீரமைப்பு பணிக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் தேவைப்-பட்டால், பப்ளிக் யுட்டி-லிட்டி போர்டு என்ற சிங்கப்பூர் அமைப்புடன் தொடர்பு கொண்டு பணி நிறைவேற்றப்படும். கிருஷ்ணா நதிநீர் கால்-வாய் அமைக்க உதவியது போலவே, கூவம் நதி சீரமைப்பு திட்டத்துக்கும் உதவி செய்ய வேண்டும் என்று சாய்பாபா அறக்-கட்டளையிடம் கோரி-யுள்ளோம். அவர்களன் உதவி கிடைக்கும் என்-றும் நம்புகிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

பின்னர் தொலைக்-காட்சி செய்தியாளர் ஒருவர், அரசியலில் இருந்து ஒய்வு பெறுவது போல முதல்வர் பேசியுள்ளாரே? என்று கேட்டதற்கு, ஒய்-வுக்கே ஒய்வு கொடுத்தவர் முதல்வர் என்று ஸ்டாலின் பதில் அளித்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: