மரபணு ஆராய்ச்சியும், இன-மொழிவெறி திரிபுவாதங்களும்

மரபணு ஆராய்ச்சியும், இன-மொழிவெறி திரிபுவாதங்களும்

மரபணு ஆராய்ச்சி அடிப்படையில் மறுபடியும் மற்றொரு ஆய்வை மேனாட்டவர் வெளியிட்டிருக்கின்றனர்.

அதன்படி, முதன் முதலில் மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றி, பிறகு மற்ற நாடுகளுக்குப் பரவினான் என்கிறார்கள்.

அதே நேரத்தில் ஆசியாவிலுள்ளவர்கள் எல்லொருமே கிட்டத்தட்ட, ஒரே மரபணு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று இப்பொழுது கூறுகின்றனர்.

குறிப்பாக சீனர்கள், இந்தியாவிலிருந்துத் தோன்றியவர்கள் என்று கூறுகிறார்கள்!

அலை-அலையாக ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் 40,000-50,000 வருடங்களுக்கு முன்பு வந்த மக்கள், இந்திய கடற்கரை வழியாக ஒரேதடவை இந்தியாவில் நுழைந்து அல்லது இடம் பெயர்ந்து, பிறகு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து, சீனா, ஜப்பான் நாடுகள் வரை பரவினர்.

அதே மாதிரி, வடகிழக்குதிசை வழியாக தென்மேற்கு ஆசிய நாடுகளுக்குப் பரவினர்.

இவ்வாறாக ஆப்பிரிக்காவிலிருந்த மக்கள், இந்தியாவிற்கு வந்து, பிறகு ஆசியா முழுவதும் பரவினர்!

“ஆசிய மரபணு வேற்றுமையின் வரைப்படம்”  (Mapping Human Genetic Diversity in Asia) என்ற ஆய்வுக் கட்டுரை, சமீபத்தைய விஞ்ஞானம் என்ற ஆய்வு-சஞ்சிகையில் வெளிவந்துள்ளது (Published 11 December 2009, Science 326, 1541 (2009)DOI: 10.1126/science.1177074).

இதில் சைனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், தாய்லாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளின் பலத்தரப்பட்ட விஞ்ஞானிகள் பங்கு கொண்டுள்ளனர்.

டி.என்.ஏ மாதிரிகள் 1,903 தொடர்பில்லாதத் தனிமனிதர்களிடமிருந்து 71 மக்கள் குழுமங்களைப் பிரதிபலிக்கிறார்போல, சைனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், கொரியா, பிலிப்பைன்ஸ், தைவான், தாய்லாந்து முதலிய நாடுகளிலிருந்து எடுக்கப்பட்டன, மரபணு-பதிவுச் செய்யப்பட்டன.

பிறகு தொடர்பில்லாத 60 ஐரோப்பிய-அமெரிக்க, 60 யூருபா, 45 சைன மற்றும் 44 ஜப்பானிய மரபணு-பதிவுகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இவையெல்லாமே அந்தந்த நாடுகளின் நெறி மற்றும் மறுபார்வையிடும் நிறுவனங்களின் அனுமதியோடு பெறப்பட்டன.

75 மனித குழுமங்கள் 10 மொழிக் குடும்பங்ளைச் சார்ந்தவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

பிறகு, இந்த முடிவிற்கு வந்துள்ளனர், “When the genetic data in this study are considered together with the geographicaldistribution of the clusters and archeological and linguistic information, we propose thefollowing model of human migrations in Asia. The initial entry is likely to have followeda southern route to Southeast Asia (S58). From there, populations gradually movednorth, adapting to climatic and local selective pressures. Subsequently, andparticularly with the development of agriculture as a stimulus, populations in northernand central East Asia may have expanded southwards, altering the physicalcharacteristics of the original inhabitants.”

ஆனால், உடனே ஐரோப்பியர்கள் அத்தகைய ஆராய்ச்சி முடிவுகளை மறுக்க ஆரம்பித்துள்ளனர்.

முன்னமே அவர்களுக்கு, குறிப்பாக இனவெறி-சித்தாந்திகளுக்கு “ஆப்பிரிக்காவிலிருந்து” என்ற சித்தாந்தத்திற்கு உடன்பாடு இல்லை.

ஆகையால் “ஆப்பிரிக்காவிற்கு வெளியே” என்ற கருதுகோள்படி, மனிதத் தோற்றங்களின் ஆரம்பங்களை ஐரோப்பாவிலியேத் தேட ஆரம்பித்தனர்!

குறிச்சொற்கள்: , , , ,

3 பதில்கள் to “மரபணு ஆராய்ச்சியும், இன-மொழிவெறி திரிபுவாதங்களும்”

 1. vedaprakash Says:

  மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சியை இங்கு காMஅலாம்:

  Supporting Online Material for
  Mapping Human Genetic Diversity in Asia

  The HUGO Pan-Asian SNP Consortium†

  †To whom correspondence should be addressed. E-mail: ljin007@gmail.com (L.J.); liue@gis.a-star.edu.sg
  (E.T.L.); seielstadm@gis.a-star.edu.sg (M.S.); xushua@picb.ac.cn (S.X.)

  Published 11 December 2009, Science 326, 1541 (2009)

  DOI: 10.1126/science.1177074

 2. குப்புசாமி Says:

  அதெல்லாம் சரி.

  திராவிட-ஆரிய போராட்டங்களுக்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்கள்?

  எல்லொரும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தால் எப்படி?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: