வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – III

வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – III

அனாதை இல்லங்கள் சோதனை தொடர்கிறது: தமிழகத்தில் ஊழல் அதாவது பணத்தினால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலையுள்ளதால் “செய்திகள்” வரும், ஆனால் முடிவுகள் தெரிவிக்கப்படமட்டாது! இருப்பினும் அயல்நாட்டு விஷயம் / இன்டர்போல் போன்ற நிர்பந்தங்கள் இருப்பதனால் நடவடிக்கை எடுப்பது போன்று தெரிகிறது. 27-11-2009 (வெள்ளிக்கிழமை) வரை பல அனாதை இல்லங்களை போலீஸார் சோதனையிட்டு வந்துள்ளார்கள். ஆனால், தமிழ் பத்திரிக்கைகள் / டிவி-செனல்கள் மூச்சுக் கூடவிடவில்லை. இத்தனை நடந்த பிறகும், எந்த செய்தியும் வெளிவரவில்லை. ஆனால், தேவநாதனைப் பற்றிய செய்திகள் மூன்னமே குறிப்பிட்டபடி அதிகம் வருகின்றன!

சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா? அயல்நாட்டவரின் வரவு சென்னை மற்றும் புறப்பகுதிகளில் அதிகமாக அவர்களின் தேவைகளும் அதிகமாகிறது என்பது உண்மை. அவர்கள் கிருத்துவர்களாக இருப்பதினால் அருகிலுள்ள சர்ச்சுகளுக்கு போகிறார்கள் அல்லது அந்த சர்ச்சுகளுகுக்கு அவர்களது வருகை – டினாமினேஷன் படி – அறிவிக்கப்படுகிறது. பிறகு அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்ய சர்ச்சுகளும், சம்பந்தப் பட்ட மேனாட்டு கம்பெனிகள் மற்றும் அவர்களது இந்திய உள்ளூர் பிரதிநிதிகள் தயாராக உள்ளனர். அவ்வாறே அவர்கள் கவனிக்கப்படுகின்றனர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலிஸார் சோதனையிட்டபோது, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு கிருத்துவ அனாதை இல்லத்தில் 13 ஜெர்மானியர்கள், போலீஸார் அனுமதி இல்லாமலேயே / போஈஸாருக்கு அறிவிக்கப் படாமலேயே தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது[1]. இதைத் தவிர சென்னையைச் சுற்றியுள்ள 19 அனாதை சிறுமி-சிறுவர் இல்லங்கள் சோதனையிடப்பட்டன. அவையெல்லாமே சந்தேகிக்கும் வகையில்தான் உள்ளதாக நிருபர் கூறியுள்ளார்[2].

இதை நடத்துவது கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக் கழகம் [Society for the Educational and Economic Development (Regd)] என்ற கிருத்துவ அமைப்பு[3]. “விபச்சாரிகளின் குழந்தைகள்” பற்றியதாம்! முதல் கவனம்: குற்றவாளிகளின் குழந்தைகள் Primary Focus: children of (ex)convicts (description). இரண்டாவது கவனம்: விபச்சாரிகளின் குழந்தைகள் Secondary Focus: children of sex workers. மற்றது: உடல் குறைவு கொண்ட குழந்தைகள் பற்றியது. Other Focus: children with disabilities; பகுதி: ஊருக்கு வெளியில். Area: Rural; இருக்கும் சிறுவர்-சிறுமியர்: 263. Number of Children: 263; பையன்கள்-பெண்கள் விகிதாச்சாரம்: நான்கிற்கு ஒன்று. Boy/Girl Ratio: 4 : 1; அதாவது 65 / 66 சிறுமிகள்-பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள்[4]. “கடவுளின் ராஜ்ஜியம்” என்ற வாஞ்சுவான்சேரியில் மற்றொரு அனாதை இல்லம்! அங்கு 11 இளைஞிகள் இருக்கின்றனர். ஆனால் அதை நடத்தும் இரண்டு ஆஸ்திரேலியர்கள் எந்தவித கணக்கையும் வைத்துக் கொண்டிருக்கவில்லை!

அர்ச்சகர் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு[5]: காஞ்சிபுரம் கோவிலில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்ட அர்ச்சகர் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் நவம்.23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காஞ்சிபுரம் கோவிலில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட அர்ச்சகர் தேவநாதன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 16ம் தேதி தேவநாதன் காஞ்சிபுரம் ஜே.எம்.முதல்வகுப்பு கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று முன்தினம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி வக்கீல்கள் தமிழ்செல்வன், தேசாய் ஆகியோர் காஞ்சிபுரம் ஜே.எம்.முதல்வகுப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது கூடுதல் அரசு வக்கீல் பாஸ்கர் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. வழக்கு சம்பந்தமான சான்றுகள் கிடைத்துள்ளன. குற்றவாளியிடமிருந்து எந்த விவரமும் பெற முடியவில்லை. போலீஸ் காவலுக்கு குறைந்த நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பெயர், முகவரிகளை கண்டறிய முடியவில்லை. இவ்வழக்கு சமூகத்தையும், மதத்தையும் பாதிக்கக் கூடியதாக இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்து முன்னணி போன்ற அமைப்புகள் வழக்கு விசாரணை குறித்து கேள்வி எழுப்பி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்[6]. போலீஸ் காவலுக்கு குறைந்த கால அளவே அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்ய உள்ளோம். இது தொடர்பான விவரங்களை நாளை தெரிவிக்கிறோம் என்றார். தேவநாதன் தரப்பு வக்கீல் தமிழ்ச்செல்வன், நாளை நான் மவுன விரதம். என்னால் விவாதம் செய்ய முடியாது. இது ஜாமீன் மனு மீதான விசாரணைதான். இன்றே வைத்துக் கொள்ளலாம் என்றார். அதைதத் தொடர்ந்து நீதிபதி சுதா ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ஆபாச அர்ச்சகர் வலையில் சிக்கிய டாக்டர் மனைவி தற்கொலைக்கு முயற்சி[7]: ஆபாச அர்ச்சகர் தேவநாதனிடம் சிக்கிய டாக்டர் ஒருவரின் மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
அர்ச்சகர் தேவநாதன் சரண் அடைந்ததும் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்றதும் காட்டுத்தீ போல பரவியது. தேவநாதனுடன் கோவிலில் மற்றும் பல இடங்களில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட பெண்கள் திடீரென மாயமானார்கள். தாங்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவோமோ என பயந்து சிலர் குடும்பத்துடன் மாயமானார்கள். காஞ்சீபுரத்தில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரின் மனைவி தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் அறிந்ததும் அவர் தற்கொலைக்கு முயன்ற தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் காஞ்சீபுரத்தில் பல வி.ஐ.பி. குடும்ப பெண்களும் இந்த செக்ஸ் வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேட்டைகள் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி: செக்ஸ் அர்ச்சகர் வாக்குமூலம்[8]: பல ஆண்டுகளாக கோவிலில் காம லீலைகளை அரங்கேற்றி வந்த செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன், தனது சேட்டைகள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பதை போலீசிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். காஞ்சிபுரம், மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆபாச அர்ச்சகர் தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தேவநாதனை போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. தேவநாதன் தனது வாக்குமூலத்தில் கூறி்யிருப்பதாவது:

காஞ்சிபுரம் தான் எனது பூர்வீகம். எனக்கு 35 வயதாகிறது. கங்கா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன். சிறு வயதில் எனது தந்தைக்கு துணையாக கோவிலுக்கு வரும்போதே, அங்கு வரும் பெண்களிடம் கனிவாக பேச கற்றுக்கொண்டேன். எனது 15 ஆண்டு அனுபவத்தில் பெண்களின் கண்ணை பார்த்தவுடன் அவர்களின் மனதில் உள்ளது என்ன என்பதை அறிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. குழந்தை வரம் கேட்டு வரும் பெண்கள் என்றால் எளிதில் வேறு ஆண்களிடம் சிக்க மாட்டார்கள். குழந்தைக்கு சுகமில்லை என்று வருவோரும், கணவனுக்கு உடல்நலமில்லை என்று வரும் பெண்களிடம்மும் ஒருமுறைக்கு இரண்டு முறை மனம் உருக பேசினால் தானாக வழிக்கு வந்து விடுவார்கள். ஆரம்பத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு சில பெண்களிடம் அவர்களது வீட்டிற்கு தோஷம் கழிப்பதாக கூறி சென்று உல்லாசம் அனுபவித்துள்ளேன். சில சமயம் என்னிடம் வலையில் விழுந்த பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருப்பேன்.

அனைவரிடமும் சகஜமாக பேசும் பெண்களிடம் அழகை வர்ணித்து வலையில் விழ வைப்பேன். பெரும்பாலான பெண்களிடம் அம்பாள் போல லட்சணமாக இருக்கிறீர்கள். இளமை குன்றாமல் என்றும்16ஆக இருக்க வேண்டுமானால் கோவில் கருவறையில் இருந்தபடி இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறி எனது வழிக்கு வரவழைப்பேன். சிலர் கோவிலில் வேண்டாம் என்று பயந்தால் அவர்களது வீட்டுக்கும் அருகில் உள்ள லாட்ஜுக்கும் அழைத்துச்செல்வேன்[9].

திருமணத்திற்கு பிறகு இதுபோன்ற செயல்களை ஓரளவு குறைத்துக்கொண்டேன். 2 வருடங்களுக்கு முன்பு சைனா செல்போன் ஒன்று வாங்கினேன். அதில் வீடியோ மற்றும் கேமரா வசதி இருந்தது. கோவிலுக்கு வரும் 99 சதவீத பெண்கள் சேலை அணிந்துதான் வருவார்கள். அவர்கள் குணிந்து சாமி கும்பிடும்போது யாருக்கும் தெரியாமல், ஓரமாக நின்று அவர்களை ஆபாசமாக படம் எடுப்பேன். அந்த படங்களை ஓய்வு நேரங்களில் பார்த்து ரசிப்பேன். எனது நண்பர்கள் சிலரிடம் இருந்து ஆபாச படங்களை செல்போன் மூலம் பெற்று பார்த்து ரசிப்பேன். என்னதான் பெண்களை அனுபவித்திருந்தாலும் செல்போனில் பார்ப்பதில் தனி சுகம் கிடைத்தது. இதனால் நாமும் பெண்களுக்கு தெரியாமல் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன்படி கோவிலில் என்னுடன் உல்லாசத்தில் ஈடுபடும் பெண்களுக்கு தெரியாமல் கோவில் விளக்கு பின்புறம் செல்போனை மறைத்து வைத்தேன். பெண்களை மயக்கி கருவறைக்குள் அழைத்து வந்து காம வேலைகளில் ஈடுபட்டேன். இதுபோல கஷ்டப்பட்ட பெண்கள், நடுத்தர குடும்பத்து பெண்கள், பணக்கார வீட்டு பெண்கள் என்று 8 பேரை அனுபவித்து படம் எடுத்தேன். அதை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசி்ப்பேன். சில பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவிக்கும்போதும் படம் எடுத்துள்ளேன்.

ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்கு தொடர்ந்து நோய் தாக்குகிறது என்று கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். குழந்தைக்கு நோய் சரியாக வேண்டுமானால் பள்ளியறையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அவளை உள்ளே அழைத்து செல்வதற்கு முன்பாக செல்போனை மறைத்து வைத்தேன். அப்போது திடீரென செல்போன் தவறி தீர்த்த குடத்திற்குள் விழுந்து விட்டது. அந்தப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ய மனமில்லாமல் விட்டு விட்டேன். தண்ணீருக்குள் விழுந்த செல்போனை எடுத்து வெயிலில் காய வைத்தேன். அது சரியாகவில்லை. எனவே அதை பழுது பார்ப்பதற்காக நண்பர் செந்தில்குமாரின் செல்போன் சர்வீஸ் கடையில் கொடுத்தேன். அதில் உள்ள மெமரி கார்டை எடுக்க மறந்து விட்டேன். அதை சரி செய்து விட்டு பார்த்தபோது நான் கோவிலில் வைத்து எடுத்த ஆபாச படங்கள், வெளிச்சத்துக்கு வந்து விட்டிருந்தது. இதுபற்றி செந்தில்குமார் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனை சரி செய்து கொடுக்கும்போது சிரித்துக் கொண்டே தந்தார். அப்போது அர்த்தம் புரியவில்லை. அதன் பிறகு தான் எனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை அவர் காப்பி செய்து இணைய தளங்களில் பரவவிட்டது தெரிந்தது[10]. நான் கருவறையில் பெண்களுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட விவகாரம் பத்திரிகைகளில் வெளி வந்ததால் தலைமறைவானேன். கோவிலில் நான் செய்த கெட்ட காரியத்துக்கு பகவான் என்னை கடுமையாக தண்டித்து விட்டார். என்னால் எனது மனைவி குழந்தைகளும் உறவினர்களும் அவதிப்பட்டதால் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.

அர்ச்சகர் மனைவி கூறுவது: என் கணவர் அப்பாவி …இதற்கிடையே, எனது கணவர் அப்பாவி, அவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர் என்று தேவநாதனின் மனைவி கங்கா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது…எனக்கும், தேவநாதனுக்கும் 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதல் இன்று வரை என் கணவர் என்னை அன்பாகத் தான் பார்த்துக் கொண்டார். அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வெகுளியாக எல்லாருடனும் சகஜமாக பழகுவார். அதே போலதான் கோவிலுக்கு வரும் பெண்களிடமும் சகஜமாக பழகி உள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடவுளிடம் தங்கள் குறைகளை கூறுவார்கள். அவரும் ஆறுதலாக பதில் அளிப்பார். எங்களுக்கு நேரம் சரி இல்லை. பகவான் சோதித்தாலும் எங்களை கைவிடமாட்டார். போலீசார் என் கணவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். என் கணவர் அப்பாவி, நிரபராதி, அவருக்கு ஒன்றும் தெரியாது. போலீசார் என் கணவரை மிரட்டுகிறார்கள். பகவானின் செயலால் என் கணவர் விரைவில் விடுதலையாவார் என்றார் கங்கா.

அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்களை விற்ற வாலிபர் கைது: படங்கள் அடங்கிய கம்ப்யூட்டர் பறிமுதல்[11]: சி.பி.சி.ஐ.டி.போலீசாரின் அதிரடி சோதனையில் அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்களை விற்ற வாலிபர் சிக்கியுள்ளார். ஆபாச படங்கள் அடங்கிய கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் தேவநாதன் (வயது 35). இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ சமீபத்தில் வெளியானது. கருவறையின் ஒரு ஓரத்தில் சுவரில் சாய்ந்தபடி நிற்கும் பெண்ணை அர்ச்சகர் தேவநாதன் கட்டிப்பிடித்து காம சேட்டைகள் செய்யும் காட்சி சென்னை, காஞ்சீபுரம் பகுதிகளில் செல்போனிலும் வேகமாக பரவியது. இதையடுத்து தேவநாதன் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்த தேவநாதன் நேற்று முன்தினம் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மாஜிஸ்திரேட்டு சுதா, அர்ச்சகர் தேவநாதனை வருகிற 30-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அர்ச்சகர் தேவநாதன் கோவில் கருவறையில் வைத்து பல பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தேவநாதனை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது தேவநாதனுக்கு எத்தனை நாள் போலீஸ் காவல் கிடைக்கும் என்பது தெரியவரும். இதற்கிடையே அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்கள் அமோகமாக விற்பனையாக தொடங்கியுள்ளன. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த சி.டி.க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 100 ரூபாய்க்கு விலை போன ஆபாச சி.டி. தற்போது 500 ரூபாய்க்கு விலை பேசப்படுகிறது. இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காஞ்சீபுரத்தில் உள்ள சி.டி. கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். காந்தி ரோடு, கலவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சி.டி. கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 1000 புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இவ்வாறு விளக்குகிறது[12], “சிடிக்கள் விற்பது மட்டுமல்லாது, இணைதளங்களிலேயே போட்டுவிட்டார்களாம். எம். எம். எஸ். முறையில் உள்லதாம், 19 கோப்புகள் உள்ளனவாம், 90 நிமிடங்களுக்கு மேலே ஓடுகின்றதாம். ஒரு தினக்காட்டித் தொங்குகிறதாம், அது ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களைக் காட்டுகிறதாம். அதில் தேவநாதன் நான்கு பெண்களுடன் காமலீலைகள் புரிவது மதிரின்படமெடுக்கப்பட்டுள்ளதாம்!”. எப்படி ஒரேஇடத்தில் வைக்கப்பட்டுள்ள செல்போன் அப்படி படமெடுக்கமுடியும்?  அப்படியென்ன இருவரும் அந்த செல்போன் கேமராவிற்கு நேராக இருந்து காரியங்களை செய்தனரா? அல்லது யாரோ படமெடுத்தனரா? முன்பே குறிப்பிட்டபடி, வீடியோ ஒரே இடத்தில் நிறுத்துவைத்து எடுத்தது மாதிரி இல்லை. பல கோணங்களில் இருப்பது மாதிரி, இணைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆகவே, நிச்சயமாக அர்ச்சகர்-பெண்கள் தவிர வேறு மூன்றாவது நபர் / நபர்கள் ஈடுப்பட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது.

ஆபாச சிடி-விற்பனை: காஞ்சீபுரம் கலவை ரோட்டில் கிருஷ்ணா ரேடியோஸ் என்ற கடையில் ஆபாச சி.டி.க்கள் பதிவு செய்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த கடையில் இருந்த கம்ப்யூட்டரை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அர்ச்சகர் தேவநாதன் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற படங்கள் இருந்தன. இதனை பார்த்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த கடையில் இருந்த செந்தில்குமார்[13] (30). என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். காஞ்சீபுரம் கவரை தெருவை சேர்ந்த இவரிடம்தான் தனது செல்போனை பழுது பார்க்க தேவநாதன் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அர்ச்சகர் செல்போனில் இருந்த ஆபாச வீடியோவை காப்பி செய்து செந்தில்குமார் பல பிரிண்டுகள் போட்டு விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கிளு கிளு படங்கள் அடங்கிய இந்த கம்ப்யூட்டர் பற்றிய அனைத்து தகவல்களையும் சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பட்டாபிராமனிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டரை முறைப்படி கோர்ட்டில் இருந்து வாங்கி பரிசோதித்து பார்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆபாச சி.டி.க்கள் சென்னையில் தற்போது அமோகமாக விற்பனையாவதாக கூறப்படுகிறது. ஆபாச படங்களை மெமரி கார்டில் பதிவு செய்து கொடுத்து ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வக்கிர கும்பல் ஒன்று அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்களையும் மிக மிக ரகசியமாக விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இக்கும்பலை பிடிப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் கேமரா செல்போன் பயன்படுத்த தடை வருமா? காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் செய்த காம சேட்டைகளைப் பார்க்கும்போது கோவில் களுக்குள் அர்ச்சகர்கள் கேமரா செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கலாம் என்று மக்களிடையே கருத்து எழுந்துள்ளது[14]. இப்படிப்பட்ட பீதியை மக்கள் மனதிலிருந்து குறிப்பாக பெண்களின் மனதிலிருந்து அகற்றும் வகையில் அர்ச்சகர்கள் கோவிலில் பணி நேரத்தின்போது செல்போன்களை குறிப்பாக கேமரா செல்போன்களைப் பயன்படுத்துவதை தடை செய்யலாம் என பெண்கள் கருதுகின்றனர். குறிப்பாக இந்து அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோவில்களில் இந்த தடையை அமல்படுத்தலாம். ஏற்கனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செல்போன்களை குறிப்பாக கேமரா செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தது. அதேபோல, கோவிலில் சாமி கும்பிட வரும் பெண்கள் குனிந்து நிற்பதை படம் பிடிக்கும் கேவலமான புத்தி உடைய தேவநாதன் போன்ற அர்ச்சகர்களிடமிருந்து பெண்களின் மானத்தைக் காக்கும் வகையில், கேமரா செல்போன்களை கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் பயன்படுத்த அரசு தடை விதிக்க வேண்டும் என பெண்கள் கோருகின்றனர்.

விமர்சனம்[15]:

1. செல்போன் மட்டுமல்ல பலவித கேமராக்கள் முதலிய நவீன கருவிகளால் என்னவேண்டுமானாலும் செய்யலாம். தம்மை படம் எடுப்பதை அறியாமலே செய்யலாம். ஆகையாதான் இத்தகையச் செயல்களை “சமூகத் தீவிரவாதம்” என்கிறேன்.

2. இதை ஆரம்பித்து வைத்தவர்கள் மேனாட்டவர்கள், அவர்களது அடிவருடிகள், அரசியல்வாதிகள், ஊடக முதலைகள், சினிமாக்காரர்கள், எழுத்தாளர்கள், ஆபாசத்தை, விபச்சாரத்தை வளர்க்கும் நிகழ்ச்சிகள், நடனங்கள், அழகிப்போட்டிகள், பப்ஸ் என பட்டியல் நீளுகின்றது. இவர்களை என்ன செய்வது?

3. இன்று இவ்விடங்களில் உள்ள மரியாதைக்கு உரிய பெண்மணிகள் சேலை என்றால் என்ன என்றல்லவோ கேட்பார்கள்?

* இதற்கும் பட்டிமன்றங்கள் / விவாதங்கள் நடத்தி அத்தகைய ஆபாச ஆடைகள் அணிவதுதான் நவீனம் என்று த்ரச்சான்றிதழ் கொடுக்கிறார்களே?

* உடைகளை அவிழ்த்துப் போட்டு ஆடத்துடிக்கும் தமிழ் நடிகைகளை என்னசெய்வது?

4. அவ்வாறே – அதாவது  அறைகுரை உடைகளோடு – பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது, ஆடுவது, குதிப்பது தடுக்கப் படுமா?

* “மானாட-மயிலாட-மார்பாட’ என்று சொன்னபோது கோபம் வந்துவிட்டதாம்- இப்பொழுதும் ஆட்டியும், குலுக்கியும் தானே செய்கின்றனர்? யாருக்கும் கோபம் வருகிறார்போல இல்லையே?

* கோவில் நிகழ்ச்சிகளில் ஏன் அத்தகைய மதிப்பும்-மரியாதையும் உள்ள பெண்கள் வந்து ஆடவேண்டும்?

* ஆண்கள் செய்யும் சில்மிஷங்களை ஏற்றுக் கொந்து பிறகு, உள்ளூர் அரசியல்வாதிகளுடன் செல்லவேண்டும்?

5. பொது நிகழ்ச்சிகளில், படோபட விழாக்களில் சேலை அணியாமலே வருகின்றனரே?

* அங்கே மதிப்புக்குரிய அப்பெண்கள் குனியவே வேண்டாமே?

* தெரியவேண்டியவை நன்றாகவேத் தெரிகின்றனவே?

* செல்போனையே செல் என்றல்லாவா கட்டளையிடுகின்றன?

6. திருட்டுத்தனமாக செல்போனிலே படம் எடுக்கவேண்டாமே, வெளிப்படையாக 50-100 பேர்கள் கும்பல் கும்பலாக நின்றுகொண்டு, அருகில் வந்து, நெருங்கி வந்து, “ஜூம்” [தொலைவில் இருப்பது அருகில் இருக்கிறார்போல காட்டும்] செய்து அப்பட்டமாக “லைவாக” [நேரிலே பார்க்கிறார்போல, உயிரோட்டத்துடன் ஆடுவது, நகர்வது, “ஸ்லோ மோஷன்” இத்யாதி உள்பட] எடுக்கிறார்களே?

7. கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும்படி ஒளிப்பரப்புகிறார்களே?

8. அப்பொழுது அந்த பெண்களுக்கு அறிவு எங்கு போயிற்று?

9. போட்டோ, வீடியோ எடுப்பதைத் தடுத்தார்களா? அசிங்கம், ஆபாசம், கேவலமான புத்தி என்றெல்லாம் யாருக்கும் யோசிக்கக் கூட அறிவு வரவில்லையே?

10. நடுத்தெரு நிர்வாணங்கள், அரங்க ஆபாச நடனங்கள், “நீலநிறப்படங்களையும்” விஞ்சும் கொக்கரக்கோ பாடல்கள், குலுக்கும் நடனங்கள், குத்தாட்டங்கள் இவையெல்லாம் என்ன? கேவலமாக இல்லாமல் நன்றாக இருக்கின்றனவா?

11. ஆளுகின்ற வயதான, மதிப்பும்-மரியாதைக்கும் உரிய முதல்வர், பல அதிகாரிகள், பெண்கள், சிறுவர்கள் என இவர்கலது முன்பாகவே அத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றனவே?

12. வயதானவர்கள் என்றால் தட்டி கேட்கவேண்டாமா? ஆனால் கருப்புக் கண்ணடி போட்டுக் கொண்டு ரசித்து பார்ப்பது, அவரது நெற்றி சுருங்குவது, கண்கள்-விழிகள் இடம் மாறுவதால் புருவஜாலனங்கள், தாடைகள், கன்னங்கள் அளவு பெரிதாகுவது முதலியவற்றை உன்னிப்பாக பார்க்கும்போது, உண்மை தெரிகின்றதே?

13. மூதறிஞராக இருக்கும் பட்சத்தில் அறிவுரை வழங்க வேண்டாமோ? ஆனால் பரிசல்லவோ தருகிறார். சரி அத்தகைய அறைகுரை ஆடை அணிந்த நடிகைகள் இவர் உட்கார்ந்திருப்பதனால் குனிந்துதானே வாங்கிக் கொள்கின்றனர்? அப்பொழுதும் யாரும் அறிவுரை சொல்லவில்லையா?

துடைப்பம் / விளக்குமாறு தடை செய்யப்படுமா[16]? பெருக்கும்போது, பெண்கள் நன்றாகக் குணிந்து பெருக்கவேண்டிய நிலையுள்ளது. அதாவது துடைப்பம் என்று ஒன்றுள்ளது [தெரியாதவர்களுக்கு சொல்லப்படுகின்றது]. அதை வைத்துக் கொண்டு பெண்கள் தரையிலுள்ளக் குப்பகளை பெருக்குவர். குப்பைகளின் தன்மைக்கேற்றபடி அவற்றை பெருக்கித் தள்ள, சுத்தம் செய்ய அவர்கள் பூந்துடைப்பம், நாட்-துடைப்பம், தென்னம்-துடைப்பம் என்ற பலவகையுள்ளவற்றை உபயோகப் படுத்தி வருகிறார்கள். அப்பொழுது நன்றாகக் குனிந்து பெருக்கவேண்டியுள்ளது. இந்நிலையிலும், பெண்கள் காமுகர்களின் கொடிய பார்வைகளில் சிக்கலாம். உடனே செல்போனில் படம் எடுத்துக் கொள்ளலாம். ஆகவே, துடைப்பங்களையும் தடைசெய்ய பெண்கள் ஆலோசனையில் உள்ளதாகத் தெரிகின்றது!

வேதபிரகாஷ்

12-12-2009


[1] The New Indian express dated  27-11-2009.

 

[2] வேதபிரகாஷ், ,சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

https://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

[3] Gokul Vannan, 13 Germansstayed in Sriperumbudur children’s home sans police nod, http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Germans+stayed+in+Sriperumbudur+children%E2%80%99s+home&artid=gcZ3Y4pJ9qA=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=

[4] விவரங்களுக்கு இங்கே பர்க்கவும்: http://www.ashanet.org/projects/project-view.php?p=166

[5] நவம்பர் 21,2009,00:00 IST;  http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4514

[6] 12-12-2009 விடுதலையோ, இந்து முன்னணி அர்ச்சகருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியிருப்பதாக செய்தி வெளியிடுகிறது.

[7] வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:44.16 PM GMT +05:30;
http://www.newindianews.com/view.php?22200cA20aeY4DD32eeeOOJdcccdQoOKc4ddyAMMCbb34llYmad44fVmm3002344C60e

[8] ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22, 2009, 15:18 [IST]
http://thatstamil.oneindia.in/news/2009/11/22/kanchipuram-archagar-reveals.html

[9] இவையேல்லாம் ஒப்புதல் வாக்குமூலம் போல இருக்கிறது. நாளைக்கு நான் போலீஸார் வற்புறுத்தலால் அப்படி கொடுத்தேன் என்பது வழக்கமக இருக்கிறது. மேலும், இத்தகைய விவஎரங்களை நோக்கும்போது, அவை உண்மையெனில் பெண்களும் உடன் பட்டிருப்பது நன்றாகவேத் தெரிகிறது.

[10] இது வியாபாரமாக நடப்பதால், அதாவது வில் ஹியூம் எந்த தளத்தில் குழந்தைகளின் போட்டொகளை-வீடியோக்களை போட்டானோ, அதே தளத்தில் www.rapidshare.com காசுக்காக விற்க்கப்படுவதால், இதில் சம்பந்தப் பட்டவர்களுக்கிடையில் தொடர்பு இருப்பது போலத் தெரிகிறது, மேலும், வீடியோ ஒரே இடத்தில் நிறுத்துவைத்து எடுத்தது மாதிரி இல்லை. பல கோணங்களில் இருப்பது மாதிரி, இணைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆகவே, நிச்சயமாக அர்ச்சகர்-பெண்கள் தவிர வேறு மூன்றாவது நபர் / நபர்கள் ஈடுப்பட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது.

[11] புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 05:34.49 PM GMT +05:30;
http://www.newindianews.com/view.php?224Yld0b3Ac0Qd4d3AMC3a0cKmV24de1D4o203eoOA2e2KC4mbcc3JOI4e

[12] Dennis Selvan, Kanchi’s shame is teens’ delight, First Published : 15 Nov 2009 03:00:00 AM IST, Last Updated : 15 Nov 2009 10:46:54 AM IST

http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Kanchi%E2%80%99s+shame+is+teens%E2%80%99+delight&artid=pDUbK00a244=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=

The explicit sexual acts, captured in an MMS format on at least 19 files, run for more than 90 minutes, and going by the the calendar hung on the wall of the sanctum sanctorum of the temple, they have been shot in the months of June, July and August of this year. The 36-year-old archakar is seen indulging in what would normally be called x-rated sexual acts with at least four different women — from a 30-year-old sari-clad one to a salwar kameez-clad woman in her early twenties.

[13] தேவநாதன் நண்பர் செந்தில்குமாரின் செல்போன் சர்வீஸ் என்று குறிப்பிட்டது நோக்கத்தக்கது!

[14] ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22, 2009, 16:21 [IST]

http://thatstamil.oneindia.in/news/2009/11/22/will-govt-ban-camera-cell-phones.html

[15] வேதபிரகாஷ், கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் கேமரா செல்போன் பயன்படுத்த தடை வருமா? https://socialterrorism.wordpress.com/2009/11/23/கோவிகளுக்குள்-அர்ச்சக/

[16]வேதபிரகாஷ், துடைப்பம் / விளக்குமாறு தடை செய்யப்படுமா? https://socialterrorism.wordpress.com/2009/11/23/துடைப்பம்-விளக்குமாறு-த /

குறிச்சொற்கள்: , , ,

3 பதில்கள் to “வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – III”

  1. vedaprakash Says:

    அர்ச்சகர் காவல் நீட்டிப்பு: ஜாமீன் பெற குடும்பத்தினர் எதிர்ப்பு
    ஜனவரி 22,2010,00:00 IST
    http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15607

    காஞ்சிபுரம்:அர்ச்சகர் தேவநாதன் நீதிமன்றக்காவல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.காஞ்சிபுரத்தில் கோவில் உள்ளே பெண்களுடன் உல்லாசமாக இருந்த வழக்கில் அர்ச்சகர் தேவநாதன் கைது செய்யப்பட்டார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால், ஆஜர்படுத்தப்படவில்லை. வாரன்ட் மூலம் தேவநாதன் நீதிமன்றக் காவல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர். அதேபோல் தேவநாதனுக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது வக்கீல்கள் காஞ்சிபுரம் ஜே.எம்.முதல் வகுப்பு கோர்ட்டில் மனு செய்தனர். நேற்று மனு விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால், தேவநாதன் வக்கீல் தேசாய், ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.இது குறித்து அவர் கூறும்போது, “தேவநாதனை ஜாமீனில் எடுக்க அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. எனவே, ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றோம்’ என்றார்.

  2. குழந்தை கற்ப்பழிப்பாளி வில் ஹியூமிற்கு பத்ததண்டு சிறைத்தண்டனை! « பெண்களின் நிலை Says:

    […] https://socialterrorism.wordpress.com/2009/12/12/will-heum-buwaneswari-devanathan-media-3/ […]

  3. சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி! « சமூகத் தீவிரவாதம் Says:

    […] https://socialterrorism.wordpress.com/2009/12/12/will-heum-buwaneswari-devanathan-media-3/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: