தேவநாதனுக்கு விஐபிக்களுடன் தொடர்பு-அரசு வக்கீல்

ஏற்கெனவே இப்பிரச்சினையை அலசி, ” வில் ஹியூம் புவனேஸ்வரி தேவநாதன்“,  என்ற தலைப்பில் விவரங்கள் வெளியிடப்பட்டன.

புகைப்படங்கள், வீடியோ கவனமாக பரிசோதிக்கப் பாட்டு அத்தகையவை செல்ஃபோனால் குறிப்பிட்ட இடத்தில் வைத்து எடுக்கமுடியாது என்பது எடுத்துக் காட்டப்பட்டது.

ஏனெனில் கோணங்கள் மாறுகின்றன. கேமரா நகர்கின்றது.

அதாவது மூன்றாவது நபர் அத்தகைய காட்சிகளை எடுக்கிறார்.

மேலும் ஒரு படத்தில் காணப்படும் பெண்மணி சிரித்துக் கொண்டு இருக்கிறார்.

அப்படியென்றால் அவர் தெரிந்துதான் அத்தகைய செயலில் ஈடுபடுகிறார்.

உண்மையில் தேவநாதன் தானே அத்தகைய வேலையில் ஈடுபட ஆரம்பித்தால், அப்பொழுதே செருப்பால் அடித்திருக்கலாம், உள்ளேயோ அல்லது வெளியே வந்து கூச்சலிட்டிருக்கலாம்.

இந்நிலையில், இத்தகைய செய்தி வருகிறது:

தேவநாதனுக்கு விஐபிக்களுடன் தொடர்பு-அரசு வக்கீல்

செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 15, 2009, 14:25[IST]

http://thatstamil.oneindia.in/news/2009/12/15/devanathan-has-vip-links-pp.html

நாத்திகர்கள் அரசாளும்போது, என்னவேண்டுமானாலும் நடக்கலாம். ஆரம்பித்திலிருந்தே, இந்த விஷயம் ஏதோ ஒரு குறிப்பிட்ட-ஏற்கெனவே தீர்மானம் செய்தது மாதிரிதான் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இன்றைய நிலையில் கோவில் சொத்துக்கள் விற்க்கப்படுகின்றன. இதை மறைக்கும் ரீதியிலும் இத்தகைய கவன-விலக்கு நிகழ்ச்சிகளை அரசாங்கம் அரங்கேற்றினால்-நிறைவேற்றினால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது.

பாதுகாப்பு இல்லை! இதுகுறித்து அரசு வழக்கறிஞர் பாஸ்கர் கூறுகையில், நேற்று அர்ச்சகர் தேவநாதனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதாக இருந்தது. ஆனால் போதிய போலீஸ் பாதுகாப்பு  இல்லாததால் `வாரண்ட்’ மூலம் காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளதால் அவர் ஜாமீன் மனு விசாரணை தகுதி இழந்து விட்டது. இதுவரை தேவநாதன் தரப்பு வக்கீல்கள் ஜாமீன் கேட்கவில்லை. சிவகாஞ்சி போலீஸ் விசாரணையில் இருந்த வழக்கு தற்போது மாவட்ட குற்றவியல் போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

பெரிய ஜிஹாதி / இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல தேவநாதனுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படவேண்டும் என்றால், அப்படி, பாதுகாக்கப் படவேண்டிய அவசியம் என்ன? யார் அப்படி தேவநாதனை மறைப்பது? தேவநாதனால் யார் வெளி உலகத்திற்குக் காட்டப் படப்போகின்றனர்?

வியாபார நோக்கம்: விசாரணையில் பெரும் புள்ளிகள் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.டி. ஆதாரத்தை வைத்து பார்க்கும்போது அர்ச்சகர் தேவநாதனுடன் தொடர்புடைய குற்றவாளிகள் வியாபார நோக்கத்துடன் செயல்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. போலீசாரின் விசாரணையில் பல உண்மைகள் வெளிவரும் என்றார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவநாதனின் காவலை வாரண்ட் மூலம் காஞ்சிபுரம் நீதிபதி வருகிற 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

கடவுளையே விற்க்கும் நிலையில் அத்தகையவர் எந்த வியாபாரத்திலும் ஈடுபடலாம். முன்னமே வில் ஹியூம் மற்றும் தேவநாதன் பிரச்சினைகளில் உள்ள ஒற்றுமைகள் எடுத்துக் காட்டப் பட்டன. இங்கு போலீஸாருக்கே சிடிகள்தாம் விவரங்கள் கொடுத்ததுபோல செய்திகள் வெளியாகின. எப்படி சொல்லிவைத்தால் http://www.rapidshare.comல் வில் ஹியூம் படங்களை ஏற்றினானோ, அதேமாதிரி தேவநாதன் படங்கள் இணைதளத்தில் ஏற்றப்பட்டன. வில் ஹியூம் விஷயத்தில் இன்டர்போல் போலீஸார் அதற்கு தகவல் கொடுத்து, உஷார் படுத்தி சென்னை போலீஸார் அவனை கைது செய்தனர். ஆனால் இவ்விஷயத்தில் அதே இணைதளத்தில் ஆபாச வீடியோக்கள் ஏற்றப்படுகின்றன, விற்கப்படுகின்றன, சில இணைதளங்கள் அத்தகைய வீடியோ படங்களை புகைப் படங்களாக வெளியிடுகின்றன. ஆனால் அத்தகைய சட்ட மீறல்களுக்கு யாரும் கைது செய்யப்படுவதாகவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவோ தெரியவில்லை.


சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=23441

காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பல பெண்களுடன் செக்சில் ஈடுபட்டதாக அர்ச்சகர், தேவநாதன் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவான அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதுவரை சிவகாஞ்சி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து தேவநாதனை விசாரணை செய்தனர். விசாரணையில் போலீசார் அதிர்ந்து போகும் அளவுக்கு திடுக்கம் தகவல்கள் வெளியாகின.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் தேவநாதனை ஆஜர் செய்ய போலீசார் அழைத்து வந்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்த போது தனியார் தொலைக் காட்சி கேமராமேன்கள், போட்டோகிராபர்கள் அங்கு குவிந்தனர். தேவநாதனை படம் எடுக்க முயன்றனர். ஆனால் காவல்துறையினர் தேவநாதனை முகத்தை கையால் மூடி அரவணைத்து வேகமாக அழைத்து சென்றனர். அப்போது புகைப்படக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது விஷ்ணு காஞ்சி இன்ஸ்பெக்டர் பாலு, தேவநாதனை புகைப்படம் எடுக்க அனுமதிக்க மாட்டோம். தேவைப்பட்டால் வேலூர் சிறைச்சாலைக்குள் சென்று எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஆவேசப்பட்டார். பின்னர் நீதிபதி காயத்திரி, தேவநாதனுக்கு 15 நாள் காவல் நீடிப்பு செய்து உத்தரவிட்டார்.

அர்ச்சகர் தேவநாதன் தற்போது வேலூர் மத்திய சிறையில் உள்ளார். அவருக்கு வந்த மிரட்டல் தொடர்பாக வேலூரில் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நான் கோவில் கருவறையில் பகவான் முன்னிலையில் செய்த தவறுக்கு தற்போது தண்டனை அனுபவிக்கிறேன். தனிமையில் வாடுகிறேன். பகவானை என் சக நண்பராக கருதியே இதுபோல செய்தேன். ஆனால் பகவான் என்னை தண்டித்து விட்டார் என்று சக கைதியிடம் வேலூர் சிறையில் கண்ணீருடன் கூறியுள்ளார்.

ம்ம்ம்………………………………..

Advertisements

6 பதில்கள் to “தேவநாதனுக்கு விஐபிக்களுடன் தொடர்பு-அரசு வக்கீல்”

 1. vedaprakash Says:

  காஞ்சிபுரம் மக்களின் ஜனரஞ்சகமன இடமாக உள்ளது:

  காஞ்சீபுரம் `செக்ஸ்’ அர்ச்சகர் மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு …
  தினத் தந்தி – ‎7 மணிநேரம் முன்பு‎
  குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கருவறையில் என்னை கற்பழித்தார் என காஞ்சீபுரம் `செக்ஸ்’ அர்ச்சகர் மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார் அளித்து உள்ளார்.

  அர்ச்சகர் தேவநாதன் மீது இன்னொரு பெண் கற்பழிப்பு புகார்
  தட்ஸ்தமிழ் – ‎20 மணிநேரம் முன்பு‎
  காஞ்சீபுரம்: மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன் மீது இன்னொரு பெண்ணும் கற்பழிப்புப் புகார் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன், …

  அர்ச்சகர் தேவநாதன் மீது மேலும் ஒரு பெண் புகார்
  ௯டல் – ‎17 மணிநேரம் முன்பு‎
  காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலில் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ் லீலைகள் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு …

  ‘குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அர்ச்சகர் கற்பழித்தார்’
  ஆறாம்திணை – ‎19 மணிநேரம் முன்பு‎
  கோவிலுக்கு பூ கொண்டு வந்த பூக்காரிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, காஞ்சிபுரம் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் பல முறை உல்லாசம் அனுபவித்ததாக அந்த பெண் …

  புதியதான செய்தியா, இல்லை சொன்னதையோ, சொல்கிறார்களா என்பது தெரியவில்லை.

 2. vedaprakash Says:

  காஞ்சீபுரம்: மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன் மீது இன்னொரு பெண்ணும் கற்பழிப்புப் புகார் கூறியுள்ளார்.
  http://thatstamil.oneindia.in/news/2009/12/22/another-women-charges-rape-on.html

  காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன், கோவிலுக்கு வரும் பெண்களை மயக்கி கருவறைக்குள் வைத்து அசிங்கமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  நர்ஸ், ஆசிரியை, விஐபி வீட்டுப் பெண்கள் என சகல தரப்புப் பெண்களையும் இவ்வாறு தனது காம இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார் தேவநாதன். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தேவநாதன்.

  அவரை இருமுறை காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அவருக்குப் பின்னால் சில பெரும் புள்ளிகளும் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  இந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மனைவி, தனக்கு பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து கருவறைக்குள் வைத்து தேவநாதன் கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்திருந்தார்.

  அதை பின்னர் செல்போன் கேமராவில் படமாக்கி அதைக் காட்டி பலமுறை தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார்.

  இதையடுத்து தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

  இந்த நிலையி்ல தேவநாதனின் லீலைகளுக்கு துணை போனதாக முன்பு கூறப்பட்ட ஒரு பூக்காரப் பெண், தேவநாதன் தன்னை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்துள்ளார்.

  அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், அர்ச்சகர் தேவநாதனின் தாத்தா வீட்டிற்கு தினமும் பூ கொடுக்க செல்வேன். அப்போது எனக்கும் தேவநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு முறை என்னிடம் கோவிலுக்கு தினமும் பூ கொண்டு வா என்று கூறினார். நானும் சென்று பூ கொடுத்து வந்தேன்.

  ஒரு நாள் எனக்கு குளிர் பானம் கொடுத்தார். அதை குடித்த பின் சிறிது மயக்கம் அடைந்தேன். என்னை அவர் தோள் மீது சாய்த்து கொண்டு கோயில் கருவறையின் உள்ளே அழைத்து சென்றார். என் ஆடைகளை ஒவ்வொன்றாக கலைத்து என்னை கற்பழித்து விட்டார்.

  அதை தன் செல்போனிலும் படம் பிடித்து விட்டார். நான் கோவிலுக்கு பூ கொடுக்க வரும் போது எல்லாம் செல்போனில் எடுத்த படத்தை காட்டி மிரட்டி பலமுறை என்னை கருவறையில் வைத்து செக்ஸ் லீலையில் ஈடுபட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

  இதற்கிடையே, நாளை தேவநாதனின் காவல் முடிவதால் அவரை கோர்ட்டுக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது. ஆனால் அவர் முதல் முறை கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டபோது மக்கள் செருப்பால் அடித்து போராட்டம் நடத்தியதால், 2வது முறையாக அவரை கோர்ட்டுக்கு கொண்டு வராமல் வாரண்ட் மூலம் காவல் நீட்டிக்கப்பட்டது. நாளையும் அது போல செய்யப்படுமா என்று தெரியவில்லை.

 3. vedaprakash Says:

  அர்ச்சகர் தேவநாதன் வழக்கு: நான்கு பெண்கள் வாக்குமூலம் அளிக்க சம்மதம்
  ஜனவரி 09,2010,00:00 IST
  http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15284

  காஞ்சிபுரம்:அர்ச்சகர் தேவநாதன் வழக்கில், நான்கு பெண்கள், நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் அளிக்க முன் வந்துள்ளனர்.காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் அமைந்துள்ளது மச்சகேசப் பெருமாள் கோவில். இங்கு அர்ச்சகராகப் பணிபுரிந்தவர் தேவநாதன். இவர், கோவில் உள்ளே பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதை தன் மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். இக்காட்சிகள் பத்திரிகைகளில் வெளியானது. இது குறித்த புகாரின் பேரில், சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

  தலைமறைவான தேவநாதன், காஞ்சிபுரம் ஜே.எம்., முதல்வகுப்பு கோர்டில் சரணடைந்தார். போலீசார் அவரை, காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் பின், வழக்கு, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.டி.எஸ்.பி., விஜயராகவன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தேவநாதன் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக தாரா என்ற பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். தேவநாதன் வழக்கில் தொடர்புடைய மற்ற பெண்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். தேவநாதனுடன் ஆபாச வீடியோ காட்சியில் காணப்பட்ட நான்கு பெண்களை போலீசார் கண்டறிந்தனர். அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க முன் வந்துள்ளனர்.

  இது குறித்து, டி.எஸ்.பி., விஜயராகவன் கூறியதாவது:தேவநாதனுடன் தொடர்புடைய பூ வியாபாரி கலா, ஆசிரியரின் மனைவி தாரா, திருமணமாகாத இளம்பெண் சபீதா, வள்ளி(42) ஆகியோரை கண்டறிந்துள்ளோம். அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க முன் வந்துள்ளனர். கோர்ட்டில் வரும் 21ம் தேதி, நான்கு பேரும் நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளிக்க உள்ளனர். தேவநாதனுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆண்மைப் பரிசோதனை, எய்ட்ஸ் நோய் பரிசோதனை நடத்தியுள்ளோம். விசாரணை தொடர்ந்து வருகிறது.இவ்வாறு டி.எஸ்.பி., கூறினார்.

 4. vedaprakash Says:

  செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனுக்கு 2-ம் கட்ட ஆண்மை பரிசோதனை மேலும் … தினத் தந்தி
  http://www.dailythanthi.com/article.asp?NewsID=539301&disdate=1/9/2010

  நீதிமன்றத்தில் 4 பெண்கள் வாக்குமூலம்

  பதிவு செய்த நாள் 1/9/2010 12:11:36 AM
  http://www.dinakaran.com/crimedetail.aspx?id=3619

  சென்னை : ‘‘காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனை பற்றி, 21ம் தேதி காஞ்சிபுரம் முதல் வகுப்பு மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் 4 பெண்கள் ரகசிய வாக்குமூலம் தர உள்ளனர்’’ என்று டிஎஸ்பி தெரிவித்தார்.
  காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் (35). கோயில் கருவறையில் பெண்களுடன் ஆபாசமாக நடந்ததாக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேவநாதனுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவப் பரிசோதனை நடந்தது. அவரது உயிரணு எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தோல் நோய்கள் உள்ளதா என்று பரிசோதனைகள் நடந்தன.
  தேவநாதனுக்கு ஆண்மை தன்மை குறித்து பரிசோதிக்க பெங்களூரில் இருந்து ஊசி, மருந்து வரவழைக்கப்பட்டது. பரிசோதனை முடிந்தபின் தேவநாதன், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
  இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி விஜயராகவன் கூறுகையில், ‘‘தேவநாதன் பலாத்காரம் செய்ததாக கலா, தாரா, பவிதா, வள்ளி ஆகிய 4 பெண்கள் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். ஜனவரி 21ம் தேதி காஞ்சிபுரம் முதல் வகுப்பு மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் 4 பெண்களும் ரகசிய வாக்குமூலம் தர உள்ளனர்.
  அதன்பிறகு இந்த 4 பெண்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படும்’’ என்றார்.

 5. vedaprakash Says:

  அர்ச்சகர் காவல் நீட்டிப்பு: ஜாமீன் பெற குடும்பத்தினர் எதிர்ப்பு
  ஜனவரி 22,2010,00:00 IST
  http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15607

  காஞ்சிபுரம்:அர்ச்சகர் தேவநாதன் நீதிமன்றக்காவல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.காஞ்சிபுரத்தில் கோவில் உள்ளே பெண்களுடன் உல்லாசமாக இருந்த வழக்கில் அர்ச்சகர் தேவநாதன் கைது செய்யப்பட்டார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால், ஆஜர்படுத்தப்படவில்லை. வாரன்ட் மூலம் தேவநாதன் நீதிமன்றக் காவல் அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர். அதேபோல் தேவநாதனுக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது வக்கீல்கள் காஞ்சிபுரம் ஜே.எம்.முதல் வகுப்பு கோர்ட்டில் மனு செய்தனர். நேற்று மனு விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால், தேவநாதன் வக்கீல் தேசாய், ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.இது குறித்து அவர் கூறும்போது, “தேவநாதனை ஜாமீனில் எடுக்க அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. எனவே, ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றோம்’ என்றார்.

 6. vedaprakash Says:

  தேவநாதனிடம் சிக்கிய நான்கு பெண்களுக்கு செங்கல்பட்டில் மருத்துவ பரிசோதனை
  பிப்ரவரி 03,2010,00:00 IST
  http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15917

  செங்கல்பட்டு: அர்ச்சகர் தேவநாதனுடன் கோவிலில் உல்லாசமாக இருந்த நான்கு பெண்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று முதல்கட்ட மருத்துவ பரிசோதனை நடந்தது.

  காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் அமைந்துள்ள மச்சேசப் பெருமாள் கோவிலில் பெண்களுடன் உல்லாசமாக இருந்தவர் அர்ச்சகர் தேவநாதன். இதை, இவர் மொபைல்போனில் படம் பிடித்தார். இது குறித்து, புகாரின்பேரில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவநாதனை தேடிவந்தனர். இவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். போலீஸ் அவரை தங்கள் கஷ்டடியில் எடுத்து விசாரித்தனர். பின்னர் வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. தாரா என்ற பெண் தேவநாதன் மயக்க மருத்து கொடுத்து தன்னை கற்பழித்ததாக போலீசில் புகார் கொடுத்தார். மேலும், தேவநாதனுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்பட்ட பூ வியாபாரி கலா, திருமணமாகாத சபீதா மற்றும் வள்ளி (42) ஆகியோரை போலீசார் கண்டுபிடித்து, அவர்களின் வாக்கு மூலம் பெற்றனர்.

  அந்த பெண்கள் கடந்த மாதம் காஞ்சிபுரம் ஜே.எம்., இரண்டாவது வகுப்பு நீதிமன்றத்திலும் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். அதைத்தொடர்ந்து, மேற்கண்ட நான்கு பெண்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த முடிவெடுத்த போலீசார் நேற்று காலை 11.30 மணிக்கு இவர்களை வேனில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்தனர். அங்கு இவர்களுக்கு முதற்கட்டமாக வயது கண்டறிவதற்கான எக்ஸ்ரே பரிசோதனை நடந்தது. பரிசோதனைக்குப்பின் போலீசார் வேனில் அழைத்துச் சென்றனர். இன்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அந்தப் பெண்களுக்கு உளவியல் ரீதியான பரிசோதனை நடைபெற உள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: