பிச்சைக்காரகளும், உலகச் செம்மொழி மாநாடும்!

பிச்சைக்காரகளும், உலகச் செம்மொழி மாநாடும்!

கோவையில் அதிகாரிகள் அதிரடி 325 பிச்சைக்காரர்கள் சிக்கினர்

பதிவு செய்த நாள் 12/20/2009 1:23:39 AM

http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=2488

Swine Flu

கோவை, : உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, கோவை நகரை அழகாக்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு  வருகிறது. மாநாட்டில் பங்கேற்க வெளிநாட்டினர் மற்றும் தமிழறிஞர்கள் கோவைக்கு வரவுள்ளனர். இதையடுத்து, முதல்கட்டமாக கோவை மாநகராட்சி, போலீஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் சார்பில் பிச்சைக்காரர்களை  பிடிக்கும் பணி நேற்று நடந்தது. மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர் திருமால் மற்றும் போலீசார்  இப்பணியில் ஈடுபட்டனர். மாநகரில் சிக்னல், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பொது இடங்களில் பிச்சை எடுத்த சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 325  பேரை பிடித்தனர். சிக்கிய 325 பேரும் மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.பல ஆண்டாக வெட்டாமல் இருந்த  தலைமுடிகளை வெட்டி அழகாக்கினர். அனைவரையும் குளிக்க வைத்து, புதுத்துணி வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், ‘‘பிச்சைகாரர்களின் விவரங்களை சேகரித்து, புகைப்படத்துடன் கூடிய டேட்டா  தயாரிக்கப்படும். வெளிமாநிலம், வெளி மாவட்ட பிச்சைக்காரர்களை கண்டறிந்து, அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். கே £வையை சேர்ந்த பிச்சைக்காரர்களை வேலைக்கு செல்ல அறிவுறுத்துவோம். குழந்தைகளை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைக்க  ஏற்பாடு செய்யப்படும் ’’ என்றார்.

320 பிச்சைக்காரர்களுக்கு அடித்தது யோகம் : மறுவாழ்வு அளிக்கிறது மாநகராட்சி
டிசம்பர் 20,2009,00:09  IST

http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=124

Human Intrest detail news

கோவை : ஆதரவில்லாமல், பிழைப்பிற்கு வழியில்லாமல் பிச்சை எடுக்கும் 320 பிச்சைக்காரர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது கோவை மாநகராட்சி.கோவை நகரில் போக்குவரத்து சிக்னல்கள், பஸ் ஸ்டாப்கள், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், பெரியகடைவீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு உட்பட மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பரட்டைத்தலை, மிரட்டும் தாடி மீசை, அழுக்கு படிந்த உடைகளோடு கோரமான உருவத்தில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களால், கோவை நகருக்கு வரும் பன்னாட்டு பிரதிநிதிகள், சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.போக்குவரத்து சிக்னல்களில் கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், வாகனத்தில் வந்து நிற்போரை கை பிடித்து இழுத்து காசு கேட்கும் கொடுமையும் அவ்வப்போது நிகழ்கிறது.பாக்கெட்டிலிருந்து காசு எடுப்பதற்குள் பச்சை விளக்கு எரிய மற்ற வாகனங்கள் பறப்பதால் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. அதிகரித்து வரும் பிச்சைக்காரர்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.மாநகராட்சி நிர்வாகம், மாநகர காவல்துறையை ஒருங்கிணைத்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள கோவை கலெக்டர் உமாநாத் நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன், கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா, மாநகர காவல்துறை கமிஷனர் சிவனாண்டி ஆகியோர் பங்கேற்ற அக்கூட்டத்தில், கோவையிலுள்ள பிச்சைக்காரர்கள் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்து, அவர்களுக்கு மனநல மருத்துவர்களை கொண்டு ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டது.சிலருக்கு வேலை அல்லது தொழில் செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டான்போஸ்கோ தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தது.

இதனடிப்படையில், கோவை காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம், ரயில்வே ஸ்டேஷன், ராமநாதபுரம் என்று 5 மண்டலங்களாக பிரித்து பிச்சைக்காரர்களைப் பிடிக்கும் பணி நேற்று காலை துவங்கியது.ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா இரண்டு சுகாதார ஆய்வாளர்கள், இரண்டு போலீசார், டான்போஸ்கோ பணியாளர்கள் 4 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது.இக்குழுவினர், நேற்று நகரம் முழுவதும் “ரவுண்ட்’ அடித்து, ரோட்டில் திரிந்த பிச்சைக்காரர்களை நேற்று பிடித்து வாகனத்தில் ஏற்றி வரதராஜபுரத்திலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதே போன்று 5 மண்டலத்திலிருந்தும் 320 பிச்சைக்காரர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு தலைமுடி கட்டிங், முகச்சவரம் செய்து அழகுபடுத்தப்பட்டது, வெந்நீர், சோப்பு, ஷாம்பு கொடுத்து குளிப்பதற்கு வசதி செய்யப்பட்டது.அணிந்து கொள்ள புதிய ஆடை வழங்கப்பட்டது. சாப்பிட சுடச்சுட உணவு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொருவருக்கும் மனநல ஆலோசகரோடு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.கவுன்சிலிங் அறிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு பிச்சைக்காரர்களுக்கும், பிச்சை எடுக்காமல் தன்னிச்சையாக வருவாய் ஈட்டுவதற்கு என்ன வழி என்பது குறித்து ஆலோசனை வழங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Advertisements

குறிச்சொற்கள்: , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: