கசக்கிறது திருமண பந்தம் : கழற்றி விட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துடிப்பு

கசக்கிறது திருமண பந்தம் : கழற்றி விட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துடிப்பு
டிசம்பர் 23,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6036&ncat=&archive=1&showfrom=12/23/2009

பெண்ணியம் பேசி பலப் பெண்கள் இன்று திருமணமே இல்லாமல் ஆண்களுடன் இருப்போம் என்று மடிவிரிக்கின்றனர்.வேசித்தனத்தை நியாயப்படுத்தி அத்தகைய புரட்சிகர பெண்களை வேட்டையாட நாகரிக மைனர்களும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துக் கொண்டு உரிமைகள் பேச வந்துவிட்டனர்.

முற்போக்குவாதம், பரந்த-விசாலமான எண்ணம், முன்னேறத்துடிக்கும்தனம், பழமை எதிர்ப்பு, என்ற சித்தாந்தங்களின் போர்வையில் இந்த திருட்டுத்தனம் வெளிப்படுகிறது.

சமூகத்தில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றால், இல்லை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், இருப்போம் என்பது அவர்களது விதண்டாவாதம்.

சாலையிலே இப்படிதான் போகவேண்டும் என்றால், இல்லை நாங்கள் இப்படி வேண்டுமானாலும், எங்கள் விருப்பப்படி போவோம் என்று நடைமுறைப்பட்த்தாமல் பேசும் பேச்சுகள்.

தமிழ் பேசி, தமிழச்சிகளை விபச்சாரத்தில் தள்ளும் சதிகள்.

Front page news and headlines todayகோவை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. திருமண உறவை அடியோடு அறுத் துக்கொள்ள 1,225 தம்பதிகள் வழக்கு தொடுத்து “டைவர்ஸ்’ பெற காத்திருக்கின்றனர்.

கலாச்சாரச் சீரழிவு-தனிப்பட்ட கணவன் -மனைவி வாழ்க்கை: பொருளாதார வேட்கையும், நாகரீக மோகமும் நகர வாசிகளின் வாழ்க் கையை ஏறத்தாழ இயந்திர மயமாகவே மாற்றி விட்டன. முன்னோர் களால் காலங்காலமாக பேணி பாதுகாக்கப்பட்டு வந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் உறவுக் கூடுகள் உடைந்து நொறுங்கி வருகின்றன. குடும்பத்தை கடந்து, மனித உறவுகளை உறுதிப்படுத்துவதாக தற்போதைய நாகரீக வாசிகளின் வாழ்க்கை முறை இல்லை. சமூகம் சார்ந்த வாழ்க்கை தடம் புரண்டு, பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை தலைதூக்கி உள்ளது. “அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை’ என, வெறும் வரவு – செலவு கணக்காக மட்டுமே உறவு முறைகள் பார்க்கப்படுகின்றன. விளைவு, தனிக்குடும்ப வாழ்க்கை; அதனால், தலைதூக்கும் பிரச்னைகள். தகராறுகளை தங்களுக்குள் பேசி தீர்த்து கணவன் – மனைவி உறவை தொடர முடியாமல் கோர்ட் படியேறும் அவலம். பெற்றோர், அக்காள், தங்கைகளின் உறவை அறுத்து தனிக்குடித்தன முறைக்கு பலரும் மாறிவிட்டதால், சிறுசிறு தவறுகளை சுட்டிக் காட்டவும், அறிவுரை கூறி நல்வழிப்படுத்தவும் அருகில் பெரியவர்கள் இல்லை.

உடையும் உறவுகள்: கூட்டுக்குடும்ப முறையில் இருக்கும் சுய கட்டுப்பாடுகள், தனிக்குடித்தனம் நடத்தும் தம்பதியினரிடம் குறைந்து வருவதை, கோர்ட்டுக்கு வரும் வழக்குகள் உறுதிப்படுத்து கின்றன. வேலைக்கு செல்லும் கணவன், மனைவி இடையே ஏற்படும் ஈகோ, தமது துணை தவிர்த்து பிறருடனான கள்ள உறவு, நடத்தையில் சந்தேகம், பாலியல் உறவில் நிலவும் மனக்குறைகள் என, பல விதமான காரணங்களுடன் அதிக வழக்குகள் கோர்ட் டுக்கு வருகின்றன. கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து வழக்கை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர். கோவையில் ஒரு குடும்ப நல நீதிமன்றம் உள்ள போதிலும், மேலும் ஒரு நீதிமன்றம் தேவை, என்ற அளவுக்கு வழக்குகளின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிகமாகும் விவாக ரத்துகள்: விவாகரத்து தவிர, ஜீவனாம்சம் கேட்பு, குழந்தை பராமரிப்பு குறித்த வழக்குகளும் அதிகம் தாக்கலாகின்றன. கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மற்ற எல்லா கோர்ட்களையும் விட, குடும்ப நீதிமன்றத்தில் பதிவாகும் வழக்குகளே அதிகம். கடந்த 2008ல் இக்கோர்ட்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை விவாகரத்து கோரி 1,139 வழக்குகள் பதிவாகின. ஆனால், இந்த ஆண்டு, இது வரை 1,225 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, ஒவ்வொரு மாதமும் 100 பேர் விவாகரத்து கேட்டு கோர்ட் டுக்கு வருகின்றனர். ஆண்களை விட பெண்கள் தான் விவாகரத்து, ஜீவனாம்சம் கேட்டு அதிகளவில் வழக்கு தொடர்கின்றனர்.

கணவரின் கள்ளத்தொடர்பு, மாமனார் – மாமியார் “டார்ச்சர்’, தனிக்குடித்தனம் நடத்த வராதது, போன்ற காரணங்கள் விவாகரத்து கோரும் பெண்கள் தரப்பில் கூறப்படுகின்றன. இதேபோல், மனைவி நடத்தை மீது சந்தேகம், கள்ள உறவு, ஈகோ உள்ளிட்ட காரணங்களை ஆண்கள் முன் வைக்கின்றனர். இளம்தம்பதிகள் பெரும்பாலும், விவாகரத்து தீர்மானத்துடன்தான் கோர்ட் படியேறுகின்றனர். வழக்கு விசாரணை துவங்கும் முன், கணவன் – மனைவிக்கு தனித்தனியே “கவுன்சிலிங்’ நடத்தி, “முடிவை மாற்ற’ அறிவுரை வழங்கப்படுகிறது. ஆனாலும், முடிவில் மாற்றமின்றி “டைவர்ஸ் ஒன்றே குறி’ என்ற ரீதியில் உறுதியாக உள்ளனர். இதனால், வழக்குகள் விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்படுகின்றன.

நாகரிகமான விவாகரத்துகள்: மற்ற துறைகளில் பணியாற்றுவோரை காட்டிலும், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றுவோர் அதிகளவில் விவகாரத்து மனு தாக்கல் செய்கின்றனர். சிலர் திருமணமாகி சில மாதங்களிலேயே உறவை முறித்துக் கொள்ளும் தீர்மானத்தில் இறங்கிவிடுகின்றனர். மேற்கண்ட காரணங்களால், ஒவ்வொரு ஆண்டும் கோர்ட்டில் பதிவாகும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. கோவையில் மட்டுமல்லாது, பொள் ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலை, திருப்பூர் பகுதியிலுள்ள சப்-கோர்ட்களிலும் விவாகரத்து வழக்குகள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போவதால் கோவையில் மேலும் ஒரு குடும்ப நல நீதிமன்றம் அமைக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.

கோவையைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் கூறியதாவது: நாகரீக உலகில் மாறி வரும் குடும்ப கலாசார போக்கு கவலையளிப்பதாக உள்ளது. தனது துணைக்கு துரோகமிழைத்து வேறு துணையை நாடுவது, பிரச்னை தலை தூக்கும்போது தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போகும் மேம்பட்ட மனப்பாங்கு இல்லாதது, தேவையற்ற “ஈகோ’ வை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவையே விவாகரத்து கோரும் வழக்குகள் அதிகரிக்க முக்கிய காரணம். விவகாரத்து பெறுவோர், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை. இதனால், சமூகச் சூழலும் மாறும் அபாயமிருக்கிறது. இவ்வாறு, ராஜேந்திரன் தெரிவித்தார்.

– நமது நிருபர், தினமலர்: நன்றி –

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

3 பதில்கள் to “கசக்கிறது திருமண பந்தம் : கழற்றி விட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துடிப்பு”

  1. குப்புசாமி Says:

    “ஒரு ஆணுக்கு, ஒரு பெண்” என்ப்ற நியதியிலிருந்து விலகியபோதே, ஆணாயிருந்தாலௌம், பெண்ணயிருந்தாலும், ருசி கண்ட பூனையாகி, ……………, பல ருசிக்காணும் வண்டாகி, ……………., நடுத்தெரு நாயாகி விட்டனர்…………………என்றால் மிகையாகாது.

    ஒரு இனிப்பு சாப்பிட்டவருக்கு, இன்னுமொரு இனிப்பு கிடைக்கும்போது, ருசிக்கிறது. இனிப்புத் திகட்டும்போது, வேறுவிதமான இனிப்பைத் தேடிகிறது. நடுவில் கரமும் கேட்கிறது. காரத்திற்குப் பிறகு, மறுபடியும் இனிப்பைத் தேடுகிறது.

    சர்க்கரை வியாதி வந்தாலும், “போலி சர்க்கரை” அல்லது “சர்க்கரை மாதிரி” உபயோகிக்கும் சபலங்கள் போல, பல ருசிக்களைத் தேடும் ஆண்கள்-பெண்கள் கூட்டு சல்லபங்களில் ஈடுபட்டு, ……………பப் என்று குடித்தாடி,……………..ரே-பார்ட்டி என்று கூடி………தறிகெடுப் போகின்றனர்………………….

    தமிழச்சிகளைத் தேட வேண்டியிருக்கிறது.

    தமிழன்களும் இதைப் பற்றி நினைக்க மாட்டேன்கிறான்!

  2. Ipc498a victim Says:

    If u have time just read below blogspot.

    http://ipc498a-victim.blogspot.com

    • vedaprakash Says:

      I have read carefully with concern.

      The marriage is a bond that cannot be broken, but now is broken legally.

      Thus, established norms are changed under any pretext, chastity cannot be thought of and not required also.

      Such type of legal relations continue, only legal pundits enjoy life!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: