லட்சுமிராயை புகழ்ந்து தள்ளிய வைரமுத்து
December 27, 2009
http://thatstamil.oneindia.in/movies/specials/2009/12/27-vairamuthu-embarrasses-lakshmi-rai.html
நடிகைகளை புகழ்ந்து தள்ளுவதில் நடிகர்களை மிஞ்சி விட்டார் கவிஞர் வைரமுத்து. இம்சை அரசன் புகழ் சிம்புதேவன் இயக்கத்தில் தமிழில் உருவாகியிருக்கும் படம் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படத்தில் நடித்துள்ள லாரன்ஸ், லட்சுமிராய், சந்தியா, பத்மப்ரியா, கவிஞர் வைரமுத்து உள்பட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பலரும் பதினெட்டாம் நூற்றாண்டு கெளபாய் கதையான இரும்பு கோட்டை முரட்டு சிங்கத்தை இயக்கிய டைரக்டர் சிம்புதேவன் மற்றும் கதையை பாராட்டினார்கள். ஆனால் கவிஞர் வைரமுத்து மட்டும் நடிகை லட்சுமி ராயை புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளினார்.
‘கொடுத்து வைத்த குதிரை…’ நெளிய வைத்த வைரமுத்து! ரஜினி மேடை, கமல் மேடை, கலைஞர் மேடை… இப்படி மேடைக்கேற்றபடி நெளிவு சுளிவுடன் பேசுவதில் பிஎச்டி வாங்கியவர் வைரமுத்து. ஆளுக்கேற்ப பேசுவதிலும் அசகாய சூரர். நேற்று நடந்த இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மேடையில், நடிகைகளை அவர் வர்ணித்ததைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்களே நெளிய வேண்டி வந்ததாம். நம்ம வைரமுத்துவா என்று சிலர் சற்றே முகம் சுளிக்கவும் செய்தார்களாம். அவர் பேசுகையில், படத்தில் லட்சுமிராய் இந்த படத்தில் குதிரையில் ஏறி நடித்திருக்கிறார். அந்த குதிரை கொடுத்து வைத்த குதிரை… என்றெல்லாம் புகழ்ந்தார். அதனைக் கேட்டு லட்சுமிராய் உள்ளிட்ட பலரும் விழுந்து வழுந்து சிரித்தனர். விழா முடிந்ததும் அனைவரிடமும் விடைபெற்றுச் சென்ற வைரமுத்து, தனது காரிலேயே லட்சுமிராய்க்கு லிப்ட் கொடுத்தார்.


வைரமுத்துவின் காரும் கொடுத்து வைத்ததோ! இப்படி ஊடகங்கள் விமசர்னிக்கும் வகையில் தமிழகம் உள்ளது, தமிழச்சிகள் உள்ளனர், தமிழர்களின் ரசனையும் விரசமாக உள்ளது எனும்போது, கண்ணகியை நினைத்தால் பயமாக இருக்கிறது! ஒருமுலை அறுத்தத் திருமாஉண்ணியை நினைவு கூர்ந்தால் உடல் நடுங்குகிறது. கூசுகிறது.
இதோ அந்த கலித்தொகை பாடல் “குதிரை ஏறினாய்?”:
ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல, நின் வாய் சொல்;
பாய்ந்து ய்ந்த தானைப் பரிந்து னா மைந்தினை;
சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை;
யாங்குச் சென்று, ஈங்கு வந்தீத்தந்தாய்? கேள், இனி;
ஏந்தி, எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்!
குதிரை வழங்கி வருவல்;
அறிந்தேன், குதிரை தான்!
பால் பிரியா ஐங்கூந்தல் பல் மயிர்க் கொய் சுவல்,
மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை,
நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ்
ஞால் இயல் மெல் காதின் புல்லிகைச் சாமரை,
மத்திகைக் கண்ணுறை கக் கவின் பெற்ற
உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி,
நேர் மணி நேர் முக் காழ்ப் பல் பல கண்டிகைத்,
தார் மணி பூண்ட தமனிய மேகலை,
நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி ர்ப்ப இயற்றி, நீ,
காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை,
ஆய் சுதை மாடத்து, அணி நிலா முற்றத்துள்,
ஆதி கொளீஇய, அசையினை குவை,
வாதுவன்; வாழிய நீ;
சேகா! கதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட
மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க் கண்
குதிரையோ, வீறியது?
கூர் உகிர் மாண்ட குளம்பின் அது; நன்றே
கோரமே – வாழி! – குதிரை;
வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்தக்
குதிரை உடல் அணி போல, நின் மெய்க் கண்
குதிரையோ, கவ்வியது?
சீத்தை! பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே
வியமமே வாழி! – குதிரை;
மிக நன்று; இனி அறிந்தேன், இன்று நீ ஊர்ந்த குதிரை;
பெரு மணம் பண்ணி, அறத்தினில் கொண்ட
பருமக் குதிரையோ அன்று; பெரும! நின்
ஏதில் பெரும் பாணன் தூது ட, ங்கே ஓர்
வாதத்தான் வந்த வளிக் குதிரை; தி
உரு அழிக்கும் அக் குதிரை ஊரல்; நீ ஊரின், பரத்தை
பரியாக, வாதுவனாய், என்றும் மற்று அச்சார்த்
திரி, குதிரை ஏறிய செல்.
வாழ்க தமிழ், தமிழச்சிகள், தமிழப்பன்கள்…………………………………………..
புகைப்படங்கள்: தினமலர்: நன்றி
10:20 முப இல் திசெம்பர் 29, 2009 |
அந்த குதிரை ஏறிய நடிகை, தன் கூந்தலை கோதிவிட்டுக் கொண்டு சிரிப்பதும், பக்கத்தில் காவி கட்டிக்கொண்டு ஒருவர் வருகின்ற சிரிப்பை வாயைப் பொத்தி அடக்கிக் கொண்டு சிரிப்பதும், அவருக்கும் பக்கத்தில் ஒரு கிழம் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு நமட்டு சிரிப்பு சிரிப்பதும் (கருப்புக் கண்ணாடி போட்டிருப்பதால் அவர் கையை நீட்டியுள்ள நடிகையைப் பார்க்கிறார, எங்கு பார்க்கிறாற் என்று தெரியவில்லை) பல கதைகள் சொல்கின்றன.
வைரமுத்திற்கு இவ்வளவு காமக்கொழுப்பு இருக்கக் கூடாது.
பேசாமல், ஒரு குதிரையை வைரமுத்துமேல் ஏறவிடலாம், பிறகு தன்னால் எல்லாம் அடங்கிவிடும்.