தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்!

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்: ப.சிதம்பரம்
First Published : 02 Jan 2010 01:33:23 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=177194&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%u0ba4%u0b….%u0baa%u0bb0%u0bae%u0bcd

குறிப்பு: அடைப்பு குறிகளில் இருப்பது விமர்சனம்
இந்தியாவை ஆளும் ஆங்கில அடிவருடிகள்: ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, சென்னையில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் [ஆமாம் இந்த “இந்தியர்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?].

“தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்”: சென்னை, ஜன.1: 2010  “தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார் சிதம்பரம். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “புத்தாண்டு தினத்தை ஒட்டி, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன்” என்றார்.

தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசு அவசர முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறதே?தனித் தெலுங்கானா குறித்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எதுவும் எடுக்கவில்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக, கடந்த மாதம் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அறிவிக்கப்பட்டது. இது, காங்கிரஸ் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளிலும் பிளவை ஏற்படுத்தியது [காங்கிரஸ்தான் பிளவுப்படபோகிறது. தெலிங்னா உருவானாலும், உருவாகாவிட்டாலும் காங்கிரஸ் இரண்டாகும் ஆந்திரத்தில், இதுதான் உண்மை]. இந்தப் பிரச்னையைப் போக்க, தெலங்கானா விவகாரத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் 5-ம் தேதி மீண்டும் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆந்திரத்தில் உள்ள 8 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானா பிரச்னையில் மத்திய அரசுக்கென தனிப்பட்ட கருத்து ஏதுமில்லை.

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து? இந்தக் கோரிக்கை நீண்ட காலமாக வைக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி, இப்போது எதுவும் கூற முடியாது [பார்த்தீர்களா, ஆனால் நாளைக்கு கருணாநிதியும், வீரமணியும் பிஜேபியின் சதி என்றெல்லாம் கதை விட ஆரம்பித்து விடுவார்கள். தமிழர்களே புரிந்து கொள்ளுங்கள், இதுதான் தமிழர்களின்-திராவிட ஆய்சியாளர்களின் லட்சணம்].

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று சில கட்சிகள் கோரிக்கை விடுக்கிறதே? இது, அர்த்தமற்ற, அபத்தமான கோரிக்கை. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என்று சிதம்பரம் கூறினார் [இதே சிதம்பரம் பிஜேபிற்கு எதிராக பேசும் போது, பிஜேபி நாட்டைத் துண்டாக்க முயல்கிறது என்றெல்லாம் குற்றஞ்சாட்டினார். மற்றவர்களும் சேர்ந்து அதே பாட்டுப் பாடினார்கள். அன்றை உள்துறை அமைச்சரின் மகள் – பிரியாணி சாப்பிட்ட பெண்மணிதான் இன்று காஷ்மீரத்தில் கலாட்டா செய்து கொண்டிருக்கிறாள். இவரது மகனும், அவரது நண்பிகளும் இங்கு கலாட்டா செய்து கொண்டிருக்கின்றனர்].

விமர்சனம்: சுதந்திரத்திற்குப் பிறகு, மொழிவாரியான மாகாணங்கள் ஏற்படுத்தியது முதல் மாபெரும் தவறு. பட்டேல் போன்ற மனிதர்கள் ஆட்சிசெய்த நாற்காலியில் இன்று சிதம்பரம் போன்ற , அயல்நாட்டுக்கூலியென்ற வகையில் இந்திய-விரோத செயல்களில் ஈடுபட்டு வட மாநிலங்களில் பிரிவினைவாதிகளுடன் பேச்சு நடத்துகிறார். இங்கு வந்தவுடன் வேறு பாட்டு பாடுவது வேடிக்கையாகவே உள்ளது. அங்கு மாவோயிஸ்டுகள், காஷ்மீர் திரவாதிகள், ஊல்ஃபா தீவிரவாதிகள் மற்ற பிரிவினைவாதிகளுடன் ரகசிய பேச்சுகள், சமரசங்கள்…இவர்தாம் சொல்கிறார், “தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது அபத்தமான கோரிக்கை. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்”, என்று. காங்கிரஸ் உடையும் அபாயத்தில் உள்ளதால், பிரச்சினையை திசைத் திருப்ப முயன்றனர் காங்கிரஸார். பொய் வாக்குறுதிகள் கொடுத்து தேர்தலில் வென்றனர். இன்று பதிலுக்குக் கேட்கின்றனர். அதுதான் இந்த தெலிங்கானா, குர்காலாந்து முதலியன. வினை விதைத்தவன் வினையறுத்துதான் ஆகவேண்டும்.

Advertisements

ஒரு பதில் to “தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்!”

  1. குப்புசாமி Says:

    தமிழகத்தையே இந்தியாவிலிருந்து பிரிப்போம் என்ற கருநாநிதியிடம் இந்த மனம் கெட்ட சிதம்பரம் ஆங்கிலேயப் புத்தாண்டு சொல்கிறான் என்றால் அவனது தேசியப் பற்றை என்னென்பது?

    இவன் அவனிடம் சொல்கிறான், “தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்”, என்று!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: