செக்ஸ் புகாரில் சிக்கி தலைமறைவான, கற்பழிப்பு புகழ்-விடாகண்டன் சாமியார் கைது!

செக்ஸ் புகாரில் சிக்கி தலைமறைவான, கற்பழிப்பு புகழ் சாமியார் கைது!
தமிழக போலீஸாரின் மாபெரும் சாதனை!

இனிமேல் செக்ஸ் சாமியார்களைப் பிடிக்க இவர்களையே அனுப்பிவைக்கலாம்!

நமீதா, ஸ்ரேயா, புவனேஸ்வரி, முதலியோகள் பெயரில் பரிசுகளை அறிவித்து இவர்களுக்கு அளிக்கலாம்!

இந்த வேகம் ஹேமலதா பரிசோதனை ரிசல்ட் வெளியிடுவதில் இல்லை!

இரு நாளில் தெரிந்துவிடும் என்றார்கள், ஒன்றையும் காணோம்!

இனி இந்த சாமியாரைப் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான்!

இவரை மரபணு சோதனை செய்யலாம்!

50 தடவை எப்படி கற்பழித்தார், அதாவது ஹேமலதா சொன்ன்படி 30 தடவை இங்கு, 20 தடவை அங்கு என எப்படி கற்பழித்தார் என ஆராய்ச்சி செய்யலாம்!

தேவநாதனுக்குப் பிறகு இவரை வைத்தும் படம் எடுக்கலாம்!

செக்ஸ் புகாரில் சிக்கி தலைமறைவான சாமியார் பெங்களூரில்

தினகரன் – ‎2 மணிநேரம் முன்பு‎
சென்னை: செக்ஸ் புகாரில் தேடப்பட்டு வந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார், பெங்களூரில் இன்று காலை சிக்கினார். அவரை போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டை

கற்பழிப்பு புகழ் அடையாறு ஈஸ்வர ஸ்ரீகுமார் சாமியார் கைது !

4tamilmedia செய்திகள் – ‎1 மணிநேரம் முன்பு‎
பாலியல் புகாரில் சிக்கிய சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த செக்ஸ் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரை தமிழக போலீசார் கைது செய்தனர்.சென்னை நுங்கம் பாக்கத்தை சேர்ந்தவர் சாமியார்

கற்பழிப்பு வழக்கு-தலைமறைவு சாமியார் பெங்களூரில் கைது

முரசம் – ‎1 மணிநேரம் முன்பு‎
பெண் கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். தமிழக தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்

அடையாறு சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கைது

பாலியல் புகாரில் சிக்கிய சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரை பெங்களூரில் தமிழக போலீசார் கைது செய்தனர்.

சென்னை நுங்கம் பாக்கத்தை சேர்ந்தவர் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார். இவர் தேனாம்பேட்டையை சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணை கற்பழித்து ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து ஹேமலதா உள்பட 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமார் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து தலைமறைவானார்.

தன்னை ரொம்ப நல்லவன் என்று கூறிவந்த அவர் மீது போலீசாருக்கு கோபம் ஏற்பட்டது. தவறு செய்யவில்லை என்றால் விசாரணைக்கு ஆஜராக வேண்டியதுதானே என்று ஆதங்கப்பட்டனர்.

சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரோ முதலில் திருப்பதிக்கு சென்றார். பின்னர் சீரடி சாய்பாபா கோவிலில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்து மும்பை சென்ற அவர் டெல்லியில் முக்கிய பணியில் இருப்பதாக கூறி போலீசாரின் பொறுமையை சோதித்தார். ஒவ்வொரு மாநிலமாக இருப்பிடத்தை மாற்றி வந்த சாமியார் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக சாமியாரை பிடிக்க சப்  இன்ஸ்பெக்டர் மற்றும் 5 போலீசார் கொண்ட தனிப்படை போலீசார் ரெயில் மூலமாக பெங்களூர் விரைந்தனர்.

பெங்களூரில் தீவிர போலீசார் நடத்திய விசாரணையில் பதுங்கி இருந்த சாமியார் ஈஸ்வர குமாரை தமிழக தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று இவ்வாறு பதிவு செய்தேன், இன்று இப்படி ஒரு கார்ட்டூன் தினமலரில் வந்துள்ளது!
செக்ஸ்-போலீஸாருக்கு உடனடி பதவி உயர்வு!
உண்மையா, பொய்யா?

மசாஜ் செய்துகொண்டேன் பலாத்காரம் செய்யவில்லை

பதிவு செய்த நாள் 1/6/2010 4:41:40 PM

Swine Fluசென்னை: இளம்பெண்ணை கற்பழிக்கவில்லை. அவர் எனக்கும், மனைவிக்கும் பல முறை மசாஜ் செய்துள்ளார் என்று சாமியார் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த ஹேமலதா என்ற பெண், தன்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசிக்கும் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார், பல முறை கற்பழித்ததாக போலீசில் புகார் செய்தார். இந்தப் புகார் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். பின், சாமியாரை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.

ஃபிஸியோதெரஃபியும், மஸாஜும் ஒன்றா? சாமியார் பெங்களூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவரை தனிப்படை போலீசார் பெங்களூரில் நேற்று பிடித்தனர். அவரை, போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். பனையூரில் உள்ள ரகசிய பங்களாவில் வைத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:  நான் மற்ற சாமியாரைப் போல குறி சொல்வதில்லை. ஹோமியோபதி படித்துள்ளேன். அதற்கான சிகிச்சைதான் அளித்து வந்தேன். கடவுள் பக்தி அதிகம் என்பதால் காவி வேட்டி கட்ட ஆரம்பித்தேன். ஜோதிடமும் பார்ப்பேன். எனக்கு 65 வயதாகிவிட்டது. எனக்கும், மனைவிக்கும் ஆயுர்வேத சிகிச்சை தேவைப்பட்டது. சிகிச்சைக்காக பெண் தேவை என்று என்னுடைய கார் டிரைவர் ஆனந்தனிடம் தெரிவித்தேன். கென்னடி என்பவர் மூலம் ஹேமலதாவை ஏற்பாடு செய்தார். 8 முறைக்கு மேல் எனக்கும், மனைவிக்கும் வீட்டில் வைத்து ஹேமலதா மசாஜ் செய்துள்ளார்.

அபிராமபுரத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தேன். பின் அந்த வீட்டை வாங்கினேன். அது தொடர்பாக வீட்டு உரிமையாளருக்கும், எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதனால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் தீர்ப்பு எனக்கு சாதகமாக கிடைக்கும் நிலை உள்ளதால் என் மீது ஆனந்தன், கென்னடி, ஹேமலதா ஆகியோரை தூண்டி விட்டு புகார் கொடுக்க வைத்துள்ளனர். நான் ஒரு முறைகூட ஹேமலதாவிடம் தவறாக நடந்தது இல்லை. எந்த மருத்துவ பரிசோதனைக்கும் தயாராக உள்ளேன். எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. ஆனால் பீர் சாப்பிடுவேன். மாமிசமும் சாப்பிடுவேன். பெண்களுடன் தொடர்பு வைத்ததில்லை. என் மதிப்பை குலைக்கவே இந்த சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு தனது வாக்குமூலத்தில் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கூறியுள்ளார். அவரிடம் அதிகாலை வரை போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆபாச சிடியைத்தேடும் போலீஸார்: கிடுக்கிபிடி கேள்விகளுக்கு எல்லாம் சளைக்காமல் சொன்ன பதிலையே அவர் கூறி உள்ளார். இந்நிலையில் ஹேமலதா புகாரில் கூறி உள்ளபடி ஆபாச சிடி அல்லது புகைப்படம் ஏதாவது சாமியார் வீட்டில் உள்ளதா? என்றும்போலீசர் தேடி வருகின்றனர். இதற்காக சாமியார் முன்னிலையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மற்றும் அபிராமபுரத்தில் உள்ள அவர் வசித்த வீடுகளில் போலீசார் சோதனை நடத்துகின்றனர். மேலும் சாமியாருக்கும் மருத்துவபரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisements

6 பதில்கள் to “செக்ஸ் புகாரில் சிக்கி தலைமறைவான, கற்பழிப்பு புகழ்-விடாகண்டன் சாமியார் கைது!”

 1. vedaprakash Says:

  Self-styled godman held
  Category » News Flash Posted On Tuesday, January 05, 2010
  United News of India
  http://www.centralchronicle.com/viewnews.asp?articleID=23652

  Chennai, Jan 5: A self-styled godman, who had been eluding the police dragnet on charges of sexually abusing women, was arrested by a special police team at Bangalore today.

  Police sources said acting on an information from his driver that he was staying in his relative’s house at Bangalore, the team went to the Garden city and arrested the Godman Eswara Srikumar.

  He had been on the run for the last few weeks eversince a woman, Hemalatha, lodged a complaint with the police that she was sexually abused by the godman when she visited him seeking a job.

  The Godman had also not responded to repeated summons issued by the police, denied the charges against him, before fleeing to Bangalore.
  He was being brought to the city for further interrogation.

  The sexual abuse charges against the Godman comes close on the heels of the infamous episode of a temple priest Devanathan’s dalliance with married women in Kancheepuram.

  Acting on a complaint from Hemalatha, the Godman was booked for rape and criminal intimidation under the IPC. Eswar Srikumar runs the Shakti Vilasam Trust in West Mambalam, a predominantly brahmin dominated area in the city.

  In her complaint, Hemalatha, had alleged that Srikumar had been sexually exploiting her for the past two years.

  She said she had lodged several police complaints against him but no action had been taken.

  According to her, Srikumar started exploiting her when she approached him for a housekeeper’s job at the Trust run by him.

  When she visited the House of the Godman, he had given coffee laced with sedatives and raped her, Hemalatha said in her complaint.
  She said Srikumar had intimidated her saying he had videographed her in the nude and that if she tried to expose him, her pictures would be posted on the internet, and started exploiting her.

  As the local police failed to take action, Hemalatha, who managed to escape from Srikumar, lodged a complaint with the Chennai City Police Commissioner, after which the inquest in the case gained momentum, leading to fleeing of the Godman, before police finally nailed him.

 2. குப்புசாமி Says:

  அதென்னய்யா, செக்ஸ் புகாரில் சிக்கி தலைமறைவான, கற்பழிப்பு புகழ்-விடாகண்டன் சாமியார் கைது!

  ஏன் இன்னும் செக்ஸ்-ஐயர், ஆபாச ஐயர், அசிங்க ஐயர், என்ற பாட்டெல்லாம் பாடவில்லையா?

  ஆமாம், ஒரு ஆண்டில் நூற்றுக்கும் மேலாக பாதிரிகள் பலான லீலைகள் நடத்துகின்றனர் என்று செய்திகள் வருகின்றன, படங்கள் வெளீயிடப்படுகின்றது. ஏன் அவர்களைப் பற்றிய செய்திகள் இவ்வாறு பிரபலப்படுத்துவதில்லை?

  அவர்களை ஏன் தமிழக போலீஸ் இவ்வாறு துரத்திச் சென்று பிடிக்கவில்லை?

  • vedaprakash Says:

   தமிழ் பத்திரிக்கைகளின் தலைப்புகளிலிருந்து கடன் வாங்கி போட்டிருக்கிறேன், அவ்வளவே.

   சாதி பெயர் சொல்லி பத்திரிக்கைகள் இவ்வாறு எழுதுவது, பிரச்சாரம் செய்வது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

   ஏனெனில் மற்றவர்கள் அவ்வாறு அதே குற்றங்களுக்கு இல்லை இதைவிட அதிகப்படியான குற்றங்களுக்கு கைது செய்யப்படும்போது, அவர்களது சாதிகளைக் குறிப்பிடுவதில்லை.

   பாதிரிகள் விஷயமும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஆங்கிலத்தில் http://www.india.interacts.comல் எழுதியுள்ளேன். அவர்கள் என்னவானார்கள் என்று தெரியவில்லை!

   Bishops rape, defraud and fight with each other in Tamilnadu! [Good Bishops excluded].

   http://vedaprakash.indiainteracts.in/2008/02/06/bishops-rape-defraud-and-fight-with-each-other-in-tamilnadu-good-bishops-excluded/

 3. குப்புசாமி Says:

  இளம்பெண்ணிடம் சில்மிஷம் கிறிஸ்தவ போதகருக்கு வலை

  மார்ச் 13,2009,00:00 IST
  http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=9096&cls=row3&nc at=TN

  திருநெல்வேலி : பிரார்த்தனைக்கு வந்த பெண்ணிடம், தகாத முறையில் நடந்த கிறிஸ்தவ போதகர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

  நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடக்கன்குளத்தில் விக்டரி ஏ.ஜி.சபை என்ற கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்த போதகர் ரைமண்ட் நியூட்டன் (50) நடத்தி வருகிறார்.

  அந்தச் சபைக்கு அடங்கார்குளத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகள் பிரார்த்தனைக்காக வந்துள்ளார்.

  அவர் தனியாக வந்திருந்தபோது அவரிடம் தகாத முறையில் நடக்க மதபோதகர் முயற்சித்துள்ளார்.

  இதுகுறித்து இளம்பெண் போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

  ————————————————————————–

  ஆமாம், இப்பாதிரி என்னவானான்?

  பிடித்தார்களா இல்லையா?

  இல்லையென்றால், இப்போலீஸாரை அனுப்பிப் பிடிக்க சொல்லலாமே?

 4. vedaprakash Says:

  தமிழக போலீஸாரைத்தான் கேட்க வேண்டும்!

  இவர்களை பிடித்து “தினமலர்” ஜோக்கில் உள்ளது போல சீக்கிரம் பதவி உயர்வு பெறலாமே?

 5. vedaprakash Says:

  செக்ஸ் புகார் சாமியார் மத்திய குழு உறுப்பினரா? விசாரிக்க போலீஸ் முடிவு
  ஜனவரி 07,2010,00:00 IST
  http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15235

  சென்னை:கற்பழிப்புப் புகாரில் சிக்கிய சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார், உண்மையிலேயே மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினராக இருக்கிறாரா என்பதை, மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் கேட்டறிய போலீசார் முடிவு செய்துள்ளனர்.நுங்கம்பாக்கம் காம்தார் நகரைச் சேர்ந்தவர், ஈஸ்வர ஸ்ரீகுமார். இவர், தன்னை கற்பழித்ததாக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா போலீசில் புகார் செய்தார்.

  போலீசார், ஹேமலதாவிடம் விசாரணை நடத்தியதுடன், கோர்ட் அனுமதியுடன் அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்தனர்.விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஈஸ்வர ஸ்ரீகுமாருக்கு, போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இந்நிலையில், சாமியார் பெங்களூரில் தங்கியிருப்பதாகவும், போலீசார் கைது செய்யலாம் என பயந்து, வேறு இடத்திற்கு தப்பிச் செல்லவுள்ளார் என, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து, பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார், ஈஸ்வர ஸ்ரீகுமாரை சென்னை அழைத்து வந்தனர். அவரை சென்னையில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், ஈஸ்வர ஸ்ரீகுமார், ஹேமலதாவை தான் கற்பழிக்கவில்லை என உறுதியாக மறுத்துள்ளார்.

  மேலும், தான் மத்திய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளதாகவும் கூறிய ஈஸ்வர ஸ்ரீகுமார், தன்னைக் கைது செய்யும் முன் மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டுமென்றும் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் உண்மையிலேயே மத்திய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருக்கிறாரா என அறிய, போலீசார் முடிவு செய்துள்ளனர்.

  இதற்காக, மத்திய தொழிலாளர் அமைச்சகத்திற்கு போலீசார் கடிதம் எழுதவுள்ளனர். அங்கிருந்து வரும் பதிலின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், “முன்ஜாமீன் பெற்றால் நான் குற்றவாளி என ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும். நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை; அதனால் முன்ஜாமீன் பெறவில்லை’ என்றும், ஈஸ்வர ஸ்ரீகுமார் போலீசில் கூறியுள்ளார்.

  ஈஸ்வர ஸ்ரீகுமாரின் இரண்டு வீடுகளில் கோர்ட் அனுமதிபெற்று சோதனையிட, போலீசார் முடிவு செய்திருந்தனர். கோர்ட் அனுமதி இன்னும் கிடைக்காததால், நேற்று மாலை வரை ஈஸ்வர ஸ்ரீகுமாரின் காம்தார் நகர் மற்றும் அபிராமபுரம் வீடுகளில், சோதனை நடத்தப் படவில்லை. ஈஸ்வர ஸ்ரீகுமார் பெங்களூரில் இருந்து அழைத்து வரப்பட்டு, 24 மணி நேரத்திற்கு மேல் ஆனதால், சாமியாரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

  இதைத் தொடர்ந்து கோர்ட் அனுமதி பெற்று அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட உள்ளது.மேலும், ஈஸ்வர ஸ்ரீகுமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். பரிசோதனையில் 60 வயதுக்கு மேலான ஈஸ்வர ஸ்ரீகுமாருக்கு, ஆண்மைத் தன்மை உள்ளதா என சோதிக்கப்பட உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். இந்த மருத்துவப் பரிசோதனை இன்று நடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சாமியார் மீது கற்பழிப்பு புகார் கூறிய ஹேமலதா, தனது நிர்வாணப் படங்களை வைத்து சாமியார் மிரட்டுவதாகவும் போலீசில் கூறியுள்ளார். வீட்டில் நடத்தப்படும் சோதனையில், அதுபோன்ற படங்கள் சிக்கினால், சாமியார் சிறையில் அடைக்கப்படக் கூடும்.

  மேலும், மத்திய ஆலோசனைக் குழுவில், அவர் உறுப்பினர் இல்லை என மத்திய தொழிலாளர் அமைச்சகத்தில் இருந்து பதில் வந்தால், கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ், சாமியார் மீது வழக்கு பதிவு செய்யக்கூடும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: