அமைச்சர்கள் முன்பே காவலதிகாரி இறப்பது!

அமைச்சர்கள் முன்பே காவலதிகாரி இறப்பது!

நடுரோட்டில் உதவி ஆய்வாளர் உயிருக்குப் போராட்டம் – வேடிக்கை பார்த்த அமைச்சர்கள் –

நேற்று முன்தினம் ஆழ்வார்குறிச்சி உதவி ஆய்வாளர் வெற்றிவேல் சில மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டார். அவர் வெட்டுப் பட்டு நடு ரோட்டில் கிடந்தபோது தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் , விளையாட்டு துறை அமைச்சர் மைதீன் கான் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் ஆகியோர் அந்த வழியே வந்தனர் . அவர்களைக் கண்டதும் கொலையாளிகள் தப்பி ஓடி விட்டனர் .

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ., வெற்றிவேல்(43), நேற்று முன்தினம் ஆம்பூர் அருகே ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் கொலை செய்யப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் ஆம்பூர் அருகே இந்த கோர சம்பவம் நடந்தது. அமைச்சர்களுடன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் குற்றவாளிகளை துரத்திச்சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவர்கள் தப்பிவிட்டனர். எஸ்.ஐ., வெற்றிவேல் வெட்டுக்காயங்களுடன் நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அமைச்சர்கள், கலெக்டர் ஜெயராமன், சுகாதார உயர் அதிகாரிகளுடன் அத்தனை வாகனங்கள் இருந்தும், 108 வாகனம் வருவதற்காக காத்திருந்தனர். வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த வெற்றிவேலை அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்ய வில்லை .  சிறிது நேர தாமதத்திற்குப் பின் அமைச்சர் மைதீன் கானின் பாதுகாப்பு வேனில் ஏற்றி சென்றனர் .

தன்னை காப்பாற்றும்படி கைகளை தூக்கி வெற்றிவேல் மன்றாடினார். அமைச்சர் பன்னீர் செல்வத்தின் உதவியாளர், தண்ணீர் பாட்டிலை அவரிடம் நீட்டினார். வெற்றிவேல் கையை நீட்டவும், அவரின் ரத்தம் தன் மீது பட்டுவிடுமோ என உதவியாளர்கள் ஒதுங்கிக் கொண்டனர். நடுரோட்டில் இரண்டு முறை எழ முயற்சித்தும் முனகல் சத்தத்துடன் முடியாமல் வெற்றிவேல் வீழ்ந்தார். அவரின் உயிர் போராட்டம், பார்த்தவர்களை சங்கடப்படுத்தியது. வெற்றிவேல் பிற்பகல் 2.40 மணிக்கு வெட்டப்பட்டார். 20 நிமிடங்களுக்கு பிறகே அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனத்தில் அவர் கொண்டுசெல்லப்பட்டார். சிறிது தூரம் சென்றபின், எதிரே வந்த ஆம்புலன்சில் ஏற்றி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில், இது குறி்த்து திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் ஜெயராமன் செய்தியாளர்கள்டம் கூறியதாவது:  கடந்த ஜனவரி 7 ம் தேதி அமைச்சர்களுடன் ஆய்வு பணிக்கு நான் சென்றிருந்த போது மதியம் 2.40 மணிக்கு இந்த துயர சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு சில நிமிடத்தில் வந்த அமைச்சர்களும், நானும் காரில் இருந்து இறங்கிவிட்டோம். ஆனால் அங்கு, ஒரே புகைமண்டலமாக இருந்ததால், ஒரு நிமிடம் எங்களுக்கு எதுவுமே ஓடவில்லை. இந்த சம்பவத்தின் போது பொது மக்கள் யாரும் அங்கு இல்லை. நாங்கள் 6 பேர் மட்டுமே நின்றோம்.   இந்த சம்பவத்தில் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை நான் நன்றாகவே பார்த்தேன். எங்களுடன் 6 வாகனங்கள் வந்திருந்தன. பாதுகாப்புக்கு வந்த போலீசார் ஒரு வாகனத்துடன் கொலையாளிகளை பிடிக்க சென்றனர்.

அந்த கும்பல் போலீசாரை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். பாதுகாப்பு போலீசார் குற்றவாளிகளை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்த நிலையில், நாங்கள் வாகனத்தில் இருந்து இறங்கி அங்கு சப் – இன்ஸ்பெக்டர் விழுந்து கிடப்பதை பார்த்து அருகில் சென்றோம். எங்கள் கால் அருகே வெடிக்காத குண்டு கிடந்ததால், அதை கருத்தில் கெண்டு, உடன் வந்த அமைச்சர்கள் உயிரையும் கவனத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் அடுத்த நடவடிக்கையில் ஈடுபட்டோம். வெற்றிவேலின் உடலின் இருந்து வெளியேறிய ரத்தத்தை கட்டுப்படுத்த அமைச்சருக்கும், எனக்கும் ஒரு நிகழ்ச்சியில் போர்த்தப்பட்ட சால்வையை எடுத்து கட்ட சொன்னோம்.மேலும், 108 ஆம்புலன்சுக்கு நான் தான் தகவல் கொடுத்தேன்.

ஒரு ஆம்புலன்ஸ் தென்காசியிலும், மற்றொன்று சேர்மாதேவியிலும் நின்றதால் அது வர தாமதமாகும் என எண்ணி எங்களுடன் வந்த மற்றொரு பாதுகாப்பு வாகனத்தில் சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேலை ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பிவைத்தோம்.  அமைச்சரின் உதவியாளர், எனது டபேதார், சுகாதாரத்துறை டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வெற்றிவேலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தவாரே பாதுகாப்பு வாகனத்துடன் சென்றனர்.  உடனே நான் அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு போன் செய்து டாக்டர் மற்றும் நர்சுகளை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளேன். அம்பையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோதும் இதுபோன்று துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்டு வெற்றிவேலை காப்பாற்ற தீவிரமாக போராடினோம். இதில் காலதாமதம் எதுவும் செய்யவில்லை.  கொலை செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார். தமிழக அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது எனறு கருதியே மாவட்டக் கலெக்டர் இவ்வாறு கூறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.  இந்த கொலை சம்பவத்தில் முறையான விசாரணை தேவை என்று தேமுதிக வலியுறுத்தி உள்ளது.


A TV Grab shows R Vetrivel lying on the road begging for help after the 44-year-old's leg have been chopped off by gangsters. PTI/NDTV

சட்டசபையில் அமைச்சர் விளக்கம்: இந்த சர்ச்சை இன்று தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. அதிமுக உறுப்பினர் பி.கே.சேகர் பாபு இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்த ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகமாகி விட்டது. சென்னை கொலை நகரமாக மாறுகிறது. பல்வேறு மர்மங்களை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.  நெல்லை அருகே சப்- இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை செய்யப்பட்டார். அவர் குற்றுயிரும், குலையிருமாக கிடந்தபோது அமைச்சர்கள் அங்கு இருந்து இருக்கிறார்கள். ஆனால் உடனே ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்கவில்லை என்றார்.  அப்போது குறுக்கிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறுகையில், உறுப்பினர் சொல்வது தவறான தகவல். நான், அமைச்சர் மைதீன்கான், மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோர் அங்கு வந்தோம்.  உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு 108 எண் ஆம்புலன்சை அழைத்தோம். அது தென்காசியில் இருப்பதாக சொன்னார்கள். உடனே காலதாமதம் இல்லாமல் அங்கிருந்த பாதுகாப்பு போலீஸ் வாகனத்தில் அவரை ஏற்றி ஒரு மருத்துவரையும் அனுப்பி வைத்தோம் என்றார்.

10 நிமிடமே தாமதம்- கலெக்டர்: இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயராமன் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வெட்டப்பட்டும், வெடிகுண்டு வீசப்பட்டும் காயமடைந்த நிலையில் இருந்த ஒரு நிமிடம் கழித்துத்தான் அந்த இடத்திற்கு அமைச்சர்களின் கார்கள் வந்தன.  எஸ்.ஐ., படுகாயமடைந்த நிலையில் இருந்தார். அவர் விபத்தில் காயமடையவில்லை, வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் காயமடைந்து கிடந்தார். அவர் அருகே வெடிக்காத சில குண்டுகளும் கிடந்தன. அருகில் கிடந்த குண்டுகள் வெடிக்கலாம் என்ற அச்சம் இருந்ததால் யாரும் அருகில் போக தயங்கினர். நாங்கள் சென்ற போது அப்பகுதியில் லேசான புகை மண்டலமும் இருந்தது. இதனால் தான் எங்களால் அவர் அருகில் உடனே சென்று உதவ முடியவில்லை.  மேலும், புதர்களுக்குள் பதுங்கியிருந்த கொலையாளிகள், வெடிகுண்டுகளை வீசித் தாக்கலாம் என்ற தயக்கத்தாலும் உடனடியாக அருகில் போக முடியவில்லை.  மேலும், அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த போலீஸாரில் பலர் கொலையாளிகளை ‌விரட்டிச் சென்ற நிலையில் எஞ்சியிருந்தவர்கள் தான் உதவிக்கு வந்தனர்.  கொலையாளிகள் தாக்குதல் நடத்தி விடக் கூடாது என்பதற்காக போலீஸார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காயமடைந்திருந்த சப் இன்ஸ்பெக்டரை காப்பாற்றுவற்காக ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால் போலீஸ் வாகனத்தில் சப் இன்ஸ்பெக்டரை ஏற்றி அனுப்பி வைத்தோம்.  மொத்தத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே தாமதமானது என்றார்.

விமர்சனம்:

1. ஐந்தாண்டுகளுக்கு முன்பு, மகாபலிபுரம் ரோடில், ஒரு மாருதி கார் விபத்தில் சிக்கி, உள்ளேயிருப்பவர்கள் தூக்கியெரியப்படுகின்றனர். ஒரு பெண்மணி ரோடில் கிடப்பது வீடியோ காட்டுகிறது. அந்த பெண் தனது தலையை நான்கைந்து முறை தூக்கி, மறுபடி-ம்மறுபடி கீழே விழுகிறது. பிறகு அடங்கிவிடுகின்றது.

2. அப்பொழுதும், அந்த வீடியோகாரர் அப்படி படம் எடுக்கும் நேரத்தில் அப்பெண்மணியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால், அவர் பிழைத்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டினர். ஆனால், வீடியோகாரருக்கு, ஒரு அசாதாரணமான நிகழ்வை ப்டம் பிடிக்க சந்தர்ப்பன் கிடைத்ததே என்றிருந்தாரே தவிர, ஒரு உயிர் ஊசலாடுகிறதே என்று கவலைப்படவில்லை.

3. இங்கும், புகை குண்டு வெடிப்பு முதலியவற்றைப் பார்த்தவுடன் என்கு தாமும் அதில் மாட்டிக் கொள்வோமே என்று பயந்து நின்று விட்டனர் என்பது அவர்கள் பேசுவதிலிருந்தே தெரிகின்றது.  ஆகவே, இவர்கள் எல்லாம் மற்றவர்களக் காப்பார்கள் என்று நினைப்பது, மடத்தனம்.

4. நியாயம், தர்மம், மனிதாபிமானம், முதலியவற்றை மறந்தாகிவிட்டது. வன்முறை காட்சிகள் பார்த்து-பார்த்து மரத்துவிட்டது. மனம் இருகிவிட்டது.

5. குண்டுகள் வெடித்து தீவிரவாதம் நிலைத்துவிட்டது. தமிழகத்தவரும் விதவிதமான குண்டுகளைத் தயாரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டனர். சாராய குண்டு முன்பே திகவினர் அப்பாவி மக்கள்மீது மாம்பலத்தில் வீசினர். நாட்டு வெடிகுண்டுகள் என்று அடிக்கடி வெடிக்கின்றன. இப்பொழுது “பைப்-வெடிகுண்டு” வந்திருக்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: