வன விலங்குகள் சட்டத்தில் கைது செய்யப்பட்ட புலிதோல் சாமியாருக்கு ஜாமீன்!

சாமியாருக்கு ஜாமீன்

பதிவு செய்த நாள் 1/12/2010 12:36:39 AM

http://www.dinakaran.com/nagaramdetail.aspx?id=3791

கற்பழிப்பு சாமியார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்?

தட்ஸ்தமிழ் – ‎4 மணிநேரம் முன்பு‎
சென்னை: பெண்ணை கற்பழி்த்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி, வீட்டில் புலித்தோல் பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் ​(62) மீதான வழக்குகள்

புலித்தோல் சாமியார் மீதான வழக்கு ​விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்?

தினமணி – ‎10 மணிநேரம் முன்பு‎

சென்னை,​​ ஜன.​ 9: புலித்தோல் பதுக்கிய வழக்கில் கைதான சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் ​(62) மீதான வழக்குகள் சிபிசிஐடி

Swine Fluசென்னை : பாலியல் புகாரில் சிக்கிய நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசிக்கும் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார், புலி தோல் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு சைதாப்பேட்டை 17வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பூபாலன், சாமியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுபடி, அவர் தினமும் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

புலித்தோல் சாமியார் மீதான வழக்கு ​விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்?
First Published : 12 Jan 2010 01:58:49 AM IST

Last Updated : 12 Jan 2010 02:26:34 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=181911&SectionID=129&MainSectionID=1b95%u0bc1+%

சென்னை, ​​ ஜன.​ 9: புலித்தோல் பதுக்கிய வழக்கில் கைதான சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் ​(62) மீதான வழக்குகள் சிபிசிஐடி போலீஸôரின் விசாரணைக்கு விரைவில் மாற்றப்பட உள்ளன.​ நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார்.​ இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர்,​​ தேனாம்பேட்டை கிரியப்பா ரோட்டைச் சேர்ந்த ஹேமலதா.​ தன்னை சாமியார் மானபங்கம் செய்ததாக ஹேமலதா போலீஸôரிடம் புகார் செய்தார்.​ மேலும் புலித்தோல் பதுக்கியதாகவும் புகார் எழுந்தது.​ இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் டி.​ ராஜேந்திரன் உத்தரவின்பேரில் இது குறித்து மாம்பலம் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து பெங்களூரில் பதுங்கியிருந்த சாமியாரை கைது செய்தனர்.மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு:​​ இது தொடர்பாக சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.​ இதன்பின் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியதால்,​​ ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.​ மருத்துவமனையில் அவரை சந்திக்க வரும் நபர்கள்,​​ அவருக்கு வழங்கப்படும் உணவு ஆகியவற்றையும் போலீஸôர் கண்காணித்து வருகின்றனர்.​ மத்திய அரசுக்கு தகவல்:​​ மத்திய தொழிலாளர் துறையின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ள சாமியார் குறித்து போலீஸôரின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.​ உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் தியாகியிடம்,​​ புதுதில்லியில் உள்ள கட்டடத்தை விற்பனை செய்வதில் சாமியார் ரூ.​ 1 கோடி மோசடி செய்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.​ கேரள பெண் தற்கொலை…​ இதே போல சிங்கப்பூரில் சாமியார் முன்பு தங்கியிருந்தபோது அவரிடம் உதவியாளராக கேரளத்தைச் செர்ந்த லூசி பணியாற்றியுள்ளார்.​ சாமியார் மிரட்டியதால் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பிய இவர் சில நாள்களில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.இன்டர்போல் உதவியை நாட…​ சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சாமியார் மீது வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல்களை திரட்ட “இன்டர்போல்’ அமைப்பின் உதவியை நாடவும் போலீஸôர் பரிசீலித்து வருகின்றனர்.​ இந்த நிலையில்,​​ மந்தைவெளியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டை ஆக்கிரமித்து,​​ அறக்கட்டளை நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.​ இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு குறித்தும் போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே சாமியார் மீது மானபங்கம் செய்ததாக புகார் தெரிவித்த அவரது முன்னாள் உதவியாளர் ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.​ இதன் அறிக்கையையும் போலீஸôர் எதிர்நோக்கியுள்ளனர்.சாமியார் மீதான புகார்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால்,​​ அவர் மீதான அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸôரின் விசாரணைக்கு மாற்றப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisements

2 பதில்கள் to “வன விலங்குகள் சட்டத்தில் கைது செய்யப்பட்ட புலிதோல் சாமியாருக்கு ஜாமீன்!”

 1. vedaprakash Says:

  தினமணிக்கு பதில்:

  கற்பழிப்பு சாமியார், ரேப் சாமியார், செக்ஸ் சாமியார், ……………….என்றெல்லாம் இருந்த சாமியார் இப்பொழுது “புலித்தோல் சாமியார்” ஆகிவிட்டது வியப்பாக உள்ளது! தேவநாதன் விஷயத்தில் ஆபாச வீடியோக்கள், வில் ஹியூம் உபயோகப் படுத்திய அதே இணைதளத்தில் http://www.rapidshare.com ஏற்றினார்கள். அப்பொழுது நமது சூரப்புலிகள் ஒன்றும் செய்யவில்லை! ஏன் மே 1992ல் விடுதலையான அவன் “இன்டர்போல்” சொல்லிதான் சூளைமேட்டில் நவம்பர் 2009ல் பிடிக்கின்றனர்! குற்றம் புரிந்தவர்களை பாரபட்சமின்றி சட்டப்படி எல்லோரையும் விசாரித்துத் தண்டிப்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், ஒவ்வொரு வழக்கிலும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்வது, ஊடகங்களும் அவ்வாறே விமர்சனம் செய்வது முதலியன அத்தகைய பிரதிபலிப்புகளைத் தான் காட்டுகின்றன.
  By Vedaprakash
  1/12/2010 3:09:00 PM

 2. vedaprakash Says:

  சாமியாரிடம் கைப்பற்றப்பட்ட புலித்தோல் உண்மையா? ரசாயன சோதனைக்கு அனுப்பிவைப்பு
  ஜனவரி 13,2010,00:00 IST
  http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15373

  சென்னை:சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரிடம் கைப்பற்றப்பட்ட புலித்தோல் உண்மையா, போலியா என அறிய போலீசார், அத்தோலை ரசாயன சோதனைக்கு அனுப்பியுள்ளனர். சென்னை, நுங்கம்பாக்கம் காம்தார் நகரைச் சேர்ந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாருக்கு எதிராக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண், கற்பழிப்பு புகார் கூறினார். ஹேமலதாவிடம் விசாரணை நடத்திய போலீசார், அவருக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தினர்.

  பெங்களூரில் தலைமறைவாக இருந்த சாமியாரை, போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.சாமியாரின் காம்தார் நகர் வீட்டை சோதனையிட்டபோது, அங்கிருந்து சிறுத்தைப் புலித்தோல் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில், சாமியார் கைது செய்யப்பட்டார். புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில், சாமியாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  சைதாப்பேட்டை கோர்ட்டில் சாமியார், ஜாமீன் பெற்றார். இந்நிலையில், சாமியாரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிறுத்தைப் புலித்தோல், உண்மையானதா, போலியானதா என அறியவும், அந்த தோல் எத்தனை ஆண்டுகள் பழமையானது, எந்த நாட்டு சிறுத்தைப் புலி வகையைச் சேர்ந்தது என அறிய, போலீசார் முடிவு செய்துள்னளர். இதற்காக, சாமியாரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிறுத்தைப் புலித்தோலை, போலீசார் நேற்று ரசாயன சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: