கருணாநிதி, ஜெயலலிதா சண்டைகள்!

கருணாநிதி, ஜெயலலிதா சண்டைகள்

’திருமதி’ சர்ச்சை – முரசொலி கட்டுரை!

புதன்கிழமை, 19, ஆகஸ்ட் 2009 (18:5 IST)

தி.மு.க. அரசை மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா சொல்கிறவரை அவரை திருமதி என்றே அழைக்கப் போவதாக சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கூறினார் தமிழக முதல்வர் கருணாநிதி.  இதைக் கண்டித்து சமீபத்தில் அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.   மூத்த அரசியல்வாதியாக இருக்கும் தமிழக முதல்வர் ஒரு எதிர்க்கட்சித் தலைவரை இப்படி தனிப்பட்ட முறையில் தாக்குவது சரியா? என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில்…..

செல்வி ஜெயலலிதா ‘திருமதி’ சோபன்பாபுவாக வாழ்ந்தபோது என்ற தலைப்பில் படத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி!        அந்தக் கட்டுரை தெனாலி வாசகர்களின் பார்வைக்காக….

1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.  அ.தி.மு.க.வை தோற்றுவித்தார்.  பத்து வருடங்களுக்கு பிறகு – 1982ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார் ஜெயலலிதா!  அதற்கு முன்பு – அவர் சில வருட காலம் – ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு சினிமா உலகின் நெமபர் ஒன் கதாநாயகனாகத்  திகழ்ந்த – சோபன்பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்!

சோபன்பாபுவுடன் அவருக்கிருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது – ‘குமுதம்’ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “ நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்” – என்று பதிலளித்தார்.   அப்படியானால் – “ உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா?”- என்று ‘குமுதம்’ நிருபர் கேட்டார்.

’’திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.  நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.  எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்” – என்றார் ஜெயலலிதா!

’குமுதம்’ நிருபர் அத்தோடு திருப்தியடைந்துவிடாமல், இன்னொரு கேள்வி கேட்டார்.  அது என்ன?

“ சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா?” இது கேள்வி!

ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார்! “ அது தெரிந்திருப்பதால்தான் – அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் – நான்  அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்”

கடைசியாக ஒரு கேள்வி – “ இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?”  ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்க சொன்னார் “ கோயிங் ஸ்டெடி!”  – குமுதம் இந்த பேட்டியை ‘கோயிங் ஸ்டெடி’ என்று தலைப்பிட்டு… சோபன்பாபு – ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற  முற்படும்போது – பால்கனியில் இருந்து ஜெயலலிதா உறசாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா’ காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது.

ஜெயலலிதா – சோபன்பாபுவுடன் மனைவி – கணவனாக தனிக்குடித்தனம் நடத்தியபோது – வீணை வாசித்தது – உணவு பரிமாறியது, நூலகத்தில் அளவளாவியது போன்ற இதர புகைப்படங்கள் தெலுங்கு சினிமா இதழ் ஒன்றில் வெளிவந்தவையாகும்.

முரசொலி
19.8.2009

இதில் கன்னியமோ, நாகரிகமோ, இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு பதில் to “கருணாநிதி, ஜெயலலிதா சண்டைகள்!”

  1. குப்புசாமி Says:

    என்னய்யா, கதை விடுகிறீர்கள்? இருவரும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். அதில் இது மாதிரி காட்சிகள் நிறைய வரும்.

    அதுமட்டுமல்ல, எத்துணையோ நடிகர்கள் கூட ஒரு நடிகை அவ்வாறு நடித்திருக்கலாம்.

    அவ்வளவு ஏன், ஒரு நடிகர் தனது சினிமா நடிப்புகளில் 100-200 நடிகைகளுக்குத் தாலி கட்டியிருக்கலாம்! அவ்வளவு பேரும் பெண்டாட்டியாகி விடுவார்களா? அதே போல, ஒரே நடிகைக்கும் 100 நடிகர்கள் பல படங்களில் தாலி கட்டியிருக்கலாம், அவ்வளவு பேருக்கும் மனைவி ஆகி விடுவாளா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: