இன்னுமொரு வில் ஹியூம்!

இன்னுமொரு வில் ஹியூம்!

காப்பகம் நடத்திய போதகர் ஓட்டம்

பதிவு செய்த நாள் 1/27/2010 12:43:07 AM: தினகரனில் இப்படியொரு புகைப்படம்! இதில் யார் ஷாஜி என்று தெரியவில்லை!

Swine Fluகளியக்காவிளை : குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி காப்பகம் நடத்தி வந்த கிறிஸ்தவ போதகர் தலைமறைவானார்.

“பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” ('Bethesda Blessing Home')

“பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” ('Bethesda Blessing Home')

அனுமதி பெறாத குழந்தை காப்பகத்திலிருந்து 76 குழந்தைகள் மீட்பு: கன்னியாகுமரி மாவட்டம் பலவிளையில் அனுமதியின்றி இயங்கிய குழந்தைகள் காப்பகத்தில் இருந்த மணிப்பூர், அசாம் மாநில குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளா காரகோணத்தைச் சேர்ந்தவர் ஷாஜி. கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் நடத்திவரும் இவர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே, பலவிளையில் குழந்தைகளுக்கான காப்பகம் நடத்தி வந்தார்.

பெதெஸ்டா ஆசிர்வாத இல்லத்தில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தப்பட்டது

பெதெஸ்டா ஆசிர்வாத இல்லத்தில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தப்பட்டது

அங்கு, பெரும்பாலும் வெளிமாநில குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிறுவர் காப்பகம் நடத்த அரசிடம் அனுமதி பெறவில்லை. மேலும் 76 சிறுவர்களில் 22 பேர் அசாம், 54 பேர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிந்தது. போலீஸ் உதவியுடன் அந்த சிறுவர்கள் நெல்லை அழைத்துவரப்பட்டனர். நெல்லை சரணாலயம் தொண்டு நிறுவனத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் பெரும்பாலானோர், பெற்றோரை பிரிந்த ஏக்கத்தில் இருந்தனர். அவர்களை நெல்லை கலெக்டர் ஜெயராமன் நேற்று சந்தித்து பேசினார். அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் வழங்க உத்தரவிட்டார். மணிப்பூர், அசாம் மாநில அரசின் குழந்தைகள் நல அமைப்புடன் பேசி, அவர்களை அனுப்பிவைக்கும் வரை, கல்வி கற்பிக்க உள்ளதாக, சரணாலய இயக்குனர் ஜான்சன் கூறினார்.

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் / டீன்-ஏஜ் பெண்கள் உடபட இருந்தது

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் / டீன்-ஏஜ் பெண்கள் உடபட இருந்தது

நெல்லை சரணாலயம்: ஆதரவற்ற சிறுமிகள், சிறுவர்கள் பெண்களுக்கு மறுவாழ்வு கொடுத்து வரும் நெல்லை சரணலயம் 1993ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் குடும்பங்களில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் பொருளாதார காரணங்களிலும், நகர்மயமாக்கல், கிராமப்புறத்து மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்தல் போன்றவையாலும் மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப சிறுவர், சிறுமியரின் தேவைகள், ஆசைகள், குழப்பங்கள் போன்வற்றில் பெற்றோரும், ஆசிரியரும் இச்சமுதாயமும் அவர்களுக்கு சரியான திசையில் வழிகாட்டுதலிலும், நியாயமான தேவைகளை நிறைவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகளாலும் பல சிறுவர் சிறுமியர் குடும்ப உறவுகளை இழந்து வீதிகளுக்கு வரும் நிலை ஏற்படுகிறது் இத்தகைய வீதியோர சிறார்கள் மேல் அக்கறை கொண்டு அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்காக சரணாலயம் பணியாற்றி வருகிறது. இத்தகைய சிறுவர்களின் அவலங்களைக் கண்ணுறும் பொதுமக்கள் இவர்களுக்கு உதவிடவும் சிறுவர் உரிமைகளைப் பேணிடவும் மத்திய அரசின் சமூக ­நீதி மற்றும் அதிகாரம் வழங்குதல் துறை மூலம் நிறுவப்பட்டது தான் சைல்டு லைன் 1098 இலவச தொலைபேசியாகும் நாடெங்கும் ஐம்பத்தைந்து மாநகரங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த தொலைபேசி வாயிலாக 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு சிறுவர் குறித்த தகவல்கள் தெரிவிக்கலாம் ஏன்? சம்பந்தப்பட்ட சிறுவர்களே ௯ட தங்கள் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுக்கு ஆலோசனைகளும், மருத்துவ உதவி, கல்வி உதவி, குடும்பங்களோடு ஒன்றினைத்தல், அ­திகளுக்கு பரிகாரம் காணுதல் போன்ற சேவைகளைப் பெற முடியும்.

இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் இல்லை என்கிறார் ஜோஸப் ஜான்

இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் இல்லை என்கிறார் ஜோஸப் ஜான்ஸன்

ஷாஜி யார், மதபோதகரா, மர்ம மனிதரா, இன்னொரு வில்-ஹியூமா? கேரள மாநிலம் காரகோணம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. மத-போதகரான இவர் குமரி மாவட்டம் பாலவிளை அருகே சொந்த கட்டடத்தில் “பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” (‘Bethesda Blessing Home’) என்ற பெயரில்[1] குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார்[2]. அங்கு ஜெப கூட்டமும் நடந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஷாஜி மீது இதுவரை எந்தப் புகாரும் இல்லை. எனினும் அவரை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்[3]. ஷாஜியிடம் நடந்த விசாரணையில் பசியால் வாடிய வெளிமாநில குழந்தைகளை ஏஜெண்டுகள் மூலம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்[4]. சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஷாஜி நடத்திய காப்பகத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை.

சட்டத்தை மீறி அடைத்து வைத்தது பற்றி விளக்குகிறர் - டைம்ஸ்-நௌ டிவி

சட்டத்தை மீறி அடைத்து வைத்தது பற்றி விளக்குகிறர் - டைம்ஸ்-நௌ டிவி

சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனை: சரணாலயத்தில் உள்ள சிறுவர்களை நெல்லை கலெக்டர் ஜெயராமன் நேற்று சந்தித்தார். அவர்களுக்கு அரசு டாக்டர்கள் மூலம் மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்[5]. சென்ற புதன்கிழமைதான் (20-01-2010) சோழங்கநல்லூரில் இருந்த ஒரு (Reach Home Children Foundation)[6] அனாதை இல்லத்திலிருந்து, மணிப்பூர், மாவட்டம், பிஷ்ணுபூரைச் சேர்ந்த 17 குழந்தைகள் (பெண் குழந்தைகளையும் சேர்த்து) விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு குழந்தைகள் நல்வாழ்வு கமிட்டியின் தலைவி டாக்டர் பி. மனோரமா குழந்தைகள் சரிவர பரமரிக்கப்படவில்லை மற்றும் அவர்கள்மீது அடித்ததாக அடையாளங்கள் காணப்படுகின்றன என்றார். பெண்-குழந்தைகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப் பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது[7].

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது!

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது!

“சிறுவர்கள்” என்று கூறி, டீன்–ஏஜ் பெண்கள் இருந்ததை மறைக்கின்றனர்: முன்பு போலவே, இப்பொழுதும் “சிறுவர்கள்” என்று கூறி, டீன்–ஏஜ் பெண்கள் இருந்ததை மறைக்கின்றனர். நேற்று டிவி-செனல்கள் காண்பித்தபோது, இளம் பெண்கள் இருந்தது நன்றாகவே தெரிந்தது. ஆனால், அடையாலம் தெரியக்கூடாது என்று, ஏதோ மறைப்பு வைத்து படம் பிடித்துள்ளதால் தெளிவாக முகங்கள் தெரியவில்லை. ஜோஸப் ஜான்ஸன் என்ற சமூகநல அதிகாரி குறிப்பிடும்போது, அனாதை இல்லத்தில் / ஆஸ்ரமத்தில் எத்தனை குழந்தைகள் / பெண்கள் இருந்தனர் என்பதற்கான எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஆகவே,, இவர்கள் எல்லாம், “சுற்றுலா விபசாரத்திற்கு” உபயோகப்பட்டிருந்தால், விவரங்கள், விசாரித்தால்தான் தெரியவரும். அப்பொழுது, அவர்கள். தாங்கள் அந்த இல்லத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லிவிட்டால், ஒன்றும் செய்யமுடியாது.

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது! நடுவிலே வந்த இன்னொரு பெண்!

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது! நடுவிலே வந்த இன்னொரு பெண்!

அனாதை இல்லங்களும், கொலைகளும், கற்பழிப்புகளும்: திருநெல்வேலியைச் சேர்ந்த, “புதிய வாழ்க்கை மையம்” (‘New Life Centre), என்ற இல்லத்தில், 2005ல் மணிப்பூரைச் சேர்ந்த ரிச்சர்ட் என்ற சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவன் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டது. அடுத்த வருடம் 2006ல் அதே இல்லத்தைச் சேர்ந்த, பில்கிரிம் நிகோபார் (Pilgrim Nicobar), என்ற இன்னொரு சிறுவனும் ஒரு குட்டையில் பிணமாக மிதந்தான். அந்த அனாதை இல்லத்தின் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், விசாரணை ஒன்றும் உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. அதேமாதிரி, சென்னை அனாதை இல்லத்தில் 2005ல், ஐந்து பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குட்பட்டனர் என்று புகார் செய்தனர். போலீஸார் அதன் தலைவரை விசாரித்தனர், ஆனால் மேலே தொடராமல் அப்படியே விட்டுவிட்டனர்.

வேதபிரகாஷ்


[1] HNS, Authority caught in frenzy on rescue of state children in Chennai, Source: Hueiyen News Service / Thingnam Anjulika Samom, Imphal, January 25 2010

http://www.e-pao.net/GP.asp?src=10..260110.jan10

[2]தினமலர், ஜனவரி 26,2010

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15699

[3] தினகரன், 24-01-2010

http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=4492

[4] http://thatstamil.oneindia.in/news/2010/01/25/76-other-state-kids-rescued-from.html

[5]தினகரன், 26-01-2010

http://www.dinakaran.com/highdetail.aspx?id=4566

[6] TIMES-NOW TV, Child trafficking racket exposed, 26 Jan 2010, 1326 hrs IST, for details, see at:

http://www.timesnow.tv/Child-trafficking-racket-exposed/articleshow/4337164.cms

[7] http://www.e-pao.net/GP.asp?src=10..260110.jan10

குறிச்சொற்கள்: , , , ,

7 பதில்கள் to “இன்னுமொரு வில் ஹியூம்!”

 1. Brahmallachrist Says:

  The girls are not children or milk sucking babies, as the media tried to portray.

  They are teenage girls and definitely, they could have been sexually harassed under the guise of “theological brain washing” or “divine unions”, as sanctioned by their god!

  As for as the children are concerned, their beautiful faces only show the innocence.

  And therefore, these child abusers should not be left unpunished, as they spoil their lives from the beginning, it is the greatest crime on the earth.

 2. vedaprakash Says:

  விமலன் said on காப்பகம் நடத்திய கிறிஸ்துவ மத போதகர் ஓட்டம்
  January 27, 2010 at 9:15 am
  இப்படியொரு, பதிவு இன்கே காணப்பட்டது:

  http://ulavan.wordpress.com/2010/01/27/…E%A4/#comment-4

  ஆகவே, மேலெயுள்ள புகைப்படத்துடன் குறிப்பிட்டு, அதில் யார் ஷாஜி என்று கேட்டிருந்தேன்.
  ————————————————————-

  அதற்கு பதில் இதோ:

  தெரியவில்லை!-நண்பா என்னை விட்டு விடு -மூவரும் பாக்க அப்படி தான் இருக்கினம்

  See all comments on this post here.
  —————————————————————

  யாருக்கு பதில் சொல்கிறது என்பது தெரியவில்லையே?

  என்னுடைய மெயில்-பாக்ஸில் இதே பதில் உள்ளதால், நான் கேட்ட கேள்விக்குத்தான் அந்த பதில் என்பது தெரிகிறது!

  ஆனால், கேள்வியைக் காணோமே?

 3. vedaprakash Says:

  களியக்காவிளை அருகே 76 குழந்தைகள் மீட்கப்பட்ட காப்பக போதகர் கைது

  First Published : 14 Feb 2010 02:18:19 AM IST

  Last Updated : 14 Feb 2010 12:46:48 PM IST
  http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Thirunelveli&artid=196947&SectionID=139&MainSectionID=139&SEO=&Title=%u0b95%u0bb3%u0bbf%u0baf%u0b95%u0bcd%u0b95%u0bbe%u0bb5%u0bbf%u0bb3%u0bc8+%u0b85%u0bb0%u0bc1%u0b95%u0bc7+76+%u0b95%u0bc1%u0bb4%u0ba8%u0bcd%u0ba4%u0bc8%u0b95%u0bb3%u0bcd+%u0bae%u0bc0%u0b9f%u0bcd%u0b95%u0baa%u0bcd%u0baa%u0b9f%u0bcd%u0b9f+%u0b95%u0bbe%u0baa%u0bcd%u0baa%u0b95+%u0baa%u0bcb%u0ba4%u0b95%u0bb0%u0bcd+%u0b95%u0bc8%u0ba4%u0bc1

  களியக்காவிளை, ​​ பிப்.​ 13: கன்னியாகுமரி மாவட்டம்,​​ களியக்காவிளை அருகே 76 வெளி மாநில குழந்தைகள் மீட்கப்பட்ட விவகாரத்தில்,​​ அனாதை இல்லம் நடத்திய மத போதகரை தனிப்படை போலீஸôர் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  ​ களியக்காவிளை அருகேயுள்ள மேக்கோடு,​​ ஞங்ஙறக்கல்விளை வீட்டைச் சேர்ந்த கருணாகரன்-​ லலிதா தம்பதி மகன் ஷாஜி ​(31).​ கிறிஸ்தவ மத போதகரான இவர் பாலவிளையில் பெதஸ்தா பிளஸ்ஸிங் என்ற அனாதை இல்லத்தை நடத்தி வந்தார்.​ இங்கு மணிப்பூர்,​​ அசாம் மாநிலங்களைச் சேர்ந்த 76 ஆண் குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

  ​ ​ ​ இந்த அனாதை இல்லம் மீது பல்வேறு புகார்கள் கிளம்பியதையடுத்து பாளையங்கோட்டை சிறுவர் கூர்நோக்கு இல்லக் கண்காணிப்பாளர் ஷகிலாபானு தலைமையில் சமூகப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கடந்த மாதம் 23-ம் தேதி ஆய்வு செய்து,​​ அங்கு அனுமதியின்றி தங்க வைக்கப்பட்டிருந்த 76 குழந்தைகளை மீட்டு திருநெல்வேலியில் உள்ள குழந்தைகள் வரவேற்பு மையமான சரணாலயத்தில் சேர்த்தனர்.

  ​ தொடர்ந்து,​​ திருநெல்வேலி சரணாலய குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் சந்திரசேகர்,​​ குழந்தைகள் இல்ல நிர்வாகிகள் மீது களியக்காவிளை போலீஸில் கடந்த மாதம் 25-ம் தேதி புகார் செய்தார்.​ இதன்பேரில்,​​ ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் மீது,​​ 5 பிரிவுகளில் போலீஸôர் வழக்குப் பதிந்தனர்.

  ​ இதையடுத்து,​​ காப்பக நிர்வாகி ஷாஜி தலைமறைவானர்.​ அவரை பிடிக்க சப்-​ இன்ஸ்பெக்டர்கள் சபாபதி,​​ பாலமுருகன்,​​ சோனமுத்து தலைமையில் 3 தனிப்படைகளை திருநெல்வேலி டி.ஐ.ஜி.​ கண்ணப்பன் அமைத்தார்.

  ​ இந்நிலையில்,​​ தனிப்படை எஸ்.ஐ.​ சபாபதிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸôர் கடந்த இருநாள்களுக்கு முன்பு கோயம்புத்தூர் சென்றனர்.​

  அங்கு குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்று ஷாஜி குறித்து விசாரித்தபோது,​​ அவர்கள் முதலில் மறுத்துள்ளனர்.​ ​

  ​ ​ போலீஸôரின் தொடர் விசாரணைக்குப் பின்,​​ கேரள மாநிலம் பாலக்காடு பகுதிக்குச் சென்று கொண்டிருந்த மதபோதகர் ஷாஜியை வழியில் வைத்து தனிப்படை போலீஸôர் மடக்கிப் பிடித்தனர்.​ தொடர்ந்து,​​ ஷாஜியை வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

  ​ இதில்,​​ களியக்காவிளை அருகேயுள்ள பளுகல் பகுதியைச் சேர்ந்த போதகர் பினு,​​ மற்றும் கேரள பகுதியைச் சேர்ந்த போதகர் ஒருவர் மூலம் மணிப்பூரில் உள்ள மதபோதகர் பால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும்,​​ அவரிடமிருந்து 76 ஆண் குழந்தைகளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்ததாகவும்,​​ மேலும் 20 பெண் குழந்தைகளை தனது நண்பர் ஒருவர் பெங்களூரில் நடத்திவரும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  ​ ​ ​ இதையடுத்து தனிப்படை எஸ்.ஐ.​ பாலமுருகன் தலைமையில் போலீஸôர் சனிக்கிழமை பெங்களூர் சென்றுள்ளனர்.​ தொடர்ந்து மத போதகர் ஷாஜியை தனிப்படை போலீஸôர் சனிக்கிழமை கைது செய்து குழித்துறை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.​ நீதித் துறை நடுவர் ராமச்சந்திரன்,​​ மத போதகர் ஷாஜியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.​ இதையடுத்து அவரை போலீஸôர் நாகர்கோவில் சப்-ஜெயிலில் அடைத்தனர்.

  • vedaprakash Says:

   குழந்தைகள், ஆண்குழந்தைகள் என்றே குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு தனியார் தொலைகாட்சி 70ற்கும் மேற்பாட இளம்பெண்களைக் காணவில்லை மற்றும் 200க்கும் மேலான சிறுவர்கள் அடக்கப்பட்டிருந்தார்கள் என்று வீடியோக்களில் காட்டினார். அத்லிருந்து எடுத்தப் புகைப்படங்களை இங்கு காணலாம்: https://socialterrorism.wordpress.com/2010/01/26/இன்னுமொரு-வில்-ஹியூம்/ கிருத்துவ மத போதகர்கள் இப்படி தொடர்ந்து அனாதை இல்லங்கள் வைத்து “குழந்தை விபச்சாரம்” செய்வதும், கைது செய்யப் படுவதும், அவர்களின் “சுற்றுலா விபச்சாரத்தில்” உள்ல தொடர்பு முதலியவற்றைப் பற்றி முழு விவரங்கள் தரப்படவேண்டும். அத்தகைய கொடூர காமுக மனப்பாங்கு எப்படி அவர்களுக்கு வருகிறது என்பதும் சொல்ல / தெரிவிக்கப்பட வேண்டும்.

 4. சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி! « சமூகத் தீவிரவாதம் Says:

  […] https://socialterrorism.wordpress.com/2010/01/26/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%… […]

 5. ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன? « கிருத்துவம Says:

  […] https://socialterrorism.wordpress.com/2010/01/26/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%… […]

 6. ஹிந்து-என்–டி-டிவி, டான் பாஸ்கோ, சிறுவர்-பாலியல், செக்ஸ் குற்றங்கள் தொடர்பு என்ன? « இந்தியாவில Says:

  […] https://socialterrorism.wordpress.com/2010/01/26/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: