கொசு: கொசுக்கடி, கருணாநிதி கடி, ஜெயலலிதா கடி!

ஜெயலலிதாவுக்கு அறிக்கை விட கிடைத்தது கொசு தான்: கருணாநிதி
”ஜெயலலிதாவுக்கு அறிக்கை விட கொசு தான் கிடைத்தது” என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

சென்னையில் கடந்த சில மாதங்களாக கொசு உற்பத்தி அதிகரித்து விட்டதாகவும்,​​ அதனால் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாகவும் கூறி அதற்குக் கண்டனம் தெரிவித்து இ‌ன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில்,​​ முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ஜெயல‌லிதாவை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள். அவர் இருப்பதைக் காட்டிக்கொள்ள அன்றாடம் ஒரு அறிக்கை விட்டாக வேண்டும். அதற்கு பொருள் தேடி எங்கே தான் அவர் போவார்? இன்றைக்கு அவருக்கு கிடைத்தது கொசுதான்!

இருக்கவே இருக்கிறார்கள் கட்சி தொண்டர்கள்! அவரா ஆர்ப்பாட்டம் நடத்தப்போகிறார்? ஏடுகளில் அவர் பெயரில் புகைப்படத்தோடு ஒரு அறிக்கை வெளி வந்துவிட்டது அல்லவா? அதுவே போதும்! எனினும் கொசுக்களை ஒழிப்பதற்கான முயற்சியில் சென்னை மாநகராட்சியும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் கடுமையாக ஈடுபட வேண்டும் எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆனால், இவ்விவகாரம் அவ்வளவு சாதாரணமாகத் தெரியவில்லை, ஏனெனில், உண்மையில் கொசுக்கள் நிச்சயமாக அதிகரித்துள்ளன.

அதைவிட அதிசயமான உண்மை என்னவென்றால், கொசுவத்தி, ஓடோமாஸ் விற்பனை இரண்டு மடங்கிற்கு மேல் பெருகியுள்ளது என்பதேயாகும்!

ஏனெனில், கொசுக்கள் வேண்டுமென்றே அதிகமாக உற்பத்தியாக, சில ரசாயனங்களை பரவியிட்டிருப்பதாகவும், அதனால், அவை வேகமாக வளர்ந்து பரவுவதாகவும் உள்ளன.

அதைவிட, கொசுக்கள் எந்த கொசுவத்தி, திரவம் அல்லது பசை முதலியவற்றிற்கு, சில நாட்களிலேயே அதன் தடுப்புத்தனமை போய்விடுவதால் மறுபடியும் தங்கள் வேலையை ஆரம்பித்து விடுகின்றன.

முன்பு ஃபேன் / மின் விசிரி போட்டால் கொசு வராது. ஆனால் இப்பொழுது, போட்டால் வரும். அதாவது, அவை அந்த அளவிற்கு மனிதனைவிட சிகிக்கிரமாக தங்களை தகவமைத்துக் கொள்கின்றன.

குறிச்சொற்கள்: , , , , , , , ,

3 பதில்கள் to “கொசு: கொசுக்கடி, கருணாநிதி கடி, ஜெயலலிதா கடி!”

 1. vedaprakash Says:

  எல்லாப் போராட்டத்தையும் முடித்து விட்டு கொசுவிடம் வந்துள்ளார் ஜெ. -ஸ்டாலின்

  ————————————-
  ஸ்டாலின் அப்படி சொல்வதிலிருந்தே, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பதுபோல இருக்கிறதே!

  ஒன்றுமே இல்லையென்றால் ஏன்,

  * நாள்தோறும் 1200 மாநகராட்சி தொழிலாளர்களை கொண்டு கொசு ஒழிக்கும் புகை மருந்துகள் அடிக்கப்படுகிறது.
  * 260 கைத் தெளிப்பான்கள்,
  * 100 கை புகை பரப்பிகள்,
  * 30 வாகன புகை பரப்பிகள் மூலம்
  * நாள் தோறும் காலையிலும், மாலையிலும் புகை மருந்து அடிக்கப்பட்டு,

  கொசு ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, என்று பட்டியலிட்டு பதில் சொல்லவேண்டும்?
  —————————————-

  எல்லாப் போராட்டத்தையும் முடித்து விட்டு கொசுவிடம் வந்துள்ளார் ஜெ. -ஸ்டாலின்
  திங்கள்கிழமை, பிப்ரவரி 1, 2010
  http://thatstamil.oneindia.in/news/2010/02/01/stalin-slams-jaya-her-party-s-mosqu.html

  சென்னை: எல்லாப் போராட்டத்தையும் நடத்தி ஓய்ந்து விட்டு தற்போது கொசு ஒழிப்புப் போராட்டத்திற்கு வந்துள்ளார் அதிமுக [^] பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று கிண்டலடித்துள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.

  கூவம் சீரமைப்பு பணிகளை பார்வையிட வந்த மு.க.ஸ்டாலினிடம் கொசு ஒழிப்பு போராட்டம் [^] நடத்தப்போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

  அதற்கு அவர் பதிலளிக்கையில்,

  முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா கொசு ஒழிப்புப் போராட்டம் அறிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். கொசு ஒழிப்புப் பணிகளுக்காக முதல் முறையாக நீர் நிலைகளில் கொசுப் பெருக்கத்தை தடுப்பதற்காக 9 படகுகள் மூலம் நாள்தோறும் கொசு மருந்து அடிக்கப்பட்டு, கொசு உற்பத்தியாகும் லார்வா நிலையிலேயே அழிக்கப்படுகிறது.

  சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளுக்காக அரசு, மாநகராட்சி, தனியார் பள்ளிகளை சேர்ந்த 5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு முதல் முறையாக சுகாதாரத் தூதுவர் அட்டைகள் வழங்கி கொசு ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

  நாள்தோறும் 1200 மாநகராட்சி தொழிலாளர்களை கொண்டு கொசு ஒழிக்கும் புகை மருந்துகள் அடிக்கப்படுகிறது. 260 கைத் தெளிப்பான்கள், 100 கை புகை பரப்பிகள், 30 வாகன புகை பரப்பிகள் மூலம் நாள் தோறும் காலையிலும், மாலையிலும் புகை மருந்து அடிக்கப்பட்டு, கொசு ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  எல்லாப் போராட்டங்களையும் நடத்தி விட்டு, ஜெயலலிதா கடைசியாக கொசு ஒழிப்புப் போராட்டத்திற்கு வந்துள்ளார் என்றார் ஸ்டாலின்.

 2. vedaprakash Says:

  GM mosquito trials raise concern in India
  July 23rd, 2009 – 4:16 pm ICT by IANS Tell a Friend –

  By K. S. Jayaraman

  Bangalore/Chennai, July 23 (IANS) Experiments with genetically modified (GM) mosquitoes planned in India by a British company in a move to find a way to control dengue fever have taken sections of the scientific community by surprise.

  Oxford Insect Technology (Oxitec) Ltd of UK is breeding the GM mosquitoes of aedes aegypti species in a facility provided by its local partner in Padappai village near Chennai. This species spreads dengue fever in India.

  The company claims its patented genetic technology allows generation of only sterile males and releasing millions of these in the open could reduce the wild population through infertile matings, thereby offering a novel way of controlling dengue fever.

  Pushp Bhargava, a biologist and the Supreme Court’s nominee in the Genetic Engineering Approval Committee — the apex regulatory body — says he is worried about experiments with alien strains of GM mosquitoes in a private facility in the absence of specific Government bio-safety guidelines for GM insects. The sub-committee for monitoring the IIBAT’s work is under the National Vector Borne Disease Control Programme under the Health Ministry.

  Bhargava warns it will be disastrous if the released sterile males get back their fertility as a result of random gene mutations. “The probability of such an accident cannot be dismissed when millions of GM mosquitoes are released day-after-day or week-after-week,” he said. He added that fertility could also be restored with terrible consequences, by the antibiotic tetracycline that may be found in soil or water bodies because, according to Oxitec, its GM mosquitoes are designed to stay sterile only as long as its diet does not contain tetracycline.

  http://epaper.dailypioneer.com/ThePioneer/Pioneer/2010/01/31/ArticleHtmls/31_01_2010_009_003.shtml

  More at : GM mosquito trials raise concern in India http://www.thaindian.com/newsportal/sci-tech/gm-mosquito-trials-raise-concern-in-india_100221921.html#ixzz0eR2toV9p

  More at : GM mosquito trials raise concern in India http://www.thaindian.com/newsportal/sci-tech/gm-mosquito-trials-raise-concern-in-india_100221921.html#ixzz0eR2fMSIG

 3. Kuppusamy Says:

  நிச்சயமாக இது பெரிய பிரச்சினைதான்.

  அவர்கள் எல்லாம் மாளிகைகளில் இருக்கிறார்கள். இதைப் பற்றி கவலையில்லை.

  கொசுக்கடி என்பதே என்னவென்று அறிந்திருக்க இருக்கமாட்டார்கள்.

  பிறகென்ன, கொசுக்கடியிலும் அரசியல் நக்கல் பேசுவது?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: