இன்னுமொரு வில் ஹியூம்?

குழந்தைகளை கடத்திய வழக்கு: மத போதகர் கைது
பிப்ரவரி 12,2010,00:00 IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=16209

சோழங்கநல்லூர் பாதிரி கைது: சென்னை:வெளிமாநிலங்களிலிருந்து குழந்தைகளை கடத்தி வந்து கொடுமைப்படுத்திய வழக்கில், குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தவரும், மத போதகருமான முக்கிய குற்றவாளியை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர்.சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் தெரு, பாரதிநகர் 3வது தெருவில், ஒரு வீட்டில் வெளிமாநில குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. செம்மஞ்சேரி போலீசார் அந்த வீட்டில் கடந்த ஜன., 20ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, சிங்கந்தர் சிங், பக்கிம்சிங், லோங்ஷம் நுன்சி சிங் ஆகிய மூவர் மணிப்பூரைச் சேர்ந்த 10 குழந்தைகளை அடைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இக்குழந்தைகளை ராகேஷ், ஹிரோஜித் ஆகிய இருவரும் மணிப்பூரிலிருந்து அழைத்து வந்திருப்பது விசாரணையில் தெரிந்தது.

“ரீச்” காப்பகத்தில் வடகிழக்கு மாநில குழந்தைகள்: மணிப்பூரிலிருந்து அழைத்து வரப்பட்ட குழந்தைகள், முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர், வசந்தா தெருவில் இம்மானுவேல் என்பவர் நடத்தும் ரீச் குழந்தைகள் காப்பகத்தில், 2009ம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தங்கியிருந்தது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது. பத்து மணிப்பூர் குழந்தைகளுடன், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்பட மேலும் ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டனர்.இந்த குழந்தைகள் அனைவரும் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். அக்குழுவினர், குழந்தைகளிடம் பேசியபோது, அவர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததும், குழந்தைகள் காப்பகத்தை நடத்தியவர்களால் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதும் தெரிந்தது.சம்பந்தப்பட்ட குழந்தைகள் காப்பகம் பதிவு செய்யப்படாதது என்பதும் தெரிந்தது. இதையடுத்து, குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் மனோரமா, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் புகார் செய்தார். கடந்த ஜன., 23ம் தேதி குழந்தைகள் நலச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், விசாரணை நடத்தினர்.

Immanuel-Albert-Child-prostitution

Immanuel-Albert-Child-prostitution

ரூ. 10,000/- வீதம் வாங்கப்பட்ட குழந்தைகள் / சிறுவர்கள்: முதற்கட்ட விசாரணையில், ராகேஷ், ஹிரோஜித் சமோம், லோங்ஷம் நுன்சி சிங் ஆகிய மூவரும் மணிப்பூரிலிருந்து 19 குழந்தைகளை சென்னை அழைத்து வந்தது தெரிந்தது. குழந்தைகளின் பெற்றோரிடம் இருப்பிடத்துடன் கூடிய இலவசக் கல்வி வழங்குவதாகக் கூறி, குழந்தைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு அவர்களை சென்னை அழைத்து வந்ததும் தெரிந்தது.சென்னையில் இம்மானுவேல் நடத்தும் ரீச் குழந்தைகள் காப்பகத்தில் அக்குழந்தைகளை விட்டதும் விசாரணையில் தெரிந்தது. அக்குழந்தைகள் காப்பகத்தில் இம்மானுவேல் மற்றும் சிலரால், கடத்தி வரப்பட்ட குழந்தைகள் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். குழந்தைகளுக்கு சரியான உணவு, குடிநீர் வழங்காமல் துன்புறுத்தியதுடன், அடித்து வீட்டு வேலைகளை செய்ய வைத்தனர்.மணிப்பூரிலிருந்து சென்னைக்கு குழந்தைகளை கடத்தி வந்த ராகேஷ், ஹிரோஜித் சமோம், லோங்ஷம் நுன்சி சிங், பக்கிம்சிங் ஆகியோரைக் கைது செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குழந்தைகள் துன்புருத்தப்படன: இம்மானுவேல் மத போதகராகவும் உள்ளார். இம்மானுவேலுக்கு உதவியதாக புரசைவாக்கத்தைச் சேர்ந்த அப்பாவுவின் மகன் ஆல்பர்ட் கருணாகரனை(41) இரு தினங்களுக்கு முன் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான இம்மானுவேல், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு புழல், காவாங்கரை, மீனாட்சி நகரில் ஒரு வீட்டின் அருகே சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் குழந்தைகளை துன்புறுத்தியதையும், கொடுமைப்படுத்தியதையும் இம்மானுவேல் ஒப்புக் கொண்டார்.ஆலந்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இம்மானுவேல், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

குறிச்சொற்கள்: , , , , , ,

ஒரு பதில் to “இன்னுமொரு வில் ஹியூம்?”

  1. சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி! « சமூகத் தீவிரவாதம் Says:

    […] https://socialterrorism.wordpress.com/2010/02/12/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: