தமிழகம் அமெரிக்கா ஆகிவிட்டது!

தமிழகம் அமெரிக்கா ஆகிவிட்டது!

சாதாரணமாக அமெரிக்கச் சிறைகளில் இத்தகைய மோதல்கள் நடக்கும்.

அதனை மையமாக வைத்தே ஹாலிஹுட் படங்கள் நிறைய வெளிவச்ந்துள்ளன.

அந்நிலையில் தமிழகத்தில், சிங்காரச் சென்னையில், புழல் சிறையில் அத்தகைய நிகழ்சி நடந்திருப்பது, நிச்சயமாக தமிழகம் அமெரிக்காவாகி விட்டதையேக் காட்டுகிறது!

கருணாநிதி எப்படி மாபெரும் கட்டிட நிபுணர், வடிவமைப்பு வித்தகர், கட்டிடக் கலைஞர், ராமனையே வென்ற பாலங்கள் கட்டிய பகுத்தறிவாளன்,……………………….என்றெல்லாம் ஆனாரோ, அதே மாதிரியான தகுதியை பெற்றுவிட்டது புழல் சிறை, தமிழகம்…………………!

சிறையில் கைதிகள் மோதல்
http://www.maalaisudar.com/newsindex.php?id=34057%20&%20section=1
Monday, 29 March, 2010   12:10 PM
.
சென்னை, மார்ச் 29:புழல் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்குள்  ஏற்பட்ட மோதலில் ஒரு கைதி படுகாயமடைந்தார். அந்த கைதியை தாக்கியவரை வேறு இடத்திற்கு மாற்றியதற்கு  எதிர்ப்பு தெரிவித்து  100 கைதிகள்   உண்ணாவிரதம் இருந்து வருவதையடுத்து  சிறை அதிகாரிகள் சமரச பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
.

சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் பிளாக் 1 மற்றும் பிளாக்2 என இருவகையான  பிரிவுகள்  உள்ளது.   இதில் பிளாக் 2பிரிவில் வியாசர்பாடி மகாகவி பாரதிநகரைச் சேர்ந்த பிரபல ரவுடியின் சகோதரர் முருகன் என்பவர் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அதே பிளாக்கில் ஒரு வழக்கு சம்பந்தமாக பிச்சை என்பவரும் அடைக்கப்பட்டுள்ளார்.  நேற்றிரவு பிரபல ரவுடியின் சகோதரர் முருகனுக்கும், பிச்சை என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாம். இந்த வாய் தகராறு முற்றி மோதலாக மாறியதாம். இதில் கைதி பிச்சைக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறை அடுத்து சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  காயமடைந்த கைதி பிச்சையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் பிச்சையை அடித்து காயப்படுத்திய கைதி முருகனை பிளாக்2ல் இருந்து மாற்றி மற்றொரு பிரிவில் சிறை அதிகாரிகள் அடைத்தார்களாம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாக் 2ல் உள்ள கைதிகள் சுமார் 100 பேர் சிறை அதிகாரிகள் மற்றும் காவலர் களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன் அங்கிருந்த மதில் சுவர் மேல் 100 கைதிகளும் ஏறி நின்று கொண்டு வேறு இடத்திற்கு மாற்றிய கைதி முருகனை உடனடியாக பிளாக் 2ல் அடைக்க வேண்டும். இல்லையேல் மதில் சுவரில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்வோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.மேலும் இன்று காலை முதல் 100 கைதிகளும் உண்ணாவிரதம் இருந்தனர்.

உடனடியாக சிறை அதிகாரிகள் உண்ணாவிரதம் இருந்து வரும் கைதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.

சிறைக்கைதிகளிடம் பிரச்சினை ஏற்படுத்தும் விஷயங்கள்: சிறைகளில் கைதிகளுக்கு, சிறைக்கட்டுபாட்டு விதிகளுக்குப் புறம்பாக, செல்போன்கள், பீடி, சிகெரெட், மது, போதைப் பொருட்கள்……………….முதலியவை விநியோகிக்கப்படுவது, போலீஸாரும் அதில் உடந்தையாக இருப்பது, சில கைதிகளுக்கு அளவிற்கு அதிகமாக உபசாரம் செய்வது முதலியவைத்தான், சிறைகளிலும் பிரச்சினையைத் தூண்டி விடுகிறது.

குறிச்சொற்கள்: , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: