எரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்!

எரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்!

பிரெஞ்சு நாட்டு சல்லாபம், கொக்கோகம்: பிரெஞ்சு நாட்டுக் காரர்கள் செக்ஸ் விஷயத்தில் கொஞ்சம் வீக்குதான்! பிரபல எழுத்தாளரான அலெக்ஸண்டர் டூமாஸ் என்பவர் எப்பொழுதும் ஐந்தாறு பெண்களுடன் சல்லாபித்தவண்ணம் தான் இருப்பார் என்று தெரிகிறது. சென்னையில் ஈகா தியேட்டரில் “ஸ்பானிஸ் ஃபளை” என்ற படம் 1978ல் திரையிடப்பட்டது. அந்த ஸ்பானிஸ் பூச்சிற்கு ஒரு சக்தி இருக்கிறது. அதனை சாப்பிட்டால் அசாத்யமான செக்ஸ் வந்துவிடுமாம். அவ்வளவுதான் கண்ணில் படும் பெண்களுடன் உடனடியாக உடலுறவு கொள்ள ஆரம்பித்து விடுவார்களாம். ஒருவேளை, எரிக் மார்ட்டினும் அத்தகைய சக்தியைப் பெற்றானா என்று தெரியவில்லை. எரிக் மார்டின் கல்யாணம் செய்து கொண்டான், ஆனால், வாழ்க்கை கசந்தது. விவாக ரத்தானது.

இல்வாழ்க்கை கசந்ததால், அனாதை இல்லம், கொக்கோகம் பிரான்ஸ் நாட்டில் புரூசல்ஸ் பகுதியைச் சேர்ந்த எரிக் மார்டின் (54) புரூசல்ஸ் பகுதியில் ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகள் காப்பகம் நடத்தி வந்தான். அங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் தங்கி இருந்தனர். அதாவது இந்த ஃபெடோஃபைல்கள் எல்லோருமே ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். ஒன்று தேவையானதைத் தேடி செல்வது அல்லது இப்படி காப்பகம் வைத்து நடத்துவது, வளர்ப்பது, அனுபவிப்பது.  அங்கு இருந்த 15 வயது நிரம்பிய இளம் சிறுமிகளைப் பார்த்தப்போது காம இச்சைக் கொண்டான்.  தாங்கமுடியாமல், இளம் மொட்டுகளை தொட்டே விட்டான். ஒன்று, இரண்டு என்று ஒன்பது சிறுமிகளை ஆசைதீரக் கற்பழித்தான். இதனால் புகார் கொடுக்கப்பட்டு, வழக்கு தொடர்ந்து, நீதிமன்|ற தீர்ப்பில் 15 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், முன்னமே குறிப்பிட்டப்படி[1], சிறையிலிருந்து தப்பி, சென்னைக்கு வந்து விட்டான்.

சிங்காரச் சென்னையில் மறைந்து வாழ்தல்: சென்னை, தமிழகம் இப்படி செக்ஸ் கூடாரமாகி வருவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழ் மக்கள் என்றுமே விருந்தோம்புவதில் வல்லவர்கள். வெள்ளைத் தோலைக் கண்டால் கேட்கவே வேண்டாம், சரண்டர் தான். அதிலும் அதிகமாக காசு வரும் என்றல், கேட்கவே வேண்டாம். இவ்வாறுதான், எரிக் மார்டின் எண்.14, நடேசன் தெரு மாதவரத்தில் வீடு வாடகைக்கு எடுத்தான். அந்த பிரெஞ்சுக்காரருடன் ஒத்துப்போக அண்டைவீட்டுக்காரர்களுக்கு நிறையவே பிரச்சினைகள் இருந்தன[2]. சாமியார் மாதிரி தனித்த வாழ்க்கை வாழ்ந்துவந்ததாக கூறுகின்றனர். “அந்த இடத்தையே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆளுக்கு ஆங்கிலம் கூட அவ்வளவாகத் தெரியவில்லை, பிரெஞ்சு மொழியிலேயே பேசிவந்தான்”, என்று ஒரு பெண்மணி கூறினார். இன்னொரு காரணம், “அவன் என்றுமே நேருக்கு நேராக கண்களைப் பார்த்து எங்களுடன் பேசியது கிடையாது. கிருஸ்துமஸ் அன்று தான், “ஹலோ” என்று கூறுவான்”, மற்றபடி யாருடன் பேசமாட்டான்.. எண்.14, நடேசன் தெருவில் இருந்த அவனுக்கு செடி-கொடிகள் மீட்து மட்டும் அலாதியான காதலாம்.

வீட்டைச் சுற்றி செடி-கொடிகளை வளர்த்து மர்ம வீட்டில் வாழ்ந்த காமுகன்: வாடகைக்கு எடுத்ததும் வீட்டைச் சுற்றி பல செடி-கொடிகளை வளர்க்க ஆரம்பித்தான். அவன் தங்கியிருந்த வீடு முழுவதும் செடி-கொடிகள் மண்டி கிடந்தன. அண்டை வீட்டார் கண்டபடி வளர்ந்திருந்த அந்த செடி-கொடிகளைப் பற்றி பலதடவை புகார் செய்துள்ளனர்.  ஆனால், அவற்றை வெட்ட அவன் அனுமதிப்பது இல்லை. வேலைக்காரப் பையனுக்கு சொன்னாலும், அவனை செய்ய விடுவதில்லை. “அவங்க கைகளை வெட்டிக் கொள்ளுங்கள் என்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள்”, என்று அந்த பையனிடம் சொல்வானாம். பானைகளில்பலவித செடிகள், தூண்கள், சுவர்கள் கூட கொடிகளால் பின்னப்பட்ட நிலையில் இருந்தன. வரண்டா மட்டுமல்லாது, மேலும், மாடியிலும் கூட கொடிகளை வளர்த்து படரவிட்டிருந்தான்.

மாடிவீட்டு கொட்டாயில் அயல்நாட்டவர்களுக்கு விருந்து; மாடியில் ஒரு ஓலைக்கொட்டாய் போட்டிருந்தான். அதில்தான் தன்னுடைய அயல்நாட்டு விருந்தாளிகளை உட்காரவைத்து காபி கொடுப்பான். அயல்நாட்டு விருந்தாளிகள் அவன் வீட்டிற்கு, குறிப்பாக கிருஸ்துமஸ் சமயத்தில் அதிகமாகவே வருவார்கள். அதென்ன கிருஸ்துமஸ் கூட்டம்? ஒருவேளை டான் பரவுன் எழுதியுள்ளது போல யாதாவது நடக்குமோ என்னமோ? மற்றபடி, அந்த வீட்டில் யாருமே இல்லாது போல இருக்கும். விளக்குகள் இப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். அவை எப்பொழுதாவது தான் அணைக்கப்படும் அல்லது அணைக்கப்பட்டதே கிடையாது எனலாம்.

வெளியே சென்று வேலை செய்தல்; மற்றவர்களைப்போல இல்லாமல், இந்த காமுகன், காலை 11 மணிக்கு வெளியில் செல்வான், பிறகு மாலை தான் வருவான். அடிக்கடி தான் வைத்திருக்கும் பிரிமியர் காரில் எங்கோ சென்று வருவான். அயல்நாட்டு பயணிகளுக்கு, குறிப்பாக பிரெஞ்சுநாட்டவருக்கு கெயிடாகவும், பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தும் சம்பாதித்து வந்தான். அவன் ஒரு வேலைக்கரப் பையனையும், பெண்ணையும் வைத்திருந்தான்[3]. அதைத்தவிர அடையாளம் இல்லாத / பெயர் சொல்லப்படாத ஒரு அண்டைவீட்டுக்காரரும் உதவி வந்ததாகத் தெரிகிறது. வீட்டின் சாவிகளை தானே வைத்துக் கொள்வான். கேட்டின் சாவிகளை மட்டும் பணிப்பெண், வேலைக்காரப் பையனிடம் தந்துவந்தான். குழந்தைகளுடன் பேசியதையோ, நட்பாக இருப்பதையோ அண்டையார் என்றும் பார்த்ததில்லை[4].

வேதபிரகாஷ்

© 18-11-2010


[1] வேதபிரகாஷ், சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்!, https://socialterrorism.wordpress.com/2010/11/17/chennai-becomes-haven-for-fugitives-eric-martin/

[3] Cerise Negulici, Child sex abuser of France apprehended in Chennai,  Wed, 11/17/2010 – 05:28

http://frenchtribune.com/teneur/101981-child-sex-abuser-france-apprehended-chennai

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “எரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்!”

  1. K. Venkatraman Says:

    It is ridiculous that these pedophiles, fugitives and international criminals to take shelter in and around Chennai and live for years together, but, the wonderful police would know about them only when the Interpol sends notices / red note alerts etc.

    That the people involved have been aiding and abetting such criminals is very easy to understand.

    Therefore, there is a reason to doubt how they aid and abet?

    What they get in reciprocation?

  2. M. Nachiappan Says:

    தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு செக்ஸ் வேட்கை அதிகமாகி விட்டது போல் இருக்கிறது. செக்ஸ் என்றாலே சென்னையில் உள்ளவர்களுக்கு ஜாலித்தான் போல இருக்கிறது.

    ஒருவேளை தமிழர்கள் சங்ககாலத்திற்கு சென்று விட்டார்கள் போல இருக்கிறது. ஆகையால்தான் அதே போல ரோமாபுரி, ய்வனபுரி என்று அங்கிருந்து இப்படி யவனர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள். ஒருவேளை அப்பொழுது போல, மதுவையும், மாதுகளையும் இறக்குமதி செய்து தருவார்களோ என்னவோ?

    அவர்கள் எப்படி, இந்த அளவிற்கு சென்னையில் வந்து தைரியமாக தங்குகிறார்கள்? அக்காலத்தில், தமிழர்கள் நன்றாக குடித்துவிட்டு, பரத்தையர் வீடுகளில் சல்லாபத்தில் இருப்பார்களாம். காசில்லை என்றால் தூக்கி தெருவில் விட்டுவிடுவார்களாம். அந்த நிலைக்குத்தான் தமிழர்கள் உள்ளார்களா? இந்த யவனர்களும் அதே மாதிரித்தான் இருக்கிறார்களா?

    ருசி கண்ட பூனைகள் எப்படி இத்தனை வருடங்கள் சும்மா இருந்திருக்க முடியும்?

    வில் ஹியூம் போல பாலைத்தேடி சென்றிருக்கவேண்டும் அல்லது பாலை வாங்கி குடித்திருக்க வேண்டும். அப்படி பாலை வாங்கியிருந்தால், வாங்க யார் உதவியிருக்க முடியும்?

    போலீஸாருக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? அப்படியிருக்கும்போது, விசா இல்லாமல் இங்கு தங்கியிருந்ததை தவிர, வேறெந்த குற்றமும் செய்தது போல தெரியவில்லை என்று எப்படி கூறுவர்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: