பெண்மையைத் தாக்குவது, பிராமணர்களை தூஷிப்பது, பாலியல் ரீதியில் வார்த்தை தீவிரவாதத்தில் ஈடுபடுவது முதலியன தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விடுமா?

பெண்மையைத் தாக்குவது, பிராமணர்களை தூஷிப்பது, பாலியல் ரீதியில் வார்த்தை தீவிரவாதத்தில் ஈடுபடுவது முதலியன தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விடுமா?

 

சினிமா பாடகியிடம் சமூக வலைதளத்தில் வக்கிர பேச்சு: உதவி பேராசிரியர் உட்பட இருவர் கைது[1]: சினிமா பாடகி சின்மயி ஸ்ரீபாதவிடம், சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசி, மன உளைச்சல் ஏற்படுத்திய, “நிப்ட்’ உதவி பேராசிரியர் உட்பட, இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர். “கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற சினிமா படத்தில் இடம்பெற்ற, “ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் சின்மயி. தேசிய விருது உள்ளிட்ட, பல்வேறு விருதுகளை பெற்றவர். இவர், கடந்த, 18ம் தேதி, தாய் பத்மாசினியுடன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம், 2 புகார் மனுக்கள் அளித்தார். அதில், “சமூக வலைதளமான, “டுவிட்டரில்’, என் வலைதளத்திற்குள் புகுந்து, சில சமூக விரோதிகள், மிக கேவலமாக, ஆபாச வார்த்தைகளை பதிவு செய்கின்றனர். . ஆறு பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது.  நான், இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக சித்தரித்து, மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். என் தாய்க்கும் மிரட்டல் வந்துள்ளது. என் புகழுக்கு களங்கம் கற்பிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரியிருந்தார்.
கல்லூரி உதவி பேராசிரியர் சரவணகுமார் பெருமாள் கைது: சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க, கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். உதவி கமிஷனர், ஜெகபர்சாலி தலைமையிலான தனிப்படை போலீசார், பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்து[2], சென்னை, “நிப்ட்’ (தேசிய பேஷன் தொழில்நுட்ப கழகம்) கல்லூரி உதவி பேராசிரியர் சரவணகுமார் பெருமாளை, 37, நேற்று கைது செய்தனர்[3]. ஐ.பி. முகவரியைத் தேடிப் பார்த்ததில்[4] சென்னை, நங்கநல்லூரை சேர்ந்த இவர், மேலும் சிலருடன் சேர்ந்து, சமூக வலைதளத்தில், ஆபாசமாக பேசி பதிவு செய்தது உறுதி செய்யப்பட்டது[5]. பொறியியல் பட்டதாரியான அவர் தனது வீட்டிலிருந்து அவ்வாறு செய்துள்ளார். பெருமாள் தனது மொபைல் மூலம் அத்தகைய ஆபாச மெயில்களை அனுப்பியதை ஒப்புக்கொண்டார்[6]. இவர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கும்பலில் தொடர்புடைய, ராஜன் என்பவரை போலீசார், கோவையில் கைது செய்துள்ளனர். அவர், கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இன்று சென்னை கொண்டு வரப்படுகிறார். மேலும், நான்கு பேரை தேடி வருகின்றனர்[7]. இதுகுறித்து, கமிஷனர் ஜார்ஜ் கூறுகையில், “”சைபர் கிரைம் பிரிவில், தடயவியல் பரிசோதனைக்கான போதிய கட்டமைப்பு உள்ளது. எந்த மாதிரியான, சைபர் குற்றங்களில் ஈடுபட்டாலும், அவர்களை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க முடியும். தயக்கமின்றி பொதுமக்கள் புகார் செய்யலாம்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

 

வீர-சூர நடையில் நீதிமன்றத்தில் தோன்றிய சரவணகுமார் பெருமாள்: சரவணகுமார் பெருமாள் என்ற குற்றவாளியைக் கைது செய்து, நீதிமன்றத்தில் கொண்டுவந்தபோது, வீர-சூர நடையில் கம்பீரமாக தோன்றியது கண்டு வியப்பாக இருந்தது. ஏதோ சாதிக்க முடியாதத்தை சாதித்து விட்டது போல வீரநடைப் போட்டுக் கொண்டு, இருமாப்புடன் முகத்தை வைத்துக் கொண்டது வேடிக்கையாகவும் இருந்தது. தான் செய்த குற்றத்திற்காக வெட்கப்படாமல், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது கூட நினையாமல், இப்படி தோரணையில் இருப்பது எதனைக்காட்டுகிறது என்று தெரியவில்லை.
படித்தவர்கள் வக்கிரபுத்தியுடன் இணைத்தள தீவிரவாதத்தில் ஈடுபடுவது: இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது[8]: “டிவிட்டர் இணையதளத்தில் தன்னைப் பற்றி தரக்குறைவான வகையில் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்றனர் என்று திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். மேலும் அந்த புகாரில், ட்விட்டர் இணையதளத்தில் தன்னைப் பற்றி சிலர் ஆபாசமாக தகவல்கள் பரப்பி வருகின்றனர், இது போன்ற கருத்துகளைக் கூறுபவர்களை ட்விட்டரில் இருந்து துண்டித்தாலும்,  மீண்டும் வேறு பெயர்களில் ஆபாச கருத்துகளைக் கூறுகின்றனர்[9]. மேலும் அவர்கள் ஆபாச படங்களையும் அனுப்புகின்றனர்”, என்றும் குறிப்பிட்டிருந்தார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கும்படி அவர் புகாரில் வலியுறுத்தியிருந்தார். இந்த புகாரை விசாரிக்குமாறு பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ், சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். சைபர் குற்றப்பிரிவு போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். இதில் சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் சரவணக்குமார் உள்பட 6 பேர்தான்[10] சின்மயிக்கு இணையதளத்தில் தொந்தரவு கொடுப்பது என தெரியவந்தது. இதையடுத்து சரவணக்குமாரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

 

இணைதளங்கள் நியாயப்படுத்தும் வக்கிரம்: “தமிள்-ஒன்-இந்தியா” என்ற இணைதளம் இவ்விஷயத்தில் செய்தியை வெளியிடாமல், தன்னுடைய கருத்தை நியாயப்படுத்தி, தீர்ப்பையே வெளியிட்டுள்ளது தெரிகிறது. இதோ, அந்த இணைதளம் வெளியிட்டுள்ளது: “ப்ளாக், ட்விட்டர், பேஸ்புக் என சின்மயி கால்வைத்த இடமெல்லாம் சூடான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. ‘யாரும் தானாக முன்வந்து இவரை அவதூறாக எழுதுவதில்லை. மாறாக இவர் ஒரு விஷயத்தை எழுதப் போய், அதற்கு எதிர்வினையாக இவர் மீது குற்றச்சாட்டுகள் குவிய, ஒரு கட்டத்தில் அது ஆபாச கமெண்டுகளாக மாறியிருக்கிறது,’ என்பதுதான் இவரை நீண்ட காலமாக சமூகத் தளங்களில் கவனித்து வருபவர்கள் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் தன்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் வக்கிரமாக சிலர் எழுதி வருவதாக சில தினங்களுக்கு முன் போலீசில் புகார் கொடுத்தார் சின்மயி. உடனே சின்மயிக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியே வேலைப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. இந்தப் பெண் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சாதி துவேஷத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளதுதான் இப்போது பலரையும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது”.

 

இயேசு பிரானையே குற்றம்சாட்டுவதாகத்தான் சின்மயி கருத்து உள்ளதாக இணையத்தில் சின்மயிக்கு எதிரானோர் அணி திரள ஆரம்பித்துள்ளனர்: தொடர்ந்து அது வெளியிடும் விவரம், மதப்பிரிரச்சினையாக்க வேண்டும் என்ற எண்ணமும் தெரிகிறது. “தனது ட்விட்டரில் ‘நாங்கள் மீன்களை துன்புறுத்துவதில்லை, வெட்டி கொல்வதுமில்லை’, என கூறியிருக்கிறார் சின்மயி என்பதுதான் குற்றச்சாட்டு. இது மீன் உண்பவர்களை மட்டுமல்ல, மீன் பிடித்தலையே தொழிலாகக் கொண்டுள்ள மீனவர்களையும் அவமதிப்பதாகும் என இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுமட்டுமில்லை.. “மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது?” என்றும் சின்மயி கூறியிருந்தாராம்[11]. ஈழத்து மக்களை, மீனவர்களை அவமானப்படுத்தியதோடு, மீனை உணவாகத் தந்து வறியோரின் பசிபோக்கிய இயேசு பிரானையே குற்றம்சாட்டுவதாகத்தான் சின்மயி கருத்து உள்ளதாக இணையத்தில் சின்மயிக்கு எதிரானோர் அணி திரள ஆரம்பித்துள்ளனர்[12], என்று முடிக்கிறது. அப்படியென்றால் கிருத்துவர்கள் இதில் நுழைந்து “குளிர் காய” விரும்புகிறார்களா?

 

இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள நீண்ட விளக்கம்[13]….: இத்தனையையும் கூறிவிட்டு, சின்மயி அளித்த விளக்கம் என்று பிறகு வெளிட்டுள்ளது, “ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள். பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.

 

ஐயங்கார் குடும்பம்: பிராமண துவேஷத்தைக் காட்டும் வகையில் இப்படி தலைப்பிட்டுத் தொடர்கிறது[14].சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா. ராகவ ஐயங்கார், முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்! உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம். இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்”.

 

வரவேற்றார்கள், பேசினார்கள், விவாதித்தார்கள்: “என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள். திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள்[15]. என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி #TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள். எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன்”.

 

தொடர் கீச்சில் இணைய மறுத்தேன்: பல பெயர்களில் (@rajanleaks, @Senthilchn, @Asharavkay, @losongelesram, @vivajilal and @thyirvadai.) ஜாதி துவேஷம், காழ்ப்பு முதலிய நோக்கில் பதிவுகள் செய்யப்பட்டன[16]. “இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா? இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா?” “இலங்கைத் தமிழர்கள்” என்ற பெயரில் பலர், பலவிதமாக வியாபாரம் செய்து வருகிறார்கள். பிரபாகரன் இறந்த பிறகும், பிரபாகரன் பெயரை வைத்துக் கொண்டு, அத்தகைய வியாபாரம் நடந்து வருகிறது. அத்தகைய விவகாரங்களில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல குழுக்கள் பலவிதங்களில் வேலை செய்து வருகிறது. இணைதளங்களில் விவரமாக, ஆதாரங்களுடன், சிலர் எழுதி வந்தால், அவை தமது சுயநலவியாபாரத்திற்கு எதிராக உள்ளது என்று அவர்களை மிரட்டும் வேலையில் இக்குழுக்கள் உள்ளன. ஏதாவது ஒரு உண்மையினை எடுத்துக் காட்டினால், உடனே, இவர்கள் பல போலிப் பெயர்களில், ஈ-மெயில்-ஐடிக்களுடன் திட்ட ஆரம்பித்து விடுவார்கள். பிரச்சினையை திசைத் திருப்பி வம்பிற்கு இழுப்பார்கள். மசியவில்லை என்றால் ஒன்று மிரட்டுவார்கள் அல்லது தனிப்பட்ட முறையில் ஆபாசமாக எழுத ஆரம்பித்து விடுவார்கள்.

 

சாப்பிடுவதும் இல்லை, தொட்டியில் வளர்ப்பதும் இல்லை: இதோ அத்தகைய திசைத் திருப்பும் யுக்தி வெளிப்படுக்லிறது – “அடுத்து “நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லை. நான் சைவம்” என்று பதில் கூறினேன். “மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கிறதே” என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, “நான் மீன் சாப்பிடுவது இல்லை, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter” என்று ஒரு “:)” போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hash டேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்! ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன். மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் @rajanleaks. இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கத் தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன்”.

 

அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு: பிராமண எதிர்ப்பு-துவேஷம் என்ற ஒரே சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு வன்முறையை கிளப்பும் எண்ணமும் வெளிப்படுகிறது – “பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், ‘FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி‘ என்று பிரச்னை கிளப்பப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று”.

 

என் தாய் வருந்தினார்: அமைதியாக – பொறுமையாக இருப்பவர்களைத் துன்புறுத்தும் போக்கும் வெளிப்படுகிறது – “என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு. இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது”.

 

என் அம்மாவையும் திட்டினார்கள்: தமிழ்-தமிழ் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை குரூரமாக வசைப்பாடுவது, தூஷிப்பது, முதலிய வெளிப்பாடுகளும் தெரியப்படுல்கின்றன – “இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள். அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம். இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது. இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள். இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்”.

 

நாங்கள் சொல்வதைக் கேட்டால் தான் நீ தமிழன், இல்லையென்றல், நீ தமிழ் விரோதி: இத்தகைய ரீதியில்தான், தமிழ்-சித்தாந்திகள், திராவிடவாதிகள், நாத்திகத் தமிழர்கள், இந்து-விரோதிகள், இந்திய-விரோதிகள் முதலியோர் செயல்பட்டு வருகின்றனர். எது இந்தியாவிற்கு எதிராகப்போகும் என்றாலும், உடனடியாக அதில் குதிக்கும் போக்கைக் கொண்டுள்ள மற்றவர்களும், இதில் சேர்ந்து கொள்வார்கள். என்ன நடந்தாலும், யார் என்ன செய்தாலும், இலங்கைப் போராளிகளை – எல்.டி.டி.ஐ இயக்கத்தை ஆதரி, இல்லையென்றால், நீ தமிழ்-துரோகி, என்ற மனப்பாங்கில் உள்ளனர். இப்படி பிடிவாதமாக, தங்கள் கருத்துக்களை மிரட்டி, உருட்டி, திட்டி, தீவிரவாதம் பேசி திணிப்பது ஏன்? ஒப்புக்கொண்டால் எங்கள் அபிமானி, ஆதரவாளி, நண்பன் இல்லையென்றால், விமர்சனம் செய்தால், மாறாக ஏதாவது உண்மையினை வெளியிட்டாலும், நீ துரோகி, விரோதி, கைக்கூலி, என்று வசைப்பாடுவது தான் இவர்கள் தொழிலாக உள்ளது.

 

வேதபிரகாஷ்

23-10-2012


[1] தினமலர், பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2012,02:07 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=571320

[2]  The police registered a case under Sections 66, 66A of the Information Technology Act, 2005 and Section 4 of the Prevention of Women Harassment Act.

[5] Tracing his IP address, we found that his real name was Sarvana Kumar Perumal, an architecture graduate. We found that he has tweeted from his mobile and desktop at home.

[6] After investigation, the Cyber Crime Cell of Chennai Police arrested Saravana Kumar Perumal. The man reportedly confessed to having committed the crime by using his mobile phone. http://www.indianexpress.com/news/prof-arrested-for-sexual-harassment-of-singer-chinmayi-sripada-on-twitter/1020945/

[14] 21-10-2012 மற்றும் 22-10-2012 இரண்டு நாட்களாக “கேப்டன் டிவி”யில் “ராமர் சேது” பற்றி இருவர் – ஆதரிப்பவர் மற்றும் எதிர்ப்பவர் விவாதிப்பதில் தாடி வைத்துள்ள ஒருவர், சம்பந்தமே இல்லாமல், சாதி, நாத்திகம் போன்ற விஷயங்களை நுழைத்து திசைத் திருப்புவதையும், அதற்கு பேட்டி காண்பவர் அல்லது வொவாதத்தை நடத்துபவரே அவருக்கு சாதகமாக கேள்விகள் கேட்பதும் ஊடகக்காரர்களின் பாரபட்சத்தையும், அவர்களது போக்கையும் வெளிக்காட்டுகிறது.

[16] The comments were posted by twitter handles @rajanleaks, @Senthilchn, @Asharavkay, @losongelesram, @vivajilal and @thyirvadai.

http://www.thehindu.com/news/cities/chennai/cops-clip-tweeters-wings-for-harassing-singer/article4023339.ece

பெண்களின் நிலை

பெண்மையைத் தாக்குவது, பிராமணர்களை தூஷிப்பது, பாலியல் ரீதியில் வார்த்தை தீவிரவாதத்தில் ஈடுபடுவது முதலியன தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விடுமா?

சினிமா பாடகியிடம் சமூக வலைதளத்தில் வக்கிர பேச்சு: உதவி பேராசிரியர் உட்பட இருவர் கைது[1]: சினிமா பாடகி சின்மயி ஸ்ரீபாதவிடம், சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசி, மன உளைச்சல் ஏற்படுத்திய, “நிப்ட்’ உதவி பேராசிரியர் உட்பட, இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர். “கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற சினிமா படத்தில் இடம்பெற்ற, “ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் சின்மயி. தேசிய விருது உள்ளிட்ட, பல்வேறு விருதுகளை பெற்றவர். இவர், கடந்த, 18ம் தேதி, தாய் பத்மாசினியுடன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம், 2 புகார் மனுக்கள் அளித்தார். அதில், “சமூக வலைதளமான, “டுவிட்டரில்’, என் வலைதளத்திற்குள் புகுந்து, சில சமூக விரோதிகள், மிக கேவலமாக, ஆபாச வார்த்தைகளை பதிவு செய்கின்றனர்.  ஆறு பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது.  நான், இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக சித்தரித்து, மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். என் தாய்க்கும் மிரட்டல் வந்துள்ளது. என் புகழுக்கு களங்கம் கற்பிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரியிருந்தார்.

கல்லூரி உதவி பேராசிரியர் சரவணகுமார் பெருமாள் கைது: சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க, கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்…

View original post 1,749 more words

3 பதில்கள் to “பெண்மையைத் தாக்குவது, பிராமணர்களை தூஷிப்பது, பாலியல் ரீதியில் வார்த்தை தீவிரவாதத்தில் ஈடுபடுவது முதலியன தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விடுமா?”

  1. John Williams Says:

    It is really intriguing as to how an educated fellow could stoop down to suxh a level to harass a female singer through the social network, just because he is a brahmin.

    It is sickening to understand the psyche of such Dravidians, who follow the path of fascism.

    Ironically, they used to accuse others for following fascism, but in reality, the dravidian ideologists have proved many times that –
    # they have no tolerance towards others,
    # they never listern to others,
    # they never respect the views of others,
    # they never respect the entiments of others and so on.

    And these are the excat characters and qualities of fascists.

  2. M. Thenmozhi Says:

    பாடகி சின்மயி தொடர்ந்த வழக்கு : கல்லூரி இணை பேராசிரியருக்கு ஜாமீன்
    வெள்ளிக்கிழமை, 2, நவம்பர் 2012 (8:50 IST)
    http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=85360

    பின்னணி பாடகி சின்மயியிடம், சமூக வலை தளத்தில், ஆபாசமாக பேசியதாக, தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட, இணை பேராசிரியருக்கு, சென்னை, எழும்பூர் கோர்ட், நிபந்தனை ஜாமின் வழங்கியது.

    சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம், சினிமா பாடகி சின்மயி, அளித்த புகாரில், “சமூக வலை தளமான, “டுவிட்டரில்’ என் வலை தளத்துக்குள், சிலர் புகுந்து, ஆபாச வார்த்தைகளை பதிவு செய்கின்றனர்.

    இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கூறியுள்ளார்.

    இந்தப் புகாரை தொடர்ந்து, சென்னை, “நிப்ட்’ கல்லூரியின் இணை பேராசிரியர், சரவணகுமார் பெருமாள் என்பவரை, கடந்த மாதம், 22ம் தேதி, சைபர் கிரைம் போலீசார், கைது செய்தனர்.

    ஜாமின் கோரி, எழும்பூர் கோர்ட்டில், சரவணகுமார், மனுத் தாக்கல் செய்தார். மனுவை, தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நசிர் அகமது விசாரித்தார். சரவணகுமார் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், ஆஜரானார். சரவணகுமாருக்கு ஜாமின் வழங்கி, மாஜிஸ்திரேட் நசிர் அகமது உத்தரவிட்டார். மறுஉத்தரவு வரும் வரை, புலனாய்வு அதிகாரி, முன், தினசரி ஆஜராக வேண்டும், என, நிபந்தனை விதிக்கப்பட்டது.

  3. பிராமணாள் கபே மூடப்பட்டது – நள்ளிரவில் காலிசெய்யப் பட்டது – பார்ப்பனர் பயந்து விட்டாரா, மிர Says:

    […] [9] https://socialterrorism.wordpress.com/2012/10/23/410-professor-arrested-for-harassing-tamil-playback-… […]

M. Thenmozhi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி