பத்மா முதலியார், நாடார் மரத்தொட்டி, நாயர் டீ ஸ்டால், செட்டியார் மெஸ், முதலியார் கடை, தேவர் ஹோடல், ஐயங்கார் பேக்கரி, ஹலால் மாமிசக் கடை, பிராமணாள் கபே!

பத்மா முதலியார், நாடார் மரத்தொட்டி, நாயர் டீ ஸ்டால், செட்டியார் மெஸ், முதலியார் கடை, தேவர் ஹோடல், ஐயங்கார் பேக்கரி, ஹலால் மாமிசக் கடை, பிராமணாள் கபே!

ஜாதிகளை ஒழிப்போம் என்று சாதிகளைப் பெருக்கிய திராவிடத்துவ ஞானிகள்: ஜாதியில்லை என்று சொல்லிக்கொண்டு சாதிகளைப் பெருக்கிக் காட்டிப் பட்டியல்களை நீட்டிக் கொண்டிருப்பது திராவிடத்துவத்தில் தான்! இதனை திராவிடத்துவவாதிகள் மாபெரும் சாதனையென்றும் பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறார்கள்[1]. ஜாதிகளை ஒழிக்க அம்பேத்கார் பாடுபட்டார், ஆனால், அவர் பெயரைச் சொல்லிக் கொண்டே சாதித்துவத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது பெரியார் பெயரை வைத்துக் கொண்டு திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் பாசறை, என்று பற்பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் ஜாதி-எதிர்ப்பு என்ற பெயரில் அப்பாவி பிராமணர்களைத் தாக்கி வருகின்றனர்.

ஜாதி-எதிர்ப்புப் போர்வையில் பிராமணர்கள் தாக்கப்படுவது: பழைய மாம்பலத்தில் அயோத்தியா மண்டபத்தின் வாசலில் இரு பிராமணர்களைத் தாக்கி, கத்தியால் வெட்டியதை நினைவில் கொள்ள வேண்டும். பூணூலை அறுக்கிறேன் என்று நூற்றுக் கணக்கான பிராமணர்கள் தாக்கப் பட்டிருக்கிறார்கள். அதில் “தி ஹிந்துவை”ச் சேர்ந்த கணபதி என்பவரும் அடக்கம். சம்பந்தமே இல்லாத ஒரு ராகவேந்திரர் மடத்தில் நுழைந்து விக்கிரங்களை உடைத்து, அசிங்கம் செய்த போது அங்கிருந்த ஒரு பிராமணர் அழுது புலம்பியதை நாளேடுகளில் பார்த்திருக்கலாம். இப்படி பிராமணர்கள் என்றாலே கிண்டல் செய்வது, அவதூறு பேசுவது, கொச்சையாக வார்த்தைகளை வீசுவது முதலியன பொது இடங்களிலிருந்து, பத்திரிக்கைகள், சினிமாக்கள், ஊடகங்களில் அதிகமாகவே இருந்து வருகின்றன. இபோழுது கூட, சின்மயி ஸ்ரீபாத என்ற தமிழ் சினிமா பாடகி அத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். கைது செய்யப்பட்டப் பிறகும், குற்றவாளிகள் சமரசம் செய்து கொள் என்று மிரட்டி வருகின்றனர்.

பிராமணாள்கஃபேயைத் தொடங்கிய கிருஷ்ண ஐயரும் கிருத்துவப் பிரசங்கம் செய்யும் மணி ஐயரும்: ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ண அய்யர் என்பவர் பிராமணாள் கஃபே என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார்.  ஸ்ரீரங்கத்தில் 34/24, பாவை டவர்ஸ், ஈ.வி.எஸ். ரோட் என்னும் முகவரியில் கிருஷ்ணன் என்பவர்  நடத்தி வரும் ” ஸ்ரீ கிருஷ்ணையர்  ஹோட்டல்  பாரம்பரிய பிராமணாள் கபே “என்னும் பெயரில்  6 மாதங்களாக நடைபெறுகிறது[2]. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பலத்த எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர் என 2012 அக்டோபர் 12ம் தேதி நக்கீரன் இதழில் செய்தி வெளியானது.  இந்த நிலையில் பெரியார் காலத்தில் அவரால் போராடி மூடப்பட்ட “பிராமணாள் கஃபே” தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தொகுதியான ஸ்ரீரங்கத்தில் திடீரென்று முளைத்திருப்பது திராவிடர் கழகத்தில் உள்ளவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது[3] என்றும், இதனால் அந்த ஹோட்டல் பெயரை அழிக்கும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் என்றும், அந்த இயக்கத்தின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் அறிவித்திருந்தார். ஆனால், அந்த “முரளி கபே”விற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்ததே.
பிராமணாள் ஓட்டல் பெயர் அழிப்பு போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருவரங்கம் பேருந்து நிலையம் அருகில் “பிராமணாள் ஓட்டல் பெயர் அழிப்பு போராட்டம்” நடத்துவோம் என்று இரண்டு பக்க பிட்நோட்டீஸ் கொடுத்தது. இதன்படி இன்று (20.10.2012) காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பிருந்து ஊர்வலகமாக புறப்பட்டனர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர். இதில் போலீசாருக்கும், ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 150 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், பிராமணாள் கஃபே பெயரை நீக்காமல் விடமாட்டோம் என்றும் கோவை ராமகிருஷ்ணன் கைது செய்யப்படும் முன் செய்தியாளர்களிடம் கூறினார்[4].

வர்க்கப் போராட்டமா, ஆரிய-திராவிட[5] போராட்டமா?: ஸ்ரீரங்கத்தில் ஒரு பார்ப்பனர், “பிராமணாள் உணவு விடுதி” என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு காவல்துறையிடம் கழக சார்பில் ஒரு பெரும் பகுதி சமுதாயத்தை ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தும் இந்த ‘பிராமணாள்’ பெயரை அகற்ற வேண்டும் என்று புகார் தரப்பட்டது. ஆனாலும், ஓட்டல் நடத்தும் பார்ப்பனர், தனக்கு ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் ஆதரவாக இருப்பதாக ஆணவத்துடன் பேசி வருகிறார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியாக இருப்பதால் முதல்வர் பார்ப்பனர் என்ற அடிப்படையில் தமக்கு அரசு அதிகாரத்தின் ஆதரவு இருக்கும் என்ற இறுமாப்பில், ‘பிராமணாள்’பெயர்ப் பலகையை அகற்ற முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறார். ‘தேவர்’, ‘நாயுடு’ என்ற பெயரில் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் இருப்பதை இந்தப் பார்ப்பனர் சுட்டிக் காட்டுகிறார்[6]. இவை சாதிப் பெயர்கள்; இந்தப் பெயர்களுக்கும் தடைப் போட வேண்டும் என்பதே நமது கருத்து. பெரியார் நூற்றாண்டு விழாவின்போது முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சாலைகளுக்கு இருந்த சாதிப் பெயர்களை முழுமையாக அரசு ஆணையின் பேரில் நீக்கப் பட்டதை நினைவுபடுத்துகிறோம்.

வர்ணத்தை ஆதரித்த காந்தியும், ஜாதிகளை எதிர்த்த பெரியாரும், சாதிகளை பெருக்கி வளர்க்கும் திராவிடர்களும்: வர்ணம் என்பது மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டது, மஹாத்மா காந்தி ஆதரித்தது. ஆனால், முதலியார், செட்டியார், நாயக்கர், நாயர் என்று சாதிகளை தங்களது தலைவர்களுடன் அடையாளம் காட்டிக் கொண்டு அரசியலில் லாபத்தை ஈட்டியது திராவிடக் கட்சிகள். “அண்ணாதுரை முதலியார்” என்று போஸ்டர்களை ஒட்டியதை திராவிடர்கள் இப்பொழுது மறந்திருக்கலாம். இருப்பினும் அவர்கள் வாதிப்பது இவ்வாறாக உள்ளது, “ஆனால், இப்பொழுதோ, ‘பிராமணாள்’ என்பது ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினரைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக, ‘மனு சாஸ்திரம்’ கூறும் நான்கு வர்ணப் பிரிவில் மேலானவர்கள் ‘பிரம்மா’வால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறப்படும் ‘பிராமணர்’ என்ற பிரிவை அங்கீகரிக்கும் சொல். இந்தப் ‘பெருமை’யை ‘பிராமணர்கள்’ கூறிக் கொண்டால், அதனால் மற்றவர்களுக்கு என்ன சங்கடம் என்ற கேள்வி எழக்கூடும். ஒருவன் தன்னை “பிராமணன்” என்று அடையாளப்படுத்துவதன் வழியாக ஏனைய பெரும் பகுதி உழைக்கும் மக்களை “சூத்திரர்கள்” என்று அறிவிக்கிறார்கள் என்பதுதான், இதில் அடங்கியுள்ள முக்கியப் பிரச்சினை. “வறுமைக் கோட்டுக்குக் கீழானவர்கள்” என்று அரசு, ஒரு புள்ளி விவரம் எடுக்கிறது என்றால், வறுமைக் கோட்டுக்கு மேலானவர்கள் இருக்கிறார்கள் என்பது எப்படி அர்த்தமாகிறதோ அதே போன்றுதான் இதுவும். அரசு கூட மக்கள் தொகையை சாதி வாரியாகக் கணக்கிடுகிறது. அது வேறு. ஆனால், அரசாங்கமே ‘பிராமணர்’, ‘சூத்திரர்’ என்ற வர்ணத்தின் அடிப்படையில் கணக்கிடுவது இல்லை. காரணம், ‘பிராமணன்’, ‘சூத்திரன்’ என்ற வர்ண பேதம் பெரும்பான்மை மக்களான சூத்திரர்களை “பார்ப்பனர்களின் தேவடியாள் மக்கள்” என்று பறைசாற்றுகிறது“.

மனுவைத் திரித்துக் கூறும் திராவிட சித்தாந்திகள்[7]: திராவிட சித்தாந்திகள் இக்காலத்திலும், இப்படி மனுவைத் திரித்துக் கூறி விளக்கம் அளித்து துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘மனு சாஸ்திரம்’ என்ன கூறுகிறது?

 • “அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளிலிருந்து உண்டான பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் (செயல்களை) தனித்தனியாகப் பகுத்தார். (அத்தியாயம் 1; சுலோகம் 85). [இப்படி குறிப்பிட்டிருந்தாலும் அவ்வாறில்லை என்பது வேடிக்கை – இந்த சுலோகத்தில் கிரேத, திரேத, துவாபர மற்றும் கலி யுகங்களில் என்ன கடமைகளை செய்ய வேண்டும் என்று கூறுகிறது[8]. குணங்கள் எப்படி மாறுபடும் என்று கூறுகிறது[9].]
 • பிராமனன் முதல் வர்ணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததானாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான். (மனு. அத்தியாயம் 1 – சுலோகம் 100). [பிரம்மா முதலில் பிராமணர்களைப் படைத்ததால் உலகத்தில் உள்ளவற்றை அவர்கள் பெறத் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.[10] பிறகு சத்திரியர், வைசியர், சூத்திரர் படைக்கப் பட்டவுடன் அவர்களும் அவற்றைப் பெறத் தகுதியானவர்கள் ஆகிறார்கள்].

மனு தர்ம அடிப்படையில், ‘பிராமணாள் கபே’ என்று ஒரு ஓட்டலுக்கு பெயர் சூட்டப்படுகிறது என்றால், அதன் பொருள் – ஓட்டல் நடத்தும் அந்த உரிமையாளன், ‘நான் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன். இந்த ஓட்டலுக்கு வந்து காசு கொடுத்து சாப்பிட்டாலும் பிராமணரல்லாதவர்கள் என்றால், அவர்கள், எனது பார்வையில் ‘சூத்திரர்’கள் எனது அடிமைகள்.

இல்லாத அத்தியாயத்திலிருந்து திரித்துக் கூறுவது: மனுதர்மத்தின் 18வது அத்தியாயம் 122வது சுலோகத்தின்படி என்னுடைய ஓட்டலுக்கு காசு கொடுத்து சாப்பிட வரும் சூத்திரர்கள், நான் ஏற்றுள்ள தர்மப்படி என்னை வணங்க வேண்டியவர்கள். அதே சுலோகத்தின்படி எனது ஓட்டலுக்கு சாப்பிட வருவதே அவர்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம். [மனு ஸ்மிருதியில் இருப்பதே 12 அத்தியாயங்கள் தாம், அப்படியிருக்கும் போது 18ம் அத்தியாயம் எப்படி வருகிறது என்று தெரியவில்லை[11]].

நான் ‘பிராமணரல்லாத’ கீழ் வர்ணக்காரர்களான சூத்திரர்களை மனுதர்மம் அத்தியாம் 8 – சுலோகம் 122-ன்படி கீழ்க்கண்டவாறுஅறிவிக்கிறேன்.

• போரில் புறமுதுகிட்டு ஓடிவந்த கோழை.

• இவன் என்னிடம் பக்தி கொண்டு தொண்டு செய்ய வேண்டியவன்.

• இவன் எனது விபச்சாரியின் மகன்.

• இவன் என்னால் விலைக்கு வாங்கப்பட்டவன்.

• இவன் தலை தலைமுறையாக எனது அடிமையாக இருந்து வருகிறவன்.

இதைத்தான் திருவரங்கத்தில் ஓட்டல் நடத்தும் பார்ப்பனர், தனது விளம்பரப் பலகையில் பொறித்து வைத்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் விற்பனைக்காக வசதிக்காக நடத்தப்படுகிற ஒரு வர்த்தக நிறுவனம் தன்னிடம் வாடிக்கையாளர்களாக சாப்பிட வருகிற பெரும்பான்மை மக்களையும் சமுதாயத்தில் உழைக்கும் பெரும்பான்மை மக்களையும்

ஏ, தேவடியாள் மகனே!

ஏ, அடிமையே!

ஏ, புறமுதுகிட்டு ஓடிய கோழையே!

ஏ, என்னை அண்டி வாழக்கூடிய இழிப் பிறவியே!

வா, வா, வந்து காசு கொடுத்துவிட்டு சாப்பிட்டுப் போ” என்று பகிரங்கமாக அறைகூவல் விடுப்பதை பக்தித் தமிழர்களே, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி, பா.ஜ.கவிலுள்ள பார்ப்பனரல்லாத தமிழர்களே, இந்த கீழ்மையை சிறுமையை அவமானத்தை அங்கீகரிக்கிறீர்களா?

இது நாத்திக-ஆத்திகப் பிரச்சினையல்ல;

இது இந்துமத எதிர்ப்புப் பிரச்சினையுமல்ல;

நீ, மானமுள்ள, சூடு, சொரணையுள்ள மனிதனாக இருக்கிறாயா என்பதை சோதனைக்குள்ளாக்கும் பிரச்சினை!

ஆமாம், நான் ‘சூத்திரன்’ என்று பச்சை குத்திக் கொள்ளப் போகிறீர்களா?
மானமுள்ள மனிதன் என்று போர்க்கொடி உயர்த்தப் போகிறீர்களா? “கீற்றில்” இதை அப்படியே போட்டிருப்பதும் வேடிக்கைத்தான்[12]. இப்படி “திராவிடர்கள்” தான் கலாட்டா செய்கிறார்கள் என்றால், கிருத்துவர்களும் உள்ளே நுழைந்துள்ளனர். தெய்வநாயகம் என்ற கிருத்துவர் “பிரமணாள் கபே இப்பொழுது திறக்கப்பட்டிருப்பது ஏன்?” என்ற தலைப்பில் ஆறுப்பக்க வண்ண பிட்நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளார்.

கிருத்துவர்களுக்கு திருவரங்கத்தில் என்ன வேலை?: “திராவிடர்கள்” என்று சொல்லிக் கொண்டு, “பெரியார்” பெயரை உபயோகப்படுத்திக் கொண்டு, வைகோக் கட்சிக் கொடியை தலைகீழாக வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் வேலையில், இந்து சாமியார் போல அல்லது நித்யானந்தா போல, தெய்வநாயகம் என்ற குழப்பவாதி, கிருத்துவ வெறியன், இந்த குட்டையில் மீன் பிடிக்க வந்துள்ளது வியப்பாக உள்ளது. “பிரமணாள் கபே இப்பொழுது திறக்கப்பட்டிருப்பது ஏன்?” என்ற தலைப்பில் ஆறுப்பக்க வண்ண பிட்நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளார். இப்படி தருணம் வரும் என்று முன்னமே அச்சிட்டு தயாராக வைத்திருக்கிறார் போலும்! கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கன்னியாஸ்திரீக்களையும், சிறுமிகள், சிறுவர்களை பாலியல் ரீதியில், வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தி, குரூரமாக கொடுமைப் படுத்தி வரும் வேளையில், அவர்களை விடுத்து இந்த ஆல் எதற்கு ஸ்ரீரங்கத்தில் சுற்றி வர வேண்டும்? அந்த பிட்நோட்டீஸைப் படித்துப் பார்த்தால், அந்த “தாமஸ் கட்டுக்கதை”யை விட படு அபத்தமாக இருக்கிறது. “தமிழ்” பெயரை வைத்துக் கொண்டு இந்த ஆள் செய்யும் கலாட்டாவில் பல இந்துக்களும் ஏமாந்துள்ளனர்[13]. நக்கிரனின் “மாட்டிறைச்சி மாமி நான்” என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளது என்று தெரிகிறது[14].

வேதபிரகாஷ்

24-10-2012


[1] நேற்றுக் கூட 23-10-2012, அண்ணாதுரை ஆட்சிக்காலத்தில் இருந்த முன்னாள் சட்டமந்திரி, ஒரு டிவி செனலில் கேள்வி கேட்டபோது, பெருமையாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

[3] பல ஆண்டுகளாக ஓட்டல் தொழிலை நடத்தி வருவதாக அவர் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ணய்யர் என்ற பெயரில் லால்குடி, காந்தி மார்க்கெட் போன்ற இடங்களில் ஓட்டல் வைத்துள்ளாராம்.

http://www.vikatan.com/juniorvikatan/Sensation/25513-pramanal-hotel-srirangam-r.html#cmt241

[5] கி. வீரமணி ஜெயலலிதா ஆட்சிற்கு வந்தபோது, “ஆரிய-திராவிட போராட்டம் தொடர்கிறது” என்று ஒரு குறும்புத்தகத்தை வெளியிட்டது நினைவு கூறவேண்டும். பிறகு ஜெயலலிதா லட்சங்களைக் கொடுத்தவுடன் அமைதியாகி விட்டார்.

[6] ரெட்டி மெஸ், முனியாண்டி விலாஸ், கோனார் மெஸ், செட்டி நாடு ஹோட்டல், நாயர் டீக்கடை, நாடார் மரத்தொட்டி, தேவர் ஹோட்டல், ஆச்சி மசாலா முதலியவை இருப்பது உண்மைதான்.

[8] A. C. Burnell, The Ordinances of Manu, Oriental Books, New Delhi, 1971, p.12

[9]  R. N. Sharma, Manusmriti (translation of M. N. Dutt – Sanskrit verses with translation), Chaukhamba Sanskrit Pratishthan, New Delhi, 1998, p.30

[10] R. N. Sharma, Manusmriti (translation of M. N. Dutt – Sanskrit verses with translation), Chaukhamba Sanskrit Pratishthan, New Delhi, 1998, p.64-65.

[11] இப்படி இவர்களாகவே எதையாவது மொழிபெயர்த்துக் கொண்டு அல்லது மற்றவர்கள் சொல்லியதைக் கேட்டுக் கொண்டு இப்படி திரித்து எழுதி வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது.

[13] “உடையும் இந்தியா” என்ற புத்தகத்தில் தேவையில்லாமல், இந்த ஆளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்துக்கள் எழுதியிருப்பது ஒரு தகவல். அது மட்டுமல்லாது, முன்பு, தருமபுர ஆதீனத்தில் இந்த ஆளுக்கு கூட்டத்தை நடத்தி, அதில் இவர் சொன்னதெல்லாம் தவறு என்று எடுத்துக் காட்டியப்பிறகுக் கூட, அருணை வடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதிய பிறகும் கூட, சில சைவர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது வேடிக்கையாக இருக்கிறது.

[14]முதலமைச்சர் ஜெயலலிதா, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று ‘நக்கீரன்’ இதழில் வெளியான செய்திக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘நக்கீரனுக்கு’ எதிராக ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தத் தாக்குதல் ‘நக்கீரனுக்கு’ எதிரானதாக மட்டும் நாம் கருதவில்லை. ‘மாட்டுக்கறி’ சாப்பிடும் கோடானுகோடி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது.

http://www.periyarthalam.com/2012/01/13/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

26 பதில்கள் to “பத்மா முதலியார், நாடார் மரத்தொட்டி, நாயர் டீ ஸ்டால், செட்டியார் மெஸ், முதலியார் கடை, தேவர் ஹோடல், ஐயங்கார் பேக்கரி, ஹலால் மாமிசக் கடை, பிராமணாள் கபே!”

 1. vedaprakash Says:

  விடுதலை செய்தி :
  சிறீரங்கத்தில் திடீர் “பிராமணாள் ஓட்டல்!”
  SATURDAY, OCTOBER 20, 2012 VIDUTHALAI EPAPER 1 COMMENT

  தமிழ்நாடு முதல் அமைச்சரின் முக்கிய கவனத்துக்கு – சிறீரங்கத்தில் திடீர் “பிராமணாள் ஓட்டல்!” – தமிழர் தலைவர் அறிக்கை
  சிறீரங்கத்தில் உணவு விடுதி ஒன்றில் திடீரென்று பிராமணாள் பெயர் முளைத் திருப்பது குறித்து முதல் அமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுக்கும் வேண்டுகோள் வருமாறு:
  தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட திராவிடர் இயக்கம் அடிப்படையில் வருணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொள்ளாத தாகும். ஜாதி ஒழிப்பை முக்கிய கொள்கையாகக் கொண்ட இயக்கமாகும்.
  எத்தனையோ போராட்டங்கள்!
  அதற்காக எத்தனை எத்தனையோ போராட்டங்கள்! இந்திய அரசமைப்புச் சட்டத்தைக்கூட கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்து, 10 ஆயிரம் தொண்டர்கள் ஈடுபட்டனர். மூவாயிரம் கருஞ்சட்டையினர் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்; சிறைச்சாலையில் பலரும் மாண்டதுண்டு.
  ஒரு காலகட்டத்தில் சென்னை நகர உணவு விடுதிகளில் பஞ்சமர்களும், நாய்களும், பெரு நோய்க் காரர்களும் நுழையக் கூடாது என்று பார்ப்பனர்கள் நடத்திய உணவு விடுதியில் விளம்பரம் செய்யப்பட்ட துண்டு (குடிஅரசு 3.5.1936).
  தந்தை பெரியார் அவர்களின் பிரச்சாரத்தாலும், திராவிடர் இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சியாலும் அது ஒழிக்கப்பட்டது.
  ரயில்வே உணவு விடுதியில் பிராமணாள் – சூத்திராள் பேதம்
  ரயில் நிலைய உணவு விடுதிகளில் பச்சையாக பிராமணாள் – இதராள் என்று போர்டு போட்டிருந்த நிலையும் உண்டு. மேட்டுப்பாளையம் ரயில்வே உணவு விடுதியில் ஒருபடி மேலே சென்று, சூத்திரர்களுக்கு என்று வெளிப்படையாக எழுதப்பட்டு இடமும் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து விடுதலையில் (27.1.1941) இந்திய கவர்ன்மென்ட் கவனிப்பார்களா? என்று தலைப்பிட்டு தந்தை பெரியார் தலையங்கம் தீட்டினார்.
  வெள்ளைக்கார அரசு தந்தை பெரியார் அவர்களின் கோரிக்கையில் இருந்த நியாயத்தை உணர்ந்து, அந்தப் பேதத்தை ஒழித்து உத்தரவிட்டது (8.2.1941).
  ரயில்வே நிலையங்களில் இருந்த எல்லா உணவு விடுதிகளிலும் 20.3.1941 முதல் பிராமணாள் – சூத்திராள் பேதம் ஒழிக்கப்பட்டது. அதற்காக ரயில்வே உணவு விடுதிகளில் பேதம் ஒழிந்த நாளாக ஒரு நாளே கொண்டாடப்பட்டது. தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் அத்தகைய விழாவில் சேலத்தில் கலந்து கொண்டனர் (30.3.1941).
  1957இல் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய போராட்டம்!
  இன்னொரு கால கட்டத்தில் 1957இல் தந்தை பெரியார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். உணவு விடுதி களில் பெயர்ப் பலகைகளில் பிராமணாள் என்று இருந்த பெயரை நீக்கக் கோரும் அறிவிப்பு அது (27.4.1957).
  பலர் தாங்களாகவே நீக்கிக் கொண்டனர். சில இடங்களில் தார் கொண்டு அழிக்கப்பட்டது. சென்னை யில் திருவல்லிக்கேணி பகுதியில் முரளீஸ் கபே முரளி பிராமணாள் கபே உரிமையாளர் மட்டும் நீக்க மறுத்தார்!
  முரளீஸ் கஃபே
  தந்தை பெரியார் வன்முறைக்கு இடம் அளிக்காமல் நாள்தோறும் தோழர்களைக் கொண்டு மறியல் போராட்டத்தை நடத்தச் செய்தார். தொடர்ந்து எட்டு மாத காலம் நடந்தது. 1010 திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையும் சென்றனர். பிறகு வேறு வழியின்றி அந்த உணவு விடுதி உரிமையாளர் தந்தை பெரியாரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பிராமணாள் பெயரையும் அகற்றிக் கொண்டார் (22.3.1958). அய்டியல் கபே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது!
  1970-லும் பெரியார் அறிவிப்பு!
  மீண்டும் சிற்சில இடங்களில் உணவு விடுதிகளில் பிராமணாள் பெயர் தலை தூக்கியபோது, 1970இல் மீண்டும் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார். போராட்டத்துக்கு வேலை யின்றியே அவரவர்களும் பெயர்களை நீக்கிவிட்டனர்.
  1978இல் ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எழுதிய கடிதம்
  1978ஆம் ஆண்டிலும் போராட்டத்திற்கு வேலை ஏற்பட்டது. ஓட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் திரு எம்.பி. புருஷோத்தமன்அவர்களுக்கு இதுகுறித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் என்கிற முறையில் கடிதம் எழுதினேன் (20.9.1978).
  இரண்டே நாட்களில் (22.9.1978) அவரிடமிருந்து பதில் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருந்த தாவது:
  பேரன்புடையீர்,
  வணக்கம். தங்களுடைய 20.9.1978 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றோம். அதில் குறிப்பிட்டபடி உணவு விடுதிகள் பிராமணாள் என்ற சொல்லை வியாபார ரீதியாக சுத்த சைவமான (Pure Vegetarian) உணவு விடுதி என்று பொது மக்களுக்குத் தெரிவதற்காக உபயோகிக்கப்பட்டு வந்து இருக்கிறது. உயர் ஜாதித் தன்மையைக் குறிக்கும் நோக்கத்துடன் போர்டுகள் எழுதப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்பு கிறோம்.
  மேலும் தற்கால ஜாதி சமயமற்ற சமதாய நோக்கோடு பெரும்பாலான உணவு விடுதிகள் பிராமணாள் என்ற சொல்லை தாங்களாகவே நீக்கி இருக்கிறார்கள்.
  தற்போது பிராமணாள் என்ற வார்த்தை அடங்கிய பெயர்ப் பலகை கொண்ட உணவு விடுதிகளைக் காண்பது மிக மிக அரிது. தங்களின் கடிதத்தையொட்டி எங்கள் சங்கம் ஒரு சுற்றறிக்கையில் எந்த உணவு விடுதியிலாவது பிராமணாள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கு மானால், தற்கால நிலைமைக்கு ஏற்ப அந்தச் சொல்லை நீக்குமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.
  இவ்விஷயத்தில் எங்கள் சங்கத்தின் முழு ஒத்து ழைப்பை தரத் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு ஓட்டல் சங்கத் தலைவர் திரு எம்.பி. புருசோத்தமன் அவர்கள் எழுதிய கடிதம் 24.9.1978 நாளிட்ட விடுதலையில் முதல் பக்கத்தில் வெளியிடவும் பட்டது.
  ஒரு நீண்ட வரலாறுண்டு
  இந்தப் பிராமணாள் எதிர்ப்பு – எழுத்து அழிப்பு என்பதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இதனை இப் பொழுது விளக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பது முக்கியமாகும்.
  சிறீரங்கத்தில் திடீர் பிராமணாள்!
  தாங்கள் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள சிறீரங்கத்தில் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் திரு. கிருஷ்ண அய்யர் என்பவர் நடத்தும் உணவு விடுதியில் திடீரென்று பிராமணாள் பெயர் முளைத்திருக்கிறது.
  திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் தலைமைக் கழகத்திற்குத் தெரிவித்ததன் பேரில், உரிமையாளரை நேரில் அணுகிக் கேட்டுக் கொள்ளுங்கள். எடுக்க மறுக்கும் பட்சத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்பற்றி அறிவிக்கலாம் என்று கூறியி ருந்தோம்.
  காவி அமைப்புகளின் துணையோடு…
  அதுபோன்றே திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் நேரில் கேட்டுக் கொண்டதற்கு உணவு விடுதி உரிமை யாளர் பிடிவாதமாக பிராமணாள் பெயரை நீக்க மறுத்துவிட்டார். சில காவி அமைப்புகள் அவருக்கு உற்சாகத்தை ஊட்டிக் கொண்டு இருப்பதாகத் தெரிய வருகிறது. இந்தப் பிரச்சினையில் முதல் அமைச்சராகிய தங்களின் பெயர்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் தெரிய வந்தது.
  2012-லும் பிராமணாளா?
  2012ஆம் ஆண்டிலும் பிராமணாள் – சூத்திராள் பேதத்தை நினைவூட்டி வலியுறுத்தும் போக்குகள் தேவைதானா?
  திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி யுள்ளோம். (13.10.2012).
  தாங்கள் தலையிடுக!
  முதல் அமைச்சர் என்பதைவிட, தங்களின் தொகுதி என்ற முன்னுரிமையில் தாங்கள் தலையிட்டு, இந்தப் பிரச்சினையில் சுமுக சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். முயற்சிப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். அதன் மூலம் எங்கள் போராட்டத் திற்கும் அவசியம் இல்லாத ஒரு நிலை ஏற்படக் கூடும்.
  சில வாரங்களுக்கு முன்பு திருச்சி உறையூரில் இதுபோல பிராமணாள் ஓட்டல் என்று இருந்ததை, எங்கள் கழகத் தோழர்கள் கேட்டுகொண்டதன் பேரில், பிராமணாள் பெயரை நீக்கிவிட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
  சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல; தந்தை பெரியார் முன்பு கையாண்ட வழிமுறைப்படி அறப்போராட்டம் நடத்துவது தவிர்க்க இயலாதது என்பதைத் தங்களுக்கு தெரியப் படுத்திக் கொள்ளுகிறோம்.
  வரும் 28ஆம் தேதி சிறீரங்கத்தில் திராவிடர் கழகத் தின் சார்பில் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் நான் கலந்துகொள்ள இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
  தங்கள்,
  கி.வீரமணி
  தலைவர்,
  திராவிடர் கழகம்
  சென்னை
  19.10.2012

  • John Periyarpitchai Says:

   வீரமணி முதலில் திகவை ஏன் கட்டுக்குள் இருக்கவைக்க முடியவில்லை என்று விளக்க வேண்டும். பெரியாருக்குப் பிறகு இவ்வாறு எப்படி டஜன் கணக்கில் “திக”க்கள் இருக்க முடியும்? இவை பெரியாரிஸத்தால் உண்டானவையா அல்லது ஜாதிகளின் அடிப்படையில் இருப்பவையா என்று அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

  • Vedikundu Arumugam Says:

   வீரமணியின் சொதப்பலான விளக்கம் தேவையில்லை. இப்பொழுதும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் “தகுந்த உடையுடன்” தான் செல்ல வேண்டியுள்ளது. அதனை யாராவது தடுக்க முடியுமா? குடிக்கச் செல்லும் திகவினருக்கே இது தெரிந்த விஷயம் தான்.

  • Nalliah Thayabharan Says:

   வானம் எனக்கொரு போதி மரம்

   சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.

   சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.

   தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

   பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக சில்பா செட்டி, முகேஸ் சர்மா, ரேணுகா ஐயர் போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த சாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.

   இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு சென்னையிலோ அல்லது மதுரையிலோ வாடகைக்கு எடுக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் ஐயர் என்றோ, மீரா சர்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குலுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?

   அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது?

   நல்லையா தயாபரன்

 2. vedaprakash Says:

  பெரியாரை இழிவுபடுத்தி சுவர் விளம்பரம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை திராவிட கழகத்தினர் முற்றுகை :

  திருச்சி கன்டோன்மென்ட், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து மக்கள் கட்சி, இந்திய அனுமன் சேனா அமைப்பு சார்பில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள வாசகங்கள் பெரியாரை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி திக மாவட்ட தலைவர் சேகர், விடுதலை சிறுத்தைகள் தமிழாதன், அரசு, புதிய தமிழகம் அய்யப்பன், சங்கர், திராவிடர் விடுதலைக்கழகம் குமார், பெரியார் தத்துவ மையம் சரவணன் உட்பட சுமார் 50 பேர் கன்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று இரவு புகார் கொடுக்க வந்தனர்.
  அங்கு உதவி ஆணையர் காந்தியிடம் அவர்கள் கூறுகையில், வஞ்சம், வக்கிரத்தை வெளிப்படுத்தும் வகையில், பெரியாரை இழிவுபடுத்தி சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன.
  இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த விளம்பரத்தை அழிக்க வேண்டும். அதை எழுதியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் இது குறித்து கன்டோன்மென்ட் போலீசில் புகார் அளித்தனர்.
  இதைத்தொடர்ந்து, ஸ்ரீரங்கம் சென்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் பால்சாமி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் மற்றும் போலீசில் புகார் அளித்தனர். இரவில் போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • John Periyarpitchai Says:

   பெரியாரை விமர்சிக்கும் எல்லாமே, பெரியாரை இழிவுப் படுத்துவதாகாது. திமுகவைச் சேர்ந்த என். நடேசன் என்பவர் பெரியார் எப்படி பவானி ஆற்றங்கரையில் கூத்தியார்களுடன் ஜாலியாக இருந்தார் என்று வெளிப்படையாகவே தமது புத்தகத்தில் எழுதியுள்ளார். இவையெல்லாம் அவரது நண்பர்களுக்கு தெரிந்த விஷயமே. ஆகவே, உண்மையை எடுத்துக் காட்டினால், தொண்டர்கள் கோபப்படவேண்டிய அவசியம் இல்லை.

   • Vedikundu Arumugam Says:

    ஆமாம், முதலில் பெரியார் சொன்னது, எழுதியது, கேட்டு எழுதியது என்று புத்தகங்களாக உள்ளவையெல்லாம் பெரியார் இப்படித்தான் சொன்னார்-எழுதினார் என்றில்லை. ஏனெனில் அப்பொழுது, முதலில் மேடைகளில் பேசியதை குறிப்பெடுத்துக் கொண்டார்கள், பிறகு உட்கார்ந்து கொண்டு எழுதினார்கள். அதனால் அவை பெரியார் எழுதினார் என்று அதிகாரப்பூர்வமாகக் கொள்ள முடியாது. மேலும், பெரியாருடன் வாழ்ந்தவர்கள், பெரியார் பேச்சைக் கேட்டவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் பெரியார் எப்படி பேசுவார், என்னவெல்லாம் பேசுவார், திட்டுவார், அசிங்கமாக இடையிடையில் “கமென்ட்” அடிப்பார் என்றெல்லாம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவையெல்லாம் பதிவாகவில்லை. ஆகவே, அனைமுத்து முதல் ராசேந்திரன் வரை தொகுத்துள்ளதை சரிபார்த்து, ஒரு “கிடிகல் எடிஷன்” எடுத்து வந்தால் தான் “பெரியாரிஸம்” என்ன என்று தஎரிந்து கொள்ள முடியும்.

 3. vedaprakash Says:

  “தி ஹிந்து”வில் வெளி வந்த செய்தி:
  TPDK cadre held
  The Hindu, TIRUCHI, October 21, 2012
  Members of Thanthai Periyar Dravida Kazhagam were arrested here on Saturday after they attempted to erase the name Brahmin from the name board of a hotel at Srirangam. Police sources said the members assembled near the old bus stand in Srirangam to proceed with their proposed plan. However, they were prevented by a posse of police personnel deployed in Srirangam.
  The members who raised slogans were later taken into custody . The sources said the members were arrested as they assembled unlawfully and obstructed vehicular movements. Protestors were led by Kovai. Ramakrishnan, general secretary of the Kazhagam.

  • John Periyarpitchai Says:

   பெங்களூரில் கூட ஒரு “பிராமின் கபே” உள்ளது. அதை திகவினர் என்ன செய்யப் போகின்றனர்? திராவிட மொழிகள் பேசும் இடத்தில் உள்ள அதை அவர்களால் எதிர்க்க முடியுமா?

   • Vedikundu Arumugam Says:

    திராவிடம் என்ற சொல்லிற்கு இனரீதியிலான கொடுத்த விளக்கம் பொய்யானது. கிறிஸ்தவப் பாதிரி கால்டுவெல் செய்த சதியின் விளைவுதான் தமிழர்கள் இவ்வாறு ஒற்றுமை இல்லாமல் போனதற்குக் காரணம். ராம மூர்த்தி, குணா போன்றோர் இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இருப்பினும், திகக்கள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருக்கின்றன. தமிழர்களும் பிரிந்து கொண்டேயிருக்கிறார்கள்.

 4. vedaprakash Says:

  Reblogged this on atheism.

 5. vedaprakash Says:

  பிராமனர்களை இழிவுபடுத்தும் காட்சி:
  நடிகர் மோகன்பாபு வீடு மீது திடீர் தாக்குதல்
  வியாழக்கிழமை, 1, நவம்பர் 2012 (20:26 IST)

  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=85346

  தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு. இவர் நடித்த ‘தேனி கைனா ரெடி’ (எதற்கும் தயார்) என்ற சினிமா கடந்த திங்கட்கிழமை ரிலீஸ் ஆனது. விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்துள்ளார். மோகன்பாபுவின் சொந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

  இந்த படத்தில் பிராமனர்களை இழிவுப்படுத்தும் காட்சி இடம் பெற்று இருப்பதாக படம் ரிலீசாகி 5 நாட்களுக்கு பிறகு பிராமனர்கள் சங்கம் குற்றம்சாட்டி நேற்று கண்டன அறிக்கை வெளியிட்டது.

  இந்த நிலையில் நேற்று இரவு 8.45 மணி அளவில் 50 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் ஐதராபாத்தில் உள்ள நடிகர் மோகன்பாபு வீட்டுக்கு வந்தனர். திடீரென அவர்கள் கற்களை வீசி ஜன்னல் கதவுகளை உடைத்தனர். மேலும் கதவையும் உடைக்க முயன்றனர்.

  இந்த தாக்குதல் நடந்தபோது மோகன்பாபு வீட்டில் இல்லை. டெல்லி சென்று இருந்தார். மகன் விஷ்ணு வெளியே சென்று இருந்தார். வீட்டில் மோகன்பாபு மனைவி மட்டும் இருந்தார். திடீர் தாக்குதலால் பீதி அடைந்த அவர் வீட்டுக்குள் முடங்கி போனார். வீட்டு வாசலில் காவலுக்கு நின்றிருந்த காவலாளிகளும் செய்வதறியாமல் திகைத்தனர்.

  பின்னர் சமாளித்துகொண்டு உருட்டு கட்டையால் தாக்கி மர்ம கும்பலை விரட்டியடித்தனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. உருட்டு கட்டை தாக்குதலில் 7 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

  தாக்குதலை நேரில் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் விஷ்ணுவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அவர் வருவதற்குள் தகராறு முடிவுக்கு வந்து விட்டது.

  இதுபற்றி விஷ்ணு செய்தியாளர்களிடம், ’’நாங்கள் பிராமனர்களை மிகவும் மதிக்கிறோம். எனது தந்தை 550-க்கும் மேற்பட்ட சினிமா படத்தில் நடித்து உள்ளார். பல படங்களை சொந்தமாக எடுத்து உள்ளார். ஒரு படத்துக்கு பூஜை போடும்போதும், ரிலீஸ் செய்யும்போதும் பிராமனர்களைதான் முதலில் அழைக்கிறோம்.

  அப்படிப்பட்ட நாங்கள் அவர்களை அவமானப்படுத்துவோமா? சினிமா கதை என்பது ஒரு கற்பனையே! இதில் மத வெறியை தூண்டக் கூடாது. ஆட்சேபம் இருந்தால் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.

  அதற்காக தாக்குதல் நடத்துவது சரியல்ல. பிராமனர்களாக இருப்பவர்கள் இவ்வாறு செய்வார்களா? நானும் ஒரு இந்துதான். வன்முறைக்கு வன்முறையால் பதில் சொல்லவும் எனக்கு தெரியும்’’என்று கூறியுள்ளார்.

  • John Periyarpitchai Says:

   பிராமணர்கள் சத்தியர்கள் ஆகிவிட்டனரா அல்லது மனு தர்மம் மாறி விட்டதா? சூத்த்கிரர்கள் பிராமணர்கள் ஆகி வரும் காலத்தில், பிராமணர்கள் இவ்வாறு மாறி வருவதில் வியப்பில்லை. குல தருமத்தை விட்டு வியாப்[ஆரம் செய்ய்ம் எந்த பிராமணனுன் பிராமணனே இல்லை. அவன் “பிராமணன்” என்று சொல்லிக் கொள்வதில் எந்த தகுதியும் இல்லை.

   • Vedikundu Arumugam Says:

    திகக்கள் முதலில் மனுநூலை முழுக்கப் படித்து விவாதிக்க வேண்டும். யாரோ எழுதி வைத்ததை வைத்துக் கொண்டு இப்படி வாதித்தால், இருக்கின்ற மரியாதையும் போய் விடும். பார்ப்பனகளுக்கு அது வெறும் வாயிற்கு அவல் கிடைத்தது போலாகி விடும்.

 6. vedaprakash Says:

  மோகன்பாபு தயாரித்த படத்துக்கு எதிராக அவதூறு வழக்கு!
  Published: Thursday, November 1, 2012, 10:25 [IST]
  Posted by: Shankar
  http://tamil.oneindia.in/movies/news/2012/11/defamation-case-on-mohan-babu-163947.html

  ஹைதராபாத்: நடிகர் மோகன்பாபு தயாரித்த ‘தேனிகைனா ரெடி’ என்ற படத்தில் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக உள்ளதாகக் கூறி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
  மோகன் பாபு மகன் மஞ்சு விஷ்ணு, ஹன்சிகா நடித்து, நாகேஷ்வர ரெட்டி இயக்கிய படம் இது.

  ரூ. 5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கடந்த மாதம் வெளியாகி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பிராமணர்களை நையாண்டி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  இதனால் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்தப் படத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள நடிகர் மோகன்பாபு வீட்டின் முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஆனால் சர்ச்சைக்குரிய காட்சி எதுவும் படத்தில் இல்லை என்று மோகன்பாபு மறுத்துள்ளார்.

  இருப்பினும் அந்த சமூகத்தினர் இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில், நடிகர் மோகன்பாபு, நடிகர் மஞ்சு விஷ்ணு, காமெடியன் பிரமானந்தம், இயக்குநர் நாகேஷ்வர ரெட்டி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • John Periyarpitchai Says:

   பிராமணர்கள் சத்தியர்கள் ஆகிவிட்டனரா அல்லது மனு தர்மம் மாறி விட்டதா? சூத்திரர்கள் பிராமணர்கள் ஆகி வரும் காலத்தில், பிராமணர்கள் இவ்வாறு மாறி வருவதில் வியப்பில்லை. குல தருமத்தை விட்டு வியாபாரம் செய்யும் எந்த பிராமணனும் பிராமணனே இல்லை. அவன் “பிராமணன்” என்று சொல்லிக் கொள்வதில் எந்த தகுதியும் இல்லை.

   • Vedikundu Arumugam Says:

    பார்ப்பனர்கள் பார்ப்பனர்களா இல்லையா என்று ஆராய்வதை விட பார்ப்பனர்-அல்லாதவர்கள் எப்படியிருக்ல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். “பிறாமணாள் கபே” (முன்பு இப்படி இருந்தது கூட இப்பொழுதுள்ளவர்களுக்குத் தெரியவில்லை) போல “சூத்திரர் கபே” ஆரம்பித்து திகக்கள் போராட வேண்டும். திராவிட பலகாரம், இராவண மசாலா போல ஏன் திகக்கள் “சூத்திரர் கபே”க்களை ஆரம்பித்து போராடக்கூடாது?

   • iTTiAM Says:

    //பிராமணர்கள் சத்திரியர்கள் ஆகிவிட்டனரா அல்லது மனு தர்மம் மாறி விட்டதா//
    தவறான புரிதல்,
    1> வெட்டி கலாட்டா, வீண் ஆர்ப்பாட்டம் செய்வதல்ல சத்ரிய ம்.
    2> பிராமணர் போராடுதல் என்ன புதிதா? எடுத்துக்காட்டுகள், ராவணன், துரோணர், அஸ்வத்தாமா, திப்புவின் படைத்தளபதி, முன்னாள் இந்திய தரைப்படைத் தலைவர்…….மேலும் பலர்.

 7. John Periyarpitchai Says:

  கிறிஸ்தவர்கள் ஜாதி பெயர்களை வைத்துக் கொண்டு கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதை விட அவர்கள், இந்துக்களாகவே இருந்து கொள்ளலாம்.

  • Vedikundu Arumugam Says:

   ஆமாம், அன்று “மணி ஐயர்” என்ற ஒரு ஆள் நந்தனத்தில் (YMCA மைதானத்தில்) பிரசங்கம் செய்து கொண்டிருந்ததைப் பார்க்கும் போது, உண்மை கிறிஸ்தவர்களுக்கு வெட்கம், மானம், சூட் உ, சொரணை ……………இல்லை என்றுதான் தோன்றுகிறது.

 8. Vedikundu Arumugam Says:

  மனுதர்ம நூலின் வசனங்களின் எண்களை தவறாகக் குறிப்பிட்டதால், அவை இல்லை என்று ஆகி விடுமா? இக்காலத்திலும் அத்தகைய முறை நியாயப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன என்று தான் பெரியார் சித்தாந்திகள் பார்ப்பனர்களைக் கேட்கிறார்கள். அதற்கு நேரிடையாக பதில் சொல்ல வேண்டியது தானே?

 9. John Williams Says:

  The Dravidian ideologists cannot fool the Tamil public, even in the 21st century with such mythical race hypotheses and linguistic fenzy.

  The speeches and writings attributed to E. V. Ramaswamy Naicker have to be studied critically to find out the reality.

  In the present day context, the facts can be verified through sources and cross-checked.

  During 1960-70s, no doubt, the Dravidian protagonists, theoreticians and politicians were controlling the thought processes of others, just by sheer terror tactics. Either the opponents were shouted down or beaten up to keep quite. None could question Periyar, Anna or Karunanidhi.

  But, during 1990s and 2000s, researchers have started bringing out facts of such suppressive and oppresive tactics, so that the real faces of the Dravidian leaders are shown to the public.

  The Dravidian bogey was utterly failed, when the so-called Dravidians of other States could not go together with the Tamils. Just by antagonizing everybody, the dravidian politicians and ideologists have pushed Tamilnadu industrially backward. Even the highly educated and well-placed Tamil have been working in Canada, US, Australia and other european countries.

  With the money-power and influence, in the name of Tamil, they have been instigatinf the Tamils of the tamilnadu. Otherwise, they have been hobnobbing with the “Aryans” in day to day life.

  Even the Kasunanidhi family has done that to become rich.

  Ultimately, the poor and ignorant Tamil people are looted by the film-stars with their cheap entertainment.

 10. allah pasha Says:

  Allah Pitchai

  Allaho Akbar

  Allah will win over bothe Christians and Hindus. Allah is the only True God. Please adopt Halal Food, full of fat and Cholestrol, so that you can becomem walking dead bodies.

  Allah Pitchai

 11. ஶ்ரீரங்கத்தில் சுவாமி விவேகானந்தரைப் பற்றிய கிறிஸ்தவர்களின் புளுகு பிரச்சாரம் « இந்தியாவி Says:

  […] [2] https://socialterrorism.wordpress.com/2012/10/24/padma-mudaliyar-nadar-maraththotti-nayar-tea-stall-c… […]

 12. செந்தில் குமார் Says:

  கடைகளின் பெயர்ப் பலைகைகளில் உள்ள ஜாதிபெயர்களை பாட்டியல் போட்ட நீங்கள் அப்படியே எந்ததெந்த ஆலயங்களில் எந்ததெந்த ஜாதியினர் அர்ச்சகர்களாக பணிபுரிகின்றனர் எனவும் பட்டியல் ஒன்று போடுங்களேன்.

  • vedaprakash Says:

   திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் கோவில்களில் இந்திய அரசு நிர்ணயித்துள்லபடி, 18% மற்றும் 7.5 அர்ச்சகர் பயிற்சி கொடுக்கப்பட்டு, ஆலயங்களில் வேலைக் கொடுக்கப்பட்டுள்ளது.

   தமிழகத்தில், கிராம பூஜாரிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு பூஜாரிகளாக வேலை செய்து வருகிறார்கள்.

   ஆனால், அவர்கள் எதையும் ஜாதிய நோக்கில் செயல்பட்டு ரகளை செய்வதில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: