ஒண்ணுக்கு போதலும், உண்ணாவிரதம் இருத்தலும் – கருணாநிதியை மிஞ்சிய அஜித் பவார்!

ஒண்ணுக்கு போதலும், உண்ணாவிரதம் இருத்தலும் – கருணாநிதியை மிஞ்சிய அஜித் பவார்!

 

மூத்திரம் பெய்தா அணைகளை நிரப்ப முடியும்[1] – இப்படி நக்கலாக, கேவலமாகப் பேசினார் மராத்திய துணை முதலமைச்சர், அஜித் பவார் என்கின்ற, சரத் பவாரின் மச்சான்!

அஜித் மூத்ராலயம்[2] – அவருக்கு சரியான பாடம் புகட்ட, மூத்திரம் பெய்வேன் என்ற அஜித் பவாரின் பெயரை சிறுநீர் கழிக்கும் இடத்திற்குப் பெயராக வைத்து விட்டனர் மராத்தியர்!

அதற்குள், “குடிக்க நீரில்லை, ஆனால் ஐபிஎல்[3], சினிமா[4], தொழிற்சாலைகளுக்கு நீர் மலிவாக விற்கப்படுகிறது மூத்திர அமைச்சர் மாநிலத்தில் நடக்கும் தண்ணீர் ஊழல்[5], தமது சக்கரை ஆலைகளுக்கு அணையில் உள்ள நீரை திருப்பி உபயோகிக்கின்றனர்[6], என்றெல்லாம் வெளிவந்தவுடன், இப்படி பேச்சில் மட்டுமலாது, நடத்தையிலும் திராவிட முறைகளைப் பின்பற்ற அஜித் தொடங்கிவிட்டார்.

 

கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருக்கமான தொடர்பு,  நட்பு முதலியன[7]: தில்லியில் இந்த இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது, ஓட்டல்கள், கடைகளுக்குச் சென்று வருவது பார்த்த்து மக்கள் வியந்துள்ளனர். இதென்ன, ஒரு திராவிடத் தலைவியின் மகளும், அவருக்கு எதிரான சித்தாந்த்தைக் கடைபிடிப்பவரின் மகளும் இப்படி அந்நியோன்னமாக இருக்கிறார்களே என்று மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்துள்ளனர். கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருகமான நட்பை அறிந்தவர்கள், ஏற்கெனெவே, கலைஞர் டிவிக்கும், டி.பி.ரியாலிட்டிற்கும் உள்ள தொடர்பை அறிந்துள்ளனர்[8]. சுப்ரியாவின் கணவர் மற்றும் தந்தை முதலியோர் மீது, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என்று பல குற்றச்சாட்டுகள் உள்ளன[9]. இந்நிலையில் தான், இவர்களது நட்பு பெருகியுள்ளது. பெண்கள் மசோதா அவர்களை நெருக்கத்தில் கொண்டுவரவில்லை, இத்தகைய, வியாபாரம் தான், அவர்களை கொண்டு வந்துள்ளது என்பது மேல்தட்டு மக்களுக்குத் தெரிந்தேயுள்ளது. கனிமொழியும், சுப்ரியா சுலேவும் மிகவும் நெருக்கமாமன தோழிகள் மட்டுமல்ல,, அவ்வர்ர்க்களது தந்தைகளும் பலமுறை சந்தித்துக் கொண்டுள்ளனர்.

 

கனிமொழி, சுப்ரியா சுலே மற்றும் ராஹுல் காந்தி பார்ட்டியில் கலந்து கொள்வது: ஆகஸ்ட் 21, 2007ல் ஏற்பாடு செய்த ஒரு தனியார் பார்ட்டியில் ராஹுல் காந்தி, சுப்ரொயா சுலே, கனிமொழி முதலியோர் கலந்துகொண்டதும் சிலருக்குத் தான் தெரியும்[10]. அதற்குப் பிறகு எத்தனை தடவை எங்கெல்லாம் சந்தித்துக் கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள் என்பதெல்லாம், அவர்களே சொன்னால் தான் தெரியும். இல்லையென்றால், பிரியங்கா அவ்வாறு, ரகசியமாக வந்து, வேலூர் சிறையில் முருகனின் மனைவி நளினியை சந்தித்து பேரம் பேசியிருக்க மாட்டார். ஆக இந்த முன்று நபர்களும், சும்மா வேடிக்கைக்காக, பார்ட்டிக்கு வரமாட்டார்கள். சென்னைக்கு நூறு தடவை ராஹுல் சென்றாலும், கருணாநிதியைப் பார்ப்பது கிடையாது, பேசுவது கிடையாது. அப்படியிருக்கும் போது, அவருடைய பெண் கனிமொழியுடன் பார்ட்டியில் எப்படி சேர்ந்திருப்பர், பேசுவர். ஆகவே இத்தகைய தொடர்புகளை, நட்புகளை, உறவுகளை, மக்களிடமிருந்து அவர்கள் மறைக்கலாம். ஆனால், அவர்கள் செய்யும் வியாபாரம் காட்டிக் கொடுத்து விடுகிறது.

 

மாமா – மச்சான்களின் உறவுகள்: கருணாநிதியின் மச்சான் முரசொலி மாறன். சரத் பவாரின் மச்சான் அஜித் பவார். இப்படி இரு குடும்பங்களும் மாமா-மச்சான்களின் உறவை வளர்த்து வருகின்றன. குடும்ப அரசியல் மட்டுமல்லாது, கூட்டுக் குடும்ப அரசியலையும் கூட்டணி சிட்த்ட்தாந்தத்தில் அடங்கி வேலை செய்து கொண்டிருக்கிறது. ஊழல் என்று வரும் போது, கூட்டு ஊழல், கூட்டுக் குடும்பக் கொள்ளை, கூட்டு வாரிசு கொள்ளை, கூட்டணிக் கொள்ளை,…………….என்று விரிந்து, பெருகி புதிய விளக்கங்களைக் கொடுக்கிறது.

 

ஒண்ணுக்கு போதலும்,  உண்ணாவிரதம் இருத்தலும்: “அணைகளில் தண்ணீர் இல்லையெனில், சிறுநீர் கழித்தா பெருக்க முடியும்’ என, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், தன் பேச்சுக்கு பரிகாரம் தேடும் வகையில், நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்[11] என்று ஊடகங்கள் கூறுகின்றன. இப்பொழுதெல்லாம், இந்த ஒருநாள் உண்ணாவிரதம் நாடகமாடும் ஆரசியல்வாதிகளுக்கு, பகட்டு வேஷதாரி சித்தாந்திகளுக்கு மற்ற போலிகளுக்கு வசதியாகி விட்டது. யார்-யாரெல்லாம் உண்ணாவிரதம் இருப்பது என்ற விவஸ்தையும் இல்லாமல் போய் விட்டது[12]. மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரசை சேர்ந்தவருமான அஜித் பவார், சமீபத்தில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், “மாநில அணைகளில் தண்ணீர் இல்லையென்றால், சிறுநீர் கழித்தா பெருக்க முடியும்” என, பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. அஜித் பவாரின் பேச்சுக்காக, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரே மன்னிப்பு கேட்டார். பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, அஜித் பவாரும் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இருந்தாலும், சிவசேனா, பா.ஜ., மற்றும் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா போன்ற கட்சிகள், அஜித் பவார் பதவி விலக வேண்டும் என, கோரி வருகின்றன. இந்த நிலையில், தன் சர்ச்சை பேச்சுக்கு பரிகாரம் தேடும் வகையில், சதாரா மாவட்டத்தில் உள்ள கராத் என்ற இடத்தில், அஜித் பவார் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.

 

செய்த குற்றத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையிலேயே,  இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டேன்;  இது ஒன்றும் நாடகமல்ல: மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் முதல்வர், யஷ்வந்த்ராவ் சவானின் நினைவிடம் அருகே, இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. அஜித் பவாரின் இந்த முயற்சியை பாராட்டிய தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக், “அஜித் பவார் பெரிய மனதுடன் தன் தவறை ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் பிரச்னையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும்”, என்றார்[13]. மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் உண்ணாவிரதம் ஒரு நாடகம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. “செய்த குற்றத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையிலேயே, இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டேன்; இது ஒன்றும் நாடகமல்ல,” என, உண்ணாவிரதம் இருந்த அஜித் கூறினார். இந்நிலையில் மகாராஷ்டிர பேரவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் கட்சே பேசியதாவது: அஜீத் பவார் உண்ணாவிரதம் ஒரு நாடகமாகும். அவரது கருத்துக்கு பரிகாரம் அவர் பதவி விலகுவது தான். முதல்வர் பிரிதிவிராஜ் சவாண் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிரீஷ் பாபட், சுதிர் முங்கன்திவார், உள்ளிட்டோர் அஜீத் பவார் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு கேள்வி நேரத்துக்கு பின் விவாதம் நடத்தலாம் என அவர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தன[14].

 

வேதபிரகாஷ்

16-04-2013

 

 


[3]  With just two days to go for its sixth season, the Indian Premier League (IPL) is already surrounded by controversies. Maharashtra Opposition leader Vinod Tawde has objected to the use of water in stadiums in the drought-hit state. Tawde argues that pitch maintenance in these stadiums will consume 60,000 litres of water every day. “As per my knowledge, 60,000 litres of water would be used to maintain a cricket ground every day. Thus, during the entire season of IPL matches spread over 36 days (from April 9 to May 15 in Maharashtra), 21.6 lakh litre water will be used for a single ground,” Tawde said in a letter to IPL chief Rajeev Shukla. While acknowledging that the IPL matches would help the state government earn some revenue, he asked whether it would be appropriate to waste so much water on organising IPL matches when several parts of Maharashtra were facing drought. “Taking into consideration the plight of the drought-affected people, I hope that you will take an appropriate decision on holding the IPL tournament(in the state),” the BJP leader said.

http://ibnlive.in.com/news/maharashtra-bjp-leader-objects-to-use-of-water-in-stadiums-for-ipl/382370-37-64.html

[6] According to Mr Khadse, during the Nagpur session last year, the minister had stated that a special SIT would be instituted to investigate the inordinate delay in the completion of a slew of irrigation projects, resulting in heavy losses to the state exchequer.

http://www.ndtv.com/article/india/maharashtra-irrigation-scam-privilege-notice-against-minister-342031

[8] Supriya is now the Lok Sabha MP from Baramati. Supriya and Kanimozhi’s long chats — in their leisure time, or even in Parliament’s Central Hall — have now acquired an ominous  subtext, with their friendship now being seen in the context of the spectrum scam: specifically, the Baramati-based DB Realty’s money channel leading to Kalaignar TV. http://expressbuzz.com/magazine/friends-in-need/253041.html

[12] திராவிடப் பாரம்பரியத்தில் திகவினர், போலி நாத்திகர், மற்ற இந்து விரோதிகள், உண்ணும் விரதத்தைக் கடைப் பிடித்து வருகிறார்கள். அதுவும், சிக்கன், மட்டன், பீப் என்று உண்டு, மறைவாக சரக்கையும் அடித்து, பிறகு வாய்க்கு வந்தபடி பேசிக் கலைவதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: