அமெரிக்க இறக்குமதி செக்ஸ் மின், மென் மற்றும் கனப்பொருட் விவகாரங்கள் இந்தியாவில் நன்றாகவே வேலை செய்து வருகின்றன!

அமெரிக்க இறக்குமதி செக்ஸ் மின், மென் மற்றும் கனப்பொருட் விவகாரங்கள் இந்தியாவில் நன்றாகவே வேலை செய்து வருகின்றன!

Trio-murder-sex-etc-

அமெரிக்கஇறக்குமதிசெக்ஸ்மின், மென்மற்றும்கனப்பொருட்விவகாரங்கள்: மேக்டோனால்ட், கெட்டகி சிக்கன், பப், பீர், குடி, கூத்து இவற்றுடன் ஓரின சேர்க்கை, அதற்கான உரிமை, போராட்டம், விளம்பரம், குறும்படம், பெரும்படம், என ஏகபட்டவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டு, அமூலில் உள்ளன[1]. இதற்காக, அமெரிக்கக் கம்பெனிகள் தாராளமாகவே ஸ்பான்சர்ஷிப் செய்து வருகின்றன[2]. குலுக்கும் நடிகைகள் மற்ற சினிமா பிரபலங்களை வரவழைத்து அதிரடி கவர்ச்சி நிகழ்சிகள், ஊர்வலங்கள் முதலியவற்றிற்கும் குறைவில்லை. செக்ஸை வெளிப்படையாக, நிர்வாணமாக்கி விட்டு, அதை இப்படி-அப்படியெல்லாம் கூட கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். சபலங்களுக்கு சுலபமாக கிடைக்கும் இனிப்புகள். கடைகள் வேறு திறக்கப் பட்டு விட்டதால், கேட்கவே வேண்டாம். ஒரு பக்கம் எஸ்ட்ஸ் இறக்குமதி, இதனுடன் இத்தகைய வகையறாக்களும் கொசுராக இறக்குமதி செய்யப் படுகின்றன.

Homosexuals-claiming-rights

பேஸ்புக்பழக்கத்தால்ஏற்பட்டவிபரீதம்: சிட்லப்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சாந்தி. இவர்கள் சிட்லப்பாக்கத்தில் மருத்துவ உபகரணம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகன் விஜயகுமார் (24), மயிலாப்பூரில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பிபிஓ கம்பெனியில் டிசைனராக வேலை பார்த்து வந்தார்[3].  இரவில் வேலை செய்து பகலில் வீட்டில் இருப்பது வழக்கம். கடந்த 15ம் தேதி வீட்டில் விஜயகுமார், கை, கால்கள் கட்டப்பட்டும் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டும் சடலமாக கிடந்ததை அவரது சகோதரர் பார்த்தார்[4]. கழுத்து நெரிக்கப்பட்ட தழும்பும், கன்னத்தில் அறைந்த அடையாளமும் இருந்தது. வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், செல்போன் திருடுபோயிருந்தது. புகாரின்பேரில் சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்[5]. இந்த நிலையில் இன்ஜினியர் விஜயகுமாரை கொலை செய்தவர்கள் யார், யார் என்பது பற்றிய துப்பு தற்போது துலங்கியுள்ளது. அவருடன் நெருங்கி பழகிய 4 பேர் இந்த கொலையை செய்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது[6].

Commercialization of Human defects

ஓரினசேர்க்கைபழக்கம், பணம்கேட்டு மிரட்டல், இறுதியில் கொலை: இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[7]: விஜயகுமாருக்கு பேஸ்புக் மூலம் திருப்பூரை சேர்ந்த தவுபிக் அஸ்லாம் (24) என்பவர் அறிமுகமானார். நாளடைவில் இருவருக்கும் ஓரின சேர்க்கை பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சென்னை வந்துள்ளார். தவுபிக் அஸ்லாமின் அண்ணன் அஜ்மிர் காஜாவும் (24) அவ்வப்போது வந்து சென்றுள்ளார்.  இந்நிலையில்தான் விஜயகுமாரிடம் அதிக பணம் இருப்பது அவர்களுக்கு தெரிந்தது. இதைத் தொடர்ந்து 15ம் தேதி அவர்கள் சென்னை வந்தனர். அவர்கள் விஜயகுமாரிடம் பணம் கேட்டபோது அவர் தர மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தவுபிக் அஸ்லாம், அஜ்மிர் காஜா மற்றும் திருப்பூரை சேர்ந்த வேல்முருகன் (26), தீரஜ் ஆகியோர் விஜயகுமாரின் கை, கால்களை கட்டி போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிந்தது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த தீரஜ் தப்பி ஓடிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள். விரைவில் அவரையும் கைது செய்வோம் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Commercialization of Human defects.2

திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையில் கிரிமினல் புத்தியும் வெளிப்பட்டுள்ளது: மேலும் போலீசாரின் கவனத்தை திசை திருப்ப விஜயகுமார் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், செல்போன், கேமரா, டிவிடி பிளேயர் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து அவற்றை போலீசார் மீட்டனர்.One of the murderers - Almeer Khaja - software 2013 தவுபிக் அஸ்லாம், அஜ்மிர் காஜா, வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.One of the murderers - thoufeeq - software 2013 சமீபத்தில் வேளச்சேரி வீனஸ் நகரில் வங்கி அதிகாரி நாகராஜ் ஓரின சேர்க்கை தகராறில் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது சிட்லபாக்கத்திலும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[8].

One of the murderers - Vel murugan - software 2013ஓரினசேர்க்கை, ஓரினபுணர்ச்சி, ஓரினஉறவு: மேனாட்டுத் தாக்கமா, நாகரிகத்தின் அலங்கோலமா என்று தெரியவில்லை. ஆண்கம் மட்டுமல்ல, தமிழ்நாட்டு பெண்களும் இப்பொழுது பெண்களைக் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள். அது மட்டுமா திருமணம் செய்து கொள்ளவும் தயாராகி விட்டார்கள்[9]. ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரின உறவு என்று தமிழகப் பெண்கள் கிளம்பிவிட்டது வியப்பான விஷயம் தான். உண்மையில் இது ஒரு மனோதத்துவ வியாதி. சிறுவயதில் அதிகமாக மனரீதியில் பாதிக்கப்பட்ட ஆண்கள்-பெண்கள் சிலர் இத்தகைய மனப்பாங்கைக் கொள்வதுண்டு. இது பொருந்தாத கூட்டுதான். இருப்பினும் அன்பினைத் தேடி ஏங்கியலையும் நிலையில், அது எளிதாகக் கிடைக்கிறது என்று உணறும்போது, அத்தகைய ஜோடிகள் இனம் / பால் பார்க்காமல் கூட தீர்மானிக்கினறன. தகாத உறவுகளும் ஆரம்பிக்கின்றன. நெருங்கி பழகும் போது, அவர்களையும் அறியாமல் உடல் ஸ்பரிசம் இன்பம் அளிக்கும்போது, குறிப்பாக பெண்களில் சிலர், இத்தகைய நிலையை அடைகின்றனர். பரஸ்பர / பரஸ்பரமாக இன்பத்தை அடைகின்றன.

© வேதபிரகாஷ்

24-10-2013


Advertisements

குறிச்சொற்கள்: , ,

ஒரு பதில் to “அமெரிக்க இறக்குமதி செக்ஸ் மின், மென் மற்றும் கனப்பொருட் விவகாரங்கள் இந்தியாவில் நன்றாகவே வேலை செய்து வருகின்றன!”

  1. vijay vicky Says:

    அன்பு சகோதரர் அவர்களே, தாங்கள் சில அறிவியல் உண்மைகளை அறிந்தே தவறவிட்ட செலக்டிவ் அம்னீசியாவை குறைசொல்ல விரும்பவில்லை…. ஓரினச்சேர்க்கை மனநோயா?… எந்த காலத்தில் சகோ இருக்கீங்க நீங்க?… 1970களில் ICD 10 எனப்படுகின்ற மனநோய்கள் பட்டியலிலிருந்து, ஓரினச்சேர்க்கை நீக்கப்பட்டது உங்களுக்கு நிஜமாகவே தெரியாதா?.. அதன் தொடர்ச்சியாகவே மேற்கத்திய பல நாடுகளும் இத்தகைய ஈர்ப்பை அங்கீகரித்ததை வசதியாக மறந்தது ஏன்?… ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை பெண்ணடிமைத்தனம் மேலோங்கிய சமூகம்தான் நம் சமூகம், அப்போது ஆண்களுக்கு நிகரான போராட்டங்களை முன்னெடுத்த பெண்ணியவாதிகளை “கலாச்சார சீரழிப்பாளர்கள்” பட்டியலில் பழமைவாதிகள் இணைத்தனர்… இன்றைக்கு நம்மை ஆள்வதுகூட பெண்கள்தான், அவர்களை முழுமையாக இந்த சமூகமும் ஏற்றுவிட்டது… அதைப்போலத்தான் சமபால் ஈர்ப்பு நபர்களையும், அவர்களின் உரிமைகளையும் மீட்கும் பொருட்டு இந்த மக்களுக்காக போராட தெருவிற்கு வந்திருக்கும் யாவரும், நிச்சயம் சமூக சீர்திருத்தவாதிகளே…. பிறப்பால் ஆண் பெண், சாதி மதம், மொழி இனம் மட்டுமல்ல, பாலீர்ப்பு ரீதியாக வெறுத்து ஒதுக்கப்படுவதும் சமூகக்குற்றமே!… அதை நல்லதோர் பணியை செய்துவரும் தங்களை போன்றோர் செய்யவேண்டாமென தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: