பீர் குடிக்கும் போட்டியும், ஊடகக்காரர்கள் கிளப்பி விடும் பீதியும், ஏபிவிபியும்!

பீர் குடிக்கும் போட்டியும், ஊடகக்காரர்கள் கிளப்பி விடும் பீதியும், ஏபிவிபியும்!

A group of ABVP volunteers arrived at the hotel with flags and demanded that the beer competition be dropped.

A group of ABVP volunteers arrived at the hotel with flags and demanded that the beer competition be dropped.

சிங்காரச் சென்னையில் பீர் குடிக்கும் போட்டி: மது-அருந்தும் போட்டி “அக்டோபெஸ்டா – டிரிங் அப்” ராடிஸன் புளூ ஹோட்டலில் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்ததால், அதனை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை காலையில்  (12-10-2014) நான்கு ஏ.பி.வி.பி தொண்டர்கள் ஆர்பாட்டம் செய்ய வந்தனர். கலாச்சாரத்தை கெடுக்கும் இதுபோன்ற போட்டிகளை நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.  அதனைப் பார்த்ததும். ஹோட்டல்காரர்கள் மிரண்டு போய்விட்டதால், தாங்கள் அந்த நிகழ்சியை சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நிறுத்தப் பட்டதாக அறிவித்தது. விரைந்து வந்த எழும்பூர் போலீஸார் போட்டியை நிறுத்த உத்தரவிட்டதை தொடர்ந்து போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர், ஏபிவிபி அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘மது குடிக்கும் போட்டி நடத்தவில்லை. ரூ.2,500-க்கு அளவில்லா பீர் குடிக்கும் சலுகையை மட்டுமே அறிவித்திருந்தோம்’ என்றனர். அவர்கள் வைத்திருந்த பேனர் இவ்வாறு அறிவித்தது, “Calling all beer lovers to team up in groups of 5 and drink up at the beer drinking relay. Exciting gift hampers for the winners and best cheering team”, said the banner. It also announced that the entry fee would be `2500 per team (of five)” – பீர் விரும்பிகள் ஐந்து பேர் குழுவாக செர்ந்து வந்து, மாறி-மாறி குடியுங்கள். அதிகமாகக் குடிப்பவர்களுக்கு பர்சு பொருட்கள் மற்றும் சிறந்த குழுக்கான விருது கொடுக்கப் படும். ஒரு குழுக்கு அனுமதி – ரூ.2,500/- என்றிருந்தது[1].

Teenage girls becoming pregnant before marriage, because of free sex! Can India allow?

Teenage girls becoming pregnant before marriage, because of free sex! Can India allow?

ராடிசன் புளூவின் வாதம்: “எங்கள் ஹோட்டலில் பார் உள்ளது. குடிக்க அனுமதி உள்ளது”, என்று ஹோட்டல் மானேஜர் வாதம் புரிந்தார். “ஆனால், மது அருந்த ஊக்குவிக்கும் போட்டிகள் நடத்தலாம்”, போன்ற அனுமதிகள் எல்லாம் கிடையாது, அது சட்டத்திற்கு விரோதமானது”, என்று ஏ.பி.வி.பிவினர் எடுத்துக் காட்டினர். அவர்கள் சொன்னது சரியாகப் பட்டதால், எக்மோர் சரக உதவி போலீஸ் கமிஷனர், அப்போட்டி சட்டத்திற்குப் புறம்பானது என்றவுடன், நிறுத்திவிடுகிறோம் என்று ஒப்புக் கொண்டனர். இவ்விவரங்கள் எல்லாம் 12-10-2014 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரசில் ஏற்கெனவே வந்து விட்டன[2]. ஆனால், பிறகு இன்று வரை மற்ற ஊடகங்கள் அதே செய்தியை வேறுவிதமாகத் திரித்து வெளியிட்டு வருவது வேடிக்கையாக இருக்கிறது.

beer-bottle-with-ganesh

beer-bottle-with-ganesh

தமிழ்இந்துவின் திரிப்பு செய்தி: தமிழ்-இந்து நிருபர் குழு மிக்க கவலையுடன் எழுதுகிறார், “கர்நாடகா மாநிலத்தில் ஏபிவிபி அமைப்பினரின் வன்முறை போராட்டங்கள் பரபரப்பாக பேசப்பட்டன.

  • இரவு விருந்து நடக்கும் இடங்களுக்குள் நுழைந்து தாக்குவது,
  • காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது,
  • காதலர்களை விரட்டி விரட்டி தாக்கியது

என இந்த அமைப்பினர் மக்களிடம் பிரபலமானார்கள். இதேப்போல தமிழகத்திலும் நடைபெற வாய்ப்பிருக்கிறதா? என்ற சந்தேகத்துடன் ஏபிவிபி அமைப்பின் சென்னை மாவட்ட அமைப்பாளர் முத்துராமலிங்கத்தை அணுகினோம்”, என்கிறார்கள். அதாவது, இவர்கள் அத்தகைய ஆண்கள்-பெண்கள் சேர்ந்து களியாட்டம் போடுவதை, குடித்து விட்டு நள்ளிரவுகளில் ஜோடி போட்டுக் கொண்டு ஆடுவதை, பிறகு ஒரு வேளை செர்ந்தே இருந்து ரத்திரியைக் கழித்தால் கூட இவர்களுக்கு விருப்பமே போலிருக்கிறது.

If this type of beer is offered, how the party or competition would be?

If this type of beer is offered, how the party or competition would be?

ஏபிவிபி அமைப்பின் சென்னை மாவட்ட அமைப்பாளர் முத்துராமலிங்கம் கூறியது[3]: அவர் நம்மிடம் கூறுகையில், –

  • “மது குடிப்பவர்களின் காலில் விழுந்து மது குடிப்பதை விடச்சொல்வது,
  • டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடுவது,
  • மதுவிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது

என தமிழகத்தில் காந்திய வழியில் மட்டுமே போராட்டங்களை நடத்தி வருகிறோம். மதுவிற்கு எதிராக நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் எங்கள் அமைப்பின் உறுப்பினர் இமெயில் முகவரிக்கு ‘எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் மது குடிக்கும் போட்டி’ நடைபெற இருப்பதாக தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு சென்று மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதை தடை செய்தோம். அலுவலக நேரமான காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பலர் மது குடிப்பதில்லை. அந்த நேரத்திலும் விற்பனையை அதிகரிக்க சென்னையில் உள்ள பல ஓட்டல்களில் பகல் நேரங்களில் ‘ஹேப்பி ஹவர்ஸ்’ என்ற பெயரில் ஒரு பாட்டில் வாங்கினால் மற்றொன்று இலவசம், சைட் டிஷ் இலவசம் என விளம்பரம் செய்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு மது விருந்திற்கும் சில ஓட்டல்கள் ஏற்பாடு செய்துள்ளன. இதுபோல கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் அனைத்து இடங்களையும் கண்டுபிடித்து அவற்றிற்கு எதிராக போராட்டம் நடத்துவோம். புத்தாண்டு கொண்டாட்டத்திலும் மது விருந்து வைத்தால் முற்றுகையிடுவோம். மதுவிற்கு எதிராக செயல்படும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். மது இல்லா தமிழகத்தை உருவாக்க முயன்றவரை முயற்சி செய்வோம்” என்றார். அதற்குள், அதைப் பற்றிய செய்திகள் அதிகமாகவே ஊடகங்களில் வந்துள்ளது.

பீர் போட்டி சென்னை 2014

பீர் போட்டி சென்னை 2014

சங்கப் பரிவார் பற்றி ஊடகங்கள் ஏன் செய்திகளை வெளியிடுகின்றனர்?: ஆமாம், “சங்கப்பரிவார்” என்று நக்கலாக, செல்லமாக அழைத்து வரும் ஊடகங்கள் தாம் இவற்றைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்களே? பிறகு ஏன் திடீரென்று இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து தடபுடலாக விளம்பரத்தனமாக செய்திகளை அள்ளி வீசியிருக்கின்றனவே என்று ஆச்சரியமாக இருக்கிறது. “ஏ.பி.வி.பி”யா அது என்ன என்று கேட்கும் நிலையுள்ளபோது, இவை ஏன் இந்த கரிசனம் என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு “தி இந்து”வின் செய்தியைப் பார்ப்போம்.

பீர் குடிக்கும் போட்டிக்கும், ஜிஹாதுக்கும் தொடர்பு உண்டா?: “ஏபிவிபி மதுவுக்கு எதிரான போராட்டத்திற்குப் பிறகு ஜிஹாதிகளைக் குறிவைக்க தயாகிறது”, [ABVP targets jihadis after anti-liquor drive] என்ற தலைப்புடன் அதிரடியாக செய்தியை வெளியிட்டிருக்கிறது[4]. அதென்ன இந்து குடிக்கும் போட்டிக்கும், ஜிஹாதுக்கும் என்ன தொடர்பு, என்று யோசிக்கத் தோன்றும். ஆனால், ஏதோ சம்பதமே இல்லாமல், மோகன் பகவத் இப்படி கூறியுள்ளார் என்ற கதையுடன் இதனை இணைத்து செய்தியை வெளியிட்டுள்ளது. ஸ்ருதிசாகர் யமுனன் மற்றும் பெட்லீ பீடர் இருவர்களின் செய்தி தொகுப்பாம் இது[5]. ஏதோ அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள தொடர்பு இந்த இணைப்பு என்று நினைக்க வேண்டாம். இப்படி செய்தியை வெளியிட்டு, யாதாவது பிரச்சினை வந்தால், ஸ்ருதிசாகர் பீடர் சொன்னார் என்று தப்பித்துக் கொல்ளலாம்.

தமிழக போலீஸாரும், மற்ற மாநில போலீஸாரும்: உடனே “பர்ஸ்ட் போஸ்ட்” என்ற நாளிதழும், அவ்வாறே, எல்லாவற்றையும் இணைத்து, ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது[6]. செய்தியை திரித்துக் கூறுகிறோம் என்ற விதத்தில்[7], “தமிழகத்தில் ஏபிவிபி காரியங்களைக் கண்டுகொள்ளமல் விட்டு விட்டனர். ஏனெனில், அங்கு பிஜேபியோ, ஏபிவிபியோ காணப்படுவதில்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் அவை பலத்துடன் இருக்கின்றன, பிறகு அங்கு அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று பார்க்க வேண்டும்”, என்று முடித்திருக்கிறது! அதாவது யாருக்குமோ இவஎர்களைத் தெரியாது, போலீஸாரே பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்றால், இந்த ஊடகங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன? ஆனால், டைம்ஸ் ஆப் இந்தியாவில், பிஜேபி ஆதரவு அளிக்கிறது என்று செய்தியை வெளியிட்டிருக்கிறது[8].

மாரல் போலிஸிங்என்று திரிக்கப் படும் செய்திகள்: “மாரல் போலிஸிங்” என்று வேறு கூப்பாடு போட்டிருக்கின்றன டெக்கான் ஹெரால்ட் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா. அதென்ன “மாரல் போலிஸிங்”? முன்பு கர்நாடகவாவில் பிரமோத் முத்தாலிக் இளம்பெண்கள் பப்புகளில் குடித்து, கண்ட ஆண்களுடன் சேர்ந்து ஆடக் கூடாது என்று தட்டிக்கேட்டதை, “மாரல் போலிஸிங்” என்று கூறி, அந்த ஆளை ஏதோ பெரிய கிரிமினல், இந்தியாவில் உள்ள அனைத்து சட்டதிட்டங்களையும் மீறியவர், மிகவும் அபாயகரமான ஆள் என்பதைப் போல சித்தரித்து ஒடுக்கப் பார்த்தது. சமீபத்தில், பிஜேபியில் முத்தாலிக் செர்ந்து விட்டார் என்று கலாட்டா செய்து அவரை நீக்கவும் செய்ய இந்த ஊடகங்கள் பெரும்பாடு பட்டு, வெற்றிகரமாக செய்து முடித்தன. ஆக, அதே போன்று இந்த “ஏ.பி.வி.பி”யும் அவர்களது இலக்கிற்கு சிக்கிவிட்டது போலும்!

இந்து நாளிதழின்வக்கிரத்தனமான விமர்சனம்!! “இந்து நாளிதழ்” மது, மது குடிக்கும் வழக்கம், முதலியவற்றை ஆதரிப்பது ஏன்? முதலாளித்துவத்துவத்திற்கு “இந்து” போன்ற நாளிதழ்கள் ஆதரிப்பதில்லையா? “ராம்” போன்ற மார்க்சிஸ்டுகளை வைத்துக் கொண்டு, இடதுசாரி சித்தந்தத்தைப் பரப்பி வரும் “இந்துவின்” இரட்டைவேடத்தை இந்தியர்கள் புரிந்து கொள்ளவேண்டும். இப்பொழுதுள்ள ஊடகங்களைச் சார்ந்த கம்பெனிகளின் இயக்குனர்களில், வேலை செய்யும் அதிகாரி முதல் சாதாரண கடைநிலை ஊழியர் வரை குடிக்காமல் இருக்கிறார்களா? இல்லை அவர்களில் சிலர் மது தயாரிக்கும், விற்க்கும் தொழிற்சாலைகள், கம்பெனிகள் வைத்திருக்கிறார்களா?  ஒருவேளை அவர்கள் வியாபார ரீதியில் பாதிக்கப் படலாம் என்று இவ்வாறு ஆதரிக்கின்றனவா?

செய்கின்ற காரியங்கள் ஒழுக்கமானவையா, இல்லையா?: இந்து குழுமத்தில் பல பெண்கள் வேலை செய்கிறார்கள். அதே போல குறிப்பிட்ட ஊடகக் கம்பெனிகளிலும் வெவேறு மதம், மொழி, ஜாதி என்றுள்ள பல பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள், அவர்களது சகோதரிகள், தாயார்கள், மகள்கள்…………..முதலியோர் இவ்வாறு இரவுகளில் ஆண்களுடன் சேர்ந்து கொண்டு குடித்து, கும்மாளம் அடித்து, ஆடுவார்களா, அல்லது அவ்வாறு நடந்து கொள்ள அனுமதிப்பார்கலா? இல்லை, வெளிப்படையாக அவ்வாறு அறிவித்து, நாங்கள் இந்த கேளிக்கைகளை ஆதரிக்கிறோம் என்று அறிக்கை விடுவார்களா? இவையெல்லாம் ஒழுக்கமுள்ள செயல்கள், சமூகத்தில் ஏற்புடைய காரியங்கள், கலாச்சாரத்திற்குப் பொறுத்தமான நிகழ்வுகள் என்று பறைச்சாற்றுவார்களா? அப்படி செய்தால், அவற்றை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள், ஒழுக்கத்தைக் கெடுக்க வந்தவர்கள், பண்பாட்டை பாழடிக்க முயல்பவர்கள், சமுதாய சீர்ப்பழிப்பாளர்கள் என்றெல்லாம் சொல்லலாம். ஆனால், அதை விடுத்து “மாரல் போலிஸிங்” என்று அலறுவதேன்? அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

© வேதபிரகாஷ்

16-10-2014

[1] http://www.deccanchronicle.com/141013/nation-current-affairs/article/bjp-youth-stop-beer-fest

[2] http://www.newindianexpress.com/cities/chennai/Hotel-Cancels-Beer-Session-as-ABVP-Turns-Party-Pooper/2014/10/13/article2475123.ece

[3]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6505512.ece

[4] http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/abvp-targets-jihadis-after-antiliquor-drive/article6504543.ece

[5] ஸ்ருதிசாகர் யமுனன் “With additional reporting by Petlee Peter in Chennai”, என்று எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர் சென்னையில் இல்லாமல், வேறெங்கோவா இருந்தார்? http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/abvp-targets-jihadis-after-antiliquor-drive/article6504543.ece

[6] http://www.firstpost.com/living/chennais-self-appointed-moral-guardians-abvp-stops-beer-festival-1757529.html

[7] In the Chennai case, the police chose not to do anything to stop the ABVP activists (despite the fact that neither the BJP or ABVP have a major presence in the state) and instead decided that the better solution was to close down the event. One wonders, how police in other states where ABVP has a stronger presence, will react should they start protesting against other anti-Indian culture values.

[8] http://timesofindia.indiatimes.com/city/chennai/ABVPs-beer-act-kicks-up-furore-gets-BJP-backing/articleshow/44819337.cms

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: