15 வயது மாணவன் 23 வயது ஆசிரியையுடன் பள்ளியை, வீட்டை விட்டு ஓடிப் போன சமாச்சாரமும், அவர்களை போலீஸார் தேடிப் பிடித்த கதையும்!
கோதை–சங்கர் விவகாரம் (மார்ச்.2015)[1]: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 31-ந்தேதி வீட்டை விட்டு சென்ற சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குசென்றார் என்று விசாரணை நடத்தி, இருவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23) என்பவருடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்தது[2], இப்படித்தான் சென்ற வருடம் மார்ச் 2015ல் இப்பிரச்சினை விவரிக்கப்பட்டது.

கோதை- சிவசுப்பிடரமணி-காமம், தூக்கல்
திட்டமிட்டு பணம்–நகைகளுடன் ஓடிய ஜோடி: 10-ம்வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் எடுத்து உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். மாணவர்கள் இல்லாத நேரம் வகுப்பறையிலேயே இருவரும் காதல் லீலையில் ஈடுபட்டுள்ளனர். புகைப்படங்கள் வேறு எடுத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால் பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த 31-ந்தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[3]. இப்படி மேலும் தகவல்கள் சேர்த்துக் கொடுக்கப்பட்டன. 15 வயது பையனுக்கு எப்படி 23 வயது பெண்ணிடம், அதிலும், ஆசிரியையுடன் காதல் ஏற்பட்டது என்று விளக்கவில்லை. அது காதல் இல்லை, காமம் தான், அதிலும் இளம்பெண், வயது வந்த பையனுடன் உடலுறவு கொள்லும் அளவிற்கு ஏற்பட்ட கொக்கோக வெறித்தனம். தறிகெட்டு போனதால், ஒழுங்கீனத்தினால், முறைதவறி ஏற்பட்ட விபரீதம் ஆகும்.

கோதை-மணி காமம்
கோதை–சங்கர் விவகாரம் (மார்ச்.2016): ஒரு வருடம் கழித்து ஊடகங்கள் அக்கதை கூறும் விதம் வேடிக்கையாக இருக்கிறது. அது தவறு என்று சுட்டிக் காட்டவில்லை. மாறான, “சென்ஷேசனலிஸம்” ரீதியில் செய்திகளை வெளியிட்டுள்ளன. நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் பிரியா என்கின்ற கோதைலட்சுமி (வயது 23 / 29[4]). இவரது சொந்த ஊர் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை. எம்.எஸ்.சி., பட்டதாரியான இவருக்கும் அதே பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதி 2015 கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் மாயமாகினர் என்பது தமாஷான விசயம். ஏனெனில், போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[5]. அப்படியென்றால், இவ்விவகாரங்கள் தெரிந்து தான் இருக்கின்றன. சமூக சீரழிவுகளால், இந்த இருவரும் சீர்கெட்டு போனதை மறைத்துள்ளனர். ஆரம்பத்திலேயே, அத்தகைய தகாத உறவைக் கண்டித்து, முடித்திருக்க தவறி விட்டார்கள்.

கோமதி-மணி- காமம்.-786
திருப்பூரில் போலீஸார் பிடித்த ஜோடி: இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இருவரையும் தேடிவந்தனர். நாட்டில் பற்பல பிரச்சினைகள் இருக்கும் போது, போலீஸார் இத்தகைய வேலைகளை எல்லாம் செய்ய வேண்டியுள்ளது. பெற்றோர் ஒழுங்காக வளர்த்திருந்தால், மாசிரியர்-மாணவ தர்மம் இருந்திருந்தால், இவையெல்லாம் நடந்திருக்குமா என்று நினைத்துப் பார்க்கவில்லை. மாணவன், ஆசிரியையின் நண்பர்களுக்கு திருப்பூர் பொதுதொலைபேசிகளில் இருந்து அடிக்கடி போன் வருவதை சைபர் கிரைம் போலீசார் அறிந்தனர்[6]. அவர்களை புதுவை, கும்மிடிப்பூண்டி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். ஆசிரியை கோதைலெட்சுமி, மாணவன் சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் திருப்பூரில் பதுங்கி இருந்து அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி.ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூருக்கு சென்று இருவரின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

கோதை-மணி- காமம்-சல்பீ
தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டும்/ கெஞ்சும் ஆசிரியை: 10-03-2016 அன்று இரவு ஆசிரியை கோதைலெட்சுமி மாணவன் சிவசுப்பிரமணியன் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்[7]. பின்னர் அவர்கள் இருவரையும் 11-03-2016 அன்று மதியம் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து அவர்களை கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்[8]. அப்போது ஆசிரியை கோதைலட்சுமி போலீசாரிடம் கூறும் போது, “நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் உண்மையாக காதலித்தோம். சேர்ந்து வாழ ஆசைப்பட்டோம். ஆனால் எங்கள் காதலை யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் புதுச்சேரி சென்று அங்கு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அதுவரை எங்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு இருந்ததில்லை. திருணமத்திற்கு பின்பு தான் கணவன்–மனைவியாக வாழ்ந்தோம். இப்போது நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள். சட்டத்தின் மூலம் எங்களை பிரித்தாலும் மீண்டும் நாங்கள் சேர்ந்து வாழ்வோம். பணத்தின் மூலம் எங்களை பிரிக்க நினைத்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன்[9],” என்று உருக்கமாக கூறி உள்ளார் என்று நக்கீரன்பதிவு செய்கிறது[10]. எங்களைப் பிரித்து விடாதீர்கள் என்று பிடிவாதமாக இருப்பது தெரிகிறது[11]. ஆனால், இதெல்லாம் தவறு என்று எடுத்துக் காட்டப்படவில்லை.
© வேதபிரகாஷ்
13-03-2016
[1] https://socialterrorism.wordpress.com/2015/04/12/trend-of-elopement-of-female-teachers-with-teenage-students/
[2] http://www.dailythanthi.com/News/State/2015/04/11141306/10class-student-love-Teacher-with-the-flow.vpf
[3] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Teacher-Elopes-with-Minor-Boy/2015/04/11/article2758555.ece
[4] தினமலர், தலைமறைவு மாணவன், ஆசிரியை திருப்பூரில் மீட்பு: தென்காசியில் நீதிபதி முன்பு ஆஜர், பதிவு செய்த நாள்
மார் 12,2016 00:04; மாற்றம் செய்த நாள்: மார்ச்.12, 2016: 03.11.
[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Teacher-Elopes-with-Minor-Boy/2015/04/11/article2758555.ece
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1476210
[7] தினத்தந்தி, மாணவருடன் ஓடிய ஆசிரியை கர்ப்பிணியாக திருப்பூரில் மீட்பு , பதிவு செய்த நாள்: வெள்ளி, மார்ச் 11,2016, 11:18 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, மார்ச் 12,2016, 4:45 AM IST.
[8] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/03/11231842/The-student-ran-to-the-teacher–Pregnant-recovery.vpf
[9] தமிழ்.ஒன்.இந்தியா, தற்கொலை செய்து கொள்வேன்…10 ஆம் வகுப்பு மாணவனை பிரிய மறுக்கும் தென்காசி ஆசிரியை !, By: Karthikeyan, Published: Saturday, March 12, 2016, 20:44 [IST].
[10] நக்கீரன், நான் தற்கொலை செய்துகொள்வேன்: மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை, பதிவு செய்த நாள்: 12, மார்ச் 2016 (18:21 IST); மாற்றம் செய்த நாள்: 12, மார்ச் 2016 (18:21 IST).
[11] வெப்துனியா, எங்களை பிரித்துவிடாதீர்கள்: மாணவனுடன் மீட்கப்பட்ட ஆசிரியை வேண்டுகோள், Last Modified: சனி, 12 மார்ச் 2016 (15:57 IST).
குறிச்சொற்கள்: ஆபாசப் படங்கள், ஓடிப்போதல், கர்ப்பம், கற்பு, கல்யாணம், காதல், காமம், குழந்தைகள் பாலியல், கோதை, கோதை நாயகி, கோதை லட்சுமி, சங்கர், சிறுவர்களுடன் உறவு, தமிழச்சி, திருமணம், பள்ளி, பாலியல்
9:39 முப இல் மார்ச் 16, 2016 |
Teacher solli thandha paadam yena thalaippu kodukkalaam. Siriya paiyangal nangu batting seivaargal yena teacher yenniiruppaar polum. Idhaiye oru San vaaddhiyaaraagavum, pen maanaviyaaga irundhu piragu manaiviyaaga maariya sambavangal niramba ullana.
6:06 முப இல் மார்ச் 17, 2016 |
“டீச்சர் சொல்லி தந்த பாடம்” என்று தலைப்பு கொடுக்கலாம். சிறிய பையன்கள் நன்கு பேட்டிங் செய்கிறார்கள் என டீச்சர் எண்ணியிருப்பார் போலும். இதையே ஒரு சன் வாத்தியாரகவும், பெண் மாணவியாகவும் இருந்து பிறகு மாணவியாக மாறிய சம்பவங்கள் நிரம்ப உள்ளன”, என்று பதிவு செய்துள்ளீர்கள்.