பாலியல் புகாரில் மாற்றம் ஆகி வந்த பேராசிரியர் மறுபடியும் அதே புகாருக்கு உள்ளானது – தொடர்ந்து வேலை செய்வது, மாணவர்களின் போராட்டம்!

பாலியல் புகாரில் மாற்றம் ஆகி வந்த பேராசிரியர் மறுபடியும் அதே புகாருக்கு உள்ளானது தொடர்ந்து வேலை செய்வது, மாணவர்களின் போராட்டம்!

Tagore college protest- Daily Thanthi-news cutting

பாலியல் புகாரில் மாற்றம் ஆகி வந்த பேராசிரியரின் லீலை தொடர்வது: மறுபடியும், ஒரு பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக செய்தி வந்துள்ளது. பேராசிரியரை நீக்கக் கோரி, தாகூர் அரசு கலை -அறிவியல் மாணவர்கள் 2- ஆவது நாளாக வியாழக்கிழமையும் 21-02-2019, போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல் நாளன்று கண்டுகொள்ளவில்லை போலும். புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலை – அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர், மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது[1]. ஏற்கெனவே அந்தப் பேராசிரியர் மீது மற்றொரு கல்லூரி மாணவிகள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், மீண்டும் அவர் மீது புகார் எழுந்ததால், பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர்[2]. உண்மையில், அந்த புகாரினால் தான், இக்கல்லூரிக்கு இடம் மாற்றத்தில் வந்ததாகத் தெரிகிறது. இங்கும் புத்தி மாறவில்லை. அதே லீலைகளைத் தொடர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் மேலிடம் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை என்றுதான் தெரிகிறது. ஆனால், மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று, புகாரில் சிக்கிய பேராசிரியரை பணி நீக்கம் செய்ய கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது, என்றதிலிருந்து அது வெளிப்படையாகிறது.

Tagore college protest- Daily Thanthi

காமுக பேராசிரியரின் பெயரை மறைக்கும் மர்மம் என்ன?: மேலும் அந்த காமுக ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடாதது திகைப்பாக உள்ளது. பாதிக்கப் பட்ட மாணவி / பெண்ணின் பெயர் தான் குறிப்பிடக் கூடாது என்றுள்ளது, ஆனால், அந்த, காமுகனின் பெயரை என் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. இதைக் கண்டித்தும், அந்தப் பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தாகூர் அரசு கலை – அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் புதன்கிழமை லாசுப்பேட்டையில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  இது பற்றிய தகவல் அறிந்த லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்[3]. பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது[4]. இந்த நிலையில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை  கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தர்னாவில் ஈடுபட்டனர்[5]. அப்போது பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.  20-02-2019, புதன் கிழமை, உயற் கல்வித் துறை அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தினர்[6]. அக்கல்லூரியில் சரித்திரத் துறையில் உள்ள பேராசிரியர் / துணையாசிரியர்கள் பின் வருமாறு[7]:

Tagore college protest

பாலிமர் செய்தி காமுக ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டது: 1. சந்தீப்குமார், 2. ஏ. அருள்ஜோதி, 3. ருக்குமணி, 4. பி. ரவிச்சந்திரன், 5. என், சீனிவாசன், 6. என். வேலு, 7. சந்தீப் குமார், இவர்களில் யாரந்த கருப்பு ஆடு என்று தேட வேண்டியுள்ளது. ஆனால், பாலிமர் செய்தி, அருள்ஜோதி என்பவர் தொடர்ந்து இரட்டை அர்த்த வார்த்தைகளை பேசுவதாகவும், பாலியல் சீண்டல் செய்வதாகவும் அக்கல்லூரி மாணவிகள் புகார் கூறுகின்றனர்[8]. சரித்திரம் மற்றும் ஆங்கிலம் என்று இருதுறைகளில் எம்.ஏ பட்டம் பெற்றவர், இரட்டை அர்த்த வார்த்தைகளை பேசுவது நிதர்சனமா, தலைவிதியா அல்லது காலத்தின் அலங்கோலமா என்று அலச வேண்டியுள்ளது[9]. இனி அருள்ஜோதி தொடரும் நிலை என்னவென்று சொல்வது? பாடம் சொல்லிக் கொடுக்கின்ற பொறுப்புள்ள ஆசிரியர்கள், இவ்வாறான கீழ்த் தரமான செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. கடுமையான நடவடிக்கை எடுக்காமல், இடம் மாற்றம் மட்டும் செய்வதினால், அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை என்று தான் தெரிகிறது. அதனால், அத்தவறை, குற்றத்தை மறுபடியும் செய்யக் கூடாது என்ற முறையில் தண்டனை அளிக்க வேண்டும். இல்லையென்றால், இவர்கள் திருந்த மட்டார்கள்.

Tagore college -Dinamani

செய்ய வேண்டியது என்ன?: பேராசிரியர் தகுதி கூட முறையாக காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத அல்லது முடியாத கைகளுக்கு உட்பட்ட மோசமான இந்தப் பேராசிரியர் இருந்து வருகிறார் என்பது சமூகத்திற்கு இழுக்காகும். இவருக்கு ஒரு மகள் இருந்து, அம்மகள்  இதேபோன்று இன்னொரு பேராசிரியரின் பாலியல் தொல்லைக்கு உட்பட்டு இருந்தால் சும்மா இருப்பாரா அல்லது இதேபோன்று நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பாரா, கோபித்துக் கொள்வாரா என்ற கேள்விகள் எல்லாம் எழத்தன் செய்கின்றன. இத்தகைய சமூக குற்றவாளிகளை கண்டு கொள்ளாமல் இருப்பது, இடம் மாற்றம் செய்வது போன்றவை எல்லாம், அவற்றிற்கு உதவி செய்வது, உக்கிரத்தை வளர்ப்பதற்கு சமம் ஆகும். எனவே கல்லூரி அதிகாரம் மற்றும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து இத்தகைய மிருகங்களை சீர்திருத்த வேண்டும், தண்டிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

03-03-2019

Tagore college - sex professor

[1] தினமணி, தாகூர் கல்லூரி மாணவர்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம், By DIN | Published on : 22nd February 2019 09:17 AM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/feb/22/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3100705.html

[3] தினத் தந்தி, மாணவிகளிடம் சில்மிஷம் புகார்: பேராசிரியரை பணியிடநீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம், பதிவு: பிப்ரவரி 21, 2019 04:30 AM

[4] https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/21041644/Students-complained-of-harassmentStudents-struggle.vpf

 

[5] United New of India, Tagore Arts college students stage protest over professor’s ‘misbehaviour’, Posted at: Feb 21 2019 4:20PM

[6] Puducherry, Feb 21 (UNI) Students of Tagore Arts college here abstained from their classes for the second day on Thursday and resorted to a dharna demanding action against a college professor who allegedly misbehaved with a girl student. According to the students, the history professor misbehaved with a girl student and the students were on agitation demanding his dismissal. It may be noted that they picketed the higher education department on Wednesday.

http://www.uniindia.com/tagore-arts-college-students-stage-protest-over-professor-s-misbehaviour/south/news/1507086.html

[7] History Faculty : Dr.D.Sandeep Kumar,M.A.,M.Phil., Ph.D.  HOD

Dr. A. Arul Jothi. M.A. (His., Eng.), M.Phil., M.T.M., B.Ed., M.B.A., Ph.D.

Mrs.Rouccoumany,M.A.,M.Phil.,M.T.M,M.M.M.,M.Ed.

Mr.N.Sivaraman,M.A.,B.Ed.,PGDTA.,M.T.M.,M.Phil.,(Cert.in Hindi)

Mr.P.Ravichandirane,M.A.,M.Phil.,PGDTA,

Dr.N.Velu,M.A.,M.Phil.,B.Ed.,Ph.D.M.T.M.,PGDAS.

Dr.Sandip Kumar, MA., M.Phil, Ph.D

[8] பாலிமர் செய்தி, அரசு கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம், Feb 22, 2019 6:37 AM.

https://www.polimernews.com/push/share/news.php?id=52476

[9] https://www.polimernews.com/push/share/news.php?id=52476

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: