Archive for the ‘இமையே கண்ணைக் குத்துகிறது’ Category

பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!

ஜூலை 23, 2010

பல இளம் மாணவிகளை கற்பழித்த சலாவுத்தீன் அயூப்: இன்னுமொரு பிரைட்!

எம். எல். பிரைட் என்ற கொடைக்கானல் பள்ளி தாளாளர் எப்படி ஷீபாபால் என்ற பிரின்ஸிபாலின் துணையுடன், பல மாணவிகளை பாலியல் வன்மத்திற்கு உட்படுத்தப்பட்டார்களோ, அதே மாதிரியான நிலை இங்கேயும் காணப்படுகிறது. பெண்களே பெண்களின் சீரழிவிற்கு உடந்தையாகயிருப்பது ஆராய்ச்சிக்குரியதாக உள்ளது.

அது மட்டுமல்லாது, மாணவிகளின் விடுதியில் அறையை வைத்திருந்தது, தனியாக அழைத்தது, ஆபாச படங்களைக் காட்டியது, தொட்டுப்பேசியது, கட்டிப்பிடித்தது…………………….

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஷிபாபால் மற்றும் பிரைட் கைது!

http://christianityindia.wordpress.com/2010/07/03/மாணவிகளுக்கு-பாலியல்-தொந/

24-07-2019 (சனிக்கிழமை):முஹமது சலாவுத்தீன் அயூப் தான் 17 வயது மாணவியைக் கற்பழித்ததை ஒப்புக்கொண்டு விட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

parkwood school director-மாணவிகளுடன்

parkwood school director-மாணவிகளுடன்

23-07-2019 (வெள்ளிக்கிழமை): நேற்றுவரை தமது சகோதரரை வலுவாக ஆதரித்து வந்த முஹமது சலாவுத்தீன் அயூப்பீன் சகோதரி ஆயிஷா தன்வீர், 23-07-2010 அன்று நடந்த செய்தியாளர்களின் கூட்டத்தில், அயூப் தனது பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்று அறிவுத்துள்ளார். இதைத்தவிர, தமது பள்ளியின் பெயரைக் கெடுக்கத்தான், இவ்வாறான செயல்களை செய்யப்படுகிறது என்றெல்லாம் கூட பேசியுள்ளார்.

போலீஸார், ஹைதராபாதில் உள்ள கிளினிக்கில் விசாரித்தபோது, மருத்துவர், அயூப் அந்த பெண்ணை கருக்கலைக்க அழைத்து வந்ததாகவும், ஆனால், மாத்திரிகைகள் கொடுத்ததால், கர்ப்பமடைந்து ஆனால் ஆரம்பநிலையிலேயே கலைந்து விட்டதாகவும், அதனால், தான் சாதாரணமாகத்தான் சிகிச்சையளித்ததாக கூறியுள்ளார்.

முஹமது-அயூப்-கற்பழிக்கப்பட்ட-மாணவி

முஹமது-அயூப்-கற்பழிக்கப்பட்ட-மாணவி

துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது: துப்பாக்கி முனையில், மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள “பார்க் வுட்’ சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் முகமது அயூப்பை, கற்பழிப்பு புகாரின் அடிப்படையில், ஜூபிலி ஹில்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கற்பழித்ததாக, அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்[1].

சலாவுத்தீன்-அயூப்-கைது-மாணவிகள்-கற்பழிப்பு

சலாவுத்தீன்-அயூப்-கைது-மாணவிகள்-கற்பழிப்பு

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: தன் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவியை, அயூப், ஜூபிலி ஹில்ஸிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியைக் காட்டி, மிரட்டி கற்பழித்துள்ளார். ஆபாசப் படமும் எடுத்துள்ளார்[3]. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாதென்று கூறியும், ஆபாசப் படத்தை காட்டி மிரட்டியும், கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவி மீது பாலியல் வன்முறைகளை நிகழ்த்தி வந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரைகளைத் தனக்குக் கொடுத்தது இல்லாமல், மருத்துவரிடத்திலும் அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளாள்..

மாணவி-ஹைதரபாத்-மும்பை

மாணவி-ஹைதரபாத்-மும்பை

பிரைட்டின் முறையை விஞ்சிய அயூப்பின் முறை: அயூப் மாணவிகளின் ஹாஸ்டலில் ஒரு தங்கும் அறை வைத்திருந்தான். மார்ச் 10ம் தேதி அந்த மாணவியை அங்கு வருமாறு அழைத்தானாம். மயக்கமருந்து கலந்த பானத்தைக் கொடுத்து மயக்கம் அடைந்தவுடன் அம்மாணவியைக் கெடுத்துள்ளானாம். 17-வயதான அம்மாணவி மயக்கம் தெளிந்ததும், வலியாக இருக்கிறது என்று சொன்னபோது, அயூன், கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றானாம். 45 நாட்கள் கழித்து அதேமுறையைக் கையாண்டானாம். பிறகு மயக்க மருந்து கொடுக்காமலே கற்பழிக்க முயன்றபோது, அம்மாணவி தடுத்திருக்கிறாள். ஆனால், உன்னையும், உன் சகோதரி மற்றும் சகோதரனையும் கொன்று விடுவேன் என்று மிரட்டி கற்பழித்திருக்கிறான். இதுமாதிரி தன்னை 1520 தடவை கற்பழித்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளாள். அதில் இரண்டுமுறை, அயூப் தன்னுடைய இல்லத்திலேயே அழைத்துச் சென்று கற்பழித்திருக்கிறான்.

பெற்றோரிடம் சொல்லிய பிறகு புகார் கொடுக்கப்பட்டது: இது குறித்து, டில்லியிலுள்ள தனது பெற்றோரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி கூறியிருக்கிறார். இதனையடுத்து, அவளது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர் அயூப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

பள்ளி பெண் ஊழியர், அசிரியைகள், மாணவிகள் பட்டபாடு[4]: அந்த பள்ளியின் மாணவிகள் மற்றும் வேலைசெய்வோர் அயூபின் நடத்தைப் பற்றி பலமுறை புகார் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். ஏனெனில், அலுவலகத்தில் வேலை செய்வோர் மற்றும் ஆசரியைகள் கூட அயூப்பின் நடத்தையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2003லிருந்து வேலை செய்து வரும் ஒரு பெண் ஊழியர் கூறுவதாவது, “மாணவியர்களிடம் அவை நடந்து கொள்ளும் விதம் எனக்குக்கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. மாணவிகளிடம் அடிக்கடி சக மாணவர்களிடம் அவர்களுடைய உறவு எப்படியுள்ளது என்று கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறான். வயதுக்கு வர்ம் போது ஏற்படும் உணர்ச்சிகள், அனுபவங்கள் முதலியவற்றை தன்னிடம் விவரிக்கும்படும் கட்டாயப்படுத்துவான். இதையெல்லாம் “ஆலோசனைக் கூறுதல்” என்ற போர்வையில் நடத்திவந்தான். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கேட்கவில்லை”. அந்த மாணவியின் கற்பழிப்புப் பற்றி நெடுங்காலமாக கேட்டு வந்துள்ளானாம். அதுமட்டுமல்லாது, அடிக்கடி ஆசிரியைகளை தொந்தரவு செய்வதுடன், அசிங்கமான வார்த்தைகளையும் பிரயோகித்து பேசுவானாம்.

புகார் கூறிய மாணவி மீது நடவடிக்கை – பள்ளீயிலிருந்து நீக்கம்: இதனிடையே, அந்த மாணவிக்கு படிப்பில் போதிய ஆர்வமில்லையென்று கூறி, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் பலர் நேற்று அப்பள்ளியின் முன் ரகளை செய்து அலுவலகத்திலுள்ள நாற்காலிகளை உடைத்தனர். இப்பள்ளி மிகவும் பிரபலமானது. கனடா, துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இப்பள்ளியின் கிளைகள் உள்ளன.

ஆயிஷா தன்வீர் மாணவிகளைக் குற்றஞ்ச்சாட்டுவது[5]: அயூப்பின் சகோதரி மற்றும் அப்பள்ளியின் மற்றொரு இயக்குனராக இருக்கும் ஆயிஷா தன்வீர் என்ற பெண் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அம்மாணவி 2009லேயே வகுப்புவாதப் பிரச்சினையை உருவாக்க முயன்றபோது, அப்பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். அவள் அப்பள்ளி மாணவனுடன் உறவு வைத்திருந்ததாகவும், அதனால் அவனை மதம் மாற பிடிவாதம் பிடித்ததாகவும், இதனால் மதப்பிரச்சினை வரும் என்று, குறிப்பாக, அம்மாணவனே புகார் கொடுத்தபோது, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாள். மறுபடியும் இந்த வருடம் ஜனவரியில் அந்த பெண்ணின் தந்தை வந்து கெஞ்சியதால், மறுபடியும் அனுமதி வழகினோம்.

ஆதரிக்கும்-ஆயிஷா-தன்வீர்-பள்ளிப்பெண்கள்-கற்பழிப்பு

ஆதரிக்கும்-ஆயிஷா-தன்வீர்-பள்ளிப்பெண்கள்-கற்பழிப்பு

மேலும், அம்மாணவி உயர்ந்த இடத்திலிருந்து வந்துள்ளதால், பள்ளி நிர்வாகம் மறுக்கமுடியாமல் போய்விட்டது என்று ஒரு ஆசிரியை சொல்கிறார். அதனால் அம்மாணவியும் மற்றவர்களிடம் கொஞ்சம் துடுக்காகவே பேசுவாள், “என்னை யாதாவது செய்தால், இந்த பள்ளிக்கே பிரச்சினையை உண்டாக்கி விடுவேன்”, என்பாளாம். அப்பெண்ணின் தந்தை, “பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று அயூப் என்னை மிரட்டுகிறார். அது மட்டுமல்லாது, எனக்கு ஒரு வெற்று-செக்கைக் கொடுத்து அமைதியாக இருக்கும்படியும் மிரட்டியுள்ளார்”, என்கிறார்.


[1] தினமலர், துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு: பள்ளி முதல்வர் கைது, ஜூலை 22,2010,  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=45139

[2] P Hareesh, Parkwood school director molested six more girls, First Published : 23 Jul 2010 04:44:26 AM IST

http://expressbuzz.com/cities/hyderabad/parkwood-school-director-molested-six-more-girls/192246.html

[3] The Hindu, Friday, Jul 23, 2010, http://www.hindu.com/2010/07/23/stories/2010072358310100.htm

[4] Times of India, ‘Parkwood staff, students faced abuse’, TNN, Jul 22, 2010, 11.56pm IST

http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Parkwood-staff-students-faced-abuse/articleshow/6202912.cms

[5] http://www.mumbaimirror.com/article/2/20100723201007230340093091b362324/Malad-girl-in-Hyderabad-alleges-rape-by-principal.html

கற்பழிப்பு பாதிரி, முல்லா, சாமி வரிசையில் ஒரு அமைச்சர்!

மே 3, 2010

கற்பழிப்பு பாதிரி, முல்லா, சாமி வரிசையில் ஒரு அமைச்சர்!

பாலியல் புகாரால் கர்நாடக உணவு மந்திரி ராஜினாமா: சர்ச்சையை தவிர்க்க முதல்வர் அதிரடி முடிவு
மே 03,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=18098

Latest indian and world political news information

ஹாலப்பாவின் “ஹால்”-நிலை மோசம்தான்: பெங்களூரு:நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு வெளியானதையடுத்து, கர்நாடகா உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ஹர்தாலு ஹாலப்பா, தன் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்ததாக ஊராட்சித் தேர்தலை கட்சி சந்திக்க வேண்டியிருப்பதால், மேலும் சர்ச்சை வேண்டாம் என்ற கருத்தில் அமைச்சர் ராஜினாமா முடிவு வேகமாக எடுக்கப்பட்டது.கர்நாடகா உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா. முதல்வர் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளர். முதல்வரின் சொந்த மாவட்டமான ஷிமோகாவை சேர்ந்தவர். இவர், பாலியல் புகாரில் சிக்கியதாக, கன்னட நாளிதழ் ஒன்றில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை படித்தவுடன் ஹாலப்பா, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் எடியூரப்பா அலுவலகத்திற்கு தகவலை அனுப்பி வைத்துள்ளார்.

ஹாலப்பாவின் நெஞ்சுவலி நாடகம், கற்பழிப்பு, பத்திரிகையில் வெளியான தகவல்: ஹாலப்பா அமைச்சராக இருந்த போது, ஷிமோகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு, நண்பரின் வீட்டிற்கு சென்றார். அங்கு, சாப்பிட்டு விட்டு அங்கேயே தங்கியிருந்தார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், மாத்திரை வாங்கி வருமாறும் தனது நண்பரிடம் கூறினார். நண்பரும் மாத்திரைகளை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தாராம். அப்போது நண்பரின் மனைவி, ஆடைகள் கலைந்த நிலையில் அழுது கொண்டிருந்தார். இச்சம்பவம் நடந்தவுடன் நண்பரின் மனைவி, தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். இந்த பாலியல் பலாத்கார விவகாரம் வெளிவந்தால், தனது பதவிக்கு ஆபத்து என்பதை அறிந்த அமைச்சர் ஹாலப்பா, இந்த விவகாரத்தை வெளியில் கூறாத வகையில் நண்பர் குடும்பத்தை மிரட்டி வைத்திருந்தார். இச்சம்பவம், கடந்த நவம்பரில் நடந்துள்ளது. இவ்வாறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஹாலப்பா விவகாரம், கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தினரும் ஆவேச அறிக்கை, பேட்டி வெளியிட்டுள்ளனர்.

வழக்கம் போல மறுப்பு, பேட்டி, ராஜினாமா: ராஜினாமாவுக்கு பின், நிருபர்களிடம் ஹாலப்பா கூறுகையில், ”என் மீதான குற்றச்சாட் டுகள் ஆதாரமற்றவை, ஜோடிக்கப்பட்டவை. கட்சிக்கும், அரசுக்கும் எவ்வித சங்கடமும் வரக்கூடாது என்பதற்காக, அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தேன். முதல்வர் வெளியூரில் இருப்பதால் அவருடனும், கட்சித் தலைவர் ஈஸ்வரப்பாவுடனும் தொலைபேசியில் பேசி, ராஜினாமா முடிவு குறித்து தெரிவித்தேன். முதல்வர் எடியூரப்பா பெங்களூரு வந்தவுடன், அவரை சந்திப்பேன். இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. பல மாதங் களாக திட்டமிட்டு, சிருஷ்டிக்கப் பட்டுள் ளது. விசாரணைக்கு பின்னர், உண்மை வெளிவரும்.  இதன் பின்னணியில், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்கள், எதிர்க்கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. யார், யார் உள்ளனர் என்பதை தக்க நேரத்தில் தெரிவிப்பேன். பொது வாழ்க்கையில், ஆரம்பம் முதலே, நேர்மை, நெறிமுறைகளை பின்பற்றி வந்துள்ளேன். குற்றச்சாட்டு குறித்து, பத்திரிகையில் செய்தியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். கிராம ஊராட்சி தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த என்னை பலிகடாவாக்க முயற்சி நடக்கிறது. ராஜினாமா செய்துள்ளதால் எனக்கு எவ்வித மன வருத்தமும் இல்லை. அரசியலில் தொடர எனக்கு வயது இன்னமும் இருக்கிறது. புகழுக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, ராஜினாமா செய்தேன். ராஜினாமா செய்யும்படி யாரும் வற்புறுத்தவில்லை. எனது சொந்த முடிவு. இதன் பின்னணியில், பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவர் உள்ளார். நான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கெடு விதித்திருந்தார். இவ்விஷயங்கள் குறித்தும் முதல்வர், கட்சித் தலைவருடன் ஆலோசிப்பேன்.இவ்வாறு ஹாலப்பா கூறினார்.

எதிர்கட்சிகள் சூழ்ச்சியா, ஹாலப்பாவின் வீழ்ச்சியா: ஹாலப்பாவின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் எடியூரப்பா ஏற்றுக்கொண்டு, கவர்னருக்கு அனுப்பி வைத்தார். முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ”ஹாலப்பா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகின்றன. பாரதிய ஜனதாவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் சதி செய்துள்ளனர். ஹாலப்பாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.அடுத்ததாக ஊராட்சி தேர்தல் வரும் நேரத்தில் சர்ச்சை ஏற்படுவதைத் தடுக்க முதல்வர் எடியூரப்பா, அமைச்சரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றார். ஹாலப்பா மீதான புகாரினால், முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ரேஸ் கோர்ஸ் ரோடு இல்லத்தின் முன், பெங்களூரு நகர இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்; 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

மொபைலில் படம் பிடித்தார் நண்பர்: அமைச்சர் ஹாலப்பாவின் நண்பர், ஷிமோகா வினோபா நகரில் வசிக்கிறார். பைனான்சியர் தொழில் செய்து வருகிறார். வினோபா நகர் வீட்டிலேயே இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.அமைச்சர் ஹாலப்பா சம்பந்தமான விவகாரங்களை, அவரது நண்பரே மொபைலில் படம் பிடித்ததாகவும், 40 வினாடிகள் இந்த படம் ஓடுவதாகவும், ஹாலப்பா, தனது நண்பர் மனைவியின் காலில் விழுவதும், அதன் பின், தனது பேன்டை போடுவதாகவும், அந்த துணிகளுடன் ஹாலப்பா இருப்பது போன்றும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த துணிகள் தற்போது, ‘டி.என்.ஏ.,’ டெஸ்டுக்கு அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் நவம்பர் 27ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நடந்துள்ளது. மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் விரைவில் வெளியாகுமா என்ற பரபரப்பும் மக்களிடம் உருவாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து, ஹாலப்பாவின் நண்பருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: டி.ஜி.பி.,யை சந்தித்து பாதிக்கப்பட்ட பெண் புகார்
மே 03,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18288

கணவரே எடுத்த வீடியோ காட்சிகள்: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஹாலப்பா தொடர்பாக, மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ‘டிவி’யில் ஒளிபரப்பப்பட்டன. ஹாலப்பா மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.கர்நாடக அமைச்சர் ஹாலப்பா, தன் நீண்டகால நண்பர் வெங்கடேச மூர்த்தியின் மனைவி சந்திராவதியை கடந்த நவம்பர் 26ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மனைவி கற்பழிக்கப்பட்டதை அறிந்ததும், வெங்கடேச மூர்த்தி ஆத்திரத்துடன் மொபைல் மூலம் படம் பிடித்துள்ளார். இந்த விவகாரம் நேற்று கன்னட நாளிதழில் வெளியானது. இதனால், தனது அமைச்சர் பதவியை ஹாலப்பா ராஜினாமா செய்தார்.வெங்கடேச மூர்த்தி மொபைலில் படம் பிடித்த காட்சிகளும் நேற்றிரவு’ டிவி’க்களில் ஒளிபரப்பாகின. அந்த காட்சியில், சந்திராவதி அலங்கோல நிலையில் காணப்படுகிறார். அறையிலிருந்த ஹாலப்பாவிடம் தகாத வார்த்தைகளால் சண்டை போடுகிறார்.

ஹாலப்பாவின் ஆட்கள் மிரட்டுதல்: அப்போது, ஹாலப்பா கறுப்புச் சட்டையில் காணப்படுகிறார்.சந்திராவதி பெண்கள் அணியும் அரைக்கை சட்டையும், இடுப்புக்கு கீழ் கவுனும் அணிந்துள்ளார். இந்த காட்சியில் ஹாலப்பாவின் முகம் தெரியவில்லை. ஒரு கட்டத்தில், என்னை அடிக்கிறாயா என்று சந்திராவதி, கோபமாக கூறுவது மட்டும் கேட்கிறது.

இந்த சம்பவத்திற்குப் பின், அமைச்சர் ஹாலப்பாவின் அடியாட்கள், வெங்கடேச மூர்த்தியின் வீட்டிற்கு வந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். கோபமடைந்த வெங்கடேச மூர்த்தி, ஹாலப்பாவிற்கு போன் செய்து, ‘ஷிமோகாவில் நான் மரியாதையாக வாழ்ந்து வந்தேன். நான் உண்டு, எனது மனைவி, மக்கள் உண்டு என்று வாழ்ந்து வந்தேன். எனது குடும்பத்தை பாழடித்து விட்டாய். எனது மனைவியை கற்பழித்தது மட்டுமின்றி, எனது பிள்ளைகளையும் இம்சை படுத்துகிறாய். உன்னை சும்மா விடமாட்டேன். எனது மனைவியை கற்பழித்ததற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை வெளியிட்டு, உன்னை ஒரு வழி செய்வேன்’ என்றார்.அதற்கு ஹாலப்பா, ‘உன்னை யாராவது மிரட்டினால், அவர்கள் வந்திருந்த கார் எண்ணை பதிவு செய்து, போலீசில் புகார் கொடுக்க வேண்டியது தானே. என்னிடம் ஏன் சொல்கிறாய். எனக்கும், இந்த சம்பவத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை’ என, கூறியுள்ளார்.

நண்பர்களிடையே மோதல்: அப்போது வெங்கடேச மூர்த்தி கூறுகையில், ‘தப்பு செய்தவன் நீ. உன் மீது தான் புகார் செய்ய வேண்டும். எனது பிள்ளைகளை கொடுமைப்படுத்துகிறாய். அவர்கள் மன வேதனையில் உள்ளனர்’ என்றார்.நடந்த சம்பவங்கள் குறித்து, கர்நாடகா போலீஸ் டி.ஜி.பி., அஜய்குமார் சிங்கை, வெங்கடேச மூர்த்தியும், அவரது மனைவி சந்திராவதியும் நேரில் சந்தித்து கூறினர். அப்போது, ‘அமைச்சராக இருந்த ஹாலப்பா தன்னை கற்பழித்து விட்டதாக’ சந்திராவதி அழுது கொண்டே புகார் கூறினார். ‘தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று டி.ஜி.பி., அஜய்குமார் சிங் தெரிவித்தார்.இதையடுத்து, ஹைகிரவுண்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, முன்னாள் அமைச்சர் ஹாலப்பா மீது இருவரும் புகார் செய்தனர். அவர் மீது 376வது பிரிவின் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நேரமும் ஹாலப்பா கைது செய்யப்படலாம்.

ஹாலப்பாவின் மீது பெங்களூரில் புகார்: இதை எதிர்பார்த்த ஹாலப்பா, தனது வக்கீல்களுடன் கலந்து ஆலோசித்து, முன்ஜாமீன் பெற திட்டமிட்டுள்ளார்.வெங்கடேச மூர்த்தியும், அவரது மனைவி சந்திராவதியும், ராஜ் பவனில் கவர்னர் பரத்வாஜை சந்திக்க சென்றனர். அங்கு அவர் இல்லாததால், ராஜ்பவன் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர். கவர்னரை சந்திப்பதற்காக பெங்களூரில் தங்கியுள்ளனர்.இச்சம்பவம் குறித்து வெங்கடேச மூர்த்தி கூறுகையில், ”ஹாலப்பா மீது ஷிமோகா போலீசாரிடம் புகார் செய்தால், அவர்கள் புகாரை ஏற்க மறுக்கின்றனர். எனவே தான் பெங்களூரு வந்து, ஹைகிரவுண்ட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த வீடியோ காட்சியை நானே தான் படம் பிடித்தேன்,” என்றார்.

சந்திராவதி கூறுவது: சந்திராவதி கூறுகையில், ”கடந்த நவம்பர் 26ம் தேதி, 2009 எனது வீட்டிற்கு சாப்பிட வருகிறேன் என்று ஹாலப்பா கூறினார். எனது கணவரும் சரி என்று கூறினார். அன்று இரவில் சாப்பிட்டு விட்டு, எனக்கு தூக்கம் வருகிறது என்று கூறினார். மாடி அறையில் அவர் தூங்குவதற்கு சென்றார். எனக்கு உடல் நலம் சரியில்லை. எனவே, மாத்திரை வாங்கி வா, என்று எனது கணவரிடம் கூறினார். எனது கணவரும் மாத்திரை வாங்குவதற்காக சென்றார்.  கணவர் வெளியே சென்றவுடன், நான் படுத்திருக்கும் இடத்திற்கு வந்து, என்னிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டார். எனது கணவர், சந்தேகமடைந்து திரும்பி வந்தார். வரும் போதே, மொபைல் வீடியோவை ஆன் செய்தே வந்தார். ஹாலப்பா தவறாக நடக்க முயற்சித்ததை படம் பிடித்தார். நானும், எனது கணவரும் ஹாலப்பாவை செருப்பால் அடித்து விரட்டினோம். அதன் பிறகு அவர், அடிக்கடி எங்களை மிரட்டி வந்தார்,” என்றார்.

பங்காரப்பா தாக்கு: ஹாலப்பா மீது கற்பழிப்பு புகார் பதிவான பிறகு, பல புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இச்சம்பவம் வெளி வருவதற்கு மூல காரணம் முன்னாள் முதல்வர் பங்காரப்பா என்று, முன்னாள் அமைச்சர் ஹாலப்பா புகார் கூறியிருந்தார்.  இதற்கு பதிலளித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் பங்காரப்பா கூறுகையில், ”எனது மைத்துனர் நடவடிக்கை துவக்கத்திலிருந்தே தவறாக தான் இருந்தது. பெண்கள் விஷயத்தில் அவர் மிகவும் வீக்கானவர். என்னுடன் கட்சியில் இருந்த போது, அவர் மீது ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக பெண்களுடன் அதிக தொடர்பு வைத்திருந்தவர் என்று கூறப்பட்டது.இந்த அளவிற்கு அவர் கீழ்தரமாக செயல்படுவார் என்று நினைக்க வில்லை. அரசியல் காரணமாக, அவர் என் மீது வீண் புகார் சுமத்தியுள்ளார்.

கிருத்துவர்களின் செக்ஸ்-ஊழல்கள்!

மார்ச் 30, 2010

கிருத்துவர்களின் செக்ஸ்-ஊழல்கள்

உள்ளூர்வாசி ஷாஜியின் வழிமுறையை விளக்குகிறார்

உள்ளூர்வாசி ஷாஜியின் வழிமுறையை விளக்குகிறார்

சிறுவர்-சிறுமிகள் கொடுமைப் படுத்தப் பட்டத்தை விளக்குகிறார்

சிறுவர்-சிறுமிகள் கொடுமைப் படுத்தப் பட்டத்தை விளக்குகிறார்

செக்ஸிற்காக வளர்க்கப் படும் குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள்

இன்னொரு உள்ளுர்வாசி சொல்கிறார்

இன்னொரு உள்ளுர்வாசி சொல்கிறார்

ஒரு கிருத்துவர் விவரிக்கிறார்

ஒரு கிருத்துவர் விவரிக்கிறார்

அதற்காகவே வேலை செய்யும் நம்பிக்கயான ஊழியர்கள்

ஒரே அறையில் அடைத்து வைத்திருந்தனர்

ஒரே அறையில் அடைத்து வைத்திருந்தனர்

குளிக்க, குடிக்க தண்ணீர் இல்லை

குளிக்க, குடிக்க தண்ணீர் இல்லை

விசுவாசமான ஊழியம் செய்யும் பரிசுத்த ஆவியால் ஆசிர்வாதிக்கப் பட்டவர்கள்

ஒரு பாதிரி காரணங்களை விளக்குகிறார்

ஒரு பாதிரி காரணங்களை விளக்குகிறார்

வடகிழக்கு மாநிலத்தவர் காரணங்களை விவரிக்கிறார்

வடகிழக்கு மாநிலத்தவர் காரணங்களை விவரிக்கிறார்

செக்ஸ்-டூரிஸத்தை ஊக்குவிக்கும் அயல்நாட்டுக் கிருத்துவர்கள்

"ஏசு பதிலளிக்கிறார்" - சென்னையில் இயங்கி வந்த பாலியியல் தொழிற்சாலை

“ஏசு பதிலளிக்கிறார்” ….

ஏசுவின் வீடு

ஏசுவின் வீடு- சென்னையில் இயங்கி வந்த பாலியியல் தொழிற்சாலை - Plot No.11/295, Vasantha street, Golden george nagar, ..., Chennai - 600.

செக்ஸ்-பாதிரிகள், செக்ஸ்-பாஸ்டர்கள், செக்ஸ்-போதகர்கள் தோன்றியுள்ளது, அந்த தொழில் நன்றாக நிறுவப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

சிறுவர்கள் தாங்கள் எப்படியெல்லாம் கொடுமைப் ப்டுத்தப் பட்டனர் என்று விவரிக்கிறார்கள்

சிறுவர்கள் தாங்கள் எப்படியெல்லாம் கொடுமைப் ப்டுத்தப் பட்டனர் என்று விவரிக்கிறார்கள்

சன் - டிவியின் அரைத்த மாவை அரைக்கும் முறை

சன் - டிவியின் அரைத்த மாவை அரைக்கும் முறை

பணிவிடை போர்வையில் செக்ஸ் கொடுக்கப்படும்

church-abused-men-sodonomy

church-abused-men-sodonomy

Bethel-develpoment-trust

Bethel-develpoment-trust

இறையியலை இப்பலானத் தொழிலுக்கு நியாயப்படுத்துதல்

லிபரேஷன் தியோலஜி (விடுதலை இறையியல் = Liberation Theology) போல செக்ஸ்-தியோலஜியை (பாலியல் இறையியல் = Sex Theology) உருவாக்கியுள்ள இறையியல் வல்லுனர்கள்

தூய்மையான கர்ப்பம் (Immaculate conception), கன்னியாஸ்திரீ சேவை (Nunnery), ஏசுவின் தெய்வீக காதலிகள் / மனைவிகள் (Brides of Christ), ஜேஹோவாவின் சேவகியர் (Slaves of Jehovah), புனித புணர்ச்சி சடங்குகள் (Sex-Rites, Sex-Ritual), கூட்டுப் புனர்ச்சி (Hermatic Sexulaism)………………….முதலியவை மறைமுகமாக அறிமுகப் படுத்தல்.

இதற்காக சிறுவயதிலிருந்தே தயார்படுத்தல்

மனம்-உடல் கட்டுப்படுத்தல், தயாராதல், ஏற்புடையதாக்குதல், தகவமைத்தல், உடன்படுதல், சமர்ப்பித்தல் முதலிய ரீதியில் உருவாக்கப்படும் தெய்வீக விபச்சாரிகள்

வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?

பிப்ரவரி 20, 2010

வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?

வேதபிரகாஷ்

அனைதுலக “தப்பியோடும் தண்டனைக் குற்றாவாளி” இந்தியாவில் நுழைந்ததிலிருந்து வெளியேற்றப்பட்ட வரை பதிலளிக்கப்படாத பல வினாக்கள்: ஆங்கிலத்தில் “fugitive” எனக் குறிப்பிடப்படும் “தப்பியோடும் தண்டனைக் குற்றாவாளி”யைப் பற்றி பரவலாக எல்லா விமானநிலையங்களிலும் அவனைப்பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் எல்லமே இருக்கும்[1]. ஆகையால் அவன் சென்னை அனைத்துலக விமான நிலையித்தின் வழியாக உள்ளே நுழைந்திருக்கிறான் என்றாலே அதில் மர்மம் உள்ளது[2]. அதாவது அவன் எப்படி தப்பித்து உள்ளே நுழைந்தான் என்பதே! பிறகு தாராளமாக மஹாபலிபுரத்திற்குச் சென்று அங்கு ஒரு “ரிஸார்ட்”டில் ஒருவருடம் வரைத் தங்கியுள்ளான் என்றால், நிச்சயமாக உள்ளூர் போலீஸார் ஒன்றும் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகின்றது[3]. அதுமட்டுமல்லாது அவனுக்குத் தேவையான தினசரி பொருட்கள், உணவு இத்யாதிகளை எடுத்துக் கொண்டு வந்து வழங்கியவர்களுக்கும் தெரியாமல் இருந்தது / வாழ்ந்தது[4] விந்தையிலும் பெரிய விந்தையே!

Horowitz_Alan-India2007 

Horowitz_Alan-India2007

ரப்பி ஆலன் ஜே என்ற குழந்தை-பாலியல் குற்றவாளி: ரப்பி என்றால் யூதமதகுரு, சந்நியாசி, துறவி, குருக்கள், பூஜாரி, இமாம், காஜி, அர்ச்சகர் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். கிருத்துவத்தில் பிஷப், பாஸ்டர், பிரீஸ்ட், பிரீச்சர்,…………………….என்றெல்லாம் அவரது இறையியல் தகுதி / நிலைக்கேற்ற அழைக்கப்படுவர். சில நேரங்களில் யூத்-கிருத்துவ-முஸ்லிம் மதங்கள் இந்த வார்த்தையை “மரியாதைக்குரிய” என்ற நிலையில் உபயோகிக்கின்றனர். உதாரணத்திற்கு ஒரு முஸ்லிம் நடத்திவருகின்ற[5], “ரப்பானி மருத்துவமனை”! இந்த ரப்பி ஆலன் ஜே “ஸ்னெயூர்” ஹொரோவிட்ஸ் என்பவர் ஒரு குழந்தை மனோத்ததுவ மருத்துவர். ஸ்னேயோர் ஆல்டர், மைக் சோங்கின், ஆலன் ஹொரோவிட்ஸ், ஸ்னெயூர் ஹொரோவிட்ஸ், எலிஸா ஹொரோவிட்ஸ், நம்பலா ரப்பி என்று பலபெயர்களில் அழைக்கப்பட்ட இவன் ஒரு பெரிய குழந்தை பாலியல்-குற்றாவாளியும் கூட. இவனுடைய சரித்திரம் பாலியலாகத்தான் உள்ளது[6]:

1964-1968 ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில், பாஸ்டனில் படித்து முதுகலைப் பட்டம் பெறுகிறான்.
1971 வடக்கு கரோலினாவிலுள்ள, டுயூக் பல்கலைகழகத்தில் மனோத்ததுவம், குழந்தை மனோதத்துவயியல் படித்து எம்.டி, பி. எச்.டி பட்டங்கள் பெறுகிறான்.
1973-76 அகஸ்டாவிலுள்ள ஜியார்ஜியா மருத்துவமனை கல்லூரியில் மனோதத்துவ மருத்துவராக வேலைப் பார்க்கிறான்.
1976-78 வுட்வார்ட் என்ற இடத்திலுள்ள அயோவா பல்கலைகழகத்தில் குழந்தை மனோதத்துவியல், துணை பேராசியராகப் பணியாற்றுகிறான்.
1983 யாகட்வொர்த்டவுன், அரிஜோனா – எம்.டி யாகப் பணிபுரிகிறான்.
1983-85 மோசெய், நியூயார்க்
1985-1990 ஜெருஸலேம் மற்றும் மேற்குகரை, இஸ்ரேல்
1990-91 ஸ்கெனெக்டாடி, நியூயார்க்
1991 வுட்வார்ட், அமெரிக்கா
1991-2004 குழந்தை பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல், சிக்குதல், கைது செய்யப்படுதல்
2004-2006 ஒனெய்டா ஜெயில், நியூயார்க்
2006 பரோலில் விடிவிக்கப்பட்டு அல்பேனி, நியூயார்க்
2006 பரோலில் விடிவிக்கப்பட்டு டெல் அவிவ், இஸ்ரேலுக்குத் தப்பிச் செல்கிறான்.
2006 ஜப்பான்
2006 தார்லாந்து
2006 ஹாங்காங், சைனா நாடுகள்
2007 ஸ்ரீலங்கா
2007 மஹாபலிபுரம், இந்தியா

மே 22, 2007 அன்று காஞ்சிபுரம் போலீஸாரால் கைது செய்யப்படுகிறான். அதாவது 2006 முதல் மே 2007 வரை அவன் மஹாபலிபுரம் ரிஸார்டில் தங்கியுள்ளான்.

Horowitz_Alan-Interpol-1 

Horowitz_Alan-Interpol-1
Horowitz_Alan-Interpol-2 

Horowitz_Alan-Interpol-2

வி ஹியூம் மற்றும் இந்த ரப்பி ஆலன் ஜேவிற்கு தொடர்பு இருந்ததா? இருவருமே குழந்தை செக்ஸ்-விவகாரத்தில் வல்லுனர்களாக இருந்துள்ளார்கள். முன்னவன் படிக்காமலேயே, தனது அனுபவத்தின் மீதாக வல்லுனனாக இருந்திருக்கிறான், பின்னவனோ படித்து பி.எச்.டி பெற்று மருத்துவம்-மனோதத்துவம் படித்தே எப்படி குழந்தைகளை பக்குவமாகத் தமது காம இச்சைக்குட்படுத்துவது என்று அறிந்து, செயல்படுத்தி, அனுபவித்து சுவைத்துவந்துள்ளான். அந்த விஷயத்தில் இருவருமே ஒத்துப் போகின்றனர். பிறகு மஹாபலிபுரம்[7], புருவங்களை உயர்த்துகின்றன. ஏன் மற்ற இடத்திற்கு செல்லாமல், மஹபலிபுரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்? கோவா[8], புவனேஸ்வர்[9], பூரி[10] இப்படி அருமையான இடங்களை விடுத்து ஏன் இங்கு வருகிறான்? ஒரு அயல்நாட்டவன், குறிப்பாக சட்டப்பிடியிலிருந்துத் தப்பியோடி திருட்டுத்தனமாக பல நாடுகளில் ஓடித்திரிந்து மறைய வருகிறன் என்றல் அவனுக்கு அங்கு ஒரு “தொடர்பு” இல்லாமல் வரமாட்டான், வரமுடியாது. விசா, பாஸ்போர்ட் முதலியவை இருக்கவேண்டும். ஆகவே, நிச்சயமாக அவனுக்கு உதவிய “தொடர்பாளிகள்”, கூட்டாளிகள், சம்பந்தப்பட்டோர் இருந்திருக்கிறார்கள். வில் ஹியூமோ தனது குடும்பம் சகிதமாக இருந்து தனது செக்ஸ்-தொழிலை செய்து வந்துள்ளன். ஆகவே, ஒருவேளை அவர்கள் சந்தித்து இருக்கலாம் அல்லது உதவியிருக்கலாம். மே 2002ல் கைது செய்யப்பட்ட வில் ஹியூம் பிறகு பிணையில் வந்து மறைந்து போகிறான். நவம்பர் 2009ல்தான் சூளைமேட்டில் கைது செய்யப்படுகிறான். ஆகவே அத்தகைய ரகசிய வாழக்கை வாழ்ந்த காலத்தில் யாருடன் இருந்தான், யேரெல்லாம் அவனை சந்தித்துள்ளனர் அல்லது இவன் சந்தித்தான் என்ற விவரங்கள் ரகசியமாகவே, மர்மமாகவே இருந்துள்ளன. ஆகவே இவனுக்கும் பல உதவியுள்ளார்கள் என்பதெல்லாம் முன்னமே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[11].

வேதபிரகாஷ்

20-02-2010


[1] அவன் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்பதால் அமெரிக்கா மற்றும் இன்டர்போல் எச்சரிக்கைகள் அனுப்பப்படுள்ளன.

 

[2] அதாவது பாஸ்போர்ட் சரிபார்த்தல், வெளிநாட்டவர் உள்நுழைய அனுமதிக்கும் அதிகாரியின் (Immigration officer) ஒப்புதல் அளித்தல், அத்தகைய அறிவிப்பை “சாஸ்திரி வவனில்” உள்ள அதிகாரிக்கு / அலுவலகத்திற்கு அறிவிக்காமல் இருந்தது என பல சட்டமீறல்கள் அடுக்கப்படும். அந்நிலையில் அதற்காகத் துணைபோன அதிகாரிகளின் பட்டியலும் நீள்கின்றது.

[3] காரில் சென்றிருந்தால், அந்த டிரைவர் நன்றாகவே பார்த்திருப்பான். தினமும் வெளிநாட்டவட் வந்து தங்கும்போது ஹோட்டல் மற்றும் ரிஸார்ட் காரர்கள் அருகிலுள்ள போலீஸாரிடம் வந்துள்ளவர்கள் பற்றி அறிவிக்கவேண்டும் மற்றும் போலீஸாரே வந்து அதற்கான ரிஜிஸ்டரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும். தின-அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

[4] ஏனெனில் இங்கு பணம் வருகின்றது. சாதாரணமாக வெளிநாட்டவர்களிடத்திலே அவ்வாறு பணம் இருக்கிறது அல்லது இல்லாத நிலையிலும் உள்ளூர்வாசிகள் அல்லது சென்னையிலிருந்து உதவுகின்றனர் என்றால் அவன் வருகை அந்த உள்ளூர்வாசிகளுக்கு / தொடர்பாளிகளுக்குத் தெரியாமலில்லை.

[5] தொலைக்காட்சிக்களில் அதிகமாக விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன. அந்த மருத்துவர் முந்தைய ஜனாதிபதி அப்துல்கலாமுடன் கூட சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் எல்லாம் கூட நடுநடுவே காட்டுவர்.

[6] கீழ்காணும் இணைதளத்தில் அவனைப் பற்றிய மேலும் பல  விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்: http://www.theawarenesscenter.org/Horowitz_Alan.html

[7] வேதபிரகாஷ், ,சென்னைசெக்ஸ் நகரமாகமாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

https://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

வேதபிரகாஷ், வில் ஹியூம்குழந்தைக் கற்ப்பழிப்பாளி! ,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக்-கற/

[8] கோவாவில் எல்லாவிதமான விபச்சாரமும் சாதாரணமானது, சகஜமானது. பணம் வருகிறது, உள்ள பல்நாட்டு முதலாளிகளை சந்தோஷப்படுத்துகிறது என்பதனால் அரசாங்கள் கண்களைமூடிக்கொண்டு இருக்கிறது.

[9] புவனேஸ்வரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்மான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதலியன பிரமிப்பாக இருக்கிறது. வெளிநாட்டவர்கள் அங்கு அதிகமாக வந்து செல்வதும் மர்மமாக உள்ளது. கடந்த வருடங்களில் பல ஃபிடோஃபைல்கள் / குழந்தை பாலியல் வன்முறையாளர்கள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

[10] பூரியும் இதே நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வந்துள்ள வெளிநாட்டுக் குழுக்களிடம் இதைப் பற்ரியேல்லாம் கேட்கிறர்களா இல்லையா என்றதெல்லாம் தெரிவவில்லை.

[11] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன் I – IV பார்க்கவும்.

வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்!, https://socialterrorism.wordpress.com/2009/11/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

தேவநாதனுக்கும் பிணை-விடுதலை!

பிப்ரவரி 19, 2010

தேவநாதனும், குஷியில் திளைக்கும் நிருபர்களும்! தேவநாதன் என்றாலே நிருபர்களுக்குக் குஷிதான்! பிளந்துக் கட்டுகிறர்கள். இதோ தலைப்புகள்:

·         தட் ஈஸ் தமிள் கூறுவதென்றால்[1], அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்

·         தினத்தந்தி சொல்வது[2], “செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை …”!

·         தினகரன் சொல்வது[3], “அர்ச்சகர் தேவநாதன் ஜாமீனில் விடுதலை”!

பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்டு சிக்கினார்[4]: வெளியே, தலைப்பில் சொல்வது, “அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்”! உள்ளேச் சொல்வதோ, “பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்டு…..”! தினத்தந்தி “செக்ஸ் அர்ச்சகர்” என்ற பட்டத்துடன் விளக்குகிறது! தினகரனோ, “அர்ச்சகர்” என்றே நிறுத்திக் கொள்கிறது!! இத்தகைய “ஊடக மரியாதை நிமித்தங்கள், வழக்குகள், பாரம்பரியங்கள்” முதலியவற்றை என்னுடைய முந்தைய கட்டுரைகளில் காணவும்[5]. ஊடகக்காரர்களின் செம்மொழி பாதிப்பு அதிகமாகவே உள்ளது [செம்மொழி = செம்மை + மொழி, செம் +மொழி, செ + மொழி, எனக்கொண்டால், தமிழ் புலவர்கள் அதற்கு என்ன அர்த்தம் என்று சொல்வார்கள்!]

ஜாமீனில் வெளியே வந்தால் தாக்கப்படலாம்: கோவில் கருவறையில் அசிங்கமாக நடந்து கொண்ட அர்ச்சகர் தேவநாதனுக்கு காஞ்சிபுரம் ஜுடிஸியல் மாஜிஸ்டிரேட் கோர்ட்- I நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்டு சிக்கினார் தேவநாதன். தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளியே வந்தால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் ஜாமீன் கோராமலேயே இருந்து வந்தார். தமிழ்நாட்டுக் காமக் கொடூர எதிர்ப்பின் மகிமையே அலாதிதான்!

“கற்பழிக்கப்பட்ட பெண்களின்” பரிசோதனை என்னவாயிற்று? தன்னைக் கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்த பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்து விட்டது என்றெல்லாம் செய்தி வந்ததே என்னவாயிற்று? ஹேமலதா மாதிரி அமுக்கிவிட்டார்களா?  அத்தகைய பரிசோதனைகளில் என்னத்தான் தெரியவரும்? தேவநாதன் உடலுறவு கொண்டிருந்தால் உண்மை தெரியவரும். மற்றவர் புனைத்திருந்தால் அந்த உண்மைகளும் வெளிவரத்தானே செய்யும்? இதில் ஒருத்தி விபச்சாரி என்று வேறு சொல்கிறார்கள்! அந்த விஷயம்தான் மறைக்கப்படுகிறதா?

இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை! பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக இந்திய குற்றாவியல் சட்டத்தின் பிரிவுகள் 295; 153-A மற்றும் 506 (ii) பிரிவுகளில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப் போடப்பட்டது[6]. இந்த நிலையில், நேற்று அவரை காஞ்சிபுரம் முதலாவது நீதித்துறை நடுவர் சுதா முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது தேவநாதனின் காவலை மார்ச் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது தேவநாதனின் சார்பில் ஆஜரான வக்கீல், தேவநாதன் கைது செய்யப்பட்டு 90 நாட்களாகி விட்டது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதைப் பரிசீலித்த நீதிபதி, நிபந்தனை ஜாமீனில் – 2 நபர் ஜாமீனும், தலா ரூ. 5 ஆயிரம் சித்து பத்திரம் தாக்கல் செய்து விதலையாகலாம், அத்துடன் அவர் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வெளியூர் செல்லக்ககடாது, என்ற நிபந்தனைகாளுடன் – தேவநாதனை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

தேவநாதன் வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம்[7]: இதென்ன கலாட்டா? தேவநாதன் வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் திடீரென மாற்றப்பட்டு விட்டனர். இவர் குறித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் அவர் மீது வழக்கு பதிவு செய்தார். கோர்ட்டில் சரண் அடைந்த தேவநாதனை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினார். இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. விஜயராகவன் விசாரணையை தொடர்ந்தார். இந்நிலையில் தேவநாதன் வழக்கை முதலில் விசாரித்த இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் திடீரென வேலூர் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அது போல் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயராகவன், கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியை கூடுதலாக மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கவனித்து வருகிறார். தாலுகா இன்ஸ்பெக்டராக சம்பத் நியமிக்கப்பட்டு இருக்கிறார்[8]. இதிலும், நிருபர்களின் தலைப்புகள் இதோ:

அப்படியென்ன, இதில் பிரச்சினை?

நவம்பர் 2009 கைதுகள், பிப்ரவரி 2010 விடுதலைகள்!: புவனேஸ்வரி பிரச்சினையைத் தொடர்ந்ததுதான் இப்பிரச்சினைகள்-விவகாரங்கள்!

 • வில் ஹியூம் 07-11-2009 அன்று கைது செய்யப்படுகிறான்.
 • 08-02-2010 அன்று விடுதலை செய்யப்படுகிறான்!
 • தேவநாதன் 16-11-2009 அன்று கைது செய்யப்படுகிறான்.
 • 18-02-2010 அன்று[10] விடுதலை செய்யப்படுகிறான்!
தேவநாதனுக்கு-விடுதலை-பிணை

தேவநாதனுக்கு-விடுதலை-பிணை

குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், அவர்களை சாக்காக / முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு, பெரிய குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதுதான் இப்பொழுதைய “modus operandi” யாகத் தெரிகிறது!

 • நிச்சயமாக புவனேஸ்வரி விசயத்தில் தப்பித்துக் கொண்டது மற்றவர்கள்தாம், பலிகடா ஆக்கப்பட்டது புவனேஸ்வரியும், பத்திரிக்கையாளர்களும்.
 • வில் ஹியூமை காப்பாற்றத் துடிப்பதிலும் பெரியவர்கள் உள்ளார்கள், இங்கு பலிகடா ஆக்கப்பட்டது பல பெண்களும், ஆண்களும்!
 • ஆனால், தேவநாதன் விஷயத்தில் மறைக்கப்படுபர்கள் வீடியோ-மாஃபியாவும், சம்பந்தப்பட்ட பெண்களும்தான், அதாவது பலிகடா ஆக்கப்பட்டது தேவநாதன்!

பின்னப்பட்டுள்ளப் புதிர்களை மக்கள்தாம் விடிவிக்கவேண்டும். மக்கள் ரசிப்பது உண்மைகளா அல்லது காமலீலைகளா என்ற விஷயம் வேறு! அதில்தான் உண்மைகள் ஊமையாகின்றன.


[1] தட் ஈஸ் தமிள், அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன், வியாழக்கிழமை, பிப்ரவரி 18, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/02/18/conditional-bail-archakar-devanatha.html

[2] தினத்தந்தி, http://www.dailythanthi.com/article.asp?NewsID=548145&disdate=2/19/2010

[3] தினகரன், http://www.dinakaran.com/nagaramdetail.aspx?id=5948

[4] தட் ஈஸ் தமிள், அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன், வியாழக்கிழமை, பிப்ரவரி 18, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/02/18/conditional-bail-archakar-devanatha.html

[5] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்!, https://socialterrorism.wordpress.com/2009/11/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

[6] http://www.thehindu.com/2010/02/19/stories/2010021959450200.htm

[7] தட் ஈஸ் தமிள், தேவநாதன் வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம், புதன்கிழமை, பிப்ரவரி 17, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/02/17/dsp-inspector-devanathan-case-shifted.html

[8]தினத்தந்தி,  http://www.dailythanthi.com/article.asp?NewsID=547691&disdate=2/17/2010

[9] நியூ இன்டியன் நியூஸ், ஆபாச ஐயர் தேவநாதன் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் திடீர் மாற்றம் , வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2010

http://www.newindianews.com/view.php?2beffmA4ddc23QQAK334aaCe0AAad0e0xXO4Yccd24mmlRH22eecK466dce03OmM0o44b4cYYDD700

[10] தினமலர், குறிப்பிடுவது 19-02-2010 அன்று பிணையில் விடுதலைச் செய்யப்படுவான் என்பதாகும், சென்னைப் பதிப்பு, ப.14

இன்னுமொரு வில் ஹியூம்!

ஜனவரி 26, 2010

இன்னுமொரு வில் ஹியூம்!

காப்பகம் நடத்திய போதகர் ஓட்டம்

பதிவு செய்த நாள் 1/27/2010 12:43:07 AM: தினகரனில் இப்படியொரு புகைப்படம்! இதில் யார் ஷாஜி என்று தெரியவில்லை!

Swine Fluகளியக்காவிளை : குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி காப்பகம் நடத்தி வந்த கிறிஸ்தவ போதகர் தலைமறைவானார்.

“பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” ('Bethesda Blessing Home')

“பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” ('Bethesda Blessing Home')

அனுமதி பெறாத குழந்தை காப்பகத்திலிருந்து 76 குழந்தைகள் மீட்பு: கன்னியாகுமரி மாவட்டம் பலவிளையில் அனுமதியின்றி இயங்கிய குழந்தைகள் காப்பகத்தில் இருந்த மணிப்பூர், அசாம் மாநில குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளா காரகோணத்தைச் சேர்ந்தவர் ஷாஜி. கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் நடத்திவரும் இவர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே, பலவிளையில் குழந்தைகளுக்கான காப்பகம் நடத்தி வந்தார்.

பெதெஸ்டா ஆசிர்வாத இல்லத்தில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தப்பட்டது

பெதெஸ்டா ஆசிர்வாத இல்லத்தில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தப்பட்டது

அங்கு, பெரும்பாலும் வெளிமாநில குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிறுவர் காப்பகம் நடத்த அரசிடம் அனுமதி பெறவில்லை. மேலும் 76 சிறுவர்களில் 22 பேர் அசாம், 54 பேர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிந்தது. போலீஸ் உதவியுடன் அந்த சிறுவர்கள் நெல்லை அழைத்துவரப்பட்டனர். நெல்லை சரணாலயம் தொண்டு நிறுவனத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் பெரும்பாலானோர், பெற்றோரை பிரிந்த ஏக்கத்தில் இருந்தனர். அவர்களை நெல்லை கலெக்டர் ஜெயராமன் நேற்று சந்தித்து பேசினார். அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் வழங்க உத்தரவிட்டார். மணிப்பூர், அசாம் மாநில அரசின் குழந்தைகள் நல அமைப்புடன் பேசி, அவர்களை அனுப்பிவைக்கும் வரை, கல்வி கற்பிக்க உள்ளதாக, சரணாலய இயக்குனர் ஜான்சன் கூறினார்.

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் / டீன்-ஏஜ் பெண்கள் உடபட இருந்தது

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் / டீன்-ஏஜ் பெண்கள் உடபட இருந்தது

நெல்லை சரணாலயம்: ஆதரவற்ற சிறுமிகள், சிறுவர்கள் பெண்களுக்கு மறுவாழ்வு கொடுத்து வரும் நெல்லை சரணலயம் 1993ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் குடும்பங்களில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் பொருளாதார காரணங்களிலும், நகர்மயமாக்கல், கிராமப்புறத்து மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்தல் போன்றவையாலும் மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப சிறுவர், சிறுமியரின் தேவைகள், ஆசைகள், குழப்பங்கள் போன்வற்றில் பெற்றோரும், ஆசிரியரும் இச்சமுதாயமும் அவர்களுக்கு சரியான திசையில் வழிகாட்டுதலிலும், நியாயமான தேவைகளை நிறைவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகளாலும் பல சிறுவர் சிறுமியர் குடும்ப உறவுகளை இழந்து வீதிகளுக்கு வரும் நிலை ஏற்படுகிறது் இத்தகைய வீதியோர சிறார்கள் மேல் அக்கறை கொண்டு அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்காக சரணாலயம் பணியாற்றி வருகிறது. இத்தகைய சிறுவர்களின் அவலங்களைக் கண்ணுறும் பொதுமக்கள் இவர்களுக்கு உதவிடவும் சிறுவர் உரிமைகளைப் பேணிடவும் மத்திய அரசின் சமூக ­நீதி மற்றும் அதிகாரம் வழங்குதல் துறை மூலம் நிறுவப்பட்டது தான் சைல்டு லைன் 1098 இலவச தொலைபேசியாகும் நாடெங்கும் ஐம்பத்தைந்து மாநகரங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த தொலைபேசி வாயிலாக 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு சிறுவர் குறித்த தகவல்கள் தெரிவிக்கலாம் ஏன்? சம்பந்தப்பட்ட சிறுவர்களே ௯ட தங்கள் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுக்கு ஆலோசனைகளும், மருத்துவ உதவி, கல்வி உதவி, குடும்பங்களோடு ஒன்றினைத்தல், அ­திகளுக்கு பரிகாரம் காணுதல் போன்ற சேவைகளைப் பெற முடியும்.

இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் இல்லை என்கிறார் ஜோஸப் ஜான்

இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் இல்லை என்கிறார் ஜோஸப் ஜான்ஸன்

ஷாஜி யார், மதபோதகரா, மர்ம மனிதரா, இன்னொரு வில்-ஹியூமா? கேரள மாநிலம் காரகோணம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. மத-போதகரான இவர் குமரி மாவட்டம் பாலவிளை அருகே சொந்த கட்டடத்தில் “பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” (‘Bethesda Blessing Home’) என்ற பெயரில்[1] குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார்[2]. அங்கு ஜெப கூட்டமும் நடந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஷாஜி மீது இதுவரை எந்தப் புகாரும் இல்லை. எனினும் அவரை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்[3]. ஷாஜியிடம் நடந்த விசாரணையில் பசியால் வாடிய வெளிமாநில குழந்தைகளை ஏஜெண்டுகள் மூலம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்[4]. சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஷாஜி நடத்திய காப்பகத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை.

சட்டத்தை மீறி அடைத்து வைத்தது பற்றி விளக்குகிறர் - டைம்ஸ்-நௌ டிவி

சட்டத்தை மீறி அடைத்து வைத்தது பற்றி விளக்குகிறர் - டைம்ஸ்-நௌ டிவி

சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனை: சரணாலயத்தில் உள்ள சிறுவர்களை நெல்லை கலெக்டர் ஜெயராமன் நேற்று சந்தித்தார். அவர்களுக்கு அரசு டாக்டர்கள் மூலம் மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்[5]. சென்ற புதன்கிழமைதான் (20-01-2010) சோழங்கநல்லூரில் இருந்த ஒரு (Reach Home Children Foundation)[6] அனாதை இல்லத்திலிருந்து, மணிப்பூர், மாவட்டம், பிஷ்ணுபூரைச் சேர்ந்த 17 குழந்தைகள் (பெண் குழந்தைகளையும் சேர்த்து) விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு குழந்தைகள் நல்வாழ்வு கமிட்டியின் தலைவி டாக்டர் பி. மனோரமா குழந்தைகள் சரிவர பரமரிக்கப்படவில்லை மற்றும் அவர்கள்மீது அடித்ததாக அடையாளங்கள் காணப்படுகின்றன என்றார். பெண்-குழந்தைகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப் பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது[7].

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது!

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது!

“சிறுவர்கள்” என்று கூறி, டீன்–ஏஜ் பெண்கள் இருந்ததை மறைக்கின்றனர்: முன்பு போலவே, இப்பொழுதும் “சிறுவர்கள்” என்று கூறி, டீன்–ஏஜ் பெண்கள் இருந்ததை மறைக்கின்றனர். நேற்று டிவி-செனல்கள் காண்பித்தபோது, இளம் பெண்கள் இருந்தது நன்றாகவே தெரிந்தது. ஆனால், அடையாலம் தெரியக்கூடாது என்று, ஏதோ மறைப்பு வைத்து படம் பிடித்துள்ளதால் தெளிவாக முகங்கள் தெரியவில்லை. ஜோஸப் ஜான்ஸன் என்ற சமூகநல அதிகாரி குறிப்பிடும்போது, அனாதை இல்லத்தில் / ஆஸ்ரமத்தில் எத்தனை குழந்தைகள் / பெண்கள் இருந்தனர் என்பதற்கான எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஆகவே,, இவர்கள் எல்லாம், “சுற்றுலா விபசாரத்திற்கு” உபயோகப்பட்டிருந்தால், விவரங்கள், விசாரித்தால்தான் தெரியவரும். அப்பொழுது, அவர்கள். தாங்கள் அந்த இல்லத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லிவிட்டால், ஒன்றும் செய்யமுடியாது.

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது! நடுவிலே வந்த இன்னொரு பெண்!

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது! நடுவிலே வந்த இன்னொரு பெண்!

அனாதை இல்லங்களும், கொலைகளும், கற்பழிப்புகளும்: திருநெல்வேலியைச் சேர்ந்த, “புதிய வாழ்க்கை மையம்” (‘New Life Centre), என்ற இல்லத்தில், 2005ல் மணிப்பூரைச் சேர்ந்த ரிச்சர்ட் என்ற சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவன் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டது. அடுத்த வருடம் 2006ல் அதே இல்லத்தைச் சேர்ந்த, பில்கிரிம் நிகோபார் (Pilgrim Nicobar), என்ற இன்னொரு சிறுவனும் ஒரு குட்டையில் பிணமாக மிதந்தான். அந்த அனாதை இல்லத்தின் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், விசாரணை ஒன்றும் உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. அதேமாதிரி, சென்னை அனாதை இல்லத்தில் 2005ல், ஐந்து பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குட்பட்டனர் என்று புகார் செய்தனர். போலீஸார் அதன் தலைவரை விசாரித்தனர், ஆனால் மேலே தொடராமல் அப்படியே விட்டுவிட்டனர்.

வேதபிரகாஷ்


[1] HNS, Authority caught in frenzy on rescue of state children in Chennai, Source: Hueiyen News Service / Thingnam Anjulika Samom, Imphal, January 25 2010

http://www.e-pao.net/GP.asp?src=10..260110.jan10

[2]தினமலர், ஜனவரி 26,2010

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15699

[3] தினகரன், 24-01-2010

http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=4492

[4] http://thatstamil.oneindia.in/news/2010/01/25/76-other-state-kids-rescued-from.html

[5]தினகரன், 26-01-2010

http://www.dinakaran.com/highdetail.aspx?id=4566

[6] TIMES-NOW TV, Child trafficking racket exposed, 26 Jan 2010, 1326 hrs IST, for details, see at:

http://www.timesnow.tv/Child-trafficking-racket-exposed/articleshow/4337164.cms

[7] http://www.e-pao.net/GP.asp?src=10..260110.jan10

தமிழகத்தில் கஞ்சா விளைச்சல், கடத்தல், விற்பனை: இவ்வளவு சகஜமாக நடக்கும் மர்மம் என்ன?

ஜனவரி 16, 2010

தமிழகத்தில் கஞ்சா விளைச்சல், கடத்தல், விற்பனை: இவ்வளவு சகஜமாக நடக்கும் மர்மம் என்ன?

© வேதபிரகாஷ்

கோவை சிறைக்குள் கஞ்சா கடத்தல்வார்டன் கைது[1] (23-07-2009): கோவை மத்திய சிறையில் டிஐஜி கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் ஜெயிலர் அன்பழகன் தலைமையில் சிறைக்காவலர்கள் நேற்று மாலை சோதனை நடத்தினர். அப்போது 7-வது பிளாக் அருகே ஒரு செருப்பு கிடந்தது. அதில் 250 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவுடன் செருப்பு எப்படி சிறைக்குள் வந்தது என்று விசாரித்தபோது, வார்டன் பழனியாண்டி (52) மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது அறையில் சோதனை நடத்தினர். அங்கிருந்த மற்றொரு செருப்பிலும் 250 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பழனியாண்டி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். ஜெயிலர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து, வார்டன் பழனியாண்டியை இன்று கைது செய்தார். திருச்சியைச் சேர்ந்த பழனியாண்டி, கோவை மாவட்டம் காரமடையில் வசித்துவந்தார். ஆயுள் தண்டனை கைதிகள் சசி, பழனிச்சாமிக்காக செருப்பில் மறைத்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது. சசி, பழனிச்சாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பழனியாண்டியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.

புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய தலைமை வார்டர் சஸ்பெண்ட்[2] (20-07-2009): கைதிகளுக்கு கஞ்சா கடத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட புழல் விசாரணை சிறைத் தலைமைக் காவலர், நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டார். புழல் சிறையில், இம்மாதம் 10ம் தேதி ரவுடி வெல்டிங் குமார் கொலை செய்யப்பட்டதை அடுத்து, கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரமாக்கப்பட்டது.  இந்நிலையில், விசாரணை சிறையில் கைதிகளுக்கு சிறைக்காவலர் மூலம், கஞ்சா கிடைக்கும் தகவல், அச்சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரனுக்கு கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், கடந்த 20ம் தேதி இரவுப் பணிக்கு சென்ற தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன் தீவிர சோதனை செய்யப்பட்டார்[3]. சோதனைக்கு முதலில் மறுத்த பாலகிருஷ்ணன் பின்பு ஒத்துழைத்தார். தனது ஷூவுக்குள் மறைத்து கஞ்சா கடத்த முயன்று பிடிபட்டார் பாலகிருஷ்ணன். அவரிடமிருந்து சிகரெட் பாக்கெட்கள், 47 பொட்டலம் கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவ செய்யப்பட்டது. இதையடுத்து பொன்னேரி கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் பாலகிருஷ்ணன் இன்று பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

கஞ்சா கடத்திய 80 வயது முதியவர் கைது! : 80 வயது முதியவர் ஒருவரின் வீட்டில் எக்சைஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கஞ்சா கைப்பற்றப்பட்டதை அடுத்து, அந்த முதியவர் கஞ்சா கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள அனேகல் பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, எக்சைஸ் அதிகாரிகள் அவரது வீட்டைச் சோதனையிட்ட போது, சுமார் 2.5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பதுக்கியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். 80 வயதான இந்த முதியவர் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனை ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்ததாகவும் அதனையடுத்து திங்கள் கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்[4].

கஞ்சா விற்ற தம்பதி கைது (27-12-2009): பலமுறை சிறைசென்றாலும் புத்தி மாறவில்லை, தொழிலும் மாறவில்லை[5]. ராஜ​பா​ளை​யம் அருகே கஞ்சா விற்று 17 முறை சிறை சென்ற பெண் மீண்​டும் சனிக்​கி​ழமை கஞ்சா விற்ற போது போலீ​ஸôர் கைது செய்​த​னர்.​ ராஜ​பா​ளை​யம் அய்​ய​னா​பு​ரத்​தைச் சேர்ந்​த​வர் கன​க​ராஜ்.​ இவ​ரும் இவ​ரது மனைவி ராஜேஸ்​வ​ரி​யும் கஞ்சா விற்று பல​முறை சிறை சென்​றுள்​ள​னர்.​ ​ ராஜேஸ்​வரி கஞ்சா விற்று இரு முறை குண்​டர் சட்​டம் உள்​பட 17 முறை கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.​ சனிக்​கி​ழமை இவர் வீட்​டில் கஞ்சா விற்ற போது கீழ​ரா​ஜ​கு​ல​ரா​மன் போலீ​ஸôர் இவ​ரை​யும் கைது செய்​த​னர்.

சிறுவன் மீதான கஞ்சா வழக்கு ரத்து:ஆசிரமத்தில் சிறுவன் ஒப்படைப்பு (ஜனவரி 02,2010)[6]: கோவை:ஐந்து வயது சிறுவன் மீது அன்னூர் போலீசார் தொடர்ந்த கஞ்சா வழக்கின் மேல்நடவடிக்கையை, மாவட்ட எஸ்.பி., கண்ணன் ரத்து செய்தார். ஆனாலும், சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல் ஆசிரமத்தில் ஒப்படைக்கப்பட்டான்.கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில், கஞ்சா விற்றதாக, லட்சுமி(45) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா ரெய்டின் தொடர்ச்சியாக, லட்சுமியின் மகன் சூர்யா(5)வை கைது செய்த அன்னூர் போலீசார், கோவை ஜே.எம்.எண்: 4 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) சத்தியமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சிறுவனை, சிறார் கூர் நோக்கு இல்லத்துக்கு அனுப்ப வேண்டுமானால், வயது சான்று, குற் றம் செய்ததற்கான ஆதாரம் மற்றும் பெற்றோரின் வாக்குமூலம் வேண்டும் என, மாஜிஸ்திரேட் கூறியதையடுத்து, சிறுவனை போலீசார் மீண்டும் அன்னூர் அழைத்துச் சென்றனர்.இதுகுறித்த செய்தி, நேற்று பத்திரிகைகளில் வெளியானது. இந்த நிலையில்,நேற்று மாவட்ட எஸ்.பி., அலுவலக்தில் இருந்து சிறுவன் மீதான கஞ்சா வழக்கின் மேல் நடவடிக்கை ரத்து செய்யப் பட்டுள்ளதாக, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அன்னூர் எஸ்.ஐ., ராமசாமி தலைமையில் போலீசார், கடந்த 30ல், ஓதிமலைரோடு,மண்ணீஸ்வரர் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கோவில் அருகே, கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சேலம், அம்மாபேட்டை அருகேயுள்ள வாய்க்காப் பட்டியைச் சேர்ந்த சகாதேவனின் மனைவி லட்சுமி(45), இவரது மகன் சூர்யா(8) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். லட்சுமியிடம் நடத்திய விசாரணையில், அவரது கணவர் மற்றும் உறவினர்கள் இருக்கும் இடத்தை கூற மறுத்துவிட்டார். இதனால், கஞ்சா விற்ற வழக்கில் கைதான சிறுவன் சூர்யாவின் பாதுகாப்புக்காக, கோவை ஜே.எம்.எண்:4 மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டான்.சிறுவனின் வயது சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டதாலும், வயது சான்றிதழ் பெற வேண்டி இருப்பதாலும், சிறுவன் சூர்யாவை கருமத்தம்பட்டி அருகேயுள்ள நல்லாக் கவுண்டன்பாளையத்தில் செயல்படும், பிரபஞ்ச அமைதி சேவா ஆசிரமத்தில், எஸ்.பி., உத்தரவுப்படி ஒப்படைக்கப் பட்டான். மேலும், சிறுவன் மீது அன்னூர் போலீசார் பதிவு செய்த கஞ்சா வழக்கின் மேல்நடவடிக்கையும் கைவிடப்பட் டது. இவ்வாறு அறிக்கை தெரிவித்துள்ளது.

திருப்பூருக்கு கஞ்சா கடத்திய பெண் உட்பட 3 பேர் கைது (டிசம்பர் 16,2009)[7]: கோவை: ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்தப் பட்ட, 23 கிலோ கஞ்சா நேற்று பறிமுதல் செய்யப் பட்டு, பெண் கஞ்சா வியாபாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் – ஊத்துக்குளி ரோட்டில் டி.எஸ்.பி., ராமசாமி தலைமையில் நேற்று அதிகாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பைக்கில், டூரிஸ்ட் கைடுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவர், கம்பத்தைச் சேர்ந்த நாகராஜ்(30) என்றும், துணிகளுக்கு கீழ், 1.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், “”தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த கண்ணன்(28) மூலம் ஆந்திர மாநிலம், வாரங்கல் பகுதியில் கஞ்சா வாங்கப்பட்டு, ஹவுரா எக்ஸ்பிரசில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.””அங்கிருந்து ஆம்னி பஸ்களில் கம்பத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கஞ்சா, வடக்குப்பட்டியைச் சேர்ந்த வியாபாரி மொக்கப்பிள்ளை(30) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவரிடமிருந்து ஒரு பகுதி கஞ்சா கோவை, திருப்பூர் பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்லப் பட்டது,” என்றார். இதைத் தொடர்ந்து கண்ணன், மொக்கப் பிள்ளை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கைக்கு ஜெலட்டின், கஞ்சா கடத்தல்: போலீசார் ரகசிய விசாரணை[8] (நவம்பர் 10,2009): ராமநாதபுரம்: இலங்கைக்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் கஞ்சா கடத்தல் குறித்து போலீசார் ரகசிய விசாரணை செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு மருந்து பொருட்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வந்தன.  இலங்கையில் புலிகளுடன் போர் தீவிரமடைந்தபோது தமிழக கடலோர பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டது. போர் முடிந்தவுடன் தமிழகத்திலிருந்து கடத்தல் குறைந்தது. கடந்த சில மாதங்களாக சத்தமின்றி கடத்தல் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு சில கும்பல்கள் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் கஞ்சா கடத்துகின்றனர். இங்கு 75 ரூபாய்க்கு வாங்கி ஜெலட்டின் குச்சிகளை, இலங்கையில் 900 முதல் 1,000 ரூபாய் வரை விற்கின்றனர். இத்தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, முக்கிய போலீஸ் அதிகாரியின் உத்தரவின்படி ராமேஸ்வரத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்ட ஒரு படகை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மீனவர்களுக்கு ஜெலட்டின் மற்றும் கஞ்சா கடத்தலில் யார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறித்தும் போலீசார் ரகசியமாக விசாரிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “இலங்கையில் வெடிகுண்டு வீசி மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இங்கிருந்து ஜெலட்டின் குச்சிகள் கடத்தப்படுகின்றன. மேலும், இலங்கையில் நல்ல கிராக்கி உள்ளதால் ஜெலட்டின் குச்சியுடன் கஞ்சாவையும் கடத்துகின்றனர். மீனவர்கள் போர்வையில் செல்வதால் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதில் தொய்வு ஏற்படுகிறது’ என்றார்.

போதை கடத்தலுக்கு மாறியபார் டான்சர்மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கல்[9] (நவம்பர் 12,2009): மும்பை:மும்பையில், மூட்டை மூட்டையாக கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதை கடத்திய பெண் தலைமையிலான கும்பல் பிடிபட்டது. இந்த பெண் “பார் டான்சராக’ இருந்து கஞ்சா கடத்தலுக்கு மாறியவர்.ஐதராபாத்தை சேர்ந்தவர் சிம்ரன்(34). சில ஆண்டுக்கு முன், பிழைப்புக்காக மும்பை வந்தார்; மது “பார்’களில் வேலை செய்தார். மது பரிமாறும் பணிப்பெண்ணாக இருந்து, பின்னர், “டான்சராகவும் இருந்தார்.அப்போது, இவருக்கு ஸ்ரீபாத் என்ற போதை கடத்தல் ஆசாமியின் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து கஞ்சா உட்பட போதைப் பொருள் கடத்தலை நடத்தி வந்தனர். ஆறு மாதத்துக்கு முன், ஸ்ரீபாத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, சிம்ரனை விட்டு பிரிந்து சென்று விட்டார்; தொழிலுக்கும் அவர் முழுக்கு போட்டு விட்டார். இதனால், ஸ்ரீபாத் விட்டு சென்ற வாடிக்கையாளர்களை வைத்து, போதைப் பொருள் கடத்தல் தொழிலை சிம்ரன் தொடர்ந்து நடத்தி வந்தார். கடந்த மூன்று மாதமாக அவர் தொழிலில் அதிக வருமானம் கிடைத்தது. இதனால், அதிக அளவில் கஞ்சாவை கடத்தி வந்து மும்பையில் இருந்து வினியோகம் செய்து வந்தார். இது தொடர்பாக, மும்பை போதைத் தடுப்பு போலீசுக்கு தகவல் கிடைத்தது. “இன்பார்மர்’கள் மூலம் தகவல் திரட்டி போலீஸ் படை, இந்த கும்பலை பிடிக்க தக்க சமயம் வர காத்துக்கொண்டிருந்தனர். கடந்த வாரம், மும்பையில் போகிசார் என்ற பகுதியில் ஒரு லாரியை போலீசார் மடக்கினர். அதில், டிரைவர் சீட்டுக்கு அடியில் சில மூட்டை கஞ்சா பதுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. டிரைவரை தக்க விசாரணை செய்தபோது, அவர் கஞ்சா பதுக்கி யிருந்த குடோனை காட்டினார்.குடோனில் மேலும் பல மூட்டை கஞ்சா சருகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ஆறு கோடி ரூபாயை எட்டும். சிம்ரன் மற்றும் அவர் கும்பலை சேர்ந்த ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Last Updated :
தமிழககேரள எல்லைக் காடுகளில் கஞ்சா: சமூக விரோதிகளின் கூடாரமாகிறது வனம்[10] (ஆகஸ்ட் 16,2008): மஞ்சூர்,: தமிழக, கேரளா எல்லையோரங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் அதிகரித்து வரும் கஞ்சா சாகுபடியால், இரு மாநில வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மஞ்சூரிலிருந்து 35 கி.மீ., தொலைவில் தமிழக-கேரள எல்லை அமைந்துள்ளது; இது, அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுகிறது. இதில், அட்டப்பாடி, தொடுக்கி, மல்லேஸ்வரன் மலை, செந்துமி உட்பட்ட பகுதிகள் கேரள மாநிலப் பகுதிகளாகும், அப்பர்பவானி, கோரகுந்தா உட்பட்ட பகுதிகள் தமிழக பகுதிகளாகும். மேற்கண்ட பகுதிகள், இரு மாநில எல்லையில் அமைந்துள்ளன. கேரள மாநிலப் பகுதிகளில் ஆதிவாசி மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். சமூக விரோதிகள், மேற்கண்ட பகுதிகளில் எளிதில் நுழைந்து, அடர்ந்த வனப்பகுதிகளில் குடில் அமைத்து, பல ஏக்கரில் வனப்பகுதிகளை அழித்து கஞ்சா சாகுபடி செய்து வருகின்றனர். கள்ளச்சாராயமும் காய்ச்சுகின்றனர். இதற்கான பொருட்களை தமிழக பகுதிகளான கோரகுந்தா, அப்பர்பவானி வழியாக வனப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். அதேபோல் கோவை மாவட்டம், ஆனைகட்டி வழியாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது.  இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சா, பொட்டலமாக கட்டி சிறிய பைகளில் எடுத்து செல்லப்படுகிறது. இங்கு உற்பத்திச் செய்யப்படும் கஞ்சா, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, கஞ்சா சாகுபடிக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை இருப்பதால், இந்த மாதங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதற்காக பொருட்களை ஒரு மாதத்திற்கு முன்பாகவே வனப்பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, அங்கு ஆங்காங்கே குடில் அமைத்து தயார்படுத்துகின்றனர். கஞ்சா உற்பத்தி முடிந்ததும், டிசம்பர் மாதங்களில் வனப்பகுதிகளிலிருந்து வெளி இடங்களுக்கு கஞ்சாவை கடத்துகின்றனர்.  இதில், மஞ்சூர் வழியாக கஞ்சாவை நள்ளிரவில் கடத்துவதை சமூக விரோதிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கு உடந்தையாக மஞ்சூரில் சில முக்கிய புள்ளிகள் துணை போவதாகவும், இதன் மூலம் அவர்கள் பல லட்சம் மதிப்பில் சொத்து சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரு மாநில வனப்பகுதிகளில் வனத்துறை மற்றும் போலீசார் கூட்டு ரோந்து சென்றாலும், சமூக விரோதிகளை பிடிக்க முடியாமல் திரும்பி வருகின்றனர். இப்படி ரோந்து செல்லும் சமயங்களில் அப்பாவியான ஆதிவாசி மக்கள் சிக்கி அவதியடைவதுண்டு. கடந்த ஆண்டில் மட்டும் 80 முறை இரு மாநில வனத்துறை மற்றும் போலீசார் கூட்டு ரோந்து சென்று, பல கோடி மதிப்பில் பயிரிட்டுள்ள கஞ்சா செடிகளை அழித்தனர். ஆனாலும், தொடர்ந்து சமூக விரோதிகள் கஞ்சா பயிரிட்டு வருவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். அதாவது மேற்கண்ட வனப்பகுதிகள், அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால், ஏராளமான இடங்களில் குடில் அமைத்து கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. வனத்துறையினர் ரோந்து செல்லும் தகவல் முன்கூட்டியே, கிராமப் பகுதியில் உள்ள சிலர் மூலம் தெரிந்துக் கொள்கின்றனர். இதனால், ரோந்து சமயங்களில் ஒரு சிலரை கைது செய்து கஞ்சாவை கைப்பற்றினாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சமூக விரோதிகளை பிடிக்கும் நோக்கில் கடந்த மாதம் இறுதியில், கேரளா மாநிலம் பாலக்காடு, அட்டப்பாடி மற்றும் மண்ணார்காடு போன்ற பகுதிகளில் உள்ள வன அலுவலர்கள் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர்கள் சேர்ந்து கூட்டம் நடத்தினர்.  இதில், எல்லையோரங்களில் ஊடுருவி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாதந்தேறும் ரெய்டு நடத்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இரு மாநில வனத்துறையினர் ஒத்துழைப்போடு எல்லையோரங்களில் புறக்காவல் அமைத்து பலப்படுத்தினால், சமூக விரோதிகளை ஒடுக்க முடியும் என வனத்துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஒரு மாதத்தில் நூற்றூக்கணக்கான கடத்தல்கள், கைதுகள்: தினமருக்கு நன்றி.

 • 8 Aug 2009 உடுமலை: வால்பாறையில் 7.5 கிலோ கஞ்சா வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஜெயபாண்டியன் (51) போலீசில் சிக்கினார்.
  www.dinamalar.com/Incident_detail.asp?news_id=12000
 • அதில் ரொட்டிக்குள் 20 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்கள் யாருக்காக கஞ்சா கொண்டு சென்றார்கள்? என விசாரிக்கப்பட்டு
  www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=11084
 • கஞ்சா விற்ற தி.மு.க.,கவுன்சிலர் …29 Aug 2008 சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=4339&ncat
 • 22 Sep 2009 திண்டிவனத்தில் கேட்பாரற்று கிடந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல் அதில், 40 கிலோ கஞ்சா இருந்தது. இதைக் கொண்டு வந்த இரண்டு பேர்,
  www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=12955
 • தேனி: ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட கஞ்சா மூட்டைகள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட
  www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13466
 • ஜோதிடரை வெட்டிக் கொன்ற கஞ்சா வியாபாரிகளுக்கு ஆயுள் இவர்கள், பெரியாயிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில் கஞ்சா விற்பனை செய்வது
  www.dinamalar.com/court_detail.asp?news_id=2413
 • 30 Dec 2009 பந்தலூர் : பந்தலூர் அருகே உப்பட்டியில் கஞ்சா விற்பனையாளர் பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக
  www.dinamalar.com/Tnspl_districtdetail.asp?news_id=280019&ncat
 • 30 Jul 2009 ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில், மரவள்ளிப் பயிருடன் ஊடுபயிராக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடி அழிக்கப்பட்டது.
  www.dinamalar.com/Incident_detail.asp?news_id=11810
 • 6 Aug 2009 இறந்த கைதியின் ஜட்டியில் கஞ்சா பொட்டலங்கள் : கடலூர் சிறை கைதி கடலூர்: கடலூர் மத்திய சிறையில், கஞ்சா கேட்டு சுவற்றில்
  www.dinamalar.com/Incident_detail.asp?news_id=11944
 • செருப்பில் பிளேடு, கஞ்சா கடத்தல் புழல் சிறையில் 2 கைதி சிக்கினர் கஞ்சா, பிளேடு கடத்தல் தொடர்பாக அவர்கள் மீது புழல் போலீஸ்
  www.dinamalar.com/court_detail.asp?news_id=1107
 • 6 Nov 2008 சிறைக்குள் கஞ்சா கடத்தல்7 போலீசார் மீது நடவடிக்கை திருநெல்வேலி :பாளையங்கோட்டை சிறைக்குள் கஞ்சா கடத்தலை கவனிக்காத
  www.dinamalar.com/Incident_detail.asp?news_id=6014
 • கஞ்சா வழக்கில் 10 மாதங்களாக சிறை இருப்பவருக்கு ஜாமீன் மறுப்பு மதுரை : மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் 10மாதங்களாக சிறையில்
  www.dinamalar.com/court_detail.asp?news_id=1434
 • 29 Dec 2009 கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர்
  www.dinamalar.com/Tnspl_districtdetail.asp?news_id=279680&ncat
 • 17 Oct 2009 ஜூலை 10 மற்றும் 16ல் 250 கிராம் கஞ்சா, இரு மொபைல் போன்கள் ஆக.9ல் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த வார்டன் ஜெயராமன் கைது
  www.dinamalar.com/General_detail.asp?news_id=17952
 • 28 Apr 2009 கைதிக்கு செருப்பு மூலம் கஞ்சா கடத்தல்: ஐகோர்ட் வக்கீல் கைது சென்னை : புது செருப்பு மூலம் கைதிக்கு கஞ்சா கடத்திய,
  www.dinamalar.com/Incident_detail.asp?news_id=9885
 • கஞ்சா வியாபாரியான இவர், நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு போலீசாரை பார்த்த கஞ்சா கும்பல் கையில் வைத் திருந்த சூட்கேசை போட்டு
  www.dinamalar.com/new/district_main.asp?ncat=Chennai&showfrom
 • ஓடையில் பதுக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூடைகள் பறிமுதல் தேனி மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டம் அதிகம் உள்ளது.
  www.dinamalar.com/Incident_detail.asp?news_id=4900
 • 2.கஞ்சா விற்ற வாலிபர் கைது‎: கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
  www.dinamalar.com/district_main.asp?ncat=Krishnagiri&showfrom=5/
 • கோவை சிறையில் கணவனுக்கு கஞ்சா சப்ளை; மனைவி கைது. ஜூலை 31,2008,00:00 IST. கோவை:கஞ்சா வழக்கில் கோவை சிறையில் உள்ள கணவனுக்கு, பேரீச்சம்பழ
www.dinamalar.com/court_detail.asp?news_id=1108
 • பாரிமுனை : பூக்கடை பகுதியில், கஞ்சா விற்ற பிரபல பெண் போதை வியாபாரி மூவரிடமிருந்தும் 50 ஆயிரம் ரூபாய் மதிப் புள்ள 3.5 கிலோ கஞ்சா

www.dinamalar.com/district_main.asp?ncat=Chennai&showfrom=7/3/

குற்றத்தின் அமைப்பு, நடக்கும் விதம், ஈடுபடுபவரின் தன்மை: இப்படி மாதத்திற்கு இரண்டு-மூன்று என தொடர்ந்து செய்திகள் வருவது, இது ஒரு நன்றாக திட்டமிட்டு ஏற்படுத்தி வைக்கப் பட்ட தொழில் போன்றே தோன்றுகிறது. மேலும், அரசியல்வாதிகள், போலீஸ் முதலியோரின் தொடர்பு மற்ற விவகாரங்களை எடுத்துக் காட்டுகிறது. குறுகிய காலத்தில், லட்சங்கள்-கோடிகள் சம்பாதிக்கலாம் என்ற மனப்பாங்கு, அதனால் வரும் ஊக்கம் முதலியன தெரிகின்றது. ஈடுபடுகின்றவர்களுக்கு சகலமும் கிடைக்கிறது. மாட்டிக்கொண்டாலும், அவர்களுக்கென போலீஸார், வக்கீல்……………………….. என்று அனைவரும் இருக்கின்றனர் [ஒரு தடவை முஹம்மது யூனிஸ் என்ற ராஜிவ் காந்தியின் நண்பருடைய மகன் போதைப் பொருள் குற்றத்திற்காக அமெரிக்க சிறையில் அடைக்கப் பட்டான். அப்பொழுது, ராஜிவ் காந்தி அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியபோது, த்ந்தனைக் காலத்தைக் குறைக்க பரிந்துரைத்ததாக செய்திகள் வெளிவந்தன].

 • ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ரகசியமாகப் பயிரிடுதல்.
 • ஆமணக்குச் செடிகளுடன் சேர்த்துப் பயிருடுதல்
 • மரவள்ளிப் பயிருடன் ஊடுபயிராக பயிரிட்டு மறைத்தல்.
 • சட்டவிரோதிகள், சாராயம் காய்ச்சுபவர்கள், மலைவாசிகள் / ஆதிவாசிகளின் ஒத்துழைப்பு / பாதுகாப்பு
 • செருப்பு, ஷூ, ரகசிய அறை இவற்றில் மறைத்து கடத்தல்
 • போலீஸாரே சிறைக்குள் கடத்தல்
 • எடுத்துச் செல்ல, விற்க, பெரியவர் (80 வயது), சிறுவர் (8 / 10), இவர்களை பயன்படுத்துதல்.
 • பெண்கள் அதிக அளவில் உபயோகப்படுத்துதல்
 • குற்றஞ்செய்வதே தொழிலாகக் கொண்டுள்ளுவர்கள் ஈடுபடுவது.
 • கஞ்சா கடத்துவது – விற்பதையே தொழிலாகக் கொண்டு தொடர்ந்து செய்வது.
 • அரசியல்வாதிகளின் தொடர்பு.
 • போலீஸாரின் தொடர்பு, ஊக்குவிப்பு, உடன்பாடு.
 • போலீஸார்-கைதிகள் தொடர்பு, ஊக்குவிப்பு, உடன்பாடு.
 • வக்கில்கள்- தொடர்பு, ஊக்குவிப்பு, உடன்பாடு.
 • போதைபொருள் வியாபாரி – தொடர்பு, ஊக்குவிப்பு, உடன்பாடு.
 • விபச்சாரிகள், அதைப் போன்ற பெண்களின் ஒத்துழைப்பு, பரிமாற்றம்.

பொது மக்கள், பெற்றொர், மற்றோர் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்: இன்றைய காலகட்டத்தில் கெட்டச் செயல்களும், நல்ல திறமையாகத்தான் நடத்தப் படுகின்றன. ஆகையால், சாதாரண மக்கள் தாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. சமூகத்தீவிரவாதிகள், சமூகத்தை சீர்குலைக்க இவ்வாறு பல யுக்திகளைக் கையாளலாம். அரசே – அல்லது ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்ற கூட்டாளிகள், குற்றவாளிகளுடன் ஒத்துழைத்துப் போகும் போது, மக்களுக்கு இறைவனைத் தவிர வேறு கதியில்லை. அந்நிலையில்தான் நாத்திகர் என்றும், பகுத்தறிவுவாதிகள் என்றும் தம்மைக் கூறிக்கொண்டு உலாவரும் ஒரு கூட்டம் சமுதாயத்தை 40-60 வருடங்களகக் கெடுத்து வருகின்றது. இவர்களால் தான் குற்றங்கள் அதிகமாகிறது என்ற உண்மையை போகப்போகத் தெரிந்து கொள்வார்கள். குற்றவியல் மற்றும் மனோதத்துவ ஆரய்ச்சியாளர்கள் சுலபமாக அத்தகைய உண்மையை எடுத்துக் காட்டுவார்கள். இருப்பினும், ஆட்சிசெய்பவர்களும், சமூதயத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றவர்களும் மாற்றுக் கருத்து கொண்டிருப்பதால், அத்தகைய உண்மையை அறிய காலம்தான் உதவ வேண்டியுள்ளது. நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோமாக.

© வேதபிரகாஷ்

16-01-2009


[1] கோவை சிறைக்குள் கஞ்சா கடத்தல் – வார்டன் கைது, வியாழக்கிழமை, ஜூலை 23, 2009, 18:10[IST],

http://thatstamil.oneindia.in/news/2009/07/23/tn-warden-arrested-for-ganja-smuggling-into-jail.html

[2] புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய தலைமை வார்டர் சஸ்பெண்ட், திங்கள்கிழமை, ஜூன் 29, 2009, 18:51[IST]

http://thatstamil.oneindia.in/news/2009/06/29/tn-puzhal-prisoan-head-warder-suspended-for-ganja.html

http://thatstamil.oneindia.in/news/2009/06/29/tn-puzhal-prisoan-head-warder-suspended-for-ganja.html

[3] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=11125

[4] http://www.inneram.com/200912225463/80

[5] தினமணி, First Published : 27 Dec 2009 07:09:12 AM IST

[6] http://www.dinamalar.com/General_detail.asp?news_id=20402

[7] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14719

[8] http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18686

[9] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13964

[10] http://www.dinamalar.com/General_detail.asp?news_id=5387

அமலனின் காமலீலைகளுக்கு என்ன காரணம்?

ஜனவரி 14, 2010

அமலனின் காமலீலைகளுக்கு என்ன காரணம்?

© வேதபிரகாஷ்

சிறுவர்-சிறுமியர் செக்ஸ்: வெளிப்படும் அமைப்பு-முறை: வில் ஹியூம்[1], மாத்யூஸ்[2] முதலியோரைத் தொடர்ந்து அமலன் வருகிறான். தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய துரதிருஷ்டமான விஷயங்கள் அசாதாரணமான சமுகத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளன. அதனை, செய்திகள் போல கேட்டு, பார்த்து, உணர்ச்சியில்லாமல் இருந்துவிடமுடியாது. ஒரு பெண்ணைப் பெற்றவனுக்குத் தான் அந்த வலி, துயரம், அவமனம்…………………முதலியவைத் தெரியும். மற்றவர்களுக்கு, தனக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நன்றாகயிருக்குமே என்றுதான் தோன்றும். ஆகவே, இவ்விஷயத்தை ஆராயவேண்டியுள்ளது:

·         இந்தியாவைப் பொறுத்தமட்டிலும், ஏழ்மை என்ற நிலைக்காட்டி, இவ்வாறு கிருத்துவர்கள் தொடர்ந்து இத்தகைய செக்ஸ் லீலைகளில் ஈடுபடுவது எந்தவிதத்தில் நியாயம்?

·         இதன் பின்னணி என்ன?

·         அவர்கள் ஏன் அத்தகைய மனநிலையில் இருக்கவேண்டும்?

·         தாங்கள் மிகவும் நாகரிகமானவர்கள் என்றுக் காட்டிக் கொண்டு, இப்படி இத்தகைய விலன்கினும் கீழான காரியங்களில் ஈடுபடுகின்றனர்?

·         நிறையப் படித்திருக்கிறோம் என்று வேறு காட்டிக்கொள்கிறார்கள்! டாக்டர் அஃப் பிலோசோஃபி, தியாலஜி, B.Th., M.Th., D.Th………….இத்யாதிகள். இவை இவர்களுக்கு என்னத்தான் சொல்லிக் கொடுக்கிறது?

·         எதுதான் அவ்வாறு அவர்களைத் தூண்டுகிறது?

முதலிய கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இங்கு கிருத்துவர்களை குறை கூறுவதாக நினைக்கவேண்டாம், ஏனெனில் உலகம் முழுவதிலும் அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களிடையே குறிப்பிட்ட பொது அம்சங்கள், முறைகள், வெளிப்பாடுகள் (modus operandi), நிச்சயமாக, அவர்கள் அத்தகைய மனோநிலைய அடையச் காரணமாக இருப்பவை என்ன என்பதுதான் குற்றவியல், மனோதத்துவ மற்றும் சமூக-மனிதவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக இருக்கிறது.

ஊடகங்கள், செய்திகள், உண்மை நிகழ்வுகள்: நிச்சயமாக இந்த ஆய்வு ஊடக செய்திகள் மற்றும் தனிப்பட்டமுறையில் விசாரித்து தெரிந்துகொள்ளும் விவரங்களின் ஆதாரமாகத்தான் உள்ளது. செய்திகள் இவ்வாறு வருகின்றன:

மாணவியுடன் ஓடிப்போனது ஏன்? ஆசிரியர் வாக்குமூலம்

தினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎

ஆசிரியர் கொடுத்த வாக்குமூலத்தில், மாணவியை கடத்தி கற்பழித்ததாக கூறப்பட்ட புகாரை அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிரியர் அமலன் தானாகவே வந்து எம்.கே.பி.

`வேலியே பயிரை மேய்ந்ததுபோல’ 17 வயது மாணவியை கடத்திய 47 வயது …

தினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎

சென்னையில் 17 வயது மாணவியை கடத்தி கற்பழித்ததாக புகார் கூறப்பட்ட 47 வயது ஆசிரியர் தானாகவே வந்து போலீசில் சரண் அடைந்தார். `வேலியே பயிரை மேய்ந்ததுபோல’ மிகவும் கொடூரமான

சென்னை: டியூஷன் படிக்க வந்த மாணவியை கடத்தி கற்பழித்துவிட்டு …

தட்ஸ்தமிழ் – ‎13 மணிநேரம் முன்பு‎

கடந்தவாரம் சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த பிளஸ்2 மாணவியை அப்பள்ளி ஆசிரியரே கடத்திச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவியை கடத்தி கற்பழித்ததாக ஆசிரியர் மீது வழக்கு …

தினத் தந்தி – ‎12 ஜன., 2010‎

மாணவியை கடத்தி கற்பழித்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மாணவி படித்த பள்ளிக்கூடம் முன் பெற்றோர்கள் கூடி போராட்டம் நடத்தினார்கள். சென்னையை அடுத்த கொடுங்கையூர்

பள்ளித்தலைமையாசிரியருடன் ஓடிய மாணவி நீதிபதியிடம் ரகசிய …

நியூஇந்தியாநியூஸ் – ‎11 ஜன., 2010‎

சென்னையில் பள்ளித்தலைமையாசிரியருடன் மாயமான பிளஸ்2 மாணவி இன்று நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார். கொடுங்கையூர் எத்திராஜ் சாமி சாலையில் தனியார் பள்ளியில்

இவற்றில் பல முரண்பாடுகள் உள்ளன. அல்லது நிருபர்கள் தெரிந்தோ தெரியாமலேயோ, உண்மைகளை குறைவாக அல்லது மாற்றி கூறியுள்ளனர்.

ரகசிய வாக்குமூலங்கள் என்றவை ஊடகங்களில் வதந்திகளாக வருவது: நீதிபதியிடம், மாஜிஸ்டிரேட்டிடம், போலீஸிடம் ரகசிய வாக்குமூலம் கொடுப்பது, எப்படி ஊடகங்கள் வெளியிடுகின்றன? இது புவனேஸ்வரி, வில் ஹியூம், தேவநாதன், தேவநாதனை மயக்கிய நான்கைந்து பெண்கள், ஹேமலதா, ஸ்ரீகுமார்.முதலியோர் விவகாரக்களிலும் வெளிப்படுகின்றன. இந்த அமலன் விஷயத்திலும் அவ்வாறாகவே உள்ளது! மற்ற செய்திகளைப் போன்று, இவற்றை ஜனரஞ்சக-மனோரஞ்சக-உணர்வுகளையூட்டும் ரீதீயில் வெளியிடக்கூடாது. சமூகத்தைப் பாதிப்பதால், உண்மையைக் கூறவேண்டும், இல்லையென்றால் சும்மாவே இருக்கலாம்.

ஏழ்மையை நியாயப்படுத்தும் போக்கு: அமலன், “தன்னிடம் டியூஸன் படிக்கவரும் மாணவிக்குப் படிக்க வசதியில்லை, அதனால் அவளை மயக்கி, கற்பழித்து மாநிலத்திலேயே முதல் மாணவியாக்க முயல்கிறேன்”, என்றவிதத்தில் சொல்தில் ஏதாவது நியாயப்படுத்தக் கூடிய விவரம் உள்ளதா? 1997ல் தனது மனைவி விபத்தில் அடிபட்டபோது, லதாவின் பெற்றொர்கள் உதவினர், அதனால் பழக்கம் ஏற்பட்டது என்பது, இலவசமாக லதாவிற்கு டியூஸன் சொல்லிக் கொடுக்கும் வரை முடிந்துள்ளது. பணம் கொடுத்து உதவியதாக இப்பொழுது செய்திகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் “பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைக்கக் கூடாது” என்பார்கள். ஆனால் வைக்க எல்லோரும் ஒப்புக் கொண்டூவிட்டார்கள், அமலன் தனது மலத்தை ஊக்கிவிட்டு ஜெயித்துவிட்டான். ஆகவே, இனி பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும்.

மாநிலத்திலேயே முதல் மாணவியாக வர நினைக்கும் மாணவி இப்படி இருப்பாளா? இனி லதாவை எடுத்துக் கொண்டால், 17வயது பாப்பா, குழந்தை என்று நினைக்கலாம். ஊடகங்கள் அப்படி சொல்லிதான் ஏமாற்றுகின்றன! ஆனால், இவளுக்கு எப்படி அவனுடன் எல்லோரும் பார்க்கும் நிலையில் பைக்கில் உட்கார்ந்து கொண்டு, பல ஊர்களுக்குச் செல்ல முடிந்தது? லாட்ஜுகளில் தங்க மனம் வந்தது? “தனது பெற்றோர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டினான்”, என்று சொல்லும்போது, ஏதாவது ஒரு நேரத்தில், அதனை சொல்லியிருக்காலாமே? அல்லது ஃபோன் செய்து அவனது வக்கிரத்தை வெளியிட்டிருக்கலாமே?

தனது பெற்றோர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டினான்: அமலனின் இந்த மிரட்டலின் மர்மம் என்ன? உண்மையிலேயே, இந்த மிரட்டல் ஒரு பெண்ணை அப்படி வந்துவிடத் தூண்டுமா? இல்லை, அதற்கும் மேலே அமலன் கையாண்ட யுக்தி என்ன? போலீசார், அமலன் வேலை பார்த்த பள்ளி, கலாவுடன் படித்த மாணவிகள், அமலனின் மனைவியிடமும் தீவிர விசாரணை நடத்தினர். கலகலப்பாக பழகும் குணம் கொண்ட கலாவின் அழகில் மயங்கிய அமலன், கலாவை தனது காதல் வலையில் விழ வைக்க திட்டமிட்டார். “நீ பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற, என்னிடம் டியூஷன் படி,’ என்று வற்புறுத்தி வந்தார். அமலன் வற்புறுத்தலால் கலாவும் கடந்த மூன்று மாதங்களாக டியூஷன் சென்றார்.

காமம் கலந்த காதல் வலை வீசிய அமலன்: பாடம் நடத்தும்போது, “செக்ஸ்’ சம்பந்தமாக ஜோக்குகள் அடிப்பது, ஆபாச எஸ்.எம்.எஸ்., படங்களை கலாவிடம் காட்டி, மிகவும் ஜோவியலாக அமலன் பழகியுள்ளார்.மெல்ல, மெல்ல காமம் கலந்த காதல் வலை வீசினார். அதில், கலா சிக்கினார். அமலனின் நடவடிக்கையை அறிந்த ஆரோக்கியமேரி, கணவரை கண்டித்துள்ளார். அதற்கு,”கலாவை என் மகளாக பாவிக்கிறேன்’ என்று, சமாதானப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில், அவர்களின் காதல் விவகாரம் வெளியில் பரவத் துவங்கியது, அமலனின் வாக்குமூலம் அவனுடைய கொடூரக் காமகுணத்தைத் தான் காட்டுகிறது. அதனை மறைக்க லதா நன்றாக படிக்கிறாள், அவள் படிக்க வசைதியில்லை, மாநிலத்திலேயே முதல் மாணவியாக்க முயல்கிறேன்[3] என்பதெல்லாம் அத்தகைய காம-இச்சையை மறைக்கும் போக்காக இருக்கிறது. நான் முன்பே குறிப்பிட்டது போல்[4], அவன் மனைவிக்கு, இவனது லீலைகள் நன்றாகவே தெரிந்திருக்கிறது.

தெய்வத்தின் மீதான காதலும், காமமும்: மோட்டார் சைக்கிளிலேயே வேளாங்கண்ணி சென்றார் என்றதிலிருந்து அங்கு மதரீதியாக மூளைச்சலவை செய்துள்ளார் என்று தெரிகிறது. நான் என் பெற்றேரை விட அதிகமாக அமலனை நேசிக்கிறேன். அவரை கடவுளுக்கு சமமாக கருதுகிறேன். நாங்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் சந்தோஷமாக இருந்தோம்[5] என்றதிலிருந்து அவளது மனத்தில் இருந்த குழப்பங்களை அதாவது தான் எப்படி அவனுக்கு இரண்டாவது பெண்டாட்டியாக இருக்கமுடியும், தான் இந்து, அவன் கிருத்துவன், மேரி ஒப்புக்கொள்வாளா முதலியவற்றை வேளாங்கண்ணியில் மதரீதியில் விளக்கம் அளித்து சமாதானம் செய்திருப்பான். லதாவிற்கு 18 வயது ஆனவுடன் கல்யாணம் செய்து கொண்டு பிறக்ய் அவளது பெற்றோர்களை சமாதானப் படுத்திவிடலாம், ஒரு வக்கீல் மூலம் லதாவை போலீஸாரிடம் ஒப்படைத்தேன் என்பதெல்லாம் அவனது குறுகிய ஆனால் கொடூரமான சட்டமீறல்களின் வக்கிரத்தையும், காமக்குரூரத்தையும்தான் காட்டுகிறது. பிறகு அவளே தனது வாக்குமூலத்தில் சொல்கிறாள், அமலன் தனது பெற்றோர்களை கொலைசெய்துவிடுவதாகத் தன்னை மிரட்டி கடத்தி சென்றதாகவும் நாகபட்டினம், வேளாங்கண்ணி, புதுச்சேரி ஆகிய இடங்களில் லாட்ஜில் தங்க வைத்து தன்னை பலவந்தபடுத்தி கற்பழித்ததாகவும் தெரிவிக்கிறாள். அமலன் சென்னையிலேயே முக்கிய புள்ளி ஒருவர் வீட்டிலேயே அடைக்கலமாக தங்கியிருப்பதாக செய்தி வெளியானது[6]. நேற்று முந்தினம் அவர் வேலைபார்த்த பள்ளிக்கு வந்ததாகச் சொல்லப் பட்டது.

சமூகத்தை சீரழிக்கும் நபர்களை முகமூடி கிழித்துக் காட்டவேண்டும்: வீடுகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் தங்களது அடையாளங்களை மறைக்க முகமூடிகள் அணியலாம். ஆனால், சமூகத்தை சீரழிக்கும் இந்த நபர்களை முகமூடி கிழித்துக் காட்டவேண்டும். “முக்கியப் புள்ளி” என்று மறைப்பானேன்? அவனது மகளை அவ்வாறு செய்தால், அப்புள்ளி சும்மா இருக்குமா? ஊடகங்கள் ஏன் அவனை மறைக்கவேண்டும்?

டான் பாஸ்கோவில் ஒரு மாணவி மர்ம முறையில் சாவு, மற்றொரு மாணவி கற்பழிப்பு: ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறந்ததாகவும், இந்நிலையில் மற்றொரு மாணவியை ஆசிரியரே கடத்திச் சென்று கற்பழித்த சம்பவமும் நடத்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என பெற்றோர் கூறினர்[7]. பிறகு எதற்கு அந்த மாணவியின் சாவை மறைத்துவவட்டனர்? முழு விவரங்களை ஏன் வெளியிடவில்லை?

டான் பாஸ்கோ சரித்திரமே அத்தகைய குற்றங்களை நிறையவே எடுத்துக் காட்டுகின்றன[8]: டான் பாஸ்கோ ஆரம்பித்து வைத்த “செலேஸியன் சங்கத்தின்” (Salesian Society) கிருத்துவர்கள்தாம் அதிகமான இவகையான செக்ஸ் லிலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை உலகமெலாம் நடக்கும் அத்தகைய கொடுமைகளினின்று அறியலாம்[9]. அதனை “செலேஸியன் செக்ஸ் குற்றம்” என்றே அழைக்கின்றனர்[10]. டான் பாஸ்கோ என்ற கிருத்துவ பாதிரியின் சரித்திரமே மர்மங்களில் புதைந்து கிடக்கின்றன. கனவுகளிலேயே மூழ்கியிருந்த டான் பாஸ்கோவின் அதிசயங்களே அலாதியானதுதான்! கனவிலேயே (phedophile) சிறுவர்-சிறுமியர் செக்ஸ் குற்றவாளிகளைப் பிடிப்பாராம்[11]! எனவே, இதனை முழுமையாக ஆராயவேண்டும். இந்திய மதத்தை ஆராயும் கிருத்துவர்கள், மேனாட்டவர்கள், இதைப் பற்றிய உன்மைகளையும் சொல்லவேண்டும். அதென்ன டான் பாஸ்கோவைப் பின்பற்றினால் அல்லது அம்மடாலயங்களில் பயிற்சி பெற்றால், “செலேஸியன் செக்ஸ் குற்றம்” செய்யத்தூண்டுமா? அப்படியென்றால், டான் பாஸ்கோவின் கனவுகள், மர்மங்கள் வேறுவிதமாகத்தான் இருந்திருக்கவேண்டும்!

வேளாங்கண்ணி தேவாலய கெஸ்ட் ஹவுஸ் காமகளியாட்ட கூடமாகிறது! கடந்த அக்டோபர் 5-ம்தேதி 2008ல், செல்வராஜ் பாதிரி, ஸ்டெல்லாமேரி என்ற பெண்ணுடன் நாகப்பட்டினம் வந்து, வேளாங்கண்ணி ஆலயத்துக்குச் சொந்தமான சிறுமலர் (லிட்டில் ஃபிளவர்) விடுதியில்[12] ஸ்டெல்லா மேரியை `சகோதரி”(!) என்று கூறி தங்க வைத்திருக்கிறார்[13]. எட்டாம் தேடிவரை அவர்கள் அரையில் என்னசெய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், 8-ம் தேதியன்று பாதிரியார் தங்கியிருந்த அறையில் இருந்து ஒரே துர்நாற்றம் கிளம்ப, கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்த நிலையில் விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைய…. குளியலறையில் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடந்திருக்கிறது பாதிரியாரின் உடல். அந்தப் பாதிரியாருடன் ஒரு பெண் அல்ல, சில பெண்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடி தனிப்படை ஒன்று ராமநாதபுரம் சென்றுள்ளது. வி.ஐ.பி., மற்றும் வெளியூர் பாதிரிகளுக்கு இந்த சிறுமலர் விடுதிதான் ஒரு முக்கிய தங்குமிடம். ஏற்கெனவே மரியசூசை என்ற பாதிரியார் இங்கே மர்மமாக கொல்லப்பட்டிருக்கிறார்.ஆலய நிர்வாகத்தில் பணியாற்றிய ஒரு முக்கிய நபர் தேவாலயத்தில் இருந்த பக்தர்களின் காணிக்கைப் பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவமும் நடந்திருக்கிறது. மூக்கையூர், ஓரிக்கோட்டை ஆலயங்களில் இவர் பங்குத் தந்தையாக இருந்து செக்ஸ் குற்றச்சாட்டுகளில் சிக்கி விரட்டியடிக்கப்பட்டு கடைசியாக முத்துப்பேட்டை ஆலய பங்குக் குருவாக இவர் இருந்திருக்கிறார்.

`நீ என்னோடு உறவு வைச்சா கடவுளோடு உறவு வச்ச மாதிரி. நீ புனிதமாயிடுவே(!)”: முத்துப்பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் சிலரிடம் விசாரித்தபோது முகம் சுளித்தபடி சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் அவர்கள்[14]. “செல்வராஜ் இங்கே வரும்முன் பாதிரியார்களுக்கு சமைத்துப் போட ஆண் சமையல்காரர்தான் இருந்தார். இவர் வந்தபிறகு பெண் சமையல்காரியை நியமித்து இதுவரை ஏழு பெண்களை மாற்றிவிட்டார். சமையல் செய்யும் பெண்ணை அறைக்குள் அழைத்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது இவரது பழக்கம். `நீ என்னோடு உறவு வைச்சா கடவுளோடு உறவு வச்ச மாதிரி. நீ புனிதமாயிடுவே(!)”என்று கூறுவது இவரது ஸ்டைல். இவருடைய தொல்லை தாங்காமலேயே ஆறு சமையல்காரிகள் மாறிவிட்டார்கள். இவரைப் பற்றி ஆயரிடம் புகார் தந்து இவரை மாற்றுவதாக அவர் உறுதி கூறியிருந்த நிலையில்தான், இந்தப் படுகொலை நடந்து விட்டது’” என்ற அவர்கள்,
இன்னொரு திடுக் தகவலையும் சொன்னார்கள். “ஓரியூர் தேவாலய சிறப்பு ஆராதனைக்குச் செல்வதாக செல்வராஜ் எங்களிடம் கூறிவிட்டு அன்று (4_ம்தேதி) மதியம், ராமநாதபுரம் தனியார் வங்கி ஒன்றில் ஏழு லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு வேளாங்கண்ணிக்குப் போயிருக்கிறார். சிறுமலர் விடுதியில் செல்வராஜுடன் நான்கு பெண்கள் தங்கியிருக்கிறார்கள். பாதிரியார் படுகொலைக்குப் பின் அந்தப் பெண்களையும், ஏழு லட்ச ரூபாய் பணத்தையும் காணவில்லை. கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் சம்பவம் வெளியே தெரிந்திருக்கிறது. பணத்துக்காக இந்தக் கொலையை நடத்திய அந்தப் பெண்கள், முத்துப்பேட்டைக்கு வந்து பாதிரியார் தங்கியிருந்த இடத்திலிருந்த அவர்கள் தொடர்பான டாக்குமெண்ட்கள் சிலவற்றையும் எடுத்துச் சென்றிருப்பதாகச் சந்தேகிக்கிறோம்’” என்றனர்.

2010ல் பாதிரியாரின் காமகளியாட்டம்[15]: வேளாங்கண்ணி [velankanni] சர்ச் [church] பாதிரியாரால். இந்த காம லீலை புனித வெள்ளி [good friday] அன்று பாதிரியாரின் அறையில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பாதிரியார் அறையினில் நுழைந்தவுடன் ரெடி ஆகீருக்கும் கன்னியாஸ்திரி மன்மத லீலை ஆரம்பமாக்கி அனைத்தும்  நடக்கிறது. வீடியோ பாதியாரால் எடுக்கப்பட்டுள்ளது[16]. ஊடகங்களின் பாரபட்சம் முன்னமே எடுத்துக் காட்டப் பட்டது[17].

இறையியலில் பட்டம் பெற்ற அமலன் அதே பாணியைப் பின்பற்றினாரா? கிருத்துவ இறையியல் குறிப்பாக செக்ஸ் குற்றங்களுக்கு இடங்கொடுக்கிறது என்று மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள்[18]. கன்னியாஸ்திரீகள் அவ்வாறு செக்ஸிற்கு பயன்படுத்துவது காலங்காலமாக நடந்து வந்துள்ளது. இநிதியாவிலேயே அப்பழக்கம், வழக்கம் இருந்தது, அபயா வழக்கு முதலியவை எடுத்துக் காட்டின. அமலனும் அதே மாதிரியான பாணியைப் பின்பற்றியுள்ளது தெரிகின்றது. முதலில், செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி மயக்கியுள்ளார். அவளது குடும்பத்திற்கு பணம் கொடுத்து உதவியுள்ளார். வேலாங்கண்ணி தேவாலாய கெஸ்ட் ஹவுஸில் தங்கியுள்ளார். `நீ என்னோடு உறவு வைச்சா கடவுளோடு உறவு வச்ச மாதிரி. நீ புனிதமாயிடுவே(!)”, என்று அமலன் சொன்னானா இல்லையா என்று லதாவிற்கு மட்டும்தான் தெரியும்! ஆனால், “நான் என் பெற்றேரை விட அதிகமாக அமலனை நேசிக்கிறேன். அவரை கடவுளுக்கு சமமாக கருதுகிறேன். நாங்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் சந்தோஷமாக இருந்தோம்”, லதா என்று சொன்னதிலிருந்து, அவ்வாறே நடந்தது போலும்!

© வேதபிரகாஷ்

14-01-2010


[1] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்!, https://socialterrorism.wordpress.com/2009/12/60/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

………………………………………., வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – II!, https://socialterrorism.wordpress.com/2009/12/12/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

………………………………………., வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – III!, https://socialterrorism.wordpress.com/2009/11/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

………………………………………., வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV, https://socialterrorism.wordpress.com/2009/12/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

[2] வேதபிரகாஷ், ,சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

https://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

[3] http://www.dailythanthi.com/article.asp?NewsID=540429&disdate=1/14/2010

[4] வேதபிரகாஷ், மாணவியுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆசிரியர்!, இங்கே பார்க்கவும்:

https://socialterrorism.wordpress.com/2009/12/22/ மாணவியுடன் –செக்ஸ்- லீலையி/

[5] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15295

[6] http://www.dailythanthi.com/article.asp?NewsID=540434&disdate=1/14/2010

[7] http://thatstamil.oneindia.in/news/2010/01/12/parents-protest-against-school-admin.html

[8] http://brokenrites.alphalink.com.au/nletter/page163-evans.html.

[9] www.lawyersandsettlements.com/…/salesian_priests_rev_stephen_whelan_sexual_abuse.html

[10] www.grahamwilmer.org.uk/page16.html

[11] Bert Ghezzi, Mystics & Miracles: True Stories of Lives Touched by God, Loyola Press, USA, 2004, p.142.

[12] வி ஹியூம் நடத்தி வந்த அனாதை இல்லம், பிறகு காமக்களியாட்டக் கூடமாகியது, அதன் பெயரும், இம்மாதிரியான பெயர் கொண்டதுதான் – லிட்டில் ஹோம், அதாவது “சின்ன வீடு”!

[13] http://devapriyaji.wordpress.com/2009/10/17/படுகொலையான-.பலான-பாதிரி… /

[14] http://www.kumudam.com/magazine/Reporter/2008-10-19/pg2.php

[15] முதலில் “நக்கீரன்” பத்திரிக்கையில் வெளிவந்தது. ஆனால் மற்ற ஊடகங்கள் இதைப் பற்றி ஒன்றும் வெளியிடாதது ஆச்சரியமாக உள்ளது.

[16] http://goodtamilnews.blogspot.com/2010/01/velaankanni-paathiriyaar-sex-video.html

[17] வேதபிரகாஷ், கோவில்களுக்குள் அர்ச்சகர்கள் கேமரா செல்போன் பயன்படுத்த தடை வருமா? https://socialterrorism.wordpress.com/2009/11/23/கோவிகளுக்குள்-அர்ச்சக/

வேதபிரகாஷ், துடைப்பம் / விளக்குமாறு தடை செய்யப்படுமா? https://socialterrorism.wordpress.com/2009/11/23/துடைப்பம்-விளக்குமாறு-த /

[18] Berthrong, John H., Love, Lust, and Sex: A Christian Perspective, Buddhist-Christian Studies – Volume 24, 2004, pp. 3-22. சுருக்கத்தை இங்கே பார்க்கவும்:

http://muse.jhu.edu/login?uri=/journals/buddhist-christian_studies/v024/24.1berthrong.html

Mark D. Jordan, The Invention of Sodomy in Christian Theology,  University of Chicago Press

http://www.goddess.org/sabrina/theology.html

கொலை-கொள்ளைகளில் பெண்கள் ஈடுபடுவது அதிகரிப்பு!

ஜனவரி 13, 2010

கொலை-கொள்ளைகளில் பெண்கள் ஈடுபடுவது அதிகரிப்பு!

ஆணுக்குப் பெண் நிகர்தான் என்று பெண்கள் மெய்ப்பித்து வருகின்றனர்.

3 பெண்கள் மீது கொலை வழக்கு

பதிவு செய்த நாள் 1/12/2010 12:27:40 AM

Swine Flu

சென்னை : அசோக் நகரில் குடிபோதையில் பெண்களிடம் தகராறு செய்த விடுதலை சிறுத்தைகள் வட்ட செயலாளர் கீழே விழுந்து இறந்தார். பெண்கள் தள்ளிவிட்டதால் அவர் பலியானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 3 பெண்களை கைது செய்தனர்.
அசோக்நகர் நல்லாங்குப்பம் 57வது தெரு 1வது பிளாக்கில் வசிப்பவர் ஆதி (எ) ஆதிமூர்த்தி (23), விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்ட செயலாளர். பெயிண்டராக பணி புரிகிறார். இவருக்கு மனைவி, 3 மாத குழந்தை உள்ளனர். குடிப்பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு குடித்து விட்டு, கே.கே.நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள அம்பேத்கர் குடிசை பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு வீட்டுக்கு வெளியே படுத்திருந்த வனிதா என்ற பெண்ணிடம் ஆதிமூர்த்தி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் சத்தம் போட்டதால், அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் ஏராளமான பெண்கள் கூடி விட்டனர். அவர்கள், ஆதிமூர்த்தியை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்த சைக்கிள் மற்றும் பாறாங்கல் மீது ஆதிமூர்த்தி விழுந்தார். தலையில் அடிபட்டு அதே இடத்தில் இறந்தார்.
உடனே, அங்கிருந்த பெண்கள் இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் பரந்தாமன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வனிதா, ராதா, பொட்டுக்கண்ணி ஆகிய 3 பெண்களும், ‘‘ஆதிமூர்த்தி அடிக்கடி குடித்து விட்டு வந்து எங்கள் பகுதியை சேர்ந்த பெண்களிடம் தகராறு செய்வார். நாங்களும் பொறுத்து பார்த்தோம். ஆனால் அவர் திருந்தவில்லை. நள்ளிரவில் வந்து எங்களிடம் தவறாக நடக்க முயன்றார். அதனால் பெண்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து தள்ளி விட்டோம். அதில் அவர் கீழே விழுந்து விட்டார். போதையில் விழுந்து கிடப்பதாக நினைத்தோம். நீண்ட நேரமாக எழுந்திருக்காததால், போலீசுக்கு நாங்களே தகவல் தெரிவித்தோம்’’ என்று கூறியுள்ளனர். அதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் ஆதியின் உறவினர்கள் கூறும்போது, ‘‘அம்பேத்கர் குடிசை பகுதியில் கஞ்சா வியாபாரம் நடக்கிறது. அதை கண்டுபிடித்து போலீசில் சொல்வதற்காக சென்றவரைத்தான் அடித்து கொன்று விட்டனர்’’ என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து, எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.


இதே செய்தி பலவாறு வெளியிடப்பட்டுள்ளன:

உல்லாச வெறி-வாலிபர் கொலை: 3 பெண்கள் கைது

திங்கள்கிழமை, ஜனவரி 11, 2010, 15:19[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/01/11/three-women-arrested-murdering-yout.html

குடிபோதையில் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை அடித்துக்கொலை செய்ததாக 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை நல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஆதி (23). மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து பாதியில் நிறுத்தி விட்டார். பின்னர் 131வது வட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக பணியாற்றி வந்தார்.  இவர் போரூரைச் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். நந்தினி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக தங்கி இருந்த ஆதிக்கும் வனிதா என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ஆதி குடிபோதையில் வனிதாவை தேடி எம்.ஜி.ஆர்.நகர் அம்பேத்கார் குடிசை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.  வீட்டில் தூங்கி கொண்டிருந்த வனிதாவை உல்லாசத்திற்கு அழைத்தார். வனிதா மறுத்ததால் பலவந்தபடுத்தியுள்ளார். இதனால் வனிதா கூச்சல் போடவே சத்தம் கேட்டு அருகில் இருந்த வனிதாவின் உறவுக்கார பெண்கள் ஓடி வந்தனர்.  ஆதியை வெளியே போகுமாறு கண்டித்தனர். ஆனால் போதையில் இருந்த ஆதி, வனிதா மீது ஆவேசமாக பாயவே, அவர்கள் ஒரு கயிற்றை ஆதி மீது வீசி, கட்டி இழுத்துள்ளனர்.  மீண்டும் திமிறிக்கொண்டு பாய முயற்சித்த ஆதியை பெண்கள் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

பின் மண்டையில் பலத்த காயமடைந்த ஆதி அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதை உணர்ந்த வனிதா, உறவு பெண்கள் ராதா, பொட்டுகனி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். கொலையை மறைக்க முடிவு செய்த அவர்கள், ஆதியின் உடலை வெளியில் தூக்கி வந்து போட்டு இரும்பு ராடு ஒன்றின் மீது தவறி விழுந்து இறந்ததுபோல உடலை சாய்த்து வைத்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அசோக் நகர் போலீசார் வந்து விசாரித்ததில் ஆதி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து வனிதா, ராதா, பொட்டுக்கனி ஆகிய 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை கணவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து கைக் குழந்தையுடன் ஓடி வந்த நந்தினி, குடிசைப் பகுதியில் கஞ்சா விற்றதை கண்டித்ததால் தான் என் கணவர் கொல்லப்பட்டார் என குற்றம் சாட்டினார்.

சென்னையில் காமுகன் ஒருவன் பெண்களால் அடித்துக்கொலை

நியூஇந்தியாநியூஸ் – ‎11 ஜன., 2010‎
குடிபோதையில் அட்டூழியம் செய்த இளைஞர் ஒருவர் பெண்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடந்துள்ளது. சென்னை நல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆதி

கஞ்சா பிரச்சினையா? கள்ளக்காதல் பிரச்சினையா? விடுதலை

தினத் தந்தி – ‎11 ஜன., 2010‎
சென்னை எம்.ஜி.ஆர். நகரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை அடித்து கொன்றதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனையால் ஏற்பட்ட பிரச்சினையில் கொலை நடந்ததா?

சமீபத்தில், கொலை-கொள்ளை-ஏமாற்றுவேலை-என எல்லாகுற்றங்களிலும் அதிகமாகப் பெண்கள் ஈடுபட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.

அதிலும், செக்ஸ் குற்றங்களில் அவர்களது கற்பனைக்கெட்டாத வரையில் உள்ள பங்குகள் மனங்களை உரைய வைக்கின்றன, வருத்தப்படச் செய்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் அத்தகையவை நடக்கின்றது என்பது ஆய்வுக்குறியது.

கருணாநிதியைப் பின்பற்றிய தமிழச்சி!

ஜனவரி 9, 2010

தனக்குத் தானே பிரசவம் பார்த்த ‘எய்ட்ஸ்’ பெண் : மதுரை அரசு மருத்துவமனையில் அவலம்
http://www.dinamalar.com/district_main.asp?ncat=Madurai

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை ஆப்பரேஷன் தியேட்டரில், எச்.ஐ.வி., பாதித்த பெண்ணுக்கு, பிரசவம் பார்க்க டாக்டர்கள், நர்சுகள் இல்லாததால், தனக்குத் தானே பிரசவம் பார்த்து, ஆண் குழந்தை பெற்றெடுத்தார் அந்த பெண். இதுகுறித்து விசாரிக்க டீன் சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முத்து, விஜயா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி. எய்ட்ஸ் நோயாளிகளான இவர்கள், மதுரையில் கட்டட தொழிலாளர்களாக உள்ளனர். பெண் குழந்தை உள்ள நிலையில், விஜயா மீண்டும் கர்ப்பமானார். அரசு மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனை செய்து கொண்டார்.

ஜன.,5 இரவு 1 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு செ ல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள், நர்சுகள் இல்லாத நிலையில், ஆண் குழந்தை வெளியே வர ஆரம்பித்தது. விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு யாரும் வரவில்லை. ஆப்பரேஷன் டேபிளில் இருந்து கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக குழந்தையை தானே வெளியே எடுத்தார். பதினைந்து நிமிடங்களுக்கு பின், அங்கு வந்த மருத்துவ மாணவி, தொப்புள் கொடியை “கட்’ செய்துவிட்டு, மருந்து கொடுத்துவிட்டு சென்றார்.

“ஆண் குழந்தை பிறந்துள்ளதால், 1500 ரூபாய் தரவேண்டும்’ என்று பெண் ஊழியர் லஞ்சம் கேட்டதற்கு, விஜயா தர மறுத்தார். இதனால், தொற்றுநோயாளிகளுக்கென உள்ள பிரத்யேக அறையில், அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை. ஜன.,6 மதியம் 12 மணி முதல் நேற்று முன் தினம் வரை மகப்பேறு வராண்டாவில், கொட்டும் பனியில் பச்சிளம் குழந்தையுடன் விஜயா தங்கினார்.

நமது நிருபரிடம் அவர் கூறியதாவது : மருத்துவமனையில் பணம் கொடுத்தால்தான் எல்லா வேலையும் நடக்கிறது. “உனக்கெல்லாம் எதற்கு குழந்தை. “பெட்’ கொடுக்க முடியாது. வெளியேறு’ என, என்னை ஊழியர்கள் துரத்தினர். இங்கு பிறந்ததற்கு ரிக்கார்டு வேண்டும் என்பதற்காக, வெளியே செல்லாமல் வராண்டாவில் தங்கினேன். எந்த ஆவணமும் இன்றி வெளியேறினால், “திருட்டுக் குழந்தை’ என்று சொல்லிவிடுவர், என பயந்துதான் அங்கேயே இருந்தேன். ஆனால், நான் தலைமறைவாகி விட்டதாக, வார்டு பதிவேட்டில் குறித்துள்ளனர், என்றார்.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மதுரை நெட்வொர்க் ஆப் பாசிட்டிவ் பீப்பிள் வெல்ப்பேர் சொஸைட்டி அமைப்பு தலைவர் பாபு கூறியதாவது :  கடந்த 2006ல் எனது மனைவிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. இன்று வரை நிலைமை மாறவில்லை. காயம்பட்ட மருத்துவமனை ஊழியரைக்கூட ஸ்டிரெச்சரில் அழைத்துச் செல்ல, சக பணியாளர்கள் லஞ்சம் கேட்கும் நிலையில் மருத்துவமனை உள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ள நிலையில், விஜயாவுக்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள், நர்சுகள் தயங்கியுள்ளனர். இப்பிரச்னை குறித்து மதியம் நிலைய மருத்துவ அதிகாரியிடம் புகார் கூறச்சென்றோம். ஆனால், அவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வீட்டில் தங்காமல், வெளியே தங்கியிருந்ததால் புகார் செய்ய முடியவில்லை. டீனும் அறையில் இல்லை.  எய்ட்ஸ் நோயாளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், மருத்துவமனை முன்பு எய்ட்ஸ் நோயாளிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம், என்றார்.
இதுகுறித்து டீன் சிவக்குமார் கவனத்திற்கு நமது நிருபர் கொண்டு சென்றார். உடனடியாக விஜயாவிடம் விசாரித்த அவர், “”சம்பந்தப்பட்ட டாக்டர்கள், நர்சுகளிடம் இன்று விசாரணை நடத்தப்படும்”, என்றார்.
மருத்துவமனையில் பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுக்காதவரை, இதுபோன்ற மனிதாபிமானற்ற செயல்கள் தொடரும் என்பது உண்மை.