Archive for the ‘கஞ்சா விற்பனை’ Category

ரேவ் பார்ட்டிகள் தமிழகத்தில் நடப்பது: பொள்ளாச்சி விவகாரம் – அயல்நாட்டு தாக்கமா, அதிநவீன நாகரிக மோகமா, சமூகத்தைச் சீரழிக்க திட்டமா?

மே 10, 2019

ரேவ் பார்ட்டிகள் தமிழகத்தில் நடப்பது: பொள்ளாச்சி விவகாரம் – அயல்நாட்டு தாக்கமா, அதிநவீன நாகரிக மோகமா, சமூகத்தைச் சீரழிக்க திட்டமா?

Agrinest-about

வட இந்திய நகரங்களில் நடந்து வரும் ரேவ் பார்ட்டி எனப்படுகின்ற போதை மருந்து பார்ட்டி, இப்பொழுது தமிழகத்தில் நடப்பது திகைக்க வைக்கிறது. ஏனெனில், இது ஒட்டு மொத்தமாக, இளமைவினை சீரழித்து, மாணவ-மாணவியரை நரகத்திற்கு எடுத்துச் செல்லும் பார்ட்டியாகும். பணக்காரர்களின் மகன்-மகள்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதில்லை, நடுத்தர மற்றும் ஏழை குடும்ப இளைஞர்களும் சீரழிகிறார்கள். இதனால், தனிமனித பாதிப்பு மட்டுமல்லாது, குடும்பங்கள் பாதிக்கப் படுகின்றன, சீரழிகின்றன, சிதறுகின்றன. இந்நிலையில் தான், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள  சேத்துமடை அண்ணாநகர் பகுதியிலுள்ள கணேஷ் என்பரது தோட்டத்தில் / விவசாய இடத்தில் கோவையில் படிக்கும் கேரள மாணவர்கள்  கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை [ganja, MDMA, cocaine, hashish and banned sedative tablets] உட்கொண்டு  மது விருந்து நடத்தி 03-05-2019 இரவில் விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர்[1] என்ற செய்தி வந்துள்ளது.

Agrinest-how to reach

சக்திமான்என்ற 13வாட்ஸப் குரூப் மூலம், ரூ.1,200/- செல்லுத்தி  சேர்ந்து வந்த கூட்டம்: கஞ்சா, போதை மாத்திரை,பல்வேறு விதமான சரக்கு வகைகளை  அடித்துவிட்டு கும்மாளம் போட்டுள்ளனர் [2], மேலும் அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்களுடன் நடனம் ஆடியதும் தெரியவந்தது. இதிலிருந்து மற்ற செக்ஸ் ரீதியிலான அடாவடித் தங்களும் வெளிப்படுகின்றன. இந்த அடாவடியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கோவையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருகிறார்கள்[3].  மது, கஞ்சா, போதைப் பொருட்கள் என பலவற்றுக்கும் அடிமையான இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றுகூடி இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்[4]. சமூகவளைதள தொடர்புகள் மூலம், “சக்திமான்” என்ற 13வாட்ஸப் குரூப் மூலம், ரூ.1,200/- செல்லுத்தி  சேர்ந்து வந்துள்ளனர்[5]. கெட்டுப் போவதற்கு சமூக வலைதளம் எவ்வாறு உபயோகப் படுகிறது என்பதும் தெரிகிறது.

Agrinest Farm, Pollachi

போதை மருந்துகள் கிடைப்பது, விற்பது, விநியோகிப்பது எப்படி நடக்கின்றன?”: மாணவர்கள் ரகளை செய்ததாக பொதுமக்கள் தரப்பில் இருந்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது[6]. புகாரை அடுத்து எஸ்.பி. சுஜித்குமார் தலைமையிலான போலீசார் தோட்டத்தில் ஆய்வு செய்தனர்[7]. அதில்  மது, போதைப்பொருட்களை பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது[8].  போலீஸார், எம்.எம்.டி.ஏ, கோக்கைன், தடை செய்யப் பட்ட போதை மாத்திரைகள், முதலியவற்றை பரிமுதல் செய்துள்ளனர். 30 கிராம் கஞ்சா, ஒரு கிராம் ஹாஷிஸ் எண்ணை, 1.5 கிராம் எம்.எம்.டி.ஏ, மது பாட்டில்கள் முதலியவை அவற்றில் அடக்கம்[9]. இவற்றையெல்லாம் யார் உற்பத்தி செய்கிறார்கள், எங்கே எவ்வாறு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் செய்கிறார்கள் என்றால், மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் திருட்டுத் தனமாக ஈடுபட்டிருப்பது தெரிகிறது. பிறகு எப்படி பல அரசு அதிகாரிகளின் தணிக்கை, கட்டுப்பாடு, சரிபார்ப்பு போன்றவற்றிலிருந்து தப்பித்து நடக்கின்றன என்று தெரியவில்லை. கடத்தல் மூலம் வருகின்றன என்றாலும், சட்டமீறல்கள் ஆகின்றன, அதில், பலரது தொடர்புகள் இருப்பதைக் காட்டுகிறது. போதை மருந்து தடுப்புச் சட்டம், தமிழ்நாடு போதை மருந்து கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டம் முதலியவற்றின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது[10].

Coimatore rave party

முதற்கட்ட விசாரணையில், இதுபோன்று ஏற்கனவே இவர்கள் பல முறை போதை விருந்தை நடத்தியுள்ளது தெரிகிறது: கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும், வசதி படைத்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இந்த போதை விருந்தில் பங்கேற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது[11]. அவர்களின் செல்போன்கள், விலை உயர்ந்த கார், இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த விடுதிக்கும் சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமறைவான உரிமையாளர் தேடப்பட்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில், இதுபோன்று ஏற்கனவே இவர்கள் பல முறை போதை விருந்தை நடத்தியுள்ளதும், இந்த முறை ஒருவருக்கு தலா ரூ.1200 செலுத்தி இந்த விருந்தில் பங்கேற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை இவர்கள் பயன்படுத்தி வந்ததும், காவல்துறையினருக்கு இதுபற்றி தொடர்ந்து கிடைத்து வந்த தகவலின் அடிப்படையில் இவர்கள் தற்போது சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது[12].

Pollachi rave party-another view-3

பொள்ளாச்சியில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடைபெறுவது: இதனையடுத்து 159 இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.  அனுமதியின்றி ரிசார்ட் நடத்திய தோட்டத்து உரிமையாளர் கணேஷ் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்[13]. இதையடுத்து அனுமதியின்றி நடத்தப்பட்ட ரிசார்ட்டுக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார்[14]. பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரச் சம்பவம் உக்கிரமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பொள்ளாச்சியில் மாணவர்கள் போதையில் ரகளை செய்து கொத்தாக கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[15].

Pollachi rave party-another view

எல்லாவற்றையும், எல்லோரையும் ஏமாற்றி, இத்தகைய ரேவ் பார்ட்டிகள் நடத்த முடியுமா?: இதுவே மிகவும் சந்தேகமாகவும் பல கேள்விகளை எழுப்புவதாகவும் இருக்கின்றது. பலதடவை இது போன்ற போதை மருந்து பார்ட்டிகள் நடந்துள்ளன, என்பது அவர்களுக்கு வேண்டிய போதைமருந்துகளும் அங்கு கிடைத்துள்ளன-வந்துள்ளன, அதே போல நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் மற்றும் வசதிபடைத்த அல்லது ஐடி.டெக்கீஸ் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளது தெளிவாகிறது. போலீசாருக்கு தெரியாமல் நடந்து வருகின்றன என்பது நம்புவதாக இல்லை, ஏனெனில், இந்த தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் மாணவர்களுக்குக் கிடைப்பது, சமூக விரோத மற்றும் ஆண் பெண் நடனங்கள், குறிப்பாக இரவில் நடப்பது இவையெல்லாம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் பெற்றோர்களுக்கு தெரியாமல் நடக்கின்றனவா என்று கவனிக்கும் போதும் மற்ற கேள்விகள் எழுகின்றன இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

© வேதபிரகாஷ்

09-05-2019

Pollachi rave party-another view-2

[1] தினமணி, பொள்ளாச்சியில் போதை, மது விருந்து: 159 இளைஞர்கள் நள்ளிரவில் கைது, By DIN | Published on : 04th May 2019 03:51 PM.

[2] ஏசியாநெட்.நியூஸ், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்கள்!! பொள்ளாச்சி பயங்கரம், 5, May 2019, 8:33 PM IST

[3] https://tamil.asianetnews.com/crime/girls-ware-semi-nude-dress-pollachi-pr1due

[4] https://www.dailythanthi.com/News/State/2019/05/04111819/Wine-party-in-Pollachi.vpf

[4]https://www.dinamani.com/tamilnadu/2019/may/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-159-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3145594.html

[5] The party was arranged through social media.The students gathered here through 13 WhatsApp groups named ‘Sakthiman’. Besides students, police arrested six persons, including farm owner Ganesh and resort staff. Organisers of the party charged Rs 1,200 per head.

English.mathrubhumi, Rave party in Pollachi: 150 students nabbed, including 90 from Kerala, for drug abuse, May 5, 2019, 09:21 AM IST.

https://english.mathrubhumi.com/news/crime-beat/rave-party-in-pollachi-150-students-nabbed-including-90-from-kerala-for-drug-abuse-1.3773559

[6] தினகரன், பொள்ளாச்சி அருகே உள்ள ரிசார்ட்டில் போதைப் பொருட்களுடன் 150 கேரள இளைஞர்கள் கைது, 2019-05-04@ 10:48:47

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=492726

[7] தினத்தந்தி, பொள்ளாச்சியில் மது விருந்து, விடிய விடிய நடனமாடி, கூச்சலிட்டு ரகளை : 159 இளைஞர்கள் கைது, பதிவு: மே 04, 2019 11:18 AM மாற்றம்: மே 04, 2019 12:27 PM

[8] https://www.dailythanthi.com/News/State/2019/05/04111819/Wine-party-in-Pollachi.vpf

[9] The police confiscated ganja, MDMA, cocaine, hashish and banned sedative tablets from the venue. Some of the seized items include 30 gms of ganja, 1 gram of hashish oil, 7 grams of ganja saras and 13.5 grams of MDMA tablets in addition to liquor.

https://www.thenewsminute.com/article/rave-party-busted-near-pollachi-165-youth-detained-cops-seize-drugs-101245

[10] TheNewsMinute, Rave party busted near Pollachi, 165 youth detained as cops seize drugs, TNM Staff, Sunday, May 05, 2019 – 12:31

An FIR has been filed under sections 8(C) (Illegal possession), 20 (b)(ii)(A) (Punishment for contravention in relation to cannabis plant and cannabis), 22(a) (Punishment for contravention in relation to psychotropic substances), 25 (Punishment for allowing premises, etc., to be used for commission of an offence), 27(a) (Punishment for consumption of any narcotic drug or psychotropic substance) of NDPS Act 1985 against resort owner and 15 others. The group has been arrested and remanded. The police have also arrested 24-year-old Naveen Venkatesh, an IT professional for possession and selling of IMFL Liquor along with 97 others for unlawful gathering and public nuisance. An FIR was filed under sections 143, 4(1)(a), 4(1)(k) of the Tamil Nadu Prohibition (TNP) Act and sections 290 (Punishment for public nuisance) of the IPC. This group was later let out on bail.

[11]https://www.dinamani.com/tamilnadu/2019/may/04/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-159-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3145594.html

[12] இந்தியன் எக்ஸ்பிரஸ்.தமிழ், பொள்ளாச்சி அருகே மது விருந்தில் ரகளை : கேரள மாணவர்கள் கைதுதோட்டத்தில் போதை பொருட்களை உட்கொண்டு ரகளை, WebDesk, May 04, 2019.

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/alcohol-party-near-pollachi-in-kerala-students-arrested/

[14] தமிழ்.ஒன்.இந்தியா, மீண்டும் அடிப்படும் பொள்ளாச்சி.. மதுவிருந்தில் கஞ்சா.. 159 கேரள மாணவர்கள் கைது.. ரிசார்ட்டுக்கு சீல், By Vishnupriya R, | Updated: Saturday, May 4, 2019, 13:30 [IST]

[15] https://tamil.oneindia.com/news/coimbatore/police-arrested-159-students-near-pollachi-who-involve-in-liquor-party-with-drugs-349050.html

தமிழகத்தில் கஞ்சா விளைச்சல், கடத்தல், விற்பனை: இவ்வளவு சகஜமாக நடக்கும் மர்மம் என்ன?

ஜனவரி 16, 2010

தமிழகத்தில் கஞ்சா விளைச்சல், கடத்தல், விற்பனை: இவ்வளவு சகஜமாக நடக்கும் மர்மம் என்ன?

© வேதபிரகாஷ்

கோவை சிறைக்குள் கஞ்சா கடத்தல்வார்டன் கைது[1] (23-07-2009): கோவை மத்திய சிறையில் டிஐஜி கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் ஜெயிலர் அன்பழகன் தலைமையில் சிறைக்காவலர்கள் நேற்று மாலை சோதனை நடத்தினர். அப்போது 7-வது பிளாக் அருகே ஒரு செருப்பு கிடந்தது. அதில் 250 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவுடன் செருப்பு எப்படி சிறைக்குள் வந்தது என்று விசாரித்தபோது, வார்டன் பழனியாண்டி (52) மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது அறையில் சோதனை நடத்தினர். அங்கிருந்த மற்றொரு செருப்பிலும் 250 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பழனியாண்டி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். ஜெயிலர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து, வார்டன் பழனியாண்டியை இன்று கைது செய்தார். திருச்சியைச் சேர்ந்த பழனியாண்டி, கோவை மாவட்டம் காரமடையில் வசித்துவந்தார். ஆயுள் தண்டனை கைதிகள் சசி, பழனிச்சாமிக்காக செருப்பில் மறைத்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது. சசி, பழனிச்சாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பழனியாண்டியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.

புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய தலைமை வார்டர் சஸ்பெண்ட்[2] (20-07-2009): கைதிகளுக்கு கஞ்சா கடத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட புழல் விசாரணை சிறைத் தலைமைக் காவலர், நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டார். புழல் சிறையில், இம்மாதம் 10ம் தேதி ரவுடி வெல்டிங் குமார் கொலை செய்யப்பட்டதை அடுத்து, கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரமாக்கப்பட்டது.  இந்நிலையில், விசாரணை சிறையில் கைதிகளுக்கு சிறைக்காவலர் மூலம், கஞ்சா கிடைக்கும் தகவல், அச்சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரனுக்கு கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், கடந்த 20ம் தேதி இரவுப் பணிக்கு சென்ற தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன் தீவிர சோதனை செய்யப்பட்டார்[3]. சோதனைக்கு முதலில் மறுத்த பாலகிருஷ்ணன் பின்பு ஒத்துழைத்தார். தனது ஷூவுக்குள் மறைத்து கஞ்சா கடத்த முயன்று பிடிபட்டார் பாலகிருஷ்ணன். அவரிடமிருந்து சிகரெட் பாக்கெட்கள், 47 பொட்டலம் கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவ செய்யப்பட்டது. இதையடுத்து பொன்னேரி கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் பாலகிருஷ்ணன் இன்று பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

கஞ்சா கடத்திய 80 வயது முதியவர் கைது! : 80 வயது முதியவர் ஒருவரின் வீட்டில் எக்சைஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கஞ்சா கைப்பற்றப்பட்டதை அடுத்து, அந்த முதியவர் கஞ்சா கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள அனேகல் பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, எக்சைஸ் அதிகாரிகள் அவரது வீட்டைச் சோதனையிட்ட போது, சுமார் 2.5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பதுக்கியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். 80 வயதான இந்த முதியவர் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனை ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்ததாகவும் அதனையடுத்து திங்கள் கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்[4].

கஞ்சா விற்ற தம்பதி கைது (27-12-2009): பலமுறை சிறைசென்றாலும் புத்தி மாறவில்லை, தொழிலும் மாறவில்லை[5]. ராஜ​பா​ளை​யம் அருகே கஞ்சா விற்று 17 முறை சிறை சென்ற பெண் மீண்​டும் சனிக்​கி​ழமை கஞ்சா விற்ற போது போலீ​ஸôர் கைது செய்​த​னர்.​ ராஜ​பா​ளை​யம் அய்​ய​னா​பு​ரத்​தைச் சேர்ந்​த​வர் கன​க​ராஜ்.​ இவ​ரும் இவ​ரது மனைவி ராஜேஸ்​வ​ரி​யும் கஞ்சா விற்று பல​முறை சிறை சென்​றுள்​ள​னர்.​ ​ ராஜேஸ்​வரி கஞ்சா விற்று இரு முறை குண்​டர் சட்​டம் உள்​பட 17 முறை கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.​ சனிக்​கி​ழமை இவர் வீட்​டில் கஞ்சா விற்ற போது கீழ​ரா​ஜ​கு​ல​ரா​மன் போலீ​ஸôர் இவ​ரை​யும் கைது செய்​த​னர்.

சிறுவன் மீதான கஞ்சா வழக்கு ரத்து:ஆசிரமத்தில் சிறுவன் ஒப்படைப்பு (ஜனவரி 02,2010)[6]: கோவை:ஐந்து வயது சிறுவன் மீது அன்னூர் போலீசார் தொடர்ந்த கஞ்சா வழக்கின் மேல்நடவடிக்கையை, மாவட்ட எஸ்.பி., கண்ணன் ரத்து செய்தார். ஆனாலும், சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல் ஆசிரமத்தில் ஒப்படைக்கப்பட்டான்.கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில், கஞ்சா விற்றதாக, லட்சுமி(45) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா ரெய்டின் தொடர்ச்சியாக, லட்சுமியின் மகன் சூர்யா(5)வை கைது செய்த அன்னூர் போலீசார், கோவை ஜே.எம்.எண்: 4 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) சத்தியமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சிறுவனை, சிறார் கூர் நோக்கு இல்லத்துக்கு அனுப்ப வேண்டுமானால், வயது சான்று, குற் றம் செய்ததற்கான ஆதாரம் மற்றும் பெற்றோரின் வாக்குமூலம் வேண்டும் என, மாஜிஸ்திரேட் கூறியதையடுத்து, சிறுவனை போலீசார் மீண்டும் அன்னூர் அழைத்துச் சென்றனர்.இதுகுறித்த செய்தி, நேற்று பத்திரிகைகளில் வெளியானது. இந்த நிலையில்,நேற்று மாவட்ட எஸ்.பி., அலுவலக்தில் இருந்து சிறுவன் மீதான கஞ்சா வழக்கின் மேல் நடவடிக்கை ரத்து செய்யப் பட்டுள்ளதாக, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அன்னூர் எஸ்.ஐ., ராமசாமி தலைமையில் போலீசார், கடந்த 30ல், ஓதிமலைரோடு,மண்ணீஸ்வரர் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கோவில் அருகே, கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சேலம், அம்மாபேட்டை அருகேயுள்ள வாய்க்காப் பட்டியைச் சேர்ந்த சகாதேவனின் மனைவி லட்சுமி(45), இவரது மகன் சூர்யா(8) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். லட்சுமியிடம் நடத்திய விசாரணையில், அவரது கணவர் மற்றும் உறவினர்கள் இருக்கும் இடத்தை கூற மறுத்துவிட்டார். இதனால், கஞ்சா விற்ற வழக்கில் கைதான சிறுவன் சூர்யாவின் பாதுகாப்புக்காக, கோவை ஜே.எம்.எண்:4 மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டான்.சிறுவனின் வயது சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டதாலும், வயது சான்றிதழ் பெற வேண்டி இருப்பதாலும், சிறுவன் சூர்யாவை கருமத்தம்பட்டி அருகேயுள்ள நல்லாக் கவுண்டன்பாளையத்தில் செயல்படும், பிரபஞ்ச அமைதி சேவா ஆசிரமத்தில், எஸ்.பி., உத்தரவுப்படி ஒப்படைக்கப் பட்டான். மேலும், சிறுவன் மீது அன்னூர் போலீசார் பதிவு செய்த கஞ்சா வழக்கின் மேல்நடவடிக்கையும் கைவிடப்பட் டது. இவ்வாறு அறிக்கை தெரிவித்துள்ளது.

திருப்பூருக்கு கஞ்சா கடத்திய பெண் உட்பட 3 பேர் கைது (டிசம்பர் 16,2009)[7]: கோவை: ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்தப் பட்ட, 23 கிலோ கஞ்சா நேற்று பறிமுதல் செய்யப் பட்டு, பெண் கஞ்சா வியாபாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் – ஊத்துக்குளி ரோட்டில் டி.எஸ்.பி., ராமசாமி தலைமையில் நேற்று அதிகாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பைக்கில், டூரிஸ்ட் கைடுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவர், கம்பத்தைச் சேர்ந்த நாகராஜ்(30) என்றும், துணிகளுக்கு கீழ், 1.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், “”தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த கண்ணன்(28) மூலம் ஆந்திர மாநிலம், வாரங்கல் பகுதியில் கஞ்சா வாங்கப்பட்டு, ஹவுரா எக்ஸ்பிரசில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.””அங்கிருந்து ஆம்னி பஸ்களில் கம்பத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கஞ்சா, வடக்குப்பட்டியைச் சேர்ந்த வியாபாரி மொக்கப்பிள்ளை(30) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவரிடமிருந்து ஒரு பகுதி கஞ்சா கோவை, திருப்பூர் பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்லப் பட்டது,” என்றார். இதைத் தொடர்ந்து கண்ணன், மொக்கப் பிள்ளை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கைக்கு ஜெலட்டின், கஞ்சா கடத்தல்: போலீசார் ரகசிய விசாரணை[8] (நவம்பர் 10,2009): ராமநாதபுரம்: இலங்கைக்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் கஞ்சா கடத்தல் குறித்து போலீசார் ரகசிய விசாரணை செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு மருந்து பொருட்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வந்தன.  இலங்கையில் புலிகளுடன் போர் தீவிரமடைந்தபோது தமிழக கடலோர பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டது. போர் முடிந்தவுடன் தமிழகத்திலிருந்து கடத்தல் குறைந்தது. கடந்த சில மாதங்களாக சத்தமின்றி கடத்தல் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு சில கும்பல்கள் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் கஞ்சா கடத்துகின்றனர். இங்கு 75 ரூபாய்க்கு வாங்கி ஜெலட்டின் குச்சிகளை, இலங்கையில் 900 முதல் 1,000 ரூபாய் வரை விற்கின்றனர். இத்தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, முக்கிய போலீஸ் அதிகாரியின் உத்தரவின்படி ராமேஸ்வரத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்ட ஒரு படகை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மீனவர்களுக்கு ஜெலட்டின் மற்றும் கஞ்சா கடத்தலில் யார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறித்தும் போலீசார் ரகசியமாக விசாரிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “இலங்கையில் வெடிகுண்டு வீசி மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இங்கிருந்து ஜெலட்டின் குச்சிகள் கடத்தப்படுகின்றன. மேலும், இலங்கையில் நல்ல கிராக்கி உள்ளதால் ஜெலட்டின் குச்சியுடன் கஞ்சாவையும் கடத்துகின்றனர். மீனவர்கள் போர்வையில் செல்வதால் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதில் தொய்வு ஏற்படுகிறது’ என்றார்.

போதை கடத்தலுக்கு மாறியபார் டான்சர்மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கல்[9] (நவம்பர் 12,2009): மும்பை:மும்பையில், மூட்டை மூட்டையாக கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதை கடத்திய பெண் தலைமையிலான கும்பல் பிடிபட்டது. இந்த பெண் “பார் டான்சராக’ இருந்து கஞ்சா கடத்தலுக்கு மாறியவர்.ஐதராபாத்தை சேர்ந்தவர் சிம்ரன்(34). சில ஆண்டுக்கு முன், பிழைப்புக்காக மும்பை வந்தார்; மது “பார்’களில் வேலை செய்தார். மது பரிமாறும் பணிப்பெண்ணாக இருந்து, பின்னர், “டான்சராகவும் இருந்தார்.அப்போது, இவருக்கு ஸ்ரீபாத் என்ற போதை கடத்தல் ஆசாமியின் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து கஞ்சா உட்பட போதைப் பொருள் கடத்தலை நடத்தி வந்தனர். ஆறு மாதத்துக்கு முன், ஸ்ரீபாத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, சிம்ரனை விட்டு பிரிந்து சென்று விட்டார்; தொழிலுக்கும் அவர் முழுக்கு போட்டு விட்டார். இதனால், ஸ்ரீபாத் விட்டு சென்ற வாடிக்கையாளர்களை வைத்து, போதைப் பொருள் கடத்தல் தொழிலை சிம்ரன் தொடர்ந்து நடத்தி வந்தார். கடந்த மூன்று மாதமாக அவர் தொழிலில் அதிக வருமானம் கிடைத்தது. இதனால், அதிக அளவில் கஞ்சாவை கடத்தி வந்து மும்பையில் இருந்து வினியோகம் செய்து வந்தார். இது தொடர்பாக, மும்பை போதைத் தடுப்பு போலீசுக்கு தகவல் கிடைத்தது. “இன்பார்மர்’கள் மூலம் தகவல் திரட்டி போலீஸ் படை, இந்த கும்பலை பிடிக்க தக்க சமயம் வர காத்துக்கொண்டிருந்தனர். கடந்த வாரம், மும்பையில் போகிசார் என்ற பகுதியில் ஒரு லாரியை போலீசார் மடக்கினர். அதில், டிரைவர் சீட்டுக்கு அடியில் சில மூட்டை கஞ்சா பதுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. டிரைவரை தக்க விசாரணை செய்தபோது, அவர் கஞ்சா பதுக்கி யிருந்த குடோனை காட்டினார்.குடோனில் மேலும் பல மூட்டை கஞ்சா சருகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ஆறு கோடி ரூபாயை எட்டும். சிம்ரன் மற்றும் அவர் கும்பலை சேர்ந்த ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Last Updated :
தமிழககேரள எல்லைக் காடுகளில் கஞ்சா: சமூக விரோதிகளின் கூடாரமாகிறது வனம்[10] (ஆகஸ்ட் 16,2008): மஞ்சூர்,: தமிழக, கேரளா எல்லையோரங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் அதிகரித்து வரும் கஞ்சா சாகுபடியால், இரு மாநில வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மஞ்சூரிலிருந்து 35 கி.மீ., தொலைவில் தமிழக-கேரள எல்லை அமைந்துள்ளது; இது, அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுகிறது. இதில், அட்டப்பாடி, தொடுக்கி, மல்லேஸ்வரன் மலை, செந்துமி உட்பட்ட பகுதிகள் கேரள மாநிலப் பகுதிகளாகும், அப்பர்பவானி, கோரகுந்தா உட்பட்ட பகுதிகள் தமிழக பகுதிகளாகும். மேற்கண்ட பகுதிகள், இரு மாநில எல்லையில் அமைந்துள்ளன. கேரள மாநிலப் பகுதிகளில் ஆதிவாசி மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். சமூக விரோதிகள், மேற்கண்ட பகுதிகளில் எளிதில் நுழைந்து, அடர்ந்த வனப்பகுதிகளில் குடில் அமைத்து, பல ஏக்கரில் வனப்பகுதிகளை அழித்து கஞ்சா சாகுபடி செய்து வருகின்றனர். கள்ளச்சாராயமும் காய்ச்சுகின்றனர். இதற்கான பொருட்களை தமிழக பகுதிகளான கோரகுந்தா, அப்பர்பவானி வழியாக வனப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். அதேபோல் கோவை மாவட்டம், ஆனைகட்டி வழியாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது.  இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சா, பொட்டலமாக கட்டி சிறிய பைகளில் எடுத்து செல்லப்படுகிறது. இங்கு உற்பத்திச் செய்யப்படும் கஞ்சா, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, கஞ்சா சாகுபடிக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை இருப்பதால், இந்த மாதங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதற்காக பொருட்களை ஒரு மாதத்திற்கு முன்பாகவே வனப்பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, அங்கு ஆங்காங்கே குடில் அமைத்து தயார்படுத்துகின்றனர். கஞ்சா உற்பத்தி முடிந்ததும், டிசம்பர் மாதங்களில் வனப்பகுதிகளிலிருந்து வெளி இடங்களுக்கு கஞ்சாவை கடத்துகின்றனர்.  இதில், மஞ்சூர் வழியாக கஞ்சாவை நள்ளிரவில் கடத்துவதை சமூக விரோதிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கு உடந்தையாக மஞ்சூரில் சில முக்கிய புள்ளிகள் துணை போவதாகவும், இதன் மூலம் அவர்கள் பல லட்சம் மதிப்பில் சொத்து சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரு மாநில வனப்பகுதிகளில் வனத்துறை மற்றும் போலீசார் கூட்டு ரோந்து சென்றாலும், சமூக விரோதிகளை பிடிக்க முடியாமல் திரும்பி வருகின்றனர். இப்படி ரோந்து செல்லும் சமயங்களில் அப்பாவியான ஆதிவாசி மக்கள் சிக்கி அவதியடைவதுண்டு. கடந்த ஆண்டில் மட்டும் 80 முறை இரு மாநில வனத்துறை மற்றும் போலீசார் கூட்டு ரோந்து சென்று, பல கோடி மதிப்பில் பயிரிட்டுள்ள கஞ்சா செடிகளை அழித்தனர். ஆனாலும், தொடர்ந்து சமூக விரோதிகள் கஞ்சா பயிரிட்டு வருவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். அதாவது மேற்கண்ட வனப்பகுதிகள், அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால், ஏராளமான இடங்களில் குடில் அமைத்து கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. வனத்துறையினர் ரோந்து செல்லும் தகவல் முன்கூட்டியே, கிராமப் பகுதியில் உள்ள சிலர் மூலம் தெரிந்துக் கொள்கின்றனர். இதனால், ரோந்து சமயங்களில் ஒரு சிலரை கைது செய்து கஞ்சாவை கைப்பற்றினாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சமூக விரோதிகளை பிடிக்கும் நோக்கில் கடந்த மாதம் இறுதியில், கேரளா மாநிலம் பாலக்காடு, அட்டப்பாடி மற்றும் மண்ணார்காடு போன்ற பகுதிகளில் உள்ள வன அலுவலர்கள் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர்கள் சேர்ந்து கூட்டம் நடத்தினர்.  இதில், எல்லையோரங்களில் ஊடுருவி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாதந்தேறும் ரெய்டு நடத்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இரு மாநில வனத்துறையினர் ஒத்துழைப்போடு எல்லையோரங்களில் புறக்காவல் அமைத்து பலப்படுத்தினால், சமூக விரோதிகளை ஒடுக்க முடியும் என வனத்துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஒரு மாதத்தில் நூற்றூக்கணக்கான கடத்தல்கள், கைதுகள்: தினமருக்கு நன்றி.

 • 8 Aug 2009 உடுமலை: வால்பாறையில் 7.5 கிலோ கஞ்சா வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஜெயபாண்டியன் (51) போலீசில் சிக்கினார்.
  www.dinamalar.com/Incident_detail.asp?news_id=12000
 • அதில் ரொட்டிக்குள் 20 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்கள் யாருக்காக கஞ்சா கொண்டு சென்றார்கள்? என விசாரிக்கப்பட்டு
  www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=11084
 • கஞ்சா விற்ற தி.மு.க.,கவுன்சிலர் …29 Aug 2008 சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=4339&ncat
 • 22 Sep 2009 திண்டிவனத்தில் கேட்பாரற்று கிடந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல் அதில், 40 கிலோ கஞ்சா இருந்தது. இதைக் கொண்டு வந்த இரண்டு பேர்,
  www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=12955
 • தேனி: ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட கஞ்சா மூட்டைகள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட
  www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13466
 • ஜோதிடரை வெட்டிக் கொன்ற கஞ்சா வியாபாரிகளுக்கு ஆயுள் இவர்கள், பெரியாயிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில் கஞ்சா விற்பனை செய்வது
  www.dinamalar.com/court_detail.asp?news_id=2413
 • 30 Dec 2009 பந்தலூர் : பந்தலூர் அருகே உப்பட்டியில் கஞ்சா விற்பனையாளர் பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக
  www.dinamalar.com/Tnspl_districtdetail.asp?news_id=280019&ncat
 • 30 Jul 2009 ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில், மரவள்ளிப் பயிருடன் ஊடுபயிராக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடி அழிக்கப்பட்டது.
  www.dinamalar.com/Incident_detail.asp?news_id=11810
 • 6 Aug 2009 இறந்த கைதியின் ஜட்டியில் கஞ்சா பொட்டலங்கள் : கடலூர் சிறை கைதி கடலூர்: கடலூர் மத்திய சிறையில், கஞ்சா கேட்டு சுவற்றில்
  www.dinamalar.com/Incident_detail.asp?news_id=11944
 • செருப்பில் பிளேடு, கஞ்சா கடத்தல் புழல் சிறையில் 2 கைதி சிக்கினர் கஞ்சா, பிளேடு கடத்தல் தொடர்பாக அவர்கள் மீது புழல் போலீஸ்
  www.dinamalar.com/court_detail.asp?news_id=1107
 • 6 Nov 2008 சிறைக்குள் கஞ்சா கடத்தல்7 போலீசார் மீது நடவடிக்கை திருநெல்வேலி :பாளையங்கோட்டை சிறைக்குள் கஞ்சா கடத்தலை கவனிக்காத
  www.dinamalar.com/Incident_detail.asp?news_id=6014
 • கஞ்சா வழக்கில் 10 மாதங்களாக சிறை இருப்பவருக்கு ஜாமீன் மறுப்பு மதுரை : மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் 10மாதங்களாக சிறையில்
  www.dinamalar.com/court_detail.asp?news_id=1434
 • 29 Dec 2009 கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர்
  www.dinamalar.com/Tnspl_districtdetail.asp?news_id=279680&ncat
 • 17 Oct 2009 ஜூலை 10 மற்றும் 16ல் 250 கிராம் கஞ்சா, இரு மொபைல் போன்கள் ஆக.9ல் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த வார்டன் ஜெயராமன் கைது
  www.dinamalar.com/General_detail.asp?news_id=17952
 • 28 Apr 2009 கைதிக்கு செருப்பு மூலம் கஞ்சா கடத்தல்: ஐகோர்ட் வக்கீல் கைது சென்னை : புது செருப்பு மூலம் கைதிக்கு கஞ்சா கடத்திய,
  www.dinamalar.com/Incident_detail.asp?news_id=9885
 • கஞ்சா வியாபாரியான இவர், நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு போலீசாரை பார்த்த கஞ்சா கும்பல் கையில் வைத் திருந்த சூட்கேசை போட்டு
  www.dinamalar.com/new/district_main.asp?ncat=Chennai&showfrom
 • ஓடையில் பதுக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூடைகள் பறிமுதல் தேனி மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டம் அதிகம் உள்ளது.
  www.dinamalar.com/Incident_detail.asp?news_id=4900
 • 2.கஞ்சா விற்ற வாலிபர் கைது‎: கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
  www.dinamalar.com/district_main.asp?ncat=Krishnagiri&showfrom=5/
 • கோவை சிறையில் கணவனுக்கு கஞ்சா சப்ளை; மனைவி கைது. ஜூலை 31,2008,00:00 IST. கோவை:கஞ்சா வழக்கில் கோவை சிறையில் உள்ள கணவனுக்கு, பேரீச்சம்பழ
www.dinamalar.com/court_detail.asp?news_id=1108
 • பாரிமுனை : பூக்கடை பகுதியில், கஞ்சா விற்ற பிரபல பெண் போதை வியாபாரி மூவரிடமிருந்தும் 50 ஆயிரம் ரூபாய் மதிப் புள்ள 3.5 கிலோ கஞ்சா

www.dinamalar.com/district_main.asp?ncat=Chennai&showfrom=7/3/

குற்றத்தின் அமைப்பு, நடக்கும் விதம், ஈடுபடுபவரின் தன்மை: இப்படி மாதத்திற்கு இரண்டு-மூன்று என தொடர்ந்து செய்திகள் வருவது, இது ஒரு நன்றாக திட்டமிட்டு ஏற்படுத்தி வைக்கப் பட்ட தொழில் போன்றே தோன்றுகிறது. மேலும், அரசியல்வாதிகள், போலீஸ் முதலியோரின் தொடர்பு மற்ற விவகாரங்களை எடுத்துக் காட்டுகிறது. குறுகிய காலத்தில், லட்சங்கள்-கோடிகள் சம்பாதிக்கலாம் என்ற மனப்பாங்கு, அதனால் வரும் ஊக்கம் முதலியன தெரிகின்றது. ஈடுபடுகின்றவர்களுக்கு சகலமும் கிடைக்கிறது. மாட்டிக்கொண்டாலும், அவர்களுக்கென போலீஸார், வக்கீல்……………………….. என்று அனைவரும் இருக்கின்றனர் [ஒரு தடவை முஹம்மது யூனிஸ் என்ற ராஜிவ் காந்தியின் நண்பருடைய மகன் போதைப் பொருள் குற்றத்திற்காக அமெரிக்க சிறையில் அடைக்கப் பட்டான். அப்பொழுது, ராஜிவ் காந்தி அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியபோது, த்ந்தனைக் காலத்தைக் குறைக்க பரிந்துரைத்ததாக செய்திகள் வெளிவந்தன].

 • ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ரகசியமாகப் பயிரிடுதல்.
 • ஆமணக்குச் செடிகளுடன் சேர்த்துப் பயிருடுதல்
 • மரவள்ளிப் பயிருடன் ஊடுபயிராக பயிரிட்டு மறைத்தல்.
 • சட்டவிரோதிகள், சாராயம் காய்ச்சுபவர்கள், மலைவாசிகள் / ஆதிவாசிகளின் ஒத்துழைப்பு / பாதுகாப்பு
 • செருப்பு, ஷூ, ரகசிய அறை இவற்றில் மறைத்து கடத்தல்
 • போலீஸாரே சிறைக்குள் கடத்தல்
 • எடுத்துச் செல்ல, விற்க, பெரியவர் (80 வயது), சிறுவர் (8 / 10), இவர்களை பயன்படுத்துதல்.
 • பெண்கள் அதிக அளவில் உபயோகப்படுத்துதல்
 • குற்றஞ்செய்வதே தொழிலாகக் கொண்டுள்ளுவர்கள் ஈடுபடுவது.
 • கஞ்சா கடத்துவது – விற்பதையே தொழிலாகக் கொண்டு தொடர்ந்து செய்வது.
 • அரசியல்வாதிகளின் தொடர்பு.
 • போலீஸாரின் தொடர்பு, ஊக்குவிப்பு, உடன்பாடு.
 • போலீஸார்-கைதிகள் தொடர்பு, ஊக்குவிப்பு, உடன்பாடு.
 • வக்கில்கள்- தொடர்பு, ஊக்குவிப்பு, உடன்பாடு.
 • போதைபொருள் வியாபாரி – தொடர்பு, ஊக்குவிப்பு, உடன்பாடு.
 • விபச்சாரிகள், அதைப் போன்ற பெண்களின் ஒத்துழைப்பு, பரிமாற்றம்.

பொது மக்கள், பெற்றொர், மற்றோர் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்: இன்றைய காலகட்டத்தில் கெட்டச் செயல்களும், நல்ல திறமையாகத்தான் நடத்தப் படுகின்றன. ஆகையால், சாதாரண மக்கள் தாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. சமூகத்தீவிரவாதிகள், சமூகத்தை சீர்குலைக்க இவ்வாறு பல யுக்திகளைக் கையாளலாம். அரசே – அல்லது ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மற்ற கூட்டாளிகள், குற்றவாளிகளுடன் ஒத்துழைத்துப் போகும் போது, மக்களுக்கு இறைவனைத் தவிர வேறு கதியில்லை. அந்நிலையில்தான் நாத்திகர் என்றும், பகுத்தறிவுவாதிகள் என்றும் தம்மைக் கூறிக்கொண்டு உலாவரும் ஒரு கூட்டம் சமுதாயத்தை 40-60 வருடங்களகக் கெடுத்து வருகின்றது. இவர்களால் தான் குற்றங்கள் அதிகமாகிறது என்ற உண்மையை போகப்போகத் தெரிந்து கொள்வார்கள். குற்றவியல் மற்றும் மனோதத்துவ ஆரய்ச்சியாளர்கள் சுலபமாக அத்தகைய உண்மையை எடுத்துக் காட்டுவார்கள். இருப்பினும், ஆட்சிசெய்பவர்களும், சமூதயத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றவர்களும் மாற்றுக் கருத்து கொண்டிருப்பதால், அத்தகைய உண்மையை அறிய காலம்தான் உதவ வேண்டியுள்ளது. நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோமாக.

© வேதபிரகாஷ்

16-01-2009


[1] கோவை சிறைக்குள் கஞ்சா கடத்தல் – வார்டன் கைது, வியாழக்கிழமை, ஜூலை 23, 2009, 18:10[IST],

http://thatstamil.oneindia.in/news/2009/07/23/tn-warden-arrested-for-ganja-smuggling-into-jail.html

[2] புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய தலைமை வார்டர் சஸ்பெண்ட், திங்கள்கிழமை, ஜூன் 29, 2009, 18:51[IST]

http://thatstamil.oneindia.in/news/2009/06/29/tn-puzhal-prisoan-head-warder-suspended-for-ganja.html

http://thatstamil.oneindia.in/news/2009/06/29/tn-puzhal-prisoan-head-warder-suspended-for-ganja.html

[3] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=11125

[4] http://www.inneram.com/200912225463/80

[5] தினமணி, First Published : 27 Dec 2009 07:09:12 AM IST

[6] http://www.dinamalar.com/General_detail.asp?news_id=20402

[7] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14719

[8] http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18686

[9] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13964

[10] http://www.dinamalar.com/General_detail.asp?news_id=5387