Archive for the ‘குஞ்சாலிக்குட்டி’ Category

பிராமணாள் கபே மூடப்பட்டது – நள்ளிரவில் காலிசெய்யப் பட்டது – பார்ப்பனர் பயந்து விட்டாரா, மிரட்டப் பட்டாரா ?

நவம்பர் 8, 2012

பிராமணாள் கபே மூடப்பட்டது – நள்ளிரவில் காலி செய்யப் பட்டது பார்ப்பனர் பயந்து விட்டாரா,  மிரட்டப் பட்டாரா ?

திகவின் பிரச்சார நாளிதழ் “விடுதலை”யின் படி, “சிறீரங்கத்தில் பிராமணாள் பெயர் உணவு விடுதி மூடப் பட்டது  –  நள்ளிரவில் கடையைக் காலி செய்தனர்’,  என்றுள்ளது.  இத்தனை நாள் தைரியமாக இருந்தார், இந்து அமைப்புகள் அவருக்குத் துணையாக இருந்தன என்றெல்லாம் திக கூட்டங்கள் வர்ணித்து வந்துள்ளன. பார்ப்பன ஜெயலலிதா முதலமைச்சராக இருப்பதால், இந்த பார்ப்பன ஹோட்டல் முளைத்துள்ளது என்றெல்லாம் பேசி, எழுதி பிரச்சாரம் செய்தனர். பிறகு எப்படி அவர் இரவோடு இரவாக கடையை மூடிவிட்டு, காலி செய்து கொண்டு போனார் என்று தெரியவில்லை. முதலில் “விடுதலியில்” உள்ளதை பார்ப்போம்:

சிறீரங்கத்தில் பிராமணாள் பெயர் உணவு விடுதி மூடப் பட்டது –  நள்ளிரவில் கடையைக் காலி செய்தனர்: திருச்சி, நவ.7, 2012- சிறீரங்கம் ரங்கநகர் சாலையில் கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே (ஓட்டல்) என்ற பெயரில் மணிகண்டன் பார்ப்பனர் நடத்தி வந்தார்.  திடீரென்று பிராமணாள் என்ற சொல்லை விளம்பரப் பலகையில் புகுத்தினார். அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் உள்ள பிராமணாள் என்ற பெயரை அகற்றுமாறு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மணிகண்டன் பார்ப்பனரிடம் வலி யுறுத்தப்பட்டது. மேலும் திருவரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத்திற்கு  அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

காவல்துறை அனுமதி மறுப்பு: இந்நிலையில் திருவரங்கத்தில் ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டம் நடத்த கழகம் சார்பில் அனுமதி கோரியிருந்தது; ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது. மூன்று முறை தொடர்ந்து காவல் துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று கடந்த ஞாயிறன்று திருவானைக் காவலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது (4.11.2012).

போராட்டம் அறிவிப்பு: அப்பொதுக் கூட்டத்தில் பிராமணாள் ஓட்டல் பெயரை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அகற்றுகின்றவரை போராட்ட நடவடிக்கையைக் கழகம் மேற்கொள்ளும். மேலும் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி இப்போராட்டத் திற்கான அறிவிப்பினை வெளியிடுவேன் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருவானைக் காவல் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.

 

நள்ளிரவில் அகற்றம்: இந்நிலையில் அந்த உணவு விடுதி கட்டடத்தின் உரிமையாளர் (பாவை டவர்ஸ்) ராஜா, மணி கண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து   நேற்று (6.11.2012) நள்ளிரவு திடீரென்று  கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே உணவு விடுதியை மணிகண்டன் முழுமையாக கடையை இழுத்து மூடி காலி செய்தார்[1]. பிராமணாள் கபே பெயர் பலகையும் அகற்றி எடுத்துச் சென்றார்.

மீண்டும் பிராமணாள் முளைத்தால்… : வேறு இடத்தில் இதே மணிகண்டன் உணவு விடுதியைத் திறந்து அதிலும் பிராமணாள் பெயரைப் புகுத்தினால், அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது[2].

இப்படி அவர்களுடைய செய்தி உள்ளது.

வீரமணி பேசியதில் இரண்டு விஷய்யங்கள் கவனிக்க வேண்டியதுள்ளது. ஏனெனில், தினத்தந்தி[3] மற்றும் தினகரன்[4] அவரது பேச்சை வேறுவிதமாக வெளியிட்டிருந்தது[5].  அவற்றை முந்தைய இடுகையில் அவர் சொல்லியபடியே பதிவு செய்துள்ளதை வசதிக்காகத் திரும்ப கீழே கொடுக்கிறேன்[6].

கட்டுப்பாடுள்ள இயக்கம்: இது கட்டுப்பாடு மிகுந்த இயக்கம், தலைமை கட்டளையிட்டால் நூலிழை பிறழாமல் நடந்துகொள்ளக் கூடியவர்கள். (இந்த நேரத்தில் கழகத் தலைவர் கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார். அனைவரும் ஒரு நிமிடம் எழுந்திருங்கள் என்றார் அனைவரும் எழுந்து நின்றனர். அனைவரும் அமருங்கள் என்றார்; அனைவரும் அமர்ந்தனர் – இதனைச் சுட்டிக்காட்டி  இந்தக் கட்டுப்பாட்டுக்குப்  பெயர்தான்  கருஞ்சட்டைப்  பட்டாளம்  –  திராவிடர்  கழகம் என்று  குறிப்பிட்டார்[7].தனிப் பட்டவர் மீது காழ்ப்புணர்வு இல்லை: நாங்கள் மான உணர்வுக்காக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். யார்மீதும் எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பகை இல்லை. காழ்ப்பும் கிடையாது. இந்தக்  கூட்டம்  முடிந்தவுடன்  யாரும்  அந்த உணவு விடுதி  பக்கம் கூட  செல்லக் கூடாது –  வீட்டுக்கு நேராகப் போக வேண்டும்.

“எழுந்திரு” என்றால் எழுந்து கொள்வது, “உட்கார்” என்றல் உட்கார்ந்து கொள்வது என்ற நிலையில் உள்ளார்கள் என்றால், வேறெந்த கட்டளையிட்டாலும், அவ்வாறே செய்வார்கள் என்றுதான் ஆகிறது. “இந்தக் கூட்டம் முடிந்தவுடன் யாரும் அந்த உணவுவிடுதி பக்கம் கூட செல்லக் கூடாது  –  வீட்டுக்கு நேராகப் போக வேண்டும்”, என்று சொன்னது மறைமுகமாக சொன்னதை செய்துவிடு என்பது போல உள்ளதோ என்னமோ? ஆகவே, ஒருவேளை கூட்டம் முடிந்தவுடன், திகவினர் அந்த உணவு விடுதி கட்டடத்தின் உரிமையாளர் (பாவை டவர்ஸ்) ராஜாவிடம் சென்று மிரட்டினரா அல்லது நேரிடையாகவே மணி கண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு பயமுறுத்தினரா அல்லது ராஜாவின் மூலம் வற்புறுத்தப்பட்டாரா என்பது தெரியவில்லை. ஆகவே, “அந்த உணவு விடுதிகட்டடத்தின் உரிமையாளர்  (பாவைடவர்ஸ்)  ராஜா,  மணிகண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு கூறியுள்ளார்” என்பதற்கான அர்த்தம் தெரியவில்லை. பிராமணர்களின் மீது இப்படி குறிப்பாக தாக்குதல் நடத்தி வருவது, அவர்களே சொல்கின்றது போல பாசிஸத் தன்மையினைத்தான் எடுத்துக் காட்டுகிறது[8]. மற்ற ஜாதிக்காரர்களின் கடைகளை விட்டுவிட்டு, பிராமணர் கடைகளை மட்டும் மிரட்டுவது, இப்படி ஏதோ நாட்டிலேயே மிக முக்கிய விஷயம் போல தினசரி வந்து கலாட்டா செய்வது, ஆபாசமாக கமென்ட் செய்து விட்டு போவது, கூட்டம் போட்டு மிரட்டுவது, இணைத்தளங்களில் அவதூறு செய்வது[9] முதலிய காரியங்கள் அத்தகையத் தன்மையினைத் தான் வெளிப்படுத்துகிறது.

மறுபடியும் மிரட்டல்: இத்தனையும் நடந்த பிறகு, “மீண்டும் பிராமணாள் முளைத்தால்: வேறு இடத்தில் இதே மணிகண்டன் உணவு விடுதியைத் திறந்து அதிலும் பிராமணாள் பெயரைப் புகுத்தினால், அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”[10], என்கிறார்கள்.

மீண்டும் பிராமணாள் முளைத்தால்: வேறு இடத்தில் இதே மணிகண்டன் உணவு விடுதியைத் திறந்து அதிலும் பிராமணாள் பெயரைப் புகுத்தினால், அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது[11].

இதே பெயரில் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஓட்டல்கள் உள்ளன என்று இணைத்தளங்களில் பலர் எடுத்துக் கட்டியுள்ளனர். பிறகு, அங்கும் சென்று இவ்வாறு மிரட்டுவார்களா?

© வேதபிரகாஷ்

08-11-2012


[7] இது “கட்டுப்பாடு” என்பதா, இல்லை சொன்னதை செய்வோம் என்ற நிலையில் உள்ளார்கள் என்பதா?

செவ்வாய், நவம்பர் 06, 2012  VIDUTHALAI EPAPER

http://viduthalaidaily.blogspot.in/2012/11/blog-post_6.html

இந்திய அரசியல்வாதிகளின் செக்ஸ் லீலைகள், விளையாட்டுகள் மற்றும் அவதூறுகள் – I

திசெம்பர் 28, 2009

இந்திய அரசியல்வாதிகளின் செக்ஸ் லீலைகள், விளையாட்டுகள் மற்றும் அவதூறுகள் – I

வேதபிரகாஷ்

ஆள்பவர்கள், ஆட்சியாளர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள்: என்னதான் விதண்டாவாதம் பேசினாலும் ஆள்பவர்கள், ஆட்சியாளர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும், ஏன் மக்களும் விரும்புகிறார்கள். “உரிமை” என்றெல்லாம் பேசும் சித்தாந்திகள் கூட இங்கு மௌனமாகி விடுவார்கள். இருப்பினும் அதிகாரம் ஒருவனை சீர்குலைத்துவிடும், அதுவும் அளவிற்கு அதிகமாக அதிகாரம் உள்ளவனோ முழுவதுமாகக் கெட்டுச் சீரழிந்துவிடுவான் என்பது, சில நேரங்களில் மெய்யாகிறது, மெய்ப்ப்பிக்கப்படுகிறது. திருமணம் இல்லாமலே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழலாம், அனுபவிக்கலாம், வேண்டால் என்றால் பிரிந்து செல்லலாம் என்று “பொதுத்துவம்” பேசும் தாராளமான பரந்து விரிந்த விபச்சார ஞானிகள் கூட இங்கு பொத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள், இருப்பார்கள்.

இன்று ஆளுக்கு ஆள் வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுத்து நியாயப்படுத்துவதால் தான் அத்தகைய சீர்கெட்ட மனப்பாங்கு, வக்கிர புத்தி, கொடூரமான சிந்தனைகள் இறுகி தான் சொல்வதுதான் சரி என்று “பிடிவாதம்” வளர்கிறது. அதில்தான் இன்றைய அறிஞர்கள், கலைஞர்கள், பேராசிரியர்கள், முனைவர்கள், கவிக்கோக்கள், கவி பேரரசர்கள்……..என்ற இத்யாதி……………….கூட்டங்கள்……………போதையில் திளைத்து வாழ்கின்றன. ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டு, பாராட்டிக் கொண்டு, பட்டங்கள், பரிசுகள் கொடுத்துக் கொண்டு புதுமையான மாயா உலகத்தில் வாழ ஆரம்பித்து விட்டார்கள். இதில் அவர்களுக்கு பகுத்தறிவு, புகுத்தறிவு, நுண்ணறிவு, புலனறிவு, ………………………என்றேல்லாம் மறைந்துவிடும்.

 

அரசியல்வாதிகளின் பாலியல் வரலாறு: திவாரியின் ராஜினாமா ஒன்றும் இந்திய அரசியல்வாதிகளின் மதிப்பை உயர்த்திவிடாது, ஏனெனில் செக்சஸ் / பாலியல் கலவிகள் வன்மங்களில் அவர்கள் பலதடவை ஈடுபட்டுள்ளனர். பல விஷயங்கள் வெளிவந்தாலும், இன்னும் பற்பல விஷயங்கள் மறைக்கப்படுகின்றன[1].

  • கடந்த வாரம் தான் ராஜ்மோஹன் உன்னிதன் (57) என்ற கேரள காங்கிரஸ் பொது செயலாளர், ஒரு பெண்ணைக் கடத்திச் சென்ற வழக்கில் சிக்கி பைலில் விடுவிக்கப் பட்டுள்ளார்.
  • கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் அசம் கான் என்பவர் தனது நிர்வாணப் படங்களை சிடிமூலம் தன்னை தேர்தலில் தோற்கடிக்க விநியோகிப்பதாக, பிரபல நடிகை ஜயபிரதா குற்றாஞ்சாட்டினார். அதுமட்டுமல்லாது, அவ்வாறான ஜோடித்த-ஒட்டிட் தயார் செய்யப்பட்ட நிர்வாணப் படங்fகள், போஸ்டர்கள் முதலியவற்றையும் விநியோகிப்பதாக புகார் செய்தார்!
  • 2005ல் ஒரு பிஜெபி பொது காரியதரிசி, ஏதோ ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பதாக படங்கள் வந்தவுடன், கட்சியைவிட்டு விலக வேண்டியதாயிற்று.
  • உத்திரபிரதேச மந்திரி அமர்மணி திரிபாதி செப்டம்பர் 2003ல், மதுமிதா ஸுக்லா என்ற பெண்ணுடன் உறவு வைத்துகொண்டு கொலைசெய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இறந்த அந்த பெண்மணியின் கருவும் வளரும் கருவின்  மரபணு (DNA) சோதனை உண்மையைக் காட்டியதால், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • ஹரக் சிங் ரவத் என்ற உத்திரகண்ட முன்னாள் நிதியமைச்சர் 2003ல் கல்யாணம் ஆகாத ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் ராஜினாமா செய்தார். ஒரு அஸ்ஸாமிய பெண்ணுடன் உறவு வைத்திருந்ததால், அவள் பிறகு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
  • 2001ல் டெஹல்கா நடத்திய ‘Operation West End’ என்ற “மறைவு உளவு வேலையில்” சமதா கட்சியின் காசாளரால் எப்படி பத்திரிக்கையாளர்களுக்கு பெண்கள் அனுப்பப்படுகிறார்கள் என்பது வெளிக்காட்டப்பட்டது.
  • அக்டோபர் 1997ல் பி. கே. குஞ்சாலிக்குட்டி என்ற கேரளத்தின் பிரபலமான முஸ்லீம் லீக்கின் அரசியல்வாதி, “ஐஸ் கிரீம் கூடத்து லீலை ”(‘ice-cream parlour scandal’). என்ற சல்லாப பாலியல் விவகாரத்தில் சிக்கினார். அதாவது கோழிக்கோட்டிலுள்ள ஒரு ஐஸ் கிரீம் கூடம் என்ற போர்வையில், கடைக்கு வரும் இளம் பென்களை மயக்கி அத்தகைய செக்ஸ்-பாலியல் விவகாரங்களில் அவர்களை ஈடுபடுத்தும் வேலையில் சிக்கினார். கம்யூனிஸ்ட் காம்ரேடுகள் பெயர்களும் அதில் அடிபட்டன.
  • 1978ல் ஜகஜீவன்ராமின் மகன் சுரேஷ், ஒரு பெணுடன் இருப்பது போன்ற புகைப்படம் சூர்யா என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இதனால், பிரதம மந்திரிக்கு ஆசைப்பட்ட ஜகஜீவன்ராம்ன் அரசியல் அதிருஷ்டம் குறைந்தது.

அரசியல்வாதிகள் பாலியல் அவதூறுகள், ஊழல்கள், குற்றங்களில் மாட்டிக் கொள்வது ஒன்றும் புதியது அல்ல[2].

  • 1980ம் வருட மத்தியில், லக்னோவில் பாலியல் பிரச்சினையால் அரசையல்வாதிகள் முதல் அதிகாரிகள்-வியாபாரிகள் வரைக் கதி-கலங்கினர். ஒரு பிரசித்தியான நகரக் கல்லுரியிலிருந்து மாணவிகள் இவ்வாறு பலருக்கும் விநியோகிக்கப்ப்ட்டதால், பிரச்சினை வெடித்தது.
  • 1992ல், ஆஜ்மீரில் ஒரு புகழ் பெற்ற பள்ளி பிரபலமான மனிதர்களால் அத்தகைய தாக்குதல்களுக்கும், மிரட்டல்களுக்கும் உட்பட்டது. நீதிமன்றம் அவ்வழக்கில், “இது ஏதோ ஒரு சாதாரண விபச்சார வழக்கு என்று மூடி மறைக்கப் பார்கிறது”, என்று போலீஸாரைக் கடுமையாக விமர்சனம் செய்தது. ஆஜ்மீரில் பாதீக்கப் பட்ட பெண்களுக்காக பாடுபட்ட, இந்திரா பஞ்சோலி, மஹிலா ஜன அதிகார் சமிதியைச் சேர்ந்தவர், “நம்முடைய குற்றவியல் நீதித்துறையில் / சட்டத்தில் இன்னும் ஜாதி மற்றும் அதிகார எண்ணம் மேலோங்கி நிற்கிறது. ஆகையால் இவ்விஷயங்களில் நீதி பெறுவது கடினமாக இருக்கிறது”, என்று தமது கருத்தை வெளியிட்டார்.
  • 1994ல் ஜலகாவ் விவகாரம் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும்.
  • 1998ல் ஜெய்பூரிலுள்ள ஒரு மருத்துவமனை, அத்தகைய விவகாரத்தில் சிக்கியது.
  • 1998ல் ஒரிஸ்ஸாவிலும் செக்ஸ் பிரச்சினை வெடித்தது.
  • பீஹாரைப்பற்றி சொல்லவே வேண்டாம். அங்கு அத்தகைய விவகாரங்கள் அதிகமாகவே உள்ளன. வேலை செய்யும், படிக்க செல்லும் பெண்கள்-மாணவிகளை பிடித்து, மருந்து கொடுத்து மயக்கி, கொடுமைப் படுத்தி அரசியல்வாதிகள், குற்றாவாளிகள், பெரிய-ஒப்பந்தக்காரர்கள் முதலியோர்களுக்கு அனுப்பப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரம் செக்ஸ் விவகாரம்: ஜூன்-ஜூலை 2006ல் காஷ்மீரத்தில் பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அத்தகைய செக்ஸ் / பாலியல் ஊழல்களில் / காமக்களியாட்டப் பிரச்சினைகளில் ஈடுபட்டது வெளிவந்தது. அதில் சிக்கியவர்கள் இக்பால் கண்டேய் (Iqbal Khandey) ஒரு J&K IAS அதிகாரி.யூஸுஃப் மீர் – DSP, போலிஸ் அதிகாரி, மாநில மந்திரியின் சகோதரன், காங்கிரஸ் அமைச்சர், முன்னாள் அமைச்சர், போலிஸ் அதிகாரியின் மனைவி, இப்படி பலர் கைது செய்யப்பட்டனர். பல இளம்பெண்கள் விபச்சாரத்திற்கு பலவந்தம் படுத்தியும், மிரட்டியும் பிடித்துவைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள், போலிஸார் என அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இது பல கோணங்களில் இந்திய அரசியலில் பாதிப்பு ஏற்பட்டது. காஷ்மீர அரசியலில் காங்கிரஸ் மற்றும் தேசிய கட்சிகளுக்கிடையே வேறுபாடு ஏற்பட்டது. மெஹ்பூபா இதனை பயன்படுத்திக் கொண்டு அரசியல் லாபம் பெற முயன்றார். ஆனால், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பெண்கள் விநியோகிக்கப் பட்டது, அதில் சபீனா என்ற பெண் ஈடுபட்டது முதலியன பல கேல்விகளை எழுப்பின.

செக்ஸ் வழக்கு விவரங்கள் [3]: காஷ்மீர் போலீஸார் 2006ல் யதேச்சையாக இரண்டு சிடிக்களைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு காஷ்மீர இளம்பெண் காணப்படுகிறாள். அவள் மற்றும் பல பெண்கள் எவ்வாறு பலவந்தமாக பிடிக்கப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டு,  கட்டாயமாக போலீஸார் தம்மை அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளின் காமயிச்சைக்கு பணியச் செய்தனர் என்று விளக்கினாள். பிறகு அவள் அடையாளம் காணப்பட்டாள். அதே நேரத்தில் பிடிபி-காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர்கள் அதில் சம்பந்தப்பட்டுள்ளர்கள் என்று பிட்-நோட்டிஸுகள் விநியோகிக்கப்பட்டன. CBI விசசரணைக்கு உத்தரவிடப்பட்டது. உடனே அமைச்சர்கள் ஜி. எம். மீர், ரமான் மட்டோ, இக்பால் கண்டேய், கே.சி. பதே முதலியோர் கைது செய்யப்பட்டனர்.

சபீனா என்பவள் முக்கிய ஏஜென்டாக செயல்பட்டாள்: இப்பொழுது எப்படி கஸாப் சென்டு எல்லாம் கேட்கிறானோ, அதுபோல, பிடிபட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் பெண்களைக் கேட்டனர் போலும். அதனால் பிடிபட்டத் தீவிரவாதிகளுக்கும் பெண்கள் அனுப்பப்பட்டனராம். ஆனால், ஒரு முஸ்லீம் பெண்ணே ஏஜன்டாக செயல்பட்டது திகைப்பாக இருக்கிறது.

இதில் உபயோகப்படுத்தப்பட்ட மைனர் பெண்கள் ஒரு மாஜிஸ்டிரேட்டு முன்னிலையில் அவர்களது வாக்குமூலங்களைப் பெறவேண்டும் என்று மியான் அப்துல் கய்யூம் என்பவர் (President of KHCBA Mian Abdul Gayoom) விண்ணப்பித்தார்[4].

இப்பிரச்சினை ஜூலை 2009ல் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் கிளப்பப் பட்டு, மெஹ்பூபா முஃப்தி மற்றும் முஸாஃபிர் பெய்க், உமர் அப்துல்லாவும் உடந்தை என்று குற்றஞ்சாட்டப்பட்டார். அவரது சட்டைப் பிடித்து இழுக்கப்பட்டது. இதனால் ஒமர் ராஜினாம செய்தார்[5]. ஆனால் பிறகு, CBIயின் அறிக்கையில் தனது பெயர் இல்லை என்றவுடன், ராஜினாவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

அதிகம் காங்கிரஸ்காரர்கள் சிக்குவது ஏன்? அதிகாரம், பதவி இவற்றில் அதிக காலம் இருந்து, மக்களுக்காக இல்லாமல், தன்னலத்துடனும், குடும்பத்திற்காகவும், கட்சித் தலைவரை, மற்றவரைத் திருப்தி படுத்தி என்றும் பதவியில் இருந்து கொண்டு போகத்தில் இருக்க வேண்டும் எனும் அரசியல்வாதிகள் மது, மாது, போதைகளில் தாராளமாகவே இருக்கிறார்கள். திருமணங்கள், கட்சி பார்ட்டிகள், மாநாடுகள், கூடுதல்கள் என்று வரும்போது அரசியல்வாதிகள் செலவழிக்கவேண்டியுள்ளது. அதற்காகவே ஒரு கூட்டம் வருகிறது. ஏற்பாடுகள் செய்யவும் ஆட்கள் இருக்கிறார்கள்.

மக்கள் மறந்து விடுவார்கள்: இன்று ஊடகங்களினால், கெட்டதைக் கூட அடிக்கடி காட்டி-காட்டி, மக்களுக்கு மரத்துப் போக செய்து விட்டனர். ஒரு பெண் இருவரைக் காதலிப்பது, மூவரை மணப்பது, நால்வருடன் உடலுறவு கொள்வது, ஐந்து பேர்களிடம் குழந்தைப் பெற்றுக் கொள்வது. அப்பப்பா நினைக்கவே முடியவில்லை என்று கவலைப்படவேண்டாம் அத்தகைய பெண்கள் இன்று நிறையவே உள்ளார்கள்[6].…………………………சினிமா காட்சிகளில் அரைகுறை ஆடைகளில், முக்கால் நிர்வாண ஆடைகளில் ……………….குதிப்பது, துள்ளுவது, ………………….பல பெண்கள் ஒரு ஆணுடன் மிருகங்கள் போல வளைவது, நெளிவது, நடிப்பது, நடப்பது, கை-கால்களை நீட்டுவது, வளைப்பது, நரம்பு வியாத் வந்ததத மாதிரி உடறுவது, துடிக்க வைப்பது…………………………கூத்தடிப்பது, “குத்தாட்டம்” என்பது……………………………இவ்வாறு மனங்களை காமரசத்தில் ஆழ்த்தி முழுகடிப்பதால், தவறு என்று சொல்பவர்கள் கூட, “ஏதோ காட்டுகிறார்கள், பார்க்கிறேன்” என்று உட்கார்ந்து விடுகிறார்கள். கிரிக்கெட்டில் கூட, அத்தகைய பெண்கள் வந்து குதிக்கவேண்டியுள்ளது. அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில்கூட “குத்தாட்டம்” சாதாரணமாகிவிட்டது[7]. இத்தகைய பிரச்சார யுக்திகளினால் ஆபாசம் ஆனந்தமாக இருக்கிறது. அசிங்கம் பெற்றோர்கள் கூட ரசிக்கப்படுகிறது. மரத்துப்போன உணர்ச்சிகளை எழுப்பவும் செய்கிறது, மற்றவற்ரை மரத்துப் போகவும் செய்கிறது.

  • “தேவதாசிகளை” ஒழித்தோம் என்றவர்களே, இப்பொழுது பலதுறைகளில், பல நவீன வழிகளில் பலவிதமான “தாசிகளை” உருவாக்கியுள்ளார்கள்.
  • அப்படி ஆடும் பெண்கள், ஆட்டுவிக்கும் பெண்கள், சம்பந்தப்பட்ட பெண்கள் – இவர்களை என்னவென்று கூறுவது?
  • எல்லாவற்றையும் துறந்த புத்தன்[8] என்போமா?
  • பகுத்தறிவு பகலவன் பெரியார்[9] என்போமா?
  • கம்ப ரசம்[10] சொட்டசொட்டப் பிழிந்து தந்த அறிஞர் அண்ணவென்போமா?
  • இன்று எல்லோரையும் ஆட்டுவிக்கும் மூதறிஞர் கலைஞர்[11] என்போமா?

வேதபிரகாஷ்

28-12-2009


[1] Indo Asian News Service, Sex, lies and videotape in Indian politics, Sat, Dec 26 07:35 PM

http://in.news.yahoo.com/43/20091226/818/tnl-sex-lies-and-videotape-in-indian-pol.html

[2] Shobhan Saxena, Sex, lies and politics, TNN 2 August 2009, 09:14am IST

http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/special-report/Sex-lies-and-politics/articleshow/4846764.cms

[3] http://www.ndtv.com/news/india/whats_jk_sex_scandal.php

[4] J&K Sex scandal: HC raps state police, Press Trust of India Posted online: Monday, May 15, 2006 at 1344 hours ISThttp://74.125.153.132/search?q=cache:yoV2CKTnvwIJ:www.expressindia.com/fullstory.php%3Fnewsid%3D67713+J+%26+K+sex+scandal&cd=10&hl=en&ct=clnk&gl=in

[5] டைம்ஸ் ஆஃப் இந்தியா, J&K sex scandal: Omar Abdullah quits, Governor says no, TIMESOFINDIA.COM 28 July 2009, 06:17pm IST

http://timesofindia.indiatimes.com/india/JK-sex-scandal-Omar-Abdullah-quits-Governor-says-no/articleshow/4828965.cms

[6] தமிழ் திரை உலகத்திலிருந்தே பல உதாரணங்களை எடுத்துக் கொள்ளலாம். நாளைக்கே அவர்கள் எம்.எல்,ஏ, எம். பி., அமைச்சர்கள் ஆகலாம்.

[7] சமீபத்தைய – திருச்செந்தூர்-வந்தவாசி தேர்தலில் கூட “குத்தாட்டங்கள்” இடம் பெற்றுள்ளன.

[8] நிர்வாண புத்தனுக்கே சவால் விடும் நிலையில் இன்றைய நடிகைகள் தியானம், தவம் முதலிய காரியங்களில் ஈடுப்பட்டுள்ளார்கள். பெரியார் வழியில் செல்வதால் அவர்களது பகுத்தறிவை யாரும் கேட்கமுடியாது.

[9] பெரியார் பெண்களின் உரிமைக்களுக்காக நிறையப் பாடுபட்டவர். அவர்களை “கர்ப்ப  ஆட்சி”யிலிருந்து வெளிவர புத்தகம் எல்லாம் எழுதியவர்.

[10] அண்ணாதுரை, கம்பரசம், திராவிடன் பதிப்பகம், திருச்சி.

[11] இன்று கலைஞரைப் பார்த்து ஆசி பெறாத நடிகைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். எல்லா விழாக்களுக்கும் இவர் வருவார் அல்லது அவர்களே வித-விதமான ஆடைகளை அணிந்து கொண்டு வருவார்கள். குனிந்து ஆசிபெரும் நிலையைத் தவிர்க்க அளவொடு உடையோட ஜாக்கிரதையாக வருவார்கள். முன்பெல்லாம், ஆசிவாங்க, ஆசி கொடுப்பவர் நின்றிருப்பார், ஆசி வாங்குபவர் குனிந்து வணங்கி ஆசிபெருவர். இன்றோ ஆசி கொடுப்பவர், உட்கார்ந்தே இருக்கிறார். ஆசி வாங்குபவர்களும் ஒன்று ஜாக்கிரதையாக குனிய வேண்டியுள்ளது அல்லது உட்கார வேண்டியுள்ளது, முட்டிக்கால போடவேண்டியுள்ளது…………………