Archive for the ‘செட்டி’ Category

பிராமணாள் கபே மூடப்பட்டது – நள்ளிரவில் காலிசெய்யப் பட்டது – பார்ப்பனர் பயந்து விட்டாரா, மிரட்டப் பட்டாரா ?

நவம்பர் 8, 2012

பிராமணாள் கபே மூடப்பட்டது – நள்ளிரவில் காலி செய்யப் பட்டது பார்ப்பனர் பயந்து விட்டாரா,  மிரட்டப் பட்டாரா ?

திகவின் பிரச்சார நாளிதழ் “விடுதலை”யின் படி, “சிறீரங்கத்தில் பிராமணாள் பெயர் உணவு விடுதி மூடப் பட்டது  –  நள்ளிரவில் கடையைக் காலி செய்தனர்’,  என்றுள்ளது.  இத்தனை நாள் தைரியமாக இருந்தார், இந்து அமைப்புகள் அவருக்குத் துணையாக இருந்தன என்றெல்லாம் திக கூட்டங்கள் வர்ணித்து வந்துள்ளன. பார்ப்பன ஜெயலலிதா முதலமைச்சராக இருப்பதால், இந்த பார்ப்பன ஹோட்டல் முளைத்துள்ளது என்றெல்லாம் பேசி, எழுதி பிரச்சாரம் செய்தனர். பிறகு எப்படி அவர் இரவோடு இரவாக கடையை மூடிவிட்டு, காலி செய்து கொண்டு போனார் என்று தெரியவில்லை. முதலில் “விடுதலியில்” உள்ளதை பார்ப்போம்:

சிறீரங்கத்தில் பிராமணாள் பெயர் உணவு விடுதி மூடப் பட்டது –  நள்ளிரவில் கடையைக் காலி செய்தனர்: திருச்சி, நவ.7, 2012- சிறீரங்கம் ரங்கநகர் சாலையில் கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே (ஓட்டல்) என்ற பெயரில் மணிகண்டன் பார்ப்பனர் நடத்தி வந்தார்.  திடீரென்று பிராமணாள் என்ற சொல்லை விளம்பரப் பலகையில் புகுத்தினார். அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் உள்ள பிராமணாள் என்ற பெயரை அகற்றுமாறு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மணிகண்டன் பார்ப்பனரிடம் வலி யுறுத்தப்பட்டது. மேலும் திருவரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத்திற்கு  அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

காவல்துறை அனுமதி மறுப்பு: இந்நிலையில் திருவரங்கத்தில் ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டம் நடத்த கழகம் சார்பில் அனுமதி கோரியிருந்தது; ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது. மூன்று முறை தொடர்ந்து காவல் துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று கடந்த ஞாயிறன்று திருவானைக் காவலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது (4.11.2012).

போராட்டம் அறிவிப்பு: அப்பொதுக் கூட்டத்தில் பிராமணாள் ஓட்டல் பெயரை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அகற்றுகின்றவரை போராட்ட நடவடிக்கையைக் கழகம் மேற்கொள்ளும். மேலும் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி இப்போராட்டத் திற்கான அறிவிப்பினை வெளியிடுவேன் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருவானைக் காவல் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.

 

நள்ளிரவில் அகற்றம்: இந்நிலையில் அந்த உணவு விடுதி கட்டடத்தின் உரிமையாளர் (பாவை டவர்ஸ்) ராஜா, மணி கண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து   நேற்று (6.11.2012) நள்ளிரவு திடீரென்று  கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே உணவு விடுதியை மணிகண்டன் முழுமையாக கடையை இழுத்து மூடி காலி செய்தார்[1]. பிராமணாள் கபே பெயர் பலகையும் அகற்றி எடுத்துச் சென்றார்.

மீண்டும் பிராமணாள் முளைத்தால்… : வேறு இடத்தில் இதே மணிகண்டன் உணவு விடுதியைத் திறந்து அதிலும் பிராமணாள் பெயரைப் புகுத்தினால், அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது[2].

இப்படி அவர்களுடைய செய்தி உள்ளது.

வீரமணி பேசியதில் இரண்டு விஷய்யங்கள் கவனிக்க வேண்டியதுள்ளது. ஏனெனில், தினத்தந்தி[3] மற்றும் தினகரன்[4] அவரது பேச்சை வேறுவிதமாக வெளியிட்டிருந்தது[5].  அவற்றை முந்தைய இடுகையில் அவர் சொல்லியபடியே பதிவு செய்துள்ளதை வசதிக்காகத் திரும்ப கீழே கொடுக்கிறேன்[6].

கட்டுப்பாடுள்ள இயக்கம்: இது கட்டுப்பாடு மிகுந்த இயக்கம், தலைமை கட்டளையிட்டால் நூலிழை பிறழாமல் நடந்துகொள்ளக் கூடியவர்கள். (இந்த நேரத்தில் கழகத் தலைவர் கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார். அனைவரும் ஒரு நிமிடம் எழுந்திருங்கள் என்றார் அனைவரும் எழுந்து நின்றனர். அனைவரும் அமருங்கள் என்றார்; அனைவரும் அமர்ந்தனர் – இதனைச் சுட்டிக்காட்டி  இந்தக் கட்டுப்பாட்டுக்குப்  பெயர்தான்  கருஞ்சட்டைப்  பட்டாளம்  –  திராவிடர்  கழகம் என்று  குறிப்பிட்டார்[7].தனிப் பட்டவர் மீது காழ்ப்புணர்வு இல்லை: நாங்கள் மான உணர்வுக்காக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். யார்மீதும் எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பகை இல்லை. காழ்ப்பும் கிடையாது. இந்தக்  கூட்டம்  முடிந்தவுடன்  யாரும்  அந்த உணவு விடுதி  பக்கம் கூட  செல்லக் கூடாது –  வீட்டுக்கு நேராகப் போக வேண்டும்.

“எழுந்திரு” என்றால் எழுந்து கொள்வது, “உட்கார்” என்றல் உட்கார்ந்து கொள்வது என்ற நிலையில் உள்ளார்கள் என்றால், வேறெந்த கட்டளையிட்டாலும், அவ்வாறே செய்வார்கள் என்றுதான் ஆகிறது. “இந்தக் கூட்டம் முடிந்தவுடன் யாரும் அந்த உணவுவிடுதி பக்கம் கூட செல்லக் கூடாது  –  வீட்டுக்கு நேராகப் போக வேண்டும்”, என்று சொன்னது மறைமுகமாக சொன்னதை செய்துவிடு என்பது போல உள்ளதோ என்னமோ? ஆகவே, ஒருவேளை கூட்டம் முடிந்தவுடன், திகவினர் அந்த உணவு விடுதி கட்டடத்தின் உரிமையாளர் (பாவை டவர்ஸ்) ராஜாவிடம் சென்று மிரட்டினரா அல்லது நேரிடையாகவே மணி கண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு பயமுறுத்தினரா அல்லது ராஜாவின் மூலம் வற்புறுத்தப்பட்டாரா என்பது தெரியவில்லை. ஆகவே, “அந்த உணவு விடுதிகட்டடத்தின் உரிமையாளர்  (பாவைடவர்ஸ்)  ராஜா,  மணிகண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு கூறியுள்ளார்” என்பதற்கான அர்த்தம் தெரியவில்லை. பிராமணர்களின் மீது இப்படி குறிப்பாக தாக்குதல் நடத்தி வருவது, அவர்களே சொல்கின்றது போல பாசிஸத் தன்மையினைத்தான் எடுத்துக் காட்டுகிறது[8]. மற்ற ஜாதிக்காரர்களின் கடைகளை விட்டுவிட்டு, பிராமணர் கடைகளை மட்டும் மிரட்டுவது, இப்படி ஏதோ நாட்டிலேயே மிக முக்கிய விஷயம் போல தினசரி வந்து கலாட்டா செய்வது, ஆபாசமாக கமென்ட் செய்து விட்டு போவது, கூட்டம் போட்டு மிரட்டுவது, இணைத்தளங்களில் அவதூறு செய்வது[9] முதலிய காரியங்கள் அத்தகையத் தன்மையினைத் தான் வெளிப்படுத்துகிறது.

மறுபடியும் மிரட்டல்: இத்தனையும் நடந்த பிறகு, “மீண்டும் பிராமணாள் முளைத்தால்: வேறு இடத்தில் இதே மணிகண்டன் உணவு விடுதியைத் திறந்து அதிலும் பிராமணாள் பெயரைப் புகுத்தினால், அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”[10], என்கிறார்கள்.

மீண்டும் பிராமணாள் முளைத்தால்: வேறு இடத்தில் இதே மணிகண்டன் உணவு விடுதியைத் திறந்து அதிலும் பிராமணாள் பெயரைப் புகுத்தினால், அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது[11].

இதே பெயரில் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஓட்டல்கள் உள்ளன என்று இணைத்தளங்களில் பலர் எடுத்துக் கட்டியுள்ளனர். பிறகு, அங்கும் சென்று இவ்வாறு மிரட்டுவார்களா?

© வேதபிரகாஷ்

08-11-2012


[7] இது “கட்டுப்பாடு” என்பதா, இல்லை சொன்னதை செய்வோம் என்ற நிலையில் உள்ளார்கள் என்பதா?

செவ்வாய், நவம்பர் 06, 2012  VIDUTHALAI EPAPER

http://viduthalaidaily.blogspot.in/2012/11/blog-post_6.html

Advertisements

பிராமணாள் கபே பிரச்சினை – ஸ்ரீரங்கத்தில் “விடுதலை”யின் படி வீரமணி பேச்சு!

நவம்பர் 7, 2012

பிராமணாள் கபே பிரச்சினை – ஸ்ரீரங்கத்தில் “விடுதலை”யின் படி வீரமணி பேச்சு!

திருவானைக்காவலில் வீரமணி பேசியதாக “விடுதலை” வெளியிட்டுள்ளதை அப்படியே பதிவு செய்யப்பட்டு, குறிப்பான திரிபுவாதங்களுக்கு, தவறான விளக்கங்களுக்கு அடிக்குறிப்பில் விமர்சனம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழக முதல்வர் பிராமணாள் பெயரை நீக்க முயற்சிக்க வேண்டும் இல்லையேல் தொடர் போராட்டம்[1]: தெருப்பெயரில்ஜாதிஇருக்கக்கூடாதுஎன்றுஆணைபிறப்பித்தவர்முதல்அமைச்சர்எம்.ஜி.ஆர்எம்.ஜி.ஆர். அரசுஎன்றுசொல்லிக்கொள்ளும்தமிழகமுதல்வர் பிராமணாள்பெயரைநீக்கமுயற்சிக்கவேண்டும்இல்லையேல்தொடர்போராட்டம்தமிழர்தலைவர்அறிவிப்பு – சிறீரங்கத்தில் உள்ள உணவு விடுதியில் முளைத்திருக்கும் பிராமணாள் பெயரை நீக்க தமிழக முதல் அமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும்; இல்லையேல் அப்பெயர் நீக்கப்படும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. திருவானைக்காவலில் 4.11.2012 அன்று மாலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது[2], “இன்றையப் பொதுக் கூட்டம் வரலாற்றுச் சிறப்பைப் பெற்று விட்டது. இன இழிவை ஒழிக்கக் கூட்டப்பட்டுள்ள பொதுக் கூட்டம்”, என்று தொடர்ந்தார்.

காவல்துறை நடந்து கொண்டது சரியா?: இந்தப் பிரச்சினையில் காவல்துறை நடந்து கொண்ட போக்கு வருந்தத்தக்கது. இத்தகு நடவடிக்கைகளுக்காக காவல்துறையின்மீது எங்களுக்குக் கோபம் இல்லை; மாறாக பரிதாபப்படுகிறோம். திராவிடர் கழகத்தின் வரலாற்றில் எந்த காலகட்டத்திலும் வன்முறைக்கு இடம் இல்லை; எத்தனையோ மாநாடுகள், பேரணிகள், போராட்டங்களை நடத்தி வந்துள்ளதே – எந்த இடத்திலாவது வன்முறைக்குக் காரணமாக திராவிடர் கழகம் இருந்ததுண்டா? காவல்துறையினர் தாக்கினால்கூட அவர்களின் முகத்தைப் பார்க்காதே – முதுகைக் குனிந்து காட்டு என்று சொன்னவர் தந்தை பெரியார் அல்லவா! காலிகளால் எங்கள்மீது தாக்குதல்கள் தொடுக்கப் பட்ட பொழுதுகூட, பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் திராவிடர் கழகம் நடந்ததுண்டா? திராவிடர் கழகத்தின் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பதற்குமுன் இக்கழகத்தின் செயல்பாடுகள்பற்றி ஒருகணம் காவல்துறை சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா? காவல்துறையில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அல்லவா! 1929ஆம் ஆண்டு  செங்கற்பட்டில் நடந்த  முதல்  சுயமரியாதை மாநாட்டில்  தீர்மானமும் இந்த வகையில் இயற்றப்பட்டதுண்டே! இந்த வரலாறு எல்லாம் தெரியுமா?

பார்ப்பனர் மாநாட்டில் என்ன கோஷம் போடப்பட்டது?: இதே திருச்சியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி ஊர்வலம் நடத்தி என்னையும், என் குடும்பத்தைப்பற்றியும் எவ்வளவு கேவலமாக கோஷம் போட்டார்கள்? வீரமணியின் மனைவியைப் பொதுவுடைமை ஆக்கு என்று கோஷம் போட்டு அவர்களின் தகுதியை வெளிப்படுத்தி கொள்ளவில்லையா? “போய்ப்பார்அந்த அம்மாகொடுப்பதைவாங்கிக்கொண்டுவா!”, என்றுதான் சொன்னோமே தவிர, பதிலுக்குப் பதில் அவர்கள் கையாண்ட முறையைப் பின்பற்றவில்லையே!

பழனியில் பார்ப்பனர்கள் என்ன செய்தனர்?: 1981இல்பழனியில் என்னைப் போல உருவம் செய்து பாடையில் வைத்துத் தூக்கிச் சென்றவர்கள் பார்ப்பனர்கள் அல்லவா! அதுபற்றி பத்திரிகையாளர்கள் என்னைக் கேட்ட போதுகூட நான் கோபப்படாமல் எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. ஒரு சூத்திரன் பிணத்தை நான்கு பார்ப்பனர்கள் தூக்கிச் சென்றார்களே – இது எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி (பலத்த கரவொலி!) என்றுதானே சொன்னேன்.

மா-சேதுங் சொன்னது – என்ன?: சீனாவில் புரட்சி நடத்திய மா-சேதுங் சொன்னது தான் என் நினைவிற்கு வருகிறது. நம் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்களை, நம் எதிரிதான் தீர்மானிக்கிறான் என்று சொன்னதை இங்கு நினைவுபடுத்துகிறேன் (பலத்த கரவொலி!). இதே சிறீரங்கத்தில் ரெங்கநாதன் கோயிலுக்கு முன் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டதே – அதனால் எந்த கெடுதல் வந்து விட்டது? அதனை எதிர்த்துக்கூட உச்சநீதிமன்றம் வரை சென்றார்களே – வெற்றிபெற முடிந்ததா? அதிலும் பெரியார் தானே வெற்றி பெற்றார்[3].

2012-இலும்நாங்கள்சூத்திரர்களா?: நாங்கள் என்ன கேட்கிறோம்? 2012-இலும் நாங்கள்  சூத்திரர்களாக இருக்க வேண்டுமா? சூத்திரர்கள் என்றால் என்ன? நீங்கள் எழுதி வைத்த அசல் மனுதர்மம் இதோ என் கையில் இருக்கிறது[4]. இதில் எட்டாவது அத்தியாயம் 415ஆவது சுலோகம் என்ன சொல்லுகிறது? யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன்[5], விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குலவழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளி ஏழு வகைப்படுவர்[6]. சூத்திரர்கள் என்றாலே தொழிலாளியாம். நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த 2012-இலும் பிராமணாள் என்று போர்டு மாட்டினால் எங்களை சூத்திரர்கள் – பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்று சொல்வதாக ஆகாதா? இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

காந்தியார்மீதானஇழிவைத்துடைத்ததும்யார்?: காந்தியாரையே அவமதித்தவர்கள் ஆயிற்றே பார்ப்பனர்கள்? ஆதாரத்தோடு கூறுகிறேன் – இதோ என் கையில் இருப்பது தமிழ்நாட்டில் காந்தி எனும் நூலில் அதன் 521ஆம் பக்கத்தில் காணப்படும் செய்தியைத்தான் குறிப் பிடுகிறேன். நீதிக்கட்சித் தலைவர்கள் ஏ.டி. பன்னீர்செல்வமும், பிரபல வழக்கறிஞரான கரந்தை உமா மகேசுவரம் பிள்ளையும் காந்தியாரைச் சந்தித்தபோது தமிழ்நாட்டில் நிலவும் பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினைபற்றி பேசப்பட்டது.

அந்தச்சந்திப்பில்காந்தியார்என்னகூறினார்?: இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டுகளுக்குமுன் நான் சென்னைக்கு வந்தபோது எஸ். சீனிவாச அய்யங்கார் வீட்டுத் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்திருந்தேன். இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறார் என்று காந்தியார் குறிப்பிட்டார் என்றால் இதன் பின்னணி என்ன? இந்தவுரையாடல் நடந்தது 1927 செப்டம்பர் 16இல்; சில ஆண்டுகளுக்கு முன் என்று காந்தியார் சொன்னது – 1925ஆம் ஆண்டுக்கு முன் – சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தொடங்காத காலம். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்காத கால கட்டத்தில் காந்தியாருக்கேகூட உரிய இடம் சீனிவாச அய்யங்காரின் தாழ்வாரம்தான். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பிறகு காந்தியார் சீனிவாச அய்யங்கார் வீட்டுக்குள் போக முடிந்தது – அவரது மனைவியார் சீனிவாச அய்யங்காரின் அடுப்பங்கரை வரை[7] செல்ல முடிந்தது! காந்தியார்மீதே சுமத்தப்பட்ட இழிவைத் துடைத்தெறிந்தது தந்தை பெரியார் தானே – இந்த இயக்கம் தானே!

அரசுஆவணங்களில்சூத்திரர்இழிவைஒழித்ததுயார்?: 1927ஆம் ஆண்டு வரை கூட அரசுப் பதிவேடுகளில் சூத்திரன் என்று இருந்ததே! 1927இல் நடத்தப்பட்ட பார்ப்பனர் அல்லாத மாநாட்டில் அந்த இழிவு சுட்டிக் காட்டப்பட்ட பிறகுதானே நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அந்தப் பிறவி இழிவு – அரசு ஆவணங்களில் ஒழிக்கப் பட்டது. அய்.நா. மன்றத்தில் 199 நாடுகள் அங்கம் வகிக்கின்றனவே – எந்த ஒரு நாட்டிலும் இந்த நாட்டைத் தவிர சூத்திரன் என்ற பிறவி இழிவு உண்டா? மாண்புமிகு சூத்திரன்தானே! நம் மக்கள் அமைச்சர்களாக இருக்கலாம் ஆனாலும் மாண்புமிகு சூத்திரன் தானே! நம் தமிழர்கள் நீதிபதிகளாக இருக்கலாம். ஆனாலும் மாண்பமை சூத்திரர்தானே! மனுதர்மம் இருக்கும்வரை…இந்து லா என்று சொல்லப்படக் கூடிய அரசமைப்புச் சட்டத்தில் ஆதார நூல்கள் வரிசையில் மனுதர்மம்தானே இன்று வரைக்கும் அடிப்படை – மறுக்க முடியுமா? மனுதர்ம சாஸ்திரம் அங்கீகரிக்கப் படும் வரை எல்லோரும் சூத்திரர்கள் தானே? இது ஒன்றும் திராவிடர் கழகத்துக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்லவே!

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51 a (h) பிரிவு என்ன கூறுகிறது? குடி மக்களின் அடிப்படைக் கடமை என்பதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே, மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும், விஞ்ஞான மனப்பான்மையை ஊட்ட வேண்டும் – இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறப்பட் டுள்ளதே – இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் இந்த அடிப்படைக் கடமையினைத் தானே திராவிடர் கழகம் செய்து கொண்டு இருக்கிறது? இதற்குத் தடை போட ஆசைப்படலாமா காவல்துறை? காவல்துறையின் இந்த அணுகுமுறை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் அல்லவா! மானமுள்ள தமிழன் பிராமணாள் போர்டு மாட்டியிருக்கும் உணவு விடுதிக்குச் செல்லலாமா? ரயில் நிலையங்களில் மாட்டப்பட்டு இருந்த பிராமணாள் – சூத்திராள் – இதராள் போர்டு நீக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த இயக்கம் இந்த இயக்கம் – தலைவர் தந்தை பெரியார் அல்லவா!

செவ்வாய்க்கிரகம்போகலாம்[8]கர்ப்பக்கிரகத்திற்குள்நுழையமுடியாதா?: இன்னும் தமிழன் கட்டிய கோயில்களின் கர்ப்பக்கிரகத்துக்குள் தமிழன் நுழைய முடியாத நிலை! இதற்காக திராவிடர் கழகம் – தந்தை பெரியார் போராட முன்வந்தபோது கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது தந்தை பெரியார் அவர்களின் ஆணையை ஏற்று அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை இயற்றினாரே – இரண்டாவது முறையும் தீர்மானம் போட்டாரே – அதனை உச்சநீதிமன்றத்தில் முடக்கி வைத்திருப்போர் யார்? பார்ப்பனர்கள் தானே? செவ்வாய்க்கிரகத்துக்குப் போகலாம்; கோயில் கருவறைக்குள் போக முடியாதாம் – போகக் கூடாதாம்! இந்து அறநிலையத்துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. கோயில் அர்ச்சகர்கள் இனி பஞ்சகச்சம் கட்டியிருக்க வேண்டுமாம் – குடுமியும் வைத்திருக்க வேண்டுமாம்[9]. ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது என்றால், ஏன் இதுவரை அது வற்புறுத்தப்படவில்லை. என்ன திடீர் என்று ஞானோதயம்? பல கோயில்களில் அர்ச்சகர்கள் இல்லை என்று இன்றைக்கு இந்து ஏட்டில் வெளிவந்துள்ள செய்தி  கூறுகிறதே.

அர்ச்சகர்பயிற்சிபெற்றோர் 207 பேர்: அர்ச்சகர் பயிற்சியை முறைப்படி பெற்றுள்ள 207 பேர்கள் வெளியில் இருக்கிறார்களே, அவர்களைக் கொண்டு அந்தக் காலி இடங்களை நிரப்பலாமே! தினமலர் ஏடே திராவிடர் கழகத்தின் போராட்டத்தை வரவேற்று எழுதி யுள்ளதே பிராமணர் என்பது ஜாதிப் பெயர் அல்ல, வர்ணப் பெயர்[10] என்று கூறி அறிவுரை கூறியிருக்கிறதே கவனத்தில் கொள்ள வேண்டாமா?

எம்.ஜி.ஆர். என்னகூறினார்?: எங்கள் அரசு எம்.ஜி.ஆர். அரசு என்று நமது முதல் அமைச்சர் கூறுகிறார்! அந்த எம்.ஜி.ஆர். ஆணையே பிறப்பித்தாரே – எந்தத் தெருப் பெயரும் ஜாதிப் பெயராக இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தாரே, அதன்படி டி.எம். நாயர் சாலை என்பதுகூட டி.எம். சாலை[11] என்றுதானே மாற்றப்பட்டது? அந்த எம்.ஜி.ஆர். வழி வந்த அரசு பிராமணாளை அனுமதிக்கலாமா? எடுக்கச் சொல்ல வேண்டாமா?

சிறைஒன்றும்எங்களுக்குப்புதிதல்ல!: அப்படி எடுக்கப்படாவிட்டால் எடுக்க வைப்போம் – அதற்கான போராட்டத்தில் குதிப்போம்! அந்தப் போர்டு எடுக்கப்படும் வரை போராட்டம் முற்றுப் பெறாது. டிசம்பர் முதல் தேதி, சென்னையில் கூடவிருக்கும் திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவில் போராட்டத் திட்டம் அறிவிக்கப்படும். கருஞ்சட்டைத் தோழர் களே, தயாராவீர்! எங்களுக்கொன்றும் சிறை புதிதல்ல – சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும் – எங்கள் வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.

கட்டுப்பாடுள்ளஇயக்கம்: இது கட்டுப்பாடு மிகுந்த இயக்கம், தலைமை கட்டளையிட்டால் நூலிழை பிறழாமல் நடந்துகொள்ளக் கூடியவர்கள். (இந்த நேரத்தில் கழகத் தலைவர் கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார். அனைவரும் ஒரு நிமிடம் எழுந்திருங்கள் என்றார் அனைவரும் எழுந்து நின்றனர். அனைவரும் அமருங்கள் என்றார்; அனைவரும் அமர்ந்தனர் – இதனைச் சுட்டிக்காட்டி இந்தக் கட்டுப்பாட்டுக்குப் பெயர்தான் கருஞ்சட்டைப் பட்டாளம் – திராவிடர் கழகம் என்று குறிப்பிட்டார்[12].

தனிப்பட்டவர்மீதுகாழ்ப்புணர்வுஇல்லை: நாங்கள் மான உணர்வுக்காக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். யார்மீதும் எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பகை இல்லை. காழ்ப்பும் கிடையாது. இந்தக் கூட்டம் முடிந்தவுடன் யாரும் அந்த உணவு விடுதி பக்கம்கூட செல்லக் கூடாது – வீட்டுக்கு நேராகப் போக வேண்டும்.

தந்தைபெரியாரைஅவமதித்துப்பேசுவதா?: அமைதிக்காகப் பாடுபடக் கூடியவர்கள் நாங்கள்; அமளியை ஏற்படுத்த அல்ல; இன்று உண்ணாவிரதம் என்று கூறிப் பார்ப்பனர்கள் என்ன பேசினார்கள். தந்தை பெரியாரையே அவன் – இவன் என்று பேசி இருக்கிறார்கள்[13]. அதற்கு உரிய முறையில் பரிகாரம் காணப்படும் (பலத்த கை தட்டல்) என்று குறிப்பிட்டார்.

 

கட்சிகளைத்தூக்கிஎறியுங்கள்!: கட்சிகளைத் தூக்கி எறியுங்கள், உங்களின் மான உணர்வை எண்ணிப் பாருங்கள் – உங்கள் சுயமரியாதைபற்றி நினைத்துப் பாருங்கள். இந்த இழிவை ஒழிக்க சிறை செல்ல வேண்டும் என்றால் அதற்கு நாங்கள் தயார்! இப்பொழுதே சிறை செல்ல பட்டியலைக் கொடுத்து விட்டனர் கழக இளைஞரணியினரும், மாணவர்களும். இந்த இயக்கம் இல்லாவிட்டால், நாங்கள் தொடர்ந்து பணி செய்யாவிட்டால் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதார் நெற்றியிலும் சூத்திரன் என்று பச்சைக் குத்தி இருக்க மாட்டானா? ஒரு பெரியார் பிறந்ததால்தானே நாம் மான உணர்ச்சி பெற்றோம். சுயமரியாதை உணர்வு பீறிட்டுக் கிளம்பியது திருவானைக்காவலில்தமிழர்தலைவர்.



[1] செவ்வாய், நவம்பர் 06, 2012  VIDUTHALAI EPAPER

[3] அதே பெரியார் நீதிமன்றத்திற்கு செல்லாமல் டபாய்த்து, நன்றாக வாங்கிக் கட்டிகொண்டதை முன்பொரு இடுகையில், உச்சநீதி மன்ற தீர்ப்பின் ஆதாரத்துடன் எடுத்துக் கோட்டியுள்ளேன்.

[4] பாவம், மனுதர்மத்தை எரிப்போம் என்று எரித்த பிறகுக்கூட, இவர் கையில் இருக்கிறதாம். அப்படியென்றால், நிறையப் பிரதிகளை வாங்கி வைத்திருப்பார் போலும்! ஆனால், எடுத்துக் காட்டும் போது, விளக்கம் கொடுக்கும் போது மட்டும், திரித்துக் கூறுவதை வழக்கமக வைத்திருக்கிறார்.

[5] இப்படியொரு வார்த்தயே இல்லை. குருஹஜஹ = என்றதை வீட்டில் பிறந்தவன் என்றுதான் பொருள் கொள்லவேண்டும். அவ்வாறுதான் மொழிபெயர்ப்பாளர்கள் பொருட்கொண்டுள்ளனர்.

R. N. Sharma, Manusmriti (translation of M. N. Dutt – Sanskrit verses with translation), Chaukhamba Sanskrit Pratishthan, New Delhi, 1998, p.389.

A. C. Burnell, The Ordinances of Manu, Oriental Books, New Delhi, 1971, p.243.

[6] இந்த சுலோகத்தில் இவர் குறிப்பிட்டபடி அத்தகைய வார்த்தைகள் இல்லை. வேண்டுமென்றே துவேஷத்தை வளர்க்க அத்தகைய வார்த்தைகளை உபயோகித்துள்ளார்.

[7] இங்கும் உண்மையினைத் திரித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டார் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒன்றும் மாற்று விளக்கம் கொடுக்கும் அளவில் ஒன்றும் இல்லை.

[8] செவ்வாய் கிரகத்திற்கு யார் வேண்டுமானாலும் போக முடியாது. அதற்கான படிப்பு, பயிற்சி, அனுபவம், அறிவு முய்தலியவற்ரைப் பெற்றவர்கள் போகலாம்.

[9] குடுமி வைப்பது பார்ப்பனத்துவமோ, பிராமணத்துவமோ இல்லை. கருணாநிதியே குடுமி வைத்திருந்தார். இன்று கூட, வடவிந்தியர்களில் பலர் குடுமி வைத்திருக்கின்றனர். பீஹார், யு.பி மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்தோர், பலர் குடுமியுடன் சென்னையிலே உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

[10] இதுதான், இரட்டை வேடம் என்பது. பிறகு எதற்கு இந்த போராட்டம்? இந்து, தினமலர் – பார்ப்பன நாளிதழ்கள் என்று கரித்துக் கொட்டி, துவேஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் போது, ஏனிந்த போலித்தனமான கரிசனம்?

[11] “நாயர் சாலை” என்றுதான் இருந்து வருகிறது. “(ரெட்டி) தெரு” என்பதில், ரெட்டி அடைப்புக் குறிகளில் போட்டுள்ளார்கள். ஆனால், “நாயர்” அடைப்புக் குறிகள் இல்லாமல்தான் இருக்கிறார்!

[12] இது “கட்டுப்பாடு” என்பதா, இல்லை சொன்னதை செய்வோம் என்ற நிலையில் உள்ளார்கள் என்பதா?

[13] தமிழகத்தில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பழக்கமே போய் விட்டது. “பெரிசு” என்று கேலிபேசி “அது-இது” என்றுகிண்டல் செய்யும் அளவிற்கு வந்துள்ளது. மேலும் கடவுளையே, அவநிவன் என்று கூறும் வழக்கமும் உள்ளது. ஆகையால், இதில் என்ன வந்து விட்டது என்று தெரியவில்லை. முதலில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும், வளர வேண்டும்., பிறகு தான் பழக்கம் ஏற்படும். இப்பொழுது கழகங்களினால் ஏற்படுத்தப் பட்டுள்ள சீர்கேட்டைக் களைய நூறு ஆண்டுகள் ஆகும்.

திராவிடர் கழகம் எந்த மதத்திற்கும், இனத்திற்கும் எதிரானது அல்ல – வீரமணி பேச்சு! (பிராமணாள் கபே பிரச்சினை தொடர்கிறது)

நவம்பர் 7, 2012

திராவிடர்  கழகம்  எந்த  மதத்திற்கும்,  இனத்திற்கும்  எதிரானது  அல்ல  –  வீரமணி  பேச்சு! (பிராமணாள் கபே பிரச்சினை தொடர்கிறது)

04-11-2012 (ஞாயிற்றுக்கிழமை): “பிராமாணாள் கபே” பிரச்சினையில் பெரியார் திராவிட கழகம் முந்தி கொண்டதை அறிந்த “இனமானத்தலைவர்” கலங்கிபோய், கூட்டத்தை அறிவித்து, அனுமதி கிடைக்காமல், நீதிமன்றத்திற்குச் சென்று, ஒருவழியாக, எந்த பிரச்சினையும் வராது என்று ஒப்புக்கொண்டதும், திருவானைக்காவல் பாரதி தெருவில் திராவிடர் கழக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அன்று பொலீஸ் அனுமதியுடன் நடந்தது[1]. ஊடகங்கள் இதைப் பற்றி குறைவாகவே செய்திகளை வெளியிட்டுள்ளன. நிச்சயமாக வீரமணி கூட்டத்தார் அமுக்கியே வாசித்துள்ளனர். ஜாதிப்பெயரை ஒழிக்க எந்த போராட்டத்துக்கும் தி.க தயாராக உள்ளது என கி.வீரமணி பேசினாலும், திகவினரே அல்லத் திராவிடத்துவ வல்லுனர்களே ஜாதிகளை தாராளமாகப் பரப்பியுள்ளதை தமிழக மக்கள் அறிந்துள்ளனர். அதனால், ஏதோ பேசவேண்டுமே என்று பேசியுள்ளது தெரிகிறது.

திராவிடர் கழகம் எந்த மதத்திற்கும்[2],  இனத்திற்கும்[3] எதிரானது அல்ல:மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்து வரவேற்றார். இவர் தாக்குதல் செய்த மனுவின் மீதுதான் அனுமதி வழங்கப்பட்டது[4] நகர தலைவர் குமார் கூட்டத்தில் தி.க தலைவர் கி.வீரமணி பேசியது, “திராவிடர் கழகம் பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுத்ததால் நீதிமன்ற அனுமதியோடு பொதுக்கூட்டம் நடத்தப்ப டுகிறது.   ஸ்ரீரங்கத்தில் எத்தனையோ மாநாடுகள்,  பொதுக்கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம்.  அப்போதெல்லாம் ஒரு சிறிய அசம்பாவித சம்பவங்களோ, கலவரமோ நடந்தது இல்லை.  திராவிடர் கழகம் எந்த மதத்திற்கும்,  இனத்திற்கும் எதிரானது அல்ல. ஜாதி ஒழிப்பு என்பது திராவிடர் கழகத்தின் தேசிய கொள்கையாகும். தந்தை பெரியார் அதற்காகதான் பாடுபட்டார். ஸ்ரீரங்கத்தில் ஜாதி பெயரில் ஓட்டல் நடத்துவதைதான் எதிர்க்கிறோம்[5].  சாதி ஒழிப்புக்காகவும்,  பெண்களின் உரிமைகளுக்காகவும் திராவிடர் கழகம் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறது.  ஆனால் வன்முறையில் இறங்கியது இல்லை.” [இதற்கான விமர்சத்தை அந்தந்த வரிக்கு, அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது].

தினத்தந்தி மற்றும் தினகரன் நாளிதழ்களில் வெளியான செய்திகள் இவை: தொடர்ந்து வீரமணி பேசியதாவது, “இதன் உண்மை நிலையை விளக்கத்தான் இந்த பொதுக்கூட்டம்.  மனுதர்மம் அரசியல் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் படவில்லை[6]. விஞ்ஞான பூர்வமாக சமுதாயம் வளரவேண்டும். அரசியல்சட்டத்தில் உள்ள உரிமைகள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் கடமை.  எனவேதான் ஜாதி பெயர் ஒழிப்பை கடமையாக எடுத்து செயல் படுகிறோம்[7].  எனவே இந்த இயக்கத்தோடு மோதிப் பார்க்க வேண்டும் என்று யாரும் நினைக்க வேண்டாம்[8].  அப்படி நினைத்தால் நாடே சிறைச்சாலையாக மாறும்.  மனுதர்ம சாஸ்திரங்களை அரசியல் சட்டம் அங்கீகரிக்ககூடாது[9].  இது திராவிடர் கழகத்திற்கு மட்டுமான பிரச்சினை அல்ல.  நாங்கள் எழுப்புவது முழக்கம் அல்ல[10].  இதற்காக எவ்வித போராட்டம்,  எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நடத்தவும் தயார்[11].  இது குறித்து வரும் டிசம்பர்  1ம் தேதி மத்திய செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும்”,  இவ்வாறு அவர் பேசினார்.  கூட்டத்தில் மாநிலத்துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொது செயலாளர் துரை சந்திரசேகர், ஜெயகுமார், அமைப்பு செயலாளர் ஒரத்தநாடு குணசேகர், தலைமைகழக பேச்சாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். நகர செயலாளர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.

திராவிடர் கழகம் பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுத்ததால் நீதிமன்ற அனுமதியோடு பொதுக்கூட்டம் நடத்தப் படுகிறது: அப்படியென்ன பிரச்சினை என்று தெரியவில்லையே? “ஸ்ரீரங்கத்தில் எத்தனையோ மாநாடுகள்,  பொதுக் கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம் ” என்றால், இப்பொழுது மட்டும் என்ன பிரச்சினை வந்துள்ளது? வேண்டுமென்றே, கோவிலின் கோபுரத்தின் முன்பாக பெரியார் சிலையை வைத்து, பிரச்சினையைக் கிளப்பியதே இந்ஹ திக தானா? ஏனெனில், இதேபோல, வேறெங்கும், குறிப்பாக சர்ச் மற்ரும் மாஸ்க்/மசூதி முன்பாக அப்படி சிலையை வைத்து தமது 100% நாத்திகத்தை நிரூபிக்கவில்லை. ஆகவே, இவர்களது நாத்திகம் “இந்துவிரோத” நாத்திகம் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அதனால் தான், முஸ்லீம்களும், கிருத்துவர்களும் தாராளமாக, இந்த காபிர்[12] / ஜென்டைல்[13] கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு இந்துக்களை இழிவு படுத்தி வருகிறார்கள்.

மனுதர்மம் அரசியல் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் படவில்லை  –  மனுதர்ம சாஸ்திரங்களை அரசியல் சட்டம் அங்கீகரிக்க கூடாது: இப்படி முன்னுக்கு முரணாக வீரமணி ஏன் பேச வேண்டும்? அம்பேத்கரால் இயற்றப்பட்ட “அரசியல் நிர்ணயச் சட்டத்தின்”படிதான், இந்தியாவில் சட்டப்பூர்வமாக நடந்து வருகிறது என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பிறகு வீரமணிக்கு என்ன சந்தேகம் என்று தெரியவில்லை. அரசியல் நிர்ணயச் சட்டத்தைத் திருத்த வேண்டுமா – அல்லது அத்தகைய முயற்சிகள் நடக்கின்றனவா – ஒருவேளை, ரகசியமாக விஷயம் இவருக்கு மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது. “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்” என்று சென்னை முழுக்க சுவரொட்டிகள் ஒட்டியபோது, யார் “சூத்திரர்களை” நினைவு படுத்தியது? கருணாநிதியா, வீரமணியா யார்? பிறகு ஏன் “சூத்திரப்பெயரை” ஆதரித்து, “பிராமணப்பெயரை” எதிர்க்க வேண்டும்?

ஜாதி பெயர் ஒழிப்பை கடமையாக எடுத்து செயல் படுகிறோம்:வீரமணி, “ஜாதி பெயர் ஒழிப்பை கடமையாக எடுத்து செயல்படுகிறோம்”, என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது, அப்படியென்றால், சாதிகளை ஒழிப்பதில்லை என்ற உண்மையை ஒப்புக் கொள்கிறார்.

  • சென்னையில் “(ரெட்டி) தெரு” (ஆவிச்சி பள்ளி அருகில் உள்ளது) என்று ரெட்டியை பிராகெட்டில் போட்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்!
  • “நாயர் தெருவுக்கு” (ரோஹினி இன்டர்நேஷனல் ஹோட்டல் அருகில்) பிராகெட் போடாமல் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்!
  • “நாயுடு ஹாலில்” (பாண்டி பஜார்) ஜொல்லு விட்டுக் கொண்டு, பெண்டு-பிள்ளைகளுடன் மார்கெட் செய்கிறார்கள்
  • “செட்டியார் ஹாலில்” (ஆழ்வா பேட்டை) பொருட்கள் வாங்குகிறாகள்.
  • “நாயர் டீ கடைகளில்” (தமிழகம் எங்கும்) டீ சாப்பிடுகிறார்கள்.
  • “வாண்டையார் லாட்ஜில்” தங்குகிறர்கள்.
  • “நாடார் மரத்தொட்டியில்” விறகு, ஓலை, மூங்கில் வாங்குகிறார்கள்.
  • “ரெட்டியார் மெஸ்ஸில்” டிபன் சாப்பிடுகிறார்கள்.
  • உள்ள ஜாதிச்சங்களைப் பற்றி கவலை இல்லை.

இப்படித்தான் இவர்கள் தங்களது ம்கத்தான கடமையினை செய்து வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

07-11-2012


[2] ஆனால், தமிகத்திலேயே, இதை யாரும் நம்புவதில்லை. இந்துமதவிரோத நாத்திகத்தை வைத்துக் கொண்டு, ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் கூட்டம் என்று தமிழர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள்.

[3] “இனம்” என்ற சித்தாந்தம் இப்பொழுது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், இன்னும் விடாப்படியாகப் ப்டித்துக் கொண்டு, காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கும் இந்த திராவிடக் கூட்டங்களை, அதனால் தான் அனைத்துலக ரீதியில் கண்டுக் கொள்வதில்லை.

[5] சாதிகள் பெயரில் சங்கங்கள், கடைகள், ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள் என இருந்தாலும், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, இதனை எதிர்த்துப் பிழைப்பு நடந்த ஏன் திகக்கூட்டத்தினர் இறங்கியுள்ளார்கள் என்று தெரியவில்லை.

[6] இப்படி முன்னுக்கு முரணகப் பேசி-எழுதி வருவதை நன்றக கவனிக்க வேண்டும்.

[7] உண்மையிலேயே இந்த கடமை உணர்வை தமிழ் மக்கள் கண்டு-கண்டு வியந்து வருகிறார்கள். சாதியின் பெயரால் யார் அடித்துக் கொண்டு சாகிறார்கள் என்று மக்களுக்குத் தெரியாததா என்ன?

[8] இவை மிரட்டல் இல்லாமல் வேறென்ன? இப்படி யாரை மிரட்டுகிறார் என்று வெளிப்படையாக அல்லவா சொல்லவேண்டும்?

[9] மேலே சொன்னதை நினைவு கூறவும். இப்படி மாற்றி-மாற்றிப் பேசி, மக்களைக் குழப்புவதில் இவர்களுக்கு இணை இவர்கள் தாம்.

[11] ஆமாம், டிரஸ்ட் பணத்தில் இவ்வாறு பொதுகூட்டங்கள் நடத்துவதில் எந்த ஆச்சரியமும் இல்லையே. மேலும் பொறியியல் கல்லூரி முதலிவவை நடத்துவதால் கோடிகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. அதில் வரும் வட்டிப் பணத்தை இப்படி செலவு செய்து, விளம்பரப் படுத்துக் கொள்வதில் என்ன சித்ததந்தம் வேண்டிக் கிடக்கிறது?

[12] இஸ்லாம் மதத்தில் நம்லிக்கையில்லாதவர்கள் – அதாவது முஸ்லீம்கள் அல்லலதவர்கள் எல்லோருமே காபிர்கள் தாம்! இந்த அடிப்படையில் தான் ஜிஹாத் என்ற போர் நடத்தப் படுகிறது. தாலிபான், அல்-குவைதா, முஜாஹித்தீன், போன்ற தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஜிஹாத் போர்வையில் மக்களைக் கொன்று வருகிறார்கள்.

[13] கிருத்துவர்களுக்கும், கிருத்துவர்கள்-அல்லாதவர்களை இப்படி மோசமான பெயரில் அழைக்கிறார்கள். ஒன்று இவர்கள் கிருத்துவர்களாக மதமாற்றப் படவேண்டும் அல்லது புனிதபோரில் கொல்லப்பட வேண்டும். அப்பொழுது தான் ஏசு, மறித்தவர்களை உயிர்ப்பித்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார்.