Archive for the ‘திருட்டுத் தமிழச்சி’ Category

கொலை-கொள்ளைகளில் பெண்கள் ஈடுபடுவது அதிகரிப்பு!

ஜனவரி 13, 2010

கொலை-கொள்ளைகளில் பெண்கள் ஈடுபடுவது அதிகரிப்பு!

ஆணுக்குப் பெண் நிகர்தான் என்று பெண்கள் மெய்ப்பித்து வருகின்றனர்.

3 பெண்கள் மீது கொலை வழக்கு

பதிவு செய்த நாள் 1/12/2010 12:27:40 AM

Swine Flu

சென்னை : அசோக் நகரில் குடிபோதையில் பெண்களிடம் தகராறு செய்த விடுதலை சிறுத்தைகள் வட்ட செயலாளர் கீழே விழுந்து இறந்தார். பெண்கள் தள்ளிவிட்டதால் அவர் பலியானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 3 பெண்களை கைது செய்தனர்.
அசோக்நகர் நல்லாங்குப்பம் 57வது தெரு 1வது பிளாக்கில் வசிப்பவர் ஆதி (எ) ஆதிமூர்த்தி (23), விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்ட செயலாளர். பெயிண்டராக பணி புரிகிறார். இவருக்கு மனைவி, 3 மாத குழந்தை உள்ளனர். குடிப்பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு குடித்து விட்டு, கே.கே.நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள அம்பேத்கர் குடிசை பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு வீட்டுக்கு வெளியே படுத்திருந்த வனிதா என்ற பெண்ணிடம் ஆதிமூர்த்தி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் சத்தம் போட்டதால், அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் ஏராளமான பெண்கள் கூடி விட்டனர். அவர்கள், ஆதிமூர்த்தியை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்த சைக்கிள் மற்றும் பாறாங்கல் மீது ஆதிமூர்த்தி விழுந்தார். தலையில் அடிபட்டு அதே இடத்தில் இறந்தார்.
உடனே, அங்கிருந்த பெண்கள் இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் பரந்தாமன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வனிதா, ராதா, பொட்டுக்கண்ணி ஆகிய 3 பெண்களும், ‘‘ஆதிமூர்த்தி அடிக்கடி குடித்து விட்டு வந்து எங்கள் பகுதியை சேர்ந்த பெண்களிடம் தகராறு செய்வார். நாங்களும் பொறுத்து பார்த்தோம். ஆனால் அவர் திருந்தவில்லை. நள்ளிரவில் வந்து எங்களிடம் தவறாக நடக்க முயன்றார். அதனால் பெண்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து தள்ளி விட்டோம். அதில் அவர் கீழே விழுந்து விட்டார். போதையில் விழுந்து கிடப்பதாக நினைத்தோம். நீண்ட நேரமாக எழுந்திருக்காததால், போலீசுக்கு நாங்களே தகவல் தெரிவித்தோம்’’ என்று கூறியுள்ளனர். அதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் ஆதியின் உறவினர்கள் கூறும்போது, ‘‘அம்பேத்கர் குடிசை பகுதியில் கஞ்சா வியாபாரம் நடக்கிறது. அதை கண்டுபிடித்து போலீசில் சொல்வதற்காக சென்றவரைத்தான் அடித்து கொன்று விட்டனர்’’ என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து, எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.


இதே செய்தி பலவாறு வெளியிடப்பட்டுள்ளன:

உல்லாச வெறி-வாலிபர் கொலை: 3 பெண்கள் கைது

திங்கள்கிழமை, ஜனவரி 11, 2010, 15:19[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/01/11/three-women-arrested-murdering-yout.html

குடிபோதையில் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை அடித்துக்கொலை செய்ததாக 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை நல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஆதி (23). மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து பாதியில் நிறுத்தி விட்டார். பின்னர் 131வது வட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக பணியாற்றி வந்தார்.  இவர் போரூரைச் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். நந்தினி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக தங்கி இருந்த ஆதிக்கும் வனிதா என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ஆதி குடிபோதையில் வனிதாவை தேடி எம்.ஜி.ஆர்.நகர் அம்பேத்கார் குடிசை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.  வீட்டில் தூங்கி கொண்டிருந்த வனிதாவை உல்லாசத்திற்கு அழைத்தார். வனிதா மறுத்ததால் பலவந்தபடுத்தியுள்ளார். இதனால் வனிதா கூச்சல் போடவே சத்தம் கேட்டு அருகில் இருந்த வனிதாவின் உறவுக்கார பெண்கள் ஓடி வந்தனர்.  ஆதியை வெளியே போகுமாறு கண்டித்தனர். ஆனால் போதையில் இருந்த ஆதி, வனிதா மீது ஆவேசமாக பாயவே, அவர்கள் ஒரு கயிற்றை ஆதி மீது வீசி, கட்டி இழுத்துள்ளனர்.  மீண்டும் திமிறிக்கொண்டு பாய முயற்சித்த ஆதியை பெண்கள் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

பின் மண்டையில் பலத்த காயமடைந்த ஆதி அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதை உணர்ந்த வனிதா, உறவு பெண்கள் ராதா, பொட்டுகனி ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். கொலையை மறைக்க முடிவு செய்த அவர்கள், ஆதியின் உடலை வெளியில் தூக்கி வந்து போட்டு இரும்பு ராடு ஒன்றின் மீது தவறி விழுந்து இறந்ததுபோல உடலை சாய்த்து வைத்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அசோக் நகர் போலீசார் வந்து விசாரித்ததில் ஆதி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து வனிதா, ராதா, பொட்டுக்கனி ஆகிய 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை கணவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து கைக் குழந்தையுடன் ஓடி வந்த நந்தினி, குடிசைப் பகுதியில் கஞ்சா விற்றதை கண்டித்ததால் தான் என் கணவர் கொல்லப்பட்டார் என குற்றம் சாட்டினார்.

சென்னையில் காமுகன் ஒருவன் பெண்களால் அடித்துக்கொலை

நியூஇந்தியாநியூஸ் – ‎11 ஜன., 2010‎
குடிபோதையில் அட்டூழியம் செய்த இளைஞர் ஒருவர் பெண்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடந்துள்ளது. சென்னை நல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆதி

கஞ்சா பிரச்சினையா? கள்ளக்காதல் பிரச்சினையா? விடுதலை

தினத் தந்தி – ‎11 ஜன., 2010‎
சென்னை எம்.ஜி.ஆர். நகரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை அடித்து கொன்றதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனையால் ஏற்பட்ட பிரச்சினையில் கொலை நடந்ததா?

சமீபத்தில், கொலை-கொள்ளை-ஏமாற்றுவேலை-என எல்லாகுற்றங்களிலும் அதிகமாகப் பெண்கள் ஈடுபட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.

அதிலும், செக்ஸ் குற்றங்களில் அவர்களது கற்பனைக்கெட்டாத வரையில் உள்ள பங்குகள் மனங்களை உரைய வைக்கின்றன, வருத்தப்படச் செய்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் அத்தகையவை நடக்கின்றது என்பது ஆய்வுக்குறியது.

பெண் குழந்தை பெற்று, ஆண் குழந்தையை திருடிய தமிழச்சி!

திசெம்பர் 25, 2009

குற்றம் :ஆண் குழந்தை திருடிய இளம்பெண் சிக்கினார்

பதிவு செய்த நாள் 12/26/2009 12:31:20 AM

பெண் குழந்தை பெற்ற தாய் ஒருவர் அந்த குழந்தையை போட்டுவிட்டு, இன்னொரு பெண் பெற்றெடுத்த ஆண் குழந்தையை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றபோது பிடிபட்டார்!

Swine Fluசென்னை : மருத்துவமனையில் ஆண் குழந்தையை திருட முயன்ற பெண் பிடிபட்டார்.ஆலந்தூரை சேர்ந்தவர் சங்கர். அவர் மனைவி தங்கம் (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. மீண்டும் கர்ப்பமான தங்கம், கடந்த 17ம் தேதி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இவரது பக்கத்து பெட்டில் திருவள்ளூரை சேர்ந்த பாபு என்பவரின் மனைவி அம்மு (30) இருந்தார். இவருக்கு 18ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.  நேற்று அதிகாலை 5 மணிக்கு தங்கம் குழந்தையுடன் வெளியே செல்ல முயன்றார். அப்போது எதிரில் வந்த நர்ஸ், ‘இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்’ என்று கேட்டார். வீட்டுக்கு போவதாக தங்கம் கூறியதும், டாக்டரினம் கூறினீர்களா? டிஸ்சார்ஸ் பாஸ் வாங்க விட்டீர்களா என நர்ஸ் அடுக்கடுக்காக கேள்வி கேட்டார். இதற்கு பதில்கூற திணறிய தங்கம், திடீரென ஓட தொடங்கினார்.
அப்போது வார்டில் இருந்த அம்மு, தனது குழந்தையை காணவில்லை என்று அலறவே, நர்ஸ் சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டார். மருத்துவமனை ஊழியர்கள் விரட்டிச்சென்று தங்கத்தை பிடித்து எழும்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.

ஆண்குழந்தை வேண்டுமென்றதால் திருடினேன்! விசாரணையில், ‘எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. 3வதும் பெண்ணாக பிறந்துவிட்டது. ஆண் குழந்தை வேண்டும் என்பதால், அம்முவின் குழந்தையை எடுத்துக்கொண்டு சென்றேன்’ என்று கூறியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

என்னத்தை விசாரித்து என்ன செய்யபோகிறார்கள்? ஆண்குழந்தை வேண்டுமென்றால், ஆண்குழந்தையைத் திருடிவிட்டாள்.

அதேபோலத்தான், தமிழச்சிகள் எனக்கு வேண்டிய ஆண்மகன்கள் வேண்டும் எனும்போது திருடி இருக்கிறார்கள்! அவர்கள் திருமணமானவர்கள் என்றதுகூட கவலை இல்லை! ஏனெனில், தாமும் திருமணம் ஆனவர்கள்தாம்!

என்னே சமத்துவம்! சமத்துவ தாம்பத்தியம்!! இதுதான் திராவிடம் என்பதா?

ஏன் பகுத்தறிவு பெண்களைத் திருத்தவில்லை? புராணக் கதைகளை கிண்டல் செய்தார்கள், செய்கிறார்கள். பகுத்தறிவு என்றார்கள்.

மூட நம்பிக்கைகளை விரட்டுவோம் என்றார்கள்!

இறகு எதற்கு இத்தகைய குற்றங்கள் நடக்கின்றன?

மாறாக, இவர்கள் தங்களது வாழ்க்கையில் மற்றவர்கள் பின்பற்றுவது போல நடந்தார்களா என்றால் அடுவும் இல்லை.

தலைவர்களுக்கு எல்லாம் ஒன்றிற்கு மேல் மனைவிகள், துணைவிகள், இத்யாதி வகைகள்.

அதில் அங்கீகரிக்கப்பட்டது, படாத வகைகள்.

ரகசியமாக உள்ளது.

சரி, பெண் தலைவிகள் – அவர்களும் சளைத்தவர்கள் இல்லை!

ஒன்றிற்கு மேல் மட்டுமல்ல! உள்ளூர், வெளியூர் என பல ரக கணவர்கள்.

விவாகரத்தெல்லாம் பகுத்தறிவாகிவிட்டது!

இல்லரமோ புகுத்தறிவாகிவிட்டது. ஐந்து / பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு கணவன், இப்பொழுது ஒரு கணவன்!

முடிந்தால் அடுத்தவள் கணவனையேத் திருடுகிறாள்!

அதனால் நியாயம், தர்மம் இவற்றில் சிறிதுகூட பயம் இல்லாமல் போய்விட்டது.

இதோ புறப்பட்டு விட்டாள், புரட்சி தமிழச்சி!

நான் குழந்தைகளையேத் திருடுவேன் என்று!

பெற்றெடுத்த மற்றவளும் பெண்தானே என்று அந்த தமிழச்சி நினைக்கவில்லையா?

இத்தனைக்கால பகுத்தறிவு ஆட்சி அவளுக்குப் பாடம் புகட்டவில்லையா?

இல்லை, நானும் அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் பாதையை பின்ப்ற்றுகிறேன் என்று கிளம்பி விட்டார்களா?

வாழ்க தமிழ்! வாழ்க தமிழச்சிகள்!! வாழ்க தமிழ் திருடிகள்!!!மாணவியுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆசிரியர்!

திசெம்பர் 22, 2009
கடத்திய மாணவியை வீட்டுக்கு அனுப்பி விட்டு தலைமை ஆசிரியர் மீண்டும் ஓட்டம்
ஜனவரி 10,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15295

அமலனின் மலமான செயல்: கொடுங்கையூர்:மாணவி கடத்தல் வழக்கில் தனிப்படை போலீசார் தேடுவது தெரிந்ததும், மாணவியை கொண்டு வந்து விட்டு, விட்டு தலைமை ஆசிரியர், போலீசிடம் சிக்காமல் தப்பி ஓடினார்.சென்னை எம்.கே.பி.,நகர், 10வது தெருவை சேர்ந்தவர் அமலன்(45). இவர் எருக்கஞ்சேரி எத்திராஜ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்தார். இவரது மனைவி ஆரோக்கியமேரி (40); அதே பள்ளியின் ஆசிரியை. கொடுங்கையூர், வாசுகி நகரை சேர்ந்தவர் ராமனின் மகள் கலா(17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், அமலனிடம் டியூஷன் படித்து வந்தார். ஆசை வார்த்தை கூறி கலாவை கடந்த 6ம் தேதி, அமலன் கடத்திச் சென்றார். மாணவியை தலைமை ஆசிரியர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கொடுங்கையூர் போலீசார், அமலன் வேலை பார்த்த பள்ளி, கலாவுடன் படித்த மாணவிகள், அமலனின் மனைவியிடமும் தீவிர விசாரணை நடத்தினர். கலகலப்பாக பழகும் குணம் கொண்ட கலாவின் அழகில் மயங்கிய அமலன், கலாவை தனது காதல் வலையில் விழ வைக்க திட்டமிட்டார். “நீ பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற, என்னிடம் டியூஷன் படி,’ என்று வற்புறுத்தி வந்தார். அமலன் வற்புறுத்தலால் கலாவும் கடந்த மூன்று மாதங்களாக டியூஷன் சென்றார்.

காமம் கலந்த காதல் வலை வீசிய அமலன்: பாடம் நடத்தும்போது, “செக்ஸ்’ சம்பந்தமாக ஜோக்குகள் அடிப்பது, ஆபாச எஸ்.எம்.எஸ்., படங்களை கலாவிடம் காட்டி, மிகவும் ஜோவியலாக அமலன் பழகியுள்ளார்.மெல்ல, மெல்ல காமம் கலந்த காதல் வலை வீசினார். அதில், கலா சிக்கினார். அமலனின் நடவடிக்கையை அறிந்த ஆரோக்கியமேரி, கணவரை கண்டித்துள்ளார். அதற்கு,”கலாவை என் மகளாக பாவிக்கிறேன்’ என்று, சமாதானப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில், அவர்களின் காதல் விவகாரம் வெளியில் பரவத் துவங்கியது. இதையடுத்தே, கலாவை கடத்திச் சென்றது தெரியவந்ததுள்ளது.கலாவை மீட்க, புளியந் தோப்பு துணை கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் படி, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அமலனின் மொபைல் போன் மூலம், அவர் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக, புதுச்சேரி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படைபோலீசார் புதுச்சேரி விரைந்தனர். போலீசார் தேடுவதை தெரிந்து கொண்ட அமலன், நேற்று முன்தினம் சென்னை வந்தார். இரவு சென்னை பிராட்வே பகுதியில் கலாவுடன் தங்கிய அவர், நேற்று அதிகாலை ஒரு ஆட்டோவில் கலாவை வீட்டிற்கு அனுப்பி வைத்து, தலைமறைவானர்.கலாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில்,” நான் என் பெற்றேரை விட அதிகமாக அமலனை நேசிக்கிறேன். அவரை கடவுளுக்கு சமமாக கருதுகிறேன். நாங்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் சந்தோஷமாக இருந்தோம்‘ என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, கலாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த, போலீசார் முடிவு செய்தனர். மேலும், கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள அமலனை போலீசார் தேடிவருகின்றனர்.

விமர்சனம்:

1. அமலன் (45) நன்றாக 17 வயதான பெண்ணை பாலியில் ரீதியில் மயக்கியிருப்பது தெரிகிறது.

2. ” நான் என் பெற்றேரை விட அதிகமாக அமலனை நேசிக்கிறேன். அவரை கடவுளுக்கு சமமாக கருதுகிறேன். நாங்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் சந்தோஷமாக இருந்தோம்‘ என்று கூறியதிலிருந்து, வேறுவிதமாகக் கூட மூளை சலவை செய்திருப்பது தெரிகிறது.

3. அமலன், “நான் உங்கள் மகளுடன் வெளியேரி விட்டேன். உங்கள் மகளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன்”, என்பதலிருந்து, ஆரோக்கிய மேரிக்கு இந்த விஷயம் தெரிந்தூள்ளது என்று நன்றாகவே அறியப்படுகின்றது.

4. “அ-ஆ”வின் திருவிளையாடல்தான் இது!

அறியாத வயதில் ஒரு சிறுமியை இவ்வாறு மயக்கியுள்ளது என்னவோ?

இச்சம்பவம் பள்ளி வளாகத்திற்கு வெளியில் தான் நடந்துள்ளது. இருப்பினும் அச்சம்பவம் நடந்த அடுத்தநாளே அமலனை பணியில் இருந்து “டிஸ்மிச்” செய்துவிட்டோம். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது……………….என்றெல்லாம் சொல்வதே வேடிக்கையக உள்ளது!

வெளியிடப்படும் செய்திகளிலும் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன. வேளாங்கண்ணிக்குச் சென்ற மர்மமும் புரியவில்லை. முதலில் அப்பெண் சொன்னது, நான் என் பெற்றேரை விட அதிகமாக அமலனை நேசிக்கிறேன். அவரை கடவுளுக்கு சமமாக கருதுகிறேன். நாங்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் சந்தோஷமாக இருந்தோம், என்பது, இப்பொழுதோ, போலீஸாரிடம், அமலன் தன்னைக் கற்பழித்து விட்டதாகக் கூருவது!
ஏற்கெனவே, ஒரு மாணவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிகழ்ச்சியும் உள்ளதால், இதை தீவிரமாக விசாரிக்கவேண்டும். மேலும், இதில் “பாதிரி” போன்ற உருவத்தில் உள்ள அமலன், ஈடுபட்டுள்ளது, வேளான்கண்ணிக்கு அழைத்துச் சென்றது எல்லாமே ……………………………..

மாணவியுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆசிரியர்!

டியூஷன் ஆசிரியர் சிக்கினார்

பதிவு செய்த நாள் 12/22/2009 12:50:46 AM

http://www.dinakaran.com/nagaramdetail.aspx?id=2600

சென்னை : மாணவியுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு, அதை செல்போனில் படம் பிடித்த டியூஷன் ஆசிரியர் போலீசாரிடம் சிக்கினார்.
மணலி பலராமன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (34). எம்.ஏ.பட்டதாரி. திருமணமானவர். இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மணலி காமராஜர் தெருவில் டியூஷன் சென்டர் நடத்தி வந்தார். இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் டியூஷன் படிக்க வந்தார். அவரிடம் ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்தார் செல்வராஜ். அதை தனது செல்போனிலும் படம் பிடித்து, நண்பர்களிடம் காட்டியிருக்கிறார்.
அவர்கள் செல்வராஜின் செக்ஸ் லீலை படத்தை, அவரவர் நண்பர்களுக்கு செல்போன் மூலம் அனுப்பியுள்ளனர். நாளடைவில் இது பள்ளி மாணவர்கள், வாலிபர்கள் மத்தியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப் பார்த்த சம்பந்தப்பட்ட மாணவி அதிர்ச்சி அடைந்தார். அவர் பெற்றோரிடம் தெரிவிக்க, மணலி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக, டியூஷன் ஆசிரியர் செல்வராஜ் வீட்டுக்கு போலீசார் சென்றபோது, அவர் குடும்பத்துடன் தலைமறைவாகி இருந்தார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
செல்வராஜின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், கோனூருக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். அங்கும் அவர் இல்லை. இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்வராஜ் இருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று செல்வராஜை மடக்கிப் பிடித்தனர். அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், செல்வராஜை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
செல்வராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்துள்ளனர். இதேபோல், செல்வராஜுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிகிறது. செக்ஸ் லீலை டியூஷன் ஆசிரியர் செல்வராஜ், போலீசில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.