Archive for the ‘கேன்டீன்’ Category

“தரமான உணவு” உணவு வழங்க ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியார் மூலம் நடத்தப் படும் கேண்டீன் – கண்ணாடி பெட்டியில் எலிகள் பஜ்ஜி-போண்டா தின்றது!

நவம்பர் 14, 2023

தரமான உணவுஉணவு வழங்க ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியார் மூலம் நடத்தப்படும் கேண்டீன்கண்ணாடி பெட்டியில் எலிகள் பஜ்ஜிபோண்டா தின்றது!

சென்னை, ராயபுரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது[1]. இங்கு செயல்பட்டு வரும் தனியார் கேன்டீனில், அனைத்து வகையான உணவுகளும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது[2]. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் ஏழைகள், நடுத்தர மக்கள் போன்றவர்கள் வருவதால், அவர்களால் வெளியே உணவு வாங்கி உண்ண முடியாது அல்லது வெளியில் விலை அதிகம் அல்லது சமைப்பதற்கே வழியில்லை போன்ற நிலைகள் உள்ளவர்களுக்கு, இத்தகைய கான்டீன் உணவு தான் கதியாக இருக்கிறது. ஏனெனில், அது விலை குறைவாக உள்ளது, மருத்துவ மனைக்குள்ளேயே கிடைக்கிறது. பொதுப்பிரிவில் இருப்பவர்களுக்கு, ரொட்டி-பால் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. ம்ற்றவர்கள் காசு கொடுத்து உணவு வாங்கிக் கொள்ளவேண்டும். அல்லது வெளியிலிருந்து உணவு வரவேண்டும். வீட்டிலிருந்து உனவு எடுத்து வந்து சாப்பிட கிடைக்காத நோயாளிகளும் வெளியே வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

தரமான உணவுஉணவு வழங்க ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியார் மூலம் நடத்தப்படும் கேண்டீன்: ஆஸ்பத்திரிக்கு பல்வேறு இடங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்[3]. நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்[4]. சிகிச்சைக்கு வரும் ஏழை மக்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியார் மூலம் கேண்டீன் நடத்தப்பட்டு வருகிறது[5]. அந்த “தரமான உணவு” என்பதில் தான், இப்பொழுது, இப்பிரச்சினை வெளிப்பட்டுள்ளது. கடந்த 100-50 ஆண்டுகள் வரை ஓரளவுக்கு நாணயமாக இந்த உணவகங்களை நடத்தி வந்தனர். பிறகு, தரம் குறைய ஆரம்பித்தது. கான்டீனுக்கு டென்டர் போன்றவை வந்த பிறகு, பலவித காரணங்களுக்காக அத்தகைய தரம் குறைவது, விலை அதிகமாகவது பொன்றவை அதிகமானது. ஆகவே, மருத்துவமனை மற்றும் அதை சம்பந்தப் படுத்தும் விவகாரங்களில் ஆவது, ஒழுக்கம், நியாயம், தர்மம் முதலியவை இருந்தால் நன்றாக இருக்கும்.

12-11-2023 அன்று உணவு பெட்டியில் எலிகள் இருந்தது, உணவு உண்டது: இந்த கேண்டீனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 12-11-2023 அன்று பஜ்ஜி, வடை, போண்டா சுட்டு விற்பனைக்காக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது[6]. வழக்கம் போல, பொது மக்கள் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது, உணவு வைக்கப் பட்டிருந்த கண்ணாடி ஷோ-கேஷில் எலிகள் இருப்பதை சிலர் பார்த்தனர். அந்த பெட்டியில் எலிகள் சுற்றி திரிந்தன. எலிகள் விளையாடுவதும், அங்கிருந்த உணவுகளை தின்று கொண்டிருப்பதையும் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்[7]. இது குறித்து கேன்டீன் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்[8]. இந்த போக்கே அந்த கான்டீன் ஆட்களின் மமதையைக் காட்டுகிறது. அப்படியென்றால், அவர்களது பின்புலம் தான் அவர்களை ஆட்டிவைக்கிறதே தவிர, என்னடா இது இவ்வாறு எலிகள் வந்து சாப்பிடும் நிலை வந்துவிட்டதே என்ற கவலை, பொறுப்பு முதலியவை உண்டாகாமல், சண்டை போடுவதில் ஈடுபட்டது, அத்தகைய அராஜகத்தை, ஒழுங்கீனத்தை, மனிதத் தன்மையற்ற குணாதிசயங்களை நன்றாகவே வெளிப்படுத்திக் காட்டியுள்ளன.

வீடியோ வெளிவந்தவுடன் ஆய்வு மேற்கொண்டது: இது பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கேண்டீன் ஊழியர் ஒருவரிடம் கேட்டனர்[9]. அதற்கு அவர் உரிய பதில் அளிக்காமல் கண்ணாடி பெட்டியில் விளையாடி கொண்டிருந்த எலியை விரட்டி விட்டு பஜ்ஜி, வடை போன்றவற்றை எடுத்து அகற்றினார்[10]. இதெல்லாம், நிச்சயமாக ஒழுக்கமற்ற நிலைகளின் உச்சமாகும். இத்தகையோர், மருத்துவமனையில் இருப்பதற்கே லாயக்கற்றவர். இதுகுறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்[11]. இதையடுத்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி முதல்வர் பாலாஜி கேண்டீனில் ஆய்வு செய்தார்[12]. அடிக்கடி காலக்கிரமத்தில் சோதனைகள் [periodical checking] மேற்கொண்டிருந்தாலே, இத்தகைய முறையற்ற, சுகாதரமற்ற மற்றும் நோய்கள் உண்டாக்கும் நிலையில், எலிகள் உலாவந்து, சாப்பிட்டுத் திரியும் நிலை உண்டாகியிருக்காது. பின்னர் கேண்டீனை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்[13]. வீடியோ வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கேண்டீனை இழுத்து மூட மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார்[14]. உத்தரவின்பேரில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த தனியார் கேண்டீன் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் கேன்டீனை 15 நாட்களுக்கு மூட மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உணவகத்தை சீரமைத்து மீண்டும் திறக்க உணவு பாதுகாப்புதுறை அறிவுறுத்தியுள்ளது. அப்படியென்றால், 15 நாட்களில் எல்லாம் சரியாகி விடுமா? தரம் உயர்ந்து விடுமா? அந்த ஊழியர்களின் நடத்தை சரியாகி விடுமா? போன்ற கேளிகளுக்கு என்ன பதில் கிடைக்கும் என்று தெரியவில்லை.

கேண்டீன்களை ஆய்வு செய்ய உத்தரவு: இந்நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களையும் ஆய்வு செய்ய மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது[15]. அந்த நோட்டீஸில், ‘அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் டெண்டர் விடப்பட்ட கேண்டீன்களை உடனே ஆய்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது[16]. அப்படியென்றால், இத்தனை ஆண்டுகள் வரை எல்லாமே ஒழுங்காக நடந்து வந்து கொண்டிருந்தனவா? இப்பொழுது 2023ல் தான் இத்தகைய நிலை ஏற்பட்டுவிட்டதா என்று புரியவில்லை. மேலும் அதில், ‘சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அந்த உணவகத்தை இழுத்து பூட்டி சீல் வைக்க வேண்டும்[17]. உணவுகள் தரமற்ற முறையில் நோயாளிகளுக்கு விநியோகம் செய்தால் கேண்டீனின் உரிமம் ரத்து செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது[18]. மருத்துவமனை என்ற சிந்தனையில் சம்பந்தப் பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்தால், இத்தகைய நிலைமையே உருவாகியிருக்காது. ஆகவே, இத்தகைய மனிதத் தன்மையற்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் உணவகங்களில் சோதனை என்று அடிக்கடி செய்திகள் வெளிவந்து கொன்டிருக்கின்றன. அதே போல இங்கேயும் சோதனை மேற்கொள்ளலாமே?

© வேதபிரகாஷ்

14-11-2023.


[1] தினமலர், மருத்துவமனை கேன்டீனில் சுவைத்து விளையாடும் எலி, பதிவு செய்த நாள்: நவ 13,2023 23:27; https://m.dinamalar.com/detail.php?id=3480563

[2] https://m.dinamalar.com/detail.php?id=3480563

[3] மாலை மலர், கேண்டீனில் பஜ்ஜி மீது விளையாடிய எலிகள்: மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்,

By மாலை மலர், 14 நவம்பர் 2023 10:51 AM; (Updated: 14 நவம்பர் 2023 12:47 PM).

[4] https://www.maalaimalar.com/news/state/rat-in-canteen-food-safety-department-notice-to-medical-college-principals-685008

[5]  தினமலர், பஜ்ஜி, வடையை எலி ருசித்த விவகாரம்: கேன்டீனை மூட உத்தரவு, பதிவு செய்த நாள்: நவ 13,2023 20:33

[6] https://m.dinamalar.com/detail.php?id=3480469

[7] தினத்தந்தி, அரசு மருத்துவமனை கேண்டீனில் எலிஅரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, By தந்தி டிவி, 14 நவம்பர் 2023 11:08 AM

[8] https://www.thanthitv.com/News/TamilNadu/breaking-rat-in-govt-hospital-canteen-important-announcement-by-govt-226315

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், எலி சாப்பிட்ட திண்பண்டங்கள் விற்பனை; சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீனை மூட உத்தரவு, WebDesk, Nov 13, 2023 18:37 IST.

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/rat-eaten-snacks-selling-complaints-chennai-stanley-govt-hospital-canteen-closed-1694843

[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேன்டீன்.. கண்ணாடி பெட்டிக்குள் பஜ்ஜியை ருசிபார்த்த எலிஅதிர்ச்சியில் நோயாளிகள்!, Ansgar R; First Published Nov 13, 2023, 5:11 PM IST; Last Updated Nov 13, 2023, 5:11 PM IST.

[12] https://tamil.asianetnews.com/tamilnadu/rat-found-eating-foods-in-chennai-stanley-gh-canteen-glass-box-deen-ordered-to-close-canteen-ans-s428gu

[13] தமிழ்.சமயம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவலம்.. எலியை வைத்துடெஸ்ட்செய்யப்படும் கேண்டீன் பலகாரங்கள்.., Authored By ஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil | Updated: 13 Nov 2023, 4:33 pm

[14] https://tamil.samayam.com/latest-news/state-news/rat-eats-snacks-in-canteen-of-stanley-government-hospital/articleshow/105185398.cms

[15] நக்கீரன், கேண்டீன் தின்பண்டங்களில் எலி; மருத்துவமனை முதல்வர் அதிரடி உத்தரவு, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 14/11/2023 (11:16) | Edited on 14/11/2023 (11:32)

[16] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rat-canteen-snacks-stanley-hospital

[17] தமிழ்.நியூஸ்.18, கேண்டின் தின்பண்டங்களில் எலிசென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் அதிரடி உத்தரவு, FIRST PUBLISHED : NOVEMBER 13, 2023, 4:31 PM IST; LAST UPDATED : NOVEMBER 13, 2023, 4:31 PM IST

[18] https://tamil.news18.com/chennai/a-rat-eats-snacks-in-the-canteen-of-stanley-government-hospital-1231091.html