Archive for the ‘மூத்திராலயம்’ Category

முதியோர் இல்லம், ஆதரவற்றோர் காப்பகம் என்று சொல்லி, கால் சென்டர் மூலம் கவர்ந்து பணம் ஏமாற்றும் ஐ-டெக் கும்பல்கள் (2)

ஜனவரி 26, 2024

முதியோர் இல்லம், ஆதரவற்றோர் காப்பகம் என்று சொல்லி, கால் சென்டர் மூலம் கவர்ந்து பணம் ஏமாற்றும் டெக் கும்பல்கள் (2)

2020 – மோசடி செயலில் ஈடுபட்டு, கைதாகி, ஜாமீனில் வெளிவந்து, மறுபடியு மோசடியில் ஈடுபட்டது: சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கோபி என்ற கோபி கிருஷ்ணன் (வயது 30). பட்டதாரியான இவர் நூதனமான முறையில் மோசடி செயலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியவர்[1]. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர். குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்[2]. ஜாமீனில் வெளிவந்த இவர் மீண்டும் மோசடி தொழிலை தொடங்கி உள்ளார். சென்னை திருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் ஒன்றை தொடங்கி, அதில் ஏராளமான இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தினார். அந்த இளம்பெண்கள் பொதுமக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, ஏதாவது ஒரு நிதி நிறுவனம் பெயரைச் சொல்லி, அந்த நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றுவடு தான் அவர்கள்து வேலை. இது தொடர்பாக, செல்வராஜ் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில், உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மோசடி மன்னன் கோபிகிருஷ்ணன், அவரது மேலாளர் வளர்மதி (30) உள்பட 12 பேர் நேற்று கைது செய்தனர். அவர்கள் நடத்திய போலி கால்சென்டரிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

2024 – அன்னை தெரசா முதியோர் இல்லம் மோசடி: இதே பாணியில், அனாதை இல்லம், முதியோர் இல்லம், ஆசிரமம் என்று சொல்லிக் கொண்டு, கும்பல்கள் கிளம்பியுள்ளன. கால் சென்டர்களிலிருந்து, தொடர்ந்து பெண்கள் தொடர்பு கொண்டு, டொனேஷன் கேட்டுத் தொல்லை செய்வர். யாராவது, இரக்கப் பட்டு, பணம் கொடுத்தால் அபகரித்து விடுவர். அத்போன்ற , அனாதை இல்லம், முதியோர் இல்லம், இருக்காது. ஒரே இல்லத்தை ஐத்துக் கொண்டு, பல பெயர் / போர்டுகளை வைத்தும் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். பொதுவாக உதவி செய்கிறவர்கள், பென்சனர், முதலியோர்களது செல்போன் நம்பர்களை வைத்துக் கொண்டு [மற்ற நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொண்டு] இவ்வாறு ஏமாற்றுகின்றனர். அவகையில், பெரம்பூரில், அன்னை தெரசா முதியோர் இல்லம் / ஓல்ட் ஏஜ் ஹோம் என்ற பெயரில், கால் சென்டர்களை வைத்து, மோசடி செய்து வருகின்றனர். புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன.

அனாதை இல்லம், முதியோர் இல்லம், வாழ்வற்ற பெண்களுக்கு பாதுகாப்பு இல்லம் நடக்கும்-நடத்தப் படும் விதம்: கிறிஸ்துவ நிறுவனங்கள் அனாதை இல்லம், முதியோர் இல்லம், வாழ்வற்ற பெண்களுக்கு பாதுகாப்பு இல்லம் என்றெல்லாம் நடத்தி மோசடி செய்து சிக்கிக் கொண்டுள்ள செய்திகள் பல வந்துள்ளன. இந்நிலையில் கால் சென்டர் நடத்தி இதே முறையில் அப்பாவி மக்களை ஏமாற்றும் கூட்டங்களை பற்றிய செய்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன. சில இடங்களில், முதியோர் இல்லங்கள் நல்ல முறையில் சகல வசதிகளுடன் பாதுகாப்பு கொண்ட முறையில் இயங்கி வருகின்றன. பெரும்பாலும், இவர்கள் ஒன்று தாமே முன்வந்து அங்கு சேர்ந்து விடுகின்றனர் அல்லது மகன் – மகள் வெளிநாடுகளில் வாழும் அல்லது நிரந்தரமாகத் தங்கி விடும் நிலையில் இத்தகைய இல்லங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் சிறிய அளவில் நடத்தப்படுகின்ற முதியோர் இல்லங்களில் தான் நிறைய பிரச்சினைகள் உண்டாகின்றன.

சிறிய அளவில் நடக்கும்முதியோர் இல்லங்கள்: அதாவது அவர்கள் சேவையை முன்னிலைப் படுத்திக் கொண்டு அத்தகைய இல்லங்கள் ஆரம்பித்தாலும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் தான் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால் தான் கருணை இல்லம் என்ற பெயரில் அவர்கள் நடத்தி வரும் இடங்களில் சென்று பார்த்தாரல், ஒரு பெரிய ஹால், அதில் ஒரு 10-20 கட்டிலில் போடப்பட்டு, வயதானவர்கள் எல்லாம் படுக்க வைக்கப்பட்டு இருப்பார்கள். சாப்பாடு கூட, ஒரு எளிய முறையில் தான், கொஞ்சமாக கொடுப்பார்கள். கழிவறை போன்ற வசதிகளெல்லாம் கூட குறைவாகத் தான் இருக்கும். இந்த 10-20 அல்லது 50-100 முதியவர்களுக்கு ஒன்று முறையே  ஐந்து-பத்து அறைகள் கூட இருக்காது. இதனால் அவர்கள் அங்கேயே, எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, பிறகு சாப்பிட்டு,, தங்க வேண்டிய நெருக்கடி உள்ளது. மேலும் பல நேரங்களில் சமைப்பது, அறைகளை சுத்தம் செய்வது, ஏன் இந்த கழிப்பிடங்களை கூட சுத்தம் செய்யும் பணிகளில் இந்த முதியவர்கள் பணிக்கப்படுகிறார்கள்.

போலி இல்லங்கள் உருவாகும் விதம்: பணம் தான் பிரதானம் எனும் பொழுது, பல நேரங்களில் அவர்கள் சட்டப்படி பதிவு கூட செய்யாமல் இல்லங்களை நடத்தி வருகிறார்கள். சில பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கோணத்தில், இருக்கும் இடத்தையே இரண்டு மூன்று என்று பிரித்துக் காட்டி, வெவ்வேறு பெயர்களில் நடத்துவதாக பிரசாரம் செய்து இவர்கள் பண வசூல் நிலையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய-மாநில அரசு மானியங்கள் எல்லாம் கிடைக்கின்றன, வங்கிகளில் சில நிதி கிடைக்கின்றது போன்ற சலுகைகளை குறிவைத்து சம்பாதிக்க, இவர்கள் இத்தகைய வியாபாரத்தை செய்து வருகின்றனர். அயல்நாட்டு நிதியும் கிடைக்கும் பொழுது, மேன்மேலும் விசித்திரமான, குரூர கொடூரங்கள், குற்றங்களும் நடக்கின்றன. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக, அவை அமுக்கப்படுகின்றன, மறைக்கப் படுகின்றன.

கால்சென்டர் மூலம் முதியோர் இல்ல மோசடிகள்: மேன்மேலும் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற முறையில் தான் கால் சென்டர் வைத்துக் கொண்டு செய்யும் மோசடியும் இதில் சேர்ந்து உள்ளது. இருக்கின்ற ஆதரவு இல்லங்களில் நன்கொடை கொடுப்பவர்களின் விலாசம் செல்போன் நம்பரை எடுத்துக் கொண்டு, கால் சென்டர்கள் அமைத்து, அவற்ரிலிருந்து, அவர்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு நன்கொடை கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களும் ஒரு முறை செய்வது என்பது சாதாரண நிலையாக தான் இருக்கின்றது. ஆனால், மேன்மேலும் அவர்கள் தொந்தரவு செய்யப்படும்போது, அவர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அந்நிலையில் தான், அவர்கள் பணத்தை கொடுத்து, பிறகு நேரில் சென்று பார்க்கலாம், என்று சென்று பார்த்தால் அத்தகைய நிறுவனமே இல்லாதது கண்டு திகைக்கின்றனர், அப்பொழுது போலீஸிடம் புகார் கொடுக்கின்றனர். பிறகு விசாரணையில் உண்மை வெளிவருகிறது.

2024ல் பெரம்பூரில் தெரசா பெயரில் போலி இல்லம்: ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேரிடம் பேச வேண்டும் என டார்கெட் கொடுத்து அந்த பெண்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். மாதம் ரூ.8,000 முதல் 15000 வரை சம்பளம் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் அவ்வாறு அந்த பெண்கள் பேசி அதன் மூலம் பணம் கிடைத்து விட்டால், அதற்கும் கூடுதல் கமிஷன் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு டார்கெட் அமைத்து பொதுமக்களை இவர்கள் ஏமாற்றி வருகின்றனர் அவ்வாறு வாங்கப்படும் பணம் உண்மையிலேயே முதியோர் இல்லங்கள் கருணை இல்லங்களுக்கு செலவிடப்படுகிறது என்று பார்த்தால், கண்டிப்பாக கிடையாது. குறிப்பிட்ட அட்ரெஸ் வைத்திருக்கும் நபர்கள் சொகுசு பங்களா, கார், வெளிநாட்டு சுற்றுலா என்று ராஜபோகம் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இது அறியாத அப்பாவி பொதுமக்கள் ஏழைகளுக்காக பணம் கேட்கிறார்கள் என்று நினைத்து தங்களால் முடிந்த உதவிதைகளை செய்கின்றனர். பணக்காரர்களிடம் பணத்தைப் பெற்று அங்கு இருப்பவர்கள் அவர்களுக்காக வசூல் செய்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பெரம்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தை போலீசார் ஆய்வு செய்தபோது கார்ப்பரேட் கம்பெனி போல அந்த நிறுவனம் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. பிறகு ஏமாந்தவர் கொடுத்த புகாரில் அங்கு சென்று சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அங்கு :மதர் தெரசா ஓல்ட் ஏஜ் ஹோம்” என்று ஒருவர் நடத்துவதாக தெரிந்தது. அதன் தலைவர் தலைமறைவாகி விட்டதால்,போலீசார் தேடி வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

26-01-2024


[1]  மாலைமலர், போலி கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்மோசடி மன்னன் உள்பட 12 பேர் கைது, By மாலை மலர், 30 செப்டம்பர் 2020 7:57 AM (Updated: 30 செப்டம்பர்).

[2] https://www.maalaimalar.com/news/district/2020/09/30075722/1931037/Fake-CallCentre-conducting-Case-12-arrested-in-Chennai.vpf?infinitescroll=1

ஒண்ணுக்கு போதலும், உண்ணாவிரதம் இருத்தலும் – கருணாநிதியை மிஞ்சிய அஜித் பவார்!

ஏப்ரல் 16, 2013

ஒண்ணுக்கு போதலும், உண்ணாவிரதம் இருத்தலும் – கருணாநிதியை மிஞ்சிய அஜித் பவார்!

Ajit muthralayam - Ajit Urinal in Jalana

மூத்திரம் பெய்தா அணைகளை நிரப்ப முடியும்[1] – இப்படி நக்கலாக, கேவலமாகப் பேசினார் மராத்திய துணை முதலமைச்சர், அஜித் பவார் என்கின்ற, சரத் பவாரின் மச்சான்!

அஜித் மூத்ராலயம்[2] – அவருக்கு சரியான பாடம் புகட்ட, மூத்திரம் பெய்வேன் என்ற அஜித் பவாரின் பெயரை சிறுநீர் கழிக்கும் இடத்திற்குப் பெயராக வைத்து விட்டனர் மராத்தியர்!

அதற்குள், “குடிக்க நீரில்லை, ஆனால் ஐபிஎல்[3], சினிமா[4], தொழிற்சாலைகளுக்கு நீர் மலிவாக விற்கப்படுகிறது மூத்திர அமைச்சர் மாநிலத்தில் நடக்கும் தண்ணீர் ஊழல்[5], தமது சக்கரை ஆலைகளுக்கு அணையில் உள்ள நீரை திருப்பி உபயோகிக்கின்றனர்[6], என்றெல்லாம் வெளிவந்தவுடன், இப்படி பேச்சில் மட்டுமலாது, நடத்தையிலும் திராவிட முறைகளைப் பின்பற்ற அஜித் தொடங்கிவிட்டார்.

Kanimozhi, Supriya, family

கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருக்கமான தொடர்பு,  நட்பு முதலியன[7]: தில்லியில் இந்த இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது, ஓட்டல்கள், கடைகளுக்குச் சென்று வருவது பார்த்த்து மக்கள் வியந்துள்ளனர். இதென்ன, ஒரு திராவிடத் தலைவியின் மகளும், அவருக்கு எதிரான சித்தாந்த்தைக் கடைபிடிப்பவரின் மகளும் இப்படி அந்நியோன்னமாக இருக்கிறார்களே என்று மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்துள்ளனர். கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருகமான நட்பை அறிந்தவர்கள், ஏற்கெனெவே, கலைஞர் டிவிக்கும், டி.பி.ரியாலிட்டிற்கும் உள்ள தொடர்பை அறிந்துள்ளனர்[8]. சுப்ரியாவின் கணவர் மற்றும் தந்தை முதலியோர் மீது, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என்று பல குற்றச்சாட்டுகள் உள்ளன[9]. இந்நிலையில் தான், இவர்களது நட்பு பெருகியுள்ளது. பெண்கள் மசோதா அவர்களை நெருக்கத்தில் கொண்டுவரவில்லை, இத்தகைய, வியாபாரம் தான், அவர்களை கொண்டு வந்துள்ளது என்பது மேல்தட்டு மக்களுக்குத் தெரிந்தேயுள்ளது. கனிமொழியும், சுப்ரியா சுலேவும் மிகவும் நெருக்கமாமன தோழிகள் மட்டுமல்ல, அவர்களது தந்தைகளும் பலமுறை சந்தித்துக் கொண்டுள்ளனர்.

Kanimozhi, Supriya, Sonia

கனிமொழி, சுப்ரியா சுலே மற்றும் ராஹுல் காந்தி பார்ட்டியில் கலந்து கொள்வது: ஆகஸ்ட் 21, 2007ல் ஏற்பாடு செய்த ஒரு தனியார் பார்ட்டியில் ராஹுல் காந்தி, சுப்ரொயா சுலே, கனிமொழி முதலியோர் கலந்துகொண்டதும் சிலருக்குத் தான் தெரியும்[10]. அதற்குப் பிறகு எத்தனை தடவை எங்கெல்லாம் சந்தித்துக் கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள் என்பதெல்லாம், அவர்களே சொன்னால் தான் தெரியும். இல்லையென்றால், பிரியங்கா அவ்வாறு, ரகசியமாக வந்து, வேலூர் சிறையில் முருகனின் மனைவி நளினியை சந்தித்து பேரம் பேசியிருக்க மாட்டார். ஆக இந்த முன்று நபர்களும், சும்மா வேடிக்கைக்காக, பார்ட்டிக்கு வரமாட்டார்கள். சென்னைக்கு நூறு தடவை ராஹுல் சென்றாலும், கருணாநிதியைப் பார்ப்பது கிடையாது, பேசுவது கிடையாது. அப்படியிருக்கும் போது, அவருடைய பெண் கனிமொழியுடன் பார்ட்டியில் எப்படி சேர்ந்திருப்பர், பேசுவர். ஆகவே இத்தகைய தொடர்புகளை, நட்புகளை, உறவுகளை, மக்களிடமிருந்து அவர்கள் மறைக்கலாம். ஆனால், அவர்கள் செய்யும் வியாபாரம் காட்டிக் கொடுத்து விடுகிறது.

Kanimozhi, Supriya, Rajathi, family

மாமா – மச்சான்களின் உறவுகள்: கருணாநிதியின் மச்சான் முரசொலி மாறன். சரத் பவாரின் மச்சான் அஜித் பவார். இப்படி இரு குடும்பங்களும் மாமா-மச்சான்களின் உறவை வளர்த்து வருகின்றன. குடும்ப அரசியல் மட்டுமல்லாது, கூட்டுக் குடும்ப அரசியலையும் கூட்டணி சிட்த்ட்தாந்தத்தில் அடங்கி வேலை செய்து கொண்டிருக்கிறது. ஊழல் என்று வரும் போது, கூட்டு ஊழல், கூட்டுக் குடும்பக் கொள்ளை, கூட்டு வாரிசு கொள்ளை, கூட்டணிக் கொள்ளை,…………….என்று விரிந்து, பெருகி புதிய விளக்கங்களைக் கொடுக்கிறது.

Kanimozhi, Supriya nexus

ஒண்ணுக்கு போதலும்,  உண்ணாவிரதம் இருத்தலும்: “அணைகளில் தண்ணீர் இல்லையெனில், சிறுநீர் கழித்தா பெருக்க முடியும்’ என, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், தன் பேச்சுக்கு பரிகாரம் தேடும் வகையில், நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்[11] என்று ஊடகங்கள் கூறுகின்றன. இப்பொழுதெல்லாம், இந்த ஒருநாள் உண்ணாவிரதம் நாடகமாடும் ஆரசியல்வாதிகளுக்கு, பகட்டு வேஷதாரி சித்தாந்திகளுக்கு மற்ற போலிகளுக்கு வசதியாகி விட்டது. யார்-யாரெல்லாம் உண்ணாவிரதம் இருப்பது என்ற விவஸ்தையும் இல்லாமல் போய் விட்டது[12]. மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரசை சேர்ந்தவருமான அஜித் பவார், சமீபத்தில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், “மாநில அணைகளில் தண்ணீர் இல்லையென்றால், சிறுநீர் கழித்தா பெருக்க முடியும்” என, பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. அஜித் பவாரின் பேச்சுக்காக, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரே மன்னிப்பு கேட்டார். பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, அஜித் பவாரும் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இருந்தாலும், சிவசேனா, பா.ஜ., மற்றும் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா போன்ற கட்சிகள், அஜித் பவார் பதவி விலக வேண்டும் என, கோரி வருகின்றன. இந்த நிலையில், தன் சர்ச்சை பேச்சுக்கு பரிகாரம் தேடும் வகையில், சதாரா மாவட்டத்தில் உள்ள கராத் என்ற இடத்தில், அஜித் பவார் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.

Ajit Pawar urination comment, 2013-Dinamalar

செய்த குற்றத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையிலேயே,  இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டேன்;  இது ஒன்றும் நாடகமல்ல: மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் முதல்வர், யஷ்வந்த்ராவ் சவானின் நினைவிடம் அருகே, இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. அஜித் பவாரின் இந்த முயற்சியை பாராட்டிய தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக், “அஜித் பவார் பெரிய மனதுடன் தன் தவறை ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் பிரச்னையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும்”, என்றார்[13]. மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் உண்ணாவிரதம் ஒரு நாடகம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. “செய்த குற்றத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையிலேயே, இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டேன்; இது ஒன்றும் நாடகமல்ல,” என, உண்ணாவிரதம் இருந்த அஜித் கூறினார். இந்நிலையில் மகாராஷ்டிர பேரவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் கட்சே பேசியதாவது: அஜீத் பவார் உண்ணாவிரதம் ஒரு நாடகமாகும். அவரது கருத்துக்கு பரிகாரம் அவர் பதவி விலகுவது தான். முதல்வர் பிரிதிவிராஜ் சவாண் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிரீஷ் பாபட், சுதிர் முங்கன்திவார், உள்ளிட்டோர் அஜீத் பவார் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு கேள்வி நேரத்துக்கு பின் விவாதம் நடத்தலாம் என அவர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தன[14].

வேதபிரகாஷ்

16-04-2013

Kanimozhi, Supriya, DMK nexus


[3]  With just two days to go for its sixth season, the Indian Premier League (IPL) is already surrounded by controversies. Maharashtra Opposition leader Vinod Tawde has objected to the use of water in stadiums in the drought-hit state. Tawde argues that pitch maintenance in these stadiums will consume 60,000 litres of water every day. “As per my knowledge, 60,000 litres of water would be used to maintain a cricket ground every day. Thus, during the entire season of IPL matches spread over 36 days (from April 9 to May 15 in Maharashtra), 21.6 lakh litre water will be used for a single ground,” Tawde said in a letter to IPL chief Rajeev Shukla. While acknowledging that the IPL matches would help the state government earn some revenue, he asked whether it would be appropriate to waste so much water on organising IPL matches when several parts of Maharashtra were facing drought. “Taking into consideration the plight of the drought-affected people, I hope that you will take an appropriate decision on holding the IPL tournament(in the state),” the BJP leader said.

http://ibnlive.in.com/news/maharashtra-bjp-leader-objects-to-use-of-water-in-stadiums-for-ipl/382370-37-64.html

[6] According to Mr Khadse, during the Nagpur session last year, the minister had stated that a special SIT would be instituted to investigate the inordinate delay in the completion of a slew of irrigation projects, resulting in heavy losses to the state exchequer.

http://www.ndtv.com/article/india/maharashtra-irrigation-scam-privilege-notice-against-minister-342031

[8] Supriya is now the Lok Sabha MP from Baramati. Supriya and Kanimozhi’s long chats — in their leisure time, or even in Parliament’s Central Hall — have now acquired an ominous  subtext, with their friendship now being seen in the context of the spectrum scam: specifically, the Baramati-based DB Realty’s money channel leading to Kalaignar TV. http://expressbuzz.com/magazine/friends-in-need/253041.html

[12] திராவிடப் பாரம்பரியத்தில் திகவினர், போலி நாத்திகர், மற்ற இந்து விரோதிகள், உண்ணும் விரதத்தைக் கடைப் பிடித்து வருகிறார்கள். அதுவும், சிக்கன், மட்டன், பீப் என்று உண்டு, மறைவாக சரக்கையும் அடித்து, பிறகு வாய்க்கு வந்தபடி பேசிக் கலைவதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

அஜித் மூத்ராலயம் – மூத்திரம் பெய்வேன் என்ற அஜித் பவாரின் பெயரை சிறுநீர் கழிக்கும் இடத்திற்குப் பெயராக வைத்து விட்டனர் மராத்தியர்!

ஏப்ரல் 10, 2013

அஜித் மூத்ராலயம் – மூத்திரம் பெய்வேன் என்ற அஜித் பவாரின் பெயரை சிறுநீர் கழிக்கும் இடத்திற்குப் பெயராக வைத்து விட்டனர் மராத்தியர்!

Ajit muthralayam - Ajit Urinal in Jalana

நீர் இல்லாவிட்டால் என்ன செய்வது, அணைகளில் நான் மூத்திரம் பெய்தா நிரப்ப முடியும் என்று நக்கலடித்த அஜித் பவாரின் பெயரையே மூத்திர-கக்கூஸுக்கு[1] பொறுத்தமாக வைத்து விட்டனர் மராத்தியர்! ஜல்னா என்ற இடத்தில் உள்ள மூத்திர-கக்கூஸின் சுவர்களில் அத்தகைய பெயர் கொண்ட சுவரொட்டியை ஒட்டி வைத்துள்ளனர்[2]. சட்ட சபையிலும் இதைப் பற்றி இரண்டாவது நாளாக கூச்சல்-வாதங்கள் ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது[3].

Indian urinal

அஜித் மூத்ராலயம்அஜித் ஒண்ணுக்கு போகுமிடம்: சிறுநீர் கழிக்குமிடங்களில் ஆண்-பெண் என்று எடுத்துக் காட்டும் வகையில், ஆண்-பெண்  உருவங்கள், படங்கள் வைப்பதுண்டு. தமிழகத்தில் வழக்கம்போல / பழக்கம்போல நடிகை-நடிகர் படங்களை வைக்கிறார்கள். ஆனால், வரட்சியில் வாடுகின்ற மரத்வாடாவிலுள்ள ஜல்னா என்ற ஊரிலுள்ள சிறுநீர் கழிக்கும் இடத்திற்கு  அஜித் மூத்ராலயம்  (अजीत मूत्रालय / पेशाब घर) என்று பெயர் கொண்ட பட-சுவரொட்டியை ஒட்டி வைத்துள்ளனர்[4]. வழக்கம் போல, காங்கிரஸ்காரர்கள் இவற்றையெல்லாம் துரடைத்துக் கொண்டு போய்விடுவார்கள், கவலைப்படமாட்டார்கள்.

ajit_pawar_waterloo-courtesy-IBN-CNN

अजीत पवार के नाम से पेशाब घरमुंबई, मंगलवार, 9 अप्रैल 2013( 16:54 IST )

 मुंबई। अपने विवादित बयानों के लिए भले ही महाराष्ट्र के उप मुख्यमंत्री अजीत पवार ने भले ही माफी मांग ली हो, लेकिन लोगों ने उन्हें माफ नहीं किया है।

सूखा प्रभावित आम आदमी पार्टी के कार्यकताओं ने एक मूत्रालय पर अजीत पवार का पोस्टर लगा दिया, जिस पर लिखा है अजीत मूत्रालय[5]

अरविंद केजरीवाल की पार्टी पवार के उस बयान का विरोध कर रही है जिसमें उन्होंने कहा था कि अगर बांधों में पानी नहीं है तो क्या उन्हें पेशाब से भर दें। इस बीच पवार ने सोमवार को पानी की कमी और बिजली कटौती के बारे में अपनी विवादित टिप्पणी के लिए राज्य विधानसभा में माफी मांगी। (एजेंसियां)

தமிழகத்து திராவிட வீரர்களுக்கு இத்துணிவு வருமா? எதற்கு-எதற்கோ சுவரொட்டிகள், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் என்று மடலேறும் அடலேறுகள் புறப்படுகிறார்கள். தமது இனமானத் தலைவர் ஆணையிட்டதும் களத்திற்கு வந்துவிடுகிறார்கள். ஆனால், இம்மாதிரி செய்வதில்லையே?

வேதபிரகாஷ்

10-04-2013


மூத்திரம் பெய்தா அணைகளை நிரப்ப முடியும் – இப்படி நக்கலாக, கேவலமாகப் பேசிய துணை முதலமைச்சர்!

ஏப்ரல் 9, 2013

மூத்திரம் பெய்தா அணைகளை நிரப்ப முடியும் – இப்படி நக்கலாக, கேவலமாகப் பேசிய துணை முதலமைச்சர்!

Ajit kumar urination comment, 2013-Tamil

திராவிடப் பேச்சாளர்களை மிஞ்சும் இந்தி பேச்சாளர்கள்: முன்பெல்லாம் (1950-60களில்) திராவிடத்துவப் பேச்சாளிகள் தாம் அசிங்கமாக, ஆபாசமாக, கேவலமாகப் பேசுவார்கள் என்பது, காதால் கேட்ட உண்மைகள்[1]. நடுஇரவு ஆக, ஆக, அவர்களின் பாஷை மாறும், குரல் மாறும், பொருள் மாறும்,……… திகவினரோ அதனையும் மிஞ்சுபவர்கள் (இப்பொழுது கொஞ்சம் குறைந்துள்ளது)[2] – அவர்கள் பேசும்போது, பெண்கள் காதுகளைப் பொத்திக் கொண்டு, வேக-வேகமாக சென்றுவிடுவர்.போக மற்றவர், “சாவுகிராக்கி…………என்னா பேசுது பாரு…………..நாசமா ……”, என்று தனக்கேயுரிய மெட்ராஸ் பாஷையில் சாபமிட்டுக் கொண்டு போவர்[3]. சமீபகாலத்தில், வடவிந்திய அரசியல்வாதிகளுக்கும் அத்தகைய நோய் பீடித்துள்ளது போல தோன்றுகிறது.

Ajit kumar urination comment, 2013-TOI

வழக்கம் போல, தமிழ் ஊடகங்கள் அடக்கி வாசிக்கும் மர்மம் என்னவென்று தெரியவில்லை. ஆதலால், அஜித் பவார் இந்தியில் சொன்னதை குறிப்பிட்டு, என்ன பேசியுள்ளார் என்று எடுத்துக் காட்டப்படுகிறது:

बांधों में पानी नहीं है तो क्या पेशाब करें: पवारअब यह साफ हो गया है कि हाल के दिनों में नेताओं द्वारा दिए जाने वाले बेशर्म बयानों का पानी सिर के ऊपर से गुजर रहा है।महाराष्ट्र के उप मुख्यमंत्री अजीत पवार ने रविवार को मराठवाड़ा में सूखे की मार झेल रहे किसानों की बेबसी का पहले तो मजाक उड़ाया और जब बवाल मचा तो माफी मांग ली।वह शनिवार की रात को पुणे जिले की इंदापुर तहसील के एक गांव में सभा को संबोधित कर रहे थे।
बेशर्म बयान: मुंबई के आजाद मैदान में सूखा प्रभावित एक किसान की भूख हड़ताल पर तंज कसते हुए एनसीपी के राष्ट्रीय नेता शरद पवार के भतीजे अजीत पवार ने बेशर्मी की सारी हदें लांघते हुए कहा, ‘वह 55 दिनों से उपवास पर है।अब अगर बांध में पानी नहीं, तो कैसे छोड़ा जा सकता है? क्या हम वहां जाकर पेशाब करें? अब अगर पीने को ही पानी नहीं है तो पेशाब भी कैसे होगी?’जनसभा में महाराष्ट्र के मुख्यमंत्री की हंसी-ठिठोली यहीं नहीं रुकी। उन्होंने गांव में बिजली न होने पर भी तंज कसा और कहा[4], ‘मैं देख रहा हूं कि जब से यहां रात को बिजली नहीं रहती है, ज्यादा बच्चे पैदा होने लगे हैं।

लोगों के पास कोई और काम नहीं बचा है।’ पवार की इन बातों ने महाराष्ट्र की राजनीति को गरमा दिया है।

निंदा: शिवसेना प्रमुख उद्धव ठाकरे और भाजपा नेता विनोद तावड़े ने अजीत पवार की बातों की निंदा करते हुए इन्हें शर्मनाक बताया है। ठाकरे ने कहा कि शरद पवार खुद को किसान का बेटा कहते हैं और उनका भतीजा किसानों की हंसी उड़ा रहा है।

उल्लेखनीय है कि सूखाग्रस्त सोलापुर जिले का एक किसान भैया देशमुख आजाद मैदान में इन दिनों उपवास पर बैठा है।

पवार के बयान के बाद देशमुख ने कहा कि यह बात उनके पद के अनुरूप नहीं है। महाराष्ट्र इन दिनों 1972 के बाद का सबसे भीषण सूखा झेल रहा है।

Ajit kumar urination comment, 2013

अब अगर बांध में पानी नहीं, तो कैसे छोड़ा जा सकता है? क्या हम वहां जाकर पेशाब करें? अब अगर पीने को ही पानी नहीं है तो पेशाब भी कैसे होगी?[5]: இப்பொழுது அணைகளில் நீர் இல்லை என்றால், நான் என்ன செய்யமுடியும்? நான் என்ன அங்குச் சென்று மூத்திரம் பெய்து நிரப்பவா முடியும்? இப்பொழுது குடிப்பதற்கே தண்ணீர் இல்லை எனும்போது, மூத்திரம் எப்படி வரும்?”, என்று அவர் பேசியிருக்கிறார். மகாராஷ்டிர மாநில அணைகளில் நீர் இல்லை. அங்கே கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மஹாராஷ்டிராவில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி சோலாப்பூரை சேர்ந்த விவசாயி ஒருவர் கடந்த 55 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்[6].  இரண்டாவது மாதமாகத் தொடர்ந்துள்ள அவரது போராட்டம் குறித்தும், அணைகளில் நீர் இல்லாத நிலை குறித்தும் கருத்து கூறிய மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார், “அணைகளில் நீர் இல்லை.  தண்ணீர் இல்லாதபோது எங்கிருந்து திறந்து விட முடியும்? நாம் எங்கிருந்து தண்ணீர் பெற முடியும்? அணையில் நாம் என்ன சிறுநீர் கழிக்கவா முடியும்? குடிக்க போதுமான தண்ணீர் இல்லாமல் என்னால் எளிதாக சிறுநீர்கூடக் கழிக்க முடியவில்லை”, என்று கருத்து கூறியிருந்தார்[7].

Ajit Pawar urination comment, 2013-cartoon

ராத்திரி மின்சாரம் இல்லை, அதனால் குழந்தைகள் அதிகமாக பிறக்கின்றன: துணை முதலமைச்சர் இதற்கும்  மேலாக பேசியுள்ளார். जनसभा में महाराष्ट्र के मुख्यमंत्री की हंसी-ठिठोली यहीं नहीं रुकी। उन्होंने गांव में बिजली न होने पर भी तंज कसा और कहा[8], ‘मैं देख रहा हूं कि जब से यहां रात को बिजली नहीं रहती है, ज्यादा बच्चे पैदा होने लगे हैं। लोगों के पास कोई और काम नहीं बचा है।’ அதாவது “நான் இப்பொழுது என்ன பார்க்கிறேன் என்றால், கிராமங்களில் மின்சாரம் கூட இல்லை, ஆனால் என்ன நடக்கிறது? அதிகமாக குழந்தைகள் பிறந்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு (கைகளில்) வேறு எந்த வேலையும் இல்லை, குழந்தைகள் தாம் உள்ளன”. இப்படியெல்லாம் மந்திரிகள் பேசுகிறார்கள் என்றால், அவர்களது மனப்பாங்கு எப்படியுள்ளது என்பதனை அரிந்து கொள்ளலாம்.

Ajit Pawar urination comment, 2013-protest

வழக்கம் போல எதிர்கட்சிகளின் எதிர்ப்பு: அஜித் பவாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை நேற்று காலையில் கூடியதும் பா.ஜ., சிவசேனா உறுப்பினர்கள் அஜித் பவாரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். கோஷம் எழுப்பியபடி அவையின் மையப்பகுதிக்கு சென்றனர். இதைத் தொடர்ந்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது.  தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், அக்கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவாரின் உறவினர். அஜீத் பவாரின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க, கடும் கண்டனம் தெரிவித்தது. “அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். நாகரிகம் இல்லாமல் ஒரு முக்கியப் பொறுப்பில் உள்ளவர் இவ்வாறு கருத்துக்கள் கூறுவது தவறு. இது மகாராஷ்டிர அரசியலில் மிகவும் கீழ்த் தரமானதாக உள்ளது” என்று அறிக்கையில் கூறியுள்ளது. வசேனா கட்சியும், அஜித் பவார் பதவி விலக வேண்டும். அவருக்கு தண்டனை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் எழுப்புவோம் எனக் கூறியது.

Ajit Pawar urination comment, 2013-111

அஜித் பவார் மன்னிப்பு கேட்டார்: விஷயம் பெரிதாகிரது என்றால், அரசியல்வாதிகள் என்ன சும்மாவா இருப்பார்கள்? கால்களில் விழவும் தயாராக இருப்பார்களே? போதா குறைக்கு, தனக்கு எங்கே வம்பு வந்து விடப்போகிறாதே என்று, மாமா சரத் பவார் நன்றாக டோஷ் விட்டுள்ளார். இந்நிலையில், தனது கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அஜீத் பவார் கூறினார்[9]. ஏற்கெனெவே தண்ணீர் தட்டுப்பாடு உள்ளபோது, சரத் பவார் கிரிக்கெட் தமாஷாவிற்கு மஹாராஷ்டிர அரசு மலிவு விலையில் தண்ணீர் விநியோகித்துள்ளதையும் மக்கள் எதிர்த்துள்ளனர். ஒரு லிட்டர் ரூ.10/- என்று விற்கும் போது, வ்நெறும் ஆறு பைசா என்ற வீதத்தில் பவாருக்கு விற்றுள்ளனர்.

வேதபிரகாஷ்

09-04-2013

Ajit Pawar urination comment, 2013-11


[1] இதில் பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி என்று யாரும் விதிவிலக்கல்ல. நாத்திரியில், இவர்கள் பேச்சைக் கேட்டுள்ளவர்களுக்கு உண்மை தெரியும்.

[2] அப்பேச்சுகளை எழுதமுடியாது. இருந்தாலும் தமிழில் பேசி, பற்றவர்களை ஓடவைத்திருக்கிறார்கள், குறிப்பாக பெண்களின் வசைவுகளுக்கு, சாபங்களுக்குட் பட்டிருக்கிறார்கள்.

[3] இதில் பெரும்பாலும் அவர்களது உறவினர்களே அடங்குவர், குறிப்பாக மனைவி, சகோதரி என்று…………….மற்ரவர்களைப் பற்றிக் கேட்க வேண்டாம். சாபமே இட்டுள்ளனர். ஆனால், துடைத்து விட்டுக் கொண்டனர்.