Posts Tagged ‘ஆர்.எஸ்.நாராயணசாமி’

தருமபுரி ஆதீனம் (1926-2019) இருந்தது, மறைந்தது, சாதித்தது: நாத்திகர் ஏமாற்றியது, சைவர் வழக்குகள் போட்டது, கிருத்துவர்கள் சதாய்த்தது!

திசெம்பர் 7, 2019

தருமபுரி ஆதீனம் (1926-2019) இருந்தது, மறைந்தது, சாதித்தது: நாத்திகர் ஏமாற்றியது, சைவர் வழக்குகள் போட்டது, கிருத்துவர்கள் சதாய்த்தது!

Dharmapura Adheenam, Kundarkkudi

கிருத்துவர்களின் சதி, மடத்திலேயே கூட்டம் போட்டது: குன்றக்குடி அடிகள் தம்மை திராவிடத்துவ சாமியார் போலக் காட்டிக் கொள்வார். ஈவேராவுக்கு நண்பன், திராவிட கட்சிகளுக்கு ஆதரவாளன் என்ற விதத்தில் பேசுகின்றவர். அதனால், தெய்வநாயகம், அத்தகைய தாக்கத்தைப் பயன்படுத்தி, தருமபுரி ஆதீன வளாகத்திலேயே, தமிழ் பெயரால் கூட்டம் நடத்த ஒப்புக் கொண்டார் போலும். ஆனால், கிருத்துவர்கள் வேவு பார்த்து, தருமபுர ஆதீனத்தைத் தாக்கியது, தெய்வநாயகத்தின் பொய்மையில் வெளிப்பட்டது, ஏனெனில், அவர்களது வீடியோக்களில் அத்தகைய திட்டத்தைக் காட்டிக் கொண்டனர். சர்ச்சில் இந்துக்கள் இத்தகைய கருத்தரங்கத்தை நடத்த அனுமதிப்பார்களா என்று நோக்க வேண்டும். ஆனால் நடந்திருக்கிறது. புகைப்படங்களோ மற்றவையோ இல்லை. அதாவது, வழக்கம் போல, இந்துக்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏதோ ஒரு கிருத்துவக் கிருக்கன் உளறிவிட்டு சென்றிருக்கிறான் என்று ஆதீனம் விட்டுவிட்டார்கள் போலும். ஆனால், கிருத்துவர்கள் பெரிதாக்கி லாபம் பார்க்க முயற்சித்தனர். அந்நிகழ்ச்சி ஏற்பாட்டில் இதற்கு இந்து புல்லுருவிகளே உதவி செய்தன, சித்தாந்தம் பெயரில் துரோகம் செய்தன, அருணை வடிவேல் முதலியார் முட்டி மோதினார். இதில் கிருத்துவ-இந்து தொடர்புகளைக் காணலாம், இவர்கள் தான் தொடர்ந்து, இன்றும் “திருவள்ளுவர்” போர்வையில், கிருத்துவர்களுக்கு உதவி வருகின்றனர்.

கிருத்துவக் கூட்டம், உள்ளே நுழைந்தது, கருத்தரங்கத்தில் பங்கு கொண்டது!

கிருத்துவக் கூட்டம், உள்ளே நுழைந்தது, கருத்தரங்கத்தில் பங்கு கொண்டது!

கே.வி.ராமகிருஷ்ண ராவ் - இப்புத்தகம் வெளிவர, கையெத்துப் பிரதியை வைத்துக் கொண்டு அலைந்தவர்.

கே.வி.ராமகிருஷ்ண ராவ் – இப்புத்தகம் [கீழ்காணும் மற்ப்பு நூல்] வெளிவர, கையெத்துப் பிரதியை வைத்துக் கொண்டு அலைந்தவர்.

தருமபுர ஆதினத்தை ஏமாற்றியது (1985-86): தருமபுர ஆதீனத்தில் நடந்த கருத்தரங்கத்தில், தெய்வநாயகம் மூக்கறுப்பட நேர்ந்தது. அவரது கருத்துகள் தவறு என்று தமிழ் பண்டிதர்களும், சைவ சித்தாந்த அறிஞர்களும் எடுத்துக் காட்டினர்[1]. ஆனால், “1986 டிசம்பர் 6, 7 தேதிகளில் புனித தோமா வழித் தமிழ்க் கிறிஸ்தவத்தின் கிளைகளே சைவ, வைணவ சமயங்கள் (இன்றைக்கு ‘இந்துமதம் எனப்படுகிறது) என்பது, தருமபுர ஆதீனத்தில் நடந்த ஆய்வரங்கில் நிலை நாட்டப்பட்டது”, என்று இன்றும் தம்பட்டம் அடித்துக் கொள்வது[2] அப்பட்டமான பொய்யாகும். அப்பொழுது அருணை வடிவேலு முதலியார் அங்கிருந்தார். தெய்வநாகத்தின் “தமிழ் மொழி” அறியாமை, சொற்பிரயோகப் பிழைகள், விளக்கக் கோளாறுகள், இலக்கணம் அறியாமை முதலியவற்றை எடுத்துக் காட்டினார். ஆனால், அவரது பேச்சை, அவர்கள் வெளியிட்ட  சிடியில் மறைத்து விட்டனர். பிறகு, மறுப்பு நூலில் விவரங்களைக் கொடுத்துள்ளார். இதையெல்லாம் தெய்வநாயகம் மறைக்கிறார். இப்படி கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பொய் சொல்லி பிழைப்பது மிகக்கேவலமாக இருக்கிறது.

The book published 1991

அக்டோபடர் 24, 1991ல் மறுப்பு நூல் வெளியிடப்பட்டது, தெய்வநாயகத்தின் முகத்திரைக் கிழிந்தது: இது மட்டுமல்லாது, அக்டோபர் 24, 1991 அன்று “விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்” வெளியிடப்பட்டபோது, மீ.ப. சோமசுந்தரம், ஜஸ்டிஸ் ஜே. கிருஷ்ணசாமி ரெட்டியார், சரோஜினி வரதப்பன், சுவாமிநாத தம்பிரான், என். நாகசாமி, வித்வான் அம்பை சங்கரனார், வித்வான் சுந்தர மூர்த்தி, டி.என். ராமச்சந்திரன், வன்னியர் அடிகள் முதலியோர் தெய்வநாயகத்தின் போலி ஆராய்ச்சியை, முழுவதுமாகி வெளிப்படுத்திக் காட்டினர். தெய்வநாயகத்தினால் ஒன்றும் பேச முடியவில்லை. முகத்தில் ஈயாடவில்லை, சிரித்துக் கொண்டிருப்பது போன்று முகபாவத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். நிகழ்சி முடிந்ததும், தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவிட்டார். இவ்விவரங்களையும் இவர் சொல்லிக் கொள்வதில்லை.

டி.என். ராமச்சந்திரன், உண்மையினை மறைத்தது, பின்னுறையினையும் வெளியிடாதது.

டி.என். ராமச்சந்திரன், உண்மையினை மறைத்தது, பின்னுறையினையும் வெளியிடாதது.

இப்புத்தகம் வெளிவந்த பின்னணி: அருணை வடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதுகிறார் என்றாறிந்து, அவரைத் தேடி, காஞ்சிபுரம், தத்துவ மையத்தில் இருக்கும் அவரை, ஆராய்ச்சியாளர் கே. வி. ராமகிருஷ்ண ராவ் 1988ல் சென்று பார்த்தார். தட்டச்சில் ஏறாமல் இருந்ததால், பலதடவை சென்று வந்தார். பிறகு, தட்டச்சு பிரதியைப் பெற்றுக் கொண்டு, பலரிடம் சென்று அதனை பதிக்க முடியுமா என்று கேட்டுப் பார்த்தார். கிருத்துவ மதத்திற்கு மறுப்பு நூல் போன்று நினைத்து தயங்கினர். மடாலயங்களுக்கும் கடித்தங்கள் எழுதினார். இரண்டு மடங்கள் சிவன் பார்த்து கொள்வார் என்ற ரீதியில் பதில் அளித்தன. அந்நிலையிலனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், என்ற அமைப்பிலிருந்து டி.என். ராமச்சந்திரன், இயக்குனர் மூலம் கடிதம் வந்தது. அவர்கள் அதனை வெளியிடுகிறோம் என்றார்கள். இதனால், திரு பாலறாவாயன் வந்து, தட்டச்சுப் இரதியை எடுத்துச் சென்றார்[3]. பிறகு பல உரையாடல்களுக்குப் பிறகு அச்சிடப்பட்டது. டி.என். ராமச்சந்திரன், கே. வி. ராமகிருஷ்ண ராவை, அதன் பின்னணியை, எழுதிதாருங்கள், பின்சேர்க்கையாக போடலாம் என்றார். அவரும் எழுதி கொடுத்தார், ஆனால், என்னவாயிற்று என்று தெரியவில்லை. “ஆர்கனைஸர்” என்ற இதழின் மூலம், அப்புத்தக வெளியீடு பற்றி அறிந்தார். அதற்கான விவரங்களை ஆர்.எஸ்.நாராயணசாமி, கே. வி. ராமகிருஷ்ண ராவிடமிருந்து தான் பெற்றார். ஆனால், அவருக்குத் தெரிவிக்கப் படவில்லை. இந்துக்கள் மற்றும் இந்துத்துவாதிகளின் போக்கு இப்படித்தான் இருந்தது.

Arunai vadivelu book

தமிழகம் உய்க்க வழி: தருமபுர ஆதீனத்திற்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கின்றன. அதில் வரும் பணத்தை வைத்துக்கொண்டு கோவில்கள், அதனைச் சார்ந்த கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் முதலியவற்றை மிக சிறப்பாக நிர்வகித்து, செயல்பட்டாலே, சமுதாயத்திற்கு உண்மையான செய்கின்ற சேவையாக அமைகிறது. ஆனால் திராவிட அரசியல், திராவிட சித்தாந்தம், நாத்திகக் கொள்கைகள், இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு, கடந்த அறுபது-எழுபது வருடங்களாக கோயில்களை கொள்ளை அடிப்பது போன்ற போக்கினால் தான் தமிழகத்தில் இத்தகைய சீரழிந்த நிலை காணப்படுகிறது. கடவுள் மறுப்பு கொள்கை என்பது ஏதோ ஒரு பெரிய பகுத்தறிவு என்பது போல மாயை உருவாக்கி, மடாதிபதிகளை இழிவுபடுத்துவது, சித்தாந்தங்களை குறை கூறுவது, ஏன் பிள்ளையார் சிலைகளை உடைப்பது, ராமர் படங்களை எரிப்பது, போன்ற காரியங்களை, பெரியாரிசம், அண்ணாயிசம், இந்த-இஸ, அந்த-இஸம் என்று சொல்லிக்கொண்டு அடாத செயல்களையும் செய்து வந்தது, செய்து வருவது, இன்றைக்கு ஊடகங்களில் அத்தகைய தாக்குதல்கள் நடத்துவது முதலியன தொடர்ந்து நடந்து கொண்டு வருகின்றன. இவற்றையெல்லாம் நீக்கினால்தான் கோவில்கள் வளரும், சமுதாயம் சிறக்கும், தமிழ்நாடும் உன்னதி அடையும் .

© வேதபிரகாஷ்

06-12-2019

Arunai Palaravayan

[1] அருணை வடிவேலு முதலியார், விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல், தருமபுர ஆதீனம், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம், 1991, பதிப்புரை, v-vii.

[2] மு. தெய்வநாயகம் (ஆசிரியர்), தமிழர் சமயம், 2011 ஆகத்து திங்கள் இதழ், பக்கம் -2.

[3] கே.வி. ராமகிருஷ்ண ராவ் மற்றவர்களுடன் கொண்ட கடித-தொடர்பு, பதில்கள் முதலியவற்றின் ஆதாரமாக எழுதப் பட்டது. 2009ல் கூட தொடர்ச்சியாக திராவிட சான்றோர் பேரவை மநாடு நடத்தப் பட்டது கவனிக்கலாம்.