Posts Tagged ‘இஸ்லாம்’

யாஸ்மினை கொலை செய்த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர்கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி-2?

ஒக்ரோபர் 11, 2016

யாஸ்மினை கொலை செய்த ஹனீபா – பேஸ்புக் விவகாரம் தொடர்கிறது – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி (2)?

%e0%ae%af%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d

தட்டிக் கேட்ட ஹனீபாவின் கன்னத்தில் அறைந்த யாஸ்மின்: சம்பவத்தன்று, பண்ருட்டியைச் சேர்ந்த ஒருவரிடம் பேஸ்புக்கில் சாட்டிங் செய்து கொண்டிருந்தை பார்த்து ஆத்திரம் அடைந்து, நான் யாஸ்மினின் வீட்டிற்கு சென்றேன்[1]. அப்போது அவரது வீட்டு கதவு வழக்கம் போல் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரை சத்தமிட்டு அழைத்து, தனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டேன். அவர் கதவை திறந்து எனக்கு தண்ணீர் தந்தார். அப்போது, பேஸ்புக்கில் நீ யாருடனும் பேசாதே என்று தெரிவித்தேன்[2]. இதில் தன்னை சந்தேகப்படுகிறாயா? நீ என்று கேட்டு யாஸ்மின் ‘பளார்’ என என் கன்னத்தில் அறைந்தார்,” என்று சொன்னான்[3].

facebook-murder

ஆத்திரம் அடைந்த ஹனீபா உளியால் குத்திக்கொலை: ஹனீபா தொடர்ந்தான், “இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நான், அங்கு இருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் வீசினேன். கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கு இருந்த உளியை எடுத்து அவரது தலையில் ஓங்கி குத்தினேன். இதில் ரத்தம் வெளியேறிது. இருப்பினும் ஆத்திரம் தீரும் அளவிற்கு 8 முறைக்கு மேல் அவரை உளியால் குத்தினேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதன் பின்னர் செய்வதறியாமல் திகைத்து நின்ற நான், யாரிடமும் சிக்கி கொள்ளாமல் முதிலில் அங்கிருந்து தப்பி செல்ல முடிவெடுத்தேன். அதற்கு பணம் தேவைப்படும் என்பதால், யாஸ்மின் அணிந்திருந்த நகைகள், செல்போன் ஆகியவற்றை எடுத்துவிட்டு வெளியே ஓடினேன். இந்நிலையில் எனது சட்டையில் ரத்தக்கரை படிந்து இருந்தது. இதனால் சட்டையை யாஸ்மினின் வீட்டிற்கு அருகே உள்ள வேலிக்குள் அவிழ்த்து எறிந்து விட்டு, எனது வீட்டில் வேறு சட்டையை மாட்டிக்கொண்டு தலைமறைவானேன். இந்த சூழ்நிலையில் போலீசார் என் மீது சந்தேகமடைந்து விசாரணைக்காக தேடி வந்தனர். இதனால் எப்படியும் போலீசில் சிக்கி கொள்வோம் என்று நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்ததேன்,” இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார்.

police-enquiry

விசாரணைக்குப் பிறகு ஹனீபா சிறையில் அடைப்பு[4]: போலீஸார், ரத்தக் கரைப் படிந்த சட்டை, உளி முதலியவற்றைக் கைப்பற்றினர். புதரில் வீசப்பட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்[5]. பிறகு அனிபாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஹனீபாவிடம் இருந்த யாஸ்மினின் நகை, செல்போன் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய உளி ஆகியவற்றை போலீசார் ஆதாரங்களாக பத்திரப்படுத்தினர். தொடர்ந்து ஹனீபாவை பண்ருட்டி உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். ஆக, ஆதாரங்கள் பத்திரமாக கைப்பற்றப் பட்டு, போலீஸாரிடம் உள்ளன என்று தெரிகிறது. இனி அவர்கள், அவற்றை முறையாக தடவியல் சோதனை கூடத்திற்கு அனுப்பி, சோதிக்கப் பட்டு, ஊர்ஜிதப் படுத்த வேண்டும்.

the-murderer-hanif-of-yasmin-panruti-media-7-tv-photo

பலாத்காரம் செய்து கொலையா?: இப்படி தலைப்பிட்டு, “லால்பேட்டை எக்ஸ்பிரஸ்” செய்தியை வெளியிட்டுள்ளது[6]. பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மர்ம மனிதர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். “அலங்கோலமான” நிலையில் கிடந்தாள். அவரது வீட்டில் அதிக சத்தத்துடன் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக கொலையாளி டி.வி.யை அதிக சத்தத்தில் வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதேநேரத்தில் தினசரி மதியம் வீட்டிற்கு சாப்பிட வரும் சுலைமான் நேற்று வீட்டிற்கு சாப்பிட வரவில்லை என்று கூறப்படுகிறது. தடயவியல் நிபுணர் அங்கிருந்த தடயங்களை சேகரித்தார். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, யாஸ்மினை யாரேனும் பலாத்காரம் செய்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்[7]. இறந்த ஒரு பெண்ணைப் பற்றி இத்தனை சந்தேகங்களை எழுப்புவது ஏன் என்று தெரியவில்லை.

the-murderer-hanif-panruti-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்!: “செய்தி.காம்”, கொலை செய்தது பலர் என்பது போல செய்தி “வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்!” வெளியிட்டுள்ளது[8]. “மர்ம நபர்கள்” என்று எப்படி அவர்களுக்குத் தெரியவந்தது[9] என்று தெரியவில்லை. முன்னர் “நகை திருடு” என்று ஆரம்பித்து கொலையில் முடிந்துள்ளது. இப்பொழுது, கொலையும் திசைத் திருப்பப் படுகிறது. ஹனீபா வாக்குமூலம் கொடுத்தது அவர்களுக்குத் தெரியவில்லை போலும். இத்தனை கொலைகள் நடந்து வரும் வேலையிலும், இப்படி முரண்பட்ட செய்திகளை வெளியிட்டு வருவது திகைப்பாக இருக்கிறது. செய்தியாளர்கள்-நிருபர்கள், ஒருவேளை சம்பவம் நடந்த இடத்திற்குச்  செல்லாமலேயே இப்படி உற்சாகம்-ஊக்குவிப்புகளுக்காக “அதிரடி” செய்திகளை அள்ளி வீசுகிறார்களா என்று தெரியவில்லை.

facebook-harassment-of-girls-women-love-and-lust

அத்தை மகள், மாமன் மகள், சித்தப்பா மகள், சித்தி மகள் முதலியோரை மணம் செய்வதில் இஸ்லாத்தில் பிரச்சினையா?: முதலில் ஹனீபா தன் அத்தை மகள் யாஸ்மினை விரும்பியதாகத் தெரிகிறது. அவளை ஹனீபாவுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் பெற்றோர் இருந்தனர். இந்த நிலையில் திடீரென அவரை எனது பெரியப்பா மகன் சுலைமானுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர், என்று செய்திகள் கூறுகின்றன. இதில், இஸ்லாமிய பிரச்சினை யாதவது உள்ளதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. சில உறவு மணமுறைகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. சில உறவு மணமுறைகள் செய்யலாமா-கூடாதா என்ற சர்ச்சை-குழப்பங்கள் இருக்கின்றன. மேலும், சமீபகாலத்தில், சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் வீரியம், சக்தி, புத்தி, முதலியவை குறைந்து பிறக்கின்றன என்ற கருத்து வலுப்பட்டு வருகின்றது. இங்கு அத்தை-மாமன் மகனை விடுத்து, பெரியப்பா மகன் கூட திருமணம் செய்யப்பட்டிருப்பது, பிரச்சினையா என்பது தெரியவில்லை. இருப்பினும், இப்பொழுது இதனை ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இனி, அத்தகைய குழப்பங்கள் நேராமல் இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

11-10-2016

facebook-love-murder-lust

[1] http://tamil.oneindia.com/news/tamilnadu/teen-girl-was-murdered-her-home-264720.html

[2] தமிழ்.வெப்துனியா, ஃபேஸ்புக்கில் நண்பர்களுடன் பழகிய மாமன் மகள் கொலை, Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2016 (15:07 IST).

[3] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/friendship-in-facebook-cousin-murdered-116101000026_1.html

[4] தினமலர், ஒருதலை காதலால் பெண் கொலை உறவினர் கைது; நகைகள் பறிமுதல், பதிவு செய்த நாள்: அக்டோபர் 10, 2016: 00.31.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1624623

[6] லால்பேட்டை.எக்ஸ்பிரஸ், பண்ருட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் குத்தி கொலை, அக்டோபர்.9, 2016.

[7] http://lalpetexpress.com/exp/30957

[8] செய்தி.காம், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர்கள்!, Monday 2016-10-10 07:00.

[9] http://www.seithy.com/breifNews.php?newsID=167214&category=IndianNews&language=tamil

 

Advertisements

யாஸ்மினை கொலை செய்த ஹனீபா – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி?

ஒக்ரோபர் 11, 2016

யாஸ்மினை கொலை செய்த ஹனீபா – ஒரு தலை காதல் என்றால், தொடரும் கொலைகளைத் தடுப்பது எப்படி?

yasmin-murdered-by-hanif-panruti

பேஸ்புக் விவகாரம் மறுபடியும் இன்னொரு இளம்பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது: “பேஸ்புக் நட்பு / சாட்டிங்” இன்னொரு கொலையில் முடிந்துள்ளது. அதற்கும் ஒருதலை காதல் என்று தெரிகிறது. பண்ருடியில் பட்டப்பகலில் வீட்டில் இருந்த இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ‘பேஸ்புக்’கில் நண்பருடன் பேசி பழகியதால் உளியால் குத்தி கொலை செய்தேன் என்று கைதான மாமன் மகன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான். இருப்பினும், தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல, மாறுபட்ட, முரண்பட்ட, குழப்பமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். துரதிருஷ்ட வசமாக, இன்னொரு இளம்பெண் கொலை செய்யப்பட்டிருப்பது, மிகவும் துக்கக் கரமான விசயாமகும், கண்டிக்கத் தக்கதாகும். இத்தகைய மனப்பாங்கு இளைஞர்களிடம் உள்ளது, குரூரமான விதத்தில் வெளிப்படுவது, கொலையில் முடிவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனையும் சமூக தீவிரவாத செயலாகக் கொண்டு, இளைஞர்களுக்கு, தக்க ஆலோசனை வழங்க வேண்டும். அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், புத்தகங்கள் முதலியவை, இட்தகைய உறவுகளை நியாயப்படுத்தவோ, ஏதோ பெரிய சாதனை போன்றோ, சித்தரிப்பது, விவரிப்பது தடுக்கப்பட வேண்டும். தணிக்கைக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டுத் தடுக்கப்படவேண்டும்.

the-murderer-hanif-of-yasmin-panruti-media-7-tv-photo08-10-2016 அன்று பிணமாகக் கிடந்த இளம் பெண் கொலை யாஸ்மின்[1]: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஆர்.எஸ்.மணி நகர் 4–வது தெருவை சேர்ந்தவர் சுலைமான். இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யாஸ்மின் (வயது 20). இவர் பிளஸ்–1 வரை படித்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது, குழந்தை இல்லை. சுலைமான் வேலைக்கு சென்றவுடன் யாஸ்மின் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். பக்கத்து தெருவில் யாஸ்மினின் தந்தை காதர்பாஷா வசித்து வருகிறார். இதனால் யாஸ்மினின் தாய் பர்வீன் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். நேற்று முன்தினம் 08-10-2016 சனிக்கிழமை அன்று 3 மணியளவில் மகளுக்கு போன் செய்தார். அப்போது யாஸ்மினுடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து போன் செய்தபோதும், பலனில்லாததால் நேரில் பார்ப்பதற்காக மகள் வீட்டிற்கு வந்தார்[2]. அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்த நிலையில், பூட்டு கதவில் இருந்தது. பர்வீன் சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்[3]. யாஸ்மினின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது கொலை செய்யப்பட்டமை தெரிய வந்தது[4]. இதை பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

the-murderer-hanif-of-yasmin-panrutiயாஸ்மின் மட்டும் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கலாம்போலீஸ் தீவிர விசாரணையில் தெரியவந்தது (09-10-2016): இதுபற்றிய தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, யாஸ்மினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.முரளிதரன், ஆய்வாளர் கெங்காதரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்[5]. விசாரணையில், யாஸ்மின் வீட்டில் இருந்து சுமார் 8 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது[6]. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்[7]. மேலும் விசாரணையில், வழக்கமாக யாஸ்மின் வீட்டில் உள்பக்கமாக பூட்டிக்கொள்வார். தெரிந்தவர்கள் வந்தால் மட்டுமே கதவை திறப்பார்[8]. இதன் மூலம் யாஸ்மின் மட்டும் தனியாக இருப்பதை அறிந்தவர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்[9]. அதன்பேரில் யாஸ்மினின் உறவினர்களிடம் இருந்து போலீசார் விசாரணையை தொடங்கினர்[10].

the-murderer-hanif-panruti-media-7-tv-photoமாமன் மகன் ஹனிபா மீது சந்தேகம் கொண்ட போலீஸார் (10-10-2016): அதில், அதேபகுதியில் உள்ள 6–வது தெருவில் வசித்து வரும் யாஸ்மினின் மாமன் நூர்தீன் என்பவரது மகன் ஹனீபா (22) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை விசாரிப்பதற்காக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று ஹனீபா லட்சமிநாரயாணபுரம் கிராம நிர்வாக அலுவலர் சையத்இப்ராஹீம் என்பவரிடம் சரணடைந்தார். போலீஸாரிடம் செல்லாமல், கிராம நிர்வாக அலுவலர் சையத்இப்ராஹீமிடம் சென்றது வியப்பாக இருக்கிறது. இதையடுத்து ஹனீபாவை பண்ருட்டி போலீசாரிடம் சையத்இப்ராஹீம் ஒப்படைத்தார். தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், ஆகியோர் ஹனீபாவை கைது செய்து விசாரித்தனர்.

yasmin-hanif-panrutiபேஸ்புக்கில் பழக்கம் கொண்ட யாஸ்மின், பின் தொடர்ந்து கண்காணித்த ஹனீபா: அதில் யாஸ்மினை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர், கொலைக்கான காரணம் குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியதாவது: “தான் டிப்ளமோ படித்து முடித்து உள்ளேன். புதுச்சேரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்தேன்[11]. தற்போது வேலை இல்லாமல் பெயிண்ட் தொழில் செய்து வந்தேன். என்னுடைய அத்தை மகள் தான் யாஸ்மின். எனவே எனக்கு அவரை திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருந்தனர். இந்த நிலையில் திடீரென அவரை எனது பெரியப்பா மகன் சுலைமானுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். இருந்தாலும் ஜாஸ்மீன் மீது எனக்கு ஒரு பிரியம் இருந்தது. பேஸ்புக்கில் ஜாஸ்மின் இருந்தது கண்டுபிடித்து கண்டித்தேன். திருமணத்திற்கு பின்னர் சில காலம் வெளிநாட்டில் இருந்த சுலைமான் தற்போது வீடு திரும்பி இருந்தார். இதற்கிடையே யாஸ்மின் ‘பேஸ்புக்’கில் இருந்தது எனக்கு தெரியவந்தது. அதில் அவரது நண்பர்கள் வட்டாரத்தில் பண்ருட்டியை சேர்ந்த ஒருவருடன் ‘பேஸ்புக்’கின் மூலம் பழகி வருவதை நான் அறிந்தேன். இதனால் யாஸ்மின் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர், எனது அண்ணனின் மனைவி என்பதால் நேரில் சென்று அவரை கண்டித்தேன். ஆனால் அவர் அதை பொருட்படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து ‘பேஸ்புக்’கை பயன்படுத்தி வந்தார்.

© வேதபிரகாஷ்

11-10-2016

facebook-useless-love

[1] தினத்தந்தி, பண்ருட்டியில் இளம் பெண் படுகொலை: பேஸ்புக்கில் நண்பருடன் பேசி பழகியதால் கொலை செய்தேன் கைதான மாமன் மகன் வாக்குமூலம், பதிவு செய்த நாள்: ஞாயிறு, அக்டோபர் 09,2016, 10:52 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 10,2016, 4:00 AM IST

[2] இந்நேரம்.காம், இளம்பெண் கொலை வழக்கில் திடுக் தகவல்!, Monday, 10 October 2016 16:41

http://www.inneram.com/news/tamilnadu/10515-young-girl-murder-case.html

[3] http://www.dailythanthi.com/News/Districts/Cuddalore/2016/10/09225214/Young-woman-killed-manaFacebookTalking-with-a-friend.vpf

[4] http://www.inneram.com/news/tamilnadu/10515-young-girl-murder-case.html

[5] தினமணி, பண்ருட்டியில் இளம்பெண் கொலை, By DIN  |   Last Updated on : 09th October 2016 01:40 AM

[6] http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/oct/09/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2578366.html?pm=381

[7] அதிரடி.காம், வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்..!!, 10 October 2016.

[8] http://www.athirady.com/tamil-news/news/886071.html

[9] http://media7webtv, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முகநூலில் நண்பருடன் இளம்பெண் பேசி பழகியதால் கொலை, Mohaned Aslam, October 10, 2016.

[10] http://media7webtv.in/?p=2598

[11] தமிழ்.ஒன்.இந்தியா,பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை: பண்ருட்டி அருகே பரபரப்பு!, By: Karthikeyan, Published: Monday, October 10, 2016, 19:21 [IST]

“துப்பாக்கி” – சென்சார் ஒப்புதல் அடித்த படத்தில் முஸ்லீம்கள் எதிர்ப்பால் சென்சார் செய்யப்பட்டது!

நவம்பர் 18, 2012

“துப்பாக்கி” – சென்சார் ஒப்புதல் அடித்த படத்தில் முஸ்லீம்கள் எதிர்ப்பால் சென்சார் செய்யப் பட்டது!

சென்சார் செய்யப் பட்ட படம் சென்சாருக்குட்பட்டது: முஸ்லீம்கள் “துப்பாக்கி” பதத்தை எதிர்த்து ஆர்பாட்டம் – முஸ்லீம்களை விமர்சிப்பதாக வசனங்கள், காட்சிகள் உள்ளன என்று அவர்கள் ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர். சென்சார் ஒப்புதலுடன் அப்படம் வெளிவந்துள்ளது. ஆக சென்சாருக்குத் தெரியாதது, தமிழக முஸ்லீம்களுக்குத் தெரிந்துள்ளது. உடனே கிருத்துவமதத்தினரான சந்திரசேகர், தயாரிப்பாளர் முதலியோர் பதறிப்போய், அத்தகைய காட்சிகள் எல்லாவற்றையும் நீக்கி விட்டு, படத்தை ஓட்டுகிறோம் என்று வாக்களித்துள்ளனர்[1]. அதுமட்டுமல்லாது, தாங்கள் சென்சார் செய்த படத்தையே சென்சார் செய்துள்ளதை, பயபக்தியுடன் சென்சார் போர்டுக்குத் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.  சாதாரணமாக செக்யூலரிஸ போர்வையில் வக்காலத்து வாங்கி வரும் “தி ஹிந்து” இப்படத்தைப் பற்றி விமர்சனத்தை பொதுவாகத்தான் செய்திருந்தது[2]. இத்தகைய எதிர்ப்பு வரும் என்றால், “தி ஹிந்து” தனது “ஏழாவது அறிவை” உபயோகப்படுத்தி எச்சரிக்கை செய்திருக்கும்!

திவீரவாதத்தின் பின்னணியை எடுத்துக் காட்டும் வகையில் எடுக்கப்பட்ட படம்: விஜய்-காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி, கலைப்புலி தாணு தயாரித்துள்ள “துப்பாக்கி’ திரைப்படம் ஏற்கெனவே பல சர்ச்சைகளிடமிருந்து விடுபட்டு தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கின்றது. மும்பை தீவிரவாத சதிச் சம்பவப் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அதாவது கடற்படையில் இருக்கும் ஒரு வீரன், கல்யாணம் செய்துக் கொண்டு மும்பையில் இருக்கிறான். அவன் பேருந்தில் செல்லும்போது, ஒரு தீவிரவாதி குண்டு வைக்கிறான். அதனைக் கண்டு பிடுக்கும் அவன், அதன் பின்னணியில், தீவிரவாதக் கூட்டம் இருப்பதையும் கண்டு பிடிக்கிறான். தீவிரவாதிகளை எதிர்த்து போராடி, அவர்களைக் கொல்கிறான்[3]. 12க்கு-12 என்று தீவிரவாதிகளைக் கொன்று தீர்க்கிறான்[4]. இத்தகைய பின்னானியில் இருப்பதால், தத்ரூபமாக தீவிரவாதிகள் முஸ்லீம்கள் என்று காட்டப்பட்டுள்ளது.

முஸ்லீம்கள் இப்படத்தை எதிர்ப்பது ஏன்?: தமிழகத்தில் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் போல சித்தரிக்கப்படும் படம், பிரபலமான நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ளதால், இதனைப் பார்க்கும் சிறிவர்கள்-இளைஞர்கள் மனங்களில் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும், அதனால் முஸ்லீம்களின் நிலை பாதிக்கப்படும் என்று நினைத்து அதனை எதிர்க்க முஸ்லீம்கள் தீர்மானித்தனர். இந்த நிலையில் முஸ்லீம்களை விமர்சிப்பது போல இப்படம் உள்ளதாக தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முஸ்லீம்கள் தீவிரவாதிகள், துரோகிகள் என்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது[5]. சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. மேலும் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் இணைந்து விஜய் வீட்டு முன்பு போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகி, அதன்படி போராட்டமும் நடந்தன[6]. நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்னால் முற்றுகை போராட்டமும் நடந்தது. போலீஸார் முஸ்லீம்களை பாதுகாப்பு கருதி கைது செய்து விடுதலை செய்தனர்.

முஸ்லீம்கள் எதிர்ப்பினால் முக்கியமான காட்சிகள் நீக்கப்பட்டன: இந்த படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.  அதனால், தயாரிப்பாளர், டியக்குனர் முதலியோர், “துப்பாக்கி படத்தை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கவில்லை, பொழுதுபோக்கு அம்சமாகத்தான், யதார்த்தமாக கதையின் பின்னணியில் அத்தகைய காட்சிகள் சேர்க்கப்பட்டன. அப்படி யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறோம், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.[7]. இருப்பினும் அவர்களுக்கு மிரட்டல்கள் வந்தவண்னம் இருந்தன. இதையடுத்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஏ. சந்திரசேகரன், கலைப்புலி தாணு போன்றோருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கலைப்புலி தாணுவும் எஸ்.ஏ. சந்திரசேகரனும் இன்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கமிஷனர் ஜார்ஜை சந்தித்து பேசினார்கள். சந்திப்பு முடிந்து வெளியே வந்த கலைப்புலி தாணு நிருபர்களிடம் கூறியதாவது[8]:- “துப்பாக்கி படத்தில் சில காட்சிகள் தங்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று இஸ்லாமிய சகோதரர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு செவி சாய்த்து படத்தில் 5 இடங்களில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கிவிட்டோம்[9]. அதை கமிஷனரை நேரில் சந்தித்து தெரிவித்தோம். இஸ்லாமிய சகோதரர்களையும் சந்தித்து சொல்லப் போகிறோம். 50 பிரிவாக தியேட்டர்களுக்கு சென்று வசனங்கள் எடிட் செய்யப்பட்டு வருகின்றன”, என்று அறிவித்து பிறகு காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டன[10] என்று அறிவித்தனர்.

முஸ்லீமாக விஜய் நடிப்பாரா?: “அடுத்த படத்தில் விஜய் முஸ்லீமாக நடிப்பார்’, என்றும் தயாரிப்பாளர் முஸ்லீம்களை திருப்தி படுத்த கூறினார்[11]. ஆனால், அவ்வாறு நடிப்பாரா, இல்லையா என்று பார்க்க வேண்டும். ஏனென்றால், நாளைக்கு கிருத்துவர் அத்தகைய காட்சிகளில் நடித்தார், அது சரியில்லை, இது சரியில்லை என்றெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடும். இந்தியர்கள் இவர்கள் அடிக்கும் “செக்யூலரிஸ” கூத்தைக் கண்டு வியக்கத்தான் வேண்டியுள்ளது. நடிகளை “கூத்தாடிகள்” என்றெல்லாம் எளனம் செய்த பகுத்தறிவுவாதிகள், இப்பொழுது “கருத்து சுதந்திரம்”, “நடிப்பு சுதந்திரம்”, “நடிகன் சுதந்திரம்”, “சினிமா சுதந்திரம்” என்றெல்லாம் பேசக் காணோம். நடிகர் சங்கத்தில் எதிர்ப்பு, பேச்சு முதலியவற்றை சுத்தமாக காணோம். பிறகு ஏன், “அடுத்த படத்தில் விஜய் முஸ்லீமாக நடிப்பார்’, என்றும் தயாரிப்பாளர் கூற வேண்டும்? அத்தகைய சமரசம், பாரபட்சம் முதலியவை ஏன்? மற்ற திரைப்பட விஷயங்களில் கொதிக்கும் இவர்கள், இவ்விஷயத்தில் அமைதியாக இருப்பது ஏன்?

கமல்ஹஸன் கலங்குகிறாரா அல்லது தைரியமாக தனது படத்தை வெளியிடுவாரா?’:  துப்பாஅக்கி படத்தை ரஜினி இரண்டு தடவை பார்த்துப் பாராட்டியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அந்நிலையில் படத்தைப் பார்த்து விட்டு, கமல் ஹஸன் என்ற போலி நாத்திகர் திகைத்துபோயுள்ளாராம்[12]. இதற்கு முன்பு விஸ்வரூபம் படத்திற்கும் இதே அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இரண்டு படங்களுமே ஒரே மாதிரியான பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தப் படங்களுக்கு இடையில் இருக்கும் மற்றுமொரு ஒற்றுமை கமலை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[13]. இரண்டு படங்களின் கருவும் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் மையமாகக் கொண்டது. துப்பாக்கி படத்தில் ஒரே நேரத்தில் 12 “ஸ்லீப்பர் செல்” தீவிரவாதிகளை சுட்டுக்கொல்லும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்தக் காட்சி தான் படத்தின் ஹைலைட். இதைப் போன்று ஒரு காட்சி விஸ்வரூபம் படத்திலும் வருகிறதாம். துப்பாக்கி படத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து இந்த 12 பேரையும் சுட்டுக் கொல்வார் விஜய். விஸ்வரூபம் படத்தில் பஸ்சுக்குள் வைத்து ”ஸ்லீப்பர் செல்” தீவிரவாதிகளை சுட்டுக் கொல்வார்களாம். இரண்டு படத்திலும் ஒரே மாதிரியான காட்சிகள் இருந்தாலும் துப்பாக்கி முந்திக் கொண்டதால், விஸ்வரூபம் படத்தில் இந்தக் காட்சியை மாற்றி அமைப்பார்களா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு உலகநாயகன் ஒருவரால் மட்டுமே பதில் கூற முடியும் என்பதால், அவரது பதிலை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்[14].

“ஸ்லீப்பர் செல்” என்றால் என்ன, முஸ்லீம்கள் அதகைய காட்சிகளை ஏன் எதிர்க்க வேண்டும்?: “தூங்கும் அறை” / “பதுங்குக் குழி” என்று எளிதாக பொருள் கொண்டாலும், ஒரு பெரிய சதித்திட்டத்தை பயங்கரவாதம் மூலம் செயல்படுத்த மறைந்து வாழும் தீவிரவாதியின் இடம் என்று பொருள் பெறப்படும்[15]. “புலியின் குகைக்குள்” சென்று, போராடுவது போல, தீவிரவாதிகளின் ரகசிய இடத்திற்குச் சென்று, அவர்களைப் பிடிப்பது, கொல்வது அவர்களது பயங்கரவாத சதித்திட்டத்தை முறியடித்து மக்களைக் காப்பாறுவது என்று பொருள் விரியும். இந்த திட்டத்தின்படி, சதித்திட்டத்தை நிறைவாற்றுவதற்காக பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் சமூகத்தில் பற்பல வேடங்களில் மறைந்து வாழ்ந்து, விஷயங்களை அறிந்து கொண்டு, பிறகு தாக்குவர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அல்லது நாட்டைக் குறிவைத்தால், அந்த சமூகத்தில் / நாட்டில் அந்த சமூக அங்கத்தினர் / பிரஜைப் போன்றே நடந்து கொண்டு, வாழ்து, பிறகு ஆணை வரும் போது, தீவிரவாத-பயங்கரவாத-குரூரக் கொலைகள்-குண்டுவெடிப்புகள் முதலியவற்றை மேற்கொள்வார்கள்[16]. அஜ்மல் கசாப் என்ற பயங்கர-தீவிரவாதி அல்லது தீவிர-பயங்கரவாதி, ஒரு இந்து இளைஞன் போல, கைகளில் சிவப்பு கயிறு, நெற்றியில் குங்குமம், இந்தியில் பேச்சு, மீசையில்லாத அப்பாவி முகம் என்ற சகிதத்தில் வந்துதான் மும்பையில் அத்தனை குரூரத்தை செய்திள்ள்ளனர். இக்காலத்தில், குண்டு வெடிப்பு மூலம் அப்பாவி மக்களைக் கொன்று, பீதியைக் கிளப்பி அதன் மூலம் தமது தீவிரவாதக் கொள்கைகளைப் பரப்புவது என்று தாலிபான், அல்குவைதா, ஹிஜ்புல் முஜாஜித்தீன், இந்திய முஜாஜித்தீன் என்று பல பயங்கரவாத-தீவிரவாதக் கூட்டங்கள் இயங்கி வருகின்றன.

இந்திய முஸ்லீம்கள் செய்யவேண்டியது என்ன?: சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்கள் பலர் இந்துக்களைப் போன்றே நாட்டுப்பற்றுடன் போராடியுள்ளனர். இன்றும் பலர் உள்ளனர், ஆனால், மற்ற முஸ்லீம்களினால் அவர்கள் வெளிப்படையாக தமது கருத்துகளை சொல்லாமல் இருக்கிறார்கள். நடந்து வரும் தீவிரவாத நிகழ்வுகளினால் வருத்தப் படும் முஸ்லீம்கள் அவர்கள். ஆனால், மற்ற முஸ்லீம்களினால் அமுக்கப்படுகின்றனர். தீவிரவாதத்தை எதிர்க்கவேண்டும், கண்டிக்கவேண்டும் என்று சொன்னால் கூட, அவர்கள் குரல்கள் அமுக்கப்படுகின்றன. ஆகவே, இந்திய முஸ்லீம்கள், இந்திய நாட்டின் நலத்திற்காக போராட வேண்டும்.

சினிமாக்காரர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்: சினிமாவில் பிழைப்பிற்காக, நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு படம் எடுக்கிறோம் என்று சினிமாக்காரர்கள் வாதிடலாம். ஆனால், சமூகத்தை சீரபழிப்பவர்களே இன்று அவர்கள் தாம் காரணம். இன்றைய இளைஞர்கள் கெட்டுப்போவதற்கு அவர்கள் தாம் காரணம்; பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்காமல், ஆசிரியர்களை மதிக்காமல், பெண்களை அசிங்கப்படுத்துவது ஆபாசப்படுத்துவது போன்ற செயல்களை இவர்கள் செய்து வருகிறார்கள். ஆகவே, சினிமாக்காரர்கள் பணம் சம்பாதிப்பது என்பது தான் ஒரே குறிக்கோள் என்றில்லாமல் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.


[3] Vijay has the greatest task as a military man to save his nation against the sleeper cells terrorists and get the main man who is organizing every terrorist act in the nation.

http://www.livechennai.com/detailnews.asp?newsid=3580

[5] An Islamic organisation – Indian National League Party (INLP) on Wednesday (November 14) protested against the film and alleged thatThuppakki portrays Muslims as terrorists and traitors.

http://entertainment.oneindia.in/tamil/news/2012/muslims-protest-against-vijay-thuppakki-101158.html

[14] After a lot of controversy, Thuppaki got a grand release and is running successfully on theatres. Although the film got a huge response from the viewers, the Muslim organizations protest against Thuppaki and it is no more a news. Earlier it was Kamal Hassan’s Vishwaroopam to get into the same controversy. Both the films are under the same controversy but Kamal is shocked to know that there is another similarity between both the films. Both these films contain the same concept that of with terrorisms. In Thuppaki there is a particular scene that at the same time they shoot and kill 12 Sleeper Cell terrorists. And this is the highlight of the film. There is similar scene appearing in Vishwaroopam as well. In Thuppaki Vijay will kill all the 12 peoples from different places whereas in Vishwaroopam they will kill them inside the bus. Although both the films have the same sequences, Thuppaki was the first to get release. So now the question raised is that whether Kamal will change the scenes or not. The answer to this question can be given only by Kamal, so the viewers are eagerly waiting for the reasonable reply from the star.

[16] http://www.wisegeek.com/what-is-a-sleeper-cell.htm#lbss

One of the most insidious tactics at a terrorist organization’s disposal is the implementation of a sleeper cell. A sleeper cell consists of secret agents who receive specialized training in their home countries and are then assigned to assimilate into another country’s culture and society. These sleeper agents may spend years performing their regular duties while living deep undercover, then suddenly receive orders from their overseas handlers to either commit an act of terrorism or provide aid to those who will. Individual members of a sleeper cell may not even be aware of each other, since plausible deniability during police interrogations can be vital. One sleeper agent may work for an airlineticket office, for example, while another may work at a car rental company or a chemical plant. When the commanders of the terrorist organization want to activate a sleeper cell, each agent may only receive the name of one contact person or receive only his or her specific orders. The airline ticket agent, for example, may only be told to provide tickets for 4 men traveling from Germany to New York. The car rental agent may only be told to pick up these men from the airport and deliver them to the chemical plant. This process insures that no individual member of the sleeper cell is aware of the entire plan.