Posts Tagged ‘ஊடகங்களின் ஒருதலைப்போக்கு’

ஹேமலதா பின்னணியில் நிலமோசடி கும்பல், சொத்து தகராறு, சிவில் பிரச்சினை……………….?

திசெம்பர் 19, 2009

ஹேமலதா பின்னணியில் நிலமோசடி கும்பல், சொத்து தகராறு, சிவில் பிரச்சினை……………….?

© வேதபிரகாஷ்

ஊடகங்களின் சாம்ராஜ்யம்: நிருபர்கள் பேட்டிகளின்போது தாங்கள் கேட்டதை குறிப்புகளாக எழுதிக் கொள்கிறார்கள். அவ்வாறு எழுதும்போது, கேட்பத்ற்கும் எழுதுவதிற்கும் வித்தியாசம், வேறுபாடு வருகிறது. கால இடைவெளியும் உள்ளது. இவர் ஒரு குறிப்பை எழுதி முடிப்பதற்குள், பேசுபவர் அடுத்த விஷயத்திற்குச் சென்றுவிடுவார். அப்பொழுது “குறிப்பு” குறிப்பாக – வார்த்தைகளாக நின்றுவிடும். பிறகு சக-நிருபர்களிடம் கேட்கலான், கேட்காமல் இருக்கலாம். அலுவலகத்திற்குச் சென்றபிறகு அக்குறிப்பை விரித்து எழுதும்போது, ஞாபகம் இல்லாத நிலையில் தங்களது சொந்த சரக்கையும் சேர்த்து எழுதலாம். இதற்கெல்லாம் மேலாக இவர்களது சித்தாந்த பின்னணி, அரசியல் சார்பு, நாத்திக-ஆத்திக உணர்வுகள், யாருக்கோ வேலை செய்ய்ம் நிலை என பல காரணிகள் வருகின்றன. மறுபடியும் இந்த “சாமியார்” பிரச்சினையில் அத்தகைய ஊடக பாகுபாடு, பாரபட்சம்..முதலியன வெளிப்படுகிறது,

புகார் பதிவு பற்றி பலவிதமான செய்திகள்: கடந்த செப்டம்பர் மாதம் 2009? கொடுக்கப்பட்ட இந்த புகார் மனுவில், “சாமியாரிடம் நான் வேலை செய்த போது காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் என்னை கற்பழித்து விட்டார். மயக்கம் தெளிந்து நான் அவரிடம் இதுபற்றி கேட்டபோது, உன்னை ஆபாசமாக படம் எடுத்துள்ளேன். எனக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் சும்மா விட மாட்டேன் என்று மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று குறிப்பிட்டிருந்தார்[1]. இந்த புகார் மனு குறித்து 3 மாதங்களுக்கு பிறகு மாம்பலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி காலந்தாழ்த்தி புகார் செய்யலாமா? எத்தனையோ வழக்குகளில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு, தான் அவ்வறு சொல்லவில்லை என்று அடுத்த நாளே மறுப்புதல் கடிதம் அனுப்புகிறான். ஏன் கஷாபை எடுத்துக் கொள்ளுங்களேன், என்னமாய் ஆட்டிப் படைக்கிறான்!

ஹேமலதா பின்னணியில் நிலமோசடி கும்பல்………..,: இப்படி ஒரு இணைதளம் கூறுகிறது[2]. நேற்று, போலீஸ் கமிஷனரும் அதையேத் கூறுகிறார். இன்றைய நிலையில் நில அபகரிப்பு, பதிவு பத்திரங்களில் ஃபோர்ஜரி, போலிப்பதிவுகள், அதற்கு அரசு ஊழியர்கள், அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளது, அரசியல்வாதிகளின் சாம்ராஜ்யம், புதிய-புதிய நிலம் விற்கும் கம்பெனிகள் முளைத்துள்ளது என பல விவகாரங்கள் பல கதைகளைச் சொல்கின்றன! ஆகவே ஏதோ உண்மையை மறைக்க சாமியார், கற்ப்பழிப்பு, ஆபாசப் படம் எடுத்தல், மிரட்டுதல் என்பது போன்ற “சித்தரிப்பு / ஜோடிப்பு” செய்வது போலத் தெரிகிறது. இன்றைய நாத்திக ஆட்சியில் எல்லோரும் சாமியாராக முடியாது, மானியாராகவும் முடியாது!

தினகரன் கூறுவதாவது: ‘‘சாமியார் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய இளம்பெண்ணுக்கு நேற்று மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. சாமியார் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும். நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார். தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர், தன்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் வசிக்கும் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்திருந்தார். மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்து அனுமதி பெற்றனர். அதைத் தொடர்ந்து ஹேமலதாவை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். பரிசோதனை அறிக்கையை, இரு நாட்களில் போலீசாரிடம் டாக்டர்கள் வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் கர்ப்பிணியாக உள்ளாரா என்பது பற்றி எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் இன்று பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

கற்ப்பழிப்பு வழக்கில் சாமியார் கைது ஆவாரா? போலீஸ் கமிஷனர் பேட்டி: இப்படி தலைப்பிட்டு தினத்தந்தி செய்திகளை அள்ளித் தருகிறது! நிருபர் கேட்டாரோ என்னவோ, “இந்த வழக்கின் அடிப்படையில் பல்வேறு சாமியார்களை கண்காணிப்பது போலீசின் வேலை அல்ல. புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றதாக வேறு சொல்கிறது!. இங்கு சாமியார்கள் என்றால் யார் என்று விளக்கவேண்டுமே? நாத்திக கருணாநிதி ஆட்சியில், “செக்யூலார்” அரசு நடக்கும்போது அதை விளக்கியே ஆகவேண்டும்.

தினத்தந்தி கூறுவது[3]: “சாமியார் ஸ்ரீகுமார் மீது இளம்பெண் ஹேமலதா கொடுத்த புகர்ர் மனு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இது ஒரு குழப்பமான வழக்காக உள்ளது. இதில் சிவில் பிரச்சினை இருப்பதாக சொல்லப்படுகிறது. பல நாட்களாக இந்த் பிரச்சினை இருருந்துள்ளது. எனவே இந்த வழக்கை மிகவும் கவனமாக விசாரித்து வருகிறோம். புகர்ர் கொடுத்த ஹேமலதா உட்பட 4 பேரிடம் இதுவரை சிசாரித்துள்ளோம். ஹேமலதாவிற்கு முருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. விசாரணை முடிந்த பிறகுதான் சாமியார் சிகுமாரை கைது செய்வது பற்றி முடிவு எடுக்கப்படும், இந்த வழக்கின் அடிப்படையில் பல்வேறு சாமியார்களை கண்காணிப்பது போலீசின் வேலை அல்ல. புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீண்ட காலம் நடந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு: போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறும்போது, “ஹேமலதாவின் புகார் மீது, நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ச்மேன் ஒருவரை தாக்கியதாக சாமியார் மீது அபிராமபுரம் போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். சொத்து தகராறும் உள்ளது. இந்தப் புகார் மீது ஹேமலதாமல் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு நாளில் நடக்கவில்லை. நீண்ட காலம் நடந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு”, என்றார். பிறகெப்படி, இப்பொழுது திடீரென்று ஹேமலதா, ஒரு “பத்திரிக்கைக் கூட்டம்” நுங்கம்பாக்கத்தில் கூட்டி பிரபலப் படுத்தவேண்டும்? அன்றே மாலை டிவி செனல்களில் ஜனரஞமாக செய்திகளை பரப்பவேண்டும்? அதுவும் ஹேமலதாவுன் முகத்தை மறைத்து வேறு பேட்டி. அடுத்த நாளோ அவரது புகைப்படத்தோடு செய்தி! இதேன்ன “டெஹல்கா” வேலைகளோ என்றுத் தோன்றுகிறது[4]

தினமலர் கூறுவது[5]: சாமியார் மீது கற்பழிப்பு புகார்: இன்று மருத்துவ பரிசோதனை: சென்னை சாமியார் மீது கற்பழிப்பு புகார் கொடுத்துள்ள ஹேமலதாவிற்கு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா(35), தி.நகரைச் சேர்ந்த ஈஸ்வர ஸ்ரீகுமார் தன்மை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் செய்தார். மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ஹேமலதாவிடம் போலீசார் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். அப்போது, ஈஸ்வர ஸ்ரீகுமாரிடம் வேலைக்கு சென்றது முதல் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஹேமலதா போலீசாரிடம் விளக்கினார்.

இந்நிலையில், ஹேமலதாவிற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் நேற்று கோர்ட் அனுமதி பெற்றனர். இதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவதற்காக ஹேமலதா நேற்று மாலை சென்னை அரசு பொது மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். ஆனால், நேரமாகி விட்டதால், ஹேமலதாவிற்கு நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. ஹேமலதாவிற்கு இன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்பிறகு, தேவைப்பட்டால், ஈஸ்வர ஸ்ரீகுமாரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.இந்த வழக்கு குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:ஹேமலதா கொடுத்த கற்பழிப்பு புகார் தொடர்பாக, வழக்குபதிவு செய்யப்பட்டு, நான்கு பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். ஒரு தரப்பில் புகாரும், மற்றொரு தரப்பில் எதிர் புகாரும் செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய வழக்குகளில் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியாது.சில தினங்களுக்கு முன் ஒரு பெண், தனது 10 வயது மகளிடம் சொந்த தம்பி தவறாக நடந்து கொள்வதாகவும், போலீசில் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார். உடனே சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை அழைத்து சத்தம் போட்டேன்.பின் விசாரித்தபோது, அப்பெண்ணிற்கும், அவரது தம்பிக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்திருப்பதும், இதுபோன்ற புகார் கொடுத்தால், தம்பி ஒதுங்கி விடுவார் என சிலர் அப்பெண்ணிற்கு தவறான ஆலோசனை வழங்கியிருப்பதும் தெரிந்தது. எனவே, இந்த வழக்கில் விசாரித்து தான் நடவடிக்கை எடுக்க முடியும். நாங்கள் ஹேமலதா, ஈஸ்வர ஸ்ரீகுமார் யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை. இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

நேற்றைய செய்தி: சாமியார் ஈஸ்வர் ஸ்ரீகுமார் மீது கற்பழிப்பு, ஆபாச படம் எடுப்பு புகார்களைக் கூறிய ஹேமலதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவரிடம் மகளிர் போலீசார் துணையுடன் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ஈஸ்வர் குமாரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள போலீசார் அவருக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று இன்று ஹேமலதாவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

2007ல் கற்ப்பழிப்பு, 2009ல் புகார்! இந்நிலையில் ஈஸ்வர் ஸ்ரீகுமார் தொலைபேசி மூலம் அளித்துள்ள ஒரு பேட்டியில், “என் மீது புகார் கொடுத்துள்ள பெண் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி நான் அவரை கற்பழித்ததாக புகாரில் கூறியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இதை ஏன் வெளியில் சொல்லவில்லை?. நான் எந்த தவறும் செய்யவில்லை. முடிந்தால் என் மீதான புகாரை அப்பெண் நிரூபித்து காட்டட்டும். ஒரு முறை சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியதாகவும், இன்னொரு முறை டெல்லியில் வேலை வாங்கி தருவதாக நான் கூறியதாகவும் தப்பு தப்பாக பேசுகிறார்”.

50 முறை பலாத்காரம் செய்தார்! இதன் பின்னணியில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. ஹேமலதா யார்-யாருடன் பேசுகிறார் என்பதை கண்டுபிடித்தால் அதன் பின்னணி தெரிய வரும். ஆன்மீக உலகில் என்னை குருஜி என்று அழைப்பார்கள். தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளேன். எனது புகழை கெடுக்க சதி நடக்கிறது. இதிலிருந்து நான் நிச்சயம் மீண்டு வருவேன். 50 முறை நான் பலாத்காரம் செய்ததாக ஹேமலதா கூறியுள்ளார். நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் என்னை பற்றி விசாரித்து பாருங்கள். உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். எனது மனைவிக்கு மசாஜ் செய்ய வந்தவர் இப்படி என்னை மாட்டி விடுவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆன்மீக பெரியவரான சங்கராச்சாரியாருக்கே சோதனை ஏற்பட்டு விட்டது. நானெல்லாம் எம்மாத்திரம். நான் எந்த தவறும் செய்யாததால்தான் பயமில்லாமல் இருக்கிறேன். முன் ஜாமீன் கேட்டு மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. எந்த நேரத்தில் போலீசார் அழைத்தாலும் விசாரணைக்கு செல்ல தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

49 தடவை அமைதி, 50வது தடவை புகார்: “50 முறை நான் பலாத்காரம்”: இது நிச்சயமாக உள்நோக்குள்ள புகார். 50 தடவை பலாத்காரம் செய்தால் எப்படி 49 தடவை அமைதியாக இருந்து, 50வது தடவை புகார் செய்கிறார். ஏதோ ‘சாமியாருக்கு” பரிந்து விவாதிப்பதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். அவர் அவ்வாறே செய்திருந்தால், தாரளமாக தண்டனைக் கொடுப்பலாம். ஆனால் இந்த புகாரிலுள்ள செயற்க்கைத்தனம் வெளிப்படுவதால் விவாதிக்க வேண்டியுள்ளது. பெண் ஒப்புக்கொள்ளாமல் அத்தகைய 49 திரும்ப-திரும்ப பலாத்காரம் செய்தல்கள் நிகழ்ந்திருக்காது. எந்தெந்த நாட்களில், எங்கு, எப்படி அந்த 49 பலாத்காரம் செய்தல்கள் நடந்தன என்றும் கேட்கப் படலாம்.
என் கணவரை சாமியார் அல்லமனைவி கூறுகிறார்: ஸ்ரீகுமாரின் மனைவி லலிதா கூறுகையில், என் கணவர் ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு உடையவர். தீவிர கடவுள் பக்தி கொண்டவர். அவருக்கு நிறைய சிஷ்யர்கள் உள்ளனர். தயவு செய்து அவரை சாமியார் என்று சொல்லாதீர்கள். அவர் ஒரு ஆன்மீக குரு. அவ்வளவு தான். அவர் மீது புகார் கொடுத்துள்ள ஹேமலதா சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன் வேலை கேட்டு வந்ததாகவும் அவரை குருஜி கெடுத்து விட்டதாகவும் ஒருமுறை சொல்கிறார். மற்றொரு முறை குருஜி வீட்டில் வேலை செய்ததாக சொல்கிறார். மற்றொருவரிடம் ரூ.2.5 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தரவில்லை என்று கூறுகிறார். இப்படி அவர் மாறி மாறி கூறுவது எல்லாம் பொய். குருஜிக்கு உள்ள நன் மதிப்பை கெடுப்பதற்காகவே இந்த குற்றச்சாட்டுகள். நல்ல குடும்பத்து பெண்ணாக இருந்தால் குருஜி தப்பு செய்தார் என்று அன்றைக்கே சொல்லியிருக்கலாம். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் நியாயம் கேட்டிருக்கலாம். இரண்டரை வருடம் கழித்து புகார் கொடுத்திருப்பதில் இருந்தே அவர் எப்படிப்பட்ட பெண் என்பது தெரியும். ஒருமுறை எனக்கு பிசியோதெரபி மசாஜ் செய்வதற்கு ஹேமலதாவை சரவணன் என்ற டிரைவர் எனது தியாகராய நகர் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர் கை வைத்த உடனேயே அவருக்கு மசாஜ் தெரியவில்லை. என்பதை அறிந்தேன். இனி மசாஜ் செய்ய வர வேண்டாம் என்றேன். அவரும் எனக்கு வேறு வழியில்லை ஏதாவது வேலை தாருங்கள் என்றார். நான் கண்டு கொள்ளவில்லை. குருஜி ரொம்ப நல்லவர். உதவி என்று கேட்டு வருபவருக்கு எல்லா உதவியும் செய்வார். ஹேமலதாவுக்கு பின்னணியில் நில மோசடி கும்பல் ஒன்று உள்ளது. நல்லவர்கள் மீது அபாண்ட பழி சுமத்துகிறார்கள். சில பிரச்சனைகள் காரணமாக குருஜி தற்போது வெளியூரில் உள்ளார் என்று கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு வேண்டுதல்: இத்தகைய நிகழ்ச்சிகள் வெளிப்படுத்துகின்ற முறை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சமூகத்தில் பலவிதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்[6]. இன்றைய அரசியல்-சித்தாந்த-மதசார்புள்ள ஊடகங்கள் இப்படி பாரபடச நிலைகளில் செய்திகளை பதிவு செய்தால், மக்கள் அவற்றை ஒரு நாள் புரிந்துகொண்டால், நிச்சயமாக அவர்கள் மதிப்பு, நம்பிக்கை போய்விடும். பிறகு, விவேக், கவுண்டமணி, செந்தில், ஜோக்குகள் போலாகிவிடும் ஊடக எஜமானர்கள் அவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கலாம் – கவர்கள் பெறலாம், பரிசுப் பொருட்கள் தரலாம்[7]., ஸ்டார் ஹோட்டல்களில் (வெளிநாடுகளிலும்) விருந்து தரலாம்,…………..எல்லாம் தரலாம்! ஆனால் நீங்கள் மக்களுக்கு என்றாவது பதில் சொல்லியாக வேண்டும்[8].

வேதபிரகாஷ்

19-12-2009 ©


[1] http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=0502f47b-8243-4fd0-a48b-4da486be6b4e&CATEGORYNAME=TCHN

[2] வெள்ளிக்கிழமை, டிசம்பர் 18, 2009, 15:50[IST]

http://thatstamil.oneindia.in/news/2009/12/18/land-mafia-behind-hemalatha-says.html

[3] http://www.dailythanthi.com/article.asp?NewsID=534802&disdate=12/19/2009

[4] ஆங்கிலத்தில் “டெஹல்கா” தளத்திலேயே எனது பதிவைப் படிக்கலாம். குஜராத் நிகழ்ச்சிகள் சமயம் பல இடங்களில் பல படங்கள் எடுத்து, வெட்டி-ஒட்டி அவற்றைத் தொகுத்து, அதற்கு பயங்கரமான இசைக் கொடுத்து, ஏதோ திகில் படம் போன்று “செய்திகளாக” என்.டி.டிவியில் தொடர்ந்து காண்பிக்கப் பட்டது. பிறகு தட்டிக் கேட்டப் பிறகு அடங்கிவிட்டது!

[5] டிசம்பர் 19,2009,00:00  IST http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14784

[6] இவையெல்லாம், மனோதத்துவ ரீதியில் பிரச்சாரப் போக்கில் ஒரு குறிப்பிட்ட சின்னத்தை / அடையாளத்தை / மனிதர்களை / சமூகத்தை குறிவைத்துப் தாக்கப் படும் போக்கு நப்றாகவேத் தெரிகிறது.

[7] ஆமாம், பத்மஸ்ரீக்கள், கலைமமணிகள் அள்ளிவீசப்படும். சாகும் வரை வாரியம் / நிறுவனம் / போர்ட் என்று ஏதாவது பதவி கிடைக்கும்.

[8] செய்திகளை அப்பொழுது மக்களின் மீதுத் திணிக்க முடியாது, திரித்துக் கூறமுடியாது, மறு-விளக்கம் கொடுக்கமுடியாது, சுருதியைக் குறைத்துக் கொண்டு அமைதியாகிவிட முடியாது………………………

Advertisements