Posts Tagged ‘ஓடர் ரிஸார்ட்’

தமிழகத்தில் ரேவ் பார்ட்டி – போதை, மது, மாது குத்தாட்டம் பார்ட்டி – ஐடி.எஞ்சினியர்கள், மாணவ-மாணவியர் கைது [1]

மே 9, 2019

தமிழகத்தில் ரேவ் பார்ட்டிபோதை, மது, மாது குத்தாட்டம் பார்ட்டிஐடி.எஞ்சினியர்கள், மாணவமாணவியர் கைது [1]

Odour resort, Mamallapuram, off ECR

ஓடர் ரிஸார்ட்டில் போதை பார்டி, போலீஸுக்கு தகவல்: ஓடர் ரிஸார்ட், கிழக்குக் கடற்கரை சாலையில், மாமல்லபுரத்திற்கு அருகில் உள்ள பட்டிபுலத்தில் [Odour Resort, located in Pattipulam near Mamallapuram, off ECR.] உள்ளது[1]. மூன்று நட்சத்திர அந்தஸ்து உள்ள, இங்கு பார்ட்டிகள் நடப்பது சாதாரணமாக இருந்தது. ஆனால், ரிசார்ட்டில் மது மற்றும் போதை பொருளான கஞ்சா விருந்து நடைபெற்றதும், அதில் கலந்து கொள்வதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ததும் தெரியவந்தது[2]. பட்டிபுலம் சொகுசுவிடுதியில், மது மற்றும் போதை விருந்து நடைபெறுவதாக காவல்துறை உயர் அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்தது[3]. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளரும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும்மான  பொன்னி தலைமையில், 100க்கும் மேற்பட்ட காவலர்கள், சொகுசு விடுதியை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர்[4]. அப்போது மது மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விருந்து நடைபெற்றதும், அதில் கலந்து கொள்வதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ததும் தெரியவந்தது[5]. அதனால், கூட்டம் கூடியதும் தெரிந்தது.

Odour resorts at evening

பாடி மஸாஜ், ஸ்பா, டிஜேபார்ட்டிஎன்று இங்கே போகிறார்கள்?: ரிஸார்டுகளில், நட்சத்திர ஓட்டல்களில், பாடி மஸாஜ், ஸ்பா போர்வைகளில் விபச்சாரம் நடக்கிறது. சமீபத்தில் அதில் ஒரு போலீஸ் அதிகாரியே மாட்டிக் கொண்டார். பிரபு என்பவன் பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலமாக இந்த “DJ party”ஐ[6] இணைதளம் மூலம் [‘High Tech Revolution’ website] விளம்பரம் செய்து, நடத்த அழைத்துள்ளான்[7]. தா ஜான், டிஸ்கோ ஜாக்கி போர்வையில் ஆரம்பித்து, மது, மாது, போதை சேர்ந்து, நவீன-நாகரிக முகமுடியில் சீரழியும் வகையாக உள்ளது. உள்ளே நுழைய ரூ 1,000/- கட்டணம், பிறகு மற்ற விவகாரங்களுக்கு தனித்தனியாக பணம் கொடுக்க வேண்டும் என்ற ரீதியில், அவன் ஏற்பாடு செய்தான்[8] என்று தெரிகிறது. கடந்த 30 ஆண்டுகளாக, ரகசியமாக நடந்து வரும், இத்தகைய பார்ட்டிகள், வெவ்வேறு உருவங்களில் நடந்து வருவதால், மறைக்கப் பட்டு வந்துள்ளது. எல்லைகளை மீறும் போது, வெளிப்படுகிறது. பாடி மஸாஜ், ஸ்பா போன்றவை எப்படி, டெக்-விபச்சாரமாக செயல்படுகிறதோ, அது போல, இவை, நூதனமாக, நவநாகரிகமாக செயல்படுகின்றன. சினிமாவும், அதில் நடிக்கும், நடிக-நடிகையரும் இதற்கு காரணம். மிருகங்களைப் போல, அரைகுறை ஆடைகளுடன் ஆடும் நிகழ்சிகளை, நேராக நடத்தும் போது, எல்லைகள் மீறுகின்றன.

Odour resort, Mamallapuram, villa

பெண்கள் குடிப்பது, போதை மருந்து அடிமையாவது: ரிஸார்ட்டுகளில், இவையெல்லாம் சகஜமாகி விட்டன போலும். ஓடர் ரிஸார்ட் விவகாரம் தெரிடய வந்ததால், இதனை தொடர்ந்து விருந்தில் பங்கேற்ற ஏழு பெண்கள் உள்பட 160 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்[9]. அவர்களின் உடைமைகள், கைப்பை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்[10]. பலவகையான போதை மருந்துகளை [liquor bottles and adhesives (that were used as intoxicants), LSD stamps, MDMA tablets, cocaine and 300 grams of marijuana] கைப்பற்றியதாக, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தேரிவித்தார்[11]. இது ஆதாரங்களை மறைக்க மேற்கொள்ளும் முயற்சியாகவும் இருக்கலாம். அவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படித்து, அதிகமாக பணம் சம்பாதிக்கும் இவர்கள், இத்தகைய வழிகளில் ஏன் ஈடுபடுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். ஐடி கம்பெனிகளிலேயே, மாதாந்திர-வருடாந்திர பார்ட்டிகளில், கெட்-டு-கெதர் பார்டிகளில் அத்தகைய பழக்கம் இருப்பது தெரிகிறது. இதில் தான், பெண்களும் சேர்ந்து குடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

Odour resort, Mamallapuram, off ECR-arrested-4

கைதுகளும், வழக்குப் பதிவும்: போலீஸ் ரெயிட் பிறகு, நடவடிக்கை எடுக்கப் பட்டது, சடங்காகத் தான் இருந்தது. எல்லோரையும் போலீஸ் வேனி ஏற்றிச் செல்லப் பட்டு அப்புறப்படுத்தப் பட்டனர்[12]. ஐடிகாரர்கள், மாணவ-மாணவிகள் அருகில் உள்ள கல்யாண மண்டபட்தில் வைக்கப் பட்டனர்[13]. இந்த போதை பார்ட்டி ஏற்பாடு செய்தவன் மற்றும் 12 பேர் போதை மருந்து மற்றும் தடுப்பு [Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985, and Tamilnadu Prohibition Act ] சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப் பட்டனர். ரிஸார்ட்டின் சொந்தக்காரர் தங்கராஜ், மேனேஜர் ஜார்ஜ், ஏற்பாடு செய்த வீ, பிரபு, சரவணகுமார், பி.ஆர்.ஓ முதலியோர் கைது செய்யப் பட்ட 16 பேரில் அடங்குவர்[14]. எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ள விபரம், என்று தினமலர் கூறுவது[15], “விருந்தில் பயன்படுத்தியதாக, 300 கிராம் கஞ்சா; 195 மது பாட்டில்கள் மற்றும் போதை வஸ்துகள் சில கைப்பற்றப்பட்டதாக, போலீசாரின் முதல் தகவல் அறிக்கை எனும், எப்..ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது[16]. இது தவிர, விடுதி மேலாளர், நெல்லை, கல்லிகுளத்தைச் சேர்ந்த மரிய நேவிஸ் மகன் ஜார்ஜ், 56, உட்பட, 12 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”. கடந்த இரு தினங்களுக்கு முன், பொள்ளாச்சி அருகே தனியார் தங்கும் விடுதியில் மது மற்றும் போதை விருந்தில் ஈடுபட்ட, கேரளாவை சேர்ந்த 159 மாணவர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Odour resort, Mamallapuram, off ECR-arrested-3

விகடன் கொடுக்கும் மாறுபட்ட செய்தியும், ரிஸார்டை ஆதரிக்கும் போக்கும்: விகடன் சேர்த்துள்ள சமாசாரம், “ரிசார்ட் தரப்பில் போலீஸாரிடம் சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில், “நாங்கள் சட்டத்துக்குட்பட்டுதான் இந்த விருந்தை நடத்தினோம். ஆனால் வந்தவர்களில் சிலர் போதை பொருள்களை கொண்டு வந்துள்ளனர். அது எங்களுக்குத் தெரியாது. இந்த பார்ட்டியில் பங்கேற்க தலா ஒருவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளோம்என்று கூறியுள்ளனர்”. ஆக வருபவர்கள் அதை எடுத்து வந்தாலும், இவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் போலும். இதிலிருந்தே, எங்கேயோ மிகப்பெரிய தவறு நடந்து கொண்டிருக்கிறது, அது மிகப்பெரிய பாடிக்கும் குற்றமாக மாறியுள்ளது என்று தெரிகிறது. நியூஸ் ரிபோர்ட்டர்கள், நிருபர்கள், செய்தியாளர்கள் முதலியோர்களுக்கும், ரிஸார்ட்டுகள் புதியதல்ல. அவர்களுக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன, அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 10% ஒழுங்காக இருந்தாலே, பாதிப்பில் பாதி குறைந்து விடும்.

Odour resort, Mamallapuram, off ECR-arrested

ரௌடிகளா, இன்ஜினீயர்கள், கல்லூரி மாணவிகள் மாணவர்களா?[17]: மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ரவுடிகள் கூடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ரிசார்ட்டில் ரவுடிகளுக்குப் பதிலாக இன்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் வீக் எண்டு பார்ட்டியில் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் பகுதியில் ஓடர் ரிசார்ட் செயல்பட்டுவருகிறது. இங்கு ஞாயிற்று கிழமைகளில் சட்ட விரோதமாக மது விருந்து நடப்பதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொன்னிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் எஸ்.பி.பொன்னி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் ரிசார்ட்டுக்குள் நுழைந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் மது, கஞ்சா போதையிலிருந்தவர்களும் ரிசார்ட் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். போதை தலைக்கேறியவர்கள் போலீஸாரையும் விருந்தில் பங்கேற்க அழைப்புவிடுத்தனர். அவர்களை போலீஸார் மடக்கிப்பிடித்து வாகனத்தில் ஏற்றினர். இன்னும் சிலர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை ரிசார்ட்டுக்கு வெளியில் காத்திருந்த போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இந்த மதுவிருந்தில் 7 பெண்கள், 153 ஆண்கள் உட்பட 160 பேர் போலீஸாரிடம் சிக்கினர்[18].

© வேதபிரகாஷ்

09-05-2019

Odour resort, Mamallapuram, off ECR-arrested-2

[1] The Hindu, Police bust rave at Mamallapuram resort, Party’s over:The revellers were detained at a wedding hall in the city and, right, the resort off ECR in Mamallapuram, R. Sivaraman, CHENNAI, MAY 07, 2019 00:46 IST; UPDATED: MAY 07, 2019 13:48 IST.

[2] தினத்தந்தி, சொகுசு விடுதியில் மது விருந்து கொண்டாட்டம் : 7 பெண்கள் உள்பட 160 பேர் கைது, பதிவு : மே 06, 2019, 12:25 PM

[3] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/06122502/1034375/mahabalipuram-lodge-wine-party.vpf

[4] நியூஸ்.18, கஞ்சா, போதை பவுடர் வைத்து ரிசாட்டில் விருந்து… 7 பெண்கள் உட்பட 160 .டி பணியாளர்கள் கைது…!, News18 | May 6, 2019, 10:08 AM IST

[5] https://tamil.news18.com/photogallery/police-arrested-160-people-who-involved-in-liquor-drinking-party-in-chennai-resort-va-151255.html

[6] A disc jockey, often abbreviated as DJ, is a person who plays existing recorded music for a live audience. Most common types of DJs include radio DJ, club DJ who performs at a nightclub or music festival and turntablist who uses record players, usually turntables, to manipulate sounds on phonograph records.

[7] http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/may/07/160-at-mahabs-rave-party-booked-1973600.html

[8] The invite for the rave was circulated on the pretext of a get-together and a DJ party by Prabhu on Facebook and WhatsApp, for an entry fee of ₹1,000 each, besides providing intoxicants for use to the youngsters on a cash basis. Liquor was also being served at the party without any excise permit, she said.

https://www.thehindu.com/news/cities/chennai/police-bust-rave-at-mamallapuram-resort/article27052411.ece

[9] சமயம், சென்னையில் மது, போதை விருந்தில் பங்கேற்ற 160 ஐடி ஊழியர்கள் அதிரடி கைது, Samayam Tamil | Updated:May 6, 2019, 01:44PM IST.

[10] https://tamil.samayam.com/latest-news/crime/chennai-160-it-staffs-been-arrested-after-they-took-party-in-illegal-liquor-and-drug-party/articleshow/69196299.cms

[11] Indian Express, Chennai: Rave party at Mahabalipuram busted, 160 booked, Published: 07th May 2019 04:38 AM | Last Updated: 07th May 2019 12:38 PM.

[12] DECCAN CHRONICLE. Chennai: 160 including 7 women picked up from rave party, | P.A.JEBARAJ AND SINDHIYA SAMUELC, Published May 7, 2019, 5:45 am IST; Updated May 7, 2019, 5:46 am IST

[13] https://www.deccanchronicle.com/nation/current-affairs/070519/chennai-160-including-7-women-picked-up-from-rave-party.html

[14] he 16 arrested included resort owner Thangaraj, manager George, organiser V Prabhu, Public Relations Officer Saravanakumar and a foreign national who had supplied the synthetic drugs.

[15]  தினமலர், போதை விருந்து விவகாரம் விடுதிகளில் அதிரடி ஆய்வு, Added : மே 08, 2019 07:08.

[16] https://www.dinamalar.com/news_detail.asp?id=2271882

[17] விகடன்,  ஸ்கெட்ச் போட்டது ரவுடிகளுக்கு; சிக்கியதோ..?! மாமல்லபுரம் நள்ளிரவு ரிசார்ட் நிலவரம், எஸ்.மகேஷ் வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (06/05/2019) கடைசி தொடர்பு:14:21 (06/05/2019).

[18] https://www.vikatan.com/news/tamilnadu/156765-160-persons-arrested-for-party.html