Posts Tagged ‘கல்யாணம்’

15 வயது மாணவன் 23 வயது ஆசிரியையுடன் பள்ளியை, வீட்டை விட்டு ஓடிப் போன சமாச்சாரமும், அவர்களை போலீஸார் தேடிப் பிடித்த கதையும்!

மார்ச் 13, 2016

15 வயது மாணவன் 23 வயது ஆசிரியையுடன் பள்ளியை, வீட்டை விட்டு ஓடிப் போன சமாச்சாரமும், அவர்களை போலீஸார் தேடிப் பிடித்த கதையும்!

ஓடிப்போன மாணவன், ஆசிரியை 2015-16

கோதைசங்கர் விவகாரம் (மார்ச்.2015)[1]: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). அங்குள்ள தனியார்  பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வந்தார்.  கடந்த மார்ச் 31-ந்தேதி வீட்டை விட்டு சென்ற  சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசுப்பிரமணியன் எங்குசென்றார் என்று விசாரணை நடத்தி, இருவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது  சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த   பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23)  என்பவருடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்தது[2], இப்படித்தான் சென்ற வருடம் மார்ச் 2015ல் இப்பிரச்சினை விவரிக்கப்பட்டது.

கோதை- சிவசுப்பிடரமணி-காமம், தூக்கல்

கோதை- சிவசுப்பிடரமணி-காமம், தூக்கல்

திட்டமிட்டு பணம்நகைகளுடன் ஓடிய ஜோடி: 10-ம்வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் எடுத்து உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். மாணவர்கள் இல்லாத நேரம் வகுப்பறையிலேயே இருவரும் காதல் லீலையில் ஈடுபட்டுள்ளனர்.  புகைப்படங்கள் வேறு எடுத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால்  பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர். அதன்படி  கடந்த 31-ந்தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள  60  பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[3]. இப்படி மேலும் தகவல்கள் சேர்த்துக் கொடுக்கப்பட்டன. 15 வயது பையனுக்கு எப்படி 23 வயது பெண்ணிடம், அதிலும், ஆசிரியையுடன் காதல் ஏற்பட்டது என்று விளக்கவில்லை. அது காதல் இல்லை, காமம் தான், அதிலும் இளம்பெண், வயது வந்த பையனுடன் உடலுறவு கொள்லும் அளவிற்கு ஏற்பட்ட கொக்கோக வெறித்தனம். தறிகெட்டு போனதால், ஒழுங்கீனத்தினால், முறைதவறி ஏற்பட்ட விபரீதம் ஆகும்.

கோதை-மணி காமம்

கோதை-மணி காமம்

கோதைசங்கர் விவகாரம் (மார்ச்.2016): ஒரு வருடம் கழித்து ஊடகங்கள் அக்கதை கூறும் விதம் வேடிக்கையாக இருக்கிறது. அது தவறு என்று சுட்டிக் காட்டவில்லை. மாறான, “சென்ஷேசனலிஸம்” ரீதியில் செய்திகளை வெளியிட்டுள்ளன. நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் பிரியா என்கின்ற கோதைலட்சுமி (வயது 23 / 29[4]). இவரது சொந்த ஊர் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை. எம்.எஸ்.சி., பட்டதாரியான இவருக்கும் அதே பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 31–ந் தேதி 2015 கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் மாயமாகினர் என்பது தமாஷான விசயம். ஏனெனில், போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகையையும் எடுத்து சென்று உள்ளார். தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் எடுத்துள்ளான்[5]. அப்படியென்றால், இவ்விவகாரங்கள் தெரிந்து தான் இருக்கின்றன. சமூக சீரழிவுகளால், இந்த இருவரும் சீர்கெட்டு போனதை மறைத்துள்ளனர். ஆரம்பத்திலேயே, அத்தகைய தகாத உறவைக் கண்டித்து, முடித்திருக்க தவறி விட்டார்கள்.

கோமதி-மணி- காமம்.-786

கோமதி-மணி- காமம்.-786

திருப்பூரில் போலீஸார் பிடித்த ஜோடி: இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இருவரையும் தேடிவந்தனர். நாட்டில் பற்பல பிரச்சினைகள் இருக்கும் போது, போலீஸார் இத்தகைய வேலைகளை எல்லாம் செய்ய வேண்டியுள்ளது. பெற்றோர் ஒழுங்காக வளர்த்திருந்தால், மாசிரியர்-மாணவ தர்மம் இருந்திருந்தால், இவையெல்லாம் நடந்திருக்குமா என்று நினைத்துப் பார்க்கவில்லை. மாணவன், ஆசிரியையின் நண்பர்களுக்கு திருப்பூர் பொதுதொலைபேசிகளில் இருந்து அடிக்கடி போன் வருவதை சைபர் கிரைம் போலீசார் அறிந்தனர்[6]. அவர்களை புதுவை, கும்மிடிப்பூண்டி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். ஆசிரியை கோதைலெட்சுமி, மாணவன் சிவசுப்பிரமணியன் ஆகிய இருவரும் திருப்பூரில் பதுங்கி இருந்து அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   இதையடுத்து டி.எஸ்.பி.ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூருக்கு சென்று இருவரின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

கோதை-மணி- காமம்-சல்பீ

கோதை-மணி- காமம்-சல்பீ

தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டும்/ கெஞ்சும் ஆசிரியை: 10-03-2016 அன்று இரவு ஆசிரியை கோதைலெட்சுமி மாணவன் சிவசுப்பிரமணியன் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்[7]. பின்னர் அவர்கள் இருவரையும் 11-03-2016 அன்று மதியம் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து அவர்களை கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்[8]. அப்போது ஆசிரியை கோதைலட்சுமி போலீசாரிடம் கூறும் போது, “நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் உண்மையாக காதலித்தோம். சேர்ந்து வாழ ஆசைப்பட்டோம். ஆனால் எங்கள் காதலை யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் புதுச்சேரி சென்று அங்கு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அதுவரை எங்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு இருந்ததில்லை. திருணமத்திற்கு பின்பு தான் கணவன்மனைவியாக வாழ்ந்தோம். இப்போது நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள். சட்டத்தின் மூலம் எங்களை பிரித்தாலும் மீண்டும் நாங்கள் சேர்ந்து வாழ்வோம். பணத்தின் மூலம் எங்களை பிரிக்க நினைத்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன்[9],” என்று உருக்கமாக கூறி உள்ளார் என்று நக்கீரன்பதிவு செய்கிறது[10]. எங்களைப் பிரித்து விடாதீர்கள் என்று பிடிவாதமாக இருப்பது தெரிகிறது[11]. ஆனால், இதெல்லாம் தவறு என்று எடுத்துக் காட்டப்படவில்லை.

© வேதபிரகாஷ்

13-03-2016

[1] https://socialterrorism.wordpress.com/2015/04/12/trend-of-elopement-of-female-teachers-with-teenage-students/

[2] http://www.dailythanthi.com/News/State/2015/04/11141306/10class-student-love-Teacher-with-the-flow.vpf

[3] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Teacher-Elopes-with-Minor-Boy/2015/04/11/article2758555.ece

[4] தினமலர், தலைமறைவு மாணவன், ஆசிரியை திருப்பூரில் மீட்பு: தென்காசியில் நீதிபதி முன்பு ஆஜர், பதிவு செய்த நாள்
மார் 12,2016 00:04; மாற்றம் செய்த நாள்: மார்ச்.12, 2016: 03.11.

[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Teacher-Elopes-with-Minor-Boy/2015/04/11/article2758555.ece

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1476210

[7] தினத்தந்தி, மாணவருடன் ஓடிய ஆசிரியை கர்ப்பிணியாக திருப்பூரில் மீட்பு , பதிவு செய்த நாள்: வெள்ளி, மார்ச் 11,2016, 11:18 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, மார்ச் 12,2016, 4:45 AM IST.

[8] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/03/11231842/The-student-ran-to-the-teacher–Pregnant-recovery.vpf

[9] தமிழ்.ஒன்.இந்தியா, தற்கொலை செய்து கொள்வேன்…10 ஆம் வகுப்பு மாணவனை பிரிய மறுக்கும் தென்காசி ஆசிரியை !, By: Karthikeyan, Published: Saturday, March 12, 2016, 20:44 [IST].

[10] நக்கீரன், நான் தற்கொலை செய்துகொள்வேன்மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை, பதிவு செய்த நாள்: 12, மார்ச் 2016 (18:21 IST); மாற்றம் செய்த நாள்: 12, மார்ச் 2016 (18:21 IST).

[11] வெப்துனியா, எங்களை பிரித்துவிடாதீர்கள்: மாணவனுடன் மீட்கப்பட்ட ஆசிரியை வேண்டுகோள், Last Modified: சனி, 12 மார்ச் 2016 (15:57 IST).

எரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்!

நவம்பர் 18, 2010

எரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்!

பிரெஞ்சு நாட்டு சல்லாபம், கொக்கோகம்: பிரெஞ்சு நாட்டுக் காரர்கள் செக்ஸ் விஷயத்தில் கொஞ்சம் வீக்குதான்! பிரபல எழுத்தாளரான அலெக்ஸண்டர் டூமாஸ் என்பவர் எப்பொழுதும் ஐந்தாறு பெண்களுடன் சல்லாபித்தவண்ணம் தான் இருப்பார் என்று தெரிகிறது. சென்னையில் ஈகா தியேட்டரில் “ஸ்பானிஸ் ஃபளை” என்ற படம் 1978ல் திரையிடப்பட்டது. அந்த ஸ்பானிஸ் பூச்சிற்கு ஒரு சக்தி இருக்கிறது. அதனை சாப்பிட்டால் அசாத்யமான செக்ஸ் வந்துவிடுமாம். அவ்வளவுதான் கண்ணில் படும் பெண்களுடன் உடனடியாக உடலுறவு கொள்ள ஆரம்பித்து விடுவார்களாம். ஒருவேளை, எரிக் மார்ட்டினும் அத்தகைய சக்தியைப் பெற்றானா என்று தெரியவில்லை. எரிக் மார்டின் கல்யாணம் செய்து கொண்டான், ஆனால், வாழ்க்கை கசந்தது. விவாக ரத்தானது.

இல்வாழ்க்கை கசந்ததால், அனாதை இல்லம், கொக்கோகம் பிரான்ஸ் நாட்டில் புரூசல்ஸ் பகுதியைச் சேர்ந்த எரிக் மார்டின் (54) புரூசல்ஸ் பகுதியில் ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகள் காப்பகம் நடத்தி வந்தான். அங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் தங்கி இருந்தனர். அதாவது இந்த ஃபெடோஃபைல்கள் எல்லோருமே ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். ஒன்று தேவையானதைத் தேடி செல்வது அல்லது இப்படி காப்பகம் வைத்து நடத்துவது, வளர்ப்பது, அனுபவிப்பது.  அங்கு இருந்த 15 வயது நிரம்பிய இளம் சிறுமிகளைப் பார்த்தப்போது காம இச்சைக் கொண்டான்.  தாங்கமுடியாமல், இளம் மொட்டுகளை தொட்டே விட்டான். ஒன்று, இரண்டு என்று ஒன்பது சிறுமிகளை ஆசைதீரக் கற்பழித்தான். இதனால் புகார் கொடுக்கப்பட்டு, வழக்கு தொடர்ந்து, நீதிமன்|ற தீர்ப்பில் 15 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், முன்னமே குறிப்பிட்டப்படி[1], சிறையிலிருந்து தப்பி, சென்னைக்கு வந்து விட்டான்.

சிங்காரச் சென்னையில் மறைந்து வாழ்தல்: சென்னை, தமிழகம் இப்படி செக்ஸ் கூடாரமாகி வருவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழ் மக்கள் என்றுமே விருந்தோம்புவதில் வல்லவர்கள். வெள்ளைத் தோலைக் கண்டால் கேட்கவே வேண்டாம், சரண்டர் தான். அதிலும் அதிகமாக காசு வரும் என்றல், கேட்கவே வேண்டாம். இவ்வாறுதான், எரிக் மார்டின் எண்.14, நடேசன் தெரு மாதவரத்தில் வீடு வாடகைக்கு எடுத்தான். அந்த பிரெஞ்சுக்காரருடன் ஒத்துப்போக அண்டைவீட்டுக்காரர்களுக்கு நிறையவே பிரச்சினைகள் இருந்தன[2]. சாமியார் மாதிரி தனித்த வாழ்க்கை வாழ்ந்துவந்ததாக கூறுகின்றனர். “அந்த இடத்தையே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆளுக்கு ஆங்கிலம் கூட அவ்வளவாகத் தெரியவில்லை, பிரெஞ்சு மொழியிலேயே பேசிவந்தான்”, என்று ஒரு பெண்மணி கூறினார். இன்னொரு காரணம், “அவன் என்றுமே நேருக்கு நேராக கண்களைப் பார்த்து எங்களுடன் பேசியது கிடையாது. கிருஸ்துமஸ் அன்று தான், “ஹலோ” என்று கூறுவான்”, மற்றபடி யாருடன் பேசமாட்டான்.. எண்.14, நடேசன் தெருவில் இருந்த அவனுக்கு செடி-கொடிகள் மீட்து மட்டும் அலாதியான காதலாம்.

வீட்டைச் சுற்றி செடி-கொடிகளை வளர்த்து மர்ம வீட்டில் வாழ்ந்த காமுகன்: வாடகைக்கு எடுத்ததும் வீட்டைச் சுற்றி பல செடி-கொடிகளை வளர்க்க ஆரம்பித்தான். அவன் தங்கியிருந்த வீடு முழுவதும் செடி-கொடிகள் மண்டி கிடந்தன. அண்டை வீட்டார் கண்டபடி வளர்ந்திருந்த அந்த செடி-கொடிகளைப் பற்றி பலதடவை புகார் செய்துள்ளனர்.  ஆனால், அவற்றை வெட்ட அவன் அனுமதிப்பது இல்லை. வேலைக்காரப் பையனுக்கு சொன்னாலும், அவனை செய்ய விடுவதில்லை. “அவங்க கைகளை வெட்டிக் கொள்ளுங்கள் என்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள்”, என்று அந்த பையனிடம் சொல்வானாம். பானைகளில்பலவித செடிகள், தூண்கள், சுவர்கள் கூட கொடிகளால் பின்னப்பட்ட நிலையில் இருந்தன. வரண்டா மட்டுமல்லாது, மேலும், மாடியிலும் கூட கொடிகளை வளர்த்து படரவிட்டிருந்தான்.

மாடிவீட்டு கொட்டாயில் அயல்நாட்டவர்களுக்கு விருந்து; மாடியில் ஒரு ஓலைக்கொட்டாய் போட்டிருந்தான். அதில்தான் தன்னுடைய அயல்நாட்டு விருந்தாளிகளை உட்காரவைத்து காபி கொடுப்பான். அயல்நாட்டு விருந்தாளிகள் அவன் வீட்டிற்கு, குறிப்பாக கிருஸ்துமஸ் சமயத்தில் அதிகமாகவே வருவார்கள். அதென்ன கிருஸ்துமஸ் கூட்டம்? ஒருவேளை டான் பரவுன் எழுதியுள்ளது போல யாதாவது நடக்குமோ என்னமோ? மற்றபடி, அந்த வீட்டில் யாருமே இல்லாது போல இருக்கும். விளக்குகள் இப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். அவை எப்பொழுதாவது தான் அணைக்கப்படும் அல்லது அணைக்கப்பட்டதே கிடையாது எனலாம்.

வெளியே சென்று வேலை செய்தல்; மற்றவர்களைப்போல இல்லாமல், இந்த காமுகன், காலை 11 மணிக்கு வெளியில் செல்வான், பிறகு மாலை தான் வருவான். அடிக்கடி தான் வைத்திருக்கும் பிரிமியர் காரில் எங்கோ சென்று வருவான். அயல்நாட்டு பயணிகளுக்கு, குறிப்பாக பிரெஞ்சுநாட்டவருக்கு கெயிடாகவும், பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தும் சம்பாதித்து வந்தான். அவன் ஒரு வேலைக்கரப் பையனையும், பெண்ணையும் வைத்திருந்தான்[3]. அதைத்தவிர அடையாளம் இல்லாத / பெயர் சொல்லப்படாத ஒரு அண்டைவீட்டுக்காரரும் உதவி வந்ததாகத் தெரிகிறது. வீட்டின் சாவிகளை தானே வைத்துக் கொள்வான். கேட்டின் சாவிகளை மட்டும் பணிப்பெண், வேலைக்காரப் பையனிடம் தந்துவந்தான். குழந்தைகளுடன் பேசியதையோ, நட்பாக இருப்பதையோ அண்டையார் என்றும் பார்த்ததில்லை[4].

வேதபிரகாஷ்

© 18-11-2010


[1] வேதபிரகாஷ், சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்!, https://socialterrorism.wordpress.com/2010/11/17/chennai-becomes-haven-for-fugitives-eric-martin/

[3] Cerise Negulici, Child sex abuser of France apprehended in Chennai,  Wed, 11/17/2010 – 05:28

http://frenchtribune.com/teneur/101981-child-sex-abuser-france-apprehended-chennai

தமிழகத்தில் கௌரவம் – மானம் காக்க கொலை!

ஓகஸ்ட் 27, 2010

தமிழகத்தில் கௌரவம் – மானம் காக்க கொலை!

வட இந்தியாவில், இத்தகைய கொலைகள் நடக்கின்றன என்று ஊடகங்கள் பரபரப்பாக எடுத்துக் காட்டுகின்றன[1]. பொதுவாக ஒரு பெண் / ஆண் தமது குடும்பத்திற்கு வெளியில் (குலம், கோத்ரம்) அல்லது வேறு ஜாதியில் (குறிப்பாக அவர்களைவிட கீழ் ஜாதி) மற்றோரு ஆண் / பெண் கூட காதல், கல்யாணம் என்று வைத்துக் கொண்டால், பெற்றோர், சகோதரர் அல்லது உறவினர்கள், அவர்களைக் கொன்று விடுகிறார்கள்[2]. இதைச் சட்டப்படித் தண்டிக்க, புதிய சட்டத்தை எடுத்துக் கொண்டு வரவும், அரசாங்கம் முயன்று வருகிறது[3]. தேசிய பெண்கள் வாரியம் சார்பாக சக்தி வாஹினி என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ள விஷயங்கள்[4]:

·         560 அத்தகைய நிகழ்வுகளை ஆய்ந்தபோது, இது பெரும்பாலும் ஒரு வட இந்திய பிரச்சினைப் போலத் தோன்றுகிறது.

·         88.93% சதவீதம் கொலைக்குற்றத்தைச் செய்வது பெண்ணின் உறவினர்கள்தாம். அதாவது கௌரவத்தைப் பார்ப்பது அவர்கள்தாம் போலும்.

·         மொத்தம் 560 வழக்குகளிலும் எல்லோருமே எச்சரிக்க / மிரட்டப்பட்டுள்ளனர். 121 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

·         பொதுவாக ஒரு பெண் / ஆண் தமது குடும்பத்திற்கு வெளியில் (குலம், கோத்ரம்) அல்லது வேறு ஜாதியில் (குறிப்பாக அவர்களைவிட கீழ் ஜாதி) மற்றோரு ஆண் / பெண் கூட காதல், கல்யாணம் என்று வைத்துக் கொள்ளும்போது, இப்பிரச்சினை வருகிறது.

·         இத்தகைய குற்றங்கள் நகரங்களைவிட, மற்ற இடனஙகளில் தான் அதிகமாகக் காணப்படுகின்றன.

·         இதில் சமூகத்தின் எந்த பிரிவினரும் விலகில்லாமல் இருக்கிறர்கள். அதாவது, பொதுவாக எல்லா சமூகத்தினரும், இத்தகைய உறவுகளை எதிர்க்கின்றனர்.

மேலும், குறிப்பாக, இந்த அராய்ச்சி நிறுவனங்கள், ஒரு உண்மையினை மறைத்துவிடுகின்றது. அதாவது, ஒரு பெண் / ஆண் தமது குடும்பத்திற்கு வெளியில் வேறு மதத்தில் மற்றோரு ஆண் / பெண் கூட காதல், கல்யாணம் என்று வைத்துக் கொள்ளும்போதுதான், பிரச்சினை பூதாகாரமாகிறது என்பதனை மறைக்கின்றனர். அரசாங்கம் அத்தகைய விவரங்கள் வெளிவருவதை விரும்பாததினால், மதத்தைக் குறிப்பிடாமல், ஜாதி என்று பதிவு செய்து உண்மையினையும் மறைத்து விடுகின்றனர்.
தமிழகத்தில் இப்பிரச்சினை மறைக்கப்ப் படுகிறதா? இந்நிலையில், தமிழகத்தில் அத்தகைய கொலைகள் அதிக அளவில் இருப்பினும், அவை சாதாரணமான கொலையாகவே பாவிக்கப் பட்டு, மறைக்கப் படுகின்றன[5]. உண்மையில், சமூக ரீதியில், அவை ஆராயப் படுவதில்லை, அத்தகைய கொடுமையைத் தட்டிக் கேட்பதில்லை. இந்நிலையில், இப்படியொரு செய்தி வந்துள்ளது. இதில் அந்த வாலிபப் பெண், சிறு வதிலிருந்தே நடத்தைக் கெட்டவள் போலச் சித்தரிக்கப் படுகிறாள். அவ்வாறு சொல்வதே தந்தை எனும்போது, கவனமாக இப்பிரச்சினையை அணுக வேண்டியுள்ளது. அதிக செல்லம் கொடுத்து அவள் வாழ்க்கையை சீரழித்து விட்டேன் என்று கூட சொல்லியுள்ளார். பள்ளியில் படிக்கும்பொதே, மாணவிகள் இத்தகைய செக்ஸ் போன்ற விஷயங்களை அறிந்து கொண்டு, பலருடன் தொடர்பு கொள்வது என்ற போக்கு, மிகவும் சீர்கேடானது.

கவுரவ பிரச்னையால் மகளை கொன்றேன்”: விஷம் கொடுத்த தந்தை குமுறல்: “கவுரவ பிரச்னையால் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றேன்” என, மதுரையில் கைது செய்யப்பட்ட தந்தை ரங்கசாமி கூறினார்[6]. மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (47). இவரது மகள் மாரிசெல்வி(18). இவர் பலரை காதலித்ததால், ஆத்திரமடைந்த ரங்கசாமி, கூலியாட்களை வைத்து, ஆக.,24ல் விஷ ஊசி போட்டும், பூச்சி மருந்து கொடுத்தும் கொலை செய்தார்.இவ்வழக்கில் கூலியாட்களாக செயல்பட்ட மூர்த்தி, பாலமுருகன், வேல்முருகன் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த ரங்கசாமி நேற்று முன் தினம் இரவு கைது செய்யப்பட்டார்.அப்போது அவர் நமது நிருபரிடம் கூறியதாவது :நான் கண்டித்தும் மகள் கேட்கவில்லை. இது எனக்கு கவலையை ஏற்படுத்தியது. குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவர் நடவடிக்கை இருந்ததால், கவுரவ பிரச்னையாக கருதி விஷம் கொடுத்து கொன்றேன். அதற்காக இப்போது வருந்துகிறேன். இவ்வாறு கூறிய ரங்கசாமி தொடர்ந்து பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.

பல ஆண்களுடன் தொடர்பு: மயக்க ஊசிவிஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை!: மயக்க ஊசி போட்டு, வாயில் விஷத்தை ஊற்றி மகளை கொலை செய்ய திட்டம் தீட்டித் தந்த தந்தையும் கொலையைச் செய்த மதுரை அரசு மருத்துவமனை கம்பவுண்டர் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்[7]. மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த ரெங்கசாமி (48) பை-பாஸ் ரோட்டில் டிராக்டர் ஒர்க்-ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி லட்சுமி, மகள் மாரிச்செல்வி (18). இரு நாட்களுக்கு முன் லட்சுமி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மாரிச்செல்வி வாயில் நுரைதள்ளியபடி மயங்கிக் கிடந்தார். அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். மாரிசெல்வியின் சாவில் மர்மம் இருப்பதாக லட்சுமி எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் மாரிசெல்வி விஷ ஊசி போடப்பட்டும் விஷம் தரப்பட்டும் கொலையானது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த விவரம்: மாரிச்செல்விக்கும் அவரது தாய் லட்சுமியின் தம்பி மோகனுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் வீட்டில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது. அப்போது மாரிச்செல்விக்கு வயது 17 தான் ஆகியிருந்தது. இதனால் 18 வயது பூர்த்தியான பின் பெரிய அளவில் திருமண விழாவை நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால், மாரிச்செல்வியி்ன் தந்தை ரெங்கசாமி, தன் தங்கை மகன் சண்முகராஜனை, மாரிச்செல்விக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்தார். எனவே, மாரிச்செல்வி, மோகனை திருமணம் செய்து கொண்டதில் ரெங்கசாமி கோபமானார். இந்நிலையில் மோகன் வெளிநாட்டில் வேலைகிடைத்துச் சென்று விட்டார். இதையடுத்து மாரிச்செல்விக்கு அப் பகுதியில் சில ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் இதை ரெங்கசாமி பலமுறை கண்டித்தும் மாரிச்செல்வி கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே 18 வயது பூர்த்தியாகிவிட்டதால், மாரிச்செல்வி-மோகன் திருமண விழாவை நாளை (27ம் தேதி) நடத்துவது என்று முடிவானது. இதற்காக மோகன் சில வாரங்களுக்கு முன் நாடு திரும்பினார். ஆனால், இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லாததாலும், மகளின் நடத்தை சரி இல்லாததாலும் ஆத்திரமடைந்த ரெங்கசாமி, மகள் மாரிச்செல்வியை கொல்ல திட்டமிட்டார்.

திட்டமிட்டு கொலை செய்தது: தனது ஒர்க்-ஷாப்பில் வேலை பார்த்து வரும் அலங்காநல்லூரைச் சேர்ந்த மூர்த்தியின் (20) உதவியோடு இந்தக் கொலையை செய்ய திட்டமிட்டார். மூர்த்தி மூலமாக அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் பாலுவிடம் தன் மகளைக் கொல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து மயக்க ஊசி போட்டு, விஷம் குடிக்க வைத்து கொலை செய்து விடலாம் என்று இவர்கள் முடிவு செய்தனர். இரு நாட்களுக்கு முன் தன் மனைவியையும் மகன்களையும் வங்கிக்கு அனுப்பிய ரெங்கசாமி, மகள் மாரிச்செல்வியிடம், ஏ.சி. பொறுத்த 3 பேர் வருவார்கள் என்றும், அவர்கள் வந்தால் பின்வாசல் கதவை திறந்து உள்ளே அனுப்புமாறும் கூறிவிட்டுச் சென்றார். இதன்படி மூர்த்தி, பாலு மற்றும் வேல்முருகன் ஆகியோர் வீட்டிற்கு வந்தனர்.  அவர்கள் வீட்டில் ஏ.சி. மாட்ட இடம் பார்ப்பது போல நடித்தவாரே திடீரென்று மாரிச்செல்வியை கீழே தள்ளி, வாயை பொத்தினார். பாலு, தான் கொண்டு வந்த மயக்க ஊசியை மாரிச்செல்வியின் கை-கால்களில் ஏற்றினார். இதையடுத்து மாரிச்செல்வியின் வாயில் விஷத்தை ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இறக்கும் நிலையில் மகள் உண்மையைச் சொன்னது: இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய லட்சுமி, தனது மகள் உயிருக்கு போராடிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாரிச்செல்வியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஒரு நிலையில் கொஞ்சம் மயக்கம் தெளிந்த மாரிச்செல்வி, நடந்த சம்பவத்தை தாயார் லட்சுமியிடம் கூறிவிட்டார். இதையடுத்து லட்சுமி போலீசாரிடம் புகார் தந்தார். இதைத் தொடர்ந்து மூர்த்தி, பாலு, வேல்முருகன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தந்தை ரெங்கசாமி தலைமறைவாகிவிட்டார், கோர்ட்டில் சரண் அடைவதற்காக மதுரை காளவாசல் பகுதியில் பதுங்கியிருந்த அவரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

தந்தை கொடுத்த வாக்குமூலம்: ரெங்கசாமி அளித்த வாக்கு மூலத்தில், எனக்கு ஒரே மகள் என்பதால், சிறு வயதில் இருந்தே அதிக செல்லம் கொடுத்தே, அவள் வாழ்வை சீரழித்து விட்டேன்[8]. மாரிச்செல்வி 10ம் வகுப்பு படிக்கும்போதே ஆண் நண்பர்களுடன் பழகத் தொடங்கினாள். அவளை கண்டித்தேன். ஆனாலும் அவளது நடத்தை சரியாக இல்லை. அடிக்கடி அவளது ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தாள். பல ஆண்களுடன் அவளுக்கு தொடர்பு இருந்ததால் எனக்கும், என் குடும்பத் தாருக்கும் அவமானமாக இருந்தது. தொடர்ந்து விடுதியில் சேர்த்து பிளஸ் 1 படிக்க வைத்தபோது, என் அக்கா மகன் சண்முகராஜுடன் சுற்றியதால் படிப்பு பாழானது[9]. காவல்நிலையம் வரை பிரச்சினை சென்று அசிங்கப்பட்டேன். சென்னை வடபழனியில் உள்ள தம்பி வீட்டில் விட்டு வந்ததும், அங்கிருந்த என் மைத்துனன் மோகனுடன் திடீரென்று 10 நாள் ஊரை விட்டு ஓடி விட்டாள். கண்டு பிடித்து மீண்டும் மதுரை அழைத்து வந்தேன். அடிக்கடி அவளைத்தேடி வாலிபர்கள் வர ஆரம்பித்தனர். மாரிச்செல்வியின் காதலர்கள் என்று கடந்த 2 ஆண்டுகளில் 3 பேர் என்னிடம் வந்து பெண் கேட்டனர். ஆனால், அவர்களுக்கு பெண் தர மறுத்துவிட்டேன். இந் நிலையில் மாரிச்செல்விக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவாள் என்று எண்ணினேன். உடனே எனது தங்கை மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தேன். அதற்கு அவள் மறுத்து விட்டாள். இதனால் எனது மனைவி லட்சுமியின் சகோதரர் மகன் மோகனுக்கு திருமணம் செய்து கொடுக்க எனது மனைவி முடிவு செய்தாள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. மோகன் அரவாணி போன்று இருப்பான். எனவே அவனுக்கு ஆண்மை இருக்காது என்று கருதினேன். இப்போதே மகள் பல ஆண்களுடன் பழகுகிறாள். மோகனுக்கு ஆண்மை இல்லாவிட்டால் மகளின் நடத்தை மேலும் மோசமாகி விடும் என்று பயந்து திருமணத்தை தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை. 27ம் தேதி தென்காசி அருகே சவுந்திரபாண்டியபுரத்தில் திருமணம் செய்ய ஏற்பாடானது. எனவே இதைத் தடுக்க மகளை கொலை செய்ய முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.


[1] இந்தியா டுடே, http://www.todayonline.com/World/EDC100804-0000053/Honour-killings-on-the-rise-in-India

[2] http://timesofindia.indiatimes.com/india/Honour-killings-Its-more-about-caste-than-gotra-says-study/articleshow/6283566.cms

[3] http://www.dnaindia.com/india/report_centre-to-bring-law-against-honour-killings_1419198

[4] Read more: Honour killings: It’s more about caste than gotra, says study – India – The Times of India http://timesofindia.indiatimes.com/india/Honour-killings-Its-more-about-caste-than-gotra-says-study/articleshow/6283566.cms#ixzz0xlMgOi9D

[5] முன்னர், தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், நான் சில இடுகைகளை இப்பரச்சினைப் பற்றி அலசி இட்டுள்ளதைப் பார்க்கவும்.

[6] தினமலர், கவுரவ பிரச்னையால் மகளை கொன்றேன்‘:விஷம் கொடுத்த தந்தை குமுறல், ஆகஸ்ட் 27, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=71517

[7] தர் ஈஸ் தமிள், பல ஆண்களுடன் தொடர்பு: மயக்க ஊசிவிஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை!, வியாழக்கிழமை, ஆகஸ்ட் 26, 2010, 11:19[IST]

[8]தினகரன், செல்லம் கொடுத்தே சீரழித்து விட்டேன், http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=13969&id1=4

[9] http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=13969&id1=4