Posts Tagged ‘நடேசன் தெரு’

சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்!

நவம்பர் 17, 2010

சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்!

சிங்கார சென்னை செக்ஸ் நகரமாகிறது[1]: நவம்பர் மாதம் வந்தாலே சென்னையில் கலக்கலன விஷயங்கள் தாம். சென்ற நவம்பரில் 2009 இன்டர்போல் சொன்ன சூளைமேட்டில் இருந்த வில் ஜியூமை பிறகு பாய்ந்து பிடித்தனர். வில் ஹியூம்ஸ்[2], ரப்பி ஆலன் ஜே, பாட்ரிக் மாத்யூஸ்[3] பிறகு எரிக் மார்டின் (53) என்ற இன்னுமொரு ஃபிடிடோஃபைல் சென்னையில் 16-11-2010 அன்று மாதவரத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். அவனைப் பார்க்க அவனது நண்பர்களுள் ஒருவன் வந்தபோது, பின் தொடர்ந்த போலீஸ் அவனைப் பார்த்து, அவன் தான் இன்டர்போல் எச்சரித்த குற்றவாளி என்று அடையாளம் அறிந்து கொண்டனர். பிறகு, உயர் அதிகாரிகளின் ஆணைக்கு இணங்க அவன் கைது செய்யப்பட்டான். 1996 முதல் 1999 வரை சிறுவர் பாலியல் / வன்புணர்ச்சி செக்ஸ் முதலிய கொக்கோகக் களியாட்டக் குற்றங்களில் ஈடுபட்டவன், பிரான்ஸில் கைது செய்யப்பட்டு, 15 வருடம் சிறைக்காவலில் வைக்கப்பட்டான்.

நேபாளம்-மஹாபலிபுரம்-காஞ்சிபுரம்-மர்மங்கள்: 2006ல் இன்டர்போல் சிவப்புநிற எச்சரிக்கை அறிக்கை விடுத்திருந்தது. 2007ல் ஐரோப்பிய கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், எப்படியோ பிரெஞ்சு சிறையிலிருந்து தப்பித்துக் கொண்டான். பிறகு தன்னைப்போன்ற குற்றவாளிகளுக்கு சிறந்த இடம் நேபாளம் என்று அறிந்து கொண்டு அங்கு சென்றான். தப்பித்துக் கொண்டு நேபாளுக்கு வந்து, அங்கிருந்து இந்தியாவில் நுழைய தீர்மானித்தான். சென்னையில் குறிப்பாக மகாபலிபுரத்தில் தன்னைப் போன்ற ஆட்களுக்கு தாராளமாக இடம் கொடுக்கிறார்கள் என்று அறிந்து அங்கு வந்தான்[4].

காஞ்சிபுரம்-சென்னை-மாதவரம்-மர்மங்கள்: சென்னைக்கு வந்தான். 2001லிருந்து இந்தியாவில் ஜாலியாக மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தான். ஜேக் பெர்டான்டிஸ் (Jack Fernandez) என்ற பெயரில் மஹாபலிபுரம், காஞ்சிபுரம் முதலிய இடங்களில் வசித்து, முடிவாக மாதவரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தான். காஞ்சிபுரத்தில் எரிக் மார்டினின் வேலை என்ன என்று தெரியவில்லை. இவன் இருந்த இடமே தெரியாதிருக்கும் போது, எப்படித்தான் தேவநாதன் மாட்டிக்கொண்டானோ தெரியவில்லை[5].

நம்மூர் போலீஸார் சொல்வது: அவனை ஒருவழியாக பிடித்த சென்னை போலீஸார் (G Sampath Kumar, superintendent of police, Crime Branch-CID), “இந்தியாவில் இத்தனை காலம் தங்குவதற்கு போதுமான ஆவணங்கள் இல்லை என்பதைத் தவிர, வேறெந்த அவனைப்பற்றிய தகவலும் இல்லை. வேறெந்த குற்றமும் இந்தியாவில் செய்ததாக தெரியவில்லை”, என்கின்றனர். சிவில் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நாடு  கடத்தப் படுவான் என்றும் சொல்கின்றனர்.

2001லிருந்து 2010 வரை சென்னை, சென்னை சுற்றுப்புறங்களில் வாழ்ந்த எரிக் மார்டின்: ரப்பி ஆலன் ஜே, மே 22, 2007 அன்று காஞ்சிபுரம் போலீஸாரால் கைது செய்யப்படுகிறான். அதாவது 2006 முதல் மே 2007 வரை அவன் மஹாபலிபுரம் ரிஸார்டில் தங்கியுள்ளான்[6]. வில் ஹியூமும் அதே காலகட்டத்தில் இருந்திருக்கிறான். காஞ்சிபுர போலீஸார் தான் இந்த எல்லோரையும் கைது செய்துள்ளனர் அல்லது கேஸ்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வில் ஹியூம் மற்றும் இந்த ரப்பி ஆலன் ஜேவிற்கு தொடர்பு இருந்ததா? இருவருமே குழந்தை செக்ஸ்-விவகாரத்தில் வல்லுனர்களாக இருந்துள்ளார்கள். முன்னவன் படிக்காமலேயே, தனது அனுபவத்தின் மீதாக வல்லுனனாக இருந்திருக்கிறான், பின்னவனோ படித்து பி.எச்.டி பெற்று மருத்துவம்-மனோதத்துவம் படித்தே எப்படி குழந்தைகளை பக்குவமாகத் தமது காம இச்சைக்குட்படுத்துவது என்று அறிந்து, செயல்படுத்தி, அனுபவித்து சுவைத்துவந்துள்ளான். அந்த விஷயத்தில் இருவருமே ஒத்துப் போகின்றனர். பிறகு மஹாபலிபுரம்[7], புருவங்களை உயர்த்துகின்றன. ஏன் மற்ற இடத்திற்கு செல்லாமல், மகாபலிபுரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்? கோவா[8], புவனேஸ்வர்[9], பூரி[10] இப்படி அருமையான இடங்களை விடுத்து ஏன் இங்கு வருகிறான்? ஒரு அயல்நாட்டவன், குறிப்பாக சட்டப்பிடியிலிருந்துத் தப்பியோடி திருட்டுத்தனமாக பல நாடுகளில் ஓடித்திரிந்து மறைய வருகிறன் என்றல் அவனுக்கு அங்கு ஒரு “தொடர்பு” இல்லாமல் வரமாட்டான், வரமுடியாது. விசா, பாஸ்போர்ட் முதலியவை இருக்கவேண்டும். ஆகவே, நிச்சயமாக அவனுக்கு உதவிய “தொடர்பாளிகள்”, கூட்டாளிகள், சம்பந்தப்பட்டோர் இருந்திருக்கிறார்கள். வில் ஹியூமோ தனது குடும்பம் சகிதமாக இருந்து தனது செக்ஸ்-தொழிலை செய்து வந்துள்ளன். ஆகவே, ஒருவேளை அவர்கள் சந்தித்து இருக்கலாம் அல்லது உதவியிருக்கலாம். மே 2002ல் கைது செய்யப்பட்ட வில் ஹியூம் பிறகு பிணையில் வந்து மறைந்து போகிறான். நவம்பர் 2009ல்தான் சூளைமேட்டில் கைது செய்யப்படுகிறான். ஆகவே அத்தகைய ரகசிய வாழக்கை வாழ்ந்த காலத்தில் யாருடன் இருந்தான், யேரெல்லாம் அவனை சந்தித்துள்ளனர் அல்லது இவன் சந்தித்தான் என்ற விவரங்கள் ரகசியமாகவே, மர்மமாகவே இருந்துள்ளன. ஆகவே இவனுக்கும் பல உதவியுள்ளார்கள் என்பதெல்லாம் முன்னமே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[11].

மகாபலிபுரம் செக்ஸ் கூடாரமாகி வருகின்றது: சென்னையில் நடக்கிறது, ஆனால் அனைவரும் மௌனம் காக்கின்றனர். இதன் ரகசியம் என்னவென்று புரியவில்லை. இப்பொழுது “வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு” என்ற கிருத்துவர் (அவரே சொல்லிக் கொண்டது) 30 வருடமாக தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். பல நூறு குழந்தைகளுடன் அவ்வாறு செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளான். மே 2002ல் அத்தகைய பாலியல் குற்றங்களுக்கு கைது செய்யப் பட்டான். ஆனால் பெயிலில் வெளிவந்தவன் மறைந்து விட்டானாம்! இருப்பினும் அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்து இருக்கிறானாம்! ரப்பி ஆலன் ஜே மற்றும் எரிக் ம்ஆர்டினும் அங்கு ஜாலியாகத்தான் இருந்திருக்கிறார்கள்! மாஅட்டிக் கொள்ளும் போது மட்டும் சென்னைக்கு வருகிறார்கள் போலும்!

2009: பாட்ரிக் மாத்யூஸ் ஆகஸ்டில் கைது[12]: கடந்த ஜூன் மாதம் 2009 பாட்ரிக் மாத்யூஸ் என்ற மிஷினரி செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகளுடன் (14 வயது வரையுள்ள) பாலியில் ரீதியிலாக தொடர்பு கொண்டிருந்தான். 2003 லிருந்து 2006 வரை ஊழியராகவேலைசெய்து வந்தார். பேடிமான் டிரஸ்ட்[13] என்ற கிருத்துவ அமைப்பு ஆங்கிலோ-இந்திய சிறுவர்-சிறுமியர் அன்னாதைகளுக்காக உருவாக்கப் பட்டது.

மகாபலிபுரத்தில் வீடு: இந்த ஊழியருக்கு மகாபலிபுரத்தில் ஒரு வீடு இருக்கிறது[14]. சென்னை போலிஸாரது பள்ளியில் மற்றும் மகாபலிபுரத்திலுள்ள மக்களிடம் விசாரணையின்போது விழயங்கள் தெரியவந்தன. புகார்கள் சென்ரதால், இங்கிலாந்திலிருந்து கௌஸர்ஷயர் கான்ஸ்டெபுலரி (Gloucestershire Constabulary) என்ற போலீஸார் பிரத்யேகமாக விசாரிக்க சென்னைக்கு வந்தது. இவனை கைது செய்து கொண்டு சென்று விட்டது. இந்த “மகாபலிபுரம்” மர்மத்தையும் ஆராயவேண்டியுள்ளது. ஊடகங்கள் இவனைப் பற்றி ஒன்றும் வெளியிடவில்லை. தமிழ் ஊடகங்கள் மௌனமாகவே இருந்தன.

பத்தாண்டுகளாக மகாபலிபுரம், காஞ்சிபுரம், மாதவரம் என்று ஜாலியாக இருந்த எரிக் மர்டினை எப்படி போலீஸார் கண்டு கொள்ளவில்லை?

  • 2001லிருந்து 2010 வரை என்ன செய்து கொண்டிருந்தான்?
  • சுமார் 10 ஆண்டுகள் சென்னயில் / தமிழகத்தில் அவன் எவ்வாறு தனது காலத்தைக் கழித்தான்?
  • எப்படி அவன் செலவுகளுக்கு பணம் கிடைத்து வந்தது?
  • வெளிநாட்டவன் என்பதால் எப்படியும் தான் போலீஸாரிடம் சொல்லியிருக்க வேண்டும். எப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் முதலியோர் உதவி செய்தனர்?
  • பதிலுக்கு அவன் அவர்களுக்கு என்ன கொடுத்தான்?
  • அவ்வாறு கொடுப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது?
  • அங்கேயே எப்படி 10 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செய்து வஎதான் எனத் தெரியவில்லை! காலை-மாலை அல்லது ஏதாவது ஒரு நேரம் வெளியில் வராமல் இருந்திருக்க முடியாது.
  • ஆகவே 2001லிருந்து 2010வரை, நிச்சயமாக போலிஸுக்கு அவன் இருப்பது தெரிந்தேயிக்கிறது. இருப்பினும் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வேதபிரகாஷ்

© 17-11-2010


 

[1] வேதபிரகாஷ், சென்னை “செக்ஸ் நகரமாக” மாறுகிறதா?, 30-11-2009, https://socialterrorism.wordpress.com/2009/11/30/chennai-becomes-sex-city-haven-for-pedophiles-and-fugitives/

[2] வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – II , https://socialterrorism.wordpress.com/2009/12/06/will-heum-buwaneswari-devanathan-and-media-2/

[3] வேதபிரகாஷ், வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?, https://socialterrorism.wordpress.com/2010/02/20/will-heum-horowitz-alan-chennai-haven-for-pedophiles/

[4] வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – III , https://socialterrorism.wordpress.com/2009/12/12/will-heum-buwaneswari-devanathan-media-3/

[5] வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள் – IV, https://socialterrorism.wordpress.com/2009/12/20/will-heum-buwaneswari-devanathan-media-4/

[6]வேதபிரகாஷ், வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?, https://socialterrorism.wordpress.com/2010/02/20/will-heum-horowitz-alan-chennai-haven-for-pedophiles/

[7] வேதபிரகாஷ், ,சென்னைசெக்ஸ் நகரமாகமாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

https://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

வேதபிரகாஷ், வில் ஹியூம்குழந்தைக் கற்ப்பழிப்பாளி! ,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக்-கற/

[8] கோவாவில் எல்லாவிதமான விபச்சாரமும் சாதாரணமானது, சகஜமானது. பணம் வருகிறது, உள்ள பல்நாட்டு முதலாளிகளை சந்தோஷப்படுத்துகிறது என்பதனால் அரசாங்கள் கண்களைமூடிக்கொண்டு இருக்கிறது.

[9] புவனேஸ்வரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்மான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதலியன பிரமிப்பாக இருக்கிறது. வெளிநாட்டவர்கள் அங்கு அதிகமாக வந்து செல்வதும் மர்மமாக உள்ளது. கடந்த வருடங்களில் பல ஃபிடோஃபைல்கள் / குழந்தை பாலியல் வன்முறையாளர்கள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

[10] பூரியும் இதே நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வந்துள்ள வெளிநாட்டுக் குழுக்களிடம் இதைப் பற்ரியேல்லாம் கேட்கிறர்களா இல்லையா என்றதெல்லாம் தெரிவவில்லை.

[11] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன் I – IV பார்க்கவும்.