Posts Tagged ‘நாத்திகம்’

தருமபுரி ஆதீனம் (1926-2019) இருந்தது, மறைந்தது, சாதித்தது: அவரைச் சார்ந்தவர்கள் ஏமாற்றியது, வழக்குகள் போட்டது, சதாய்த்தது!

திசெம்பர் 7, 2019

தருமபுரி ஆதீனம் (1926-2019) இருந்தது, மறைந்தது, சாதித்தது: அவரைச் சார்ந்தவர்கள் ஏமாற்றியது, வழக்குகள் போட்டது, சதாய்த்தது!

Dharmapuri Adheenam passed away-Tamil news cutting

1971லிருந்து தலைமையில் இருந்த மடாதிபதி: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 450 ஆண்டுகள் பழமையான தருமபுரம் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்திற்கு சொந்தமாக திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன்கோவிலில் வைத்தியநாத சாமி கோவில், திருபுவனத்தில் சரபேஸ்வரர் கோவில், திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்பட 27 புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன[1]. இந்த ஆதீன மடத்தின் 26-வது குருமகா சன்னிதானமாக சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்தார். 1926-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிறுகாட்டூரில் பிறந்த இவர், விருத்தாசலம் தேவார பாடசாலையில் படித்தார்[2]. தருமபுர ஆதீனத்தில் வித்வான் பட்டம் பெற்றுள்ளார். அங்கு கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார்[3]. தேவஸ்தானத்தில் அதிகநாட்களில் பணியாற்றியவரை கட்டளை தம்பிரான் சுவாமிகளாக நியமித்தனர்[4]. அன்று முதல் தருமை ஆதீனத்தின் கட்டளை தம்பிரான்களில் ஒருவராக பணி செய்துவந்தவரை 1971 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுர ஆதீனத்திற்கு இருபத்தாறாவது மடாதிபதியாக பொறுப்பேற்க செய்தனர்[5]. தற்கிடையில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்ட ஆதீனம், கட்டளை தம்பிரானாக தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு மடத்தில் இருந்த ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகளை 2017 பிப்ரவரி மாதம் ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமித்து அனைத்து பூஜைகளையும் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது[6].

Dharmapura Adheenam, with Periyavar and Jeyandra

பற்பல சேவைகள் செய்து வந்த மடாதிபதி: ஆதீனம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.. ஆதீனம் சார்பாக, சமயம் சார்ந்த பணிகள் மட்டுமின்றி, மயிலாடுதுறையில் மகப்பேறு நிலையம் அமைத்தது முதல், சிங்கிப்பட்டி காசநோய் ஆஸ்பத்திரி, அடையார் புற்றுநோய் ஆஸ்பத்திரி போன்ற பொது நிறுவனங்களுக்கு ஏராளமான நிதி உதவியை இவர் செய்துள்ளார். இதை தவிர எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்கவும் இவர் எடுத்த முயற்சி ஏராளம். இன்றும்கூட இவர் வகுத்த பாதையில்தான் ஆதீனத்தின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. அதேபோல, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை மாவட்ட மக்கள் வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களையும் செய்தனர். அப்போது, மக்களுக்காக துணை நின்றவர் தருமபுரம் ஆதீனம்தான்.. சர்ச்சைகளுக்கு புகழ்போன நித்தியானந்தா, இவரையும் கடந்த 2012-ல் விட்டு வைக்கவில்லை.[7]. “மதுரை ஆதீனமாக தாம் நியமிக்கப்பட்டதை விமர்சிக்கும் தருமபுரம் உள்ளிட்ட ஆதினங்கள் மீது பிடதி பீட பக்தர்கள் மான நஷ்ட வழக்கு தொடுப்பார்கள்,” என்று அன்றே எச்சரிக்கையும் விடுத்திருந்தது நினைவிருக்கலாம்[8]. பல நல்ல செயல்களை முன்னெடுத்து.. மக்களின் ஒற்றுமைக்காகவும், நல்வழிக்காகவும் அரும்பாடு பட்ட தருமபுரம் ஆதீனத்தின் மறைவு பக்தகோடிகளுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Dharmapura Adheenam, younger days

04-12-2019 அன்று இயற்கை எய்திய மடாதிபதி: இவர் கடந்த 49 ஆண்டுகள் குருமகா சன்னிதானமாக இருந்து வந்தார். அவருக்கு 93 வயது ஆகிறது. இந்தநிலையில் வயது மூப்பு காரணமாக குருமகா சன்னிதானத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2-ந் தேதி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இம்மடத்திற்கு இருக்கும் கோடிக்கணக்கான சொத்திற்கு, இவர் வெளிநாட்டிற்கே சென்று சிகிச்சைப் பெற்றிருக்கலாம். ஏனெனில், திராவிடப் பாரம்பரியம் பின்பற்றும் அரசியல்வாதிகள் அதைத்தான் செய்து வருகிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி 04-12-2019 அன்று மதியம் 2.40 மணிக்கு குருமகா சன்னிதானம் மரணம் அடைந்தார். இதனையடுத்து உடன் சென்றிருந்த தருமபுரம் ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மரணம் அடைந்த குருமகா சன்னிதானத்தின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு கொண்டு வந்தார்.

Dharmapura Adheenam, with Periyavar and Jeyandra Saraswati and others
05-12-2019 அன்று பார்வைக்கு வைக்கப் பட்டது: மாலை 5.40 மணிக்கு குருமகா சன்னிதானத்தின் உடல், கொலுபீடத்தில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆதீனத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குருமகா சன்னிதானத்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. 06-12-2019 அன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் உள்ள சைவ ஆதீனங்களின் குருமகா சன்னிதானங்கள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் வருகை தந்து குருமகா சன்னிதானத்திற்கு அஞ்சலி செலுத்தினர். ஆதீனம் மறைவுக்கு மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்[9]. இதைத் தொடர்ந்து, பாரம்பரிய ஆதீனங்களான மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், ரத்னகிரி ஆதீனம், மாவட்ட ஆட்சியர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்[10]. அன்று மாலை 4 மணி அளவில் குருமகா சன்னிதானத்தின் உடலை சிவிகை பல்லக்கில் எழுந்தருள செய்து தருமபுரம் மேலவீதியில் உள்ள மேலகுருமூர்த்தத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய சன்னதியில் குருமகா சன்னிதானத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Dharmapuri Adheenam with Jendra Saraswati, Kanchi mutt

மடம், கோவில் சொத்துகளை அனுபவித்துக் கொண்டு, ஆதீனத்தின் மீதே வழக்குப் போட்ட சைவர்கள்: தருமபுரி ஆதீனம் போல, வேறெந்த ஆதீனமும், பல விதங்களில் தாக்குதல்களுக்கு உள்ளாகவில்லை எனலாம். நிலத்தை அனுபவித்த பக்தர்களே பலவித வழக்கு தொடுத்தனர்! உதாரணத்திற்கு, ரூ 28,350/- செலுத்த முடியாது என்று வைத்தியநாதன், ராஜலட்சுமி, கலைச்செல்வி, ஜயந்தி, ஆதீனத்தின் மீது வழக்குத் தொடுத்ததை என்னென்பது? 1946லிருந்து ஆதீனத்தின் தேங்காய் தோப்பில் இருந்து வருமானத்தை வைத்துப் பிழைத்து, கொழுத்து, ஆதீனம் மீதே வழக்கு போட்டான் என்றால், அவன் ஏவ்வளவு பெரிய சைவன், இந்துவாக இருந்திருக்க வேண்டும்[11]. ஆதீனத்தை வீட்டு சொந்தக்காரர், வாடகைக்கு இருப்பவன் நிலைக்குக் கொண்டு வந்து, சட்டத்தை வளைத்து, சிவன் சொத்தைக் கொள்ளையடிக்கும் கும்பல்[12]. வாடகைக் காரர், குத்தகைக் காரர்கள் செத்தப் பிறகு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்குகளைத் தோற்க வைக்கும் வித்தைகளை, இந்த சிவனடியார்க்ளிடமிருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்[13]. இவ்வாறு பல வழக்குகளை ஆதினம் மீது போட்டிருக்கிறார்கள், ஆனால், சிவன் சொத்தைக் கொள்ளை அடித்தது, அடிக்கிறது சத்தியம்!

Dharmapura Adheenam, P. Jagadesan, Karunanandan

நாத்திகர்களின் தாக்குதல்: 2005ல் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை மாநாடு, ஏ.வி.எஸ் கல்லூரியில் நடந்தது. ஆதீனம் கலந்து கொண்டு “இந்துமதம் முக்கியத்துவம்” குறிப்பிட்டு ஆசியுரை வழங்கினார். பாரத நாட்டு பழம்சிறப்பு முதலியவற்றைப் பற்றி எடுத்துக் காட்டினார். ஆனால், அது, திராவிடர் கழக ஆசாமிகளுக்குப் பிடிக்கவில்லை. அப்பொழுது நாத்திக பி. ஜகதீசன் மறுத்துப் பேசியது, கல்லூரி ஆசிரியர்கள் மற்ற மாநாடு பிரதிநிதிகளை திகைப்படையச் செய்தது. சென்னை பல்கலைக்கழக சரித்திர பேராசிரியர், பாரதி தாசன் பல்கலை துணை வேந்தர் என்றெல்லாம் பொறுப்பு வகித்தவர், பாத்தியதை இல்லாமல், அவ்வாறு எதிர்த்து பேசியது கண்டிக்கத் தக்கது. கல்லூரியை நட்த்தி வரும் மடாதிபதி, துவக்க விழாவில், ஆசி கூறி அவர் பேசும் பேச்சை, ஜகதீசன் போன்றோரால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால், அவருடைய இந்து-விரோத பேச்சை எப்படி, இந்துக்கள் ஏற்ருக் கொள்வர். இருப்பினும், ஆணவம்-அகம்பாவம், அரசியல் பின்னணிகளை வைத்துக் கொண்டு தான், திமிருடன் அவ்வாறு பேசியதை மற்றவர்கள் எடுத்துக் காட்டினர். இந்த மாதிரி ஆட்களை கூப்பிட்டுருக்கக் கூடாது, என்று வெளிப்படையாகவே சிலர் பேசினர்.

© வேதபிரகாஷ்

06-12-2019

Thiruvaduthurai Adheenam Abhishekam

[1] மாலை மலர், தருமபுரம் ஆதீனம் மரணம், பதிவு: டிசம்பர் 05, 2019 08:14 IST

[2] https://www.maalaimalar.com/news/district/2019/12/05081421/1274732/Dharmapuram-Adheenam-passes-away.vpf

[3] தினமலர், தருமபுரம் ஆதீனம் முக்தி அடைந்தார், Updated : டிச 04, 2019 16:28 | Added : டிச 04, 2019 16:18.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2426408

[5] நக்கீரன், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் காலமானார்!!, Published on 04/12/2019 (17:33) | Edited on 04/12/2019 (17:40),செல்வகுமார்

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/mayiladuthurai-dharmapuram-adheenam-passed-away

[7] தமிழ்.ஒன்.இந்தியா, தருமபுரம் ஆதீனம் 26வது குரு மகா சந்நிதானம் 96 வயதில் காலமானார்! By Hemavandhana | Published: Wednesday, December 4, 2019, 17:16 [IST]

[8] https://tamil.oneindia.com/news/thanjavur/darumapuram-aadheenam-26th-gurumaga-sannidhaanam/articlecontent-pf419584-370425.html

[9] தினத்தந்தி, தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக சுவாமி முக்தி – கண்ணீர் மல்க அஞ்சலி, பதிவு : டிசம்பர் 05, 2019, 07:48 PM

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/12/05194809/1060444/Tharumapuram-Athinam-Sanmuga-Thesiga-Swami-Death.vpf

[11] https://indiankanoon.org/doc/197287/

[12]  https://indiankanoon.org/doc/168891900/

[13] https://indiankanoon.org/doc/100623053/

பிராமணாள் கபே பிரச்சினை – ஸ்ரீரங்கத்தில் “விடுதலை”யின் படி வீரமணி பேச்சு!

நவம்பர் 7, 2012

பிராமணாள் கபே பிரச்சினை – ஸ்ரீரங்கத்தில் “விடுதலை”யின் படி வீரமணி பேச்சு!

திருவானைக்காவலில் வீரமணி பேசியதாக “விடுதலை” வெளியிட்டுள்ளதை அப்படியே பதிவு செய்யப்பட்டு, குறிப்பான திரிபுவாதங்களுக்கு, தவறான விளக்கங்களுக்கு அடிக்குறிப்பில் விமர்சனம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழக முதல்வர் பிராமணாள் பெயரை நீக்க முயற்சிக்க வேண்டும் இல்லையேல் தொடர் போராட்டம்[1]: தெருப்பெயரில்ஜாதிஇருக்கக்கூடாதுஎன்றுஆணைபிறப்பித்தவர்முதல்அமைச்சர்எம்.ஜி.ஆர்எம்.ஜி.ஆர். அரசுஎன்றுசொல்லிக்கொள்ளும்தமிழகமுதல்வர் பிராமணாள்பெயரைநீக்கமுயற்சிக்கவேண்டும்இல்லையேல்தொடர்போராட்டம்தமிழர்தலைவர்அறிவிப்பு – சிறீரங்கத்தில் உள்ள உணவு விடுதியில் முளைத்திருக்கும் பிராமணாள் பெயரை நீக்க தமிழக முதல் அமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும்; இல்லையேல் அப்பெயர் நீக்கப்படும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. திருவானைக்காவலில் 4.11.2012 அன்று மாலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது[2], “இன்றையப் பொதுக் கூட்டம் வரலாற்றுச் சிறப்பைப் பெற்று விட்டது. இன இழிவை ஒழிக்கக் கூட்டப்பட்டுள்ள பொதுக் கூட்டம்”, என்று தொடர்ந்தார்.

காவல்துறை நடந்து கொண்டது சரியா?: இந்தப் பிரச்சினையில் காவல்துறை நடந்து கொண்ட போக்கு வருந்தத்தக்கது. இத்தகு நடவடிக்கைகளுக்காக காவல்துறையின்மீது எங்களுக்குக் கோபம் இல்லை; மாறாக பரிதாபப்படுகிறோம். திராவிடர் கழகத்தின் வரலாற்றில் எந்த காலகட்டத்திலும் வன்முறைக்கு இடம் இல்லை; எத்தனையோ மாநாடுகள், பேரணிகள், போராட்டங்களை நடத்தி வந்துள்ளதே – எந்த இடத்திலாவது வன்முறைக்குக் காரணமாக திராவிடர் கழகம் இருந்ததுண்டா? காவல்துறையினர் தாக்கினால்கூட அவர்களின் முகத்தைப் பார்க்காதே – முதுகைக் குனிந்து காட்டு என்று சொன்னவர் தந்தை பெரியார் அல்லவா! காலிகளால் எங்கள்மீது தாக்குதல்கள் தொடுக்கப் பட்ட பொழுதுகூட, பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் திராவிடர் கழகம் நடந்ததுண்டா? திராவிடர் கழகத்தின் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பதற்குமுன் இக்கழகத்தின் செயல்பாடுகள்பற்றி ஒருகணம் காவல்துறை சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா? காவல்துறையில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அல்லவா! 1929ஆம் ஆண்டு  செங்கற்பட்டில் நடந்த  முதல்  சுயமரியாதை மாநாட்டில்  தீர்மானமும் இந்த வகையில் இயற்றப்பட்டதுண்டே! இந்த வரலாறு எல்லாம் தெரியுமா?

பார்ப்பனர் மாநாட்டில் என்ன கோஷம் போடப்பட்டது?: இதே திருச்சியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி ஊர்வலம் நடத்தி என்னையும், என் குடும்பத்தைப்பற்றியும் எவ்வளவு கேவலமாக கோஷம் போட்டார்கள்? வீரமணியின் மனைவியைப் பொதுவுடைமை ஆக்கு என்று கோஷம் போட்டு அவர்களின் தகுதியை வெளிப்படுத்தி கொள்ளவில்லையா? “போய்ப்பார்அந்த அம்மாகொடுப்பதைவாங்கிக்கொண்டுவா!”, என்றுதான் சொன்னோமே தவிர, பதிலுக்குப் பதில் அவர்கள் கையாண்ட முறையைப் பின்பற்றவில்லையே!

பழனியில் பார்ப்பனர்கள் என்ன செய்தனர்?: 1981இல்பழனியில் என்னைப் போல உருவம் செய்து பாடையில் வைத்துத் தூக்கிச் சென்றவர்கள் பார்ப்பனர்கள் அல்லவா! அதுபற்றி பத்திரிகையாளர்கள் என்னைக் கேட்ட போதுகூட நான் கோபப்படாமல் எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. ஒரு சூத்திரன் பிணத்தை நான்கு பார்ப்பனர்கள் தூக்கிச் சென்றார்களே – இது எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி (பலத்த கரவொலி!) என்றுதானே சொன்னேன்.

மா-சேதுங் சொன்னது – என்ன?: சீனாவில் புரட்சி நடத்திய மா-சேதுங் சொன்னது தான் என் நினைவிற்கு வருகிறது. நம் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்களை, நம் எதிரிதான் தீர்மானிக்கிறான் என்று சொன்னதை இங்கு நினைவுபடுத்துகிறேன் (பலத்த கரவொலி!). இதே சிறீரங்கத்தில் ரெங்கநாதன் கோயிலுக்கு முன் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டதே – அதனால் எந்த கெடுதல் வந்து விட்டது? அதனை எதிர்த்துக்கூட உச்சநீதிமன்றம் வரை சென்றார்களே – வெற்றிபெற முடிந்ததா? அதிலும் பெரியார் தானே வெற்றி பெற்றார்[3].

2012-இலும்நாங்கள்சூத்திரர்களா?: நாங்கள் என்ன கேட்கிறோம்? 2012-இலும் நாங்கள்  சூத்திரர்களாக இருக்க வேண்டுமா? சூத்திரர்கள் என்றால் என்ன? நீங்கள் எழுதி வைத்த அசல் மனுதர்மம் இதோ என் கையில் இருக்கிறது[4]. இதில் எட்டாவது அத்தியாயம் 415ஆவது சுலோகம் என்ன சொல்லுகிறது? யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன்[5], விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குலவழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளி ஏழு வகைப்படுவர்[6]. சூத்திரர்கள் என்றாலே தொழிலாளியாம். நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த 2012-இலும் பிராமணாள் என்று போர்டு மாட்டினால் எங்களை சூத்திரர்கள் – பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்று சொல்வதாக ஆகாதா? இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

காந்தியார்மீதானஇழிவைத்துடைத்ததும்யார்?: காந்தியாரையே அவமதித்தவர்கள் ஆயிற்றே பார்ப்பனர்கள்? ஆதாரத்தோடு கூறுகிறேன் – இதோ என் கையில் இருப்பது தமிழ்நாட்டில் காந்தி எனும் நூலில் அதன் 521ஆம் பக்கத்தில் காணப்படும் செய்தியைத்தான் குறிப் பிடுகிறேன். நீதிக்கட்சித் தலைவர்கள் ஏ.டி. பன்னீர்செல்வமும், பிரபல வழக்கறிஞரான கரந்தை உமா மகேசுவரம் பிள்ளையும் காந்தியாரைச் சந்தித்தபோது தமிழ்நாட்டில் நிலவும் பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினைபற்றி பேசப்பட்டது.

அந்தச்சந்திப்பில்காந்தியார்என்னகூறினார்?: இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டுகளுக்குமுன் நான் சென்னைக்கு வந்தபோது எஸ். சீனிவாச அய்யங்கார் வீட்டுத் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்திருந்தேன். இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறார் என்று காந்தியார் குறிப்பிட்டார் என்றால் இதன் பின்னணி என்ன? இந்தவுரையாடல் நடந்தது 1927 செப்டம்பர் 16இல்; சில ஆண்டுகளுக்கு முன் என்று காந்தியார் சொன்னது – 1925ஆம் ஆண்டுக்கு முன் – சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தொடங்காத காலம். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்காத கால கட்டத்தில் காந்தியாருக்கேகூட உரிய இடம் சீனிவாச அய்யங்காரின் தாழ்வாரம்தான். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பிறகு காந்தியார் சீனிவாச அய்யங்கார் வீட்டுக்குள் போக முடிந்தது – அவரது மனைவியார் சீனிவாச அய்யங்காரின் அடுப்பங்கரை வரை[7] செல்ல முடிந்தது! காந்தியார்மீதே சுமத்தப்பட்ட இழிவைத் துடைத்தெறிந்தது தந்தை பெரியார் தானே – இந்த இயக்கம் தானே!

அரசுஆவணங்களில்சூத்திரர்இழிவைஒழித்ததுயார்?: 1927ஆம் ஆண்டு வரை கூட அரசுப் பதிவேடுகளில் சூத்திரன் என்று இருந்ததே! 1927இல் நடத்தப்பட்ட பார்ப்பனர் அல்லாத மாநாட்டில் அந்த இழிவு சுட்டிக் காட்டப்பட்ட பிறகுதானே நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அந்தப் பிறவி இழிவு – அரசு ஆவணங்களில் ஒழிக்கப் பட்டது. அய்.நா. மன்றத்தில் 199 நாடுகள் அங்கம் வகிக்கின்றனவே – எந்த ஒரு நாட்டிலும் இந்த நாட்டைத் தவிர சூத்திரன் என்ற பிறவி இழிவு உண்டா? மாண்புமிகு சூத்திரன்தானே! நம் மக்கள் அமைச்சர்களாக இருக்கலாம் ஆனாலும் மாண்புமிகு சூத்திரன் தானே! நம் தமிழர்கள் நீதிபதிகளாக இருக்கலாம். ஆனாலும் மாண்பமை சூத்திரர்தானே! மனுதர்மம் இருக்கும்வரை…இந்து லா என்று சொல்லப்படக் கூடிய அரசமைப்புச் சட்டத்தில் ஆதார நூல்கள் வரிசையில் மனுதர்மம்தானே இன்று வரைக்கும் அடிப்படை – மறுக்க முடியுமா? மனுதர்ம சாஸ்திரம் அங்கீகரிக்கப் படும் வரை எல்லோரும் சூத்திரர்கள் தானே? இது ஒன்றும் திராவிடர் கழகத்துக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்லவே!

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51 a (h) பிரிவு என்ன கூறுகிறது? குடி மக்களின் அடிப்படைக் கடமை என்பதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே, மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும், விஞ்ஞான மனப்பான்மையை ஊட்ட வேண்டும் – இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறப்பட் டுள்ளதே – இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் இந்த அடிப்படைக் கடமையினைத் தானே திராவிடர் கழகம் செய்து கொண்டு இருக்கிறது? இதற்குத் தடை போட ஆசைப்படலாமா காவல்துறை? காவல்துறையின் இந்த அணுகுமுறை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் அல்லவா! மானமுள்ள தமிழன் பிராமணாள் போர்டு மாட்டியிருக்கும் உணவு விடுதிக்குச் செல்லலாமா? ரயில் நிலையங்களில் மாட்டப்பட்டு இருந்த பிராமணாள் – சூத்திராள் – இதராள் போர்டு நீக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த இயக்கம் இந்த இயக்கம் – தலைவர் தந்தை பெரியார் அல்லவா!

செவ்வாய்க்கிரகம்போகலாம்[8]கர்ப்பக்கிரகத்திற்குள்நுழையமுடியாதா?: இன்னும் தமிழன் கட்டிய கோயில்களின் கர்ப்பக்கிரகத்துக்குள் தமிழன் நுழைய முடியாத நிலை! இதற்காக திராவிடர் கழகம் – தந்தை பெரியார் போராட முன்வந்தபோது கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது தந்தை பெரியார் அவர்களின் ஆணையை ஏற்று அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை இயற்றினாரே – இரண்டாவது முறையும் தீர்மானம் போட்டாரே – அதனை உச்சநீதிமன்றத்தில் முடக்கி வைத்திருப்போர் யார்? பார்ப்பனர்கள் தானே? செவ்வாய்க்கிரகத்துக்குப் போகலாம்; கோயில் கருவறைக்குள் போக முடியாதாம் – போகக் கூடாதாம்! இந்து அறநிலையத்துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. கோயில் அர்ச்சகர்கள் இனி பஞ்சகச்சம் கட்டியிருக்க வேண்டுமாம் – குடுமியும் வைத்திருக்க வேண்டுமாம்[9]. ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது என்றால், ஏன் இதுவரை அது வற்புறுத்தப்படவில்லை. என்ன திடீர் என்று ஞானோதயம்? பல கோயில்களில் அர்ச்சகர்கள் இல்லை என்று இன்றைக்கு இந்து ஏட்டில் வெளிவந்துள்ள செய்தி  கூறுகிறதே.

அர்ச்சகர்பயிற்சிபெற்றோர் 207 பேர்: அர்ச்சகர் பயிற்சியை முறைப்படி பெற்றுள்ள 207 பேர்கள் வெளியில் இருக்கிறார்களே, அவர்களைக் கொண்டு அந்தக் காலி இடங்களை நிரப்பலாமே! தினமலர் ஏடே திராவிடர் கழகத்தின் போராட்டத்தை வரவேற்று எழுதி யுள்ளதே பிராமணர் என்பது ஜாதிப் பெயர் அல்ல, வர்ணப் பெயர்[10] என்று கூறி அறிவுரை கூறியிருக்கிறதே கவனத்தில் கொள்ள வேண்டாமா?

எம்.ஜி.ஆர். என்னகூறினார்?: எங்கள் அரசு எம்.ஜி.ஆர். அரசு என்று நமது முதல் அமைச்சர் கூறுகிறார்! அந்த எம்.ஜி.ஆர். ஆணையே பிறப்பித்தாரே – எந்தத் தெருப் பெயரும் ஜாதிப் பெயராக இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தாரே, அதன்படி டி.எம். நாயர் சாலை என்பதுகூட டி.எம். சாலை[11] என்றுதானே மாற்றப்பட்டது? அந்த எம்.ஜி.ஆர். வழி வந்த அரசு பிராமணாளை அனுமதிக்கலாமா? எடுக்கச் சொல்ல வேண்டாமா?

சிறைஒன்றும்எங்களுக்குப்புதிதல்ல!: அப்படி எடுக்கப்படாவிட்டால் எடுக்க வைப்போம் – அதற்கான போராட்டத்தில் குதிப்போம்! அந்தப் போர்டு எடுக்கப்படும் வரை போராட்டம் முற்றுப் பெறாது. டிசம்பர் முதல் தேதி, சென்னையில் கூடவிருக்கும் திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவில் போராட்டத் திட்டம் அறிவிக்கப்படும். கருஞ்சட்டைத் தோழர் களே, தயாராவீர்! எங்களுக்கொன்றும் சிறை புதிதல்ல – சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும் – எங்கள் வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.

கட்டுப்பாடுள்ளஇயக்கம்: இது கட்டுப்பாடு மிகுந்த இயக்கம், தலைமை கட்டளையிட்டால் நூலிழை பிறழாமல் நடந்துகொள்ளக் கூடியவர்கள். (இந்த நேரத்தில் கழகத் தலைவர் கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார். அனைவரும் ஒரு நிமிடம் எழுந்திருங்கள் என்றார் அனைவரும் எழுந்து நின்றனர். அனைவரும் அமருங்கள் என்றார்; அனைவரும் அமர்ந்தனர் – இதனைச் சுட்டிக்காட்டி இந்தக் கட்டுப்பாட்டுக்குப் பெயர்தான் கருஞ்சட்டைப் பட்டாளம் – திராவிடர் கழகம் என்று குறிப்பிட்டார்[12].

தனிப்பட்டவர்மீதுகாழ்ப்புணர்வுஇல்லை: நாங்கள் மான உணர்வுக்காக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். யார்மீதும் எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பகை இல்லை. காழ்ப்பும் கிடையாது. இந்தக் கூட்டம் முடிந்தவுடன் யாரும் அந்த உணவு விடுதி பக்கம்கூட செல்லக் கூடாது – வீட்டுக்கு நேராகப் போக வேண்டும்.

தந்தைபெரியாரைஅவமதித்துப்பேசுவதா?: அமைதிக்காகப் பாடுபடக் கூடியவர்கள் நாங்கள்; அமளியை ஏற்படுத்த அல்ல; இன்று உண்ணாவிரதம் என்று கூறிப் பார்ப்பனர்கள் என்ன பேசினார்கள். தந்தை பெரியாரையே அவன் – இவன் என்று பேசி இருக்கிறார்கள்[13]. அதற்கு உரிய முறையில் பரிகாரம் காணப்படும் (பலத்த கை தட்டல்) என்று குறிப்பிட்டார்.

 

கட்சிகளைத்தூக்கிஎறியுங்கள்!: கட்சிகளைத் தூக்கி எறியுங்கள், உங்களின் மான உணர்வை எண்ணிப் பாருங்கள் – உங்கள் சுயமரியாதைபற்றி நினைத்துப் பாருங்கள். இந்த இழிவை ஒழிக்க சிறை செல்ல வேண்டும் என்றால் அதற்கு நாங்கள் தயார்! இப்பொழுதே சிறை செல்ல பட்டியலைக் கொடுத்து விட்டனர் கழக இளைஞரணியினரும், மாணவர்களும். இந்த இயக்கம் இல்லாவிட்டால், நாங்கள் தொடர்ந்து பணி செய்யாவிட்டால் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதார் நெற்றியிலும் சூத்திரன் என்று பச்சைக் குத்தி இருக்க மாட்டானா? ஒரு பெரியார் பிறந்ததால்தானே நாம் மான உணர்ச்சி பெற்றோம். சுயமரியாதை உணர்வு பீறிட்டுக் கிளம்பியது திருவானைக்காவலில்தமிழர்தலைவர்.



[1] செவ்வாய், நவம்பர் 06, 2012  VIDUTHALAI EPAPER

[3] அதே பெரியார் நீதிமன்றத்திற்கு செல்லாமல் டபாய்த்து, நன்றாக வாங்கிக் கட்டிகொண்டதை முன்பொரு இடுகையில், உச்சநீதி மன்ற தீர்ப்பின் ஆதாரத்துடன் எடுத்துக் கோட்டியுள்ளேன்.

[4] பாவம், மனுதர்மத்தை எரிப்போம் என்று எரித்த பிறகுக்கூட, இவர் கையில் இருக்கிறதாம். அப்படியென்றால், நிறையப் பிரதிகளை வாங்கி வைத்திருப்பார் போலும்! ஆனால், எடுத்துக் காட்டும் போது, விளக்கம் கொடுக்கும் போது மட்டும், திரித்துக் கூறுவதை வழக்கமக வைத்திருக்கிறார்.

[5] இப்படியொரு வார்த்தயே இல்லை. குருஹஜஹ = என்றதை வீட்டில் பிறந்தவன் என்றுதான் பொருள் கொள்லவேண்டும். அவ்வாறுதான் மொழிபெயர்ப்பாளர்கள் பொருட்கொண்டுள்ளனர்.

R. N. Sharma, Manusmriti (translation of M. N. Dutt – Sanskrit verses with translation), Chaukhamba Sanskrit Pratishthan, New Delhi, 1998, p.389.

A. C. Burnell, The Ordinances of Manu, Oriental Books, New Delhi, 1971, p.243.

[6] இந்த சுலோகத்தில் இவர் குறிப்பிட்டபடி அத்தகைய வார்த்தைகள் இல்லை. வேண்டுமென்றே துவேஷத்தை வளர்க்க அத்தகைய வார்த்தைகளை உபயோகித்துள்ளார்.

[7] இங்கும் உண்மையினைத் திரித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டார் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒன்றும் மாற்று விளக்கம் கொடுக்கும் அளவில் ஒன்றும் இல்லை.

[8] செவ்வாய் கிரகத்திற்கு யார் வேண்டுமானாலும் போக முடியாது. அதற்கான படிப்பு, பயிற்சி, அனுபவம், அறிவு முய்தலியவற்ரைப் பெற்றவர்கள் போகலாம்.

[9] குடுமி வைப்பது பார்ப்பனத்துவமோ, பிராமணத்துவமோ இல்லை. கருணாநிதியே குடுமி வைத்திருந்தார். இன்று கூட, வடவிந்தியர்களில் பலர் குடுமி வைத்திருக்கின்றனர். பீஹார், யு.பி மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்தோர், பலர் குடுமியுடன் சென்னையிலே உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

[10] இதுதான், இரட்டை வேடம் என்பது. பிறகு எதற்கு இந்த போராட்டம்? இந்து, தினமலர் – பார்ப்பன நாளிதழ்கள் என்று கரித்துக் கொட்டி, துவேஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் போது, ஏனிந்த போலித்தனமான கரிசனம்?

[11] “நாயர் சாலை” என்றுதான் இருந்து வருகிறது. “(ரெட்டி) தெரு” என்பதில், ரெட்டி அடைப்புக் குறிகளில் போட்டுள்ளார்கள். ஆனால், “நாயர்” அடைப்புக் குறிகள் இல்லாமல்தான் இருக்கிறார்!

[12] இது “கட்டுப்பாடு” என்பதா, இல்லை சொன்னதை செய்வோம் என்ற நிலையில் உள்ளார்கள் என்பதா?

[13] தமிழகத்தில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பழக்கமே போய் விட்டது. “பெரிசு” என்று கேலிபேசி “அது-இது” என்றுகிண்டல் செய்யும் அளவிற்கு வந்துள்ளது. மேலும் கடவுளையே, அவநிவன் என்று கூறும் வழக்கமும் உள்ளது. ஆகையால், இதில் என்ன வந்து விட்டது என்று தெரியவில்லை. முதலில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும், வளர வேண்டும்., பிறகு தான் பழக்கம் ஏற்படும். இப்பொழுது கழகங்களினால் ஏற்படுத்தப் பட்டுள்ள சீர்கேட்டைக் களைய நூறு ஆண்டுகள் ஆகும்.

திராவிடர் கழகம் எந்த மதத்திற்கும், இனத்திற்கும் எதிரானது அல்ல – வீரமணி பேச்சு! (பிராமணாள் கபே பிரச்சினை தொடர்கிறது)

நவம்பர் 7, 2012

திராவிடர்  கழகம்  எந்த  மதத்திற்கும்,  இனத்திற்கும்  எதிரானது  அல்ல  –  வீரமணி  பேச்சு! (பிராமணாள் கபே பிரச்சினை தொடர்கிறது)

04-11-2012 (ஞாயிற்றுக்கிழமை): “பிராமாணாள் கபே” பிரச்சினையில் பெரியார் திராவிட கழகம் முந்தி கொண்டதை அறிந்த “இனமானத்தலைவர்” கலங்கிபோய், கூட்டத்தை அறிவித்து, அனுமதி கிடைக்காமல், நீதிமன்றத்திற்குச் சென்று, ஒருவழியாக, எந்த பிரச்சினையும் வராது என்று ஒப்புக்கொண்டதும், திருவானைக்காவல் பாரதி தெருவில் திராவிடர் கழக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அன்று பொலீஸ் அனுமதியுடன் நடந்தது[1]. ஊடகங்கள் இதைப் பற்றி குறைவாகவே செய்திகளை வெளியிட்டுள்ளன. நிச்சயமாக வீரமணி கூட்டத்தார் அமுக்கியே வாசித்துள்ளனர். ஜாதிப்பெயரை ஒழிக்க எந்த போராட்டத்துக்கும் தி.க தயாராக உள்ளது என கி.வீரமணி பேசினாலும், திகவினரே அல்லத் திராவிடத்துவ வல்லுனர்களே ஜாதிகளை தாராளமாகப் பரப்பியுள்ளதை தமிழக மக்கள் அறிந்துள்ளனர். அதனால், ஏதோ பேசவேண்டுமே என்று பேசியுள்ளது தெரிகிறது.

திராவிடர் கழகம் எந்த மதத்திற்கும்[2],  இனத்திற்கும்[3] எதிரானது அல்ல:மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்து வரவேற்றார். இவர் தாக்குதல் செய்த மனுவின் மீதுதான் அனுமதி வழங்கப்பட்டது[4] நகர தலைவர் குமார் கூட்டத்தில் தி.க தலைவர் கி.வீரமணி பேசியது, “திராவிடர் கழகம் பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுத்ததால் நீதிமன்ற அனுமதியோடு பொதுக்கூட்டம் நடத்தப்ப டுகிறது.   ஸ்ரீரங்கத்தில் எத்தனையோ மாநாடுகள்,  பொதுக்கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம்.  அப்போதெல்லாம் ஒரு சிறிய அசம்பாவித சம்பவங்களோ, கலவரமோ நடந்தது இல்லை.  திராவிடர் கழகம் எந்த மதத்திற்கும்,  இனத்திற்கும் எதிரானது அல்ல. ஜாதி ஒழிப்பு என்பது திராவிடர் கழகத்தின் தேசிய கொள்கையாகும். தந்தை பெரியார் அதற்காகதான் பாடுபட்டார். ஸ்ரீரங்கத்தில் ஜாதி பெயரில் ஓட்டல் நடத்துவதைதான் எதிர்க்கிறோம்[5].  சாதி ஒழிப்புக்காகவும்,  பெண்களின் உரிமைகளுக்காகவும் திராவிடர் கழகம் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறது.  ஆனால் வன்முறையில் இறங்கியது இல்லை.” [இதற்கான விமர்சத்தை அந்தந்த வரிக்கு, அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது].

தினத்தந்தி மற்றும் தினகரன் நாளிதழ்களில் வெளியான செய்திகள் இவை: தொடர்ந்து வீரமணி பேசியதாவது, “இதன் உண்மை நிலையை விளக்கத்தான் இந்த பொதுக்கூட்டம்.  மனுதர்மம் அரசியல் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் படவில்லை[6]. விஞ்ஞான பூர்வமாக சமுதாயம் வளரவேண்டும். அரசியல்சட்டத்தில் உள்ள உரிமைகள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் கடமை.  எனவேதான் ஜாதி பெயர் ஒழிப்பை கடமையாக எடுத்து செயல் படுகிறோம்[7].  எனவே இந்த இயக்கத்தோடு மோதிப் பார்க்க வேண்டும் என்று யாரும் நினைக்க வேண்டாம்[8].  அப்படி நினைத்தால் நாடே சிறைச்சாலையாக மாறும்.  மனுதர்ம சாஸ்திரங்களை அரசியல் சட்டம் அங்கீகரிக்ககூடாது[9].  இது திராவிடர் கழகத்திற்கு மட்டுமான பிரச்சினை அல்ல.  நாங்கள் எழுப்புவது முழக்கம் அல்ல[10].  இதற்காக எவ்வித போராட்டம்,  எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நடத்தவும் தயார்[11].  இது குறித்து வரும் டிசம்பர்  1ம் தேதி மத்திய செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும்”,  இவ்வாறு அவர் பேசினார்.  கூட்டத்தில் மாநிலத்துணை தலைவர் கலி.பூங்குன்றன், பொது செயலாளர் துரை சந்திரசேகர், ஜெயகுமார், அமைப்பு செயலாளர் ஒரத்தநாடு குணசேகர், தலைமைகழக பேச்சாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். நகர செயலாளர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.

திராவிடர் கழகம் பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுத்ததால் நீதிமன்ற அனுமதியோடு பொதுக்கூட்டம் நடத்தப் படுகிறது: அப்படியென்ன பிரச்சினை என்று தெரியவில்லையே? “ஸ்ரீரங்கத்தில் எத்தனையோ மாநாடுகள்,  பொதுக் கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம் ” என்றால், இப்பொழுது மட்டும் என்ன பிரச்சினை வந்துள்ளது? வேண்டுமென்றே, கோவிலின் கோபுரத்தின் முன்பாக பெரியார் சிலையை வைத்து, பிரச்சினையைக் கிளப்பியதே இந்ஹ திக தானா? ஏனெனில், இதேபோல, வேறெங்கும், குறிப்பாக சர்ச் மற்ரும் மாஸ்க்/மசூதி முன்பாக அப்படி சிலையை வைத்து தமது 100% நாத்திகத்தை நிரூபிக்கவில்லை. ஆகவே, இவர்களது நாத்திகம் “இந்துவிரோத” நாத்திகம் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அதனால் தான், முஸ்லீம்களும், கிருத்துவர்களும் தாராளமாக, இந்த காபிர்[12] / ஜென்டைல்[13] கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு இந்துக்களை இழிவு படுத்தி வருகிறார்கள்.

மனுதர்மம் அரசியல் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் படவில்லை  –  மனுதர்ம சாஸ்திரங்களை அரசியல் சட்டம் அங்கீகரிக்க கூடாது: இப்படி முன்னுக்கு முரணாக வீரமணி ஏன் பேச வேண்டும்? அம்பேத்கரால் இயற்றப்பட்ட “அரசியல் நிர்ணயச் சட்டத்தின்”படிதான், இந்தியாவில் சட்டப்பூர்வமாக நடந்து வருகிறது என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பிறகு வீரமணிக்கு என்ன சந்தேகம் என்று தெரியவில்லை. அரசியல் நிர்ணயச் சட்டத்தைத் திருத்த வேண்டுமா – அல்லது அத்தகைய முயற்சிகள் நடக்கின்றனவா – ஒருவேளை, ரகசியமாக விஷயம் இவருக்கு மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது. “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்” என்று சென்னை முழுக்க சுவரொட்டிகள் ஒட்டியபோது, யார் “சூத்திரர்களை” நினைவு படுத்தியது? கருணாநிதியா, வீரமணியா யார்? பிறகு ஏன் “சூத்திரப்பெயரை” ஆதரித்து, “பிராமணப்பெயரை” எதிர்க்க வேண்டும்?

ஜாதி பெயர் ஒழிப்பை கடமையாக எடுத்து செயல் படுகிறோம்:வீரமணி, “ஜாதி பெயர் ஒழிப்பை கடமையாக எடுத்து செயல்படுகிறோம்”, என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது, அப்படியென்றால், சாதிகளை ஒழிப்பதில்லை என்ற உண்மையை ஒப்புக் கொள்கிறார்.

  • சென்னையில் “(ரெட்டி) தெரு” (ஆவிச்சி பள்ளி அருகில் உள்ளது) என்று ரெட்டியை பிராகெட்டில் போட்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்!
  • “நாயர் தெருவுக்கு” (ரோஹினி இன்டர்நேஷனல் ஹோட்டல் அருகில்) பிராகெட் போடாமல் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்!
  • “நாயுடு ஹாலில்” (பாண்டி பஜார்) ஜொல்லு விட்டுக் கொண்டு, பெண்டு-பிள்ளைகளுடன் மார்கெட் செய்கிறார்கள்
  • “செட்டியார் ஹாலில்” (ஆழ்வா பேட்டை) பொருட்கள் வாங்குகிறாகள்.
  • “நாயர் டீ கடைகளில்” (தமிழகம் எங்கும்) டீ சாப்பிடுகிறார்கள்.
  • “வாண்டையார் லாட்ஜில்” தங்குகிறர்கள்.
  • “நாடார் மரத்தொட்டியில்” விறகு, ஓலை, மூங்கில் வாங்குகிறார்கள்.
  • “ரெட்டியார் மெஸ்ஸில்” டிபன் சாப்பிடுகிறார்கள்.
  • உள்ள ஜாதிச்சங்களைப் பற்றி கவலை இல்லை.

இப்படித்தான் இவர்கள் தங்களது ம்கத்தான கடமையினை செய்து வருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

07-11-2012


[2] ஆனால், தமிகத்திலேயே, இதை யாரும் நம்புவதில்லை. இந்துமதவிரோத நாத்திகத்தை வைத்துக் கொண்டு, ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் கூட்டம் என்று தமிழர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள்.

[3] “இனம்” என்ற சித்தாந்தம் இப்பொழுது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், இன்னும் விடாப்படியாகப் ப்டித்துக் கொண்டு, காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கும் இந்த திராவிடக் கூட்டங்களை, அதனால் தான் அனைத்துலக ரீதியில் கண்டுக் கொள்வதில்லை.

[5] சாதிகள் பெயரில் சங்கங்கள், கடைகள், ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள் என இருந்தாலும், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, இதனை எதிர்த்துப் பிழைப்பு நடந்த ஏன் திகக்கூட்டத்தினர் இறங்கியுள்ளார்கள் என்று தெரியவில்லை.

[6] இப்படி முன்னுக்கு முரணகப் பேசி-எழுதி வருவதை நன்றக கவனிக்க வேண்டும்.

[7] உண்மையிலேயே இந்த கடமை உணர்வை தமிழ் மக்கள் கண்டு-கண்டு வியந்து வருகிறார்கள். சாதியின் பெயரால் யார் அடித்துக் கொண்டு சாகிறார்கள் என்று மக்களுக்குத் தெரியாததா என்ன?

[8] இவை மிரட்டல் இல்லாமல் வேறென்ன? இப்படி யாரை மிரட்டுகிறார் என்று வெளிப்படையாக அல்லவா சொல்லவேண்டும்?

[9] மேலே சொன்னதை நினைவு கூறவும். இப்படி மாற்றி-மாற்றிப் பேசி, மக்களைக் குழப்புவதில் இவர்களுக்கு இணை இவர்கள் தாம்.

[11] ஆமாம், டிரஸ்ட் பணத்தில் இவ்வாறு பொதுகூட்டங்கள் நடத்துவதில் எந்த ஆச்சரியமும் இல்லையே. மேலும் பொறியியல் கல்லூரி முதலிவவை நடத்துவதால் கோடிகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. அதில் வரும் வட்டிப் பணத்தை இப்படி செலவு செய்து, விளம்பரப் படுத்துக் கொள்வதில் என்ன சித்ததந்தம் வேண்டிக் கிடக்கிறது?

[12] இஸ்லாம் மதத்தில் நம்லிக்கையில்லாதவர்கள் – அதாவது முஸ்லீம்கள் அல்லலதவர்கள் எல்லோருமே காபிர்கள் தாம்! இந்த அடிப்படையில் தான் ஜிஹாத் என்ற போர் நடத்தப் படுகிறது. தாலிபான், அல்-குவைதா, முஜாஹித்தீன், போன்ற தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஜிஹாத் போர்வையில் மக்களைக் கொன்று வருகிறார்கள்.

[13] கிருத்துவர்களுக்கும், கிருத்துவர்கள்-அல்லாதவர்களை இப்படி மோசமான பெயரில் அழைக்கிறார்கள். ஒன்று இவர்கள் கிருத்துவர்களாக மதமாற்றப் படவேண்டும் அல்லது புனிதபோரில் கொல்லப்பட வேண்டும். அப்பொழுது தான் ஏசு, மறித்தவர்களை உயிர்ப்பித்து சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார்.

பார்ப்பன எதிர்ப்பா, பாசிஸ கொழுப்பா – ஸ்ரீரங்கத்தில் திகவினரின் போலித்தனமான பிரச்சாரம், குழப்பம் மற்றும் சலசலப்புகள்!

நவம்பர் 4, 2012

பார்ப்பன எதிர்ப்பா, பாசிஸ கொழுப்பா – ஸ்ரீரங்கத்தில் திகவினரின் போலித்தனமான பிரச்சாரம், குழப்பம் மற்றும் சலசலப்புகள்!

திருவரங்கத்தில் திகவினர் (பற்பல சிதறிய குழுமங்கள்[1]) ஜாதி துவேசத்தைக் கிளப்பி சட்டம் ஒழுங்கு முறைப் பிரச்சினையை கிளப்புவதில் தீவிரமாக இருக்கிறர்கள் என்றே தெரிகிறது. புயல்-மழை என்றிருந்தாலும், இப்பிரச்சினையை வைத்துக் கொண்டு, “ஜெயலலிதா தொகுதி” / “பிராமணப் பெண்மணி ஜெயலலிதா” என்ற நோக்கில்[2] தினசரி போராட்டங்களில் திகவினர் மேற்கொள்ள வேண்டும் என்று துடிப்பதும் தெரிகிறது. மற்றவர்கள் இதனைக் கண்டு கொள்ளமல் இருந்தாலும், ஊடகங்கள் கூட ஒதுங்கி விட்டாலும், “நக்கீரன்” நித்தி-சமாசாரம் போல நித்தியமும் நியமமாக ஏதாவது கிடைக்குமா என்று ஏங்குவதும் தெரிகிறது[3]. இப்பொழுதெல்லாம் அரசியல் ரீதியில் கைது செய்யப்படுவது என்பது “குழந்தை விளையாட்டு” ஆகிவிட்டது. காலையில் கைது செய்தால், மாலையில் விடுதலை செய்யப்பட்டு விடுகிறார்கள். வழக்குகளும் போடப்படுவதில்லை அல்லது போட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. “இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்” என்று கையெழுத்திட்டு வெளி வந்து “சிறை சென்ற தியாகிகள்” ஆகிவிடுகின்றனர். நாளைக்கு அதனைச் சொல்லியும் காட்டுகின்றனர் (காட்டுவார்கள்).

ஆறு மாதங்களாக நடந்து வரும்  ஹோட்டல் ஸ்ரீ கிருஷ்ணய்யர்   பிராமணாள் கபே: ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ண அய்யர் என்பவர் “பிராமணாள் கஃபே” என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார் என்று ஊடகங்கள் கூறிவருகின்றன. ஆனால், உண்மையில் அதன் பெயர் ” ஹோட்டல் ஸ்ரீ கிருஷ்ணய்யர்   பிராமணாள் கபே” என்றுதான் உள்ளது. “ஸ்ரீ கிருஷ்ணய்யர்” என்று பெரியதாக போட்டு, கீழே வலப்பக்கத்தில் “பிராமணாள் கபே” என்றுள்ளது. ஆனால், ஸ்ரீரங்கத்தில் 34/24, பாவை டவர்ஸ்,  ஈ.வி.எஸ். ரோட் என்னும் முகவரியில் கிருஷ்ணன்[4] என்பவர் நடத்தி வரும் ” ஸ்ரீ கிருஷ்ணையர்  ஹோட்டல்  பாரம்பரிய பிராமணாள் கபே ” என்னும் பெயரில்  ஆறு மாதங்களாக நடைபெறுகிறது[5] என்று பலவாறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, இதை ஏதோ முக்கியமான விஷயம் போல பிரச்சினையை இந்த திக-குழுமங்கள் எடுத்துக் கொண்டு கலாட்டா செய்வதில் யாருக்கு லாபம் என்று தெரியவில்லை.

 

12-10-2012 (வெள்ளிக்கிழமை): நக்கீரனும் இதனை அவ்வாறே திரித்து செய்தி வெளியிட்டுள்ளது. “ஸ்ரீரங்கத்தில்கிருஷ்ணஅய்யர்என்பவர்பிராமணாள்கஃபேஎன்றஹோட்டலைநடத்திவருகிறார். இதற்குதிராவிடர்கழகத்தைச்சேர்ந்தவர்கள்பலத்தஎதிர்ப்பைதெரிவித்துபோராட்டங்கள்நடத்தினர்என 2012 அக்டோபர் 12ம்தேதிநக்கீரன்இதழில்செய்திவெளியானது[6], என்று நக்கீரன் சொல்கிறது.  இந்த நிலையில் பெரியார் காலத்தில் அவரால் போராடி மூடப்பட்ட பிராமணாள் கஃபே தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தொகுதியான ஸ்ரீரங்கத்தில் திடீரென்று முளைத்திருப்பது திராவிடர் கழகத்தில் உள்ளவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றும், இதனால் அந்த ஹோட்டல் பெயரை அழிக்கும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் என்றும், அந்த இயக்கத்தின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் அறிவித்திருந்தார்.

20-10-2012 (சனிக்கிழமை): ஆனால், பிட்நோட்டீஸில், ““பிராமணாள் கபே” உரிமையாளரிடம், “பிராமணாள் கபே” என்ற பெயரை நீக்கி விடுமாறும், வேண்டுமானால் அய்யர் ஓட்டல் என்றோ அக்ல்லது அய்யங்கார் ஓட்டல் என்றோ பெயர் பலகையை வைத்து கொள்ளுங்கள் என்று நாம் அமைதியான வழியில், எடுத்துக் கூறியும் அவர் பார்ப்பன திமிரோடு பதில் சொல்லியதுடன் பெயரை மாற்றிக்கொள்ளவும் மறுத்துள்ளார்”, என்று அச்சிட்டுள்ளார்கள். ஏற்கெனவே, மேலே ” ஸ்ரீ கிருஷ்ணையர் ஹோட்டல்” என்றுதான் உள்ளது, பிறகு ஏன், “வேண்டுமானால் அய்யர் ஓட்டல் என்றோ அல்லது அய்யங்கார் ஓட்டல் என்றோ பெயர் பலகையை வைத்து கொள்ளுங்கள்” என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன தெரியவில்லை. பிறகு, “நாம் அமைதியான வழியில், எடுத்துக் கூறியும் அவர் பார்ப்பன திமிரோடு பதில் சொல்லியதுடன் பெயரை மாற்றிக்கொள்ளவும் மறுத்துள்ளார்” என்று சேர்த்துக் கூறுவது என்ன தன்மை என்று தெரியவில்லை. அவருக்கு “பார்ப்பனத் திமிர்” என்றால், இவர்களுக்கு என்ன “திமிர்” உள்ளது, இப்படி பொய்யாகப் பிரசாரம் செய்வதற்கு?

தீவிரவாதிகளைப் போல மிரட்டுவது ஏன்?: திகவினர், “நாம் அமைதியான வழியில்…..” என்று பொடி வைத்திருப்பது, வன்முறையில் ஈடுபடுவோம் என்று தமது சுயரூபத்தைக் காட்டுவது போல உள்ளது. இதே கொலைவெறிக் கூட்டாத்தார் தான், பழைய மாம்பலத்தில், தருப்பைப்புல் முதலியவற்றை விற்றுக் கொண்டிருந்த அப்பாவி பிராமணர்களை கத்திகளால் வெட்டினர்[7]. அப்படியென்றால், இங்கும் அத்தகைய வன்முறையில் ஈடுபடுவோம் என்று மிரட்டுவதைப் போலத்தானே இருக்கிறது? பிறகு என்ன ஏதோ புத்தர்-காந்தி போன்று “நாம் அமைதியான வழியில், எடுத்துக் கூறியும்……” என்று அச்சிட்டு விநியோகிக்க வேண்டும்?
பிராமணாள்கஃபே”யா,பிராமணாள்கபே”யா?: அதன்படி 20.10.2012 அன்று காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பிருந்து ஊர்வலகமாக புறப்பட்டனர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், என்று . இதில் போலீசாருக்கும், ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 150 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், “பிராமணாள் கஃபே” பெயரை நீக்காமல் விடமாட்டோம் என்றும் கோவை ராமகிருஷ்ணன் கைது செய்யப்படும் முன் செய்தியாளர்களிடம் கூறினார். பலகையில் “பிராமணாள் கபே” என்றுதான் உள்ளது, “பிராமணாள் கஃபே” என்றில்லை. பாவம், தமிழைக்கூட சரியாகப் படித்து, எழுதத் தெரியவில்லை போலும்!

திகவின்பொதுக்கூட்டம்தள்ளிப்போனதுஏன்?: அதனால் 20-10-2012ல் போராட்டம்-கைது என்றால், அதற்காக ஒரு போராட்டம் 26-10-2012 நடக்கிறது[8]. இவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களை விடுவிக்க இன்னொரு போராட்டம் இருக்கலாம். இப்படி 10-20-30 பேர்கள் செய்வதை, உள்ளூர் மக்கள் கண்டு கொள்ளாமல் தத்தம் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். 10-20-30 பேர்கள் என்றல் அதற்கேற்றபடி 50-100-150 போலீசார் வேறு வந்து விடுகிறார்கள். பிறகு, அவர்களே, வீடியோவையும் எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி “விளம்பரப் போராட்டங்கள்” நடக்கின்றன. சிதறிய திகக்கள் இப்படி போராட்டம் செய்வதைக் கொண்டு, வீரமணி பதறி விட்டார் போலும். “விடுதலையில்” கூட்டம் நடக்கும் என்று அறிவித்தனர்.

28-10-2012 அன்று அறிவித்தப்படி திகவினர் கூட்டத்தை நடத்தவில்லை: 28-10-2012 (ஞாயிற்றுக் கிழமை) அன்று துணை கருவூலம், ஸ்ரீரங்கம் அருகில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டபோது, “வன்முறை” ஏற்பட வாய்ப்புள்ளது என்று போலீஸார் அனுமதி கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் திருச்சி திகத் தலைவர் எம். சேகர், மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்குதல் செய்தார். 31-10-2012 (புதன் கிழமை) அன்று விசாரித்த நீதிபதி அனுமதி ஏன் கொடுக்கப்படவில்லை என்று கேட்டபோது, சட்டம்-ஒழுங்குநிலைப் பிரச்சினையை அரசு “பப்ளிக் பிராசுக்யூட்டர்” எடுத்துக் காட்டியபோது, டி. வீரசேகரன் என்ற மனுதாரர் சார்பில் வாதாடிய வக்கீல், திக தமிழகத்தில் பலயிடங்களில் கூட்டங்கள் நடத்தி வருவதாகவும், அவற்றில் எந்தவித அசம்பாவித நிகழ்வுகளும் ஏற்படவில்லை, அதனால், அனுமதி வேண்டும் என்று தெரிவித்தார்[9]. “எந்த பிரச்சினையும் வராதா”, என்று கேட்டபோது, “பெரியார் கொள்கைகளைப் பரப்புவதில் திராவிடக் கழகம் ஈடுபட்டுள்ளது, அவர் சமூகத்தில் இருந்த மூடநம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், பகுத்தறிவின்மை, அநீதி முதலியவற்றை எதிர்த்துள்ளர்[10]”, என்று விளக்கினார். அப்படியென்றால், பிரச்சினை இல்லாமல் கூட்டம் நடத்த மூன்று இடங்களைத் தேர்தெடுக்குமாறு கேட்டபோது, “திருவானைக்காவல்” ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்படி, நவம்பர் 4, 2012 அன்று அங்கு பொதுகூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது[11].

மத-உட்பிரிவுகள் அவரவர் நம்பிகைகளுக்குட் பட்டது: சைவர்கள் விஷ்ணு கோவில்களில் பூஜை செய்வார்களா, வைணவர்கள் கோவில்களில் பூஜை செய்வார்களா என்றெல்லாம் இங்குக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், பதிலுக்கு அல்லது வாதத்திற்கு,

  • ஷியா[12] மசூதியில் சன்னிகள் தொழுகை செய்வார்களா, சன்னி மசூதியில் ஷியாக்கள் தொழுகை செய்வார்களா,
  • அஹமதியா மசூதியில் சன்னிகள் தொழுகை செய்வார்களா, சன்னி மசூதியில் அஹமதியாக்கள் தொழுகை செய்வார்களா,
  • போரா மசூதியில் சன்னிகள் தொழுகை செய்வார்களா, சன்னி மசூதியில் போராக்கள் தொழுகை செய்வார்களா,
  • கத்தோலிக்கச் சர்ச்சில்[13] புரொடஸ்டென்ட்டுகள் சாமி கும்பிடுவார்களா, புரொடஸ்டென்ட்டு சர்ச்சில் கத்தோலிக்கர்கள் சாமி கும்பிடுவார்களா,
  • “செவந்த் டே அட்வென்டிஸ்ட்” சர்ச்சில் கத்தோலிக்கர்கள் சாமி கும்பிடுவார்களா, கத்தோலிக்கச் சர்ச்சில் செவந்த் டே அட்வென்டிஸ்ட்டுகள் சாமி கும்பிடுவார்களா,

என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. அப்படி கேள்வி கேட்க ஆரம்பித்தால், கிருத்துவர்களும், முஸ்லீம்களும் சங்கடத்தில் ஆழவேண்டியிருக்கும். இதனை திகவினர் புரிந்து கொள்ள வேண்டும். “பெரியார்” வழி நடப்பவர்களிலேயே 10-20 என்று பிரிவுகள் அந்த பகுத்தறிவுவாதிகள் புரிந்த் கொள்ள வேண்டும்[14]. நாத்திகப் போர்வையில் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்றால், அந்த நாத்திகம் எல்லா மதத்தினருக்கும் ஒரே மாதிரியாக செக்யூலரிஸ இந்தியாவில் இருக்க வேண்டும். அவ்வாறு திகவினர்-நாத்திகர்-நாத்திகர் போர்வையில் கிருத்துவர்கள் அல்லது யாராக இருந்தாலும், உண்மையினை அறிந்து ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் கேள்விகள் கேட்க வேண்டி இந்துக்கள் தள்ளப்படுவார்கள்.

இறையில் ரீதியல் விவாதத்தைக் கிளப்பினால் அவ்வாறே மற்ற மதங்களைப் பற்ரியும் விமர்சிக்க முடியும்: இந்துத்வா, திரவிடத்துவா, கிருத்துவத்துவா, முகமதுத்துவா என்பெதெல்லாம் அந்தந்த முறைகளைக் குறிக்க “தத்துவம்” என்ற வார்த்தையினை சேர்த்து உபயோகப்படுத்தப் படுகிறது. இதற்கு ஏதோ தாந்தோனித்தனமான விளக்கத்தை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. “உண்மையான கிருத்துவன்” என்றால் கிருத்துவனுக்கு என்ன என்பது தெரியும், ஆனால், அத்தகைய தத்துவமே, தனியாக வேறு மதமாகி விடாது. “மோமின்” என்றால் முஸ்லீமுக்கு என்ன என்பது தெரியும், ஆனால், அத்தகைய தத்துவமே, தனியாக வேறு மதமாகி விடாது. ஆகவே, அதையெல்லாம் தன்மானமுள்ள கிருத்துவர்கள் / முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்று யாரும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

காக்காக்கறி, பன்னிக்கறி, மாட்டுக்கறி, மீன்கறி, சாப்படுவது சாப்பிடாடது அவரவர் நம்பிக்கை, சம்பிரதாயம் அல்லது உணவு முறை: ஒவ்வொரு மதத்திலும் பற்பல விலக்குகள் உள்ளன. அவற்றை அந்தந்த மதத்தினர் அந்தந்த இடம், காலம் முதலியவற்றைக் கொண்டு மாற்றியமைத்துக் கொள்வர். விலங்குகள் / பறவைகள் என்று வரும்போது, ஒவ்வொரு மதத்திலும் இது புனிதமானது / நல்லது அல்லது அபசகுனமானது / தீயது என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல அவற்றின் இறைச்சி, எலும்பு, நகம் முதலியவற்றை உபயோகப்படுத்துவதிலும் பற்பல நம்பிக்கைகள் உள்ளன. ஒரு மதத்தினருக்கு புனிதமாக இருப்பது, மற்ற மததினருக்கு அவ்வாறாக இருப்பதில்லை. அதனால், நாத்திகர் அவற்றில் ஒன்றும் பெரிய வித்தியாசம் காட்டிவுட முடியாது.ஆகவே காக்காக்கறி, பன்னிக்கறி, மாட்டுக்கறி சாப்படுவது சாப்பிடாடது அவரவர் நம்பிக்கை, சம்பிரதாயம் அல்லது உணவு முறை ஆகும். இதைப் படுக்கும் மதநம்பிக்கையாளர்கள் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்வார்கள். ஆகவே அவை விளக்கப்படவில்லை.

03-11-2012 (சனிக்கிழமை): முதலமைச்சர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்திற்கு 3-வது முறையாக வருகிற 3-ந் தேதி செல்கிறார்[15]. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் ஸ்ரீரங்கம் பகுதியில் பல்வேறு சீரமைப்புபணிகள் செய்து வருகிறது. அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் தெற்கு சித்திரை வீதி மற்றும் மேல சித்திரை வீதி சந்திப்பில் மேடையும், விழாவுக்கு வரும் பொது மக்கள் மற்றும் பயனாளிகள் அமர தகர கூரையுடன் கூடிய பந்தல் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.  திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு முதல்வர் ஜெயலலிதாவின் கார் வரும் வழிகளில் புதிய சாலைகள் அமைக்கும் பணியும், சாலைகள் செப்பனிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள குப்பைகள் மற்றும் மண் மேடுகளை அகற்றும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.  சாலை ஓரங்களில் செம்மண் கொட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம்ரங்கநாதர் சுவாமி கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை கோவிலில் உள்ளே சேஷராயர் மண்டபம் மற்றும் ராமானுஜர் சன்னதிக்கும் இடையே உள்ள அன்னதான கூடத்தில் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் உள்ள வசந்த மண்டபத்தை சுற்றி உள்ள நந்தவனம் பராமரிப்பு இன்றி இருந்தது. இதனை தூய்மைபடுத்தி பராமரிக்குமாறு கடந்த முறை ஸ்ரீரங்கம் வந்த முதல்வர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இந்த நந்தவனம் தற்போது தூய்மைப்படுத்தப்பட்டு புதிய மலர் செடிகள் வைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு உள்ளது. நந்தவனத்தில் உள்ள சிலைகளும் சீர்படுத்தப்பட்டு வண்ணப்பூச்சும் செய்யப்பட்டு உள்ளது. சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ள தரைத்தளத்தை சீரமைத்தும் இந்த பகுதியில் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்திலான கம்பி வலை வேலி அமைக்கும் பணிகளும் தற்போது நடந்து வருகின்றன. முதல்-அமைச்சரின் வருகைக்காக ஸ்ரீரங்கம் புதுப்பொலிவு பெற்று வருகிறது.

04-11-2012 (ஞாயிற்றுக்கிழமை): திக கூட்டம்.

© வேதபிரகாஷ்

03-11-2012


[1] பெரியார் பெயரில் இப்பொழுது பற்பல கூட்டங்கள் உள்ளன. பெரியாரின் எழுத்துகள், பேச்சுகள் முதலியவை பதிப்பிட்டபோது, எப்படி வேற்றுமைகள் இருந்தனவோ, அதே போல இப்பொழுதும் இக்குழுக்கள் தனித்தனியாக வேலை செய்து கொண்டிருக்கின்றன.

[2] “அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு” என்ற பெயரில் கிருத்துவ தெய்வநாயகம் விநியோகித்த பிட்நோட்டீஸின் படி. குழம்பியக் குட்டையில் அசிங்கத்தைச் சேர்க்கும் வல்லமையுள்ள கிருத்துக் கூட்டத்தினர், இதில் ஏன் பங்கு கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை. கிருத்துவத்தில் பல சாமியார்கள் காமக்குரூர-ஆபாசக் குற்றங்களில் ஈடுபட்டுள்ள போது, அவர்களை திருத்துவதிலோ, மாற்றவோ, தண்டிப்பதிலோ இவர்களுக்கு ஏன் கவலையில்லை என்று தெரியவில்லை. போப்பே தண்ணீர் தெளித்து விட்டார் என்றதால் முழு அளவில் ஜல்ஸாவில் இறங்கிவிட்டனர் போலும்.

[3] “சென்ஷேஸனல் ஜார்னலிஸம்” விஷயத்தில் “நக்கீரன்” எப்பொழுதுமோ, கிளுகிளுப்பு, பரபரப்பு ஏற்படுத்தி சுற்றை அதிகரிக்க முயற்சி மேற்கொள்வது தெரிந்த விஷயம் தான்.

[4] அதாவது, நக்கீரன் இவ்வாறு மாற்றி-மாற்றி எழுதி துவேஷத்தைக் காட்டுவது நன்றாகவே வெளிப்படுகிறது.

[7] அப்பொழுது கைது செய்யப்பட்ட திகவினர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அதாவது, அவர்கள் தண்டிக்கப் பட்டார்களா அல்லது “காலையில் கைது – மாலையில் விடுதலை” என்ற ரீதியில் விட்டுவிட்டார்களா? ஏனெனில், ஊடகங்கள் அதற்குப் பிறகு செய்திகளைக் குறிப்பாக வெளியிடவில்லை.

[8] Volunteers of the Thanthai Periyar Dravidar Kazhagam (TPDK) on 26-10-2012 staged a demonstration near the Swadeshi cotton mill. The agitation was to condemn the Tamil Nadu governemnt for the arrest of TPDK volunteers at Srirangam. Shouting slogans against the Tamil Nadu governemnt, the agitators demanded the immediate release of all the arrested.

http://news.webindia123.com/news/Articles/India/20121026/2089900.html

[9] The matter came up for hearing on Wednesday. The petitioner’s advocate, D Veerasekaran, told the court that the Dravidar Kazhagam had conducted many meetings across the state, where no untoward incidents had happened.

http://timesofindia.indiatimes.com/city/madurai/Dravidar-Kazhagam-allowed-meeting-in-Srirangam/articleshow/17042286.cms

[10] Besides, meetings were conducted to spread the message of Thanthai Periyar, who worked for uprooting deep-rooted superstitious beliefs, customs, irrationalism and injustice prevalent in society, the advocate submitted.

http://timesofindia.indiatimes.com/city/madurai/Dravidar-Kazhagam-allowed-meeting-in-Srirangam/articleshow/17042286.cms

[11] திருச்சி மாவட்ட திராவிடர் கழக தலைவர் சேகர், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: ஸ்ரீரங்கம் சார்நிலை கருவூல அலுவலகம் அருகே நவம்பர் 4ம் தேதி திக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டரிடம் மனு கொடுத்தோம். பொதுக்கூட்டத்தில் திக தலைவர் வீரமணி பங்கேற்கிறார். இந்த இடத்தில் ஏற்கனவே அதிமுக பொதுக்கூட்டம் நடத்தி உள்ளது. திக பொதுக்கூட்டத்திற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி சுதாகர் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் வீரசேகரன், இளங்கோ ஆஜராகினர். ஸ்ரீரங்கம் அருகே உள்ள திருவானைக்காவலில் நவ. 4ம் தேதி திக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். www.dinakaran.com/District_Detail.asp?Nid=113839&cat=504

[12] இஸ்லாம் மதத்தில் ஷியா சுன்னி / சன்னி, அஹமதியா, போரா, என்று நூற்றுக்கணக்கான உட்பிரிவுகள் உள்ளன. அவைகள் குடிகள் / குமுக்கம் / குழுமம் என்ற போர்வைகளில் ஜாதிகளை விட இருக்கமாகக் கட்டப் பட்டுள்ளன.

[13] கிருத்துவத்திலும் இப்படி லட்சக்கணக்கான பிரிவுகள் உள்ளன – கத்தோலிக்கர், புரொடஸ்டென்ட்டு, செவந்த் டே அட்வென்டிஸ்ட், ஜேஹோவா விட்னெஸ், டிரினிடேரியன், யுனிடேரியன்,……………

[14] உண்மையிலேயே பெரியாரைப் பின்பற்றுகிறோம் என்றால் இப்படி டஜன் கணக்கில் கட்சிகள், பாசறைகள், சங்கங்கள், பிரிவுகள் இருப்பது ஏன் என்று அவர்கள் விளக்க வேண்டும்.