Posts Tagged ‘பெண் கொத்தடிமை’

விபச்சாரத்தை ஒழிக்க முடியாவிட்டால் அதனை சட்டபூர்வமாக்குக : உச்ச நீதிமன்றம்!

திசெம்பர் 12, 2009

விபச்சாரத்தை ஒழிக்க முடியாவிட்டால் அதனை சட்டபூர்வமாக்குக : உச்ச நீதிமன்றம்!

வியாழன், 10 டிசம்பர் 2009 01:23
விபச்சாரத்தை சட்டபூர்வ நடவடிக்கை மூலம் ஒழிக்க முடியாவிட்டால் அதனை சட்டபூர்வமாக்க வேண்டியதுதானே என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது உலகின் மிகப் பழமையான தொழில் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதனை சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலம் உங்களால் ஒழிக்க முடியவில்லை எனில், அதனை ஏன் நீங்கள் சட்டபூர்வமாக ஆக்கக் கூடாது? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் பட்நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கோபல் சுப்ரமணியனிடம் கேள்வி எழுப்பினர்.

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி இத்தொழிலை மேற்பார்வையிட்டு, இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் மருத்துவ உதவிகள் செய்தல் போன்றவற்றைச் செய்யலாமே என்றும் அவர்கள் மத்திய அரசைக் கேட்டனர். இளமைப்பருவம் காக்கும் இயக்கம் (Bachpan Bachao Aandolan), சைல்ட்-லைன் முதலியோர் தாக்கல்செய்த பொதுநல வழக்கை விசாரித்தபோது, இக்கேள்வி எழுப்பப்பட்டது.

விபச்சாரம் என்பது ஏதாவது ஒரு வகையில் மறைமுகமாக நடைபெறுகிறது. பெண் குழந்தைகள் முதல் பெண்கள்  வரை கொத்தடிமை மற்றும் பல வழிகளில் அடக்கப்பட்டு அவர்கள் விபச்சாரத்திற்கு உட்படுத்தப் படுத்தப் படுகிறார்கள். அரசு ஏழ்மையைப் போக்குவதில் தோல்வியடைந்துள்ளது. ஆனால் GDP உயர்வடைகிறது என்று பேசிக்கொண்டிருக்கிறோம். 30%மாக இருந்த கொத்தடிமை மற்றும் விபச்சாரிகள் 37%மாக உயர்ந்தபோது, எத்தகைய முன்னேற்றத்தை நாம் அடைந்துள்ளோம் என்று எங்களுக்கு நன்றாகவே தெரிகிறது என்றனர் அந்த இரு நீதிபதிகள்! இந்தவிதமாகத்தான், நாம் வளர்கிறோம் என்றால், அத்தைகைய வளர்ச்சி பற்றி நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என்றனர்.

பெண்கள் கடத்தப்படுவதைத் தடுக்க பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது சிறந்த தேர்வாக அமையும் என்று கூறிய நீதிபதிகள், தண்டனை அளிப்பதன் மூலம் இந்தத் தொழிலை உலகின் எந்தப் பகுதியிலும் ஒழிக்க முடியவில்லை. எனவே, அதனை நீங்கள் சட்டபூர்வமாக ஆக்கக் கூடாது என்றும் கேட்டனர். இது குறித்து பரிசீலிப்பதாக அரசு வழக்கறிஞர் உறுதியளித்தார்.

இடர்பெயரும் தொழிலாளிகள் விபச்சாரிகளிடம் செல்வது சகஜமாக இருக்கிறது. ஆகவே எய்ட்ஸ் போன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தினால் விபச்சாரத்தை குறைக்கலாம், நாட்டில் அதிக அளவில் நடைபெறும் குழந்தைகள் கடத்தல் குறித்து சிறுவர் நல அமைப்பு ஒன்று தொடுத்த பொது நல வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

பாலியல் தொழிலாளர்களின் எதிர்ப்பு

“விபச்சாரத்தை சட்டரீதியாக அனுமதியளிக்கப்பட்டால், இத்தொழில் வியாபாரமாக்கப்பட்டு மாஃபியா-முதலாளிகள், ஏஜென்டுகள், தரகர்கள் முதலியோர் பெண்களை மிகவும் கீழ்த்தரமக நடத்த் ஆரம்பித்துவிடுவார்கள். நாங்கள் ஏழ்மையினால் அவ்வாறு ரகசியமாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இது வீட்டின் பக்கத்தில் உள்ளவர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்குத் தெரிந்தால் நாங்கள் கேவலமாக நடத்தப் படுவோம். சமூகம் எங்களை ஒதுக்கிவைக்கும். எங்கள் குழந்தைகளின் எதிர்காலமுன் பாதிக்கும்”, எனெல்லாம் பாலியல் தொழிலாளர்கள் தங்களது கஷ்டங்களை எடுத்துக் கூறினர்.

மேலும், அத்தகைய நிலையில், மேனாட்டவர் மற்றும் இதர கூட்டத்தினர் இதில் ஈடுபட, மேன்மேலும் சிறுவர்-சிறுமியர்கள் பாதிக்கப் படுவர். ஏழ்மை, பசிக்கொடுமை மற்றும் குழந்தைகளின் படுப்பு என்ற காரணங்களுக்காகத் தான் இத்தொழிலில் ஈடுபடுகின்றனரேத் தவிர, யாரு விருப்பப்பட்டு செய்வதில்லை, என்ற கருத்துகளும் சொல்லப்படுகின்றன.