Posts Tagged ‘மனித குழுமங்கள்’

திருமணம் செய்ய மறுத்த காதலி மீது ‘ஆசிட்’ வீச்சு : காதலன் கைது!

ஏப்ரல் 27, 2010
திருமணம் செய்ய மறுத்த காதலி மீது ‘ஆசிட்’ வீச்சு : காதலன் கைது
ஏப்ரல் 28,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7357

Front page news and headlines today

திருச்சி : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலி மீது, ஆத்திரம் கொண்டு, அவரை கோவிலுக்கு வரச் சொல்லி, அவர் மீது’ ஆசிட்’ வீசிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சரண்யா (21). திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டில் உள்ள இந்திரா காந்தி கல்லூரி ஹாஸ்டலில் தங்கி, இரண்டாம் ஆண்டு பி.காம்., படிக்கிறார். வார விடுமுறை நாட்களில், சரண்யா திருச்சி ரயில்வே ஜங்ஷன் பின்புறம் உள்ள கல்லுக்குழியில் உள்ள தன் தாத்தா, பாட்டி வீட்டுக்குச் செல்வது வழக்கம்.சரண்யா,சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில், மேல்நிலை பள்ளி படிப்பை படித்துள்ளார். அப் போது, அதேபள்ளியில் படித்த ஏழுமலை மகன் ராமு என்கிற ராமஜெயத்துடன் (24) நெருங்கி பழகியுள்ளார். ஐந்தாண்டாக இருவரும் காதலித்து வந்தனர். பள்ளிப்படிப்பை முடித்த ராமஜெயம், கார் டிரைவராக பணியில் சேர்ந்தார். ஆறுமாதங்களுக்கு முன், சரண்யாவை திருமணம் செய்து கொள்ள, அவரது தாயாரிடம் பெண் கேட்டு ராமஜெயம் சென்றார்.அதற்கு, சரண்யாவின் தாயார் மறுத்துள்ளார்.

திருமணத்துக்கு அம்மா மறுப்பு தெரிவித்ததால், சில மாதங்களாக ராமஜெயத்துடன் மொபைல் போனில் பேசுவதைக் கூட, சரண்யா தவிர்த்துள் ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமஜெயம், நேற்று காலை எட்டு மணிக்கு, சரண்யாவை சந்திக்க, சென்னையில் இருந்து திருச்சி கல்லுக்குழியில் உள்ள தாத்தா வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த சரண்யாவிடம் பேசவேண் டும் என்று கூறியுள்ளார். சரண்யா, தன் பெரியம்மாவுடன் அருகிலுள்ள மாரியம்மன் கோவில் அருகே சென்று ராமஜெயத்துடன் பேசினார். அப்போது, ராமஜெயம் தன்னை திருமணம் செய்து கொள் ளுமாறு வலியுறுத்தினார். அதற்கு சரண்யா, வீட்டார் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமஜெயம், தான் எடுத்து வந்த ‘ஆசிட்’ டை சரண்யாவின் முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். ஆசிட் பட்டதில், சரண்யா முகத்தின் ஒரு பகுதி, கழுத்து ஆகியவை வெந்தது. அவர் எரிச்சல் தாங்க முடியாமல் அலறித்துடித்தார். சரண்யாவின் பெரியம்மா, உடனடியாக அங்கிருந்த டீக்கடையிலிருந்து இரண்டு குடம் தண்ணீரை கொண்டு வந்து சரண்யாவின் முகத்தில் ஊற்றினார். சரண்யா சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். திருச்சியில், கல்லூரி மாணவி சரண்யா முகத்தில் ஆசிட் வீசியது குறித்து, கன்டோன்மென்ட் போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள், ஆசிட் வீசி விட்டு தப்பி யோடிய ராம ஜெயத்தை பஸ் ஸ்டாண்ட், ஐங் ஷன் ஆகிய இடங்களில் தேடி வந்தனர்.

திருச்சி வக்கீல் ஒருவரின் உதவியோடு, ராமஜெயம் கன் டோன்மென்ட் போலீசில் சரணடைந்தார். ஆனால் கன்டோன்மென்ட் போலீ சாரோ ரயில்வே ஜங்ஷனில் பதுங்கியிருந்த ராமஜெயத்தை கஷ்டப்பட்டு பிடித்ததாக கூறினர். கைது செய்யப்பட்ட, ராமஜெயம் மீது போலீசார் வழக்குபதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

எவ்வளவு கோரமாக இருந்தாலும் திருமணம் செய்வேன்: காதலன் : ராமஜெயம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: சரண்யாவுக்கும், எனக்கும் கடந்த 2008ம் ஆண்டு, திருப்பதியில் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் நடந்தது. நாங்கள் 5 நாட்கள் அங்கேயே குடும்பமும் நடத்தினோம். இது யாருக்கும் தெரியாது. அதன்பின் சரண்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. பல ஆண்களுடன் அவர் மொபைலில் பேசியதை தெரிந்ததும் கேட்டேன். ஆனால், நான் அப்படியில்லை என்று மறுத்து விட்டார். அதன்பின் பல ஆண்களுடன் சரண்யா பழகிவருவதை தெரிந்து கொண்டேன். என்னையும் அவள் தவிர்த்து வந்தாள். அதனால் தான் எனக்கு கிடைக்காத காதலி, யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று ஆசிட் வீசினேன். ஆசிட் வீசியதில் அழகை இழந்த சரண்யா எவ்வளவு கோரமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். இவ்வாறு வாக்குமூலத்தில் ராமஜெயம் தெரிவித்துள்ளான்.

மரபணு ஆராய்ச்சியும், இன-மொழிவெறி திரிபுவாதங்களும்

திசெம்பர் 12, 2009

மரபணு ஆராய்ச்சியும், இன-மொழிவெறி திரிபுவாதங்களும்

மரபணு ஆராய்ச்சி அடிப்படையில் மறுபடியும் மற்றொரு ஆய்வை மேனாட்டவர் வெளியிட்டிருக்கின்றனர்.

அதன்படி, முதன் முதலில் மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றி, பிறகு மற்ற நாடுகளுக்குப் பரவினான் என்கிறார்கள்.

அதே நேரத்தில் ஆசியாவிலுள்ளவர்கள் எல்லொருமே கிட்டத்தட்ட, ஒரே மரபணு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று இப்பொழுது கூறுகின்றனர்.

குறிப்பாக சீனர்கள், இந்தியாவிலிருந்துத் தோன்றியவர்கள் என்று கூறுகிறார்கள்!

அலை-அலையாக ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் 40,000-50,000 வருடங்களுக்கு முன்பு வந்த மக்கள், இந்திய கடற்கரை வழியாக ஒரேதடவை இந்தியாவில் நுழைந்து அல்லது இடம் பெயர்ந்து, பிறகு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து, சீனா, ஜப்பான் நாடுகள் வரை பரவினர்.

அதே மாதிரி, வடகிழக்குதிசை வழியாக தென்மேற்கு ஆசிய நாடுகளுக்குப் பரவினர்.

இவ்வாறாக ஆப்பிரிக்காவிலிருந்த மக்கள், இந்தியாவிற்கு வந்து, பிறகு ஆசியா முழுவதும் பரவினர்!

“ஆசிய மரபணு வேற்றுமையின் வரைப்படம்”  (Mapping Human Genetic Diversity in Asia) என்ற ஆய்வுக் கட்டுரை, சமீபத்தைய விஞ்ஞானம் என்ற ஆய்வு-சஞ்சிகையில் வெளிவந்துள்ளது (Published 11 December 2009, Science 326, 1541 (2009)DOI: 10.1126/science.1177074).

இதில் சைனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், தாய்லாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளின் பலத்தரப்பட்ட விஞ்ஞானிகள் பங்கு கொண்டுள்ளனர்.

டி.என்.ஏ மாதிரிகள் 1,903 தொடர்பில்லாதத் தனிமனிதர்களிடமிருந்து 71 மக்கள் குழுமங்களைப் பிரதிபலிக்கிறார்போல, சைனா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், கொரியா, பிலிப்பைன்ஸ், தைவான், தாய்லாந்து முதலிய நாடுகளிலிருந்து எடுக்கப்பட்டன, மரபணு-பதிவுச் செய்யப்பட்டன.

பிறகு தொடர்பில்லாத 60 ஐரோப்பிய-அமெரிக்க, 60 யூருபா, 45 சைன மற்றும் 44 ஜப்பானிய மரபணு-பதிவுகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இவையெல்லாமே அந்தந்த நாடுகளின் நெறி மற்றும் மறுபார்வையிடும் நிறுவனங்களின் அனுமதியோடு பெறப்பட்டன.

75 மனித குழுமங்கள் 10 மொழிக் குடும்பங்ளைச் சார்ந்தவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

பிறகு, இந்த முடிவிற்கு வந்துள்ளனர், “When the genetic data in this study are considered together with the geographicaldistribution of the clusters and archeological and linguistic information, we propose thefollowing model of human migrations in Asia. The initial entry is likely to have followeda southern route to Southeast Asia (S58). From there, populations gradually movednorth, adapting to climatic and local selective pressures. Subsequently, andparticularly with the development of agriculture as a stimulus, populations in northernand central East Asia may have expanded southwards, altering the physicalcharacteristics of the original inhabitants.”

ஆனால், உடனே ஐரோப்பியர்கள் அத்தகைய ஆராய்ச்சி முடிவுகளை மறுக்க ஆரம்பித்துள்ளனர்.

முன்னமே அவர்களுக்கு, குறிப்பாக இனவெறி-சித்தாந்திகளுக்கு “ஆப்பிரிக்காவிலிருந்து” என்ற சித்தாந்தத்திற்கு உடன்பாடு இல்லை.

ஆகையால் “ஆப்பிரிக்காவிற்கு வெளியே” என்ற கருதுகோள்படி, மனிதத் தோற்றங்களின் ஆரம்பங்களை ஐரோப்பாவிலியேத் தேட ஆரம்பித்தனர்!