Posts Tagged ‘மலம்’

மினரல் வாட்டர் மோசடி – தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் நடக்கும் மிகப்பெரிய ஊழல்!

ஜூலை 3, 2013

மினரல் வாட்டர் மோசடி – தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் நடக்கும் மிகப்பெரிய ஊழல்!

packaged drinking water in Chennai

சென்னை – சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் இயங்கும் 300-350-400 நீர்– அடைக்கும் தொழிற்சாலைகள்: நீரை சுத்தகரிக்கிறோம் என்று பெரும்பாலான நீர்-விநியோகஸ்தர்கள் போர்/ கிணற்று நீரை வடிகட்டி இல்லை அப்படியே அடைத்து சப்ளை செய்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் 2013 நடந்த சோதனைகள் பற்றி அதிகமாக செய்திகள் வந்தாலும், குற்றங்கள் செய்யும் தண்ணீர் விநியோகஸ்தர்களைப் பற்றி விவரங்கள் கொடுத்தாலும், அந்த நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை[1]. பழைய மாம்பலத்தில் ஒரு தண்ணீர் விநியோகஸ்தர் அழுக்கான தொட்டியில் நீருடன் கரப்பான் பூச்சி, மற்ற பூச்சிகள் எல்லாம் இருந்தன. ஆனால், அந்த ஆள் அதனை வடிகட்டி பிளாஸ்டிக் கவர் மற்றும் பாட்டில்களில் அடைத்து மினரல் வாட்டர் என்று விற்றுவருகிறார் என்று “தி ஹிந்து” அறிவித்தாலும், அந்த நீரின் பெயர், நிறுவனத்தின் பெயரை மக்களின் விழிப்புணர்ச்சிற்காகக்கூட வெளியிடவில்லை[2]. காசு கொடுத்து வாங்கும் மக்கள் ஏன் அவ்விவரங்களை அறியக்கூடாது என்று ஊடகங்கள் நினைக்கின்றன அல்லது மறைக்கின்றன என்று தெரியவில்லை.

packaged drinking water in Chennai - bad quality

4-5 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ரெய்டுகளும், சீல்வைப்புகளும், தொடரும் கலிகால அயோக்கியத்தனமும்:  இத்தகைய ரெய்டுகள், நடவடிக்கைகள், சீல் வைப்புகள் எல்லாம் கடந்த ஐந்தாண்டுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. ஜூலை முடிச்சூரில் உள்ள ஒரு போலி தண்ணீர் அடைக்கும் தொழிற்சாலையை சோதனையிட்டனர்[3]. 2008ல் 2009ல் முகப்பேரில் ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் இல்லாமல் சுத்தகரிப்பு செய்து வந்த தொழிற்சாலையின் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டது[4].

 

Packaged drinking water unit raided

Staff Reporter – The Hindu – Thursday, May 07, 2009

CHENNAI: A team of officials from the Bureau of Indian Standard (BIS) conducted a raid in Mogappair on Wednesday to check the misuse of ISI mark on packaged drinking water.

A press release said that substantial quantities of ISI-marked spuriously packaged drinking water were seized from the premises of Chandra’s Associates, 1C and 2, Venugopal Street, Mogappair, where ISI-marked packaged drinking water in 20-litre PET jars were being packaged under the brand name ‘Blue Bubbles’ without valid licence.

Empty 20-litre PET jars, and labels such as ‘Aqua Fast,’ ‘Sun Cool’ and ‘Sowmya,’ meant for packaged drinking water were also seized.

The southern regional office of BIS initiated action against the offender under the Bureau of Indian Standards Act, 1986. The offence is punishable with imprisonment of up to one year or a fine of up to Rs. 50,000 or both. Those who come across instances of misuse of ISI mark may inform the office located on CIT campus, 4th Cross Road, Taramani, or by e-mail atsro@bis.org.in, or fax complaints to 22541087. The source of information would be kept confidential, the release said. For details, contact BIS on 22541076.

ஆனால், பெயர்களை மாற்றிக் கொண்டு, அதே நீரைத்தான் அவர்கள் விற்று வருகிறார்கள். நான்காண்டுகளாக அதே “தொழிலைத்தான்” செய்து வந்தார்கள். 2010லும் புகார்கள் பெயரில் தான் பியூர்-எச்20, ஒயாசிஸ் 5 [‘Pure H20’ and ‘Oasis 5.’] என்று பலபெயர்களில் சுத்தம் செய்யாமலேயே நீரை விற்று வந்த கருணா என்டெர்பிரைசஸ் [Karuna Enterprises at MMDA Colony, Arumbakkam] என்ற நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது[5]. அதாவது அதிகாரிகளுக்குத் தெரியாமல் அவர்கள் அப்படி எப்படி வியாபாரத்தை செய்து வந்தார்கள் என்று தெரியவில்லை[6]. நீர் பேக்கிங் செய்வது, சுத்தகரிப்பு தேதி, கெடு, நிறுவனத்தின் பெயர், முகவரி முதலிய விவரங்கள் இருக்க வேண்டும் என்றாலும், இவர்கள் பின்பற்றுவதில்லை[7]. வி. முரளி என்ற தமிழக குடிநீர் அடைக்கும் மற்றும் உற்பத்தி செய்வோர் சங்கத்தைத் தோற்றுவித்தவர் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த 82 தொழிற்சாலைகளின் விவரங்களை (இவற்றில் 31 சென்னைச் சுற்றுப்புறங்களில் இயங்கி வருகின்றன) 2009ல் ஆரோக்யம் மற்றும் உடல்நலம் பொறுப்பில் இருக்கும் செயலாளருக்கு அனுப்பி வைத்தார்[8]. ஆக ஐந்தாண்டுகளில் கொஞ்சமாவது ஒழுக்கம், சுத்தம் முதலியவை வந்திருக்க வேண்டும். மாறாக அதிகமான மாசு, அழுக்கு, அசுத்தம், கிருமிகள் முதலியவைத்தான் பெருகியுள்ளன. இதனை மனசாட்சியுடன் சம்பந்தப்பட்டவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஓயாசிஸ்-கம்பெனி சீல் வைக்கப்பட்டது 2010

இந்தியத்தரக் கட்டுப்பாடு மற்றும் மாசுக் கட்டுப்பாடு அதிகாரிகளின் உடந்தை: “வேலியே பயிரை மேய்கிறது” என்றாலும் விட்டுவிடலாம், ஆனால், குடிக்கும்தண்ணிர் விஷயத்தில் நுண்ணியிரியல் விஞ்ஞானிகள் மக்களின் உயிரையே மேய்க்கும் அளவில் இறங்கியுள்ளது நினைத்துப் பார்க்கவே முடியாத நிலையாக உள்ளது. இந்தியத் தரக்கட்டுப்பாடு மற்றும் மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் 869 நீர்சுத்தகரிப்பு தொழிற்சாலைகள் தாம் உற்பத்தி அனுமதி லைசென்ஸ் மற்றும் தரக்கட்டுப்பாடு சான்றிதழ் [Certificates of Manufacturing Licence (CML) of the Bureau of Indian Standards and also from the Food Safety Standards Authority of India (FSSAI Licence)] வைத்திருக்கின்றனர்[9]. மற்றவர்கள் இந்த ஆவணங்கள் இல்லாமலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தியத் தரக்கட்டுப்பாடு மற்றும் மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் ஊழலில் மிதக்கின்றனர்[10]. தரமணியில் இந்தியத் தரக்கட்டுப்பாடு அலுவலகத்தில் ரெய்ட் நடந்தபோது, கணக்கில் இல்லாத பணம் மற்றும் குற்றஞ்சாட்ட உபயோகப்படும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உடந்தையாக இருந்த இரு விஞ்ஞானிகளும் கைது செய்யப்பட்டனர்[11]. உள்ள குடிநீர் உற்பத்தி செய்யும், விற்பனை செய்யும் விநியோகிக்கும் நிறுவனங்கள் இவர்களுக்கு லஞ்சம் கொடுத்து[12], போல்லி அத்தாட்சிகளைப் பெற்று, தமது அநியாயமான வியாபாரத்தைச் செய்து வருகின்றனர். பொதுவாக விற்கப்படும் எல்லா நீருமே குடிப்பதற்கு உகந்தது அல்ல. 25 கட்டுப்பாட்டுக் காரணிகள் வைத்திருக்கிறார்கள், ஆனால், யாருமே அவற்றைப் பின்பற்றுவதில்லை[13]. இதனால், எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் உள்ளாதாக அறிக்கைகள் உள்ளன. ஆனால், அவை பொது மக்கள் கவனத்திலிருந்து மறைத்துள்ளனர்[14]. நுண்ணுயிர் உயிரியல் படிப்புப் படித்து, மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் கிருமிகளைத் தடுத்து மக்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக, இத்தகைய தீங்கான நீரை மக்களுக்கு அடையச் செய்த கொடுமைக்காரர்களின் பங்கில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பது, கொடுமையின் உச்சகட்டமே!

How mineral water is supplied

சென்னை பசுமை தீர்பாயத்தின் ஆணையும், நடவடிக்கைகளும்: சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 309 குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. முறையாக குடிநீர் சுத்திகரிப்பு செய்யாமல் பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து மினரல் வாட்டர் மோசடி – தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் நடக்கும் மிகப்பெரிய ஊழல்![ the Tamil Nadu Pollution Control Board (TNPCB) ] ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்தது. அதாவது புகார்கள் வந்தால் தான் நடவடிக்கை எடுப்ப்[ஓம் என்று காத்திருக்க வேண்டிய அவசியம் என்னெவென்று தெரியவில்லை. அதன் பிறகு அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட கேன் வாட்டர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை பசுமை தீர்பாயத்தில் [the National Green Tribunal (NGT), Southern Bench]  நடந்தது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வாட்டர் கேன் நிறுவனங்களுக்கு சென்று குடிநீரை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அறிக்கை வெளியிட வேண்டும்[15] என்று உத்தரவிட்டது. இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டது.

 

வேதபிரகாஷ்

© 03-07-2013


[2]  In one of the plants located in West Mambalam here, CBI sleuths found water from a dirty overhead tank being manually filtered and packed in sachets and bottles and sold as mineral water, the sources said. “The tank had cockroaches and other insects.

http://www.thehindu.com/news/cities/chennai/raids-expose-packaged-drinking-water-quality/article4476204.ece

[6] During the raid it was found that the unit was packaging water without treating it. The products were being sold under different labels such as ‘Pure H20’ and ‘Oasis 5.’ A 15-member team comprising sanitary inspectors, health inspectors and public health department officials conducted the raid.

http://www.hindu.com/2010/01/13/stories/2010011359140300.htm

[7] “Last year, we seized nearly 3 lakh water packets and about 3,000 bubbletops that did not meet mandatory requirements such as printing of the date of manufacturing, address of the manufacturer, expiry date and the batch number,” a civic body official said.

http://www.hindu.com/2010/01/13/stories/2010011359140300.htm

[8] V.Murali, founder and patron of Tamil Nadu Packaged Drinking Water Manufacturers Association, said that the members had submitted a list of 82 unauthorised units operating across the State to the Health Secretary last month. Of this, 31 such units are functioning in the peripheral areas of the city.

http://www.hindu.com/2010/01/13/stories/2010011359140300.htm

[11] Based on inputs that some BIS [Bureau of Indian Standards] officials took bribes to accord/renew licences to packaged drinking water units and also to abstain from going on periodical inspections, the CBI conducted the surprise check in the BIS office at Taramani here last month. Incriminating files and unaccounted cash were allegedly seized from the premises of two senior scientists who were later arrested along with a middleman, the sources said.

http://www.thehindu.com/todays-paper/raids-blow-the-lid-off-packaged-drinking-water-racket/article4477345.ece

[12] When laboratory reports of samples tested positive to harmful bacteria, BIS officials took bribes to either drop action or change the reports in favour of the company.

[13] There are at least 25 safety parameters that a packaged drinking water has to qualify before sold to public for consumption. Most of the units simply violated this mandatory requirement…some used fake clearance certificates purportedly issued by microbiologists.

http://www.thehindu.com/todays-paper/raids-blow-the-lid-off-packaged-drinking-water-racket/article4477345.ece

[14]  “When laboratory reports of samples tested positive to harmful bacteria, BIS officials took bribes to either drop action or change the reports in favour of the company. There are at least 25 safety parameters that a packaged drinking water has to qualify before sold to public for consumption. Most of the units simply violated this mandatory requirement…some used fake clearance certificates purportedly issued by microbiologists,” he said.

[15]The National Green Tribunal, Southern Bench, on Thursday directed the Chairman of the Tamil Nadu Pollution Control Board (TNPCB) and the Deputy Director General of Bureau of Indian Standards (BIS), Southern Region, to submit a detailed report on packaged drinking water units operating in and around the city, deviations and violations by the units. http://www.thehindu.com/news/cities/chennai/tribunal-calls-for-report-on-packaged-drinking-water-units/article4509398.ece

Advertisements