Posts Tagged ‘ஆத்திகம்’

தருமபுரி ஆதீனம் (1926-2019) இருந்தது, மறைந்தது, சாதித்தது: அவரைச் சார்ந்தவர்கள் ஏமாற்றியது, வழக்குகள் போட்டது, சதாய்த்தது!

திசெம்பர் 7, 2019

தருமபுரி ஆதீனம் (1926-2019) இருந்தது, மறைந்தது, சாதித்தது: அவரைச் சார்ந்தவர்கள் ஏமாற்றியது, வழக்குகள் போட்டது, சதாய்த்தது!

Dharmapuri Adheenam passed away-Tamil news cutting

1971லிருந்து தலைமையில் இருந்த மடாதிபதி: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 450 ஆண்டுகள் பழமையான தருமபுரம் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்திற்கு சொந்தமாக திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன்கோவிலில் வைத்தியநாத சாமி கோவில், திருபுவனத்தில் சரபேஸ்வரர் கோவில், திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்பட 27 புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன[1]. இந்த ஆதீன மடத்தின் 26-வது குருமகா சன்னிதானமாக சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்தார். 1926-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிறுகாட்டூரில் பிறந்த இவர், விருத்தாசலம் தேவார பாடசாலையில் படித்தார்[2]. தருமபுர ஆதீனத்தில் வித்வான் பட்டம் பெற்றுள்ளார். அங்கு கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார்[3]. தேவஸ்தானத்தில் அதிகநாட்களில் பணியாற்றியவரை கட்டளை தம்பிரான் சுவாமிகளாக நியமித்தனர்[4]. அன்று முதல் தருமை ஆதீனத்தின் கட்டளை தம்பிரான்களில் ஒருவராக பணி செய்துவந்தவரை 1971 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுர ஆதீனத்திற்கு இருபத்தாறாவது மடாதிபதியாக பொறுப்பேற்க செய்தனர்[5]. தற்கிடையில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்ட ஆதீனம், கட்டளை தம்பிரானாக தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு மடத்தில் இருந்த ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகளை 2017 பிப்ரவரி மாதம் ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமித்து அனைத்து பூஜைகளையும் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது[6].

Dharmapura Adheenam, with Periyavar and Jeyandra

பற்பல சேவைகள் செய்து வந்த மடாதிபதி: ஆதீனம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.. ஆதீனம் சார்பாக, சமயம் சார்ந்த பணிகள் மட்டுமின்றி, மயிலாடுதுறையில் மகப்பேறு நிலையம் அமைத்தது முதல், சிங்கிப்பட்டி காசநோய் ஆஸ்பத்திரி, அடையார் புற்றுநோய் ஆஸ்பத்திரி போன்ற பொது நிறுவனங்களுக்கு ஏராளமான நிதி உதவியை இவர் செய்துள்ளார். இதை தவிர எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்கவும் இவர் எடுத்த முயற்சி ஏராளம். இன்றும்கூட இவர் வகுத்த பாதையில்தான் ஆதீனத்தின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. அதேபோல, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை மாவட்ட மக்கள் வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களையும் செய்தனர். அப்போது, மக்களுக்காக துணை நின்றவர் தருமபுரம் ஆதீனம்தான்.. சர்ச்சைகளுக்கு புகழ்போன நித்தியானந்தா, இவரையும் கடந்த 2012-ல் விட்டு வைக்கவில்லை.[7]. “மதுரை ஆதீனமாக தாம் நியமிக்கப்பட்டதை விமர்சிக்கும் தருமபுரம் உள்ளிட்ட ஆதினங்கள் மீது பிடதி பீட பக்தர்கள் மான நஷ்ட வழக்கு தொடுப்பார்கள்,” என்று அன்றே எச்சரிக்கையும் விடுத்திருந்தது நினைவிருக்கலாம்[8]. பல நல்ல செயல்களை முன்னெடுத்து.. மக்களின் ஒற்றுமைக்காகவும், நல்வழிக்காகவும் அரும்பாடு பட்ட தருமபுரம் ஆதீனத்தின் மறைவு பக்தகோடிகளுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Dharmapura Adheenam, younger days

04-12-2019 அன்று இயற்கை எய்திய மடாதிபதி: இவர் கடந்த 49 ஆண்டுகள் குருமகா சன்னிதானமாக இருந்து வந்தார். அவருக்கு 93 வயது ஆகிறது. இந்தநிலையில் வயது மூப்பு காரணமாக குருமகா சன்னிதானத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2-ந் தேதி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இம்மடத்திற்கு இருக்கும் கோடிக்கணக்கான சொத்திற்கு, இவர் வெளிநாட்டிற்கே சென்று சிகிச்சைப் பெற்றிருக்கலாம். ஏனெனில், திராவிடப் பாரம்பரியம் பின்பற்றும் அரசியல்வாதிகள் அதைத்தான் செய்து வருகிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி 04-12-2019 அன்று மதியம் 2.40 மணிக்கு குருமகா சன்னிதானம் மரணம் அடைந்தார். இதனையடுத்து உடன் சென்றிருந்த தருமபுரம் ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மரணம் அடைந்த குருமகா சன்னிதானத்தின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு கொண்டு வந்தார்.

Dharmapura Adheenam, with Periyavar and Jeyandra Saraswati and others
05-12-2019 அன்று பார்வைக்கு வைக்கப் பட்டது: மாலை 5.40 மணிக்கு குருமகா சன்னிதானத்தின் உடல், கொலுபீடத்தில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆதீனத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குருமகா சன்னிதானத்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. 06-12-2019 அன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் உள்ள சைவ ஆதீனங்களின் குருமகா சன்னிதானங்கள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் வருகை தந்து குருமகா சன்னிதானத்திற்கு அஞ்சலி செலுத்தினர். ஆதீனம் மறைவுக்கு மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்[9]. இதைத் தொடர்ந்து, பாரம்பரிய ஆதீனங்களான மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், ரத்னகிரி ஆதீனம், மாவட்ட ஆட்சியர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்[10]. அன்று மாலை 4 மணி அளவில் குருமகா சன்னிதானத்தின் உடலை சிவிகை பல்லக்கில் எழுந்தருள செய்து தருமபுரம் மேலவீதியில் உள்ள மேலகுருமூர்த்தத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய சன்னதியில் குருமகா சன்னிதானத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Dharmapuri Adheenam with Jendra Saraswati, Kanchi mutt

மடம், கோவில் சொத்துகளை அனுபவித்துக் கொண்டு, ஆதீனத்தின் மீதே வழக்குப் போட்ட சைவர்கள்: தருமபுரி ஆதீனம் போல, வேறெந்த ஆதீனமும், பல விதங்களில் தாக்குதல்களுக்கு உள்ளாகவில்லை எனலாம். நிலத்தை அனுபவித்த பக்தர்களே பலவித வழக்கு தொடுத்தனர்! உதாரணத்திற்கு, ரூ 28,350/- செலுத்த முடியாது என்று வைத்தியநாதன், ராஜலட்சுமி, கலைச்செல்வி, ஜயந்தி, ஆதீனத்தின் மீது வழக்குத் தொடுத்ததை என்னென்பது? 1946லிருந்து ஆதீனத்தின் தேங்காய் தோப்பில் இருந்து வருமானத்தை வைத்துப் பிழைத்து, கொழுத்து, ஆதீனம் மீதே வழக்கு போட்டான் என்றால், அவன் ஏவ்வளவு பெரிய சைவன், இந்துவாக இருந்திருக்க வேண்டும்[11]. ஆதீனத்தை வீட்டு சொந்தக்காரர், வாடகைக்கு இருப்பவன் நிலைக்குக் கொண்டு வந்து, சட்டத்தை வளைத்து, சிவன் சொத்தைக் கொள்ளையடிக்கும் கும்பல்[12]. வாடகைக் காரர், குத்தகைக் காரர்கள் செத்தப் பிறகு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்குகளைத் தோற்க வைக்கும் வித்தைகளை, இந்த சிவனடியார்க்ளிடமிருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்[13]. இவ்வாறு பல வழக்குகளை ஆதினம் மீது போட்டிருக்கிறார்கள், ஆனால், சிவன் சொத்தைக் கொள்ளை அடித்தது, அடிக்கிறது சத்தியம்!

Dharmapura Adheenam, P. Jagadesan, Karunanandan

நாத்திகர்களின் தாக்குதல்: 2005ல் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை மாநாடு, ஏ.வி.எஸ் கல்லூரியில் நடந்தது. ஆதீனம் கலந்து கொண்டு “இந்துமதம் முக்கியத்துவம்” குறிப்பிட்டு ஆசியுரை வழங்கினார். பாரத நாட்டு பழம்சிறப்பு முதலியவற்றைப் பற்றி எடுத்துக் காட்டினார். ஆனால், அது, திராவிடர் கழக ஆசாமிகளுக்குப் பிடிக்கவில்லை. அப்பொழுது நாத்திக பி. ஜகதீசன் மறுத்துப் பேசியது, கல்லூரி ஆசிரியர்கள் மற்ற மாநாடு பிரதிநிதிகளை திகைப்படையச் செய்தது. சென்னை பல்கலைக்கழக சரித்திர பேராசிரியர், பாரதி தாசன் பல்கலை துணை வேந்தர் என்றெல்லாம் பொறுப்பு வகித்தவர், பாத்தியதை இல்லாமல், அவ்வாறு எதிர்த்து பேசியது கண்டிக்கத் தக்கது. கல்லூரியை நட்த்தி வரும் மடாதிபதி, துவக்க விழாவில், ஆசி கூறி அவர் பேசும் பேச்சை, ஜகதீசன் போன்றோரால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால், அவருடைய இந்து-விரோத பேச்சை எப்படி, இந்துக்கள் ஏற்ருக் கொள்வர். இருப்பினும், ஆணவம்-அகம்பாவம், அரசியல் பின்னணிகளை வைத்துக் கொண்டு தான், திமிருடன் அவ்வாறு பேசியதை மற்றவர்கள் எடுத்துக் காட்டினர். இந்த மாதிரி ஆட்களை கூப்பிட்டுருக்கக் கூடாது, என்று வெளிப்படையாகவே சிலர் பேசினர்.

© வேதபிரகாஷ்

06-12-2019

Thiruvaduthurai Adheenam Abhishekam

[1] மாலை மலர், தருமபுரம் ஆதீனம் மரணம், பதிவு: டிசம்பர் 05, 2019 08:14 IST

[2] https://www.maalaimalar.com/news/district/2019/12/05081421/1274732/Dharmapuram-Adheenam-passes-away.vpf

[3] தினமலர், தருமபுரம் ஆதீனம் முக்தி அடைந்தார், Updated : டிச 04, 2019 16:28 | Added : டிச 04, 2019 16:18.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2426408

[5] நக்கீரன், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் காலமானார்!!, Published on 04/12/2019 (17:33) | Edited on 04/12/2019 (17:40),செல்வகுமார்

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/mayiladuthurai-dharmapuram-adheenam-passed-away

[7] தமிழ்.ஒன்.இந்தியா, தருமபுரம் ஆதீனம் 26வது குரு மகா சந்நிதானம் 96 வயதில் காலமானார்! By Hemavandhana | Published: Wednesday, December 4, 2019, 17:16 [IST]

[8] https://tamil.oneindia.com/news/thanjavur/darumapuram-aadheenam-26th-gurumaga-sannidhaanam/articlecontent-pf419584-370425.html

[9] தினத்தந்தி, தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக சுவாமி முக்தி – கண்ணீர் மல்க அஞ்சலி, பதிவு : டிசம்பர் 05, 2019, 07:48 PM

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/12/05194809/1060444/Tharumapuram-Athinam-Sanmuga-Thesiga-Swami-Death.vpf

[11] https://indiankanoon.org/doc/197287/

[12]  https://indiankanoon.org/doc/168891900/

[13] https://indiankanoon.org/doc/100623053/