Posts Tagged ‘இழப்பு’

வரி ஏய்ப்பு செய்யும் மத்திய அரசு! அம்பலப்படுத்தும் தமிழ்நாடு – இப்படி, முட்டாள் தனமாக யாரும் சொல்ல மாட்டார்கள், செய்தியும் வெளிவராது, ஆனால், தமிழ்நாட்டில் வருகிறது!

ஜூன் 28, 2021

வரி ஏய்ப்பு செய்யும் மத்திய அரசு! அம்பலப்படுத்தும் தமிழ்நாடு – இப்படி, முட்டாள் தனமாக யாரும் சொல்ல மாட்டார்கள், செய்தியும் வெளிவராது, ஆனால், தமிழ்நாட்டில் வருகிறது!

வரி ஏய்ப்பு செய்யும் மத்திய அரசு! அம்பலப்படுத்தும் தமிழ்நாடு!: இப்படி முட்டாள் தனமாகத் தலைப்பிட்டு, வழக்கம் போல, நமத்திய நிதியமைச்சரை படம் போட்டு கேலிசெய்துள்ளது நக்கீரன். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்தே, மாநில உரிமைகள் குறித்து ஒன்றிய அரசிடம் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது. குறிப்பாக, மத்திய அரசின் அதிகாரத்தை மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் வரி வசூலிப்பதில் மாநிலங்களின் உரிமையும் வருமானமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து பேசி வருவது விசித்திரமாக இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை, தமிழ்நாட்டுக்கு வரி வசூலில் சுமார் 80,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் புள்ளி விவரத்தோடு பேட்டியளித்து அதிர்வை ஏற்படுத்தியிருந்தார்[1], என்று நக்கீரன், இப்பொழுது, செய்தி வெளியிட்டுள்ளது. இதில் எந்த விசயமும் இல்லை. அதனால் தான் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இதை என்னமோ பெரிய விசயம் போல கதை விட்டிருக்கிறது[2]. விசயம் புரியாத மற்ற ஊடகங்களும் உளறிக் கொட்டியிருக்கின்றன[3]. விசயத்தைப் புரிந்து கொள்ளாததால், அதைப் பற்றி (எப்படி இழப்பு ஏற்பட்டது) சொல்லவே இல்லை[4].

தமிழகத்தின் வருமானம் குறைந்தால், அதற்கு தமிழக வருவாய் அமைச்சர், நிர்வாகிகள், சம்பந்தம் பட்டவர்கள் தான் பொறுப்பு: ‘‘மத்திய அரசின் வரிக்கொள்கையால் மாநில அரசுகள் சுய வருமானத்தை இழந்து விட்டன. தமிழகம் 4 சதவீதத்தை இழந்துள்ளது.  இது மொத்தம் ரூ.80 ஆயிரம் கோடியாகும்.  கொரோனா நிவாரண நிதி கொடுத்ததால் ரூ.9 ஆயிரம் கோடி செலவு, பெண்கள் இலவச பஸ் பயணத்தால் ரூ.1,200 கோடி செலவு இவையெல்லாம் அரசுக்கு ஒரு இழப்பே கிடையாது. டாஸ்மாக்கில் வரும் ரூ.35 ஆயிரம் கோடியை வைத்துதான் தமிழக அரசு இயங்குவதாக கூறுகின்றனர்[5]. மாநில அரசுக்கு வர வேண்டிய ரூ.80 ஆயிரம் கோடி வருமானம், மத்திய அரசிடமிருந்து வந்தால் எதற்காக டாஸ்மாக் வருமானம்?[6]  நல்ல மேலாண்மை, கொள்கைக்காக, அடிப்படை தத்துவத்திற்காக, சமூக நீதிக்காக நாம் இருக்கும்போது, குறுக்கு வழியில் செல்ல வேண்டிய அவசியமில்லை. சட்டமைப்பின்படி நேரடி வரிவிதிப்பு எல்லாம் ஒன்றிய அரசிடம் குவிந்துள்ளது. மாநில அரசிடம் அந்த உரிமை இல்லை. மறைமுக வரியை வைத்துதான் அரசு நடத்த வேண்டியுள்ளது. நேர்முக வரியாக 52 சதவீதமும், மறைமுக வரியாக 48 சதவீதம் என இருந்தது. ஒன்றிய அரசு, நேர்முக வரியை 60 சதவீதமாக உயர்த்திவிட்டது. தினகரன் இவ்வாறு விளக்கம் அளித்தாலும், ஜி.எஸ்.டி என்று குறிப்பிடவில்லை. விடுதலை இதனை அப்படியே போட்டுள்ளது[7]. நாத்திகருக்கு, திராவிடக் கட்சியினருக்கு[8] இதைப் பற்றி என்ன கவலை?


80,000 கோடி இழப்பு என்பது தமாஷான விசயம்: தமிழ்நாடு 10-11% வருவாயைத் தானே உண்டாக்கிக் கொண்டு வருகிறது. பிறகு 4% வரிவசூலை மத்திய அரசிடமிருந்து பெற்று வருகிறது[9]. 2014க்குப் பிறகு, மாநிலத்தின் வருவாய் 7-7.5% மாகக் குறைந்தது. மத்திய அரசிடமிருந்து பெற்று வந்த வரிவசூலும் 3%மாகக் குறைந்தது. அதனால் 4% குறைவு உண்டாயிற்று. மாநிலத்தின் GDPயான 20 லட்சக் கோடிகளில் இது 4% அதுதான் அந்த 80,000 கோடிகள்[10], என்று விளக்கம் அளித்தது தமாஷாக இருந்தது.  தமிழ்நாட்டில் வருவாய் குறைந்தது என்றால், அது தமிழ்நாடு பிரச்சினை, அப்படியென்றால, இங்கிருக்கும் வருவாய் துறையினர் ஒழுங்காக வேலை செய்யவில்லை, அவ்வாறு வருவாய் குறைந்ததற்கு என்ன காரணம் என்று சொல்ல வேண்டும். தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைவா அல்லது மற்ற மாநில வரிவசூல்களில் தொய்வா என்று சொல்ல வேண்டும். கேரள முதலமைச்சர்[11] மற்றும் ஆந்திர முதலமைச்சரும் 80,000 கோடிகள் இழப்பு என்கின்றனர்! பிரனாயி விஜயன் கொரோனா காரணம் என்றார். ஜெகன் மோகனும் அவ்வாறே தெரிவித்தார்[12].

வரிமுறைக் கூட புரிந்து கொள்ளாமல் பேசுவது திகைப்பாக இருக்கிறது: முன்பு விற்பனை வரி (Sales Tax) மாநிலங்கள் வசூலித்துக் கொண்டிருக்கும் போது, எக்சைஸ் டூடி என்றிருந்தது, அது BED (மத்திய அரசுக்கு), SED (மாநில அரசுக்கு), AED (மாநிலங்களுக்கு இடையில் வசூலிப்பது) என்று வசூலிக்கப் பட்டது. பிறகு GSTயிலும், அதே பாணில்யில்  CGST (மத்திய), SGST (மாநில),  IGST (மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சேவை மற்றும் பொருட்களுக்கு விதிப்பது) என்று தான் செயல் பட்டு வருகின்றது. தமிழகத்தில், திராவிட அரசியல்வாதிகளின் சதாய்ப்பு, அடாவடித்தனம், கட்டப் பஞ்சாயத்து முதலிய அட்டகாசங்களினால், தமிழக தொழிற்சாலைகள், பாகங்கள், உதிரிகள், மூலப் பொருட்கள்  போன்றவற்றை உற்பத்தி செய்து, மற்ற மாநிலங்களில் இருக்கும் தமது  தொழிற்சாலைகளுக்கு IGST கட்டி அனுப்பி, முழுப் பொருட் உற்பத்தி அல்லது இறுதியான பொருள் உற்பத்தி அங்கு நடந்து, CGST மற்றும் SGST கட்டி விற்று வருகின்றனர். இதனால், இறுதியில் எந்த மாநிலத்தில் விற்பனை செய்யப் படுகிறதோ, அந்த மாநிலத்திற்கு வரும்படி வருகிறது. இதனால், தமிழ்நாடு, தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும். மேற்கு வங்காளத்தில், மம்தா டாடாவின் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரித்ததால், அது குஜராத்திற்குச் சென்றது. இங்கும், அதே போல பயந்து கொண்டு கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா என்று சென்றுள்ளன. எனவே, முதலில் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் பயப்படாமல் வேலை செய்ய வழி பாருங்கள். வேலையாட்கள் வேலை செய்ய முயற்சி செய்யுங்கள்.

பொருளாதார பாண்டித்தியம் நல்லதுக்கு உபயோகப் படுத்த வேண்டும்: பொருளாதாரம் படித்தவர், பெரிய பொருளாதார மேதைகளை வைத்துக் கொண்டு ஆலோசனை குழு அமைத்திருக்கிறோம் என்றால், அதற்கேற்ற முறையில் பேச வேண்டும். தமிழக பொருளாதாரத்தைப் பெருக்க வேண்டும். தொழிற்சாலைகள் நடக்க-நடத்த ஆவண செய்ய வேண்டும். அதை விடுத்து, எப்பொழுதும், மத்திய அரசுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தால், எந்த பலனும் கிடைக்காது. மக்களின் நலன் என்றால், படித்தப் படிப்பினை நல்லவிதமாக, பலனிற்கு, உபயோகப் படுத்தப்பட வேண்டும். ஏதோ, தணிக்கையாளர் போல, தப்பு கண்டு பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சொத்தை-விவகாரத்தை ஊதி பெரிதாக்கி காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கக் கூடாது. பொருளாதாரத்தை சித்தாந்தங்களுக்கு உட்படுத்தி, பிரச்சினைகளை உண்டாக்கிக் கொண்டிருந்தால், அது முட்டாள்தனமானது என்று மற்ற பொருளாதார நிருபணருக்குத் தெரிந்து விடும். இதற்கு, அமெரிக்காவில் படிக்க வேண்டாம், நோபல் பரிசும் வாங்கவேண்டாம்.

இந்தியா, இந்திய மக்கள் ஒன்றாகத்தான் வாழ வேண்டும், முன்னேற வேண்டும்: பொருளாதாரம் என்பது காற்றில் கோட்டை கட்டுவது அல்ல. இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணத்தினால் நாடே, சமுதாயமே ஸ்தம்பித்துக் கிடக்கின்றன என்பது தெரிந்த விசயமே. ஆகையால், அப்பொழுதும் தமிழகத்தில் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இப்பொழுது திமுக ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சி நடக்கும். ஆனால், செய்திகளால், விளம்பரங்களால், டிவி-செனல்களால், அதிகாரங்களினால், பொய்யான பிம்பத்தை உருவாக்கினால், பொருளாதாரத்தில், மிகப் பெரிய கேடு விளையும். தமிழ்நாடு அல்லது எந்த மாநிலமோ, இந்தியாவில் தனித்து இயங்க முடியாது. பற்பல காரணங்களால், எல்லாமாநிலங்களும் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தண்ணீருக்கு ஆந்திரா-கர்நாடகா மாநிலங்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. பருப்பு வகைகளுக்கு மஹாராஷ்ட்ரா-குஜராத் என்று நோக்க வேண்டியுள்ளது. ஆகவே, திராவிடஸ்தான், மாநில சுயயாட்சி, ஒன்றியம் போன்ற வார்த்தை ஜாலங்களால், பொருளாதாரம் முன்னேறாது.

© வேதபிரகாஷ்

28-06-2021


[1] நக்கீரன், வரி ஏய்ப்பு செய்யும் மத்திய அரசு! அம்பலப்படுத்தும் தமிழ்நாடு!, Published on 26/06/2021 (08:05) | Edited on 26/06/2021 (09:58).

[2] https://www.nakkheeran.in/nakkheeran/federal-government-tax-evasion-tamil-nadu-be-exposed/federal-government-tax-evasion

[3] தமிழ்.முரசு, நிதி அமைச்சர் புகார்: தமிழகத்துக்கு ரூ.80,000 கோடி இழப்பு, 20 Jun 2021 05:30.

[4] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20210620-68775.html

[5] தினகரம், மத்திய அரசின் வரிக்கொள்கையால் தமிழக அரசுக்கு வர வேண்டிய 80,000 கோடி வருவாய் இழப்பு: நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல், 2021-06-19@ 00:49:39.

[6] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=684296

[7] விடுதலை, மத்திய அரசின் வரிக்கொள்கையால் தமிழக அரசுக்கு வர வேண்டிய ரூ.80,000 கோடி வருவாய் இழப்பு, June 20, 2021 • Viduthalai.

[8] https://www.viduthalai.page/2021/06/80000.html

[9] Addressing members of various trade organizations at Madurai, Thiagarajan said ever since the Fiscal Responsibility and Budget Management (FRBM) Act was passed by the Centre in 2003-04 to ensure financial discipline, Tamil Nadu was generating about 10-11% as state’s own revenue and another 4% as state’s share of taxes from the Centre.

Times of India, Tamil Nadu lost Rs 80,000 crore in revenue, tax share since 2014: Finance minister PTR Palanivel Thiagarajan, TNN / Updated: Jun 19, 2021, 14:11 IST.

[10] “Till about 2014, the state’s own revenues, including share from the Centre, contributed around 15% and the finances too remained healthy. From then on, the state’s own revenue has come down to 7-7.5% and share from Centre to 3%, thereby indicating a 4% drop. Considering the present state gross domestic product at 20 lakh crore, the 4% drop works out to 80,000 crore,” Thiagarajan explained.

https://timesofindia.indiatimes.com/city/madurai/tamil-nadu-lost-80000-crore-in-revenue-tax-share-since-2014-finance-minister-ptr-palanivel-thiagarajan/articleshow/83662443.cms

[11] ஜீ.டிவி, கொரோனா முழு அடைப்பால்.80,000 கோடி இழப்புகேரளா அரசு கணிப்பு…,Last Updated : May 12, 2020, 05:11 PM IS.

https://zeenews.india.com/tamil/business-news/kerala-state-board-estimates-rs-80000-cr-loss-to-state-economy-due-to-covid-19-334849

[12] ஈ.டிவி, ‘2020 ஊரடங்கில் மாநில அரசுக்கு ரூ.20,000 கோடியும், மக்களுக்கு ரூ.80,000 கோடியும் இழப்பு!, Published on: Apr 28, 2021, 9:40 AM IST

https://react.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/2020-lockdown-cost-state-rs-20k-cr-people-lost-80k-cr-andhra-cm/tamil-nadu20210428094027314