Posts Tagged ‘சௌந்தர்யா’

அம்மாவை மதிக்கும் ரஜினியும், அம்மாவை மிதிக்கும் அனிருத்தும் – அநாகரிகத்தின் உச்சம் – “……coz mother fucka aint nobody fucking with my…(heckling)” கொலைவெறியைத் தொடரும் இந்த உடலுறவு வெறி!

ஜனவரி 23, 2014

அம்மாவை மதிக்கும் ரஜினியும், அம்மாவை மிதிக்கும் அனிருத்தும் – அநாகரிகத்தின் உச்சம் – “……coz mother fucka aint nobody fucking with my…(heckling)” கொலைவெறியைத் தொடரும் இந்த உடலுறவு வெறி!

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய தாய்மையை தாக்கும் போக்கு

ஜனவரி 2014ல் நடக்கும் தெருகூத்துகள்: “அரவிந்த் கேசரிவாலும், அநிருத் ரவிச்சந்திரனும் – இந்திய சமூகத்தை சீரழிப்பாளர்கள் தாம் – வரம்புகளை மீறும் பிரபலமாக்கும் பண்டிததனம், பாராட்டு, வளரும் விபரீதங்கள்” என்ற தலைப்பிலும்[1], “தாயுடன் உடலுறவு………………………….” என்ற கேவலமான பாடலை இணைத்தளத்தில் வெளியிட்ட விவகாரத்தை “இளைஞர்களைக் கெடுக்கும் கலப்பு இசையை பிரபலமாக்கும் இளைஞனின் பண்டிததனம், பாராட்டு, வளரும் விபரீதங்கள்!” என்ற தலைப்பிலும்[2] பதிவு செய்திருந்தேன். கூத்துகள் தெருக்களில் தான் நடக்கும் என்பதில்லை, இணைத்தளத்திலும் நடக்கின்றன! 21-01-2014 அன்று காலையில் படித்த இரண்டு செய்திகள் –

  1. அரவிந்த் கேசரிவால் தெருப்போராட்டதை நிறுத்திக் கொண்டு விட்டார்.
  2.  அநிருத் ரவிச்சந்திரனின் “தாயை………………………” என்ற பாடலை இணைதளத் தெருவிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

இவை என் கண்களில் பட்டதால், மிகவும் வருத்ததுடன் இதனை பதிவு செய்ய வேண்டியதாகி விட்டது. முதலில் வேண்டாம் என்று நினைத்தேன், ஆனால், இன்றைய இளைஞர்களின் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால், அதிலுள்ள ஆபத்தை உணர்ந்து அதனை வெளிப்படுத்த தீர்மானத்துடன் பதிவு செய்ய முடிவு செய்தேன். அதிலும் ஆன்மீகம், பக்தி என்றெல்லாம் பேசி வரும் ரஜினி குடும்பத்திலிருந்து அத்தகைய கீழ்த்தரமான பாடல் வந்திருப்பதால், வேறுவழியில்லாமல் கண்டிப்புடன் பதிவு செய்கிறேன்.

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெண்மையை தாக்கும் போக்கு

இந்திய சமூகத்தை சீரழிப்பாளர்கள் தாம்வரம்புகளை மீறும் பிரபலமாக்கும் பண்டிததனம், பாராட்டு, வளரும் விபரீதங்கள்! என்ன படித்தாலும் அதிக, மிக அதிக……………..ஆசை, பேராசை இருப்பதினால், ஒரெ நாளில் புகழ் பெற்றுவிட வேண்டும், ஊச்சத்தில் ஏறிவிட வேண்டும், உலகத்தில் தம்மைப் பற்றி பேச வேண்டும் என்ற ஆணவத்தினால், குறுகிய காலத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தை இவ்வாறு கேவலமாக்கிக் கொண்ட நிலை இவரிடத்திலும் தெரிகிறது. அரவிந்த் கேசரிவால் திடீரென்று முதலமைச்சர் ஆனார் அல்லது ஆக்கப்பட்டார்! அநிருத் ரவிச்சந்திரன் கொலைவெறியில் புகழ் பெற்றதால், “,………..coz mother fucka aint nobody fucking with my………………………………(heckling)” என்ற சொல்லமுடியாத அளவிற்கு இறங்கிவிட்டான்! வரம்புகளை மீறும் பிரபலமாக்கும் பண்டிதத்தனம், பாராட்டு, வளரும் விபரீதங்கள் இந்தியாவை பாதிக்கத்தான் செய்கின்றன. ஆகவே, இவர்களது கேவலங்களை வீட்டில் செய்தாலும், தெருவில் செய்தாலும், இணைத் தளத்தில் செய்தாலும், மற்றவர்கள் சும்மா இருக்க முடியாது.

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

ரஜினிகாந்தின் பின்னணியில் மிளிரும் அனிருத் ரவிச்சந்திரன்: அனிருத் ரவிசந்திரன் நடிகர் ரவி ராகவேந்திரன் மற்றும் லட்சுமி என்ற நர்த்தகியின் மகன் மற்றும் லதா ரஜினிகாந்தின் மைத்துனன். அதாவது ரவி ராகவேந்திரன் லதா ரஜினிகாந்த்தின் சகோதரர். ரஜினியின் பெண்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இவர்களின் ஒன்றுவிட்ட சகோதரன். ஜிங்ஸ் [Zinx] என்ற இசைக்குழுவை வைத்து நடத்தி, “கொலைவெறி” பாடல் மூலம் 21 வயதிலேயே பிரபலமான இளைஞன்[3]. பத்மா சேஷாத்ரி மற்றும் லயோலாவின் கலவை, அந்த இளைஞனின் மேனாட்டு மற்றும் இந்திய கர்நாடகத்தின் கலவை / குழப்பத்தில் வெளிப்படுகிறது. காலத்தின் கோலத்தால் அதுவே பிரபலமாகி இளைஞர்களிடம் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் புகழுக்காக, பணத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற போக்குத்தான் தெரிகிறது.

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

வியாபார நோக்கோடு பாடலை முன்னமே இணைதளத்தில் வெளியிடுவதுகலாட்டா செய்வது: “வை திஸ் கொலைவெறிடி” என்ற பாடலை 16-11-2011 அன்று திரைப்படம் வெளிவரும் முன்னரே இணைதளத்தில் வெளியிட்டு பிரபலம் ஆக்கப் பட்டது. “தங்கிலிஸ்” என்று தமிழையும் கெடுத்து, சீரழித்து, கொலை செய்து வரும் இந்த விபரீதமான, இசை அமைப்பு மற்றும் பாடக பண்டிதத் தனம், பாராட்டப் பட்டது, போற்றப்பட்டது, பரிசு-பட்டங்கள் வேறு கொடுக்கப்பட்டன. அத்தகைய ஊக்குவிப்பு, இவ்வாறே இப்பொழுது இன்னொரு பாடலை வெளியிட்டிருப்பது போல தெரிகிறது. இன்றைய நிலையில் இணைத்தள டுவிட்டர்[4], பேஸ்புக் சமூக சீரழிவுகளை நோக்கிச் சென்ரு கொண்டிருக்கிறது என்பது தெரிந்த விசயமே. சமீபத்தைய பெண்களின் தற்கொலைகள், சிறுமிகள்-இளம் பெண்கள் முதலியோரை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை வெளிச்சமாகியுள்ளது. இந்நிலையில், இவ்வாறான பிரபலமான, அதிகாரப்பலம் முதலியவற்றை பின்னணியாகக் கொண்டுள்ள இந்த பண்டித இளைஞன் பெண்களை கேவலப்படுத்தும் பாட்டைப் பரப்ப வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை.

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

மேனாட்டு மோகம், அமெரிக்கக் கொக்கோகம், இந்திய பெணமையை தாக்கும் போக்கு

பாடலைக் கேட்ட பெண்கள் அனைவருமே முகம் சுளிக்கின்றனர்: பெண்களை இழிவுபடுத்தும் வகையில்  “Aint nobody ****” என்ற பாடலைப்பாடி[5] அதை வலைதளத்தில் (யூ-டியூப்) வெளியிட்டதற்காக இசையமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ஒருவர் திங்கள்கிழமை 20-01-2014 அன்று புகார் மனு அளித்தார்[6]. சென்னை காவல் ஆணையர் ஜார்ஜிடம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெபதாஸ் பாண்டியன் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து பாடியுள்ள ஒரு ஆங்கில பாடல், யூடியூபில் வெளி வந்துள்ளது. அந்தப் பாடலின் வரிகளும் சப்டைட்டில்போல கீழே வருகிறது. பாடல் வரிகள் முழு வதும் தாய்மையை கொச்சைப்படுத்தும் விதமாக[7], பெண்களை இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளன. சில இடங்களில் தாய்மையையும் இழிவுபடுத்தும் விதமாக பாடல் வரிகள் உள்ளன. இதைக் கேட்பதற்கே அருவருப் பாக உள்ளது. பாடலைக் கேட்ட பெண்கள் அனைவருமே முகம் சுளிக்கின்றனர்.  சென்சார் போர்ட் அனுமதி அளிக்கும் முன்பே அதனை போட்டுள்ளதாகவும் கூறினார்[8]. நவநாகரிகமான, இளம்பெண்களைத் தவிர மற்ற பெண்கள் இந்த கருமாந்திரத்தைக் கேட்கக்கூடிய சந்தர்ப்பம் எழாது. ஆக, கேட்டப் பெண்கள் அவ்வாறு உண்மையிலேயே பாதிக்கப்பட்டார்களா என்று தெரியவில்லை.

அம்மாவை மதிக்கும் ரஜினியும், அம்மாவை மிதிக்கும் அனிருத்தும்: கேவலமான, அசிங்கமான, கீழ்த்தரமான பாடலை உருவாக்குவது, வெளியிடுவது, பரப்புவது – இதை எப்படி திட்டுவது என்றே தெரியவில்லை. ரஜினிகாந்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய வயதான இவன் இத்தகைய காரியத்தைச் செய்துள்ளான் என்றால், இதன் பின்னணி, நோக்கம் முதலியனவும் தெரிடயவில்லை. “First time ever, independent music, it is Anirudh You can fuck with me but aint nobody fucking with my music, music, music, musoooosic…………………….ic, ic, ……………..music, …… You can fuck with me but aint nobody fucking with my music,………..coz mother fucka aint nobody fucking with my………………………………(heckling)” இத்தகைய கேவலமான பாட்டு இன்னும் இணைதளத்தில் இருந்து வருகின்றது[9]. அம்மாவை மதிக்கும் ரஜினியும், அம்மாவை மிதிக்கும் அனிருத்தும் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? இவனது தாயார், சகோதரி, சித்தி லதா, மாமா ரஜினி, மைத்துனிகள்……முதலிய பெண்கள் எப்படி அப்பாட்டைக் கேட்டு ரசித்திருக்க முடியும்?

சமுதாயத்தை சீரழிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத் தக்கது: இப்படி ஒரு கீழ்த்தரமான பாடலை எழுதி, இசையமைத்து, பாடி, அதை வெளியிட்ட அனிருத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இந்தப் பாடலை யூடியூபில் இருந்து நீக்க வேண்டும். சைபர் கிரைம் போலீசார் மூலம், அனிருத் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறேன்”, இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது[10]. புகார் கொடுத்த பின்னர் நிருபர் களிடம் ஜெபதாஸ் பாண்டியன் கூறுகையில், ‘‘அனிருத்தின் செயல்களால் யூடியூபில் வெளியாகும் வீடியோ காட்சிகளையும் (January 16 onwards) தணிக்கை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அசிங்கமான வார்த்தைகளால் பாடல் பாடியுள்ள அனிருத், அதை நியாயப்படுத்தி பேஸ்புக், டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சமுதாயத்தை சீரழிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. புகாரை பெற்றுக் கொண்ட ஆணையர், உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்’’ என்றார்.

தனது கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது: மனித உரிமை ஆர்வலர் சுதா ராமலிங்கம் கூறும்போது, ‘‘தனது கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க சரியான இடங்களாக உள்ளன. ஆனால், இதில் தவறான சிந்தனைகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது’’ என்றார்[11]. மற்ற நேரங்களில் சும்மா இருக்கும் இந்த அம்மையாரை, இப்பொழுது “தி இந்து” வலியச் சென்று கருத்தைக் கேட்டிருப்பது போலல தெரிகிறது. ஏனனில் கம்யூனிஸத்தில் நாறும் பெண்ணைப் பற்றிய விவரங்களைப் பற்றி இந்த அம்மையார் விவாதிப்பது கிடையாது. ஏன் அந்த அனிருத்தின் அம்மாவிடமே கருத்தைக் கேட்டிருக்கலாமே, இல்லை லதா ரஜினி அல்லது அவரது மகள்களிடம் கேட்டிருக்கலாமே?

உள்நோக்கத்துடன் அந்தபாடல் வெளியிடப் படவில்லை”: புகார் குறித்து, அனிருத்தின் தந்தையும், நடிகர் ரஜினிகாந்தின் மைத்துனருமான ரவி ராகவேந்தர், நேற்று, போலீஸ் கமிஷனர் முன் ஆஜராகி, உள்நோக்கத்துடன் அந்த பாடல் வெளியிடப்படவில்லை. எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, 10 நிமிடங்களில், அந்த பாடல் நீக்கம் செய்யப்பட்டு விட்டது,” என, தெரிவித்தார்[12]. அனிருத்தை அலைபேசியில் தொடர்பு கொண்ட போலீசார், வளர்ந்து வரும் சூழ்நிலையில், இதுபோன்று சமூக பொறுப்பற்று இருக்க கூடாது என, கண்டிப்புடன் தெரிவித்தனர். ஆனால், அப்பாடல் இருந்து கொண்டுதான் இருக்கிறது[13]. உள்நோக்கத்துடன் அந்த பாடல் வெளியிடப்படவில்லை”, என்பதை மெய்ப்பிக்க என்ன ஆதாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. மேலும் குற்றம் புரிந்த அநிருத் செல்லாமல், தந்தை ஏன் சென்று வக்காலத்து வாங்க வேண்டும் என்று தெரியவில்லை. அதாவது, அசிங்கத்தை செய்து விட்டு, அதனை ஜீரணிக்கக் கூட முடியாத நிலையில் இருக்கும் அந்த இளைஞன் எப்படி அத்தகைய பாடலை உருவாக்க வேண்டும். மேனாட்டு மோகம், அமெரிக்காவின் கொக்கோகம், முதலியவற்றில் ஊறிவிட்டால் இப்படியெல்லாம் செய்வார்களா? பிறகு என்ன கடவுள், மதம், ஆன்மீகம் முதலியன இவர்களுக்கு வேண்டிக் கிடக்கிறது?

வேதபிரகாஷ்

© 23-01-2014


[5] A city-based advocate ap­proached the police co­mmissioner’s office on Monday to file a complaint against young music composer Aniru­dh Ravichander of Why this kolaveri fame, cont­e­nding that the musician’s new audio single, the teaser of which was recently released on YouT­ube, contains der­og­­atory marks against women.

http://www.deccanchronicle.com/140121/news-current-affairs/article/complaint-against-aniru%C2%ADdh-ravichander%E2%80%99s-audio-single-teaser

[6] தி இந்து, பெண்களைஇழிவுபடுத்திபாடியதாகஇசையமைப்பாளர்அனிருத்மீதுபுகார், ஜனவரி 21, 2014

[7] தினமலர், தாய்மையைகொச்சைப்படுத்தினாராஅனிருத்? போலீஸ்கமிஷனரிடம்தந்தைவிளக்கம், ஜனவரி 21, 2014

[8] The lawyer has demanded that police charge the music director for posting material that was not cleared by the Censor Board.

http://www.thehindu.com/news/cities/chennai/complaint-against-music-director/article5598215.ece