Posts Tagged ‘தாலி’

அனிதா வேலை வாங்கித் தருவதாக ஆசைக் காட்டி, மயக்கி, இளைஞர்களை ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது!

பிப்ரவரி 17, 2016

அனிதா வேலை வாங்கித் தருவதாக ஆசைக் காட்டி, மயக்கி, இளைஞர்களை ஏமாற்றி லட்சங்களைப் பறித்தது!

அனிதா மோசடி பிப்ரவரி 2016.1யார் இந்த அனிதா?[1]: “ஹலோ….. நான் அனிதா பேசுகிறேன்” என்று பலரை ஏமாற்றிய இளம்பெண் அனிதாவும், அவருடைய கணவர் சுரேசும் சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள், என்று தமிழ் ஊடகங்கள் செய்திகளை அள்ளி வீசியுள்ளன. அனிதாவுக்கு சொந்த ஊர் அருப்புக்கோட்டை. அங்கு பி.சிஏ இரண்டாம் ஆண்டு படித்தபோது மார்க்கெட்டிங் மேலாளராக இருந்த குமாருடன் காதல் மலர்ந்தது. இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு, சென்னையில் குடியேறினர். இவர்களது இல்லற வாழ்க்கை இனிமையாக பயணித்தது. இந்த சூழ்நிலையில் அனிதா, சூப்பர் மார்க்கெட் தொடங்கலாம் என்று குமாரிடம் சொல்ல… அதற்கு அவரும் பச்சைக்கொடி காட்டினார். கடனாக 2 லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்தார் குமார். அதை அருப்புக்கோட்டைக்கு கொண்டு சென்று 6 மாதம் காலம் அங்கேயே தங்கினார். குமாரிடம், சூப்பர் மார்க்கெட் பணிகள் நடந்து வருவதாக அவ்வப்போது போனில் தகவல் சொன்னார்.

அனிதா மோசடி பிப்ரவரி 2016.2கணவர் மீது புகார் கொடுத்த அனிதா[2]: 6 மாதம் கழித்து அருப்புக்கோட்டைக்கு சென்று குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சூப்பர் மார்க்கெட் தொடங்குவதற்கான எந்தப்பணிகளும் நடக்கவில்லை. இதுகுறித்து அனிதாவிடம் அவர் கேட்க, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிறகு சமரசமாகி மீண்டும் சென்னைக்கு வந்தனர். கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டால் அது எந்த நேரத்திலும் உடைந்து விடும் என்பதைப் போல அனிதாவுக்கும், குமாருக்கும் அடிக்கடி தகராறு. இறுதியில் 2010ல் சேலையூர் காவல் நிலையத்தில் குமார் மீது புகார் கொடுத்தார் அனிதா. போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்தி சமரசப்படுத்தினர். சிறிது காலத்துக்குப் பிறகு மீண்டும் தகராறு ஏற்பட, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் சமயத்தில் சுரேசுடன் அனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். தமிழகத்து பெண்கள் இவ்வாறு புரட்சி செய்து வருகின்றனர் போலும்.

அனிதா மோசடி பிப்ரவரி 2016.3வேலை வாங்கித் தருகிறேன் என்று மோசடியை ஆரம்பித்தது[3]: ஆடம்பரமாக வாழ வேண்டும், ஜாலியாக இருக்க வேண்டும் என்ற கோள்கைக்கு, நிறைய பணம் வேண்டுமே, என்ன செய்வது? இந்த சூழ்நிலையில் அனிதா, ஆடம்பரமாக வாழ தன்னுடைய கவர்ச்சிகரமான பேச்சையே மூலதனமாக்கத் தொடங்கினார்[4]. பஸ், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் நின்று கொண்டு இளைஞர்களுக்கு வலைவீசுவார். இந்த வலையில் சிக்குபவர்களிடம் நெருங்கிப் பழகுவார். அப்போது தன்னை எம்என்சி (ஐடி) நிறுவனத்தில் வேலைப்பார்ப்பதாகவே அறிமுகப்படுத்திக் கொள்வார். தனது வலையில் சிக்கியவர்களின் விவரங்களை சேகரித்தப்பிறகு, ‘நீங்கள் படித்த படிப்புக்கு எங்கள் கம்பெனியில் நல்ல வேலை வாங்கித் தருகிறேன்’ என்று அக்கறையாக பேசுவார்[5]. அதை நம்பி பயோடேட்டா கொடுத்தால் வேலைக்கான ஆர்டரையும் தயார் செய்து கொடுத்துவிடுவார் அனிதா. அப்போது ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை கமிஷனாக பெற்றுக்கொள்வார். அனிதா கொடுத்த ஆர்டரைக் கொண்டு வேலைக்குப்போகும்போதுதான் அது போலி என்பது தெரியவரும். துணிச்சலாக போர்ஜரியிலும் ஈடுப்பட்டது தெரியவருகிறது. லெட்டர்பேட் அச்சடித்தல் முதலிய வேலைகளை இவள் மட்டும் செய்திருக்க முடியாது என்பது இதிலிருந்தே தெரிய வருகிறது. இவ்வாறு அனிதாவிடம் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியல் நீள்கின்றன.

அனிதா மோசடி பிப்ரவரி 2016.9வீடுகள் கட்டியது, வி..பிக்களைக் கூட்டி வந்தது: பட்டியல் நீண்டதால், பண வரவும் அதிகமாகத்தான் இருந்தது. இளைஞர்களிடம் வாங்கிய பணத்தில், சென்னை பெரும்பாக்கத்திலும், அருப்புக்கோட்டையிலும் உறவினர்கள் பெயரில் வீடுகளைக் கட்டியுள்ளதாகவும், மேலும், பினாமிகளின் பெயரில் பல்வேறு இடங்களில் வீடுகளையும், நிலங்களையும் வாங்கி குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பல அரசியல் பிரமுகர்களையும் வீட்டுக்கு வரவழைத்து மது விருந்தளித்து லட்ச கணக்கில் பணத்தை கறந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது[6]. சமூக வலைதளங்கள் மூலம் பல இளைஞர்களுக்கு காதல் வலை வீசி பணத்தை கறந்த அருப்புக்கோட்டை அனிதா, அவர்களை வீட்டுக்கு வர வழைத்து மது விருந்தளித்து குத்தாட்டம் போட்ட பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன[7]. ஆக, சலமும் கொடுத்த விதம் பூர்த்தியடைந்து விட்டது.

அனிதா மோசடி பிப்ரவரி 2016.4நியூஸ்.7 செனல் வெளியிட்டுள்ள வீடியோ[8]: இப்பொழுது, அவர்களுடன் அனிதா போட்ட குத்தாட்ட வீடியோ கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூஸ்.7 செனல் வெளியிட்டுள்ள வீடியோவில் அனிதா மற்றும் இரண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் காணப்படுகின்றனர்.

  1. அனிதாவெள்லை நிற சுடிதார் ஆடை.
  2. இரண்டாவது பெண்நீளம்மஞ்சள் சுடிதார் ஆடையில்.
  3. மூன்றாவது பெண்மரக்கலர் சுடிதார்சிகப்பு படுதா ஆடையுடன்.
  4. ஒரு ஆண்கத்தரிப்பு கலர் டிசர்ட், ஊதா நிற லுங்கியுடன்.
  5. இரண்டாவது ஆண்வெள்ளை கலர் சர்ட் மற்றும் பேன்ட்.

முதலில் அனிதா இரண்டாவது பெண்ணுடன் ஆடுகிறார். அப்பொழுது, ஒரு ஆண் மூன்றாம் பெண்ணையும் ஆடுமாறு கையினால் தள்ளுகிறார். அப்பெண் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு, மூன்றாம் பெண்ணும் சேர்ந்து ஆடுகிறாள். இடையே, இரண்டாவது பெண்ணின் படுதா சரியும் போது, முதல் ஆண் அதனை சரி செய்கிறான். அப்பொழுது, இரண்டவது ஆண் முத்தம் கொடுப்பது போன்று நெருங்கி வருகிறான். ஆட்டம் முடிந்து விடுகிறது[9]. ஆனால், முதல் ஆண், அனிதாவை தனது கைகளில் தூக்கிக் கொண்டு ஆடுகிறான். அப்பொழுது, இரண்டாவது ஆண் டம்பளரில் கொடுக்க முயற்சிக்கிறான். எல்லோருமே சிரித்து, ஜாலியாக இருப்பது தெரிகிறது. இதை வீடியோ எடுத்தவர் இவர்களுக்குத் தெரிந்தவர் என்பது அவர்களின் நடவடிக்கையிலிருந்தே தெரிகிறது[10].

 அனிதா மோசடி பிப்ரவரி 2016.5

அனிதா மீது புகார்கள் கொடுக்கப் பட்டது: இந்த சூழ்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் எம்என்சி கம்பெனிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதைச் சொல்லி பணம் கொடுத்தவர்களை அனிதா ஏமாற்றி வந்தார். அவசரப்படுத்தியவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார்[11]. இதில் சில வழக்கறிஞர்களும் தொடர்பு இருப்பது தெரிகிறது. ஏனெனில், சில வழக்கறிஞர்களே அவளிடத்தில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். வழக்கறிஞர்கள் ஏன் பணம் கொடுத்தனர் என்று தெரியவில்லை. இந்த சமயத்தில் அனிதாவிடம் ஏமாந்த மலையரசன் மற்றும் சில வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்ற போலீஸ் நிலையத்தில் அனிதா மீது புகார் கொடுத்தனர். அந்த புகார் மனுவில், ‘அனிதா சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.12 லட்சத்தை சுருட்டிவிட்டதாகவும், வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. பணத்தை கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது[12].

© வேதபிரகாஷ்

17-02-12016

[1] விகடன், ஹலோநான் அனிதா பேசுகிறேன்…!’ – சினிமாவை மிஞ்சிய நிஜக்கதை!, Posted Date : 15:56 (13/02/2016).

[2] http://www.vikatan.com/news/tamilnadu/58970-fake-it-girl-girl-arrested-for-fraud.art

[3] எஸ்.மகேஷ், ஹலோநான் அனிதா பேசுகிறேன்…!’ – சினிமாவை மிஞ்சிய நிஜக்கதை!, விகடன், Posted Date : 15:56 (13/02/2016).

[4] தினகரன், வசீகர பேச்சால் மயக்கியது அம்பலம: உயர் நீதிமன்றத்தில் வேலைவாங்கி தருவதாக வாலிபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பட்டதாரி பெண், மாற்றம் செய்த நேரம்:2/13/2016 1:23:17 AM.

[5] தமிழ்.ஒன்.இந்தியா, வேலை தர்றேன்காசு தாங்ககாதல் வலை வீசி இளைஞர்களைக் காலி செய்த மோசடி ராணி!, Posted by: Jayachitra, Published: Friday, February 12, 2016, 16:10 [IST].

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/dancing-anitha-who-money-laundering-youngsters-116021600006_1.html

[7] வெப்துனியா, பண மோசடி ராணி அனிதாவின் மது விருந்து குத்தாட்ட வீடியோ வெளியானது,Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (10:16 IST)

[8] http://ns7.tv/ta/dancing-anitha-who-money-laundering-youngsters.html

[9] நியூஸ்.7, இளைஞர்களிடம் பண மோசடி செய்த அனிதாவின் குத்தாட்டம், Updated on February 16, 2016.

[10] http://ns7.tv/ta/dancing-anitha-who-money-laundering-youngsters.html

[11] நியூஸ்.7, சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி, Updated on February 12, 2016.

[12] தினத்தந்தி, ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த பெண்: இளைஞர்களிடம் காதல் லீலையில் ஈடுபட்டதாக பரபரப்பு, மாற்றம் செய்த நாள்: வெள்ளி, பெப்ரவரி 12,2016, 4:15 AM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, பெப்ரவரி 12,2016, 12:42 AM IST.