Posts Tagged ‘ஸ்டான்லி’

ஜாபர் சாதிக் விவகாரம் – சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (6)

மார்ச் 25, 2024

ஜாபர் சாதிக் விவகாரம்சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (6)

04-02-2024 முதல் 20-03-2024 வரை நடந்தது என்ன?:  போதை மருந்து விவகாரங்களில் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றனவா அல்லது வேகம் குறைவா போன்றவை நடவடிக்கைகள் வைத்து தீர்மானிக்கலாம்.

04-02-2024 போதை மருந்து தில்லியில் 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

15-02-2024ல் தில்லியில் மூவர் கைது, ஜாபர் சாதிக் தலைமறைவு; லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.

22-02-2024 – படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது.

25-02-2024 – திமுகவில் இருந்து நீக்கப் பட்டது.

26-02-2024 – என்.சி.பி அலுவலத்தில் ஆஜராகும் படி ஆணை.

08-03-2024 – வெள்ளிக்கிழமை – ஜெய்பூர்

பிறகு 09-03-2024 சனிக்கிழமை அன்று ஜாபர் சாதிக் கைது செய்யப் பட்டான்.  ஒரு வாரம்காவல்.

சதானந்தன் கைது

16-03-2024 காவல் செவ்வாய்கிழமை வரை நீட்டிக்கப் பட்டது.

17-03-2024 ஞாயிறு – சென்னைக்கு கொண்டு செல்லுதல்

18-09-2024 திங்கட்கிழமை அன்று காலை விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டான்.

19-03-2024  செவ்வாய்கிழமை – தில்லிக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் பட்டான்.

20-03-2024  புதன் கிழமை– 14 நாட்கள் காவல்

ஜாபர் சாத்திக் சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை; ஜாபர் சாதிக் காணாமல் இருந்தது போல, அவனது சகோதரர்களும் மறைந்து வாழ்கின்றனர். இந்த நவநாகரிக காலத்தில் எப்படி மறைந்து வாழ முடியும் என்பதே திகைப்பாக இருக்கிறது. பணம், பலம், ஆட்கள், இருக்க இடம் என்று பல இல்லாமல், ஒரு நாள் கூட இருந்துவிட முடியாது. அந்நிலையில் பல நாட்கள் மறைந்து வாழ்வது எப்படி சாத்தியம் ஆகும். அப்ப்டியென்றால், இவர்களுக்கு எல்லாம் உதவ பல இடங்களில் ஆட்கள் இருக்கிறார்க்ச்ௐ என்றே தெரிகிறது. இதெல்லாம் நேரத்தை பயன் படுத்தி, ஆதாரங்களை மறைக்கவா அல்லது நடவடிக்கை நேரத்தை விரயமாக்கவா என்று தெரியவில்லை. ஜாபர் சாதிக்கின் சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீம், 28, மற்றொரு சகோதரரும், அமீர் இயக்கி வரும், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தின் நடிகருமான மைதீன், 23, ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். குடியுரிமை அதிகாரிகள் வாயிலாக இருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லவில்லை என, உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும், விமான நிலையங்களுக்கு, ‘லுக் அவுட்’ நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.

NCB அதிகாரிகள் சொல்லும் விவரங்கள்; NCB அதிகாரிகள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் பதுங்கி இருக்கும் இடங்கள் குறித்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன மற்றும் அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, என்கின்றனர். இவர்களுக்கு அடைக்கலம் தருவோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். முகமது சலீம் நெருங்கிய நட்பு வட்டத்தில், சென்னையைச் சேர்ந்த வி.வி.ஐ.பி.,யின் மகன் இருப்பதும், அவரும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றியும் ரகசிய விசாரணை நடக்கிறது. முகமது சலீம், மைதீன் ஆகியோர் விரைவில் சிக்குவர். இவ்வாறு அவர்கள் கூறினர்[1]. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் சகோதரர்களுக்கு அடைக்கலம் தருவோர் மீது, வழக்குப்பதிவு செய்யப்படும்’ என, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்[2]. ‘வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்புவது போல, போதைப்பொருள் கடத்தியதில், என் சகோதரர் முகமது சலீமுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது’ என, ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். தி.மு.க., அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, டில்லியில் 09-03-2024 அன்று, கைதாகி, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின், 10 நாள் காவலில் விசாரிக்கப்பட்டார்[3].

18-03-2024 – சென்னையில் விசாரணை: பின், அவரை 18-09-2024 அன்று காலை விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்த அதிகாரிகள் மீண்டும் டில்லியில், போதை பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 20-03-2024 அன்று ஆஜர்படுத்தினர்[4]. என்.சி.பி இவ்வளவு கஷ்டப் பட்டு சட்டரீதியில் செயல்பட வேண்டியுள்ளது. அதிலும், போதை மருந்து விவகாரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன், ஜாக்கிரதையாக செயல்பட வேண்டியுள்ளது. இந்த விசாரணையில் ஜாபர் சாதிக்கிற்கு யார் யாருடன் தொடர்பு, போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்வது யார் என என்சிபி துருவிதுருவி விசாரணை நடத்தியது. மேலும் அவரிடம் கைப்பற்றப்பட்ட 7 செல்போன்களை ஆய்வு செய்யும் பணியும் நடக்கிறது[5]. யார் யாரிடம் பேசியுள்ளார் என்பது குறித்து சைபர் கிரைம் தடயவியல் நிபுணர்களின் உதவியும் நாடப்பட்டுள்ளது[6]. இக்காலத்தில், சைபர் தொழிற்நுட்பம் மூலம், பல விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், சம்பந்தப் பட்டவர்கள் எந்த அளவுக்கு நாணயமாக நடந்து கொள்வர் என்று கவனிக்க வேண்டும்.

என்.சி.பி அலுவலகத்தில் விசாரணை; பின்னர் அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதெல்லாம் துறை முறையில், சட்டப் படி, நடத்தப் படும் விசாரணை ஆகும். சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, பெருங்குடியில் உள்ள குடோன் ஆகியவற்றுக்கும் ஜாபர் சாதிக்கை அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்[7]. இங்கெல்லாம் என்ன நடந்தது, என்ன பேசினார்கள் என்பனவெல்லாம் அரசுமூறையில் காக்கப் படுகிறது எனலாம். எல்லாம் விசயங்களையும் பொதுவில் தெரியப் படுத்த முடியாது, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு ஜாபர் சாதிக் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்[8]. இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்[9]. ஜாபர் சாதிக்கை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சுதீர் குமார் சிரோஹி உத்தரவிட்டார்[10]. இதையடுத்து, ஜாபர் சாதிக், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்[11].

© வேதபிரகாஷ்

20-03-2024


[1] தினமலர், ஜாபர் சாதிக் தம்பிகளுக்கு அடைக்கலம் தந்தால் வழக்கு என்.சி.பி., அதிகாரிகள் எச்சரிக்கை, மாற்றம் செய்த நாள்: மார் 21,2024 03:24

[2] https://m.dinamalar.com/detail.php?id=3581149

[3] தினமலர், போதை கடத்தலில் தம்பி தான் மெயின் ரோல் :ஜாபர் சாதிக் அதிர்ச்சி வாக்குமூலம், பதிவு செய்த நாள்: மார் 19,2024 23:53; https://m.dinamalar.com/detail.php?id=3580226

[4] https://m.dinamalar.com/detail.php?id=3580226

[5] ஏசியாநெட்.நியூஸ், jaffer sadiq : சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்.. அடுத்து சிக்குப்போகுவது யார்?, vinoth kumar, First Published Mar 18, 2024, 9:18 AM IST; Last Updated Mar 18, 2024, 10:07 AM IST

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/jaffer-sadiq-brought-to-chennai-tvk-saiyks

[7] நக்கீரன், ஜாபர் சாதிக்கிற்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!,  நக்கீரன் செய்திப்பிரிவு,  Published on 19/03/2024 | Edited on 19/03/2024

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/india/jaber-sadiq-sentenced-court-custody

[9]தினகரன், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்!, March 19, 2024, 5:03 pm

[10]  https://www.dinakaran.com/14dayscourtcustody-zafarsadiq-arrested-casedrugtrafficking/ – google_vignette

[11] மாலைமுரசு, போதைப் பொருள் கடத்தல் வழக்கு- ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல், By மாலை மலர்19 மார்ச் 2024 5:48 PM

“தரமான உணவு” உணவு வழங்க ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியார் மூலம் நடத்தப் படும் கேண்டீன் – கண்ணாடி பெட்டியில் எலிகள் பஜ்ஜி-போண்டா தின்றது!

நவம்பர் 14, 2023

தரமான உணவுஉணவு வழங்க ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியார் மூலம் நடத்தப்படும் கேண்டீன்கண்ணாடி பெட்டியில் எலிகள் பஜ்ஜிபோண்டா தின்றது!

சென்னை, ராயபுரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது[1]. இங்கு செயல்பட்டு வரும் தனியார் கேன்டீனில், அனைத்து வகையான உணவுகளும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது[2]. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் ஏழைகள், நடுத்தர மக்கள் போன்றவர்கள் வருவதால், அவர்களால் வெளியே உணவு வாங்கி உண்ண முடியாது அல்லது வெளியில் விலை அதிகம் அல்லது சமைப்பதற்கே வழியில்லை போன்ற நிலைகள் உள்ளவர்களுக்கு, இத்தகைய கான்டீன் உணவு தான் கதியாக இருக்கிறது. ஏனெனில், அது விலை குறைவாக உள்ளது, மருத்துவ மனைக்குள்ளேயே கிடைக்கிறது. பொதுப்பிரிவில் இருப்பவர்களுக்கு, ரொட்டி-பால் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. ம்ற்றவர்கள் காசு கொடுத்து உணவு வாங்கிக் கொள்ளவேண்டும். அல்லது வெளியிலிருந்து உணவு வரவேண்டும். வீட்டிலிருந்து உனவு எடுத்து வந்து சாப்பிட கிடைக்காத நோயாளிகளும் வெளியே வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

தரமான உணவுஉணவு வழங்க ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியார் மூலம் நடத்தப்படும் கேண்டீன்: ஆஸ்பத்திரிக்கு பல்வேறு இடங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்[3]. நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்[4]. சிகிச்சைக்கு வரும் ஏழை மக்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் தனியார் மூலம் கேண்டீன் நடத்தப்பட்டு வருகிறது[5]. அந்த “தரமான உணவு” என்பதில் தான், இப்பொழுது, இப்பிரச்சினை வெளிப்பட்டுள்ளது. கடந்த 100-50 ஆண்டுகள் வரை ஓரளவுக்கு நாணயமாக இந்த உணவகங்களை நடத்தி வந்தனர். பிறகு, தரம் குறைய ஆரம்பித்தது. கான்டீனுக்கு டென்டர் போன்றவை வந்த பிறகு, பலவித காரணங்களுக்காக அத்தகைய தரம் குறைவது, விலை அதிகமாகவது பொன்றவை அதிகமானது. ஆகவே, மருத்துவமனை மற்றும் அதை சம்பந்தப் படுத்தும் விவகாரங்களில் ஆவது, ஒழுக்கம், நியாயம், தர்மம் முதலியவை இருந்தால் நன்றாக இருக்கும்.

12-11-2023 அன்று உணவு பெட்டியில் எலிகள் இருந்தது, உணவு உண்டது: இந்த கேண்டீனில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 12-11-2023 அன்று பஜ்ஜி, வடை, போண்டா சுட்டு விற்பனைக்காக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது[6]. வழக்கம் போல, பொது மக்கள் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது, உணவு வைக்கப் பட்டிருந்த கண்ணாடி ஷோ-கேஷில் எலிகள் இருப்பதை சிலர் பார்த்தனர். அந்த பெட்டியில் எலிகள் சுற்றி திரிந்தன. எலிகள் விளையாடுவதும், அங்கிருந்த உணவுகளை தின்று கொண்டிருப்பதையும் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்[7]. இது குறித்து கேன்டீன் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்[8]. இந்த போக்கே அந்த கான்டீன் ஆட்களின் மமதையைக் காட்டுகிறது. அப்படியென்றால், அவர்களது பின்புலம் தான் அவர்களை ஆட்டிவைக்கிறதே தவிர, என்னடா இது இவ்வாறு எலிகள் வந்து சாப்பிடும் நிலை வந்துவிட்டதே என்ற கவலை, பொறுப்பு முதலியவை உண்டாகாமல், சண்டை போடுவதில் ஈடுபட்டது, அத்தகைய அராஜகத்தை, ஒழுங்கீனத்தை, மனிதத் தன்மையற்ற குணாதிசயங்களை நன்றாகவே வெளிப்படுத்திக் காட்டியுள்ளன.

வீடியோ வெளிவந்தவுடன் ஆய்வு மேற்கொண்டது: இது பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரவலாக வெளிவந்துள்ளன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கேண்டீன் ஊழியர் ஒருவரிடம் கேட்டனர்[9]. அதற்கு அவர் உரிய பதில் அளிக்காமல் கண்ணாடி பெட்டியில் விளையாடி கொண்டிருந்த எலியை விரட்டி விட்டு பஜ்ஜி, வடை போன்றவற்றை எடுத்து அகற்றினார்[10]. இதெல்லாம், நிச்சயமாக ஒழுக்கமற்ற நிலைகளின் உச்சமாகும். இத்தகையோர், மருத்துவமனையில் இருப்பதற்கே லாயக்கற்றவர். இதுகுறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்[11]. இதையடுத்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி முதல்வர் பாலாஜி கேண்டீனில் ஆய்வு செய்தார்[12]. அடிக்கடி காலக்கிரமத்தில் சோதனைகள் [periodical checking] மேற்கொண்டிருந்தாலே, இத்தகைய முறையற்ற, சுகாதரமற்ற மற்றும் நோய்கள் உண்டாக்கும் நிலையில், எலிகள் உலாவந்து, சாப்பிட்டுத் திரியும் நிலை உண்டாகியிருக்காது. பின்னர் கேண்டீனை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்[13]. வீடியோ வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கேண்டீனை இழுத்து மூட மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார்[14]. உத்தரவின்பேரில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த தனியார் கேண்டீன் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் கேன்டீனை 15 நாட்களுக்கு மூட மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உணவகத்தை சீரமைத்து மீண்டும் திறக்க உணவு பாதுகாப்புதுறை அறிவுறுத்தியுள்ளது. அப்படியென்றால், 15 நாட்களில் எல்லாம் சரியாகி விடுமா? தரம் உயர்ந்து விடுமா? அந்த ஊழியர்களின் நடத்தை சரியாகி விடுமா? போன்ற கேளிகளுக்கு என்ன பதில் கிடைக்கும் என்று தெரியவில்லை.

கேண்டீன்களை ஆய்வு செய்ய உத்தரவு: இந்நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களையும் ஆய்வு செய்ய மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது[15]. அந்த நோட்டீஸில், ‘அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் டெண்டர் விடப்பட்ட கேண்டீன்களை உடனே ஆய்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது[16]. அப்படியென்றால், இத்தனை ஆண்டுகள் வரை எல்லாமே ஒழுங்காக நடந்து வந்து கொண்டிருந்தனவா? இப்பொழுது 2023ல் தான் இத்தகைய நிலை ஏற்பட்டுவிட்டதா என்று புரியவில்லை. மேலும் அதில், ‘சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அந்த உணவகத்தை இழுத்து பூட்டி சீல் வைக்க வேண்டும்[17]. உணவுகள் தரமற்ற முறையில் நோயாளிகளுக்கு விநியோகம் செய்தால் கேண்டீனின் உரிமம் ரத்து செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது[18]. மருத்துவமனை என்ற சிந்தனையில் சம்பந்தப் பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்தால், இத்தகைய நிலைமையே உருவாகியிருக்காது. ஆகவே, இத்தகைய மனிதத் தன்மையற்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் உணவகங்களில் சோதனை என்று அடிக்கடி செய்திகள் வெளிவந்து கொன்டிருக்கின்றன. அதே போல இங்கேயும் சோதனை மேற்கொள்ளலாமே?

© வேதபிரகாஷ்

14-11-2023.


[1] தினமலர், மருத்துவமனை கேன்டீனில் சுவைத்து விளையாடும் எலி, பதிவு செய்த நாள்: நவ 13,2023 23:27; https://m.dinamalar.com/detail.php?id=3480563

[2] https://m.dinamalar.com/detail.php?id=3480563

[3] மாலை மலர், கேண்டீனில் பஜ்ஜி மீது விளையாடிய எலிகள்: மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்,

By மாலை மலர், 14 நவம்பர் 2023 10:51 AM; (Updated: 14 நவம்பர் 2023 12:47 PM).

[4] https://www.maalaimalar.com/news/state/rat-in-canteen-food-safety-department-notice-to-medical-college-principals-685008

[5]  தினமலர், பஜ்ஜி, வடையை எலி ருசித்த விவகாரம்: கேன்டீனை மூட உத்தரவு, பதிவு செய்த நாள்: நவ 13,2023 20:33

[6] https://m.dinamalar.com/detail.php?id=3480469

[7] தினத்தந்தி, அரசு மருத்துவமனை கேண்டீனில் எலிஅரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு, By தந்தி டிவி, 14 நவம்பர் 2023 11:08 AM

[8] https://www.thanthitv.com/News/TamilNadu/breaking-rat-in-govt-hospital-canteen-important-announcement-by-govt-226315

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், எலி சாப்பிட்ட திண்பண்டங்கள் விற்பனை; சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீனை மூட உத்தரவு, WebDesk, Nov 13, 2023 18:37 IST.

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/rat-eaten-snacks-selling-complaints-chennai-stanley-govt-hospital-canteen-closed-1694843

[11] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேன்டீன்.. கண்ணாடி பெட்டிக்குள் பஜ்ஜியை ருசிபார்த்த எலிஅதிர்ச்சியில் நோயாளிகள்!, Ansgar R; First Published Nov 13, 2023, 5:11 PM IST; Last Updated Nov 13, 2023, 5:11 PM IST.

[12] https://tamil.asianetnews.com/tamilnadu/rat-found-eating-foods-in-chennai-stanley-gh-canteen-glass-box-deen-ordered-to-close-canteen-ans-s428gu

[13] தமிழ்.சமயம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவலம்.. எலியை வைத்துடெஸ்ட்செய்யப்படும் கேண்டீன் பலகாரங்கள்.., Authored By ஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil | Updated: 13 Nov 2023, 4:33 pm

[14] https://tamil.samayam.com/latest-news/state-news/rat-eats-snacks-in-canteen-of-stanley-government-hospital/articleshow/105185398.cms

[15] நக்கீரன், கேண்டீன் தின்பண்டங்களில் எலி; மருத்துவமனை முதல்வர் அதிரடி உத்தரவு, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 14/11/2023 (11:16) | Edited on 14/11/2023 (11:32)

[16] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rat-canteen-snacks-stanley-hospital

[17] தமிழ்.நியூஸ்.18, கேண்டின் தின்பண்டங்களில் எலிசென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் அதிரடி உத்தரவு, FIRST PUBLISHED : NOVEMBER 13, 2023, 4:31 PM IST; LAST UPDATED : NOVEMBER 13, 2023, 4:31 PM IST

[18] https://tamil.news18.com/chennai/a-rat-eats-snacks-in-the-canteen-of-stanley-government-hospital-1231091.html